Thursday, 31 August 2017

Islam and Yoga 5.




Last week we saw the 8 major divisions of Yoga .
Now let us see th short description of these divisions
Yama speaks about social discipline that is rules and regulations for peaceful coexistence in a society
Niyama is about individual discipline
Asana is the popular yogasana. Simply it can be called physical exercise. But there is a lot of difference between yogasana and physical exercises.. We can have a bit wider discussion about this later.
Pranayama for the purpose of understanding can be named breathing exercise
Prathiyagara indicates controlling of senses
Dharana – concentration of mind
Dhyana- Meditation
Samathi – self realization leading to realization of   Almighty.                                                         One who realizes himself can realize almighty – Prophet Muhammad (Sal)
Out of  these Yama and Niyama have each 5 sub divisions
We will see them
Next week Next Part
Like it ?
Then Share it.
Don’t like it ?
Please inform me


Thursday, 24 August 2017

Islam and Yoga 4

Misunderstandings about Islam and Yoga __ we saw in the proceeding two parts.

Now let us go through  clarifications about yoga and Yogasana...

Yoga is a very great science and art
as great as  or greater than ocean .
Yogasana is a small part of yoga .
Ashtanga yoga  is one of the various types of yogic science .in which yoga is divided into eight major parts namely

Yama
Niyama
Asana
Pranayama

Prathiyagara
Dharana
Dhyana
Samathi

Very high sounding words indeed!
 If we understand the meaning it will be very simple.

in fact if we try to explain each part in detail  , it will run into volumes

Meaning and details in a nutshell

 Next Week Next Part.

Share if you like









Thursday, 17 August 2017

Islam and Yoga Part 3
Last week we saw misunderstandings about yoga
One of the main reasons for misunderstandings about Islam is
Islam is not widely discussed as Yoga is spoken of.
And I feel even among a few Muslims there is no Proper understanding about Islam 
Now let us go through
Misunderstandings about Islam (as far as I know)
-Only Urdu speaking are real or original Muslims.
-Arabic language and Urdu language are  one and the same.
-Muslims worship a black stone called Kabha
-Prophet Mohamed (Sal) is the God or one of the gods of  Muslims
-Invariably all Muslims take non veg daily- particularly beef.
- Muslims are not Indian Citizens. Their patriotism is not towards India
- Above all there is one more Major  terrific misunderstanding that is terrorism
Islam and Yoga are very great and voluminous subjects.
My aim is not to have a full discussion about Islam or Yoga.
We have seen the misunderstandings about the 2 subjects.
Clarifications and explanations in a nutshell
Next week Next Part
Please share if you like

Tuesday, 15 August 2017

கதைப்பயணம் 5 சட்டம் ,ஒழுங்கு ???





 


இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதப்படாத சட்டம்(Unwritten constitution ) என்று சொல்வார்கள்
ஒரே ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலம் இதைத் தெளிவு படுத்தலாம்
 குடியரசுத்தலைவரின் கடமைகள் பொறுப்புகள எல்லாம் பற்றி  இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பிரித்தானிய அரசியோ அரசனோ அரசுத்தலைவர் என்பது எங்கும் எழுதப்படவில்லை . பின் எப்படி என்றால் மரபுகளைப் பின்பற்றி தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம் நடைமுறையில் எழுதப்படாத சட்டம் ஆகிறது.
இதுபோல் எழுதப்படாத சட்டங்கள் பல வங்கிகளிலும் பின்பற்றப்படுவது ஒரு வியப்பான ஆனால் உண்மையான செய்தி
குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் மிக அதிகம் .நான் கண்ட, கேள்விபட்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக பெரும்பாலான வங்கிக்கிளைகளின் வேலை நேரம் காலை பத்து மணி துவங்கி மாலை ஐந்து வரை உணவு இடைவேளை இரண்டு மணி முதல் இரண்டரை வரை இருக்கும்
பத்தரை மணி முதல் ஐந்தரை மணி வரை என்பது வட மாநிலங்களில் பல இடங்களில் வங்கி வேலை நேரம்
இது ஒரு பேருக்குத்தான்.
பெரும்பாலான ஊழியர்கள் வரும் தொடரி எத்தனை மணிக்கு வருகிறதோ அதைப்பொருத்துத்தான் வங்கிப்பணிகள் துவங்கும். அதே போல் மாலை தொடரியைப்பிடிக்க ஏதுவாக பணி நேரத்தைக் குறைத்துக்கொள்வார்கள்
சில திருவிழா பண்டிகை நாட்களில் யாரிடமும் அனுமதி பெறாமல் விரைவில் வீட்டுக்குப் போய் விடுவார்கள்
வங்கிப்பணி நேரத்தில் வெளியே போய் முடி வெட்டிக்கொண்டு வந்த ஊழியரையும் அங்கு கண்டேன்.
நாட்காட்டி முகவராகப் பணியாற்றிய ஊழியர்  ஒருவர் அதற்குரிய பருவங்களில் வங்கி நேரத்திலேயே வெளியே போய் முகமைப்பணிகளை செவ்வனே முடித்து விடுவார்.
உணவு இடைவேளை முடிந்து காரம் போர்டு விளையாடி விட்டு நிதானமாக பணிக்கு வருவார்கள்
பணி நேரத்தில் பங்குச்சந்தையில் மணிக்கணக்கில்  தொடர்பில் இருப்பார்கள்
ஆய்வுப்பணிக்காக போயிருந்த ஒரு கிளையில் பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்து காசாளர் இருக்கைக்குக் கிளை மேளாலரே தூக்கிப்போய் வைத்துக்கொண்டிருந்தார்
இதெல்லாம் கடை நிலை ஊழியரின் பணிதானே நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லக்கூடாது என்று கேட்டேன். வேண்டாம் சார் தேவைஇல்லாத பிரச்சனை வரும் என்றார் .ஒரு வழியாக என் வற்புறுத்தலால் அந்தக் கடை நிலை ஊழியரை பணப்பெட்டியைத் தூக்குமாறு வேண்டிக்கொண்டார்.
திரைப்பட வில்லன் போல் இருந்தார் அவர் .வலது கையில் சிகரெட்டோடு இடது கையால் பணப்பெட்டியைத் தூக்கி வைத்து விட்டார் .
கிளை மேலாளர் என்னைப்பார்த்த பார்வையில் ஓராயிரம் செய்திகள், வினாக்கள்.
கோட்ட மேலாளர் ஒருவர் தன் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட கிளைக்கு அலுவல் நிமித்தமாய்ப் போயிருந்தார் . மாலையில் அவர் ஊழியர் கூட்டத்தில் உரையாற்றுகையில் எல்லோரும் நேர்மை , உண்மையுடன் உழைத்து வங்கி வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு ஊழியர் எழுந்து பேசத் துவங்கினார்.
“கோட்ட மேலாளருக்கு வணக்கம்
வெகு தொலைவில் உள்ள உங்கள் அலுவலகத்தில் இருந்து அலுவலகப்பணியாக எங்கள் கிளைக்கு வந்ததற்கு நன்றி மகிழ்ச்சி
.உங்கள் பணிக்காக வங்கி கொடுத்த மகிழுந்தில் வந்து வங்கியின் செலவில் விடுதியில் தங்கி உணவும் உட்கொள்கிறீர்கள் . இதெல்லாம் உங்கள் பதவிக்குரிய  உரிமைகள். .
ஆனால் உங்கள் துணைவியாரும் உங்களுடன் வந்திருக்கிறாரே  இது எந்த வகையில் நியாயம் நேர்மை? “
என்று கேட்க வாயடைத்துப்போய் அமர்ந்து விட்டார் கோட்ட மேலாளர் .
வங்கியின் மிக உயர் அதிகாரிகளையே பெயர் சொல்லி அழைப்பதும் அவர்களிடம் கடுகடுப்பதும் நிகழ்ந்தது உண்டு
மிகப்பெரிய கிளை ஒன்றில் ஊழியர்களின் காலம் தவறாமை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு அலுவலர் அனுப்பப்பட்டார்..
மிக பந்தாவாக கிளைக்குள் நுழைந்த அவர் வருகைப்பதிவேட்டை எடுத்து வைத்துக்கொண்டார் ஊழியர்கள் வந்து வருகைப்பதிவேட்டில் கைஎழுத்துப்போடும் நேரத்தைக் குறித்துக்கொண்டார்
யார் யார் எவ்வளவு தாமதமாக வந்தார்கள் என்ற குறிப்புகளை ஒரு அறிக்கையாக உருவாக்கி கிளை மேலாளரிடம் அதில் கையெழுத்து வாங்கிகொண்டு புறப்படப் போகும் நேரத்தில் இரண்டு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்
“ஒழுங்காக ஊர் போய் சேரும் எண்ணம் இருந்தால் அந்த அறிக்கையைக் கிழித்துப் போட்டு விட்டு விடுங்கள்
இல்லை நான் அறிக்கையை தலைமை அலுவலத்தில் சமர்ப்பித்தே தீருவேன் என்று அடம் பிடித்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்ல”
சுருக்கமான , தெளிவான சொற்கள்  
இதே போல் வேறொரு கிளையில் வருகைப்பதிவேட்டில் ஊழியர்கள் வரும் நேரத்தைக் குறிப்பிட்ட உதவி மேலாளர் உள்ளாடையோடு வங்கிக் கவுண்ட்டர் மேல் நிற்க வைக்கப்பட்ட ஒரு நிகழ்வும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆய்வுப்பணியில் ஒரு கிளைக்குப் போயிருக்கையில் அந்தக் கிளை மேலாளர் தனக்கு நிகழ்ந்தவற்றை கண்ணில் நீர் வராத குறையாக விவரித்தார்
ஒரு முறை மேலாளர் அறையில் ஒரு இடத்தில் அவர் கை வைத்தால் மின் அதிர்ச்சி அடையுமாறு மின் கம்பிகளை சொருகி மறைத்து வைத்திருந்தார்களாம். இறைவனருளால் மயிரிழையில் தப்பி விட்டார்.
இதைவிடக்கொடுமை அவர் அறையில் உள்ள கழிவறைத்தொட்டியில் தண்ணீர் போகாத அளவுக்கு கல்லைப்போட்டு பல நாட்கள் அடைத்து விட்டார்களாம்
ஒரு கிளையில் கணக்குப்பதிவேட்டில் பல இடங்களில் தொகையின் முன்னால் ஒரு ஓன்று போடப்பட்டிருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது
எடுத்துக்காட்டாக உங்கள் சேமிப்புக்கணக்கில் ரூபாய் பத்தாயிரம் இருந்தால் அதற்கு முன் ஓன்று போட்டால் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் என்று காண்பிக்கும்.
பொய்யான இடமாற்றல் ஆணை தயார் செய்த ஊழியர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்,.
வட மாநிலத்தில் நல்லதே இல்லையா என்ற வினா உள்ளத்தில் எழுவது இயற்கை
.நிறைய , மிக நிறைய நல்ல செய்திகள் உண்டு..
 பொதுவாக நல்ல விசாலமான மனம், நட்பு பாராட்டும் குணம் உடையவர்கள். முதியவர்களைக் கண்டால் காலைத்தொட்டு வணங்குவது, அலுவலகத்தில் எல்லோரும் கைகுலுக்கி தழுவிக்கொள்ளுதல் என பல நல்ல பல பண்புகள் கொண்டவர்கள்.
அலுவலகத்தில் மதிய உணவு வேளையில் அனைவரும் கூடி உட்கார்ந்து எல்லோர் உணவையும் ஒன்றாகக்குவித்து எல்லோரும் பகிர்ந்து உண்பது ஒரு நினைவில் நிற்கும் நட்புணர்வுக்காட்சி.
சில மாதங்களே பணியாற்றிய ஒரு கிளையிலிருந்து நான் மாற்றலாகிப் போகையில் கிளை ஊழியர் அனைவரும் தொடரி நிலையம் வந்து, சுமைகளைஎல்லாம் தொடரிப்பெட்டியில் ஏற்றி வழியனுப்பி வைத்தது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது
உணவுப்பண்டங்கள்,இனிப்புகள்,பால் பொருட்கள் எல்லாம் மிக மலிவாகவும் தரமாகவும் கிடைக்கும்.
நல்ல இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் பல வடமாநிலத்தில் உண்டு.
எனக்கு இருந்த சில நரைமுடிகள் கருப்பானது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
பஞ்சாபில் குடும்பத்துடன் இருந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். . பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளியூர் போகவும் தங்கவும் நேரிடும். எந்த வித அச்சமும் இருந்ததில்லை .
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.. வட மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழர்களுக்கும் தென்னிந்தியந்தர்களுக்கும் ஒரு எளிதான சுகமான வாழ்க்கை முறை கிடைத்திருக்கிறது.
நாம் பள்ளியில்  வரலாற்றில் பாடமாக மட்டும் படித்த பலவற்றை வட மாநிலங்கள் நேரடியாக சந்தித்து அதன் வேதனை, துயரங்களை அனுபவித்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அந்நிய நாடுகளின் படையெடுப்பு, உள்நாட்டு மன்னர்களின் ஆக்கிரமிப்பு, விடுதலைப்போராட்டம், நாட்டுப்பிரிவினை ,அதையொட்டிய மதக்கலவரங்கள், என்று சொல்லிகொண்டே போகலாம்.
இது போக வெள்ளம், புயல், என இயற்கைசீற்றங்கள், தட்ப வெப்ப நிலையில் கடுமையான மாறுபாடுகள் இவையெல்லாம் சேர்ந்து வட மாநிலத்தவர்களை இயல்பாகவே போராடும் குணம் கொண்டவர்களாக மாற்றி விட்டது என்பது என் கருத்து
அதற்கெல்லாம் மேல் நம்மூரில் இவர்கள் ஏன் பணி புரிய வருகிறார்கள் என்ற ஒரு போட்டி மனப்பான்மை
ஏற்கனவே நான் எழுதிய ஒரு சிறு நிகழ்வை மீண்டும்  குறிப்பிட்டு இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சிறு நிகழ்வுதான் ஆனால் அதன் தாக்கம் பெரிய அளவில் வட இந்தியர்கள் பற்றி ஓர் உயர்ந்த எண்ணத்தை என்னுள் உருவாக்கியது
கடும் குளிர்காலம்  முடிந்து இதமான வெய்யில் ..தொடர் விடுமுறையின் ஒரு நாளில் காலை உணவை முடித்து விட்டு நடந்து போகையில் ஒரு இடத்தில் விற்ற எலுமிச்சை தேனீரை வாங்கி குடித்து விட்டு காசு கொடுத்து விட்டு நடையைத் தொடர்ந்தேன் .
யாரோ பின்னால் தொடர்வது போல் தெரிய திரும்பிப் பார்த்து திடுக்கிட்டேன். தேநீர்க்காரர்-, இடையில் லங்கோடு மட்டும் அணிந்த நெடிதுயர்ந்த உருவம்- என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் . ஒன்றும் புரியவில்லை
ஏதோ பெரிய தவறு செய்து விட்டோம் . இல்லாவிட்டால் தேநீருக்குக் காத்திருக்கும் கூட்டத்தை விட்டு விட்டு இவ்வளவு தூரம் நம்மைத் துரத்திக்கொண்டு வரமாட்டார். வங்கியும் தொடர் விடுமுறை, நமக்கு மொழியும் தெரியாது ஏதேனும் நிகழ்ந்தால் குடும்பத்துக்கு தகவல் சொல்லக்கூட யாரும் இல்லையே என்று எண்ண ஓட்டங்கள் .
இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் நான் நிற்க , அவர் வந்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டார் . பலி கடாவுக்கு மாலையோ என எண்ணம்..தோன்றியது
என் கையில் ஐம்பது பைசா நாணயத்தை வைத்து விட்டு வேகமாகத் திரும்பிப்போய்விட்டார்
திகைத்து நின்ற எனக்கு உண்மையை உணர சற்று நேரம் பிடித்தது .
தேநீரின் விலை ஐம்பது காசு. நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்து விட்டேன்,. மீதம் ஐம்பது காசைக் கொடுக்க வெகு தூரம் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார்./
நெடிதுயர்ந்த அந்த மனிதர் இமயமாக உயர்ந்து இன்றும் என் நெஞ்சில் நிற்கிறார் .நன்றி சொல்லக்கூட வாய் வராத நான் கூனிக்குறுகிப் போனேன் ..
 ,
 சென்ற பகுதி பற்றி
கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த
கீதா, அஜ்மல், ஷிரீன் பாருக் , சிராஜுதீன் ,ஜோதி ,பாப்டி அனைவருக்கும் நன்றி
Geetha damodaran    Ajmal kha   Shreen farook
Like in FB

Sirajuddin
.வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை யாரோ அழைப்பது போல் இருக்கிறது என ஒரு வித அச்சுறுத்தல். .ரயில் என்ன ஒட்டக வண்டி போல் போகிறது என்ற அங்கலாய்ப்பு.....
......சென்னையில் இறங்கி வீட்டுக்குப்போகாமல் நேரே வழக்கமாக் காண்பிக்கும் மருத்துவமனை சென்றோம்
மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சொன்னது
She is perfectly alright (God’s Grace)....."
மேற்கண்ட பகுதிகள் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் அம்மா அவர்களை 'பளிச்' என்று நினைவு படுத்தி மகிழ்வை அளித்தது.
மச்சான் அவர்களுக்கு மிக்க நன்றி.  
Jothy liakath
தம்பி.அஸ்ஸலாமு அலைக்கும். ரயில் பயணங்கள் பற்றிய உன் கட்டுரை மிகவும் சுவாரசியமாக ரயிலில் தொடர்ச்சியாக பயணம் செய்தது போலவே சுகமாக இருந்தது. அத்தாவிற்கு ஊர் மாற்றல் காரணமாக ஓர் ஊர் ஸ்டே ஷனில் இறங்கிய போது அத்தாவிற்கு மாலை எல்லாம் போட்டு தடபுடலாக வரவேற்றது தான் என் முதல் ரயில் பயணம் என்று நினைக்கிறேன். எந்த ஊர் என்பது ஞாபகமில்லை. அடுத்தாக சிதம்பரத்திலிருந்து உடம்பு சரியில்லாமல் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருந்த எஸ்.ஐ. மாமா வைப் பார்ப்பதற்காக மதுரைக்கு ரயிலில் , அத்தா, அம்மா, ெ மகராஜ், நான் , நீ , சுராஜ் எல் லோரும் பயண ப்பட்டது தான் நினைவு தெரிந்த ரயில் பயணம் .இப்போது சமீபகால வெளி யூர்திரமணங் களுக்காக அடிக்கடி ரயிலில் பயணித்தோம். இப்போது கொஞ்ச நாள் முன்பு மெகராஜுடன் மதுரையிலி ருந்து சென்னை வத்தோம். எனக்கென்னவோ, வழி நெடுக சின்ன சின்ன கிராமங்களைக் கடந்து வழியில் சாப்பிட்டு சந்தர்ப்பம் கிடைத்தால் ஊர்மக் களுடன் பேசிப் பழகும் கார் பயணம் தான் ரொம்பப் பிடிக்கும். அதிலும் கார் நடுவழியில் நின்று விட்டால் புளிய மரம், மாங்காய் மரம் என்று அனுபவம் இன்னும் ரசிக்கத்தக்க தாக இருக்கும். சமீபத்தில் நூர், ஷாஜித்துடன் நான் காரைக்குடிக்கு காரில் பயணம் போனது ரொம்ப நன்றாக இருந்தது. வருஷத்தில் குறைந்தது பத்து தடவையாவது பயணப்படும் மெகராசிடம் கேட் டால் ரயில் பயணம் பற்றிய அனுபவங்கள் நிறைய கிடைக்கும். இன்ஷா அல்லா மீண்டும் சந்திப்போம்.
பாப்டி (தொலைபேசியில்)
மிக நன்றாக இருந்தது   
இ(க)டைச் செருகல்
நேற்று விடுதலை நாள்
மனதில் தோன்றிய சிறு
வசன கவிதை
நள்ளிரவில் பெற்ற.
நாற்பத்தியேழில் இருந்து   
எழுபது ஆண்டுகளாய்
எதிர் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் விடியலை
 இலவு காத்த கிளி என

இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்  
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com              

Tuesday, 8 August 2017

Islam and Yoga
Part 2
In continuation of Introduction in part 1 let us see misunderstanding about yoga ( as far as I know )
 
1. Yoga is a religious practice
2. It is meant for only priests and sanyasis.
3.It is a form of physical exercise
4.It imposes lot of diet restrictions
5.Continuous practice of yoga will lead one to Sanniyasm
and so on..
Out of these point No.3 is widely prevalent
Let us see misunderstandings about Islam
Next week next part

Please Share if You Like

Sunday, 6 August 2017

கதைப்பயணம் 4ரயில் பயணங்களில்






கடந்த மூன்று பகுதிகளில் தொடர்ந்து வங்கி பற்றிப்படித்து களைத்திருப்பவர்கள் இளைப்பாற பயண இடைவேளையாக


எத்தனை முறை பார்த்தாலும் மலைக்க வைக்கும் சிலவற்றில் ரயிலும் ஓன்று.
அதை விட மலைக்கவும் திகைக்கவும் வைத்து அச்சுறுத்தியது ஒரு முறை நிகழ்ந்த சீட்டில்லாப்பயணம். தொடரி நிலையத்துக்குள் நுழையும்போது வண்டி புறப்படும் நிலையில் நிற்க , வண்டியிலேயே சீட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னதைக்கேட்டு உடன் வந்த இருவரும் நானும் வண்டியில் ஏறி விட்டோம்.
அதிக அனுபவம் ,உலகறிவில்லாத மாணவப்பருவத்திலிருந்த  நான் சீட்டு பரிசோதகரிடம்  நேரே போய்
விபரம் சொல்ல, அவர் வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை மூன்று சீட்டுக்குரிய கட்டணமும் தண்டத் தொகையும் சேர்த்து ஒரு பெரிய தொகை கேட்க அவ்வளவு பணம் இல்லையென்று நான் சொன்னவுடன் அப்படிஎன்றால் இறங்குமிடத்தில் காவல் நிலையத்தில் உங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அச்சுறுத்தினார்.
 கலக்கம், அச்சம் ,திகைப்பு, மலைப்பு எல்லாம் கலந்த ஒரு குழம்பிய மன நிலை
உடனிருந்த பயணிகள் சொன்னபடி வழியில் ஒரு நிலையத்தில் வண்டி நிற்கையில் இறங்கி மூன்று சீட்டு வாங்கிக்கொண்டு நிம்மதிப்பெருமூச்சோடு வண்டியில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
தப்புத்தான் ஆனால் அப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை
இறங்குமிடத்தில் காவல் நிலையம் அழைத்துச்செல்ல பரிசோதகர் நான் பயணம் செய்த பெட்டி வாசலில் காத்திருந்தார். சீட்டைக் காண்பித்ததும் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார்.
ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சன்னலோர இருக்கை.கிடைத்துவிட்டால்
வேகமாகத் தோன்றி மறையும் மின்கம்பங்கள், மரஞ்செடி கொடிகள், வயல்வெளிகள், ஆறு, குளம் குட்டைகள், சரசரவென்று கடந்து செல்லும் இன்னொரு தொடரி என
உலகமே நம் கண்ணுக்குள் வந்தது போல் ஒரு மகிழ்ச்சி ,உற்சாகம்.
இதெல்லாம் அசைபோடும்  நினைவுகள் ஆகிப்போய்விட்டன.
அரிதாக பொதுப்பெட்டியில் பயணிக்கையில் சன்னலோர இருக்கையை பிடித்து விடுவேன்
மற்றபடி குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கையில்  சன்னலுக்கு வெளியே  முழுதாகப்பார்க்க முடிவதில்லை
சன்னலோர இருக்கைகள் போல மிகப்பல நல்லவைகள் மாறிப் போய்விட்டன.
முன்பெல்லாம் ரயிலில் பயணிக்கையில் எந்த ஊரும் வருவதற்கு சற்று முன் உயரத்தில் கேபின்கள் இருக்கும் .அந்தக் கேபின்களில் மிகப்பெரிதாக ஊர்ப்பெயர் பளிரென்று தெரியும்படி மஞ்சள் நிற சுவரில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும்..
கணினி மயமானபின் கேபின்கள் மாயமாகிப்போயின . .சின்னச்சின்ன வட்ட வடிவ பலகைகளில் ஊர்ப்பெயர் சிறியதாக எழுதப்படுகிறது. .ஓடும் ரயிலில் அந்தப் பலகைகளை படித்து ஊரை அறிவது மிக மிக சிரமம்..குளிர் பதனப்பெட்டி என்றால் இன்னும் சிரமம்
 பெரிய பெயர்ப் பலகை இருந்தாலும் அங்கு பளிச்சென்று வெளிச்சம் தரும் விளக்குகள் இருப்பதில்லை
ஒலிபெருக்கியில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு  வண்டி எண் என்று துவங்கி மூன்று மொழியில் அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கும். அதிலும் வண்டி நிற்பது எந்த ஊர் என்பதை அறிவிப்பதில்லை
முன்பெல்லாம் இரவில் வண்டிகள் நிற்கும்போது அந்த இடத்தின் பெயரை ரயில்வே ஊழியர்கள் உரக்கச்சொல்லுவார்களாம்
முன்பதிவு செய்த பயணிகள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பெட்டி ஊழியர் நினைவூட்டுவார்
அடுத்து தண்ணீர் வசதி,.. ஒரு வண்டியில் பெரிய உயரமான பாத்திரங்களில் தண்ணீர் வைத்துக்கொண்டு பணியாளர்கள் தள்ளிக்கொண்டு வந்து கேட்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள் ,வண்டியை விட்டு இறங்காமலேயே தண்ணீர் குடிக்கலாம், பிடித்துக்கொள்ளலாம் இது ஒரு இலவச சேவை.. தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்காக பாத்திரத்தைச் சுற்றி சணல் கயிறு பின்னப்பட்டிருக்கும்
பயணச்சீட்டு  முறையில் மிகப்பல மாறுதல்கள்
முன்பெல்லாம் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என மூன்று வகையான பெட்டிகள் இருந்தன. முதல் வகுப்பில் நான்கு பேர் மட்டும் ஒரு பெட்டியில் பயணிப்பார்,. இரண்டாம் வகுப்பில் ஆறு பேர் என நினைவு.
காலப்போக்கில் மூன்றாம் வகுப்பு நீக்கப்பட்டு இரண்டு வகுப்புக்கள் ஆக்கப்பட்டது
தூங்கும் வகுப்பு என்று தனியாக உருவானது அண்மையில்தான். அதற்கு முன்பு இரண்டாம் வகுப்பில் தூங்கும் வசதிக்கு கூடுதல் கட்டணம் பெறப்பட்டது அப்போது இரவு ஒன்பது மணி முதல் காலை ஆறு வரைதான் தூங்கும் வசதி. அதில் இரண்டடுக்கு, மூன்றடுக்கு என்று இருந்த்து .அதன் பின் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் வந்தன 
இதில் என்ன பெரிய வசதி என்றால் ஒரு இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுடன் பயணிகள் தயக்கமின்றி தூங்கும் வசதிக்கோ குளிர் வசதிக்கோ இடம் இருப்பதைப்பொருத்து மாறி அமர்ந்து, அதற்குள்ள கூடுதல் கட்டணத்தை செலுத்தி விட்டுப் பயணத்தைத் தொடரலாம் .
ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. தூங்கும் வகுப்பு,. குளிர் வகுப்பு  இவற்றில்  இரண்டு அடுக்கு, மூன்றடுக்கு, என்று ஒவ்வொன்றும் தனித்தனி வகுப்பாகி விட்டது. அதற்குள்ள பயணச்சீட்டு இருந்தால்தான் அந்தப் பெட்டியில் ஏறலாம் .. இல்லேயேல் சீட்டு இல்லாப்பயணம் போல் தண்டத்தொகை செலுத்தத் வேண்டும்.
இவ்வளவு ஏன்? காத்திருப்பு பயணச்சீட்டு இருக்கிறதே என்று ஏறிவிட்டால் அதற்கும் இதே நிலைதான்
இன்னொரு மாற்றம்-ஒரு எடுத்துக்காட்டோடு சொன்னால் எளிதில் விளங்கும். கடலூரில் இருந்து சென்னைக்குப் பயணிக்கும்போது இடையில் உள்ள கோடம்பாக்கத்தில் இறங்க எண்ணினால் தாம்பரத்தில் இறங்கி புற நகர் தொடரியில் ஏற வேண்டும். சென்னை எழும்பூர் வரை என்னிடம் சீட்டு இருந்தாலும் அது புற நகர் தொடரியில் செல்லுபடியாகாதாம் தாம்பரத்தில் இறங்கி ,படியில் ஏறி இறங்கி  வெளியே வந்து, நீண்ட வரிசையில் நின்று சீட்டு வாங்கி மீண்டும் உள்ளே வந்து பயணிக்கவேண்டும். இது மிகச்சிரமமான் ,நேரம் விரயமாகும் நடைமுறை .
நடை மேடையிலேயே சீட்டு வழங்கும் வசதி இருந்தால் இந்த நேர விரயத்தையும் சிரமத்தையும் தவிர்க்கலாம்
இதற்கெல்லாம் மேல் இன்னொரு சிரமம் இருக்கிறது . மூன்றடுக்குத் தூங்கும் பெட்டியில் உள்ள சிரமம். முன்பெல்லாம் இரவு ஒன்பது முதல் காலை ஆறு வரைதான் தூங்கும் வசதி. இப்போது பெட்டியே தூங்கும் பெட்டி என்பதால் பயணம் முழுதும் தூங்கும் உரிமை இருக்கிறது. இது உரிமையா கடமையா இரண்டும் இல்லையா என்பது ஒரு பெரிய வினா,.
மீண்டும் கடலூர் சென்னைப் பயணத்தை வைத்தே பார்ப்போம். கடலூரில் மதியம் ஒரு மணிக்குப்புறப்பட்டு மாலை ஐந்தரை மணியளவில் சென்னை வரும் சோழன் விரைவு வண்டியில் நான் பயணிப்பது உண்டு. மூன்றடுக்கில் ஒரு பக்கம் உள்ள மூவரும் ஒத்துப்போனால்தான் படுக்கவோ உட்காரவோ முடியும். . நடுப்படுக்கையை விரித்து விட்டால் கீழ் இருக்கையில் யாரும் அமர முடியாது .. ஒருவர் நான் படுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் மற்றவர்களும் படுக்க முடியாது. இது பல முறை நான் உணர்ந்த சிரமம்.. பயணச்ச்கீட்டுப் பரிசோதகரிடம் இது பற்றிச்சொனால் அவர் கண்டு கொள்ளவே மாட்டார்.
என் கருத்தில் மூன்றடுக்கு தூங்கும் வசதி என்பது மனித உரிமைக்கு எதிரானது . முற்றிலுமாக நீக்கப்படவேண்டிய ஓன்று
என்ன எதோ தேர்வுக்கட்டுரை போல் போகிறதே என்று நீங்கள் உரக்க சிந்திப்பது என் காதில் விழுகிறது. இதோ சில சுவையான தொடரிப்பயணங்கள்
சுவை என்றவுடன் தொடரிக் காபி நினைவுக்கு வருகிறது. என்னதான் வெந்நீர் போல் இருந்தாலும் அந்தக் காப்பியைக் குடிக்காவிட்டால் பயணம் முழுமை பெறாது .
முன்பெல்லாம் பாட் காப்பி பாட் டீ என்று கொண்டு வருவார்கள். , பால், சீனி. டிக்காக்ஷன் எல்லாம் தனிததனி பீங்கான் குவளைகளில் இட்டு ஒரு தட்டில் வைத்து கொண்டு வருவதே பார்க்க அழகாக இருக்கும். இந்த பாட் டீ காப்பி சாப்பிடவே பலரும் ரயில்வே உணவகத்துக்கு வருவார்கள்
சில ஆண்டுகளுக்கு முன் எழும்பூர் நடை மேடையில் நல்ல காப்பி கிடைத்தது .சுவையும் மணமும் சூடும் நெடு நேரம் நாவிலும் மனதிலும்  நிலைத்து நிற்கும் . இப்போது பல நல்லவற்றைப்போல் அதுவும் காணாமல் போய்விட்டது
எங்கள் வீட்டில் மகிழுந்து இருந்ததால் சிறிய வயதில் தொடரிப்பயணம் அதிகம் போனதில்லை.Hill man MSZ 7736. .பெரும்பாலும் அத்தா ஓட்ட எல்லோரும் அதில் பயணிப்பது தனி ஒரு மகிழ்வு
விழுப்புரத்தில் எங்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் தொடரிப்பாதை. அதைக் கடந்துதான் பள்ளிக்கூடம் போகவேண்டும்
என் நினைவில் நிற்கும் முதல் தொடரிப்பயணம் பொள்ளாச்சியில் இருந்து வேலூருக்கு பயணித்தது .கல்வி ஆண்டுக்கு இடையில் அத்தாவுக்கு பொள்ளாச்சியில் இருந்து வேலூருக்குப் பணி மாறுதல். பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நான், பொள்ளாச்சியில் தங்கி அந்த ஆண்டுப்படிப்பை நிறைவு செய்து விட்டு வேலூர் வந்தேன். தூங்கும் வசதி என நினவு. தவறுதலாகச் சென்னைக்கு பயணச்சீட்டு வாங்கப்படடு. .பின் தொடரி வர்த்தகத்துறைக்கு எழுதி, கூடுதல் பணம் திரும்ப வாங்கினேன்.
அடுத்து உடன்குடியில் பணியாற்றும்போது சனிக்கிழமை நெல்லை வந்து விட்டு திங்கள் காலை நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் தொடரியில் நாசரேத் சென்று அங்கிருந்து பேருந்தில் உடன்குடி செல்வேன்.
அந்த வண்டியின் வேகம் பற்றிய கதையை (தண்டவாளத்தில் எருமை மாடு) ஏற்கனவே உடன்குடி பகுதியில் எழுதியிருக்கிறேன்.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அந்த நேரத்தில் அம்மா சுட்டுத்தரும் தோசை கறிக்குழம்பை சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவேன். மிதி வண்டியில் தம்பி சகா பின்னால உட்கார நான் ஒட்டிக்கொண்டு போவேன்...இந்தப்பயணம் ஒரு ஆண்டு காலம் நீடித்தது . பின் நெல்லை நகர் கிளைக்கு மாற்றலாகி வந்து விட்டேன் ..
நெல்லையில் - நெல்லை சந்திப்பு, நெல்லை நகர், பேட்டை, மேலப்பாளையம. பாளையங்கோட்டை என   நிறைய தொடரி நிலையங்கள் உண்டு.
அலுவலராகப் பதவி உயர்வு பெற்று நெல்லையிலிருந்து கேரளாவுக்கு மாறுதல் . முதலில் நான் மட்டும் போனபபோது நெல்லையிலிருந்து கொல்லம் வரை ஒரு தொடரியில் போய் அங்கிருந்து  தொடர்பு வண்டிக்கு மிக நீண்ட இடைவெளி இருந்தது. அந்த நேரத்தில் கொல்லம் கடற்கரையையும் அருகிலுள்ள மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்து வந்தேன்..
அதன் பிறகு கேரளா போவதற்கு திருச்சியிலிருந்து ஒரே தொடரியில் கேரளா போய் விடுவோம். திருச்சியில் அந்த வண்டியில் ஏறியவுடனே மலையாள மணம் வீசும் . அதேபோல் கேரளாவிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் அந்தப்பெட்டியில் உட்கார்ந்தவுடனே தமிழ் நாட்டுக்கு வந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
மேலாளராகப் பதவி  உயர்வு பெற்று கல்கத்தா போய் சிவான்(பீகார் ) போனது ஒரு நீண்ட பயணம்
ஒரு முறை கல்கத்தாவில் இறங்கி சென்னை வண்டிக்காக நீண்ட நேரம் காத்திருக்கையில் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு உணவு விடுதியில் மிருதுவான இட்லியும் சுவையான தேங்காய் கெட்டிச் சட்னியும் (ஒயிட் சட்னி) சாப்பிட்டது ஒரு  வியப்பான சுவை அனுபவம்,
அன்றே ஒரு தமிழர் சுங்கத்துறையில் தெரிந்தவர்கள் மூலம் மலிவான விலையில் வெளிநாட்டு துணிகள், பொம்மை வாங்கித்தருவதாய் கல்கத்தா ஹவ்ரா நிலையத்தில் இருந்து சியால்டா நிலையத்துக்கு அவர் செலவில் வாடகை மகிழுந்தில் அழைத்துச்சென்று அங்கு  என் பணத்தைப் பறிக்க முயற்சித்ததும் இறைவன் அருளால் மயிரிழையில் பணத்தை மீட்டதும் ஒரு திகில் அனுபவம்  
அலுவல் நிமித்தமாக ஒருமுறை சிவான் (பீகார்) கிளையில் இருந்து பாட்னா சென்று வந்தேன். இரு வழிப் பயணமும் தொடரியில்தான். பாட்னாவில் இருந்து திரும்பும்போது ஆயுத பூஜை என நினவு.
வழியில் இருக்கும் ஒவ்வொரு கோயிலிலும் தொடரியை நிறுத்தி, ஓட்டுனரும் மற்ற ஊழியர்களும் இறங்கி வழிபாடு செய்து விட்டு திரும்பப் பயணத்தைத் தொடர்ந்தனர் 
குடும்பத்துடன் ஜலந்தர் பயணிக்கையில் பாரத் பந்தினால் டெல்லி நிலையத்தில் ஒரு நாள் முழுதும் காத்திருந்து இரவில் புறப்பட்ட தொடரியில்  வீட்டுச் சாமானகள் அனைத்தையும் ஏற்றி பயணித்தோம். பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ன இவ்வளவு பொருட்களை பாயணிகள் பெட்டியில் அடைத்து வைத்திருகிறீர்கள் . மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருக்குமே என்றார். ஒரு சிறிய அன்பளிப்புக் கொடுத்ததும் நன்றியுடன் தேனீர் வாங்கிக்கொடுத்ததோடு ஜலந்தரில் பொருட்களை இறக்கவும் உதவினார்  
வாணியம்பாடியிலிருந்து சென்னைக்கு காலை ஆறு மணிக்கு ஒரு தொடரியில் ஏறினால் பத்து மணிக்குள் சென்னை வந்து விடலாம். நீதிமன்றம் , அலுவலகப்பணிகளைப் பார்த்து விட்டு மாலை நான்கு மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் அதே வண்டியைப் பிடித்து இரவு வீட்டுக்கு வந்து விடலாம்.
இந்த வண்டியில் நிறைய காலை சிற்றுண்டிப் பொட்டலங்கள் விற்பனைக்கு வரும்.. பயணிகள் பலரும் காலைக்கடன்கள் , சிற்றுண்டி எல்லாம் வண்டியிலேயே முடித்து விட்டுத்தான் இறங்குவார்கள். சென்னையில் இறங்கி விட்டால் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
சதாப்தி வண்டியில் மைசூர் சென்னை பயணம் ஒரு இனிய அனுபவம்
பலமுறை ஊட்டி போயிருந்தாலும்  ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை
ஆராதனா படத்தில் வரும் சிம்லா ரயிலிலும் பயணிக்க ஆசை
சென்னை மெட்ரோ ரயிலில்வடபழனியிலிருந்து கோயம்பேடு பயணிக்கையில் நாம் இருப்பது இந்தியாதானா என்றொரு ஐயம் தோன்றியது
அண்மையில் நூரக்கா பேத்தி அனிஷா திருமண வரவேற்பில் பங்கேற்க குடும்ப உறுப்பினர் பலர் ஒரு குழுவாக தொடரியில் ராசபாளையம் சென்று திரும்பியது ஒரு நினைவில் நிற்கும் பயணம் .
திகில் பயணத்தில் துவங்கிய இப்பகுதியை  ஒரு திகில் பயணத்துடன்  நிறைவு செய்கிறேன்,
மிகவும் உடல் நலமில்லாமல் இருந்த குப்பியை பார்க்க புதுக்கோட்டை போயிருந்தோம். சென்னையில் மருத்துவ மனையில் காண்பிக்க  குப்பி விரும்ப, தொடரியில் எளிதாக முன்பதிவு கிடைக்க , குப்பி, நாங்கள் இருவர், மைத்துனர் என நால்வரும் பயணித்தோம்..குப்பியை சக்கர நாற்காலியில் அமர்த்தி வண்டியில் ஏற்றினோம்.
நான் மேலே உள்ள படுக்கையில் ஏறிப் படுத்து நன்றாக உறங்கி, சென்னை வரும்போதுதான் கண் விழித்தேன், .
மற்ற இருவரும் இரவு முழுதும் தூங்கவில்லை
தூங்க முடியவில்லை
.வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை யாரோ அழைப்பது போல் இருக்கிறது என  ஒரு வித அச்சுறுத்தல். .ரயில் என்ன ஒட்டக வண்டி போல் போகிறது என்ற அங்கலாய்ப்பு.
உடல் நலமில்லாமல் இருந்தவரை விட மற்ற இருவரும் மிகவும் சோர்வாகவும் அச்சத்துடனும் காணப்பட்டார்கள்
ஒரு வழியாக சென்னையில் இறங்கி வீட்டுக்குப்போகாமல் நேரே வழக்கமாக் காண்பிக்கும் மருத்துவமனை சென்றோம்
மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சொன்னது
She is perfectly alright (God’s Grace)
                        -------OOOO ---- OOOO----
சென்ற பகுதி பற்றி கருத்துகளும் பாராட்டுகளும் தெரிவித்த ராஜா சுப்பிரமணியன், சிராஜுதீன் , பாப்டி ஜோதியக்காவுக்கு  நன்றி
CB retd Raja Subramaniyan
  I find every branch has one or two difficult people who spoil the atmosphere giving head ache to the manager. The CO will use the Branch manager as a human shield!
Sirajuddin
நடந்த நிகழ்வுகளை நேரில் காண்பது போல இருக்கின்றது, தங்களின் எழுத்து நடை. 👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

Paapti  
(தொலை பேசியில்)
மிக நன்றாக இருக்கிறது

Jothy Liakath
தம்பி. அஸ்ஸலாமு அலைக்கம். வங்கி கதை பற்றி அபிப்பிராயம் உடனே எழுத முடியவில்லை. ரொம்ப லேட்டாகி விட்டதால் உனக்கு எழுதுகிறேன். கதை நாயகர்கள் போலவே அனைத்து நபர்களின் குணம், நடவடிக்கைகள் சுவாரசியமாக உள்ளனர்.கதை களுக்கு வைக்கப்படும் பொருத்தமான தலைப்புகள், அசத்து கிறது.

 
பெரும்பாலும் குறைகளையும் எதிர்மறைக்கருத்துக்களையும் யாரும் தெரிவிப்பதிலை
என் குறைகளை திருத்தி எழுத்து நடையை மேன்மைப்படுத்த குறைகளை எடுத்துச் சொன்னால் உதவியாக இருக்கும் 
இ(க)டைச்செருகல்
குறைந்த சுமை
பயணத்தில்  நிறைந்த வசதி
இதுதான் காலங்காலமாக பயணிகளுக்கு தொடரித்த்துறை அறிவுறுத்தி வந்தது
இப்போது இதுவும் மாறி, குளிர்பதனப்பெட்டியில் பயணிப்பவர்களுக்கு இது வரை வழங்கப்பட்ட போர்வை, விரிப்பு, தலையணை இனிமேல் கிடையாதாம்
நாமே வீட்டிலிருந்து சுமந்து செல்ல வேண்டும்.
இது தொலைக்கட்சியில் ஒளிபரப்பான செய்தி
இதற்கு சொல்லப் பட்ட காரணம் மிகவும் வேடிக்கையாகவும் வேதனைக்குரியதாகவும் இருந்தது
படுக்கை விரிப்பு, த.உறை இவற்றைசுத்தம் செய்யும் ஊழியர்களிடம் சரியாக வேலை வாங்க முடியவில்லையாம் .
மிக மென்மையாகச் சொன்னால் செருப்புக்கேற்றார் போல் காலை வெட்டிக்கொள்கிறார்கள் நம்மையும் வெட்டச் சொல்கிறார்கள் (கையாலாகாத்தனம் என்று சொன்னால் சற்றுக் கடுமையாக இருக்கும்)
இப்படியே மற்ற துறைகளும் சொல்லத் துவங்கினால் ?
மக்களே நீங்களே உங்கள் தெருக்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள் , என்பது போன்ற அறிவிப்புக்கள் தொடராது என்பது என்ன நிச்சயம் ?
நிறைவாக ஒரு சிறிய செய்தி (பெரிய குறை)
ரயில் பெட்டி படிகளுக்கும்  நடை மேடைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி. கவனமின்றிக் காலை விட்டால் இருப்புப்பாதையில் விழுந்து விடுவோம்.
இறைவன்
நாடினால் மீண்டும்
சந்திப்போம்.
.வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com