Thursday, 30 April 2020

யார் அவர் !


யார் அவர் !
இறுதித் தூதர் நபி (ஸல்)அவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வகையில் சம்பந்தி ஆனவர் யார் ?
இது நேற்றைய வினா
இதற்கு விடை
'Abd al-'Uzzā அப்ட் அல் உஜ்ஜா
இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு . அதைச் சொன்னால் எல்லோருக்கும் எளிதில் விளங்கும் சற்று அச்சமும் உண்டாகும்
அபு லஹப் எனபதுதான் அந்தப்பெயர் நெருப்பின் தந்தை என்று பொருள்
சிறு வயதில் அவர் கன்னங்கள் மிக அழகிய சிவப்பு நிறத்தில் இருந்ததால் செல்லமாக இப்படி அழைத்தார்கள்
பின்னால் அவர் செய்த கொடுஞ்செயல்களால் இதுவே நரக நெருப்பின் தந்தை என்று மாறியது
Surah 111 - Al-Masad (The Palm Fiber ஈச்சங்கயிறு
அபுலஹபின் கரங்கள் முறியட்டும் என்று கடுமையான சொற்களுடன் துவங்கும் இந்த அத்தியாம் அபு லஹபையும் அவரது துணைவியையும் சபிக்கிறது
114 பகுதிகள் கொண்ட திருமறையில் ஒரு தனி நபரை பெயர் சொல்லி இறைவன் சபிப்பது இந்த ஒரு பகுதியில் மட்டுமே
அந்த அளவுக்கு அபுலஹபும் அவரது துணைவியும் இசுலாத்துக்கு எதிராகவும் நபி ஸல் அவர்களுக்கு எதிராகவும் சொல்ல முடியாத கொடுமைகள் செய்தார்கள் இவ்வளவுக்கும்அபுலஹாப் நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை முறை ஆவார்
தம்பியின் குழந்தையாக நபி அவர்கள் பிறந்த சுபச் செய்தியை ஒரு பணிப்பெண் – அடிமை – வந்து அபு லஹபிடம் சொல்ல மகிழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு பரிசு கொடுக்க சட்டையப் பையில் கை விடுகிறார் பையில் ஒன்றும் பெரிதாக இல்லை . உடனே சிறிதும் தயங்காமல் அந்தப்பெண்ணுக்கு அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை அளித்து விடுகிறார்
அவ்வளவு பாசமாக இருந்த அவர்தான் நபி (ஸல்) அவர்கள் இசுலாமியப் பரப்புரை துவங்கியவுடன் மிகக் கடுமையான எதிரியாகி ஒரு கட்டத்தில் நபி அவர்களைப் பார்த்து “ உன் கைகள முறிந்து போகட்டும் “ என்று வசை பாடுகிறார்
சுராஹ் 111 இறக்கி வைக்ககப்பட்ட பின் பல ஆண்டுகள் அபுலஹப் , அவர் துணைவி இருவரும் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை
அபுலஹாப் ஒரு மிகக்கொடுமையான , இழிவான மரணத்தை சந்திக்கிறார் .அவர் பிள்ளை கூட அருகில் போகத் தயங்கி, ஒரு ஆழமான குழி வெட்டி, நீண்ட கழிகளால் உடலை தள்ளி விட்டு கற்களால் மூடி விடுகிறார்கள்  
கடுமையான சொற்களைக்கொண்ட சுராஹ் 111ஐ ஓதக்கூடாது என்று ஒரு தவறான கருத்து நிலவுகிறது . இறைவனின் படைப்பான குரானில் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு எழுத்தும் நன்மை பயக்கக்கூடியதே
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
(Source- Wikipedia )

3004202othus

sherfuddinp.blogspot.com




Wednesday, 29 April 2020

அவர் யார் !


அவர் யார் !

அழகிய தோற்றம்,, சிவந்த நிறம் சுருள் முடி , வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மை  எல்லாம் ஒருங்கே கிடைக்கபெற்றவர்

அதற்கெல்லாம் மேல் இறுதித் தூதர் நபி (ஸல்)அவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வகையில் சம்பந்தி ஆனவர்

யார் அவர் ?

இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்

29042020wed
sherfuddinp.blogspot.com

Tuesday, 28 April 2020

Geocarpy


இரவும்பகலும் மாறி மாறி வருவது , சிறு துளி கருவாகி குழந்தையாக உருவாகுவது ,மேகம் மழை பொழிவது போன்ற எண்ணற்ற இயற்கை நிகழ்வுகள் இறைவனின் மாட்சிமைக்கு சான்று பகர்கின்றன
சுவாசம், இதயத்துடிப்பு , செரிமானம் போன்ற பல உயிர் இயக்கங்கள் நம்மை அறியாமல் தொடரந்து   நடைபெறகின்றன; . இவற்றில் ஒரு சிறிய தடை வரும்போதுதான் நமக்கு இது இறையற்புதம் எனும் நினைவு வருகிறது  
இதுபோல  இயற்கையின் எண்ணற்ற  அற்புதங்களில் ஒன்றுதான் geocarpy
அது என்ன geocarpy
தெரிந்தவர்கள் சொல்லலாம்
மீண்டும் நாளை அடுத்த பதிவில் இறைவன் நாடினால் சிந்திப்போம்
27042020
sherfuddinp.blogspot.com


இறைவனின் மாட்சிமைக்கு சான்று பகரும் எண்ணற்ற இயற்கை அற்புதங்களில் ஒன்றான geocarpy என்றால் என்ன என்று நேற்று(27042020) கேட்டிருந்தேன்

கடலை மிட்டாய், வறுகடலை , அவித்த கடலை, உறித்த கடலை  , கடலை எண்ணெய் என்று பல உருவங்களில் பார்த்திருந்தாலும் கடலைச் செடியை அதிகமாக யாரும் பார்த்திருக்க முடியாது
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து வந்ததால் மணிலாக்கொட்டைகாலப்போக்கில்மல்லாட்டை ஆனது தரைக்கடியில் இருப்பதால் வேர்க்கடலை இதுபோக கடலைக்காய் , கப்பலண்டி(மலையாளம்) என்ற பல பேர்களில் வலம் வரும்  groundnut செடி  இறைவனின் அதியற்புதப் படைப்புகளில் ஓன்று
வேர்க்கடலை என்று பேர் இருந்தாலும் இது வேரில் முளைப்பதில்லை. மற்ற செடிகளைப்போல் தரைக்கு மேல் உள்ள தண்டில் அழகிய சிறு மலர்கள் மஞ்சள் நிறத்தில் பூக்கும்
.பூக்கள் கருவுற்றவுடன் கருப்பையின் கீழிருக்கும் சிறிய காம்பு நீளமான மெல்லிய நூலிழை  போல் வளர்ந்து மண்ணுக்குள் கருப்பையை நுழைத்து அங்கே கருப்பை முழுக்கடலையாக வளரும். இயற்கையின் இந்த அரிய நிகழ்வு geocarpy எனப்படும்   . ஒரு கடலையில் ஓன்று முதல் நான்கு பருப்புகள் இருக்கும்
இந்த அற்புதப்படைபான வேர்க்கடலைக்கு பல சிறப்பான மருத்துவ குணங்கள் இருப்பதாய்ச் சொல்லபடுகிறது
ஒரு சில
நோய் எதிர்ப்பு சக்தி, இளமை காத்தல், வாழ்நாள் நீடிப்பு , இதயக்காப்பு  
ஹீமோபோலியா நோய் உள்ளவர்களுக்கு குருதி எளிதில் உறையாது
அதானால் சிறு காயம் பட்டாலும் குருதி அதிக அளவில் வெளியேறும் .வேர்க்கடலைப்பருப்பின் மேலிருக்கும் சிவப்பு நிற தோல் குருதி எளிதில் உறைய உதவும் என்று சொல்லப்படுகிறது  .அதற்காக வெறும் தோலை சாப்பிடாமல்கடலைப்பருப்பை தோலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்
அளவோடு சாப்பீட்டு சிறிது வெல்லம் சாப்பிட்டால் மிகவும் நல்லது
வெல்லம் கடலையினால் உண்டாகும் பித்தத்தை சரி செய்யும்


விடை சொன்ன
மைத்துனர் வழ..அஜ்மீர அலி திரு ரவிராஜ் முனைவர் பாஷா திரு விஸ்வநாதன் அனைவருக்கும் பாராட்டுகள வாழ்த்துகள்
Geocarpy  சரியான தமிழ் சொல் கிடைக்கவில்லை . தெரிந்தால் சொல்லுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

28042020 tue
sherfuddinp.blogspot.com



Saturday, 25 April 2020

வாதிடும் பெண்


வாதிடும் பெண்
25042020 யார் அந்தப்பெண்ணின் தொடர்ச்சி

அந்தப்பெண்ணின் பெயர் கௌலா பின்ட் தலாபா, கணவர் பெயர் ஔஸ் பின் சமிட் அன்சாரி ( Khaulah bint-Thalabah of the Khazraj tribe, and her husband, Aus bin Samit Ansari,)

சரி அவரின் சிறப்பு என்ன ?

அவரின் கோரிக்கை, அவரது புகார், ஏழாம் வானத்தை எட்டி இறைவன் உடனே ஒரு மறை மொழியை இறக்கி வைத்து அந்தப்பெண்ணின் குறையை உடனடியாக  தீர்த்து வைக்கிறான்

பண்டைய அரபு நாட்டில் ஒரு ஜிகர்(zihar) என்னும் மணமுறிவு முறை வழக்கத்தில் இருந்தது . அதன்படி ஒருவர் தன் துணைவியைப் பார்த்து “ நீ என் தாயின் முதுகைப்போல் இருக்கிறாய் “ என்று சொல்லிவிட்டால் அவர்கள் மண வாழ்கை முறிந்து விடும்

நம் கதை நாயகி கௌலாவின் கணவன் இது போல் சொல்லி மணமுறிவு செய்து விடுகிறார்

அந்தப்பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து முறையிடுகிறார் “என் கணவன் என்னை விலக்கி விட்டால் நானும் என் குழந்தைகளும் பிழைக்க வழியின்றி வாழ்வு நாசமாகிவிடும் நீங்கள் எனக்கு எதாவது வழி சொல்ல வேண்டும் “ என்று வாதிடுகிறார்

இந்த வாதம் நடந்து கொண்டிருக்கும்போதே இறைவன் வஹி மூலம கீழ்க்கண்ட மறை மொழிகளை அனுப்பி வைக்கிறான்

நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:1)

"உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.(58:2)

Surah 058 - Al-Mujadilah (The Woman who disputes)

Source Al kurane karemm and Towards understanding quran

இந்த நிகழ்வினால் சமுதாயத்தில் குறிப்பாக நபித்தோழர்களின் நடுவே அந்தப்பெண்ணிற்குரிய மதிப்பும் மரியாதையும் பல மடங்காக உயர்கிறது   வாதிடும் பெண் என்பதே குரானின் அந்தப்பகுதிக்கு (சூரா 58) பெயராகவும்அமைகிறது

 தாயாக இருப்பாரோ  ? என்று விடை அனுப்பிய திருமதி  வசந்தா வுக்கும்

நினைவிலும் நிற்கும் என்று கருத்துத் தெரிவித்த திரு கணேஷ்  சுப்ரமணியனுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

(இருவரும் வங்கி நட்புகள் )

இறைவன் நாடினால் அடுத்த பதிவில்

26042020 sun

sherfuddinp.blogspot.com

 


Friday, 24 April 2020

யார் அந்தப் பெண் ?


யார் அந்தப் பெண் ?
உமர் (ரலி) . தன் தோழர்களுடன் சில குறைஷி தலைவர்களை சந்திக்க விரைந்து போய்கொண்டிருக்கிறார்
வழியில் ஒரு மூதாட்டியைப் பார்த்து   சலாம்  கூற அந்த மூதாட்டி சலாமுக்கு பதில் கூறி விட்டு  உமரை  நிறுத்தி வெகு நேரம் பழங்கதை எல்லாம் பேசிக்கொண்டே போகிறார்  “ நீ அந்தக்காலத்தில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்தாய் இப்போது பெரிய ஆளாகி விட்டாய்” என்பது போல்  வீண் பேச்சு
.இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டும் குடி மக்களை உயர்வு தாழ்வு பாராமல் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்று அறிவுரைகள் வேறு
.உமர் (ரலி) பொறுமையாக தலை தாழ்த்தி காது கொடுத்துக் கேட்டுகொண்டே இருக்கிறார்
ஆனால் கூட வந்த தோழர் ஒருவர் பொறுமையிழந்து அந்தபெண்ணை கடிந்து கொள்கிறார் “ யாரிடம் பேசுகிறோம் என்று தெரிந்துதான் பெசுகிரீர்களா “ என்று கடுகடுக்கிறார்
உமரோ  “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள் அவர் இன்று முழுதும் பேசினாலும் நான் கேட்கக் கடமைப்பட்டவ்ன் . . தொழுகை நேரம் வந்தால் ஒழிய அவர் பேச்சுக்குத் தடை போட மாட்டேன்:” என்கிறார்  
யார் அந்தப்பெண்மணி ? என்ன சிறப்பு அவருக்கு ?        
தெரிந்தால் சொல்லுங்கள்
இறைவன் நாடினால்( நாளை )  அடுத்த பதிவில் சிந்திப்போம்  .
( என் கண்ணில் பட்ட சில  சுவையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இது போன்ற பதிவுகள் .
என் அறிவை வெளிப்படுத்தவோ உங்கள் அறிவை சோதிக்கவோ அல்ல. சொல்லும் செய்தியை  சும்மா சொல்லாமல் புதிராக, கேள்வி பதிலாகப்போட்டால் இன்னும் சுவை.யாக, படிக்க எளிதாக  இருக்கும் . மேலும் ஒரு செய்தியை  இரண்டு மூன்று நாட்களுக்குப் பதியலாம் )

25042020
sherfuddinp.blogspot.com

Thursday, 23 April 2020

கட்டில் காலும் சித்ராவும்













சித்ரா குழுவின் பரிந்துரைகளை ஏற்று செயல்படுவோம் “
என்று ஒரு அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச யார் இந்த சித்ரா என்று கேட்கிறார் ஒரு செய்தியாளர்
அதற்கு அமைச்சர்
சித்ரா நாராயணசாமி என்கிறார்.
சிறிது நேரத்தில் அவரே இல்லை இல்லை சித்ரா கிருஷ்ணசாமி என்கிறார்
மீண்டும் இல்லை இல்லை சித்ரா ராமசாமி என்று அவரே சொல்கிறார்
இன்னும் சிறிது சிந்தித்து (?) சித்ரா விஸ்வேஸ்வரன் என்கிறார்
இதில் எந்தப்பெயருமே அமைச்சர் சொன்ன செய்திக்குத் தொடர்பானதாகத்  தெரியவில்லையே என்று  செய்தியாளர்கள் குழம்பி நிற்க ஒரு அரசு அதிகாரி வந்து தெளிவு படுத்துகிறார்
சித்ரா என்பது பெயரல்ல .South Indian Textile Research Association  என்பதன் சுருக்கம் SITRA

இந்தச்செய்தியை பல பல ஆண்டுகள் முன்பு துக்ளக்கில் படித்தேன்
செய்திக்குக் கீழே பஞ்ச பாண்டவர் கதையைப் போட்டு சோ தனக்கே உரிய நக்கல் நடையில் சித்ரா செய்திக்கும் பஞ்ச பாண்டவர் கதைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று போட்டிருந்தார்
(அப்போதெல்லாம் துக்ளக் வேறு மாதிரி படிக்கும்படி இருந்தது )

கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி  விரலால் இரண்டு என்று காண்பித்து ஓன்று என்று கரும்பலகையில் எழுதி அதையும் அழித்து விட்டான் ஒரு மாணவன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு விடையாக
அப்படி ஆசிரியர் கேட்ட கேள்விதான் என்ன ? இந்தக் கேள்விக்கு பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்று சரியான விடையை பலரும் சொல்லியிருந்தார்கள்
அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்
இது வெறும் மலரும் நினைவுகள் மட்டுமே
சோ மாதிரி நக்கல் கிண்டல் எல்லாம் எனக்கு வராது
21,22,042020 tue wed

Tuesday, 14 April 2020

SS கோட்டை







காரைக்குடி திருப்பத்தூர் பகுதியில் உள்ள.

 SSகோட்டை 

என்ற ஊரின் முழுப்பெயர் 

சத்துரு சம்காரங் கோட்டை

இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்


15042020 wed


சத்ரு சம்காரங் கோட்டை






காரைக்குடி திருப்பத்தூர் பகுதியில் உள்ள

 SSகோட்டை
 என்ற ஊரின் முழுப்பெயர்

 சத்துரு சம்காரங் கோட்டை

இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்



15042020 wed

Monday, 13 April 2020

எண்ணமே சுமைகளாய்


சின்னச் சிதறல்



எண்ணமே  சுமைகளாய்


 “உங்கள் எண்ணங்கள் அப்படியே சொற்களாக உங்கள் பேச்சில் வருகின்றன அதனால் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் வலிமையாக இருக்கிறது  
வங்கியில் என்னுடன் பணியாற்றிய எனது நெருங்கிய நண்பர் திரு ராசாராம் என்னிடம் இவ்வாறு  சொல்வார்
இது உண்மையா , அவர் சொன்னது புகழ்ச்சியா இல்லையா என்பது இன்று வரை எனக்கு விளங்கவில்லை
ஆனால் ஓன்று உண்மை. எண்ணங்களை அப்படியே கணினியில் சொற்களாய் எழுதுவது என் வழக்கம் .
இந்த ஒரு வாரமாக புதிய பதிவு எதுவும் நான் போடவில்லை
எண்ணங்கள் வராமலில்லை
மாறாக அளவுக்கு மீறி எண்ணங்கள் ஊற்றெடுத்து அலை அலையாக நெஞ்சில் மோதுகின்றன. அவற்றை அப்படியே எழுதினால் வரம்பு மீறிய தடித்த சொற்கள் வந்து விடுமோ என்ற தயக்கம் எழுத்தை தடை செய்கிறது
எதைப்பற்றி எழுதுவது ! முகநூல் பகைகள்  பற்றியா கூட்டுத் தொழுகை பற்றியா வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை பற்றியா, ரமலான் நோன்பு பற்றியா, ,ரமலான் இரவு சிறப்புத் தொழுகை பற்றியா ,தலை நகர் பற்றியா எல்லாவற்றிற்கும் மேலாக
  இப்போது பரவலாகப் பேசப்படும் நோன்புக்கஞ்சி பற்றியா என்ற குழப்பம் வேறு
இப்படி பல்வேறு எண்ண ஓட்டங்கள்  
இதை எல்லாம் சரி செய்து  சொற்களை தணிக்கை செய்து எழுத வேண்டிய ஒரு புதிய சூழ்நிலை
சரி துவங்கி விட்டேன் முதலில் எனக்கு மிகவும் பிடித்த நோன்புக்கஞ்சி பற்றி எழுதுகிறேன்
“எந்த ஊருக்குப் போனாலும் யாரையாவது பிடித்து நோன்புக்கஞ்சி வீட்டுக்கு வர ஏற்பாடு செய்து விடுவீர்கள் “: என்று என் துணைவி என்னைக் கிண்டல் செய்வதுண்டு  .
அந்த அளவுக்கு நோன்புக்கஞ்சி எனக்குப் பிடிக்கும் .சிற்றுண்டிகள் , பழச்சாறு காபி /தேநீர் என்று பல இருந்தாலும் கஞ்சி குடித்த நிறைவு வராது
ஆனால் அதற்காக அது பற்றி இவ்வளவு கவலை, இத்தனை பதிவுகள் தேவையா?
எனக்குத் தெரிந்து தமிழ்நாடு (பாண்டி) தவிர மற்ற எங்கும்( அண்டை மாநிலங்களான கேரளா , கர்நாடகா உட்பட) கஞ்சி காய்ச்சும் வழக்கம் கிடையாது .
குட்டாவில் நான் பணியாற்றிய ஒன்னரை ஆண்டுகளில் இரண்டு முறை நோன்பு வந்தது . அங்கிருக்கும் மலையாளிகள் பள்ளியில் கஞ்சி பற்றி பலமுறை பலரிடம் பேசிப்பார்த்தேன் . ஆனால் ஒன்றும் நடக்கவில்லை
அதற்காக நோன்பு வைக்காமல் இல்லை
பல நாடுகளில் பள்ளிப் பருவ குழந்தை முதல் பழுத்த முதியவர் வரை அதிகாலை சகருக்கும் அந்தியில் நோன்பு திறக்கவும் எந்த உணவும் கிடைக்காமல் பல நாட்கள் நோன்பு நோற்றது பற்றி நெஞ்சம் பதறப் படித்தோம்
அடுத்து ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகையான தராவீஹ் தொழுகை
சுவதியில் இந்த ஆண்டு இந்தத் தொழுகை கிடையாது என்று இப்போதைக்கு அறிவ்த்ததாய் செய்திகள் வருகின்றன
எல்லாமே அவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது. அவன் நாடினால் நிலைமை   ரமலான் மாதத்திற்குள் முற்றிலுமாக மாறி நோன்புக்கஞ்சி , தராவிஹ் தொழுகை , புனித லைலத்துல் கதிர் இரவு  பெருநாள் கூட்டுத் தொழுகை எல்லாம் கிடைக்கலாம்
அதுவரை பொறுமை காத்து. முதலில் கட்டாயக்கடமையான  நோன்பை நல்ல விதமாகக நிறைவேற்றி வைக்கவும் , அடுத்த கட்டயக்கடமையான சக்காத் என்னும் தருமம் முழுமையாக நிறைவேறவும் இறைவனிடம் முழு மனதோடு இறைஞ்சுவோம்
கண் துயிலாமல் , உறக்கமில்லாமல்  வானையும் பூமியையும் அவற்றின் இடையில் உள்ளவற்றையும்  காத்து நிற்கும் ஏக இறைவன் நம்மைக் கைவிடமாட்டன்
இன்னும்சில சுமைகள் அடுத்த பதிவில் இறைவன் நாடினால்

sherfuddinp.blogspot.com

bw1f14042020tue







Friday, 10 April 2020

SPARROW சிட்டுக்குருவி




சிட்டுக்குருவி 

SPARROW
New comer to our area 
Thanks to curfew






10042020 fri

Saturday, 4 April 2020

ENGLISH






FLOUR, TERN , THIRSTY
These words have an unusual common property
What is that ?
Ans
Each  of  the three words becomes a number when one letter is removed
F(L)OUR   TE(R)N      THIR(S)TY
Thanks to those who responded
Congrats  to
Ms. SHAHE ANEES
Who gave the correct answer
(Tern is a  small seabird , with long pointed wings and a forked tail.)

04,05 04 2020 sat sun