Saturday, 30 May 2020

நபி யஹ்யா



நபி யஹ்யாவின் வரலாற்றில் சில செய்திகளை சுருக்கமாகப் பார்ப்போம்

திருமறை குர்ஆனில் வரும் செய்திகள்

“யஹ்யா என்ற பேரை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை “ என்று ஏக இறைவன் கூறுகிறான் (19:7)

மேலும்
“குழந்தையாய் இருக்கையிலே அவருக்கு நாம் ஞானத்தை வழங்கினோம் “(19:12)
அவர் பிறந்த நாளிலும் அவர் இறக்கும் நாளிலும் அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி எனும் சலாம் நிலையத்திருக்கும் “(19:15)
என்று அவரை மேன்மைப்படுத்துகிறான்

அடுத்து இஞ்சில் எனப்படும் பைபிளில் வரும் சில் செய்திகள்

பைபிளில் இவர் ஜான் என அறியப்படுகிறார்..

John the Baptist

காட்டுதேனும் வெட்டுக்கிளியும் மட்டுமே அவர் உணவாக இருந்தது (மத் 3:4)
அவருடைய அறவுரைகள்
“உங்களிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுங்கள் . அதே போல்தான் உணவும் (லுக் 3:11)

நாட்டின் மன்னராக இருந்த ஹெராட் அண்டிபாஸ் தன அண்ணன் துணைவி ஹெரோடியாஸ் என்பவருடன் முறை தவறிய உறவில் இருந்தான் .இதை  ஜான் கண்டிக்க அவரை சிறையில அடைத்தான் மன்னன்

இருந்தாலும் ஜானின் ஒழுக்கம், பக்தி , அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு எல்லாவறையும் கருதி ஜான் மேல் மிகவும் மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தான் மன்னன்

ஆனால் மன்னனின் அண்ணன் துணைவி ஜான் மக்களுக்குச் சொல்லும் அறவுரைகள் எல்லாம் தம்மைப்பற்றி ஒரு இழிவான கருத்தை உண்டாக்கவே என்று நினைத்து அவர் மேல் ஒரு வன்மத்தை வளர்த்து வந்தார்.’ அவரைக் கொல்லும் வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தார்
அவர் மகள் மன்னனின் பிறந்த நாள் விழாவில எல்லோர் மனமும் மகிழும்படி நடனம் ஆட உனக்கு என்ன பரிசு வேண்டும் தருகிறேன் என்று மன்னன் சொல்கிறான்
தாயின் சொல்படி எனக்கு ஒரு தட்டில் ஜானின் தலை வேண்டும் என்று கேட்கிறார் மகள்
வேறு வழியில்லாமல் மன்னன் சிறையில் இருந்த ஜானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து தன் காதலி மகளுக்கு பரிசாக அளிக்கிறான் (மத14;3-12  மார்க் 6:17-29 லுக் 3:19-20)
(source: Towards understanding Quran  explanatory note to verse 19:15)

நேற்றைய வினாவுக்கு
John the Baptist
என்று சரியான விடை சொன்ன
மரு. சந்திர சேகர்
திரு சுதாகர்
 யஹ்யா நபி,  John the Baptist
என்று விடை சொன்ன
பர்வேஸ்
மூவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம் 
   
30052020sat

sherfuddinp.blogspot.com

Friday, 29 May 2020

வெட்டுக்கிளி









தேனையும் வெட்டுக்கிளியையும் மட்டும்

 உணவாக உட்கொண்டு  வாழ்ந்த

 நபியின் பெயர் என்ன ?

இறைவன் நாடினால்  நாளை விடை


29052020fri

sherfuddinp.blogspot.com




Sunday, 24 May 2020

அச்சுக்கட்டு








எங்கள் ஊரின் புற(ஊர்)நகர் பகுதி என்று அச்சுக்கட்டைச் சொல்லலாம்
அங்குள்ள திடலில்தான் பெருநாள் கூட்டுத் தொழுகை நடக்கும்
இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்துதான் எல்லோரும் போவோம் .பள்ளிப்பருவத்தில் அத்தா , பீயன்னா முனா மாமா ,பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து போவோம்

வழியில் அச்சுக்கட்டு(காதர்) மாமா வீடு இருக்கும் அங்கு வயிற்றுக்கும்  மனதுக்கும் இதமான மண் பானைத் தண்ணீர் கொடுப்பார்கள் . மாமா மகன் ஜின்னா கண்களிலேயே அன்பைக்காட்டுவான் . அங்குதான் எல்லோரும்  மருதாணி  வைத்துக் கொள்வார்
கள்.தோட்டத்தில் ஒரு பெரிய அம்மியில் மருதாணி அரைப்பார்கள் 
.
சிறு பிள்ளையாக இருந்த தங்கை சுராஜ் வேண்டாம் வேண்டம் என்று சொல்லியும் மருதாணி வைத்து விட, அச்சத்தில் அலறி உடனே கையை கழுவி விட்டது . இருந்தாலும் மருதாணி கப்பென்று அழகாக பிடித்துக்கொண்டது

பெருமானார் நபி அவர்கள மருதாணி இட்டுக்கொண்டதற்கு சான்று எதுவும் இல்லை என்கிறார்கள் . ஆனால் ஆண்களிடமும் மருதாணி ஒட்டிக்கொண்டது  
    
அச்சுக்கட்டு மாமா மக்கள் சகோதரிகள் நூர், மாமுதாவை எப்போதாவது குடும்ப விழாக்களில் பார்ப்பது உண்டு

தொழுகை நடக்கும் இடத்தில் தென்னை ஓலையில் கொட்டகை போட்டிருக்கும் .சற்று தாமதமாக வருபவர்கள் அந்த ஓலையைப் பிரித்து எடுத்து தரை விரிப்பாக பயன்படுத்துவார்கள்

சுகாதாரத்துக்காக  தூவியிருக்கும் வெளுக்கும் தூள் (ப்ளீச்சிங் பவுடர்  நெடி மூக்கைத் துளைக்கும்  
வண்ண வண்ண குளிர் பானங்கள் , பம்பாய் மிட்டாய் எனப்படும் சவ்வு மிட்டாய்  , பலூன் என நிறைய விற்கும்  

.அதற்கு மேலாக கையேந்துபவர்கள் கூட்டம் துண்டை விரித்துக் காத்திருக்கும் .துண்டு வெறுமனே இருக்கக் கூடாதாம் அவர்களே சில காசுகளை அதில் போட்டு வைப்பார்கள் 

பெண்களுக்குத் தொழுகை கிடையாது . சிறுமிகள் புத்தாடையணிந்து அலங்காரம் செய்து கொண்டு வருவது பார்க்க அழகாக இருக்கும்

பக்கிர்சாக்கள் கொட்டு என்னும் இசைக்கருவியை வைத்து ஒலி எழுப்பி உரத்த குரலில் பாடுவார்கள் (பாவ மன்னிப்பு படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம் பாட்டில் சிவாஜி கையில் வைத்திருப்பாரே அது போன்ற இசைக்கருவி). முன்பெல்லாம் நோன்பு மாதத்தில் நிறைய பக்கிர்சாக்களைப் பார்ககலாம். அதி காலையில் வீடு வீடாக வந்து தங்கள் பாட்டாலும் கொட்டின் ஒலியாலும் எழுப்பி விடுவார்கள் 
.
நீண்ட அங்கி அணிந்து பெரிய தலைப்பாகையுடன் காணப்படும் பக்கிர்சாக்களைப் பார்த்தால் ஒரு இனம்புரியாத அச்சம் கலந்த உணர்வு  உண்டாகும்
இப்போதெல்லாம் அவர்களைப் பார்க்க முடிவதில்லை  
  
கரீம் அசரத் தொழுகை வைத்து உரையாற்றுவார்.
இட்லி சட்னி சாம்பார் வடைகேசரி  என பலசிற்றுண்டிகளை காலையில் சாப்பிட்டது அப்படியே கண்ணை அசத்தும் . அசரத்தும் அதைப் புரித்து கொண்டு உரையை சுருக்கிக் கொள்வார் (அவருக்கும்தானே அசத்தும்)

 எத்தனையோ நல்லசெய்திகள் அறவுரைகள் எல்லாம் சொல்லியிருக்கிறார் .பொதுவாக மென்மையாகப் பேசும் அவர் சற்று சினத்த குரலில்  ஒரு முறை செல்வந்தர்கள் வீட்டு விருந்துகளில் உள்ள சில குறைகள் பற்றிப் பேசினார் கண்டித்தார்\ .இதெல்லாம் இப்படி  ஒரு கூட்டத்தில்  பேசவேண்டுமா  என்ற எண்ணம் தோன்றியது எனக்கு

தொழுதுவிட்டு திரும்பும்போது கை ஏந்தும் மக்களைத் தாண்டி வருவது சற்று சிரமமாக இருக்கும்.
சின்ன வயதில் எனக்கு கை ஏந்துபவர்களைப்பார்த்தால் எரிச்சல், சினம் வரும்
காலம் கற்றுக்கொடுத்த பாடங்களில் ஓன்று
 கை ஏந்தல்    நம் நாட்டில பலருக்கு  ஒரு பிரிக்க முடியாத ஒழிக்க முடியாத  வாழ்வு முறை :
வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்  என்பதெல்லாம் காவியக் கற்பனைக் காட்சிகள்தான்
 என்பது

அச்சுக்கட்டு  செல்லும் வழியில் ஒரு வீட்டில் மாதுளம் மரம் அழகாகப் பூத்து நிற்கும் ரசீத் அலி— அத்தா மாமுது அம்பலம் என்ற முகமது அம்பலம் என்ற  வெட்டு நோட்டு அம்பலம் uncle  வீடு. ரசீத் அலி என்னை ஒத்த வயது என நினைக்கிறேன் .நீண்ட நாட்களாய் தொடர்பில் இல்லை (uncle- a convenient  word பெரியத்தாவா சச்சாவா மாமாவா என்ற குழப்பம் வரும்போது ) மாமுது uncle  மகள் சகோதரி ஜலீலா முகநூல் நட்பில் இருக்கிறார்

தொழுதுவிட்டு வீட்டுக்கு வந்தால் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுப்பார்கள் . கண் பட்டு விடுமாம் . எல்லோருக்குமே தன் குஞ்சு பொன் குஞ்சுதானே .
ஆரத்தி தட்டில் காசு போட வேண்டும்

.வெய்யிலுக்கு இதமாக  சர்பத் ,நொங்கு என்று குளிர்ச்சியாக ஏதாவது இருக்கும் .மதிய உணவு நெய்ச்சோறோ பிரியாணியோ சமையல் ஆகும்வரை உறவினர்களுடன் உரையாடல் சிறிய தூக்கம்  என்று பொழுது போய்விடும்  மாலை  நெருங்கிய சுற்றங்கள் சந்திப்பு . பிறகு நல்ல படம் இருந்தால் போவோம் முதலில் சாம்பியன் என்ற பெயரில் திரைக் கொட்டகை . பிறகு தங்கமணி , மஞ்சுளா ஏன இரண்டு திரையரங்குகள்

கரீம் அசரத்துக்குப்பின் பாருக் ஆலிம்சா . நல்ல குரல் வளம் . மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அவரின் கம்பீரமான குரல் பெரிதும் உதவியது

பாரூக் ஆலிம்சா, கரீம் அசரத் மகன் யஹ்யா அசரத் இருவரும் நாங்கள் புனித ஹஜ் பயணம் போகும்போது வழிகாட்டியாக வந்தார்கள .கரீம் அசரத் பரம்பரையில் ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டுமே பிறக்கும் என்று சொல்வார்கள்

ஊரில் பெருநாள் தொழுகை தொழுது வெகு நாளாகி விட்டது
இப்போது திடலில் தொழுகை நடக்கிறதா என்பது தெரியவில்லை

காரைக்குடியில் அத்தா நகராட்சி ஆணையராகப்பணியாற்றியபோது பெருநாள் தொழுகை ஒரு திடலில் தொழுக ஏற்பாடு செய்தது . இப்போது கம்பன் மணி மண்டபம் இருக்கும் இடம் என நினைவு . வெறும் சரளைக் கல்லாக இருந்த இடத்தை  சுத்தம் செய்து கொட்டகை போட்டு தண்ணீர் வசதியும் செய்து கொடுத்தது
Power vests with those who exercise it
அதிகாரத்தைப் பயன்படுத்துபவரிடம்தான் அதிகாரம் இருக்கிறது

வணிகர்கள் ஒத்துழைக்கவில்லை அதனால்தான் காய்கனி சந்தையை மூடவில்லை என்று மூக்கால் அழுகிறது தமிழ்நாட்டின் உச்ச அதிகார மையம்       

வேலூரில் அத்தா சில மாதங்களே பணியில் இருந்தது , பெருநாள் தொழுகைக்கு ஒரு திடலுக்குப் போனோம் இடம் தூய்மையாக இல்லை . காலணிகளை முன்னால் வைத்துக்கொண்டு தொழுதார்கள்

வாணியம்பாடியில் பல இடங்களில் தொழுகை நடக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் தொழுகை நேரத்தில் பத்து நிமிட இடைவெளி இருக்கும் ,ஒருமுறை நீண்ட சுமை தொடரி ஊரை இரண்டாகப் பிரித்துத் தடுப்பது போல் மணிக்கணக்கில் நின்றது இது இயல்பானது அல்ல என்று பர்வலாபப் பேசப்பட்டது

வாணியம்படியில் ஒரு குன்றின் உச்சியில் உள்ள திடலில் ஒரு முறை தொழுகப் போனேன். பெரும்பாலோனோர் காலணிகளைக் கழற்றி தங்கள் முன் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் . .தொழுகை நடத்தும் இமாமும் கையில் காலணியுடன் வந்தது பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தது. வெளியே கழற்றிப்போட்டு விட்டுத்தான் நான் போனேன் ஒன்றும் ஆகவில்லை

நெல்லையில் பெரிய பெரிய பள்ளிவாசல்கள் இருப்பதால் அங்கேயே தொழுகை நடக்கும் .ஒரு முறை நெல்லை சந்திப்பு பள்ளிக்கு தொழுகப் போயிருந்தோம் . நீண்ட உரைக்குப் பிறகு இன்னும் அரைமணிநேரமாவது இருந்து உரையைக் கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்று அறிவிப்பு வர அடுத்த நொடியே கல்லெறி பட்ட பறவைக் கூட்டம் போல் அனைவரும் பறந்து போய்விட்டார்கள்

ஜலந்தரில் ஒரேயொரு பழைய  பெரிய பள்ளிவாசல் . அந்த ஊரில்  பித்ரா எனும் தருமப் பணத்தைக்  கொடுக்க ஆள் கிடைக்காமல் தவித்தது ஒரு புதிய அனுபவம் .ரிக்சா ஓட்டுனர்கள் பெரும்பாலும் உத்திரப்பிரதேசத்தைக் சேர்ந்த இசுலாமியர்கள் . அவர்கள் நாங்கள் உழைத்துச் சம்பாதிக்கிறோம் .எங்களுக்கு யாரிடமும் தருமம் வாங்கும் வழக்கம் கிடையாது என்று மறுத்துவிட்டார்கள்.  கேட்கப் பெருமையாக இருந்தது .பின்பு   அவர்கள் சொன்ன ஒரு முதியவர்  குடும்பத்திடம் கொடுத்து வந்தேன்

பல ஆண்டுகளுக்கு முன்புசென்னை கடற்கரையில் தொழுகை நடக்குமாம் ,ஒரே இடத்தில் ஊரே திரண்டு வந்து தொழுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்
நான் சென்னையில் பணியாற்றியபோது வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு பள்ளிக்குத் தொழுகப்போனேன் . உரையில் பல மாறுபட்ட கருத்துக்கள் . இன்று எல்லோரும் அழ வேண்டும் என்றார் இமாம் . எனக்கு அழுகை வரவில்லை

இப்போது கடலூரில் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள சாவடி பள்ளி சிறிய பள்ளிதான் .முத்தவல்லியின் பெரு முயற்சிக்கு இறைவன் செவி சாய்த்து ஒரு விசாலமான  ஈத்கா திடல் அமைந்துள்ளது பள்ளிக்கு ஒரு பெருமை .

இந்த ஆண்டு பெருநாள் கூட்டுத் தொழுகை இல்லை . இதுவும் இறைவன் நாட்டம்தான் .
எங்கும் நிறைந்த இறைவ.னை நாம் இருக்குமிடத்தில் தொழுது கொள்ள வேண்டியதுதான்

சில ஆண்டுகள் முன்பு மதினா நகரில் பெருமழை ஊரெல்லாம் வெள்ளக்காடு .அப்போது பாங்கு எனும் தொழுகை அழைப்பில் உங்கள் இருப்பிடத்திலேயே தொழுது கொள்ளுங்கள் என்று சொன்னது ஒரு அரிய நிகழ்வாக ஊடகங்களில் வலம் வந்தது

இப்போது நம் ஊரில் அதே போல் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் ஒலிக்கிறது
இந்த பாங்கு ஒலியையும் தடை செய்ய முயற்சிகள் நடப்பதாய் அவ்வப்போது செய்திகள் வருகின்றன
எது வரை போகுமோ தெரியவில்லை

நூற்றுக்கணக்கான கோடிகளில் இசுலாமியர்கள் கொடுக்கும் தருமங்களை முறைப்படுத்தி  வணிக நோக்கில் இல்லாமல் கல்விக்கூடம் , மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நான் பல முறை எழுதியிருக்கிறேன்
அந்தக் கருத்து இப்போது பரவலாக ஊடகங்களில் பலராலும் பேசப்படுகிறது இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடி அடக்கும்

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து ஏக இறைவனை வணங்கி வரும்  அனைவருக்கும் புனித ஈகைத் திருநாள் வாழ்த்துகள

எல்லோர் வாழ்விலும் நலம், வளம், மகிழ்ச்சி , நிம்மதி எல்லாம் நிறைந்து நிற்க   இறைவன் அருள் புரிவானாக

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25052020mon

sherfuddinp.blogspot.com


Friday, 22 May 2020

இருநபிமார்கள்



 நாற்பது ஆன்டுகாலம் நுஹ் நபியிடம் இப்ராகிம் நபி கல்வி கற்றார்

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஏன் முனைவர் படிப்பு கூட இவ்வளவு காலம் பிடிக்காது

அப்படி என்னதான் கற்றார் ?

நுஹ் நபியின் கலவி ,அறிவு ஞானம் அந்த அளவுக்குப் பரந்து விரிந்து ஆழமாக இருந்தது

முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் அலை அவர்களின் பல நூற்றாண்டுத் தோழர் மெதுசெலாஹ் என்பரின் பல நூற்றாண்டுத் தோழர் நபி நுஹ்

மேலும் இறைவனின் சாபமாக வந்த அழிவு மழை வெள்ளத்திலிருந்து தாம் உருவாக்கிய Noah’s Ark எனும் கப்பல மூலம் மனித இனத்தைக் காப்பாற்றி தானும் தப்பித்து வந்த சிறப்பு நுஹ் நபிக்கு உண்டு

இப்படி மனித இனம் தோன்றியதில் இருந்து உள்ள தாம் நேரடியாகக் கற்ற  கல்வி ஞானத்தை முழுமையாக இப்ராகிம் நபிக்கு கற்றுக்கொடுக்க நாற்பது ஆண்டுகள் ஆனதில்  வியப்பொன்றுமில்லை

இறைவன் நுஹ் நபிக்கு மிக நீண்ட வாழ்நாளைக் கொடுத்ததே இப்ராகிம் நபிக்கு ஞானத்தை வழங்கத்தானோ என்று தோன்றுகிறது

இப்ராகிம் நபி பற்றி மிக விரிவாக பல பதிவுகள் 
வெளியிட்டிருக்கிறேன்

மிகச் சுருக்கமாகச் சொன்னால்

ஏக இறைவனே நட்பு கொள்ள விரும்பிய மா மனிதர்

இதை விட ஒரு சிறப்பு என்ன இருக்க முடியும் ?

புனித ரமலான் மாதப் பதிவுகளை இத்துடன் நிறைவு செய்கிறேன்

இறைவன் நாடினால் புனித ஈகைத் திருநாளில்
அச்சுக்கட்டில் சிந்திப்போம்

23052020sat

sherfuddinp.bogspot.com



தலைமுறை இடைவெளி




ஐந்தாம் தலைமுறையைப் பார்க்கும் அளவுக்கு ஒருவருக்கு வாழ்நாள் நீடித்தால் அது மிக அரிய நிகழ்வாகப் போற்றப்படுகின்றது

பத்து தலைமுறை இடைவெளியில் இருவர் சந்திப்பது முடியுமா என்ற எண்ணம் வரும்

இறைவன் நாடினால் எதுவும் நடக்கும் 
.
முதிய வயதில் நபி இப்ராஹிமுக்கு மகனை அருளிய இறைவன் அருளால்
அந்த நபி தனக்கு பத்து தலைமுறை முந்திய நுஹ் நபி அவர்களை சந்திக்கிறார்
வெறும் சந்திப்பல்ல . மூத்தவர் இளையவருக்கு நாற்பது ஆண்டுகள்  ஆசிரியராக இருந்து ஞானத்தைக் கற்பிக்கிறார் . மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்து ஏக இறைவன் பற்றிய அனைத்து செய்திகளையும் கற்பிக்கிறார் 

நுஹ் நபி அவர்களுக்கு இறைவன் வழங்கிய வாழ்நாள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள்

 மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்;

ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; -------

(1000-50 =950)                           .( குரான் 29:14)

இப்ராகிம் நபி பிறக்கும்போது நுஹ் நபிக்கு வயது 892. நுஹ் நபி காலமாகும்போது இப்ராகிம் நபிக்கு வயது 58. நுஹ் நபியிடமும் அவர் மகன் செம்மிடமும் நாற்பது ஆண்டுகாலம் இப்ராகிம் நபி கல்வி கற்றுக்கொண்டார் 

நுஹ் நபியின் மகன் செம் வழியில் வந்தவர்கள் செமடிக் பரம்பரை என்று அழைக்கப்படுகிறார்கள் அந்தப் பரம்பரையில் பத்து தலைமுறை இடைவெளியில் வந்தவர் இப்ராகிம் நபி
இப்ராகிம் நபி பற்றி ஏற்கனவே பல நீண்ட பதிவுகள் வெளியிட்டிருக்கிறேன்

மிகச் சுருக்கமாக இரு நபி மார்கள் பற்றியும் அடுத்த பதிவில் பாப்போம்

இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

22052020fri

sherfuddinp.blogspot.com

.




Wednesday, 20 May 2020

தலைமுறைகள்




பத்துத் தலைமுறை இடைவெளியில் சந்தித்துக்கொண்ட இரு பெரும் நபிகள் யார் யார் ?

இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

21052020thu

sherfuddinp.blogspot.com

யூசுப்



யூசுப் நபியின் வரலாறு மிக மிகச் சுருக்கமாக

யாகூப் நபியின் இரண்டாவது மனைவி யூசுபை ஈன்றேடுத்துக் கொடுத்து சில நாளில் மறைந்து விடுகிறார் .

தாயில்லாக்குழந்தை , மிக அழகு, அறிவு, நபி ஆவதற்கான அறிகுறிகள் இவையெல்லாம் யாகூப் நபி குழந்தை யூசுப் மேல் அளவற்ற பாசம்,அன்பைபொழிய காரணமாகின்றன

இதனால் அழுக்காறு கொண்ட மாற்றாந்தாய் மக்கள் வேட்டைக்கு போகும்போது சிறுவன் யூசுபை தங்களுடன் அழைத்துச்சென்று ஒரு கிணற்றில் தள்ளி விட்டு சிறுவனை ஓநாய் கடித்துத் தின்றுவிட்டது என்று தந்தையிடம் பொய் சொல்கிறார்கள்

சிறுவன் யூசுபை கிணற்றில் இருந்து மீட்டு எடுத்தவர்கள் அவர் பெருமையை உணர்ந்து தங்கள் சமுதாயத் தலைவரான அமைச்சரிடம் சேர்த்துவிடுகிறார்கள்

சிறுவனாக வந்து இளைஞனாக வளர்ந்து விட்ட, யூசுபின் அழகில் மயங்கிய  அமைச்சரின் துணைவி முறை தவறி நடக்க முயற்சிக்கையில் அமைச்சர் வருவதைப் பார்த்து பழியை யூசுப் மேல் சுமத்துகிறார் . யூசுப் குற்றமற்றவர் என்று அமைச்சருக்குத் தெளிவாகிறது இருந்தாலும் இருவரின் பாதுகாப்புக் கருதி யூசுபை சிறையில் அடைக்கிறார்.,

யூசுப் நபிக்குக் கனவுகளுக்கு சரியான பலன் சொல்லும் சக்தியை இறைவன் அளித்திருந்தான் . நாட்டு மன்னர் கண்ட கனவுக்கு யூசுப் நபி சரியான பலனை சொல்ல , அவரின் அறிவாற்றலை அறிந்து கொண்டமன்னன்  அவருக்கு உணவு தானியங்களைக் கையாளும் மிக பெரிய ஒரு பதவியில் அமர்த்துகிறான்

நாட்டில் ஒரு பெரிய  பஞ்சம் ஏற்பட அரசிடமிருந்து உணவுப்பொருட்கள் வாங்க வந்த யூசுப் நபியின் மாற்றாந்தாய் மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறார்கள்

இந்த சூராவில் இறைவன் இரண்டு அறிவுரைகளை அளிக்கிறான்

முதலாவது   ,  

யூசுப் நபி அவர்களிடம் அவரின் உடன் பிறப்புகள் நடந்து கொண்டதைப்போல இன்று நீங்கள் உங்கள் உறவுகளுடன் நடந்து கொள்கிறீர்கள்
ஆனால அந்த உடன்பிறப்புகள் தங்களுக்கு பகையாக நினைத்து கிணற்றில் வீசி எறிந்த அதே யூசுப் நபி அவர்களின் காலடியில் வந்து வீழ்ந்தார்கள்
அதே போல் நீங்களும் இறைவனின் திட்டத்தின் முன் வெற்றி பெற முடியாது
எவரை நீங்கள் அழிக்கத் துடிக்கின்றிர்களோ அதே உறவினருடன் நீங்கள் ஒரு நாள் கருணைப்பிச்சை கேட்கநேரிடும்

அடுத்தது

இறைவன் எவரை உயர்த்த நாடுகிறானோ அவரை உலகம் முழுதும் ஓன்று சேர்ந்து எதிர்த்தாலும் வீழ்த்த முடியாது .என்ற கருத்து

இறைவன் நாடினால் மீண்டும்  நாளை சிந்திப்போம் 


20052020wed

sherfuddinp.blogspt.com