Friday, 23 December 2016

WHY ARE JEWS SO SMART? சுருக்கிய தமிழ் வடிவம்





WHY ARE JEWS SO SMART?
 சுருக்கிய தமிழ் வடிவம்


By Dr. Stephen Carr Leon


இந்தக்கட்டுரை ஆசிரியர்  இஸ்ரேலில் எட்டு ஆண்டுகள் தங்கி யூதர்களின்   அறிவுக்கூர்மைக்கு காரணம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் கண்டுபிடித்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.
எனக்கு வந்த கட்டுரையின் சுருக்கிய தமிழ் வடிவத்தை கீழே  தருகிறேன்.
யூதர்களைப்பற்றி எழுதுவது தவறு என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மனதில் இருந்து ஒதுக்கி விட்டு எல்லோரும் படிக்கவும்.
குறிப்பாக பெண்கள – எல்லா வயதினரும் படிக்கவும். இதில் உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருந்தால் ஒதுக்கி வைத்து விட்டு, பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை போல் வேண்டியவற்றை   எடுத்துக்கொண்டு பயன் பெறுங்கள், பகிருங்கள்
பொறியியல், அறிவியல், வணிகம்  தொழில் இப்படி எல்லாத்துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் இருப்பது மறுக்கமுடியாத உண்மை..உலகளாவிய வர்த்தகத்தில் எழுபது விழுக்காடு யூதர்கள் வசம் இருக்கிறது
இது இயல்பானதா அல்லது இதற்காக யூதர்கள் சிறப்பான முயற்சி செய்கிறார்களா எனபது பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்
முதலில் கருவுற்ற தாய்மார்கள் பற்றிப் பார்ப்போம்.
அவர்களைப்போல் நம்மால் பாட்டுப்பாடவும் பியானோ வாசிக்கவும் முடியாது. ஆனால் அவர்கள் செய்யும் இன்னொரு செயல் கணிதப்புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது .கருவுற்ற பெண்ணின் கையில் எப்போதும் கணித நூல் இருக்கும். குழந்தை பிறக்கும் வரை கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால் பிறக்கும் குழந்தை அறிவு மிக்கதாக இருக்கும் என்கிறார்கள்
கருவுற்ற காலத்தில் அதிகமாக பால், பாதாம்பருப்பு , பேரிச்சம்பழம் , மீன் (மீன் தலையை நீக்கி விட்டு ) மீன் எண்ணெய் சாப்பிடுவார்கள் இறைச்சியைத் தவிர்த்துவிடுவார்கள் .
பழங்களை உணவுக்கு முன் ( பின் அல்ல முன்) உண்பார்கள்
புகைப்பதையும் புகைப்பவர்களையும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுவார்கள்

அடுத்து குழந்தைகள்
குழந்தைகளின் உணவு முழுக்க முழுக்க  பெற்றோரின் கண்காணிப்பில்தான்
.பழங்கள் ,பாதாம்பருப்பு மீன் எண்ணெய் குழந்தைகளின் முக்கிய உணவு ஹீப்ரு,அரபு ஆங்கிலம் என்ற மூன்று மொழிகள் குழந்தைள் படிக்கிறார்கள் பியானோ, வயலின் கண்டிப்பக் கற்றுக்கொள்ளவேண்டும் .இசையின் அதிர்வு மூளையைத் தூண்டி அறிவைப் பெருக்குமாம்
கல்வி முறை
முதல் ஆறு ஆண்களுக்கு வணிகக் கணிதத்தில் கவனம் செலுத்துகிறார்கள் .அம்பு விடுதல், துப்பாக்கி சுடுதல் ,ஓட்டம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
அம்பு, துப்பாக்கிப் பயிற்சிகள் கவனம் சிதறாமல் முடிவெடுக்கும் பயிற்சியை மூளைக்கு அளிக்குமாம்
உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் அறிவியலுக்கு முதன்மை இடம்..மாணவர்கள் பொருட்கள் உற்பத்தி செய்யவார்கள், திட்டங்கள் (ப்ராஜெக்ட்ஸ்) தீட்டுவார்கள் எல்லா திட்டங்களும் முழு கவனத்துடன் பரிசீலிக்கப்படும். குறிப்பாக படைக்கலன்கள், மருத்துவம், பொறியியல் சார்ந்த திட்டங்களுக்கு சிறப்பு கவனம் கிடைக்கும்,.பயன்படக்கூடிய திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் .
பல்கலைக்கழகப்படிப்பின் இறுதி ஆண்டில் வணிகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் .பத்து மாணவர்கள் கொண்ட ஒரு குழு வணிகத்தில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்    (ஆறு கோடி ரூபாய் ) இலாபம் ஈட்ட வேண்டும். அப்போதுதான் அந்தகுழு தேர்வு பெற்றதாய் கருதப்படும்  
உலக வணிகத்தில் பாதிக்கு மேல் யூதர்கள் வசம் இருப்பதற்கு இந்த கல்வி முறை ஒரு காரணம்
அமெரிக்காவில் அதிக அளவில் யூதர்கள் வசிக்குமிடம் நியூயார்க்.. அங்கு இவர்கள் நலனுக்காக  அமைந்துள்ள ஒரு கமிட்டி நல்ல தொழில் ,வணிக உத்தியுடன் வரும் யூதர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து அவர்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைய உதவுகிறது.
இப்படி வளர்க்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் சில : டெல் கம்ப்யூட்டர்ஸ், கோகோ கோலா ,ஆரக்கில், லெவிஸ்.
நியூயார்க்கில் உள்ள மருத்துவர்களுக்கும் இந்தக் கமிட்டி தனியாகத் தொழில்9(Private Practice) துவங்க வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவுகிறது
சிங்கப்பூரைப்போல் இஸ்ரேலும் புகைக்குப் பகையான நாடு
எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அதிலிருக்கும் நல்ல செய்திகளை எடுத்துப் பின்பற்றுவது தவறல்ல என்பது என் சொந்தக்கருத்து
இதில் ஷிர்க், குப்று ஹராம் போன்ற செய்திகள் இருப்பதாக உணர்ந்தால் அவற்றை விட்டு விட்டு நமக்கு உகந்தவையாக , பயனுள்ளதாக இருப்பவற்றை எடுத்துக்கொள்ளலாம்
                    
                                     பீ.சர்புதீன்

வலைநூல்  முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com











Friday, 25 November 2016

தூவானம் .











.,

சென்ற வாரத்தோடு வாழ்க்கைப்பயணம் தொடரை நிறைவு செய்து விட்டேன்.
நிறைவுப்பகுதி பற்றி வந்த கருத்துக்களையும் பாராட்டுகளையும் தொகுத்துத் தருகிறேன். இதில் இரண்டு நோக்கங்கள் . முதலாவது கருத்துக்களில் வரும் புதிய செய்திககளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு வலை நூலிலும் கூகிள் +சிலும் பதிவாகிறது .இரண்டாவது எனக்குக்கிடைத்த பாராட்டுகளையும் எல்லோரும் படிக்கட்டுமே என்ற அற்ப ஆசை (இந்த ஆசை தற்பெருமையாக மாறாமல் ஏக இறைவன் காக்க வேண்டும்
19 11 16
மெஹராஜ்
ஷர்புதீன் அற்புதம்.                                           எல்லோரையும் கண்கலங்கி நெகிழ வைத்த பிரிவுரை.
தயவு செய்து நிறுத்தி விடாமல் தொடர்ந்து சனிக்கிழமை தோறும் உன் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உன் சகோதரிகள்.     அல்ஹம்துலில்லாஹ்
25 11 16

அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்புதீன். விழுப்புரம் கட்டுரை மிக நன்றாக இருந்தது. இனிமேல் இந்த த் தொடர் வராதென நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.
விழுப்புரவிழுப்புரத்தில் நான் எட்டவது படித்தேன்(1959-1960)
நம் வீடு பற்றி சிறிது கூட நினைவில்லை.நான் படித்த ஸ்கூல் , ரயிலவே கேட் நன்றாக ஞாபகத்தில் உள்ளது.விலாசினி , ரத்னா என்கூடப் படித்தவர்கள்.
ஒருதரம் மழை பெய்ததால் அத்தா ஸ்கூலுக்கு வந்து காரில் வீட்டுக்கு க்கூட்டி வந்தது.காரில் கரீம் அண்ணனும் கூட வந்தது.கேட் ரொம்ப நேரம் மூடி விட்டார்கள்.கரீமண்ணன்"மண்ணுக்கு மரம் பாரமா"என்ற கண்ணதாசன் பாடலை வரி வரியாக அத்தாவிடம் சொல்லி ரசித்தது.
ஹூலா ஹூப் காரைக்குடி யில் முத்தலிப் அண்ணன் வாங்கி வந்திருந்தது.
நான் அதில் ரொம்ப நேரம் கீழே விழாமல் சுற்றுவேன்.
பைசலுடைய திறமைகள் நீ எழுதியதால் நன்கு தெரிந்து சந்தோஷப்பட்டோம்.
உன் திறமைகளும் உறவுகளிடம் கொண்ட பாசமும் அக்கறையும் அத்தா அம்மா வின் மேல் நீ கொண்டுள்ள மரியாதை யும்
உன் ஆற்றல்களும்
நினைவுத்திறனும் எழுத்தாற்றலும்
உன் கட்டுரைகள் மூலம் தான் எல்லோருக்கும் தெரிய வந்தது.
இந்த இனிய உறவுகளைக் கொடுத்த அல்லாவுக்கு நன்றி.
அல்லாஹ்வின் அருளால் என்றும் நிலைக்கட்டும்
நஸ் ரீன்
Sooper Mama very nice to read👍🏻
சகா
எப்போதும் படித்து ரசிப்பது தான்.
கருத்து தெரிவிப்பது தான் எப்போதாவது .

வீடு கட்டிய கதையிலிருந்து விழுப்புரம் வரை மொத்த தொடரையும் முழுமையாக ரசித்தோம். 
Well done. 
இன்றைய தலைப்பில் 'நிறைவுப்பகுதி' என்று பார்த்தபோது சிறிதான ஒரு ஏமாற்றம். 

Looking forward to next series.

kk
[08:23, 11/21/2016] +91 91762 61171: தங்கள் அனுபவங்கள் எங்களை மிகவும் பரவசமடைய செய்த து ஒவ்வொரு முறை யு ம் மனதளவில் பாராட்டி கொண்டுதான் இருக்கிறேன் இந்த டைப் செய்ய வது மிகவும் கடினமாக இருக்கிறது அதனால் என்னால் என் கருத்தை பல சந்தற்பங்களில் ஜமாத்தோடு பகிறமுடியவில்லை  
Thalath                      
[09:04, 11/21/2016] +91 81245 65555: இதே நிலைமை 'தான் எனக்கும்.தங்களின் வாழ்க்கைப்பயண அனுபவங்கள் மிக அருமை
சுராஜ் 24 11 16.
அண்ணனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
என்ன எழுதுவது,எதை எழுதுவது என்றே தெரியவில்லை.
முடிவுரையில் அனைவரையும் கொண்டு வந்து அருவியாய்க் கொட்டிய நன்றியுரை கண்களை நனைத்து விட்டது.
எத்தனை சுவாரஸ்யங்கள்,
எத்தனை உறவுகளின் பெருமைகள்!
எத்தனை ஊர்களின் சிறப்புகள்!
ஒவ்வொரு தொடரிலும் அத்தா,அம்மாவின் அருமை, பெருமைகளை எழுதி எங்களை மகிழவும், கலங்கவும் வைத்தது.
இந்தமுடிவுரை தொடரில் கூட அத்தா தொப்பி அணிந்து கம்பீரமாய் செல்லும் என்றும்,அன்னை,தந்தைக்கு நன்றி என்பதைப் படிக்கும் பொழுதும்,இப்பொழுது உங்களுக்கு எழுதும் பொழுது கூட ஏனென்று தெரியாமல் கண்ணீர் வருகிறது.
அப்பப்பா! எத்தனை நிகழ்வுகள்! எழுதிக் கொண்டே போகலாம்
ஓர் ஆண்டில் உலகைச்சுற்றி வந்தது போல் இருக்கிறது.
நினைவாற்றலுக்கும்,எழுத்தாற்றலுக்தும் மறுபடியும்ஒரு சபாஷ்!!!

பைசல் பற்றிய தகவல் மிகவும் பெருமையாக இருந்தது.
பைசலுக்கு எங்களது பாராட்டு!👏

 [18:50, 11/25/2016] Jothy Liakath:

 தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும். வாவ்.. என் தம்பி இத்துனை எழத்தாற்றலும், நினைகளை ஒன்று சேர்த்து, இத்தனை சுவையாக ,சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் கொண்டவரா, நம்பவே முடியவில்லை. ஆற்றல் கொடுத்த அல்லாவிற்கு பெரிதும் நன்றி.
விழுப்புரம் வீட்டு கிணற்றில், மொட்டை மாடியில் துளை, நிச்சியமாக எங்க ளுக்கெல்லாம் ஒரு துளி கூட நினைவில் இல்லை. பக்கத்து வீட்டு ஆங் கிலோ,இன்டியன் பெண்னுடன் Cசர்ந்து கூலா கூப் ஆடியது நன்கு நினைலில் உள்ள துர். பக்கத்து கார்டு (இந்திரா என்ற பெயரெல்லாம் தெரியாது) விட்டம்மாவின் பெண் என்னோடு படித்தது, .ெ மகராஜூம், நானும் நகராட்சி பெண்கள் பள்ளியில் படித்தோம், நான் படிப்பில் ரொம்ப சுமார் .ஆனால் ஏதோ ஒர் கட்டுரை எழதி ரொம்ப பாராட்டுப் பெற்றேன். _ | முத்து திருமணம் முடிந்து கரீம் அண்ணனோடு வரும் போது ரொம்ப சந்தோஷமாயிரக்கும். ஒரு டப்பா நிறைய முறுக்கு சுட்டு உன்னையும், என்னையும் நூரைப் பார்த்து வரப் ப்யூனுடன் அம்மா அனுப்பியது. ஐயா (அம்மாவின் அத்தா) ம குத்திற்கு போய் விட்டு அம்மா அங்கேயே தங்கி விட்டது. மறு வாரமே சிட்டுப் பிள்ளைப் பெரியம்மா (ரஹ்மத் அலி அண்ணன் அம்மா) மதத்தா கிவிட, அதுவும் முடிந்த பின் மாமா அம்மாவையும், ஷஷா வையும் (சின்னப் பையன் ) வையும் ரயிலில் ஏற்றி விட்டுத் தந்தி கொடுத்திருக்கிறது. தந்தி நேரத்திற்கு வந்து சேராமல், அத்தாஸ் டேஷனுக்கு ஆள் அனுப்பாமல், அதிகாலையில் ரயில் ஊர் வந்து சேர , அம்மா ரொம்ப சிரமப்பட்டு, கைரிக்ஷாவில் வீடு வந்து சேரந்தது' . (அம்மா ரொம்ப கோபமாக இருந்தது.)                       
[18:51, 11/25/2016] Jothy Liakath: அத்தாவிற்கு நெஞ்சுவலி வந்தது அங்தான். மாமா வந்து தான் சி.எம்.சி.க்கு அழைத்துச் சென்றார்கள். ஊரிலிரந்து பெரியத்தா, பெ வெல்லாம் பார்க்க வந்திருந்தார்கள். வீடே என்னவோ போலிருக்கும். செஞ்சிக் கோட்டைக்குப் போன போது ஷஹா தனியாக மேலே Cயறி, சுற்றிலும் குரங்குகள் சூழ்ந்து கொள்ள பயந்து கத்த ஆரம்பித்து விட்டான்'. எல்லோகையில் உதவிக்கு (ை கடு) வந்த பையன் தான் லாவகமாக மலை Cயறி குரங்குகளை விரட்டி ஷஹா வைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
அப்புறம் நன்றி நவிலலிலும், தொடரை முடிப்பதிலும் பெரிய காவியமே படைத்து விட்டாய். பெரிய எழுத்தாளர்கள் அனைவருக்கு மே முதல் விமர்சகர் மனைவி தான் என்பதை நீயும் நிரூபித்து Cஜாதிக்கு நன்றி தெரிவித்த விதம் அருமை, இன்னமும் தொடருக்கு உதவிய, பைசல், இதயத்துல்லா , விமர்சகர் அனைவர்க்கம் நன்றி செலுத்திய விதமும் அருமை. மெகராஜ், சுராஜ், எனக்கு தனித்தனியாக நன்றி கூறி விடைபெற்றது கண் கலங்க வைத்து விட்டது. தொடர் எழத என் வார்த்தை ஊக்கம் கொடுத்தது நெகிழ வைத்துவிட்டது. எப்படி யோகிட்டத்தட்ட ஓராண்டாக கூடு விட்டு கூடு பாய் iந்தது போல, வேறு வயது, வேறு ஊர், வேறு சூழல் என்று உன்னுட ன் சேர்ந்து நாங்களும் பயணிக்க இனிய பாதை அமைத்துக் கொடுத்தாய். நன்றி... நன்றி.... நன்றி.....
மிக நீளமாக அமைந்து விட்டது. மற்றவர்கள் படிக்காவிட்டாலும் நிச்சியம் நீ படிப்பாய் என நம்புகிறேன். சிராஜுதீன் அம்மாவைப் பாட்டியதற்கு நன்றி தெரிவித்தது, குப்பிக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டே போகலாம். உறவுகள், உணர்வுகள், எல்லாம் கலந்த பழைய உலகத் தைப் புதுப்பித்து வாழ்ந்த து, ஏதோ ஒர் யுகம் கண்டது போல கிவிட்டது. விடை பெறுகிறேன்.                       

 தொலைபேசியில் பாராட்டியவர்கள் பாப்டி, பாடி பீர் சச்சா , இதயத் ..

இதயத்
.தொடர்ந்து எழுதுங்கள் மாமா உங்கள் எழுத்து நடை மிக நன்றாக , எளிதில் படிக்க ஏதுவாக இருக்கிறது.

பாடி பீர் சச்சா
பாராட்டி போனில் எழுதுவதெல்லாம் எனக்கு மிகவும் சிரமம் ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் உன்னைப் பின்தொடர்ந்து நானும் பயணித்தேன்  .


.கருத்துக்களும், பாராட்டுகளும் புதிய செய்திகளும்  அளித்த அனைவருக்கும்நன்றி..

திருப்பத்தூர் ஜமாஅத் kk என்பது யாரென்று தெரியவில்லை  

ஹூலா ஹூப் விழுப்புரத்தில் பார்த்துதான் எனக்கு நினைவில் இருக்கிறது .காரைக்குடியில்  ஹூலாஹூப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.

நம் குடும்பத்திலும் குழுக்களிலும் எல்லோருக்கும் நல்ல எழுத்தாற்றல்,இருக்கிறது. நினைவிலுள்ள சுவையான நிகழ்வுகளைத் தொகுத்து எல்லோரும் எழுதலாம். காலப்போக்கில் இந்த நினைவுகள் கரைந்து மறையுமுன் இறைவனின் பெயரால் துவங்கி வைககலாம்

.அன்புடன்  பீ.சர்புதீன் .


 வலை நூல் முகவரி

 கூகிள் தேடலில்

 sherfuddinp.blogspot.com

  


                                             




Friday, 18 November 2016

விழுப்புரம் வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 37. நிறைவுப்பகுதி



ஹுலா ஹூப் hula hoop பார்த்ததுண்டா கேள்விப் பட்டதுண்டா ? இது பற்றிய செய்தி பின்பு
மீண்டும் குதுகலமான பள்ளிப் பருவம். வரவுமில்லை செலவுமில்லை பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்த  வேலையும் இல்லை .அதுவும் இந்தத் தலைமுறை போலல்லாமல் மிக எளிதான படிப்பு.
அத்தாவுக்கு சிதம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்குப் இடமாற்றம் .நூரக்கா  அண்ணாமலையில் விடுதியில் தங்கிப்படிப்பைத் தொடர்ந்தது அவ்வப்போது சகோதரி ஜோதியும் நானும் நகராட்சிப் பணியாளருடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போய் நூரக்காவைப் பார்த்து வருவோம்.
விழுப்புரத்தில் இருக்கும் போது முத்தக்காவுக்கு திருப்பத்தூரில் திருமணம் நடைபெற்றது .(கரீம் அண்ணன்) மணப்பெண் பெயர் கூட மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக  நுரேஷஷ்மி என்றுதான் அழைப்பிதழில் போடுவார்கள் –திரு நிறைச்செல்வி என்று பொருள் .
அண்மையில் நடந்த ஒரு மணவிழாவில் மணமகன் மணமகள் , மணமகளின் பெற்றோர் எல்லோர் உருவப்படத்துடன் கூடிய பதாகைகள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாம்
திருமணமான புதிதில் கரீம் அண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தது குளித்து விட்டு முகத்தூள் (பவுடர் ) வேண்டும் என்று கேட்டது . அத்தனை பெண் பிள்ளைகள் அதுவும் பள்ளி கல்லூரி செல்பவர்கள் இருந்த வீட்டில் மிக அடிப்படைஒப்பனைப்  பொருளான முகத்தூள்  கூட இல்ல ..(அண்டை வீட்டில் வாங்கிக் கொடுத்து சமாளித்தோம்)
இன்றோ என் பேரன் பேத்திகளுக்கு முகத்தூள்  முகப்பூச்சு ,நகப்பூச்சு , நறுமணம் நறுமணப்பூச்சு என்று பலவித ஒப்பனைப்  பொருட்கள் வேண்டியிருக்கிறது. .
விழுப்புரத்தில் நான் ஆறு, ஏழாம் வகுப்புப் படித்தேன் .வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் மிகப்பெரிய திடலுடன் கூடிய மிகப்பெரிய நகராட்சிப்பள்ளி ..போகும் வழியில் ஒரு தொடர்வண்டிப்பாதையைக் கடந்து போக வேண்டும்
தமிழறிஞர் திருக்குறள் முனுசாமியின் மகன் பாலு என் வகுப்பில் படித்தார் .சிவாஜி கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம்.
ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வாழும் ஊர் விழுப்புரம்..அதனால்தானோ என்னமோ இந்தப்பகுதியின்  துவக்கமே தமிழும் ஆங்கிலமும் கலந்து வருகிறது .
தொடர் வண்டித் துறையில் ஆங்கிலோ இந்தியர்கள் பெருமளவில் பணி புரிந்தார்கள் .அதனால் தொடரித்துறையின் பெரிய அலுவலகங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் அதிக அளவில் காணப்படுவார்கள் .
நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளார் தொடர் வண்டித் துறையில்  பணியாற்றி ஓய்வு பெற்ற ஆங்கிலோ இந்தியர்.
வீடு நீள வாக்கில் நல்ல விசாலமாக இருக்கும். வேறு எந்த வீட்டிலும் இதுவரை பார்க்காத இரண்டு அமைப்புகள் இங்கு  இருந்தன.
கிணற்றுக்கு அருகில் உள்ள குளியலறை சுவரில் ஒரு துளையிட்டு கை அகலப் பாத்திரம் போல் கட்டியிருக்கும். அதில் நீர் ஊற்றினால் குளியலறைத் தொட்டியில் விழுந்து விடும்
அடுத்து திறந்த வெளி மாடியில் ஒரு துளையிட்டு அதற்கு  திறக்கும்படி ஒரு மூடி போட்டிக்கும் .நெல் போன்ற தானியங்களை மேலே காய வைக்கும்போது அந்தத் துளை வழியாக கீழே கொட்டி விடலாம் .விழுப்புரம் சுற்று வட்டாரம்  செழிப்பான நெல் விளையும் பகுதி
ஜமால் அண்ணன் ஒரு முறை வீட்டுக்கு வந்தது. அதோடு காலையில் .எதோ ஒரு வயலுக்குப்போய் பம்ப்செட்டில் அருவி போல் கொட்டும் நீரில் ஆனந்தக் குளியல் போட்டோம் .
வீட்டுக்கு அடுத்து வீட்டு உரிமையாளர் வீடு. இன்னொரு பக்கம் மிக ஏழ்மையான நிலையில் ஒரு குடும்பம் குடியிருந்தது. (அந்தணர்கள் என நினைவு) . பொருளாதாரச் சூழ்நிலயால் பசுவை கறிக்கடைக்கு  விற்ற அன்று அந்த அம்மா கண்ணீர் விட்டு அழுதது. இன்றும் நினைவில் நிற்கிறது   
சற்றுத்தள்ளி இந்திரா அம்மா என்று அழைக்கப்படும் கார்டு வீட்டு அம்மாள் வீடு. அங்கே மாலையில் ஒரு மாதர் சங்கம் அளவுக்குக் கூட்டம் கூடும்..
பள்ளியில் வகுப்பு அளவிலான பேச்சுப்போட்டி மாதம் ஒரு முறை நடக்கும். அவற்றில் கலந்து கொண்டு பேசுவேன். பள்ளி, இடம் மாற்றம் ஏற்படும்போது அதற்கேற்றாற்போல் மாற வேண்டிய சூழ்நிலையில் அதெல்லாம் தொடராமல் போய் விடுகிறது .
அருகில் உள்ள புதுச்சேரிக்கு அடிக்கடி போவோம். துணிமணி வாங்குவதெல்லாம் அங்குதான். அப்போது சிறிய, அமைதியான ஊராய் இருந்தது .எங்கு பார்த்தாலும் நிறைய மிதி வண்டிகள் காணப்படும் .இப்போது அதெல்லாம்  மாறி ஒரு பெருநகரத் தோற்றம் முழுமையாக வந்து விட்டது .சென்னை போகும்போது புதுச்சேரி நகரை  கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது . அவ்வளவு போக்குவரத்து நெரிசல்.
அருகில் உள்ள செஞ்சிகோட்டைக்கும் போய் பார்த்திருக்கிறோம். மலை மேல் கம்பீரமாக அமைந்துள்ள கோட்டை, அரண்மனை அரசன் அரசி குளிககுமிடங்கள் எல்லாம் பார்க்க அழகாக இருக்கும்.  ஊருக்கு வெளியே மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதால் கம்பீரம் , அழகெல்லாம்  தாண்டி ஒரு தனிமை உணர்வும் அச்சமும்  ஏற்படும். .
செஞ்சி மலைப்பாறையில் ஒரு இடத்தில் காசு போடும் அளவுக்கு ஒரு துளை இருக்கும். அதில் காசு போட்டால் வெகு நேரத்துக்கு காசு கீழே போகும் ஓசை கேட்கும். .மறைவான ஒரு கருவூலத்தில் போய்ச் சேர்வதாய்ச் சொல்வார்கள் .
விழுப்புரத்தில் வாசவி விகார் என்றொரு உணவு விடுதி இருந்தது அவர்கள் கொடுக்கும் இலந்தைப் பழ ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும். இது போல் வேறு எங்கும் சுவைத்த நினைவில்லை. விழுப்புரம் வழியே போகும்போது அந்த உணவு விடுதி கண்ணில் படுகிறதா என்று தேடிப்பார்ப்பேன். இது வரை  படவில்லை.
விழுப்புரம் அப்போது கடலூர் மாவட்டத்தில் இருந்தது. அத்தா அடிக்கடி அலுவலகப்பணியாக.கடலூர் போய் வரும். இப்போது தனி மாவட்டமாக உருவாகி  மாவட்டதலைநகராக நன்கு வளர்ச்சி பெற்று கடலூரை விஞ்சி விட்டது .கடலூர் அப்படியே பின் தங்கிப் போய் விட்டது
அத்தாவுக்குகு இதயத் தாக்குதல் வந்தது விழுப்புரத்தில் என நினைவு. வேலூர் சீ எம் சீ மருத்துவ மனையில் காண்பித்து மிகக் கடுமையான உணவுக்கட்டுப்பாடு, புகைகட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தது. காலையில் இரண்டு இட்லி, ஒரு அவித்த முட்டை (வெள்ளைக்கரு மட்டும் என நினைவு). . மதியம் ஒரு அரைக்கால் படி (கால் லிட்டர்) குவளை அளவுக்கு சோறு (அரிசி அல்ல சோறு). தேங்காய்,தயிர், நெய். பொறித்த மீன் கறிக்கு தடை, குழம்பு மீன், கறி இரண்டு துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம் இரவில் எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு..
சுருக்கமாகச் சொல்லப்போனால், பிடித்த உணவுகளைத் தவிர்த்து எப்போதும் பசியுடன் இருக்க வேண்டும்  
யோகா பற்றிய நூல் ஒன்றும் அத்தா வாங்கி வந்தது .அத்தா யோகசனப்பயிற்சி செய்ததை நான் பார்த்ததில்லை. பிற்காலத்தில் நான் யோகா பற்றிப்படிக்க இந்த நூல் ஒரு தூண்டுதலாக இருந்தது  ,
ஒலிக்கும் சுவர்க் கடிகாரம் வாங்கியது விழுப்புரத்தில்தான் என நினைவு. இப்போது போல் மின்கலம் பொருத்தப்பட்டது அல்ல. முகத்தில் இரு கண்கள் போல் கடிகார வட்டில் இரு துளைகள் இருக்கும். வாரம் ஒரு முறை சாவி கொடுக்க வேண்டும். ஒரு துளையில் கடிகாரச் சுற்றிலும் இன்னொன்றில் எதிர் சுற்றிலும் திருக வேண்டும்..
அத்தா காலையில் ஆய்வுப்பணிக்காக வெளியே போகையில் தலையில் ஹாட் (Hat) அணிந்து செல்வது பார்க்க கம்பீரமாக இருக்கும் .ஆண்கள் உடை பெரும்பாலும் வெள்ளைதான்
விழுப்புரம் தொடரி சந்திப்பு பெரிய , பழைமையான சந்திப்புகளில் ஓன்று..தொடர் வண்டிப்பாதை மின் மயமாக்கலில் முதலில் சென்னை விழுப்புரம் பாதைதான்  மின் மயமாக்கப்பட்டது . எனவே தென் மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் இடையில் செல்லும் வண்டிகள் எல்லாம் விழுப்புரத்தில் நின்று எஞ்சின் மாற்றப்பட்டுச் செல்லும்  
ஹுலா ஹூப் hula hoop பற்றி தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் .விளையாட்டாகச் செய்யப்படும் ஒரு உடற்பயிற்சி இது. பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்கள் விளயாடுவது . ஒரு பெரிய நெகிழி வளையத்தை இடுப்பில் வைத்து வேகமாக இடுப்பை சுழற்றும் பொது அந்த வளையம் அழகாக இடுப்பைச் சுற்றி ஆடும்.. சொல்வதற்கு எளிது. செய்வதற்கு மிகுந்த, தொடர்ச்சியான பயிற்சி அவசியம். தொடர்ந்து செய்தால் இடுப்பில் சதை வைக்காது என்று சொல்வார்கள் . முடிந்தவர்கள் செய்து பார்க்கலாம் .விழுப்புரத்தில் ஆங்கிலோ இந்தியச் சிறுமிகள் இதை எளிதாகச் செய்வார்கள்
அத்தாவின் ஆசிரியர் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன அறிவுரைப்படி ஒரு குறிப்பேட்டில் (நோட்டுப் புத்தகம்) தினமும் ஒரு பக்கம் இந்து நாளிதழைப் பார்த்து எழுதத் துவங்கி (அப்போது தமிழ் இந்து கிடையாது), பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்தேன். இதன் அருமை போகப்போக எனக்குப்புரிந்தது.. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. புதிய சொற்களுக்கு அகராதியில் பொருள் தேடிப்பார்ப்பதால் அகராதியை அடிக்கடி பார்க்க நேரிட்டது. இன்றும் ஒரு புதிய சொல்லைப் பார்த்தால் உடனே இணையத்தில் பொருள் தேடும் பழக்கமாகத் தொடர்கிறது .ஓரளவு பிழையின்றி ஆங்கிலம் எழுத முடிகிறது.
இந்த எளிய முறையை நான் பலருக்கும் சொல்லியிருக்கிறேன். செய்பவர்கள் மிக அரிது
அத்தாவின் அறையில் நிறைய நூல்கள் இருக்கும். படிக்கும் பழக்கம் ஏற்பட இதுவும் எனக்கு ஒரு தூண்டுதலாய் இருந்தது நூல்களின் மேல் ஒரு பாசம் உண்டானது
இப்போதும் அடிக்கடி விழுப்புரம் வழியாக பயணிக்கிறேன். பழைய விழுப்புரம் தொலைந்து போய் விட்டது. இருப்புப்பாதை கேட் இருந்த இடத்தில் பெரிய மேம்பாலம் நிற்கிறது என்ன செய்வது .மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாதது
சென்ற பகுதி பற்றி
சிராஜுதீன்
 எங்கள் பேரன்பிற்குரிய அம்மா அவர்களின் நினைவுமிக்க சந்தோஷத்தை கொடுத்தது. மச்சான் அவர்களுக்கு நன்றி.
அயுப்கான்
👆 அண்ணா, சூப்பரோ சூப்பர் அத்தனையும் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை 👍
சுராஜ்
அடி ஆத்தி இம்புட்டுச் சங்கதியுஎங்கருந்து புடிசசய?
அரிய தகவல்கள்.
[21:51, 11/13/2016] Suraj CR: தொருசாலி=துரைசானி.
அலக்குடுப்பு=அல்லல் கொடுப்பது.
அவப்ராணி=அவள் பெரிய ராணி.
கொமரு=குமரி.
அடி  ஒங்க வீடு நல்லாருக்க!=வஞ்சகப்புகழ்ச்சி.
கலுச்சல்ல போவ=கழசலில் போவது.(காலரா என்று நினைக்கிறேன்)
அரசாளுவே=அரசாள்பவள்.(வஞ்சகப்புகழ்ச்சி)
பாவிபரப்பா=பாவியாய் பிறப்பாளோ,பிறந்தாளோ தெரியவில்லை.
பொதிய புடிக்க= புதையல் எடுக்க.
பொலயப்பேசாத=புழைகளைப்பேசாதே
பொதியபுடிக்க=புதையல்எடுக்க. கோரணங் கெட்டது=குணம் கெட்டது.
கேடி,கேடி=கேளடி,கேளடி.
நின்டதுநிக்க=நின்றது நிற்க.
ப்பரப்பா=பரப்பி வைப்பது.
கொல்லையில போக=கொள்ளை நோயில் போவது.

மயே=மகன்.
கொண்டாந்தே=கொண்டு வந்தேன்.
ரெயர்கள்__/
மைம்பொண்ணு =மைமூன்
மைம்புரா=முகமது மீரா
சைனம்பு=சைனப்.
சொலையா=சுலைஹா.
ரயிமத்து=ரஹ்மத்.
சொலையா=சுலைஹா.
முந்தாசு=மும்தாஜ்.
சரிவு=ஷரிஃப்.
நூர்சே=நூர்ஜஹான்
சகர்வே=சஹர்பானு
இவையெல்லாம் நம் ஊரில் வழக்காடும் சொற்களுக்கு இப்படித்தான் பொருள் இருக்குமோ என்று நான் யூகித்தவை.
சரியா,தவறா என்று தெரியவில்லை.🤔🤔🤔😳😳😋                       
[

மெஹராஜ்
திருப்பத்தூரில் குடும்பப் பெயர்கள்.
முனுசம்பலார்வீடு
கொன்னையூர் ராவுத்தர்வீடு
நொண்டிக்காதி பேத்திவீடு
மூக்குநாரி பேத்தி வீடு
வெளிச்சம்பலார் வீடு
பொய்க்காக் குதிரை வீடு
 கோட்டையான்வீடு
வேலங்குடியாள்
பெயர்கள்
அம்மாக்குட்டி
அம்மாப்பொண்ணு
அய்யாத்துரை
சின்னப்பிள்ளை
சின்னப்பொட்டு
கருத்தக்கிளி
சின்னத்துரை
நெடுமரத்தா
இன்னும் நிறைய இருக்கிறது.
ஷாஹுல்   -சாவுலா , சாவுல்.
கபூர்--கவுறு
ஹைரூனா-கயர்னா ஷாஜஹான்-சாஸான்
ஷர்புதீன்-சர்வதி
ஜீக்ஷான்-சீஸேன்
ஆயிஷா-ஐஸா
ஜோதி
தம்பி அஸ்ஸலாமு அலைக்கும். நேராக திருப்பத்தூரக்கு விட்டாய். இத்தனை பழ மொழிகள், சொலவடைகள் கண்டுபிடித்து சேகரம் பண்ணி அதற்கு விளக்கவுரையும் கொடுத்ததை , அதி யத்து மேற்கொண்டு நாம் என்ன எழுதுவது என்று நினைத்துக் கொண்டே இருக் கும் போது, 'அடி ஆத்தி என்று வியந்து சுராவும், மெக ராஜும் போட்டி போட்டுக் கொண்டு நிறைய எழுதி விட்டார்கள். எப்படி யோ, நம் ஹாஜி பீர் அய்யா குழு மூலம் நம் திரப்பத்பத்தூரும், நம் மக்களும் நன்கு பேசப்படுகிறார்கள், ஞாபகப்படுத்தப்படுகிறார்கள், கவுரவப்படுத்தப்படுகிறார்கள் என்பது என் கணிப்பு. சரியா? தவறா? தெரியவில் லை. இன்ஷா அல்லா அடுத்த சந்திப்பு எப்போது?

நிறைவுரை


விளயாட்டுப் பருவமான ஆம்பூரில் விளையாட்டாகத் துவங்கிய தொடர் ஹூலா ஹூப் விளையாட்டு பற்றிச சொல்லும் விழுப்புரத்தில் நிறைவுறுகிறது
முப்பத்தி ஏழு பகுதிகள் ,சிவான் சேர்த்தால் முப்பத்திஎட்டு.
தொடரைத துவங்குமுன்  மனதில் தோன்றிய  எண்ணங்கள்
கூடிய மட்டும் பிழையில்லாத ,தூய தமிழில் எழுத வேண்டும்.
எளிய நடையில் எழுத வேண்டும்.
அவலச்சுவையை இன்றியமையாத இடங்கள் தவிர மற்றபடி தவிர்க்க வேண்டும்
யாரையும் எந்த வகையிலும் புண் படுத்தக்கூடாது
முடிந்த வரை வலைத்தளதிலோ மற்றவற்றிலோ குறிப்புகளைத் தேடாமல் நினவுப்பதிவில் உள்ளதை மட்டுமே எழுத வேண்டும்
வரலாற்றுத்தொடர் போல் இருந்தால் மிகவும் சலிப்பு ஏற்படும். எனவே ஆங்கில அகராதி வரிசையில் எழுதினேன் காலத்தை (மாதம ஆண்டு)  குறிப்பிடுவதைத் தவிர்த்து விட்டேன்
முன்பே பலமுறை நான் குறிப்பிட்டது போல் இது வரலாற்றுத்தொடரோ ,என் வாழ்க்கை வரலாறோ இல்லை .
 இனிய நிகழ்வுகளை நினைவுகூறும் ஒரு மலரும் நினைவாக இந்தத் தொடர் அமைய வேண்டும் என்ற என் எண்ணம் ஓரளவேனும் நிறைவேறியதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் என்று தலைப்புக் கொடுத்திருந்தாலும் வங்கி அனுபவங்கள் பற்றி மிகக் குறைவாகவே குறிப்பிட்டிருக்கிறேன் .அந்த அந்தப் பகுதிகளில் குறிப்பிட்டால் அது சிலரைச் சுட்டிக்காட்டுவது போல் இருக்கும் என்பதால் பின்னால் வாய்ப்புக் கிடைக்கும்போது இன்னும் நிறைய வங்கி அனுபவங்கள் பற்றி எழுதுவேன்

முதலில் பத்து நாட்களுக்கு ஒரு முறை எழுதினேன்..பிறகு இந்த ஆண்டுக்குள் முடிக்க எண்ணி வாரம் ஒரு முறை எழுதினேன்.. இறைவனருளால் பணி நல்ல விதமாக நிறைவுற்றது

மூன்று பகுதிகள் முடிந்து நான்காவதை பயண இடை வேளையாக எடுத்துக் கொண்டேன்  இதில் பிரான் மலை, .ஹஜ் பயணம், திரு.வட்டாரத் தமிழ்   பகுதிகள் எதிர் பாராத அளவுக்கு பாராட்டைப் பெற்றன.

..காரைக்குடி திருப்பத்தூர் திருநெல்வேலி பகுதிகள் எல்லோருக்கும் பிடித்தது எதிர் பார்த்ததுதான் . ஆனால் பரவலாக    அறியப்படாத
மங்கலப்பட்டி,ஏறுவாடி பகுதிகளும் பலருக்கும் பிடித்தது எனக்கு வியப்பு கலந்த பெருமிதத்தை உண்டாக்கியது .எல்லாப்புகழும் இறைவனுக்கே ,

அது போல் நான் மிகவும் சிரத்தை எடுத்து மூன்று பகுதிகளாக  வெளியிட்ட இசுலாமும் யோகக்லையும் பகுதியை சகாவைத் தவிர யாரும் கண்டு கொள்ளாதது சிறிது வருத்தத்தைத் தந்தாலும் ஒரு நல்ல படிப்பினையாக அமைந்தது  .

எழுதுவதில் எனக்கு ஏற்பட்ட  சிரமம் ஆங்கில எழுத்தாக்கத்தில் (spelling) உண்டான  துவக்கக்கால குழப்பம்தான் . லதா தமிழ் எழுத்துருவில்  ஆங்கில விசைப்பலகை மூலம் தட்டச்சுச் செய்யும்போது தமிழில் ஆல் என்று எழுத aal என்று தட்டச்சுச் செய்ய வேண்டும். .ஆங்கிலத்தில் all என்று வரும். போகப்போக இந்தக் குழப்பம் சரிஆகிவிட்டது 

.தொடரை நிறைவு செய்யுமுன் நன்றியுரை சொல்லாவிட்டால் நான் கடமை தவறியவன் ஆவேன்..,

இது போல் ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாகவே என் மனதில் இருந்தது பணி மூப்புப்பெற்ற பின் சகோதரி ஜோதி நீ உன் அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிடலாமே என்று சொன்னது ஒரு தூண்டுகோலாக அமைந்தது

.ஜோதிக்கு நன்றி

.எழுதுகோல் கொண்டு தாளில் எழுதுவது என்னால்  முடியாத ஓன்று . அதனால் கணினியில் எழுதி  கட்செவியில் வெளியிட எண்ணினேன். . என் கைபேசியில் இது போன்ற செயல்பாடுகள் இல்லாததால் கணினியில் தட்டச்சு செய்து அதை மின்னஞ்சலில் இதயுத்துல்லாவுக்கு அனுப்பி, இதயத்துல்லா கட்செவியில் போடுவார்..

இதயத்துல்லாவுக்கு நன்றி.

பின்  மடிக்கணினி வாங்கியபிறகு அதிலேயே கட்செவி போட்டுக்கொடுத்தார் பைசல் . எம் எஸ் வோர்டில் இருந்து நேரடியாகக் கட்செவியில் பதிவு செய்ய முடியாது. எனவே பைசல் பேரில் டெலிக்ராம்முக்கு அனுப்பி அவர் தன கட்செவிக்கு அனுப்புவார். . அதிலிருந்து  மற்ற குழுக்களுக்கு அனுப்பி வைப்பேன்..அதோடு வலை நூலிலும் கூகிள் + இலும் , முக நூலிலும் பதிவு செய்தேன்.

 பைசல் முறையாகக் கணினி பற்றி படித்தது சிறிதுதான். ஆனால் கணினி அறிவியலில்(ஏன் எல்லாத்துறைகளிலுமே) அவர் ஒரு மேதை என்று சொல்லும் அளவுக்கு எதையும் செய்து முடிக்கும் திறன் உண்டு...பல பேர் சொல்லக் கேட்டது இது
 ( ஈன்ற பொழுதில் ---- தந்தை)

 பைசலுக்கு நன்றி 
.
கருத்துக்களும் பாராட்டுகளும்தான் தொடர்ந்து எழுத ஊக்கமும் ஆர்வமும் கொடுத்தன. அந்த வகையில் முன்னணியில் இருப்பவர்கள் உடன்பிறப்புகள் மெஹராஜ் ஜோதி சுராஜ். அதிலும் உடனே பாராட்டுத்  தெரிவிப்பது மெகராஜ் அக்கா.

அடுத்து ஜோதி அக்கா மிக உன்னிப்பாக வரி வரியாகப்படித்து ஆழ்ந்த கருத்துகள் தெரிவிக்கும்.

அவ்வப்போது வரும் சுராஜின் கருத்துகள் மிகவும் உணர்ச்சி மயமாக இருக்கும்..

 சகோதரிகள் மெஹராஜ் ஜோதி சுராஜுக்கு நன்றி .

எழுதியதை முதலில் நான் படித்துக் காண்பிப்பது  கடலூர் ஜோதிக்குத்தான்..நன்றாயிருக்கிறது ஆனால் மற்றவர்களுக்குப்பிடிக்குமா என்று வழக்கமாகச் சொல்வதோடு, ஆக்கப்பூர்வமான கருத்துகளும் திருத்தங்களும் தெரிவிக்கும்.

துணைவி ஜோதிக்கு நன்றி .
.
முதலில் நிகழ்வுகளை பெயர் குறிப்பிடாமல் எழுதி வந்தேன். தம்பி சகா பெயர்களைக்குறிப்பிட்டு எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொன்னவுடன் பெயரைக்குறிப்பிட்டு எழுதினேன் 

சகாவுக்கு நன்றி

எப்போதாவது பாராட்டும்  யுனிவர்சல் ஷாஜஹான் , இதயத்துல்லா, அஜ்மீர் அலி, சாகுல், சகா ,அமீதா, அயுப், சர்மாதா , சிராஜுதீன். கலிபுல்லா ,அசுமத் கிரசென்ட்சேக்( நேரில் பார்ப்பது போல் இருக்கிறது), ராஜா, சேக் சாஜித்துக்கு நன்றி

ஒய்வூ பெற்ற வங்கி அதிகாரிகள் ராஜா சுப்பிரமணியன், ரவி ராஜுக்கு நன்றி

சுஜாதாவோடு ஒப்பிட்ட நெய்வேலி ராஜாவுக்கும் பொன்னியின் செல்வனோடு ஒப்பிட்ட அஜ்மலுக்கும் நன்றி .

இன்னும் நேரில் சந்திக்கும்போது பாராட்டும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மனதளவில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி .,

எல்லோரும் ஒருமித்துப் பாராட்டியது என் நினைவுத்திறனையும் எளிய தமிழ் நடையையும்,. இவை தாய் தந்தையிடமிருந்து பெற்றதும் ஆசிரியர்களிடமிருந்து கற்றதும்

 அன்னை தந்தைக்கு நன்றி.

ஆசிரியர்களுக்கு நன்றி

தொடரைத துவங்கி எழுதி முடிக்க உடல் நலனையும் மன நலனையும் அருளிய ஏக . இறைவனுக்கு நன்றி .

கல்வி அறக்கட்டளை துவங்க இந்தத் தொடர் ஒரு தூண்டுதலாக இருந்தது மிகுந்த மன  மனமகிழ்வையும் மன நிறைவையும் அளிக்கிறது

.பிறையாய் இருக்கும் அறக்கட்டளை பிறை போல் வளர்ந்து முழு நிலவாய் கதிரவனாய் உலகெங்கும் ஒளி வீசிட இறைவன் அருள் புரியட்டும் .

நம் அனைவர் வாழ்விலும் நீடிதத மகிழ்ச்சியும் நிறை செல்வமும் உடல் நலமும் மன நலமும் ஆன்ம நலமும் நிலைத்து நிற்க ஏக இறைவனிடம்  இரு கையேந்தி இறைஞ்சியவ்னாக

                                              தொடரை நிறைவு செய்கிறேன்
12112016
.. \
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்

 sherfudddinp.blogspot.com