கடந்த இரு
பகுதிகளில் ஒரு கொடுங்கோல் மன்னன் ,அவனை வெல்லப் பிறந்த ஒரு குழந்தை, அந்தக்
குழந்தை இளைஞனாகி ஊரை விட்டுப்போய் திருமணம் முடித்து நிறை சூலியான துணைவியுடன்
தன் உற்றார் உறவினரைபார்க்கும் ஆவலில் சொந்த ஊருக்குப் பயணித்தது’; வழியில் நாடு
இரவில் கொட்டும் மழையில் பேறுகால வலி வந்து குளிரில் துணைவி நடுங்கியது.;
நெருப்பைத் தேடி இளைஞன் அருகிலுள்ள மலைக்குப்போனது வரை பார்த்தோம்
இனி
மலைக்குப்போன இளைஞன் என்ன ஆனார் என்பதைப்பார்ப்போம் .மலையில் நெருப்பை நெருங்கிய
இளைஞனை ஒரு குரல் அழைத்தது :
“மூஸாவே
நான்தான் உம்முடைய இறைவன் .புனிதமான பகுதிக்கு நீர் வந்துள்ளீர் .உம் காலணிகளைக்
கழற்றிவிட்டு வரும் “
எனக்கட்டளையிட்ட
இறைவன் அவருக்கு நபித்துவம் வழங்கி இறை வழியில் நடக்குமாறு கட்டளையிட்டான்
நபித்துவம்வழங்கப்பட்டதற்கு
சான்றாக இறைவன் இரண்டு அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினான்
நபி மூசா
(அலை) அவர்கள் தங்கள் கைத்தடியை இறைவன் கட்டளைப்படி தரையில் வீச அது பெரிய பாம்பாக
மாறியது .அதைக்கண்டு மிரண்டு ஓடிய நபி மீண்டும் இறைவன் இட்ட ஆணைப்படி அதைக் கையில்
எடுக்க பழையபடி கைத்தடியாக மாறியது
அடுத்த
அற்புதம் :
இறைவன்
ஆணைப்படி மூசா (அலை) தன கையை விலாப்புறத்தில் புகுத்தி வெளியே எடுக்க அது ஒளி
மிக்கதாய் தூய்மையான வெண்மையாக வெளி வந்தது
நபித்துவம்
பெற்ற மூசா நபியை இறைவன் எகிப்து நாட்டிற்குப் போய் கொடுங்கோல் மன்னன் பிர்
அவுனுக்கும் பொது மக்களுக்கும் இறை வழியை
எடுத்துரைத்து நல்வழிப்படுத்த ஆணையிட்டான்
மிகவும் சிரமப்பட்டு தங்கள் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத்
தட்டினார்கள். மூஸா அலை அவர்களின் தந்தை இம்ரான் காலமாகிவிட்டிருந்தார்கள்..மூஸாஅலைஅவர்களின்
நடவடிக்கைகளைப் பார்த்து வந்தவர் தமது மகன் மூஸாதான் என்று அவரது தாயார் யூகானிதா
அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களது சகோதரர் ஹாரூன் அலை அவர்களும் தம் சகோதரரை
அறிந்து கொண்டார்கள். அவர்களிடம் நடந்தவற்றை மூசா அலை எடுத்துச் சொன்னார்கள்.
அல்லாஹ் தமக்கு
நபித்துவம் அளித்து பிர்அவ்னை சந்தித்து உபதேசிக்க சொன்னதையும் சொன்னார்கள். இதைக் கேட்ட தாயாரும் ஹாரூன் அலை அவர்களும் அல்லாஹ்வுக்கு சிரம்
தாழ்த்தி நன்றி செலுத்திக் கொண்டார்கள்
. ஹாரூன் அலை மூஸா அலை இருவரும்
பிர்அவ்னுடைய அரண்மனையைச் சென்றடைந்து அங்கு
‘நாங்கள் இறைவனின் தூதர்கள். உமக்கு புத்திக் கூறி
நேர்வழிப்படுத்துமாறு இறைவன் எங்களிருவரையும் ஏவியுள்ளான். நீர் உம்மை இறைவன்
என்று கூறுவதைவிட்டு ஏக இறைவனிடம் மன்னிப்புக் கோரி அவனை நோக்கி உமது முகத்தை திருப்பிக் கொள்ளும். இல்லையேல் கடுமையான
தண்டனையை இறைவன் கொடுப்பான் என்று
கூறினார்கள்.
மூஸா அலை அவர்களை
அடையாளம் கண்டு கொண்ட பிர்அவ்ன், நீர் இறைவனின் தூதர் என்பதை நான் எப்படி நம்புவது? என்று கேட்டான்.
மூசா அலை அவர்கள்
முன்பு சொல்லப்பட்ட சான்றுகளான கைத்தடி பாம்பாக மாறியதையும் அவர் கை ஒளி
வீசியதையும் செய்து காண்பித்தார்கள்
இப்போதாவது
எங்களை இறைவனின் தூதர் என்று ஏற்றுக் கொள்வாயா! என்று மூஸா நபி கேட்டார்கள்.
சிந்தனையில் ஆழ்ந்த பிர்அவ்ன் அவ்வாறு ஏற்றுக் கொண்டால் இறைவன்
எனக்கு என்ன தருவான்?’ என்று கேட்டான்.
அவ்வாறு நீ ஒப்புக்கொண்டால் உனக்கு என்றும் மாறா இளமை.
வலுவான அரசாட்சி நோயில்லா நல
வாழ்வு இதற்கெலாம் மேல் இன்பமயமான மறுமை கிடைக்கும் --என்றார்கள் நபி மூசா
என்றும் மாறா
இளமை எனபது பிர் அவுனை மிகவும் ஈர்த்தது .இருந்தாலும் இறைவன் ஏமாற்றி விட்டால்
என்ற ஐயம் உண்டாக அமைச்சர்களை கலந்து பேசி பிறகு சொல்கிறேன் என்று சொல்லிப்போய்
தன் முதன்மை அமைச்சர் ஹமானிடம் கலந்து பேசினான்
அமைச்சர் :
மன்னாதி மன்னராகிய நீங்கள் சாதாரண மூஸாவிடம் சரணடைவதா? காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்
என்றான்.
அன்றிரவு
பிர்அவ்ன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனின் முடிக்கு கறுப்புசாயத்தை ஹாமான் பூசச்
செய்துவிட்டான்.
உலகில்
முதன்முதலில் தலை முடிக்கு கறுப்பு சாயம்
பூசிக் கொண்டது பிர்அவ்ன்தான்.
காலையில்
எழுந்தவுடன் பிர்அவ்ன் தம் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். தனக்கு இளமை திரும்பி
விட்டதாக எண்ணினான்.
ஹாமானின் பேச்சை
கேட்டு மூஸா செய்து காட்டிய சூனியத்தைப் போல நாமும் சூனியம் செய்து காட்டி, அவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய நாட்டிலுள்ள சூனியக்காரர்கள்
அனைவரையும் ஒன்று கூட்டினான்.பிர் அவுன்
80 ஆயிரம் சூனியக்காரர்கள் அரண்மனையை நோக்கி வந்து கூட ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்கு நான்கு பேர் தலைமை தாங்கி நின்றார்கள். அவர்கள் முன் சூனியக்காரர்கள்
தங்கள் சூனியங்களை செய்தனர். ஆனால் இறைவன் மூஸா நபி அவர்களுக்கு கொடுத்த அற்புதத்தினால்
அவை அனைத்தையும் அவர்கள் வென்றார்கள். சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா அலை மீது நம்பிக்கை கொண்டு ஏக இறைவனுக்கு அடிபணிந்தார்கள்
இதைத் தொடர்ந்து
ஆறு இலட்சம் பேர் மூஸா அலை அவர்கள் மீது நம்பிக்கை
கொண்டு ஏக இறைவழியில் இணைந்தார்கள்
கடுப்பாகிப்போன பிர்அவ்ன், மூஸா நபி மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு சொல்லொண்ணாத் துன்பம்
கொடுக்க ஆரம்பித்தான். இதில் அவன் மனைவி ஆசியா அம்மையாரும் கொடுமைக்கு ஆளானார்கள்.
பிர்அவுனை தண்டிக்க
இறைவன் பஞ்சம், வெள்ளம், மண் மழை எனபல வேதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக இறக்கினான். இதனால் பிர்அவ்ன்
மனம் மாறியிருப்பான் என்று எண்ணிய மூஸா அலை அவர்கள் பிர்அவ்னிடம் வந்து ஏக
இறைவழியில் இணைய உபதேசம் புரிந்தார்கள்.
ஆனால் அவன் மூசாவுடைய
இறைவனைக் கண்டுபிடித்து அவனை ஒழித்துக் கட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்
என்று எண்ணி இறைவனைக் . காண ஹாமானிடம் ஒரு
உயரமான கோபுரத்தை கட்டச் சொன்னான்
இருபதாயிரம் அடி
உயரமான இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஐம்பதாயிரம் கொத்தனார்கள்
ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏழாண்டுகள் இந்தப் பணி நடைபெற்றது.
ஹாமானை அழைத்துக்
கொண்டு கோபுரத்தின் மேல் ஏறிப் பார்த்து மூஸாவின் அல்லாஹ்வை நெருங்கி விட்டதாக
பெருமை பட்டுக்கொண்டான். அங்கிருந்து நஞ்சு தோய்ந்த அம்புகளை எய்தான். அவை திரும்ப இரத்தக் கறையுடன் கீழே
விழுந்தன.
இந்தக் கோபுரத்தின் ஒரு பகுதி படைவீரர்களின்
பாசறை மீது விழுந்தது. மற்றொரு பகுதி நைல்நதி மீது விழுந்தது. பிறிதொரு பகுதி
அந்தக் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொத்தனார்கள் மீது
விழுந்தது. அத்தனைப் பேர்களையும் உருத்தெரியாது அழித்;து விட்டது.
மூஸாவின்
அல்லாஹ்வை கொன்றுவிட்டேன் என்று பிர்அவ்ன் ஆசியா அம்மையாரிடம் சொன்ன போது, ஆசியா அம்மையார் நகைத்து விட்டாhர்கள். கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள். பிர்அவ்ன் தம்மை
அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று எண்ணி ஒரு பணியாளை அனுப்பி அவர்கள் மீது பெரிய
கல்லை போடச் செய்தான். அக்கணமே அவர்கள் உயிர் பிரிந்து விட்டது.
மூஸா நபியின்
கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்த பிர்அவன் அவர்களை
ஒழிக்க கடும் கொடுமைக்கு ஆளாக்க ஆணையிட்டான் .
நீண்டகாலமாகவே
மூஸா நபி அவர்கள் பிர்அவ்னையும், அவனது
கூட்டத்தாரையும் திருத்த – நேர்வழிபடுத்த எவ்வளவோ நல்லுபதேசம்
செய்து பார்த்தார்கள். எல்லாம் வீணாகிப் போயின. பிர்அவ்னின் அட்டகாசம்
கூடிக்கொண்டேதான் போயிற்று.
இறுதியாக இறைவன் மூஸா நபிக்கு தம் கூட்டத்தாருடன் இரவோடிரவாக எகிப்தை விட்டும் கிளம்பி கடல்
வழியாக வெளியே சென்று விடுங்கள் என்று ஆணையிட்டான்
. பிர்அவனுக்கும் அவனது கூட்டத்தாருக்கும் வேதனை இறங்கப் போகிறது என்றும் இறைவன்
சொன்னான்.
எகிப்தை விட்டு
வெளியேறும் குறிப்பிட்ட நாள் வந்தது. யூசுப் நபி அவர்;களின் உடலை எடுத்துக் கொண்டு நைல்நதியை கடந்து மூசா நபியின்
கூட்டத்தினர் அனைவரும் எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறு போகும்போது
கடல் குறுக்கிட்டது. பின்னால் பிர்அவ்னின் படைகள் அவர்களைத் துரத்திக் கொண்டே
வந்தது.
கடலை தம்
கைத்தடியால் அடிக்கும்படி மூஸா
அவர்களுக்கு இறையாணை வந்தது. அவர்கள் அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து
வழி விட்டது. அதில் மூஸா நபியும் அவர்கள் கூட்டத்தார்களும் நடந்து சென்றார்கள்.
பின்னால் துரத்திச் சென்ற பிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் அவ்வழியே போக
முற்பட்டனர். நடுக்கடலுக்கு அருகில் சென்றதும் கடல் மூடிக் கொண்டது. அச்சமயத்தில்
மூஸா நபி அவர்களின் கூட்டம் அக்கரையை அடைந்திருந்தது. அப்போது பிர்அவ்னும் அவனின்
கூட்டத்தாரும் கடலில் மூழ்கி இறந்து போயினர்..
பிர்அவ்ன் இறக்கும்போது அவனுக்கு
வயது 600.
நபி மூசா அலை அவர்களின் மிக நீண்ட
வரலாற்றில் ஒரு மிக்ச்சிறிய பகுதியை மிகச்
சுருக்கமாகப் பார்த்கோம்
வரலாறு முழுதும் சொல்வது என்
நோக்கம் அல்ல. புனித மறை குர்ஆனில், இசுலாமிய வரலாற்றில் சுவையான நிகழவுகள்,
எதிர்பாராத திருப்பங்கள் பிரமாண்ட காட்சிகள் நிறைய உண்டு
சற்றுக் கற்பனை சிறகை விரித்துப்
பறந்து பாருங்கள் .
இருபதாயிரம் அடி உயரமான ஒரு
பிரமாண்டமான கோபுரம் இடிந்து விழுகிறது ..பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள்
மடிகிறார்கள்
இன்னொரு காட்சி
கடல் அப்படியே இரண்டாகப் பிளந்து
ஒரு கூட்டத்துக்கு வழிவிடுகிறது .அடுத்த கூட்டத்தை, ஒரு பெரும்படையை அப்படியே கடல் விழுங்கி விடுகிறது
புனித குர்ஆன் ஒரு வறட்டு தத்துவ
நூல் அல்ல, ஒரு உயிரோட்டம் நிறைந்த வாழ்வு நெறி என்பதை வலியுறுத்தவே இதைச்
சொல்கிறேன்
நபி மூஸா அலைஹிசலாம் அவர்கள்
வாழ்க்கை வரலாறு என்று முதலிலேயே சொல்லியிருந்தால் படிக்க ஒரு சலிப்பு வந்து
விடும் ..கதை நேரம் என்று சொன்னதால் ஒரு சிலராவது படித்தார்கள் ..
கண்ணன் கதை , கர்ணன் கதை என்றார்
ஒருவர் .கற்பனை தொடரட்டும் என்றார் இன்னொருவர் .கதை தொடரட்டும் என்று இன்னொரு
கருத்து.
ஒரே ஒருவர்- முனைவர் பாஷா
மட்டும்தான் இது மூசா நபி அலை அவர்கள் வரலாறு என்று குறிப்பிட்டார்
கதை நேரம் தொடரும்
Blog address
sherfuddinp.blogspot.com
B/FB 31082018