அத்தம்மா
அத்தம்மா மறைவு பற்றி தந்தி வந்த அந்த அதி காலை
நேரம் இன்னும் என் நினைவில் நிற்கிறது
அத்தாவின் பணிநிறைவுக்குப்பின் நாங்கள் திருநெல்வேலி பேட்டையில் திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம் .
அம்மா எங்கோ வெளியூர் போயிருக்க அத்தாவும் நானும்தான் வீட்டில் .
.அத்தாவின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்கிறது
அதோடு “போய் கருத்தக்கிளிக்கு சொல்லி விட்டு வா” என்று என்னிடம் சொல்ல
மிதி வண்டியில் பாளையங்கோட்டை போய் எங்கள் பெரியத்தா மகனிடம் தகவல் சொல்லி வந்தேன்
அத்தா திருப்பத்தூருககுப் புறப்பட்டது . என்னைக் கூப்பிட்டிருந்தால்
நானும் போயிருப்பேன்
அத்தம்மாவிடம் நெருங்கிப் பழகிய நினவு அதிகமாக இல்லை. திருப்பத்தூரில்
ஒரு ஆண்டு தங்கி படித்தபோது ஓரளவு பழக்கம் .அடுத்து காரைக்குடியில் நாங்கள்
இருந்தபோது அத்தம்மா வந்து போகும் பிறகு பொள்ளாச்சியில் ஓரிரு மாதங்கள்
தங்கியிருந்தது
ஊருக்கு நீதி வழங்கும் நிலையில் இருந்த எங்கள் ஐயாவுக்கு துணைவியாக
வந்த அத்தம்மாவுக்கு மூன்று ஆண் மூன்று பெண் என ஆறு பிள்ளைகள்.
மிகப்பெரிய ஞானி அத்தம்மா
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
குணங்குடி மஸ்தான் பாடல்கள் பலவும் நினைவில் இருக்குமாம் .ஞான வழி தேடி
புதுக்கோட்டை அருகில் உள்ள மெய்வழிச்சாலை என்ற இடத்திற்குப் போய்வரும் அங்கு அனந்த
நாயகி என்ற ஒரு உயர் பதவியும் பெற்றது
பல்லாங்குழி விளையாட்டில் அத்தம்மா மிகப்பெரிய திறமை சாலி
.
திருப்பத்தூரில் நான் தங்கிப் படித்தபோது எனக்கு ஒரு புதுச் செருப்பு
அத்தா வாங்கி வந்தது . அதை எனக்குத்தா என அத்தம்மா என்னிடம் கேட்க நான் உடனே
கொடுத்து விட்டேன் . அத்தம்மா மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தது
வெற்றிலை மெல்லும் பழக்கம் அத்தம்மாவுக்கு உண்டு . வெற்றிலை பாக்கு
இடிப்பதற்காக ஒரு சிறிய உரலும் உலக்கையும் வைத்திருக்கும்
கடையிலிருந்து ஒன்னரைக் காபி, ஒன்னரை டீ வாங்கி வரச்
சொல்லிக்குடிக்கும் Living
King-size
முதிர்ந்த வயதில் அத்தம்மா ஏணியிலிருந்து கிழே விழுந்ததில் எலும்பு முறிந்து விட்டது .
திருப்பத்தூர் அருகில் துளாவூர் என்ற சிற்றூரில் பல தலைமுறைகளாக
எலும்புமுறிவுக்கு மருத்துவம் செய்யும் நாட்டு மருத்துவர்கள் இருக்கிறார்கள் .
சற்று முரட்டுதனமாக இருக்கும் அவர்கள் வைத்திய முறை . ஆனால் அந்த முதிர்ந்த வயதில்
அத்தம்மாவை கோலூன்றாமல் நடக்க வைத்துவிட்டார்கள்
காரைக்குடி திருப்பத்தூருக்கு மிக அருகில் என்பதால் அங்கு அத்தம்மா
அடிக்கடி வந்து போகும்
திரைப்படங்கள் பார்ப்பது அத்தம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் . நடந்தே
திரையரங்குகளுக்குப் போய் வருவோம் .தேன்
நிலவு படம் அத்தம்மாவுடன் பார்த்த நினவு
மிக நேர்த்தியாக உடுத்திக்கொள்ளும் வெள்ளைப்புடவை, வெள்ளைக் குப்பாயம்
தலைக்குத் தனியாக scarf போல் ஒரு துணி –.உட்காரும்போது புடவை அழுக்காகாமல் இருக்க பின்புறம்
ஒரு துணி . கழுத்தில் ஒரு அட்டிகை இருந்ததாய் நினைவு
..
குப்பாயம் மிக நாகரீகமாக வடிவமைக்கப்பட்டு இருக்குமாம் வெளியூர்
தையல்காரர்கள் இந்தம்மாவுக்கு தைக்க நம்மால் முடியாது என்று ஓடியது உண்டாம்
அத்தம்மா ஒருமுறை எங்கள் அக்கா படித்த கல்லூரிக்குப் போயிருக்கையில்
என்ன உங்க பாட்டி இவ்வளவு ஸ்டைலா டிரஸ் பண்ணியிருக்காங்க. அவர்களைப்
பார்த்துத்தான் நாங்கள் fashion
பற்றித் தெரிந்து
கொள்ளவேண்டும் என்று கல்லூரி மாணவிகள் வியப்படைந்தார்களாம்
பால், பழம் கோலா உருண்டை அத்தம்மாவுக்குப் பிடித்த உணவுகளில் சில.
கோழி பிடிக்காது . இதன் தாக்கமோ என்னமோ அத்தம்மாவின் வாரிசுகள் பலருக்கும் கோழி
பிடிக்காது
பரவாயில்லை என்ற சொல் அத்தம்மாவின் வாயில் வராது . அது
வடமொழிச்சொல்லாம். குத்தமில்லை (குற்றமில்லை) என்று சொல்லும்
காரைக்குடி வீட்டில் மின் விசிறி சுழன்றுகொண்டிருக்கையில் அத்தம்மா
சன்னல் கதவுகளை அடைத்தது அத்தா ஏனென்று கேட்க காத்தாடிக் காத்து வெளியே போகாமல்
இருக்க அடைக்கிறேன் என்றது அப்போது அத்தம்மா அடைத்தது வேடிக்கையாக இருந்தது ஆனால்
இன்றோ பெரும்பாலான சன்னல்கள் திறக்கப்படுவதேயில்லை . கொசு பற்றி அச்சம் அல்லது அறைக்
குளிரூட்டி.
அத்தம்மா பொள்ளாச்சியில் எங்கள் வீட்டில் இருக்கும்போது எங்கள் அக்கா
மகன் – நான்கைந்து வயது - அங்கே இருந்தான் . இருவருக்கும் அடிக்கடி
உரிமைப்போராட்டம் நடக்கும்
அத்தம்மாவின் படிப்பு என்ன என்று எனக்குத் தெரியாது . ஆனால்
அறிவுப்பசி, தேடல் அத்தம்மாவுக்கு மிக அதிகம் .கல்லூரி வேதிஇயல் நூலைப்படித்து
பொருள் சொல் என்று சொல்லும் . உங்களுக்குப் புரியாது என்று சொன்னால்
ஒத்துக்கொள்ளாது . அதெப்படிப் புரியாமல் போகும் என்று வாதிடும்
தான் சாப்பிடும் மருந்து மாத்திரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள
விரும்பும் .சிவப்பு வண்ணத்தில் எழுத்து இருந்தால் இது நச்சுப்பொருளா என்று
கேட்கும் . மாத்திரைகளை உடைத்துப்பார்த்து உள்ளடக்கத்தை அறிய முற்படும்
வீட்டுக்கு மருத்துவர் வந்தால் உடனே போய்ப்படுத்துக்கொள்ளும்
அத்தம்மா உடல் நலிவுற்று படுக்கையில் இருக்கும்போது உறவினர் ஒருவர் எத்தனை நாள் இழுக்குமோ என்று முணுமுணுக்க இரண்டு என்று அத்தம்மா கையைக் காண்பித்ததாம்.
அதே போல் இரண்டு நாளில் உயிர் பிரிந்ததாம் அந்த நேரத்தில் அத்தம்மா வாயில் இருந்து
ஒரு ஒளி வானை நோக்கிச் சென்றதாம்
அருட்செல்வம் அத்தம்மாவுக்கு நிறையவே கிடைத்திருக்கிறது
அத்தம்மாவுக்கு ஆறு பிள்ளைகள் என்று சொன்னேன் . வரிசைப்படி
பெரியத்தா சாகுல் அமீது
அத்தா பீர் முகமது
பாத்துக்குப்பி (மகிபாலன்பட்டி)
அமீர் குப்பி (கோட்டையிருப்பு)
ஜமீலாக்குப்பி ( என் துணைவியின் அம்மா)
சையது சச்சா
இ(க)டைச்செருகல்
ஐயாவைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை .அத்தா கல்லூரியில்
படிக்கும்போதே ஐயா காலமாகிவிட்டார்
எங்கள் வீட்டில் அத்தம்மா பற்றி எதாவது பேச்சு வந்தால் எதோ
பார்த்துப்பழகியவன் போல
யாரு காதர் அம்பலம் வொய்பா
என்கிறான் என் பேரன் .
ஐந்தாம் தலைமுறை உரிமைபோலும்
சொல்ல மறந்து விட்டேனே அத்தம்மா பெயர் மீராம்பீவி
சென்ற
மூளைக்கு வேலை
பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர் கீழே
போகும்போதெல்லாம் மின் தூக்கியை( Lift) முழுமையாகப் பயன் படுத்துகிறார் .
ஆனால் திரும்பி மேலேவரும்போது பெரும்பாலும் ஆறாவது மாடி வரை மின் தூக்கியில் போய் பத்தாவது
மாடிக்கு நடந்து போகிறார். மழைக் காலங்களில் பத்தாவது மாடி வரை மின் தூக்கியில்
போகிறார்
ஏன்?
இதுதான் சென்ற புதிர்
கேள்வி. இதுவும் ஒரு மாற்றுச் சிந்தனை கேள்விதான்
அந்த மனிதர் மிகவும் குள்ளமானவர் என்பதே சரியான விடை.
மின் தூக்கியில் ஆறாவது பொத்தான் வரைக்கும்தான்
அவருக்கு எட்டும்/.வேறு யாராவது கூட வந்தால் அவர்கள் உதவியுடன் பத்தாவது மாடி வரை
போய்விடுவார்.
மழைக்காலத்தில் தன் கையில் இருக்கும் குடையை வைத்து
பத்தாவது பொத்தனை அழுத்தி விடுவார்
சரியான விடை அனுப்பிய
ஆத்திக்கா
வுக்கு
மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள்
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F /W 21102018
21102023
பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,கணியன் பூங்குன்றனார் ஆகியோர் பிறந்த பகுதியான மகிபாலன் பட்டியில் ஒரு புலவர் பரம்பரையில் பிறந்த நம் அத்தம்மாவின் மிக உயர்ந்த குணங்களான பொய் பேசாமை, புறம் பேசாமை மற்றும் தவறான (கெட்ட)வார்த்தைகள் பேசாமை ஆகிய குணங்கள் நம்மில் பலரிடமும் காணப்படுவது அல்லாஹ்வின் அருளால் அத்தம்மாவிடமிருந்து வந்தது தான்
சகோ தல்லத்[19:08, 10/21/2023] SHERFUDDIN P:
[21/10, 10:05] Jothy Liakath: அத்தம்மா பற்றி செய்திகள் மிக
சுவாரஸ்யமாக இருந்தது.
ஏதோ இப்போதுதான்
நடந்து முடிந்தது போல நினைவுகள்
: மனதில் அலை
மோதியது.
உலகம் பிறந்தது
எனக்காக, எனும்
சினிமாப்பாட்டு
கேட்டால், தனி மனிதன் ஒருவன்
எப்பது உவகை தனதாக்கி கொள்வது
போல பாடலாம்
என்று கோபம் வரும்
சோஷலிசப் .
இரவில் அனேகமாக
பால் சோறு தான்
சாப்பிடும்.
சாப்பிட்ட தட்டில்
தண்ணீர் ஊற்றி
கழுவிக் குடிக்கும்.
உணவு சிக்கனம்.
மற்றவர்க்கு தெரியாமல்
நிறைய, தான தர்மம்
பதிப்பிற்கு உதவிகள்
செய்யுமாம்.
அத்தம்மாவின் வாரிசுகள் அனைவர்க்கு மே
அந்த தர்மசிந்தனைகள்
நிறைய இருக்கிறது.
மற்றபடி அத்தம்மா வின், பெருந்தன்மை
நாகரீகம் பற்றி
அப்போது புரியாதது
இப்போது நிறைய
புரிகிறது.
இன்னும் அத்தம்மா
பற்றி நிறைய சொல்லலாம்.
மற்றபடி பேரன்
பர்வேஸ் அத்தம்மா
பற்றி பேசுவது
மிகவும் ஆச்சர்யமான
விஷயம்.
[
[21:06, 10/21/2023] SHERFUDDIN P: சகோ பாடி பீர் அத்தம்மாவின் மலரும் நினைவு அலைகளில் நீந்தி நிறறைய செய்திகள் சொன்னார்
அவற்றில் சில
அத்தம்மாவின் சிறப்பு உணவு
முழுப்பச்சை பயறை வறுத்து அம்மியில் அரைத்து பயறை பருப்பாக்கி
முட்டை சேர்த்து குழம்பு
அப்படி ஒரு சுவையாக இருக்குமாம். Freshly ground பாசிப்பருப்பு
அவ்வப்போது மெ வ சாலை பயணம்
ஐந்தாறு கி மீ நடந்தே ஆகவேண்டும்
அத்தம்மா ஓலை கொட்டானில் வைத்துக் கொண்டு வரும் அவித்த முட்டை புளிச்சோறை வழியில் உள்ள ஒரு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு நடையைத் தொடர்வார்கள்
மெ வா சாலையில் இன்றும் மின்சாரம் கிடையாது
அந்த எல்லைக்கு வெளியே பலர் வசதியான வீடுகள் கட்டி வாழ்கின்றனர்