Sunday, 28 January 2018

வண் ணச்சிதறல் 4

வண்ணச் சிதறல் 4

வண்ணக்கனவுகள்

 திரைப்படங்களில் வரும் கனவுக்காட்சிகள் பார்ப்போரின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
மிக ஆடம்பரமான அரங்குகள் வண்ண வண்ண உடைகள் இனிமையான பாடல் காட்சிகள் என்று திரைத்துறையின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்

கனவு பெரும்பாலும் எனக்கு வருவதில்லை எப்போதாவது வரும் கனவுகளுக்கும் பொருள். பலன் தேடி அலைவதில்லை

கனவுகளுக்குப் பொருள் உண்டு, பெருமானார் நபி சல் அவர்கள் தினமும் தன தோழர்களின் கனவுகள் பற்றிக் கேட்டு அதற்கு பலன் சொல்வார் என்று படித்திருக்கிறேன்

 வாழும், வாழ்ந்த வாழ்க்கைக்கே பொருள் புரிந்ததா என்பதே புரியவில்லை பிறகு ஏன் எப்போதாவது வரும் கனவுகளுக்குப் பொருள் காண முயற்சிக்க வேண்டும் ?

ஒரு சில கனவுகள் எனக்குத் திரும்பத்திரும்ப வந்ததுண்டு .எந்தக்கால கட்டம் என்பது நினைவில் இல்லை

காலில் சக்கரம் பதித்தது போல் ஒற்றைக்காலில் சந்தடி இல்லாத தெருவில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறேன், போகப்போக வேகம் கூடுகிறது ஒரு கட்டத்தில் விமானம் தரையில் இருந்து எழும்புவது போல்மெதுவாக மேலே போய்ப் பறக்கிறேன்,

இது ஒரு காலத்தில் அடிக்கடி வந்த கனவு

இன்னொரு கனவு:

குடும்பத்துடன் நீண்ட பயணம் போகிறேன். .விமானப் பயணமா தொடருந்தா பேருந்தா என்பது தெளிவாக இருக்காது . ஒரு இடத்தில் எப்படியோ குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறேன்.

என்னை விட்டு அவர்கள போனது போலும் அவர்களை விட்டு நான் போனது போலும் மாறி மாறி வரும்
அவர்களைத்
தேடி அலையும்போது விழிப்பு வந்து கனவு கலைந்து விடும்

இதுவும் பல்லாண்டுகளுக்கு முன் நான் அடிகடி கண்ட கனவு

மூன்றான்டுகளுக்கு முன்பு ஒரு  கனவு தொடர்ந்து சில இரவுகள் வந்தது
அதில் என் உடலத்தை நான் தெளிவாகப் பார்க்கிறேன்

இன்னொரு அண்மைக் கனவு
பரந்து. விரிந்த மணல் பரப்பு. அதில் நான் நடந்து போகிறேன். காலை உறுத்தாத பட்டுப் போல் மென்மையான மணல் பரப்பு.. தொலைவில் தொள தொளவென வெள்ளை உடையனிந்த ஒரு முதியவர் என்னை வா வா என்று அழைக்கிறார்
இவர் ஏன் நம்மை அழைக்கிறார் என்று முனுமுனுத்தாலும் மறுக்க முடியாமல் அவரை நோக்கிப் போகிறேன்
என்னை ஆரத்தழுவி வாழ்த்துகிறார்
என் உடல் உள்ளத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி பொங்கி வழிகிறது.

அணுவின் அமைப்பு
பென்சீன் வடிவம்
தையல் ஊசியின் கண்  போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கனவுகள் பெரிதும் உதவியிருக்கின்றன.

கனவில் தெளிவு கண்டவர்கள்
கணித மேதை இராமனுசம்  ஒளியின் வேகத்தை அறிந்த .ஐன்ஸ்டீன் போன்றோர்

பல்லாண்டுகளுக்கு முன் துறையூரில் நான் பணியாற்றியபோது கண்டது ஒரு மறக்க முடியாத குறிப்பிடத்தக்க கனவு
ஒரு தர்கா  கனவில் வருகிறது. பச்சைக் கொடிகள் மினராக்கள் எல்லாம் மிகத்தளிவாகத் தெரிகின்றன
தர்காக்களுக்கு  போவதை விரும்பாத நான் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 பணிநிமித்தமாக  டணிக்கம்பட்டி என்ற ஊருக்கு சில நாட்களாய்ப் போய் வந்து கொண்டிருந்தேன்
கனவுக்கு அடுத்த நாள் பேருந்து  வழக்கத்துக்கு மாறான பாதையில் போக வழியில் நான் கனவிவ் கண்ட அதே தர்காவை புலிவலம் என்ற ஊரில் பார்த்து வியப்படைந்தேன்

இன்னும் ஒரே ஒரு நிகழ்வை சொல்லி  கனவைக் கலைக்கிறேன்
இது மிக அண்மையில் நான் கண்ட கனவு
ஒரு விருந்துக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்த நண்பர் ஒருவர் தன் உணவு விடுதிக்கு அழைத்துச் செல்கிறார் நான் விருந்துக்குப் போகவேண்டும் என்று சொல்லியும் தட்டு நிறைய பச்சை சிவப்பு மஞ்சள் என பல நிறங்களில் மிகச் சுவையான இனிப்புகளை வைத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார் .சுவையில் மயங்கி நானும் சாப்பிட்டு விடுகிறேன்
வெள்ளரிக்காய் துண்டு ஒன்றில் வெண்ணெய் பனிக்கட்டி தடவி
இதைச் சாப்பிடுங்கள் . விருந்துண்ணப் போவதற்குள் அடுத்த பசி வந்து விடும் என்கிறார் .அதோடு கனவு கலைந்து விடுகிறது.

இ(  க )டைச்செருகல்

பிள்ளைப் பருவத்தில் அடக்கி வைக்கப்பட்ட  நிறைவேறாத ஆசைகள் எண்ணங்களின் வெளிப்பாடே கனவு என்கிறார் உளவியலின் தந்தை சிக்மன்ட் ப்ராய்டு
இது உங்களுக்குப் பொருந்துகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்
 
இறைவன் நாடினால்
                              மீண்டும்

                                   ச ந்திப்போம்
வலை நூல் முகவரி
   sherfuddinp.blogspot.com












Friday, 26 January 2018

Islam and Yoga – 26


Islam and Iswara Pranidharan  -
Living in the Remembrance  of Almighty  for ever

The Prophet (pbuh) said: "He who remembers his Lord and he who does not remember his Lord are like the living and the dead." –
 "The house in which Allah is remembered and the house in which Allah is not remembered is like the living and the dead."


Allah the All-Mighty has said:
"Therefore remember Me. I will remember you. Be grateful to Me and never show Me ingratitude" - Al-Baqarah 2:152 
And He said:
"And remember your Lord by your tongue and within yourself, humbly and in awe, without loudness, by words in the morning and in the afternoon, and be not among those who are neglectful." - Al-Araf 7:205 

A true Muslim lives in the remembrance of Almighty always. Right from the moment he wakes to the moment he goes to bed   not a single second pauses without remembering HIM
Almighty is remembered while waking up, entering in and getting out of bath room,
During ablution , before and after drinking or eating anything, commencing any activity, deed or journey and after completing it, while entering  his or others house and coming out, sitting, standing before and after family life and so on
Islamic meditation is called Dhikr in which in a group or alone one goes on chanting Almighty’s name by mind and tongue hours together.

 Iswara Pranidharan is the fifth (last ) subdivision of  Niyama, the second major division of Yoga
Let us see Islamic view  about other major divisions of Yoga
In the coming weeks

Share if you like










Saturday, 20 January 2018

வண்ணச் சிதறல் 3 சிவப்பு, நீலம்







சிவப்பு, நீலம்

பரபரப்பான சென்னை நகர காலை நேரம்.அதில் மிகபரபரப்பான போக்குவரத்து நிறைந்த ஒரு சாலை.
நடப்பவர்கள் சாலையைக் கடக்க எதுவாக இருபுறமும் போக்குவரத்து நிறுத்தம்
அழகான ஒரு நாய்குட்டியுடன்  மிக அழகான மனிஷா கொய்ராலா சாலையைக் கடக்கிறார் 
விதியை மீறி விரைந்து வந்த மகிழுந்தில் சிக்கி நாயின் காலில் அடிபட்டு விடுகிறது  சிறிய காயம்
.உடனே விலங்கு பாதுகாப்புக்கான  நீலச் சிலுவை அமைப்பை சேர்ந்த மனிஷா கத்திக்கதறி போக்குவரத்தை நிறுத்தி ஒரு கூட்டத்தை கூட்டி விடுகிறார்  
.போக்குவரத்துக் காவலர் மிகவும் பதற்றாமாகி விடுகிறார் . முதலமைச்சர் அந்தச் சாலையை கடக்கும் நேரம் அது . நாயைக் காயப்படுத்திய வண்டி எண்ணை மனிஷாவுக்கு கொடுத்து அமைதிப்படுத்துகிறார்  
இது இந்தியன் படத்தில் ஒரு காட்சி 

அடுத்து தொலைக்கட்சியில் ஒரு பேச்சுத் தொடர். . எழுத்தாளர் ஒருவர் தான் இரவில் வீடு திரும்பும்போது விடாமல் குரைக்கும் நாய் பற்றிப் பேசினார்.
.இரவில் தனியே வரும்போது நாய் குரைத்தால் ஏற்படும் அச்சம், திகில் அதை பட்டு உணர்நதவர்களுக்குத்தான் தெரியும் . குரைக்கும் நாய் கடிக்காது என்ற தத்துவம் எல்லாம் அப்போது செல்லுபடியாகாது
கடித்து விடுமோ என்ற அச்சமே பீதியை ஏற்படுத்தும்

பல நாள் பொறுத்த எழுத்தாளர் ஒரு நாள் நிறைய கற்களை பொறுக்கி வைத்துகொண்டு அந்த நாயின் மேல் விட்டெரிய நாய் குரைப்பதை நிறுத்தி விட்டது

இதைக்கேட்டு பொங்கி எழுந்தார் ஒரு விலங்கு நல ஆர்வலர்.
 நாயைத் துன்புறுத்தியதாக உங்கள் மேல் வழக்குத் தொடர்வேன் என்றார் .
என்னை விட நாய் நலம் எனக்குப் பெரிதல்ல என்று சொல்லி அவர் வாயை அடைத்து விட்டார் எழுத்தாளர்

நான் நேரில் உணர்ந்த ஒரு நிகழ்வு. பல ஆண்டுகளுக்கு  முன்பு கோவையில் நான் பணியாற்றியபோது நடந்தது .

வீட்டுக்கு அருகில் ஒரு பூனை கத்தும் ஒலி தொடர்ந்து பல மணி நேரம்  கேட்டது ..ஒலி எங்கிருந்து என்று தெரியவில்லை 
எதோ பெரிய சமூக சேவை செய்வதாய் நினைத்து கோவை விலங்கு வதைத் தடுப்பு அமைப்புக்கு தொலை பேசியில் இதைத் தெரிவித்தேன்,

அவ்வளவு தொலைவு வருவதற்கு  எங்களிடம் பொருளாதார வசதியோ வண்டி வசதியோ கிடையாது . முடிந்தால் நீங்கள் அந்தப் பூனையை எங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு வாருங்கள் .சிந்தித்து ஒரு முடிவு செய்வோம் என்றார்கள் .வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று விட்டு விட்டேன்

விலங்குகளுக்கு பாதுகாப்பு என்பது ஊடகங்களில் மட்டும்தானோ 
.
அண்மை நிகழ்வுகள் சில மனிதனை விட விலங்குகளுக்கு அதிகப் பாதுகாப்பு, உரிமை உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன

விலங்குகள் போகட்டும் மனிதன் நிலை என்ன ?

இந்திய அளவில் மனித உரிமை ஆணையம் என்ற வலுவான சட்ட ரீதியிலான அமைப்பு இருக்கிறது . உலகளவில் செஞ்சிலுவைச்சங்கம் இருக்கிறது .ஐ நா சபை இருக்கிறது . பெரியண்ணன் இருக்கிறார் .அம்னசிட்டி என்ற அமைப்பு இருக்கிறது

ஆயிரம் இருந்தும் நம் நாட்டிலும் உலக அளவிலும் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவது கண்கூடு,

குடும்ப வன்முறை, துணைவி துணைவனையும் துணைவன் துணைவியையும் கொலை செய்வது,,
ஒருதலைக்காதல் வன்முறை கொலை
 ஆணவக்கொலை கருக்கொலை  , ,கட்டாயத்திருமணம் ,
முதியோரைக் கவனிக்காமல் விடுதல் ,குழந்தைகளை பயமுறுத்துதல், அடித்தல்,
காவல் நிலைய வன்முறைகள், மரணங்கள் தவறான மருத்துவ முறைகள் உடல் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு சலுகைகளையும்  , இட ஒதுக்கீடையும் மறுப்பது என்று தனி மனிதன் உரிமை மீறல் நீண்டு கொண்டே போகிறது

அடிப்படைக் கல்வி, சுகாதார வசதிகள் குறிப்பாக கழிவறை வசதி மறுக்கப்படுவதும் மிகப்பெரிய தனி மனித உரிமை மீறலகள்

மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன
அவற்றில் வெகு சில

போபால் நச்சு வாயு,  ,ஜாலியன்வாலா பாக்  படுகொலை , கீழவெண்மணியில் உயிரோடு எரிப்பு  , கோத்ரா நிகழ்வு
,வெள்ளையர்கள் குதிரை வண்டியில்ருந்து இறங்க  கீழ்தட்டு மக்களை குனிய வைத்து அவர்கள் முதுகை படிக்கட்டாகப் பயன்படுத்தியது ,
ஒரு இனப்பெண்கள் மேலாடை அணிவதை மேல்தட்டு மக்கள் தடுத்தது
 ஹிட்லர் ஒரு இனத்தையே அழிக்க முயற்சித்தது  ,
நெல்லை மணிமுத்தாறு நிகழ்வு  , இந்திரா காந்தி மறைவையொட்டி மிகப்பெரிய இனப்படுகொலை ,
 நவகாளி யாத்ரா , மியன்மாரில் நடக்கும் கொடுமை  ,மும்பை கலவரம்
கொத்தடிமை முறை ,  நாகசாகி கிரோசிமா அணு குண்டு வீச்சு,
இலங்கை இனப்படுகொலை சிறைச்சாலை வன்முறை
மன நல விடுதி வன்முறை
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
தொடர்ந்து தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சக் கழிவுகள் ஏற்படுத்தும் மாசும் மனித உரிமை மீறல்தான்
இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தாமதமாவது அரசே செய்யும் ஒரு மனித உரிமை மீறல்
தேவைக்குப் பணம் வங்கியில் எடுக்க முடியாமல் போனதும் அதே போல்தான்
உரிமைக்காகப் போராடிய அந்தகர்களை அவர்கள இருப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் இறக்கி விட்டது மிகப் பெரிய கொடுமையான மீறல்
அறிவியல் வளர்ச்சி, நகரமயமாக்கல் , நகரங்களை விரிவு படுத்துதல் என்ற போர்வையில் இயற்கை வளங்கள்பெரிய அளவில் கண்மூடித்தனமாக அழிக்கபடுகின்ற்றன

எல்லாவற்றையும் தடுக்க, குற்றம் செய்தவரை தண்டிக்க சட்டங்கள் இருக்கின்றன பண பலம், பதவி பலம் இவற்றின் முன் சட்டங்களும் அமைப்புகளும் செயல் இழந்து நிற்கின்றன.

இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போபால் நச்சு வாயு விபத்து . பல்லாயிரக் கணக்கானோர் உயிழந்தனர்  பலலட்சம் பேர் கொடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர் . ஆண்டுகள் முப்பதுக்கு மேல் கழிந்தும் யாரும் பெரிதாக தண்டிக்கப்படவில்லை .பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கூட சரியான முறையில் வழங்கப்படவில்லை 
.
மனிதனை மனிதனாய்ப் பார்க்காமல் அவன் ஏழை இவன் பணக்காரன், அவன் சாதி, மதம், இனம், மொழி ,நாடு நிறத்தால் வேறு பட்டவன் என்று பார்க்கும் மன நிலைதான் இதற்கெல்லாம் அடிப்படையோ எனத் தோன்றுகிறது

நாகரீகம் வளர வளர இந்த வேறுபாடுகள் பெரிதாகிக்கொண்டே போகின்றன,. சமூக ஊடகங்களில் அதிகம் வலம் வரும் வன்முறையைத் தூண்டும் நச்கப் பதிவுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு

ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எல்லாம் கரிக்குதவாத காய் தானா ?

மனித உரிமை மீறல், மிருக வதை பற்றிப்பார்த்தோம்..

இதை எல்லாம் தாண்டிய இன்னொரு  நெஞ்சம் கொதிக்கும் கொடுமை பற்றி அண்மையில் படித்தேன்.

ஆஸ்திரேலியா என்றால் நம் நினைவுக்கு வருவது கங்காரு, கிவி பறவை, மிகப்பரந்து விரிந்த செழிப்பான  நிலப்பரப்பு , மிகக்குறைவான மக்கள் அடர்த்தி , நல்ல வாழ்க்கைதரம் என்பதுதான்

அந்த செழிப்பான நாட்டில் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்ட இனமாக வகைப்படுத்தியிருக்கிறார்கள் 

அவர்களை யார் என்ன கொடுமைப்படுதினாலும் எப்படித் துன்புறுத்தினாலும் ஏன் கொன்றாலும் கூட சட்டம் கை கட்டி நிற்கும்
அவர்கள்தான் மனிதரும் இல்லை விலங்கும் இல்லையே .

 நீலச்சிலுவை, சிவப்புச் சிலுவை இரண்டுமே கண்டு கொள்ளாது
புலம் பெயர்ந்து வரும் அகதிகள் கூட இப்போது இந்தப் பட்டியலில் இணைக்கப் படுகிறார்களாம்

இன்னும் நிறைய எழுதலாம் .மனதில் சுமையை உண்டாக்கும் தலைப்பு . எனவே போதும்

கனமான செய்திகளை நான் பொதுவாக பதிவு செய்வதில்லை .
 ஆஸ்திரேலிய பழங்குடியினரைப் பற்றிப் படித்ததை பகிர்ந்து கொள்ள ஒரு உந்துதல் ஏற்பட அதன் விளைவுதான் சிவப்பு நீலம்

இ(க)டைச்செருகல்

தொடரியில் சில மனிதஉரிமை மீறல்கள்

மூன்றடுக்குப் படுக்கை வசதி ஐயமின்றி ஒரு உரிமை மீறல்தான் பணம் கொடுத்து பதிவு செய்தும் நம் விருப்பப்படி படுக்க உட்கார முடியாது

அடுத்து புற நகர் தொடருந்துகளில் கழிவறை வசதி இல்லாதது .நீண்ட தொலைவுப் பயணங்கள் சில மணி நேரங்களைத தாண்டி விடுகிறது

மூன்றாவதாக ஒரு சிறிய மீறல் RAC .குறிப்பாக நீண்ட தூர இரவுப்பயணங்களில் மூத்த குடி மக்களுக்கு மிகவும் சிரமம்

அதே போல் உடல் ஊனமுற்றோர். முதியோர் நடை மேடையில் வெகு தொலைவு நடந்து படி ஏறி இறங்க வேண்டியிருக்கிறது . எக்மூர் போன்ற மிகப்பெரிய நிலையங்களில் மட்டுமே பெயரளவில் சில வசதிகள் இருக்கின்றன

இறைவன் நாடினால்
மீண்டும்
அடுத்த வாரம் சந்திப்போம்


வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com




Thursday, 18 January 2018

Islam and Yoga 25Islam and Swadhya -- 4



Islam and Swadhya -- 4

Al  Fatihah (The Opening) is the first  of 114 chapters of Quran .
Not only first it is of utmost importance. It is called the essence of Quran
It is an essential part of all Muslim prayers and religious ceremonies.. No solemn contract or transaction is complete unless Al Fatihah is recited
So it is called “Seven of the oft Repeated Verses)
The meaning of this Chapter is



1. In the name of Allah, the Beneficent, the Merciful.
2. Praise be to Allah, Lord of the Worlds,
3. The Beneficent, the Merciful.
4. Master of the Day of Judgment,
5. Thee (alone) we worship; Thee (alone) we ask for help.
6. Show us the straight path,
7. The path of those whom Thou hast favoured; Not the (path) of those who earn Thine anger nor of those who go astray.



"... The Qur'an cannot be translated. ...The book is here rendered almost literally and every effort has been made to choose befitting language. But the result is not the Glorious Qur'an, that inimitable symphony, the very sounds of which move men to tears and ecstasy. It is only an attempt to present the meaning of the Qur'an-and peradventure something of the charm in English. It can never take the place of the Qur'an in Arabic, nor is it meant to do so..." [Marmaduke Pickthall, An English Man Who is a Muslim1930]

The last Sub division of Niyama the second major division of Yoga is
Islam and Iswara Pranidharan 
Next Week Next Part
Share with others if you like

Inform me if you don’t

Saturday, 13 January 2018

வண்ணச் சிதறல் 2


முதுமையில் கல்


எண்ணப்பறவையில் சிறகடித்து வெளி நாடு போய் விடுங்கள் . அங்கு ஒரு மாறுபட்ட இடத்தில் தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை அறிய உங்களுக்கு ஒரு உள்ளூர் வழிகாட்டி தேவைப்படுகிறது
அப்படி ஒரு வழிகாட்டியாக ஒரு முதுமையே உருவு கொண்டது போல் ஒரு பெண் வந்து நின்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ?
அப்படி ஒரு நிகழ்வு எழுத்தாளர் சிவசங்கரிக்கு ஏற்பட்டது
மூத்த குடிமக்களுக்கு மிக உற்சாகத்தை தரும் அவரது பதிவு ;

சிவசங்கரி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா போயிருந்தபோது அந்த நாட்டில்  உள்ள சில பாலைவனப்பகுதிகளில் தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய விரும்பினார்.
அவரை அமெரிக்காவுக்கு அழைத்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து கொடுத்தனர் . பாலைவனப்பகுதியில் தங்க ஒரு விடுதியில் உணவும் அறையும் , சுற்றுப்பயணத்துக்கு ஒரு மகிழுந்து, வழிகாட்ட ஒரு பெண் என எல்லாம் அமைததுக்கொடுத்தனர்  
வழிகாட்ட வந்த பெண்மணியைபார்த்து சிவசங்கரிக்கு ஒரு குழப்பம் , தயக்கம் .
கை கால் முகம் எல்லாம் சுருக்கம் விழுந்த அந்தப் பெண்மணியின் வயது எண்பதுக்கு மேல்.
நாம் மூன்று நாளும் நிறைய இடங்களுப் பயணித்து  பலரை சந்திக்க எண்ணியிருக்கிறோம் .இவரது முதுமை நம் அலைச்சலுக்கு  ஈடு கொடுக்கமுடியுமா என்ற ஐயம்
ஆனால் மூன்று நாட்களில் அவரது மன வலிமை, உடல் திறன் ,சுறுசுறுப்பு அறிவு எல்லாம் பார்த்து அசந்து விட்டார். சிவசங்கரி
விசையுறு பந்தினைப்போல் மனம் வேண்டிய வழிச் செல்லும் உடல் பெற்றிருந்தார் அந்த எண்பது வயது இளைஞி.
மாலை சுற்றுப்பயணம் முடிந்து களைத்துப்போய் திரும்பும்போது சிவசங்கரி அவரிடம் நேரே உங்கள வீட்டுக்குப்போய் ஓய்வுதானே என்ற கேட்பார்
ஒருநாள் அவர் சொன்னது “ இல்லை இருபது குழந்தைகளுக்கு கேக் செய்து தருவதாய்ச் சொல்லிஇருக்கிறேன் . அவர்கள் எனக்காக் காத்துக்கொண்டிருப்பர்கள் “
அடுத்த நாள்
“ ஒரு அனாதை இல்லத்தில் கணக்கு எழுதப்போக வேண்டும் “
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் இருந்தது சிவசங்கரி பயணம் முடிந்து திரும்புகையில் அந்த முதிய  இளைஞி சொன்னது
“ உங்கள் வருகையால் எனக்கு ஒரு புதிய துறை பற்றி கல்வி கற்க ஒரு தூண்டுதல், ஆர்வம் கிடைத்தது
சுற்றுப்பயணத்தில் சில பாலைவனச்  செடிகள் பற்றி நீங்கள் கேட்டபோது எனக்குத் தெரியாததால் நான் உங்களுக்கு விளக்க முடியவில்லை
இப்போது அந்தச் செடிகள் பற்றிப்படிக்க பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வகுப்பில் சேர்ந்திருக்கிறேன் “என்றாராம்
கற்றலில் உள்ள அதீத ஆர்வமும் அந்தப்பெண்ணின் இளமையான முதுமைக்கு அடிப்படையோ !!
அடுத்து சிவகுமாரின் பதிவு
இவர் சில கருத்துக்களை மிக வலியுறுத்திச் சொல்கிறார்
காலை உணவை தவிர்ப்பது மிகப்பெரிய அளவில் உடல் நலக்குறைவை உண்டாக்கும் என்கிறார்
இவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அதிகாலை நேரத்தில் மென்பொருள் பணியாளர்கள் பலர் அலுவலகத்துக்கு விரைவதை ஒரு வருத்தத்துடன் பார்க்கிறார்.
அந்த நேரத்தில் அவர்கள் வெறும் வயிறோடுதான் கிளம்பியிருப்பார்கள் .இது நாற்பது வயதுக்கு மேல் உடல் நலம் சீர் கெட வழிவகுக்கும்
( இப்போது பள்ளி மாணவரிடையே காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது . இது பெற்றோர், கல்வியாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , அரசு எல்லோரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு மிகப் பூதாகரமான ஒரு நலப்பிரச்சனை)
ஆன்மாவுக்கு வயது ,முதுமை கிடையது எனவே ஆன்மீகத்தில் மனதை செலுத்தினால் இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும் என்பது இவர் கருத்து
அடுத்து இவர் மிக வலியுறுத்துவது உடல் பயிற்சி .-ஆசனங்கள, நடை,என்று எதாவது ஓன்று
எதுவம் முடியவில்ல்லை , நேரமில்லை என்றால் சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப்ப்பயிற்சி
இதற்கெல்லாம் மேல் எதையும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
இந்தத் தொடர் ஆர்வம் உடலையும் மனதயும் இளமையாக வைத்திருக்கும் என்கிறார்
சிவகுமார், அமெரிக்க முதுமை இளைஞி இருவருமே தங்கள் வாழ்க்கை நடை முறையில் பிறருக்கு பாடம் சொல்கிறார்கள்
எனவே இதெல்லாம் கதை என்று ஒதுக்கி விட முடியாது
எல்லாம் இறைவன் அருள் என்பது மறுக்க முடியாத உண்மை . இருந்தாலும் நாமும் நம் பங்குக்கு சிறு முயற்சிகள் செய்து பார்க்கலாமே
வாழ் நாள் நீடிப்பு என்பது இப்போதெல்லாம் ஒரு அச்சுறுத்தும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது
நல்ல உடல் நலம், ஓரளவு பொருளாதார வசதி இருந்தால் முதுமையையும் சுவைத்து ரசிக்கலாம்
உடல் நலம் மன நலம் இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை . இரண்டையும் நலமாக வைக்க மேலே சொன்ன இருவரின் சொற்களையும் வாழ்க்கையும் எடுதுக்காட்டாகக் கொள்ளலாம்
முதுமையில் மிக நல்ல இனிய அதிக பொருள் செலவில்லாத பொழுதுபோக்கு இறை வழி. இந்த வழியில் உடல் மனம் ஆன்மா மூன்றுமே திடம் பெறுகின்றன
இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் கோவில் பிரகாரத்தில் முறையாக வலம் வருதல் , தோப்புக்கரணம் இரண்டும்  நல்ல உடல்பயிற்சிகளாகும்
உள்ளம்  ஒன்றி இறைவனை வழிபட்டால் மனம்,  ஆன்மா திடமாகும்.
இசுலாமிய இறைவணக்கம் உடல், மனம் ஆன்மாவுக்கு வலிமை சேர்க்கும் ஒரு மிகச் சிறந்த பயிற்சியாக அமைகிறது பள்ளியில் நடக்கும் கூட்டுத்தொழுகை ஒரு சமூகப் பயிற்சியாக் இருக்கிறது
கிறித்தவர்கள் கடுமையான தியானம் மேற்கொள்கிறார்கள்
படிப்பு என்றால் பள்ளி, கல்லூரி , தொலை தூரக்கல்வியில் சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்று இல்லை
சிறு சிறு நூல்கள் வாங்கிப் படிக்கலாம்..எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அது பற்றிப் படிக்கலாம். மதம், அறிவியல், சமையல் ,  என எல்லா நல்ல செய்திகளையும் கற்றுக்கொள்ளலாம்
சிறு கதைகள் , புதினங்கள் (நாவல்) படிக்கலாம்..கடலை மடித்து வரும் தாளில் கூட எதாவது ஒரு  சிறிய செய்தி இருக்கும்.
ராபின்சன் குருசோ என்ற ஆங்கிலப்புதினம் பள்ளி வகுப்புக்களில் துணைப் பாடமாக வரும் .அதைப்படித்து பல செய்திகளை அறிந்து கொண்டதாய் மூதறிஞர் ராஜாஜி சொன்னதாய் எதிலோ படித்தேன்
தொலைகாட்சி , தொலைபேசி உரையாடல் ,   கட்செவி முகநூல் இவற்றிற்கெல்லாம் ஒரு அளவு மட்டுமே நேரம் ஒதுக்கி அதை மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் 
இவையெல்லாம்.. நம் உடலையும் மனதையும்  முடக்கிப்போடும் நேரம் கொல்லிகள். உருப்படியாக  ஏதும் இல்லாமல் மணிக்கணக்காக தொலைக்காட்சி, கட்செவி பார்த்துக்கொண்டே இருக்கலாம்  இது ஒரு வகை மனக்களைப்பை உண்டாக்கும்
எந்த வேலையையும் தொலைகாட்சி பார்ப்பதற்காக ஒத்திப்போடாதீர்கள் .தொலைக்காட்சியை மூடி விட்டு உங்கள் பணியில் மனதை செலுத்துங்கள் தொலைக்காட்சித் தொடர்களை நாள்கணக்கில் பார்க்காமல் விட்டாலும் பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படாது
பிறருக்கு நம்மால் முடிந்த சிறு உதவிகள், செய்வது நம் உற்சாகத்தை பெரிதும் வளர்க்கும் பண உதவிதான் என்று இல்லை .வெய்யிலில் வரும் அஞ்சல் , தூதஞ்சல் பணியாளருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் உதவிதான்  மாணவர்களுகு படிப்பில் உண்டாகும் ஐயங்களை தெளிவு படுத்துவதும் பெரிய உதவிதான்
அடுத்து சின்ன சின்ன தோட்ட வேலைகள் செய்வதும் செடிகளை பூக்களைப் பார்ப்பதும் ஒரு சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் தரும்
எல்ல்லோருக்கும் ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம்தான் . பொழுது போகவில்லை என்ற நிலையை மாற்றி பொழுது போதவில்லை என்ற நிலைக்கு வந்து விட்டால் இளமை போல்  முதுமையும் இனிமைதான்
இ (க)டைச்செருகல்
நம் நாடு வளரும் நாடா  வளர்ந்த நாடா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் நம் நாட்டில் சிலர் குடிக்கும் ஒரு குவளை டீ மூன்று லட்சம் ( 3,00,000)ரூபாய் என்பது உண்மையா?
இறைவன் நாடினால்
                     அடுத்த வாரம்
சந்திப்போம்

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com




Thursday, 11 January 2018

Islam and Yoga 24


Islam and Swadhya  3

Discussion about Holy Quran continues

Quran is a total and complete guide for the worldly life and the life in the hereafter

Quran speaks in detail about Almighty, monotheism, life in the hereafter, paradise, hell messengers and prophets of Almighty, Prophet Muhammad (PBUH) – the last Prophet

Life in this world forms the basis for that in hereafter.. Quran gives details about duties of a true believer like prayer, charity fasting, and Pilgrimage in the worldly life.

Constitution, good governance, economics, crimes, punishments, caring for parents, upbringing of children , marriage,  rights   of women, division of property, caring for neighbors, respecting other religions , hygiene and cleanliness   are discussed in detail in Quran

Quran prescribes many rules of   nice etiquette also. .
A few are

Don’t enter others house without their express permission.

Adult children –Don’t enter your parent’s room without obtaining permission at certain times.

Guests should clear out of host’s house at the earliest after the feast without being a disturbance to the host

Quran is abundant with health tips and scientific facts

About Prophet (PBUH) Quran clarifies that he is a mortal and as such he will meet his natural end.  
Quran takes into task harshly whenever Prophet (PBUH) commits mistakes. 
Prophet (PBUH) is warned not to get arrogant by victory in war etc

Islamic Scholars opine that  whatever be the situation or problem one can find solution in Quran

It is but natural that such a versatile Holy Book has become a part and parcel of life of True Muslims

Discussion about Quran under
Islam and Swadhya will continue
Next Week Next part also
Share with others if you like

Inform me if you don’t 

Saturday, 6 January 2018

வண்ணச்சிதறல் 1




Image result for spectrum images

 


 

 

நெஞ்சில் ஓவியமாய்


நாற்பது வந்தால் வெள்ளெழுத்து தலையெழுத்து  என்பார்கள்.
 கண்ணாடி போட்டு அதை சரி செய்து கொள்ளலாம்.
உடல் நலக்குறைவு என்றால் மருத்துவம் பார்க்கலாம்

கணேசுக்கு வந்தது அப்படி ஒரு எளிதான பிரச்சனை இல்லை

 மாடியில் முழு நிலவு குழல் விளக்கு போல் குளிர்ந்த ஒளி வீசினாலும் அவன் மனது எரிமலையாகக் கொதித்தது

எப்படி எப்போது அது நடந்தது  என்ன ஏது ஒன்றும் புரியவில்லை
.ஆனால் அது நடந்து விட்டது நடந்தே விட்டது- என்பது  மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மை

 மனதில் ஒரு சிலிர்ப்பு கிளர்ச்சி .
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன  
வெள்ளை உடை தேவதைகள பின்புலத்தில்

பெரிய அழகென்றோ நல்ல நிறம் என்றோ சொல்ல முடியாது .ஆனால் கண்களில் ஒரு கவர்ச்சி,  நேர்கொண்ட பார்வை ,
தேவையற்ற அச்சம் , குழைவு  அலங்காரம் ஏதும் இல்லை

அவனும் ஒன்றும் அப்படி  கய்ஸ் ,,அம்பிகாபதி எல்லாம் கிடையாது. பெண்களுடன் தேவைக்கு மேல் பேசவே மாட்டான்

திடமான மனம் உள்ளவன் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தான்
திருமணமாகி நிறைவான வாழ்க்கை, நல்ல துணை, முத்து முத்தாய் மூன்று குழந்தைகள்

வடமாநிலத்தில் இருந்து அந்தக் கிளைக்கு அவன் மாற்றல் ஆகி வந்தபோது அவனுக்கு நாற்பது  வயது இருக்கும்.
காதல், கத்தரிகாய் எல்லாம் வருவதற்கு முன்பே இறைவனருளால் நல்ல  மண வாழ்க்கை அமைந்து விட்டது

பல்வேறு ஊர்களில், மாநிலங்களில் மிக அழகான பெண்களைப் பார்த்த போதெல்லாம் ஏற்படாத ஒரு இனம்புரியாத உணர்வு

பித்துப்பிடித்தது போல்எந்நேரமும் அந்தப்பெண் பற்றியே சிந்தனை,
அவள் வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி   உலாவினான்  
புதிதாக எழுதப் பழகிய பள்ளிக்குழந்தை போல் அவள் பெயரை எழுதிக்கொண்டே கிறுக்கிக்கொண்டே இருந்தான்

அவளிடம் இது பற்றி நேரிலோ எழுதியோ பிறர்  மூலமோ  தெரிவிக்கும் எண்ணம், துணிச்சல் இல்லை

  வெகு தொலைவு நடந்து போய் ஒரு கோவில்சுவரில் பல இடங்களில் அவள் பெயரை எழுதினான் எழுதினான் எழுதிக்கொண்டே இருந்தான்

இதெல்லாம் தவறு ,சீரான மண வாழ்க்கையில் பெரிய சிதைவை ஏற்படுத்தும் என்பதெல்லாம் அறிவுக்கு எட்டாத அளவுக்கு  சிறுவன் அல்ல
.என்ன செய்வது  மனசு அறிவுக்குக் கட்டுப்பட மறுக்கிறதே .

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டில் வருவது போன்ற ஒரு தேரில்  அவளுடன் நெருக்கமாகப் போவது போல் கனவு வேறு

நிலை தவறி விடுவோமோ என்ற அச்சம் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கி விட்டது

ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிகிறது ஆனால் என்ன செய்வது என்பதுதான் பிடிபடவில்லை

சிந்தித்து சிந்தித்து சிந்தனையே களைத்து விட்டது

அலுவலகப்பணியில்அவளுடன் ஒரு சிறிய கருத்து மோதல்.
அதை ஊதிப்பெரிதாக்கி   பேசுவதை முழுமையாக நிறுத்திக்கொண்டான்

.மனதில் இருந்தும் நினைவை அழித்து விட்டதாக நினைப்பு
இதற்கிடையில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகி விட்டது 

அன்றுதான் அவள் கண்களில் கண்ணீரைக் கண்டான் .அவளும் நெஞ்சை மறைத்திருக்கிறாள், நினைவை மறைத்திருக்கிறாள் ஆனால் கண்களில்   ஓடிய கண்ணீரை மறைக்க முடியவில்லை

அதன்பின்  பல இடங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்து விட்டான் .பிள்ளைகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடித்து பேரன் பேத்தி எடுத்து நரை முது கிழவனாகிவிட்டான் உடலளவில் .

ஆனால் மனம் ?
நெஞ்சில் புதைந்த நினைவுகள் அழியவில்லை
கண்களில் பதிந்த உருவமும் மறையவில்லை
நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்க முடியவில்லை

இன்னும் அந்தபெயரைக்கேட்டால், பார்த்தால் படித்தால்  இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு .

அவளும் பணியிலிருந்து ஓய்வோ விருப்ப ஓய்வோ பெற்று பேரன் பேத்தி எடுத்து முதுமை அடைந்திருப்பாள்
.
இருக்கிறாளா அதுவும் தெரியாது

ஆனால் அவன் நெஞ்சில் அழியா ஓவியமாய் பதிந்திருக்கிறது அவள் இளமை நினைவுகள்

தேடுதல் தொடர்கிறது முக நூலில்,  வலை தளத்தில் என்று

எதற்காக இந்தத் தேடல் விட்டு விடு என்று அறிவு சொல்கிறது
 .
அதையும்  மீறி ஒரு இனிய சுகத்தை,
மலர்களின் மணத்துடன் வரும்  தென்றல் வருடியது போல் ஒரு சுகந்தத்தைத் தருகிறது இந்தத் தேடல்
 
இதற்குப் பெயர் காதலா கவர்ச்சியா  நட்பா பாசமா அன்பா இல்லை எல்லாம் சேர்ந்த  ஒரு கலவையா
தெரியவில்லை புரியவில்லை

பி கு                                                         
தளையற்ற எழுத்தாளர்  (freelance writer ) என்று சொல்லிக்கொண்டால் அரசியல், ஆன்மிகம், இல்லறம் துறவறம் மருத்துவம் இலக்கியம் திரைப்படம் சின்னத்திரை  படப்பாடல்  என்று எதைப்பற்றியும் எழுதலாம் , .  வரையறைகளுக்கு கட்டுப்பட்டாமல் அப்படி  எழுத ஒரு எண்ணம்  ஆசை
வண்ணச்சிதறல்  என்ற தலைப்பில் ஒவ்வொரு ஞாயிறும் எழுத எண்ணியுள்ளேன் (இறைவன் நாடினால் )
அதில் முதல் முயற்சிதான் நெஞ்சில் ஓவியமாய்
இது வரை நான் எழுதி வந்ததற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு பதிவு
இது பற்றி உங்கள் மாறுபட்ட  கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்
இந்தப்பதிவின் பின்புலம் அடுத்த பகுதியில்
முன்பே நான் குறிப்பிட்டதுபோல் முகநூலிலும் வலை நூலிலும் வெளியிடுகிறேன்
இறைவன் நாடினால்
அடுத்த ஞாயிறு
சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
என்று தட்டச்சுச் செய்யவும்
கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதிய அனைத்தையும் அதில் எளிதில்  படிக்கலாம்
அதிலேயே உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்