Monday, 29 June 2020

பணீ இஸ்ராயீல 2





யா பணீ இஸ்ராயீல
இஸ்ராயீலின் சந்ததியினரே என்ற பொருள்படும் இந்தச் சொற்றொடரை புனித குர்ஆனில் பல இடங்களில் பார்க்கலாம்
எத்தனை முறை இது குர்ஆனில் வருகிறது ?
இஸ்ராயீல என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?
இருபது முறை குர்ஆனில் பணீ இஸ்ராயீல என்று வருகிறது
இறைவனின் அடிமை என்று பொருள் படும்  இஸ்ராயீல என்ற பட்டம் யாகூப் நபி (ஜாகப் ) அவர்களுக்கு இறைவனே சூட்டியதாகும் .அவரின் சந்ததிகள் பணீ இஸ்ராயீல என்று அழைக்கபடுகிறார்கள்.
நபி இப்ராஹீமின் மகன் நபி இஷ்ஹாக்கின் மகன் நபி யாகூப் .நபி யாகூபின் மகன் நபி யூசுப் – உலகின் ஒரே நான்காம் தலைமுறை நபி
சரியான விடை அனுப்பிய அண்ணன் சிக்கந்தர் அவர்களுக்கு பாராட்டுகள, வாழ்த்துகள், நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் இது போன்ற பதிவில்   சிந்திப்போம் ..
(Source –Towards understanding Quran (2:40 :EN 56)

29062020mon
sherfuddinp.blogspot.com

Sunday, 28 June 2020

பணீ இஸ்ராயீல





யா பணீ இஸ்ராயீல
இஸ்ராயீலின் சந்ததியினரே என்ற பொருள்படும் இந்தச் சொற்றொடரை புனித குர்ஆனில் பல இடங்களில் பார்க்கலாம்
எத்தனை முறை இது குர்ஆனில் வருகிறது ?
இஸ்ராயீல என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?

இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்  28062020 sun


Friday, 26 June 2020

சுவனப் பெண்கள்





புனித திருமறைக் குரானை தமிழ் ஆங்கிலத்தில் படிப்பவர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டாகும்
சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கும் ?
எனக்கும் இந்த எண்ணம் வந்ததுண்டு . மிகச் சிக்கலாகத் தோன்றும் இந்த கேள்விக்கு விடை என்ன ? எல்லா கேள்விகளுக்கும் எல்லா ஐயங்களுக்கும் விடை தருவது குரான் மட்டுமே
எனக்குக் கிடைத்த ஓரளவு தெளிவான விடையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
முதலில் சில செய்திகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
குரான் முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு . இதை முழுதுமாய் புரிந்துகொள்வது என்பது முடியாத ஓன்று
அதே போல் குரானை முழுமையான பொருள் விளங்குமாறு  வேறு மொழியில் மாற்றம் செய்வதும் மிகச் சிரமம்
ஆங்கிலேயாராகப் பிறந்து , பின்னர் இசுலாத்தில் இணைந்து அரபு மொழியை திறம்பபடக்கற்றுத் தேர்ந்து குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் முகமது மர்மடுக் பிக்தால் .
இவர் தன் முன்னுரையில் “குரானை மொழி பெயர்க்க முடியாது “ என்று சொல்கிறார் .தன் மொழி பெயர்ப்புக்கு The Meanings of Glorious Quranஎன்றுதான்  பெயர் வைத்துள்ளார்
மேலும் இறைவனே தான் அனுப்பிய மறை நூலில் பல வசனங்கள் மிகத்தெளிவாக இருப்பதாகவும் சில வசனங்களின் பொருளை படைத்த தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும்  சொல்கிறான் (குரான் 3:7)
இதுபோல் பொருள் விளங்காத இறை மொழிகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன . மிக எளிதான எடுத்துகாட்டு “ ஏழு வானங்கள் “ என்பதற்கு இதுவரை சரியான பொருள் தெரியவில்லை
இன்னொரு செய்தி அரபு மொழி அமைப்பு .அரபு மொழியில் எல்லாப்பொருட்களுக்கும் ஆண் பால் பெண் பால் என இரு பால்கள் மட்டுமே  உண்டு    
சில இடங்களில் ஆண் பெண்ணைத் தனியாகக்குறிப்பிடும் குரான் இன்னும்சில இடங்களில் இருவரையும் பொதுவாக (மற்ற மொழிகள் போல்) ஆண்பாலில் குறிப்பிடுவதும் உண்டு  ,மேலும் இரு பாலையும் குறிப்பிடும் பொதுச் சொற்களும் அரபு மொழியில் உண்டு
சற்று நீளமான இந்த   சிறிய முன்னுரை அவசியமான ஒன்றாகிறது
இனி கேள்விக்குப் போவோம்
சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்?
பெண்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் எனபதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை
பெண்களுக்கு சொர்க்கம் உண்டுஎன்று உறுதி செய்யும் மறை மொழிகள் பல உண்டு (குரான் 3:195  4:124  33:35)
தொடரியில், விமானத்தில் உயர கட்டண வகுப்பில் நுழைந்து விட்டால் அந்த வகுப்புக்கு உரிய வசதிகள் அனைத்தும் ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைப்பது போல் சொர்க்கத்தில் புகுந்த அனைவருக்கும்
குளிர்ந்த நீரோடைகள் உள்ள சோலைகள், ,தங்க இழைகள் கொண்ட உயர்ந்த படுக்கைகள்.மிகச்சுவையான பழங்கள், உணவு வகைகள், பானங்கள் ,வீண் பேச்சுகள் இல்லாத நல்ல சூழ்நிலை எல்லாம் கிடைக்கும் என்பதில் குர்ஆனில் எந்த இடத்திலும் மாறுபட்ட கருத்து இல்லை
கருத்து மாறுபாடு வருவது அழகிய பெண்கள் பற்றித்தான்
முத்துக்கள் போன்ற பெண்கள், அழகும் இளமையும் மாறாத பெண்கள், ஒத்த வயதுடைய பெண்கள் என பலவிதமாக வர்ணிக்கப்படும்போது இவர்கள் எல்லாம் ஆண்களுக்கே உரியவை என்ற எண்ணம் ஏற்படுகிறது
அப்படி அல்ல என்கிறது மறை மொழி
மறை மொழியின் ஒரு புகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு
---------இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு,-------------(குரான் 2:25)
துணைவியர் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான அரபு மூலத்தில் உள்ள அஸ்வாஜி  اَزۡوَاجٌ
என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் இது ஆண், பெண் , கணவன் மனைவி இருவரையும் குறிக்கும் பொதுச் சொல் என்கிறார்கள் ( வாழ்க்கைத் துணை, spouse ) என்பது போல்
மேலும் , இந்த உலக வாழ்வில் ஒழுக்கமாக வாழ்ந்த கணவன் மனைவிகள் மறு உலக சொர்க்க வாழ்விலும் இணைந்து இருப்பார்கள் என்று விளக்கம் சொல்கிறார்கள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவன் சுவனப்பதவி அளிப்பதிலும் அங்குள்ள வசதி வாய்ப்புகளை அளிப்பதிலும் ஆண் பெண் என்ற வேற்றுமை பாராட்டாமல் வாரி வாரி வழங்குவான்
புனித ஹஜ் பயணம் போகும் வரை அதன் மகிமை மகத்துவம் புரியாது . புனித காபாவைப் பார்த்ததும் உள்ளம் உருகி கண்ணீர்  மழையாகப் பொழியும் . இதற்கு காரணமும் விளங்காது
.அப்படியிருக்கையில் சுவனத்தின் மகத்துவம் அங்கு போகாமல் புரிய வாய்ப்பில்லை.கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
முழு நம்பிக்கை கொண்டு சுகமான மறுமைக்காக இம்மையில் உழைப்போம்

(சகோ அயுப் கானுக்கு
தொலைபேசியில் நீங்கள் கேட்ட வினாவுக்கு எனக்கு தெரிந்த,, நான் விளங்கிக்கொண்ட தெளிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
புரிந்ததா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் . )

21062020 tue

ENGLISH Threat Actor




16

Who is a
THREAT ACTOR?
Threat Actor:  , is an entity that is partially or wholly responsible for a security incident that impacts – or has the potential to impact – an organization's security
 Threat actor with technical skills to breach corporate security is called a hacker,
However the term threat actor in a broad sense include hacker also
Thanks ARV for cprrect basic answer


25, 26 06 2020 Thu Fri

Monday, 15 June 2020

கம்பன் கண்ட அனுமன் அத்தாவின் எழுத்துக்கள்



கம்பன் கண்ட அனுமன் (முதல் பகுதி)



இக்கட்டுரை எழுதும் எனக்கு அனுமன் மீதோ அது போன்ற தெய்வங்கள் மீதோ பக்தி இல்லை .எனினும் கம்பன் தனது சித்திரத்தின் விசித்திரத்தால் எப்படி அவற்றின் மீது ஈடுபடச் செய்து விடுகிறான் என்பதைக் காட்டவே இக்கடுரையை எழுதத் துணிந்தேன்

“.பெண்ணாய்ப் பிறந்த என்னையே சீதை இவ்விதம் கவர்ந்து விட்டாளே! ஆடவர்  கதி என்னாவது!” என்று சூர்ப்பனகை முதன்முதல் பார்த்தவுடன் தேவியின் அழகில் ஈடுபட்டுக் கூறுவதுபோல் எம்போன்றோற்கே இத்தகைய ஈடுபாடு என்றால் பக்தியோடு படிப்பவர்களை இந்த நயம் அனலிடை வெண்ணெயைப் போல் உருக்கி விடாதா!

சிற்பிகள் சிலைகளை உருவாக்கி தம் கைத்திறனால் தெய்வக் களையைப் புகுத்தி வணக்கத்துக்குரியவையாக ஆக்கி விடுகிறார்கள் அதுபோல் கவியரசன் கம்பன் இராமாயணம் என்னும் இலக்கியத்தைப் படைத்துத் தமிழ்த்தாய்க்கு அழியாத அழகுச் சிலையை ஆக்கியுள்ளான்
காவியங்களில் இறைவணக்கம் கூறுதல் மரபு . இதில் முழுமுதற்கடவுளை கலைமகளை இன்ன பிற தெய்வங்களை வணங்குதல் வழக்கம் . கம்பன் இவ்வணக்கத்துக்குரிய தெய்வமாக அனுமனை ஆக்கி அஞ்சு பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் மைந்தனை ஆஞ்சனை புதல்வனை வணங்குகிறான் . கதாநாயகனாகிய இராமபிரனுக்கு அடுத்து முதலிடம் அனுமனுக்கே கொடுத்துள்ளான் என்பது இதன் மூலம் தெரிகிறது

அனுமனை இவ்வாறு உயர்த்தியதில் மற்றோர் பெரிய உண்மையும் காண்கிறோம்
நல்லது கெட்டது தெரிந்து அறவழி நின்றால் விலங்குகளும் தேவதைகளே ! என்று வாலியிடம் கூறிய இராமன் கூற்றையும் இது மெய்ப்பிக்கிறது

முதலில் கிட்கிந்தையில்தான் நமக்கும் இராமனுக்கும் அனுமனை அறிமுகப்படுத்துகிறான் கம்பன் . அங்கு எடுதுதுக்காட்டப்படுவது பணிவும் சொல்நயமும் .. முன்பின் அறியாத இராம இலக்குவரை சீதையை இழந்து பரிதவிக்கும் அச்சகோதரரைப்பார்த்து சுக்ரீவன் அஞ்சி ஒதுங்க அனுமன் அவர்கள் முன் சென்று தங்கள் வரவு நல்வரவாகுக என வரவேற்கிறான்
’கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! என்பது கம்பன் சொல் அரசிளங்குமரர்கள் திகைக்கின்றனர். இக்காட்டில் நமக்கு நல்லவரவா! என்று எண்ணுகின்றனர்.

அரக்கியாகிய சூர்ப்பநகையை “தீதில் வரவாக திரு நின் வரவு சேயோய்!” என்று வரவேற்றதும் அதனால் விழைந்த துன்பங்களுக்கு இராமன் மனக்கண் முன் சுழன்றபோலும் .

மறையவன் உருவில் நின்ற அனுமனைப்பார்த்ததும் இக்காடு இவன் இருக்கும் இடமாக இராதென நினைக்கிறான். முதலில் யார் நீ என்று கேட்காமல் “எங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தாய்” என்று கேட்டுவிட்டு பின் “யாரப்பா நீ” என்று கருணை ததும்பும் உளத்தோடு கேட்கிறான். கருனையோனும் எவ்வழி நீங்கியோய் . நீ! யாரென” இராமன் கேட்க (அனுமன்) இயம்பலுற்றான்.
: தன்னை யாரென்று கூறிகொள்ளுமுன் அந்த அனுமனின் சொல்லோவியம் நம் சிந்தையையெல்லாம் அள்ளுகிறது 

இராமபிரானைக்கண்டதுமே அவன்பால் எவ்வளவு ஈடுபட்டுவிட்டான் என்று பாருங்கள். முதல்முதலாக இராமனது கண்களைச்சந்திக்கத் துணிவு கொண்டவள் சீதை

“கண்ணொடு கண்இணை கவ்வின ஒன்றை ஒன்று உண்டன”
இரண்டாவதாக சந்திக்கும் திறன் அனுமனுக்குதான் இருந்திருகிறது. உடலின் அழகை வியந்த அனுமன் உடனே கருனையோனின் கண்களில் தோள்களில் அழகில் ஈடுபடுகிறான். முனிவராகிய விசுவாமித்திரரே ஈடுபட்டுத்தானே
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்”
என்றார். அவ்வாறிருக்க பக்தனாகிய அனுமனைப் பற்றிக் கூறவா  வேண்டும். வாயாரக் கூறுகிறான்! மேகம்போல திரண்ட அழகிய மேனியனே!
“மஞ்செனத்  திரண்ட கோல மேனிய”
என்றான். 
நஞ்சொடு  அமுதம் சேர்த்த நயனங்கள்
 “மகளிர்க்கு எல்லாம்  நஞ்செனத் தகையவாகி”
தாமரை மலர் போல் அழகு கொழிக்கின்றன. ஆனால் தாமரை மலர் பனியைக் கண்டால் தேம்பும். இக்கண்கள் பனிக்கு தேம்பாவை.
“பனிக்குத்தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த  செய்ய கண்ண!” என்று அழைக்கிறான் அனுமன்.

மஞ்செனத் திரண்ட கோல மேனியா மகளிர்க்கு எல்லாம்
நஞ்செனத்தகையவாகி நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்தலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்

மேனியழகிலே ஈடு பட்டுப் பின்னர் கண்களை கல்வி கல்லாத ஞானத்தையும் பெற்று அன்னைக்குக் காதலையும் அவனுக்கு ஞானத்தையும் தந்த கண்களைப் புகழ்கிறான். அதன் பின் தான் யாரென்று கூறி சுக்ரிவனாகிய தன் அரசனிடமிருந்து வந்தது தான் என்பதையும்
 “எம்மலைக் குலமும் தாழ இசை சுமந்து  நின்ற தோள்களையுடைய ஆஞ்சனேயன் தெரிவிக்கிறான் அனுமனது இச்சொற்கள் நம்மையே கவரும் போது கருணாமூர்த்தியாகிய இராமனைக் கவர்ந்ததில் வியப்பில்லையல்லவா!

“சொல்லின் செல்வன் என்ற விருதளித்த இவன் சிவனோ பரமனோ என்று ஐயுறுகிரான். தன் கண்களைக்  கவர்ந்ததிலிருந்தே இவன் கல்லாத கலையும் வேதமும் இல்லை என்றமுடிவுக்கு வந்து விட்டான் இராமன்
“யார் கொல் இச்சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடை வலானோ”
என்று வியக்கிறான்.

மேலும் அனுமன் பேசுகிறான் தான்யாரென்று கூறி விட்டான். யாரிடமிருந்து வருகிறான் என்பதையும் அறிவித்துவிட்டான். இனி அவர்கள் யாரென்று அறிய வேண்டும்; தன் தலைவனுக்கும் அறிவிக்க வேண்டு வேண்டுமல்லவா!
“யார் நீங்கள்”
என்று கேட்டு விடலாம்; அது பண்பாகாது. 

எப்படிகேட்கிறான் பாருங்கள்
வீரர்களே! என் தலைவனுக்குத் தங்களை யாரென்று அறிமுகம் செய்ய வேண்டுமென்று உத்திரவிடுங்கள்”
 “யாரென  விளம்புகேன் நான் எம் குலத் தலைவற் கும்மை வீர  நீர் பணித்திர் ” என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான்
என்ன நயம் என்ன நாகரிகம் பார்த்திர்களா?
இது கம்பன் கண்ட அனுமனின் தோற்றுவாய் தான்.
 கம்பன் காவியத்தில் அனுமன் பெருமை எழுத்திலும் ஏட்டிலும் அடங்கா!
இலக்குவன் கூற , இராமன்தான் , அவனுடன் இருப்பவன் என அறிகிறான் அனுமன். உடனே சென்னி மண்ணுற வணங்குகிறான்.
 “கேட்டு நின்றவக்காலின்  மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் ”
இது என்ன! அந்தணன் இப்படிச சுத்ரியன் கால்களில் வீழ்கிறான்! என்று இராமன் பதைத்தான். மாருதி தான் குரங்கினத்தொருவன் என்று கூறித்தன் சுய உருவத்தை காட்டினான்.
அந்த உருவம் எப்படியிருந்தததாம்:-


மேருமலையே , அவன் புயத்துக்கூட உவம்மை கூறப் போதாதாம்.
“பொன்னுருக் கொண்டமேரு புயத்திற்கும் உவமை போதா”
வேதங்களும் சாத்திரங்களும் உருவெடுத்து வந்தாலும், அவையாவும் இந்த உருவிற்கு எம்மாத்திரம்.
“வேத நல்நூல் பின்னுருக் கொண்ட தென்னும் பெருமையாம் பொருளும் தாழ” நின்றானாம்.
தரும தேவதை இதுவரை தனக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று தனித்து நின்றது. இவ்வுருவம் வந்ததும் அதன் தனிமையும் தீர்ந்தது.இத்தகையை சிறப்புகள் வாய்ந்த ஒரு அற்புத உருவைக் கண்டு மின்னுருக் கொண்ட வில்லோர்களாகிய இராமலக்குவர் வியப்புற்றதில் வியப்பில்லையே!

“மின்னுருக் கொண்ட வில்லோர் வியப்புற வேத நன்நூல்
பின்னுருக் கொண்ட தென்னும் பெருமையாம் பொருளும் தாழப்
பொன்னுருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத்
தன்னுருக் கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான்”

மூர்த்தி பார்த்தான். அவன் எப்படிப்பட்ட மூர்த்தி! விண்ணையும் மண்ணையும்  இரண்டு அடிகளால் அளத்த அந்தத் தாமரைக் கண்ணனாலேயே, அனுமனது விஸ்வரூபத்தின் முகத்தைக் காணமுடியவில்லை.
“கண்டிலன் உலகம் மூன்றும் காலினாற் கடந்து கொண்ட புண்டரீகக் கண்ணாழிப் புரவலன் பொலன்கொள் சோதிக் குண்டலவதனம்”

அந்த ஒளிமயமான குண்டலமணிந்த முகத்தை இராமன் கண்டிலன். உலகளந்து சக்கரத்தால் மண்ணுயிர் காக்கும் திருமாலின் அவதாரமான இராமனே!கண்டுகொள்ள முடியவில்லை என்றால், அந்த அனுமனுடைய படிவத்தை என்னவென்று கூற இயலும்!அந்த ஒரு அளவில் மட்டும் பெரிதல்ல;கல்வியிலும் பெரியது;சூரிய பகவானிடத்தே கல்வி கற்ற உருவம்

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள்ஜோதி
குண்டலவதனம் என்றால் கூறலாம் தகைமைத்தொன்றோ
பண்டைநூல் கதிரோன் சொல்லப் படித்தான் படிவம் அம்மா!

இப் படிவத்தை எப்படிப் புகழ்வதென்றே தோன்ற வில்லை இராமனுக்கு.
தம்பியைப் பார்த்தான்.”அம்மம்மா!” என்று ஆர்ப்பரித்தான் கமலக்கண்ணன். கமலம் மூடிக்கொள்ளும் இது மூடாத;தாளிட்டுக்ககொள்ளாத,கமலம் அன்ன தடங்கனான்” தம்பிக்கு கூறுகிறான். “அம்மம்மா”! என்று அதிசயித்து
“இது என்ன அற்புதம் தம்பி! அழியாத வேதங்கள்,பாபமற்ற ஞானங்கள் எல்லாம் தேடி அடைய முடியாத, மோஷசாம்ராஜ்யமல்லவா இந்தக் குரங்குருவில் இருக்கிறது.

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப்பதமே ஐய! குரங்குருக்கொண்டது
மேலும்,இது இம் மண்ணுலகத்தில்  இருக்கும் உருவயிருந்தாலும், ராஜச,தாமச,குணங்கள் அற்ற சத்வ குணா நிலையிலே நின்றல்லவோ,நித்யஜோதிமயமாகத் தோன்றுகிறது தம்பி!” என்று இளவலிடம் கூறுகிறான் .

தாட்படாக் கமலம் அன்ன தடங்கணான் தம்பிக்கம்மா!
கீட்படா நின்ற நீக்கி, கிளர்படாதாகி,என்றும்
நாட்படாமறைகளாலும்,நவைபடா ஞானத்தாலும்,
கோட்படாப்பதமே! ஐய! குரங்குருக் கொண்டத்தென்றான்.

இந்த ஒரு பாடலிலுள்ள ஆத்மீகக் கருத்துகளை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விரித்துக் கொண்டே போகலாம்

இனி அனுமனின் நாவண்மையை ஆராய்வோம் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்

எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர்முகமது பீ எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு

15062020mon

sherfuddinp.blogspot.com


Friday, 12 June 2020

மூலிகை அறிமுகம் -கறிவேப்பிலை


கறிவேப்பிலை


கறிவேப்பிலை – தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது
குழம்பு சட்னி , கூட்டு ,பொரியல் என்று எதில் இருந்தாலும் முதல் வேலையாக அதை எடுத்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் சாப்பிடத்.துவங்குவோம்

இப்படி நாம் ஒதுக்கி, தூக்கி எறியும் கறிவேப்பிலையில் இருப்பதாகச் சொல்லப்படும் மருத்தவப் பயன்கள் எண்ணற்றவை
அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்

கறிவேப்பிலையில் சுண்ணாம்புச் சத்து , இரும்புச்சத்து, உயிர்ச் சத்து எ, பீ சீ நிறைய உள்ளது
கறிவேப்பிலையை பச்சையாக , குழம்பாக சட்னியாக கலவை சாதமாக தோசை, இட்லிக்குப்பொடியாக, ,  தேங்காய்ப்பாலுடன் ,, பொடியாககி மிளகு, சீரகம் தேன் சேர்த்து என்று பலவிதமாக உண்ணலாம்

கறிவேப்பிலையால் தீரும் உடல்நலக்குறைபாடுகள்
கண்பார்வை குறைவு , தலைமுடி(நரை, வளர்ச்சி ),குருதிசோகை:, செரிமானம்,, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு,,பசியின்மை , சுவையின்மை ,குமட்டல், வாந்தி, , சிறுநீரகப் பிரச்னை பூச்சிக்கடி உடல் பருமன் கல்லீரல் பிரச்சினைகள் ,தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்தல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இந்தப்பதிவின் நோக்கம் நம் கண்ணில் படும் செடி கொடிகள், பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் மருத்துவப் பயன்களை தெரியப்படுத்துவதுதான்

இது ஒரு மருத்துவக் குறிப்பு அல்ல

தக்க அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்

மீண்டும் வேறொரு பதிவில் சிந்திப்போம் இறைவன் நாடினால்

12062020fri
sherfuddinp.blogspot..com


Friday, 5 June 2020

நலவாழ்வு தேன்பலா










தேன் பலா
தொலைபேசியில் நண்பர் ஒருவர் இரண்டு நாளாக வயிறு சரியில்லை என்று சொன்னார் . பலாச்சுளை நான்கு சாப்பிட்டேன் அதிலிருந்து வயிறு மந்தமாக இருக்கிறது என்றார்
நாலு சுளை ஏன்ன நாற்பது கூட சப்ப்பிடலாம் . முறை தெரிந்து சாப்பிட்டால் .பலாச்சுளை சாப்பிடும்போது கடைசி  சில சுளைகளை தேனில் துவைத்து சாப்பிட்டால் வயிற்றுப்பிரச்சினை எதுவும் வராது
தேன் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பலாக்கொட்டை .ஒரு கொட்டையை சுட்டு சாப்பிட்டால் சரியாகிவிடும் . சுட்ட கொட்டை நல்ல சுவையாக இருக்கும்
கோடை வந்துவிட்டால் மாம்பழப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான் .சுவையான பழங்களை ஒரு கை பார்த்து விடுவார்கள் . மாம்பழம் சாப்பிட்டு விட்டு ஒரு கோப்பை சூடான பால் குடித்துவிட்டால் பிரச்சினை எதுவும் வராது
வேர்க்கடலை ( groundnut) சாப்பிட்டதும் சிறிது வெல்லம் சாப்பிடவேண்டும் . வெல்லம் கடலையில் உள்ள எண்ணெய் சிக்கை மாற்றிவிடும்
கோயில்பட்டி பேருந்து நிலையத்தில் கடலை விற்பவர்கள் சிறிது வெல்லமும் சேர்த்தே கொடுப்பார்கள் – பழைய நினைவு
மீன் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்கக்கூடாது
மீனும் கறியும் ( Fish and Mutton) ஒரே சமயத்தில் சாப்பிடக்கூடாது
ஒவ்வொரு வேளை உணவுக்குப்பின்னும் சிறிது கருப்பட்டி (பனை வெல்லம்) சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
வளமாக உண்டு நலமாக வாழ்வோம்

இறைவன் நாடினால் மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்
03062020wed
sherfuddinp.blogspot.com

I have launched a YOUTUBE Channel by name
Scenic Beauties Tamil
a few days back
Please view it
If it is worth seeing

like it
Share it
subscribe and record your comments
Don’t forget to press the bell button


Monday, 1 June 2020

Percent and Percentage





31052020sun
What is the  difference between
Percent and Percentage ?
01062020mon
Very many lengthy meanings and explanations are available  in dictionary and google
I am explaining   with an example
“ I reserve  10 percent of  my income for charity”
“I reserve a small percentage of my income for charity”
Percent always comes with number—10percent and
Percentage with quantity –small percentage
 The words percent and percentage are NOT INTERCHANGABLE
Thanks, Congratulations and Greetings to all those who responded with correct answers
They are                                    
M/S

Vazhikarai Vadivelan,  Javaid Ahmed ,Rock ChanBaranwal
DR Sundaram ,AR Viswanathan, Somasekar
Raviraj, Ajmeer Ali ,Parvez Ahmed, BR Srinivasan
A peculiar answer given by Ms Rajathi is
“Age is the difference.”
One way it is correct Only nowadays I hear often percentage being used in place of percent

By my postings I am just trying to induce a dictionary habit among my friends
Thank you