சின்னச் சிதறல்
பொற்காலம்
உலக மகிழ்ச்சி தினம் இன்று
கவலைகள் பிரச்சனைகள் கொள்ளை நோய் குடியிரிமை எல்லாவற்றையும் கொஞ்சம்
விலக்கி வைத்து விட்டு
கற்பனைத் தேரில் ஏறி சிறிது கனவுலகில் உலாவுவோமா? !
பறந்து சென்ற தேர் ஒரு
இடத்தில் மெதுவாக இறங்குகிறது.
அந்த இடம் ஒரு பூஞ்சோலை போல
அழகாக, மனதிற்கு இதமாக இருக்கிறது
பச்சைபசேல் மரங்கள், செடிகொடிகள் பூத்துக்குலுங்கும் மலர்கள் .இசையாய்
ஒலிக்கும் பறவைகள் ஓசை
உற்றுப்பார்த்தால் அது ஓரு பள்ளிகூடம் போல் தெரிகிறது.
ஆம் பள்ளிக்கூடமேதான் இயற்கை சூழலில் விசாலமான காற்றோட்டமான
வெளிச்சமான வகுப்பறைகள்
காலை மணி ஏழரை .
வண்ணத்துப்பூச்சி போல்
பிள்ளைகள் மலர்ந்த முகத்துடன் வருகிறார்கள்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
முதுகை வளைத்து ஒடிக்கும்
புத்தக மூட்டை இல்லை . கையில் சாப்பாடு தண்ணீர் சுமை இல்லை
கை கால் கழுவி நேராக உணவுக்கூடத்துக்கு போய் உட்காருகிறார்கள்
நட்சத்திர விடுதி போல் சுத்தமான கூடம் . சுவையான சத்தான உணவு பரிமாறப்படுகிறது
எல்லாவற்றிலும் ஒரு சுய ஒழுங்கு, ,
நேர்த்தி
பரிமாறுவதிலும் மாணவ மாணவியர் பங்கெடுத்துக் கொள்கிறரர்கள்
சாப்பிட்டு முடிந்தது . தட்டுக்கள், குவளைகளை அழகாகக் கழுவி வைத்து
விடுகிறார்கள்
பிறகு வகுப்பறை
எங்கும் கூச்சல் குழப்பம் இல்லை ஆனால் இறுக்கமானஅமைதியும் இல்லை
யார் கையிலும் பிரம்பு இல்லை
அடக்கும் அதிகாரக் குரல் இல்லை
பதினொரு மணிக்கு அருமையான பசும்பால்
மதிய உணவு மாலை சிற்றுண்டி எல்லாம் பள்ளியிலேயே
பள்ளி நேரம் காலை எட்டு முதல் மாலை நாலு வரை
சரி கட்டணம் எவ்வளவு ?
கட்டணமே கிடையாது , நம்ப முடியவில்லையா ?
சீருடை, காலணி, புத்தகம் நோட்டு எல்லாமே இலவசம்தான்
உடல் மனம் மேலாண்மைத்திறன் எல்லாவற்றையும்குறிப்பாக மனித நேயத்தை மேம்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்கும் தரமான
பாடத்திட்டம் வீட்டு வேலை தோட்ட வேலை, சிறு தொழில்கள் பயிற்சி எல்லோருக்கும்
. ஒழுக்கம் நேர்மை நீதியை வலியுறுத்தும் பாடங்கள் எடுத்துக்காட்டாக
விளங்கும் நல்ல ஆசிரியர்கள்
பெற்றோரையும் பிள்ளைகளையும் வதைக்கும் வீட்டுப்பாடம், கடுமையான
தேர்வுகள் எதுவும் இல்லை
சமுதாயச் சிந்தனையை வளர்க்கும் வீட்டுப்பாடங்கள் பெற்றோர்
பங்கில்லாமல் பிள்ளைகளே செய்வது போல் இருக்கும்
மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்கள், நிர்வாகிகளை எளிதில் சந்தித்துப்
பேசலாம்
எல்லாமே இலவசமா என்று மீண்டும் கேட்கிறீர்களா ?
இல்லை
விலை உண்டு சில விதிகள் கட்டுப்பாடுகள் உருவில்
பயிற்சி மொழி தமிழ் மட்டுமே
முதல் விதி
வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கக்கூடது
அடுத்து
பிள்ளைகளிடம் கைப்பேசி இருக்கக்கூடாது பெற்றோர் மேற்பார்வை இல்லாமல்
இணையத்தை பார்க்கக் கூடாது
மூன்றாவது
பிள்ளைகள் வீடு திரும்பும் நேரத்தில் பெற்றோரில் ஒருவராவது வீட்டில்
இருக்க வேண்டும்
பெண் பிள்ளை என்றால் அம்மா இருக்க வேண்டும்
பெற்றோரிடம் ஒரு ஒழுங்கு,நேர்மை இருக்கவேண்டும் குடி புகை கூடாது
எல்லாவற்றிற்கும் மேலாக
பிள்ளைகள் பள்ளிக்குத் தன்னால் நடந்து , நடந்துதான் வரவேண்டும்
மிதி வண்டி, இரு, மூன்று, நான்கு, ஆறு சக்கர வண்டி எதற்கும் அனுமதி
இல்லை
பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பள்ளியில் அனுமதி பெற்று
மிதி வண்டியில் வரலாம். அதுவும் ஒரு வண்டியில் ஒருவர் மட்டுமே
என்ன இது எதோ கற்காலம் நோக்கிப் பயணிப்பது போல் இருக்கிறது என்பது
காதில் விழுகிறது
எனக்கு இது பொற்காலம் நோக்கிப் பயணம் போல் இருக்கிறது
எனவே பொற்காலம் என்றே இந்தப் பள்ளிக்கு பெயர் வைத்திருக்கிறேன்
கற்பனைதான்
இருந்தாலும் இது என் ஆசை,என் கனவு, என் நோக்கம், இலக்கு , குறிக்கோள்
துவக்கப்பள்ளியில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து ஒரு
பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும்
இது நிறைவேறுமா ?
இறைவன் நாடினால் நடக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது
ஆழ் மனதில் நம் எண்ணங்களை விதைத்து வைத்தால் காலப்போக்கில் விதைமுளைத்து செடியாகி பெரிய ஆலமரமாகி நிழல் பரப்பும் என்கிறார்கள்
நான் விதைத்து விட்டேன் . நீங்களும் முயற்சி செய்யுங்களேன்
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
BFW20032020fri