திரு மறை சில குறிப்புகள் 18
01052021sat
1. (23: 2-11)நம்பிக்கை கொண்டோரின் நற்பண்புகள்
அடிபணிந்து இறைவனை வணங்குதல் ,வீண் பேச்சு ,செயல்களில் இருந்து விலகியிருத்தல், சகாத் என்னும் தருமத்தை நிலை நாட்டல் ,ஒழுக்கக் கேட்டை விட்டு விலகுதல் ,சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல்,தொழுகையை முறையாகப் பேணுதல்
இவர்களுக்கு நிரந்தர சுவன வாசம் கிடைக்கும்
2. 23:23-32நுஹ் நபியின் கப்பல், நம்பிக்கையற்றோர் வெள்ளத்தில் மூழ்குதல் கப்பல் பத்திரமாக கரை சேர்தல் எல்லாம் இறைவனின் அற்புத அடையாளங்களாக மீண்டும் எடுத்துச் சொல்லப்படுகின்றன
3. (23:50) மரியமும் அவரது மகனும் இறைஅற்புதத்தின் எடுத்துக்காட்டுகள். நீரூற்றுகள் நிரம்பிய வசதியான தங்குமிடத்தை இறைவன் அவர்களுக்கு கொடுக்கிறான்
4. (23:62) இறைவன் யார் மீதும் அவர்கள் தாங்க முடியாத அளவுக்கு சுமையைக் கொடுப்பதில்லை
5. (23:78) கேட்கும், பார்க்க்கும் சிந்திக்கும் திறன்களை வழங்கிய இறைவனுக்கு மக்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறார்கள்
6. (23:115) எந்த வித நோக்கமும் இல்லாமல் வெறுமனே படைத்தான் இறைவன் என்று மக்கள் நினைக்கிறார்கள் .இறுதியில் அவனிடமே திரும்ப வேண்டும் என்பதயும் மறந்து விடுகின்றனர்
7. (24:1-10) மிகவும் தெளிவாக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் அடங்கிய பகுதியை இறக்கி வைத்திருக்கிறேன் என்று இறைவன் சொல்லும் இந்தப்பகுதியில்
ஆண் பெண் உறவில் ஒழுக்கக் கேடுகளுக்கு உரிய கடும் தண்டனைகள் -
இதில் யாருக்கும் விலக்கு கிடையாது ,- குற்றத்திற்கான சான்றுகள் - பொய்யான சான்று சொல்பவருக்குக் கடும் தண்டணைகள ,- ,சான்று இல்லாத குற்றச்சாட்டை எப்படிக் கையாள்வது --, தவறு செய்தோர் திருமணம் செய்து கொள்ள உள்ள கட்டுப்பாடுகள்
எல்லாம் தெளிவாக்கப்பட்டுள்ளன
8. (24:11) அன்னை ஆயிஷா நாயகம் பற்றி வீணாக அவதூறுகற்பித்துப் பேசியோர் பெரும் பாவம் செய்தோர் .அவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்று சொல்லும் இறைவன் இந்த நிகழ்வு நபிகள் அவர்களுக்கு நல்லதே என ஆறுதல் சொல்கிறான்
இது வீண் பழியே என்று இறைவனேசொல்வதால் ஆயிஷா நாயகம் குற்றமற்றவர் என்று சான்று சொல்கிறான் .மேலும் இந்த அவதூறை கேள்விப்பட்டவுடனே இது ஒரு பொய் என்று பலரும் மறுக்காதது என் என்று கேள்வி எழுப்புகிறான்
9. (24:23) இறை நம்பிக்கை கொண்ட ஒழுக்கம் தவறாத பெண்கள் மேல் வீண்பழி சுமத்துபவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள்
10. (24:27) பிறர் வீடுகளில் அனுமதியின்றி நுழையாதீர்கள்
11. (24:3031) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொண்டு கற்பொழுக்கத்தை பாதுகாக்கட்டும். பெண்கள் தங்கள் உடலை ஆடையால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும் பூமியில் கால்களை தட்டி நடக்கவேண்டாம்
.
12. (24:32) ஆண்களும் பெண்களும் தனித்திருக்காமால் திருமணம் செய்து கொள்ளுங்கள்
இவையெல்லாம் வெறும் அறிவுரைகள் அல்ல .இறைவன் கட்டளைகள்
13. (24:35) வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே ஒளியாக இருந்து தான் நாடியவர்களுக்கு வழி காட்டுகிறான்
14.t24:39) உண்மையை மறுப்பவர்கள் செயல் வெறும் கானல் நீர் போல் பயனில்லாமல் போய்விடும்
15. (24:41) வானங்களிலும்பூமியிலும் உள்ள அனைத்துப் பொருட்களும், இறக்கை விரித்துப் பறக்கும் பறவைகளும் இறைவனின் புகழைப் பாடுகின்றன
16.(24:51)இறைவனையும் இறை தூதரையும் பணிந்து நடப்பவர்களே உண்மையான வெற்றியாளர்கள்
17.(24:59) பருவமடைந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அறைக்குள் அனுமதி பெற்றே நுழைய வேண்டும் .
18.(24:63) இறை தூதரிடம் பேசும்போது அவருக்குரிய கண்ணியத்தைக் காக்கும்படி பேச வேண்டும்
19. (25:1 )உண்மையையும் பொய்யையும் நல்லதையும் தீயதையும் பிரித்தறிய வழிகாட்டும் மறைநூல் மனித குலத்துக்கு ஒரு எச்ச்ரிக்கையாக அருள் மிகுந்த இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது
20. (25:2) உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அவற்றின் அளவுகளையும் நிர்ணயித்த அந்த இறைவனுக்கே வானங்களும் பூமியும் சொந்தமானவை .அவனுக்கு பங்காளிகளோ மகன்களோ கிடையாது
21. (25:20) “நபியே உம் போன்ற இதற்கு முந்தய நபிமார்களும் உணவு உண்டார்கள் கடை வீதிகளில்.நடந்து திரிந்தார்கள்
இது குரான் ஜூசு
18ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில் நபிகள் பெருமான் துணைவி அன்னை ஆயிஷா நாயகம் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட நிகழ்வு வருகிறது .
இறைவன் நாடினால் எப்போதாவது அது பற்றிப்பர்ப்போம்
நேற்.றைய வினா
இறைவன் ,பற்றி அவர்கள் சரியாக கணிக்கவில்லை “
என்ற பொருள் படும் வசனம் எது ?
(22:74) வலிமையும் அதிகாரமும் மிக்கவனாகிய இறைவன் பற்றி இறை நம்பிக்கை அற்றோர் சரியாக கணிக்கவில்லை
இன்றைய வினா
“ஒரு அழிவை அழைக்காதீர்கள் “
என்ற பொருள் படும் வசனம் எது ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01052021 sat
Sherfuddin P