Saturday, 29 February 2020

Defenselessness English








What is the unique feature of the word
Defenselessness                  ?

Answer is

It is a very long word with 15 letters but with only one vowel E

Very few English words are like this

I got 2 nearly correct answers

One from  Mr Manohar of CBROA
“ 5 es and 5ss”

And
Another from Mrs  Ashraf  Hameeda

Three consecutive sounding same syllable


Thanks , Congratulations


01032020 sun






ENGLISH






What is the unique feature of the word
Defenselessness                  ?

Answer is

It is a very long word with 15 letters but with only one vowel E

Very few English words are like this

I got 2 nearly correct answers

One from  Mr Manohar of CBROA
“ 5 es and 5ss”

And
Another from Mrs  Ashraf  Hameeda

Three consecutive sounding same syllable


Thanks , Congratulations


01032020 sun

Friday, 28 February 2020

இலவசம் நிறைவு பெறுகிறது சின்னச் சிதறல்கள்


சின்னச் சிதறல்கள்

இலவசம் நிறைவு பெறுகிறது





  அறப்பொருள் விநியோகம்  பற்றி என் கருத்துகளுக்கு முன் ஒரு சிறிய கதை
ஏற்கனவே நான் சொன்னதுதான் .நல்ல செய்திகள், கருத்துகளை திரும்ப சொல்வது, கேட்பது நல்லதுதானே
அர்ச்சுனன் ஒருநாள் கண்ணனிடம் கேட்கிறார்
“ நாங்களும் நிறைய தான தருமங்கள் செய்கிறோம். கேட்பவருக்கு இல்லை என்னாமல் கொடுக்கிறோம்
இருந்தாலும் நீயோ கர்ணனின் தருமத்தையே புகழ்ந்து பேசுகிறாயே இது ஏன்?”
“ நாளை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் என்னிடம் வா. இதற்கு நான் விளக்கம் சொல்கிறேன் “
என்று கண்ணன் சொல்ல, அதன்படி அதிகாலையில் அர்ச்சுனன் கண்ணனை சந்திக்கிறார்
கண்ணன் ஒரு தங்க மலையையும் ஒரு வெள்ளி மலையையும் அர்ச்சுனனிடம் கொடுத்து
“இன்று மாலை சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் மிச்சம் மீதி இல்லாமல் தருமாமாக  கொடுத்து விட வேண்டும் “ என்று சொல்கிறார
ஒரு கோடாரியை வைத்து வெட்டி வெட்டி கேட்போர் கேளாதோர் எல்லோருக்கும் அர்ச்சுனன் கொடுக்கிறார் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் .கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் வாங்கிக்கொண்டு போகிறார்கள்
பொழுது சாயும் நேரம் நெருங்கி விட்டது . இன்னும் அரைவாசி கூட கொடுத்து முடியவில்லை , சூரியன் மறைய இன்னும் சில நிடங்களே இருக்கும் நிலையில் அர்ச்சுனன் தன இயலாமையை ஒப்புகொள்ள கண்ணன் கர்ணனை அழைத்து வரச் செய்கிறார் . வந்த கர்ணனிடம் கண்ணன்
‘சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தருமம் செய்து விட வேண்டும் உன்னால் முடியுமா” என்று கேட்க
கர்ணன் அதற்கு மறுமொழி கூட சொல்லாமல் வழியில் வந்த இருவரை அழைத்து இந்தா இந்தத் தங்க மலை முழுதும் உனக்கு .வெள்ளி மலை உனக்கு “
என்று கொடுத்து ஒரு நொடியில் காலி செய்து விடுகிறார்
கண்ணன் ,கர்ணன் , அர்ச்சுனன் எல்லாம் உருவகப் பெயர்கள்தான் .மிக ஆழமான உளவியல் கருத்துகள் கொண்ட  கதை இது  .
கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னது
மாலைக்குள் இரண்டு மலைகளையும் தருமம் செய்து மூடிக்க வேண்டும் என்பதுதான்
ஒரு ஆளுக்கு இவ்வளவு தர வேண்டும் என்று சொல்லவில்லை . மாலை வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை
ஆனால் அர்ச்சுனன் தனக்குள் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் கொடுக்கவேண்டும் என்று ஒரு வரையறை ஏற்படுத்திக்கொண்டு மாலை வரை கொடுத்துக்கொண்டே இருந்தார்
இதைத்தான் உளவியலில் mental barriers based on assumptions  ஊகங்களைச் சார்ந்த மனத்தடைகள் என்பார்கள்
இப்படிப்பட்ட தடைதான் அரப்பொருள்  விநியோகத்திலும் நிகழ்கிறது
நாமாகவே மனதுக்குள் ஒரு வரையறை வகுத்துக்கொள்கிறோம்.
நாம் என்பதில் நானும் உண்டு
நான் கொடுக்க வேண்டிய தொகையை ஒருவர் அல்லது இவருக்கு மொத்தமாகக் கொடுத்து ஒரு சிறு தொழிலோ வணிகமோ துவங்க உதவும்   மனம் வருவதில்லை நான் நினைத்தாலும் சமுத்தாய  அழுத்தம் குடும்ப அழுத்தம்- உறவினர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் -என் எண்ணத்தை செயல்படுத்த முடிவதில்லை
அதற்கெல்லாம் மேல் வாங்குபவர்களும் ஒரு  முன்னேறும் நோக்கத்தில்  இருப்பது இல்லை . உன்னால் முடிந்ததைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டு என்பதுதான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது
விளைவு ,வாங்குபவர்கள் தொடர்ந்து ஆயுள் சந்தா போல் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள் .போன ஆண்டு கொடுத்து இந்த ஆண்டு கொடுக்காவிட்டால் அவர்கள் வருத்தப்படுவார்களே என்று நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு நம் முழுத் தொகையும் கொடுத்து அவர் வாழ்வில் முன்னேற்றம் கண்டு அடுத்த ஆண்டு அவர் பிறரிடம் வாங்காத அளவுக்கு உயர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு அவரே பிறருக்கு கொடுக்கும் நிலையை அடைவதுதான் உண்மையான சக்காத்தின் அடையாளம் என்று படித்த நினைவு
முயற்சி செய்து பார்ப்போமா ?
இதை முழு மனதுடன் எல்லோரும் செயல்படுத்தினால் ஒரு சிலரையாவது எழ்மை என்னும் வட்டத்துக்கு வெளியே கொண்டு வரலாம்  .
 எனக்கு மனதில் தோன்றிய ஒரு வழி: இறுதியாண்டு பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் ஒருவருக்கு அந்த இறுதியாண்டு படிப்பு செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் .
நல்ல முயற்சிகள் எல்லாவற்றிற்கும் இறைவன் கை கொடுப்பான்
என் கருத்துகளில் பிழை ஏதும் இருந்தால் கருணையே உருவான ஏக இறைவன் என்னை  மன்னிப்பான்
என் கற்பனையில் உருவான ஒரு கல்விக்கூடம் பற்றி எப்போதாவது எழுதுகிறேன் அது கற்பனை மட்டுமல்ல என் ஆசை, நோக்கம் என்றும் சொல்லலாம் 
ஆசை, கற்பனைக்கு வயது எல்லை கிடையாதே !
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்

sherfuddinp.blogspot.com
bfw28022020fri


Wednesday, 26 February 2020

BIRDS


BIRDS



.Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing.   (Al Quran 67:19)
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாளனை(இறைவனை)த்  தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.(26022020Wed)

Friday, 21 February 2020

தொடரும் இலவசம்



சின்னச் சிதறல்


தொடரும் இலவசம்



வண்டு குடைவது போல் ஒரு வினா, ஐயம் என்று சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன்
அது என்ன என்று பார்ப்பதற்கு முன் ஒரு சில செய்திகள்
--இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள் வெறும் மூன்று % மட்டுமே
--பொற்கோயில் உணவு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டவர் பாபா பெரித் எனும் சூபி முசுலிம் மத பெரியவர் . அதை பின்பற்றி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்  குருத்வாராக்களில் இதை நடைமுறைப்படுத்தினார் (செய்தி – தி தந்தி 28122019)
நான் இசுலாமியன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை உண்டு. அந்த மதத்தில்  அறத்தை, தர்மத்தை கட்டாயக் கடமையாக ஆக்கியிருப்பது ஒரு மிகப்பெரிய சமூக நல, பொருளாதாரப் புரட்சி .
“ உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உனக்கு மட்டும் அல்ல . உன் தேவைக்கு, உன் குடும்பத்துக்கு தேவையான அளவுக்கு நிறைவாக எடுத்துக்கொள் . அதற்கு மேல் உள்ளது மற்றவர்களுக்குநீ கொடுக்க வேண்டியது கடமை”
இதுதான் நான் சக்காத், சதக்கா என்னும் தர்மங்கள் பற்றி நான் புரிந்து கொண்டது
இறைவன் சொல்கிறான், சொல்வதென்ன வாக்குறுதி அளிக்கிறான்
  மற்றவர்களுக்காக செலவழிப்பது எனக்கு (இறைவனுக்கு) கொடுக்கும் அழகிய கடன், அதை நான் பன்மடங்காகத் திருப்பித் தருவேன் 
நூற்றுக்கு இரண்டரை ரூபாய் என்ற கணக்கு சக்காத்துக்கு
சதக்காவுக்கு எல்லையே இல்லை . தேவைக்குப் போக மிஞ்சியிருப்பதெல்லாம் சதக்கா என்ற தர்மத்துக்குத்தான்
இதன்படி எல்லோரும் வாரி வாரித்தான் வழங்குகிறார்கள்
என்றாலும் எனக்கு ஒரு சிறிய வருத்தம் . இப்படி அள்ளிக் கொடுக்கும் இசுலாமிய சமூத்தில் ஒரு பெரிய அளவில் கல்விக்கூடமோ, மருத்துவ மனையோ வறியவர்களுக்கு உதவும் விதத்தில் இலவசமாக இல்லையே  இது ஏன?
இல்லை எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கிறதா ?
அப்படி எதாவது இருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்
மதம் சார்ந்த கல்வி மதரசாக்கள், அரபுக்கல்லூரிகளில் முற்றிலும் இலவசமாக , உணவு, தங்குமிடத்துடன் கொடுக்கப்படுகிறது
இது போதுமா ?
அங்கு படிப்பவர்கள் திருமறை,  மதம் பற்றி ஒரு முழுமையான புரிதல் பெறுகிறார்களா ?
அதிகமாகக் கேள்வி கேட்டால் “குழப்பவாதி “ என்பார்கள்
இருந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை
நான் முதலில் குறிப்பிட்டதுபோல் இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள் வெறும் மூன்று %
இசுலாமியர்கள் பதினெட்டு %
இலவசமாக் உணவளித்தால் சோம்பேறித்தனம் வளரும் பிச்சசைக்காரர்கள் பெருகி விடுவார்கள் என வாதிக்கலாம்
சீக்கிய சமுதாயத்தில்   பிச்சசைக்காரர்களே கிடையாது
இசுலாம் பற்றி அப்படி சொல்ல முடியுமா ?
சரி உணவை விட்டு விடுங்கள் .
இலவசக் கல்வி, மருத்துவத்தில் இசுலாத்தின் பங்கு என்ன ?
உலகக்கல்வி வழங்கும் இசுலாமிய கல்விக்கூடங்கள் பற்றி பள்ளியில் தொழுகை நடத்தும் இமாம்கள் சொன்ன கருத்துக்கள் சில
-    இசுலாமியப்பள்ளி என்று என் மகனை சேர்க்கப்போனேன் .அவர்கள் சொன்ன கட்டணம் என் ஒரு ஆண்டு ஊதியத்துக்கு மேல். ,போன வேகத்தில் திரும்பி வந்து விட்டேன்
n  எல்லோரும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள்தனே கட்டண சலுகை கிடைக்கும் என்று குழந்தையை சேர்க்க பள்ளிவாசல்கள் இணைந்து நடத்தும் பள்ளிக்குப் போனேன்..கட்டணத்தில் சலுகை கிடையாது என்றார்கள . சரி இரு தவணையில் கட்டணம் செலுத்த அனுமதி கேட்டேன் .அதுவும் முடியாது என்று சொன்னார்கள் . வேறு தரமான கிறித்தவ பள்ளியில் சலுகையுடன் சேர்த்துக்கொண்டார்கள்
ஏன் இந்த நிலை? என்ன பிரச்சனை நம்மிடத்தில் ? பணம் இல்லையா பணமிருந்தும் மனம் இல்லையா?
இப்படி அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன
சக்காத்து, சதக்கா விநியோகிக்கும் முறை ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து, இசுலாத்தின் கருத்தும் அதுவே
இது பற்றி சிறிது விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்

இலவசங்கள் பற்றிய வினாக்களுடன் இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் சந்திப்போம்

sherfuddinp.blogspt.com

BFW21022020fri


இந்தப்பதிவுக்கும் முகநூலில்  தடை தடை






Thursday, 20 February 2020

தமிழ் (மொழி) அறிவோம் கறி காய்






கறி காய்




முன்குறிப்பு
நெல்லைதமிழ் பற்றி நான் எழுதியிருக்கிறேன்
கொங்கு தமிழ் பற்றியும் பதிவிட்டுருக்கிறேன்
அந்த வரிசையில்  இது வேறொன்று
நண்பர்கள் வட்டத்தில் மாற்று மதத்தினரே எனக்கு அதிகம் .
 குறிப்பாக நாற்பது ஆண்டு வங்கி வாழ்ககையில் பல  அந்தணர்களுடன் நெருங்கிய நட்பு
அந்த நெருக்கத்தில் அவர்கள் இயல்பாகப் பயன்படுத்தும் சில தமிழ் சொற்கள் சற்று மாறுபட்டு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்
அவற்றை இங்கு ஒரு பதிவாகத் தருகிறேன்
மற்றபடி ஒரு இனத்தை கேலி, கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை
என் எழுத்துக்களில் எதுவுமே offensive ஆக இருக்கக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்
இனி அந்தணர் தமிழ் பற்றி
சாத்தமுது – என்னை மிகவும் ஏமாற்றிய ஒரு சொல்
அமுது என்றவுடனே அமுதும் தேனும் எதற்கு, அன்பே அமுதா என்றெல்லாம் கற்பனை சிறகு விரித்துப்பறக்கும்.
 .ஒரு சுவையான இனிப்பான உணவு  நாவில் பட்டு தொண்டையில் இறங்குவது போல் உணர்வு ஏற்படும்
முன்பு என் உறவினர் ஒருவர் நெல்லையில் பாலமுது என்ற சொல்லில் மயங்கி அது வெறும் சுடுகஞ்சி என்று அறிந்து ஏமாந்தது பற்றி எழுதியிருந்தேன்
அதே போல்தான் சாத்தமுது என்பது ரசத்தை குறிக்கும் சொல்லாம்
அடுத்து சில சொற்களின் மாறுபட்ட ஒலிவடிவங்கள்
காய்கறி கறிகாய் என்று வரும்
அப்பளம் அப்(ப)ளாமாகி விடும் .
அதற்குத் துணையாக வடகம் வடாம் என்றாகும்
வீடு அகமாகி அகம் ஆம் ஆகி வீட்டிலே என்பது ஆத்திலே ஆகிவிடும்
நெல்லைத் தமிழில் ஒலிக்கும் அவாள் இவாள் என்பது இங்கு அவா இவா என்று வரும்
ஐயங்கார் – ஐய்ங்கார்
சேவிப்பது என்பது கும்பிடுதளைக் குறிக்கும் சொல் என நினைக்கிறேன்
சாணாச் சுருணை – வீடு துடைக்கும் துணி என்று புரிந்திருக்கிறேன் . இதற்கும் சாணிக்கும் ஏதும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை
கோமியம் – கோ – பசு 
அத்தங்கா என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறேன் .பொருள் தெரியவில்லை
சில எழுத முடியாத ஒலிகளும் உண்டு . ன்னா , .ன்னோ என்று ஒலிக்கும்
என் காதில் விழுந்து என் நினைவில் நிற்கும் தமிழ் சொற்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்
வலை தலத்தில் தேடினால் இன்னும் நிறைய சொற்கள் கிடைக்கும்.
இறைவன் நாடினால் மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்
என்ன கவனமாக எழுதினாலும் ஒரு இனம் பற்றிய பதிவில் தவறு ஏதும் வந்து விடக்கூதாது என்று உறுதி செய்ய என் பதிவை நண்பர் திரு (டி பீ கே)கல்யாண சுந்தரத்துக்கு அனுப்பி வைத்தேன் , அவர் nothing offensive  என்று சான்று அளித்ததோடு தன் பங்குக்கு நிறைய சொற்களும் , விளக்கங்களும் அனுப்பியிருந்தார்
அவருக்கு என் நன்றிகள்
அவற்றை கீழே தருகிறேன்
[15:32, 19/02/2020] CB Retd TPK2: முதலில் காய்கறி... தென் மாவட்டங்களில் உச்சரிப்பது.     வட மாவட்டங்களில் (சென்னை) கறிகாய்.   
ஐயங்கார்கள் வீட்டில் தூய தமிழ் சொற்களைப்.  பேசிகிறார்கள்.  
அமிர்தம் என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் ..அமுது.  அமிர்தம் சாகாத நிலை தரும்.  உணவு உயிரைக் காப்பதால் அதை அமுதென குறிப்பிடுகின்றனர் 
சாறு..ரசம். .. சாற்றமுது. 
 திருக்கண்ணமுது என்பது சர்க்கரைப் பொங்கல்.  
 சேவிப்பது, தண்டனிடுவது...   ஐயங்கார்..தமிழ்.     
 வீட்டுத் தரையை சுத்தம் செய்ய முதலில் பசுவின் சாணியைச் சிறிது கரைத்துத் தெளிப்பர். பிறகு தரை மெழுகித் துடைக்க உபயோகிக்கும் துணி சாணாத்துணி. 
 அத்தங்கா..அத்தை மகள்....
.அம்மங்கா..  மாமன் மகள்.  
அத்தான்..              அத்தை மகன்.   
அம்மாஞ்சேய்...(அம்மாஞ்சி) மாமன் மகன்.....
.மன்னி...   அண்ணி.  

அத்தான், அம்மாஞ்சி மனைவி  .... 
அத்தான் மன்னி,  அம்மாஞ்சி  மனைவி மன்னி
மாட்டுப்பொண் மருமகள்
[15:36, 19/02/2020] Sherfuddinp: நன்றி
I hope there's nothing offensive
And I can post with your comments
[15:43, 19/02/2020] CB Retd TPK2: ஆமாம். Nothing offensive
 [16:18, 19/02/2020] Sherfuddinp: Thanks once again
இறைவன் நாடினால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

sherfuddinp.blogspot.com
BFW20022020thu



Monday, 17 February 2020

கதை நேரம் நதியே நதியே









நதியே நதியே

அழகே உருவான இளம்பெண்
 .அழகுக்கு அழகூட்டுவது போல் அந்தப்பெண்ணுக்கு ஒப்பனை . 

மணப்பெண் போல் சீவி முடித்து சிங்காரித்து விலை உயர்ந்த நகைகள் ஆடைகள்

இந்த அலங்காரம் ஒப்பனை அனைத்தையும்  மீறி அந்தப்பெண்ணின் முகத்தில் துயரத்தில் தோய்ந்திருந்தது .மனதுக்குப் பிடிக்காத திருமணமோ ?!

இல்லை அதைவிடக் கொடுமையான ஓன்று .அந்தப்பெண்ணை பலி கொடுக்கப்போகிறார்கள்

கேட்கவே நெஞ்சம் பதறும் இந்த நிகழ்வு பண்டைய எகிப்து நாட்டில் ஆண்டு தோறும் அரங்கேறும் ஒரு சடங்காக இருந்தது

வரலாறு, நாகரீகம் , கலாசாரம் , மதம் என்று எதிலுமே எகிப்து நாட்டுக்கு தனி ஒரு இடம் உண்டு

பிரமிடுகள். சிங்கமுகக்கோவில்களின் பிரமாண்டம் நினைத்தாலே ஒரு திகைப்பு ஏற்படும்

குலத்தின் அடிப்படையில் மக்களைப்பிரித்து கொடுமைப்படுத்தி அதற்கெல்லாம் உச்சகட்டமாய் நானே இறைவன் என்று சொல்லி ஆணவத்தால் அழிந்த கொடுங்கோல் அரசன் பீர் அவுன்

அவனுக்கு அறிவரை சொல்ல இறைவன் அனுப்பிய, இறைவனிடம் நேரடியாகப் பேசும் வரம் பெற்றிருந்த  நபி மூசா

காலத்தினால் அழியாத அழகினால் உலகை ஆட்டிப்படைத்த அரசி கிளியோபாட்ரா

இவர்களெல்லாம் வாழ்ந்தது எகிப்தில்தான்

அந்த எகிப்து நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், விவசாயம் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது நைல் நதி

உலகின் மிக நீளமான நதியாக அறியப்படும் நைல் நதி பதினோரு  நாடுகளின்  வழியாகப்பாய்ந்து நடுநிலக்கடலில் கலக்கிறது
ஏழாயிரம் கிலோமீட்டர் நீளம் மூன்று கி மி அகலம் 
நைல் நதியால் மிக அதிகமாகப் பயன்பெறும் நாடு எகிப்து 
.
நதியின் நீர்மட்டம் குறைந்தால் மக்களும் ஆட்சியாளர்களும் கதி கலங்கிப்போய்விடுவார்கள்
அப்படி ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஆண்டு தோறும் ஒரு கொடுமையான சடங்கை நிறைவேற்றி வந்தார்கள்

சூன் பனிரெண்டாம் நாள் ஒரு கன்னிப்பென்னைத் தேர்ந்தெடுத்து மணப்பெண் போல் ஒப்பனை செய்து நைல் நதியில் தூக்கிப்போட்டு விடுவார்கள் 

எகிப்தில் இசுலாமிய அரசு நிறுவப்பட்டது .ஆளுநராக அம்ரு பின் அல் –ஆஸ் ரலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்
 மத குருமார்கள் ஆளுனரை சந்தித்து இந்த பலி சடங்கு பற்றி பேசினார்கள்

அவரோ எந்தத் தயக்கமும் இன்றி இது போன்ற மூடப் பழக்கங்களை , கொடுமையான சடங்குகளை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்
மனக்கலக்கத்துடன் குருமார்கள் திரும்பினார்கள் . நாட்கள் செல்லச் செல்ல சோதனையாக நதியின் நீர்மட்டம் மளமளவென்று இறங்கத் துவங்கியது
நதியை நம்பியிருந்த பலரும் வேறு ஊர்களுக்கு பிழைப்புத்தேடி கிளம்பும நிலை வந்தது
ஒரு நிலையில் ஆளுனருக்கே ஒரு சிறிய மனக்கலக்கம் உண்டாக அவர் நிலைமையை விவரித்து அன்றைய ஆட்சியாளராகிய கலிபா உமர் ரலி அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார்கள்

உமர் அவர்கள் ஆளுநரின் நடவடிக்கை மிகவும் சரியானாதே என்று மறுமொழி கொடுத்தார். அதோடு ஒரு குறிப்பு எழுதி அனுப்பி அதை நதியில் போட்டுவிடச் சொன்னார்

“ உமரிடமிருந்து எகிப்தின் நைல் நதிக்கு

நதியே நீ உன் சொந்த முயற்சியில் ஓடுவதாய் இருந்தால் இப்போதே உன் ஓட்டத்தை நிறுத்தி விடு

ஆனால் அது எல்லாம் வல்ல ஏக இறைவன் அருளால் என்றால் நாங்கள் அவனிடம் இறைஞ்சுவோம்

“இறைவனே நீ இந்த நதியை பெருக்கெடுத்தோடச் செய்வாயாக “

அந்த மடலை ஆளுநர் நைல் நதியில் போட்டார்.

இறைவன் அருளால் அடுத்த நாள் நதி நீர் பெருகி ஓடத்துவங்கியது . ஓடிக்கொண்டேயிருக்கிறது

மக்கள் கலங்கினார்கள் , ஆளுநர் மனம் தடுமாறினார் . ஆனால் உமரின் அசையாத உறுதியான இறைநம்பிக்கை அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியை பரப்பியது

கன்னிப்பெண்களும் அவர் பெற்றோர் உற்றார் உறவினர்களும் அச்சம் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்

கற்பனைக் கதையல்ல இது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து வரலாற்று ஆசிரியர் இப்னு தக்பிரி பெர்தி பதிவு செய்த வரலாறு


(நபியே !) (இவர்களிடம் )கேளும் :உங்களின்(கிணறுகளின் ) தண்ணீர் பூமிக்குள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால் அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்கு கொண்டு வருபவன் யார் என்பதை நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா  ? -----------(அல் குரான் 67:30)


மீண்டும் வேறொரு பதிவுடன் இறைவன் நாடினால்

sherfuddinp.blogspt.com

BFW17022020mon


இந்தப்பதிவும்
முகநூலில்
தடை செய்யப்பட்டது