Tuesday, 29 June 2021

தமிழ் - முதல் எழுத்துச் செய்யுள் -Acrostic

 முதல் எழுத்துச் செய்யுள்

"நான் மகான் அல்ல,சிறுவன் பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான் "
இது என்ன ?
விடை
விடையைப் பார்க்குமுன் எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு
“திருவிழா சந்தையில் வெண் புட்டு விற்கச் சென்றான் ஞானம் “
இது இராகு கால நேரங்களை எளிதாக நினைவில் வைத்துகொள்ள ஒரு வாக்கியம்
திருவிழா – தி – திங்கள்
சந்தை –ச- சனி
வெண் – வெ – வெள்ளி
புட்டு – பு – புதன்
விற்க- வி- வியாழன்
சென்றான் – செ- செவ்வாய்
ஞானம் – ஞா – ஞாயிறு
இவ்வாறு ஒரு செய்தியை எளிதில் நினைவில் நிறுத்திக்கொள்ள செய்தியில் உள்ள சொற்களின் முதல் எழுத்து அல்லது அசைவுகளைக்
கொண்டு ஆக்கப்படும் கவிதை அல்லது வாக்கியத்துக்கு
முதல் எழுத்து செய்யுள் அல்லது முதல் வரிப்புதிர் என்று பெயர் (ஆங்கிலத்தில் acrostic)
வேதியியலில் (chemistry) தனிமங்கள் (elements ) பெயர்கள் ஆவர்த்தன அட்டவணையில் (periodic table) குழுக்களாக தொகுக்கப் பட்டிருக்கும் .
இதில் மூன்றாம் குழுவில் உள்ள தனிமங்களை நினைவில் வைத்துக்கொள்ள உள்ள ஒரு பகடி வாக்கியம்தான்
“நான் மகான் அல்ல . சிறுவன் பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான்
நான் – சோடியம் – குறி- Na
மகான் – மக்னிசியம் – குறி –Mg
அல்ல – அலுமினியம் – குறி -Al
சிறுவன் – சிலிகான் – குறி –Si
பொய் – பாஸ்பரஸ் – குறி –P
சொல்லி – சல்பர் – குறி – S
குழப்ப – குளோரின் – குறி –Cl
பார்க்கிறான் – பா =ப்+ஆ –ஆர்கன் –குறி –Ar
(தனிமங்களின் வேதியியல் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் , கிரேக்க , ஜெர்மனிய மொழியில் இருக்கும் . அவற்றின் சுருக்கமே உலக அளவில் Na, Mg போன்ற குறியீடுகளாக பயன் பாட்டில் உள்ளது )
இது சற்றுக் குழப்பமாக இருக்கும் . குறிப்பாக வேதிஇயல் படிக்காதவர்கள்புரிந்து கொள்வது சிரமம்
எனவேதான் எளிய ஒரு எளிய எடுத்துக்காட்டை முதலில் சொன்னேன்
இதில் புரிந்து கொள்ள வேண்டியது இராகு காலமோ வேதிஇயலோ இல்லை
Acrostic என சொல்லப்படும் முதல் எழுத்துப் புதிர்தான்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
30062021wed
SherfuddinP
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

Sunday, 27 June 2021

English - Blight

 A word of 6 letters with damaging meaning

If first letter is changed it becomes bird
If second letter is changed it shines
What is that word?
Answer
Blight
28062021mon
SherfuddinP
May be an image of text
Like
Comment
Share

Thursday, 24 June 2021

குரான் - 20:118,119

 உணவு ,உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றி இறைவன் கூறும் திரு வசனங்கள் எவை?

விடை
சூரா 20, தாஹா 118, 119
“சுவனத்தில் நீங்கள் நிச்சயமாக பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்
மேலும் நீங்கள் தாகத்தில் தவிக்கவும், வெய்யிலில் சிரமப்படவும் மாட்டீர்கள் “
சிறு விளக்கம்
இப்லிஸ் (சைத்தான்) சொல்வதில் மயங்கி வழி தவறிப்போய், சுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டால் ஆதமும் அவர் துணைவியும் பெரும் இன்னலுக்கு ஆளாவர்கள் என்று இறைவன் எச்சரிகை செய்கிறான்
சுவனத்தில் எந்த வித உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் அடிடைத் தேவைகளை அவர்கள் இழக்க நேரிடும் என இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25062021fri SherfuddinP
No photo description available.
Like
Comment
Share

Tuesday, 22 June 2021

தமிழ் -சினை

 மூங்கில், மொட்டு, முட்டை மரக்கிளை என பல பொருள் கொண்ட ஒரு தமிழ்ச் சொல் எது ?

விடை
சினை
சினை (பெ)
1. விலங்கு முதலியவற்றின் சூல்
2. முட்டை
3. பூமொட்டு
4. மரக்கிளை
5. உறுப்பு
6. மூங்கில்
(தமிழ் விக்சனரி)
சரியான விடை அனுப்பிய
சகோ. கணேசன் சுப்பிரமணியனுக்கு
வாழ்த்துகள்
, பாராட்டுகள்
முயற்சித்த சகோ ஞாழல் மலர் , ஆ ரா விஸ்வநாதன் , பாப்டிக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திபபோம்
23062021wed
Sherfuddin P
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

Monday, 21 June 2021

கவிக்கோ - முதுமை கவிதை

 




நிமிஷக் கரையான் அரித்த ஏடு
இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத்தட்டு 

ஞாபகங்களின் குப்பைக்கூடை 
வியாதிகளின் மேய்ச்சல் நிலம் 

காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட வர்ண ஓவியம் 

English - Gratis

 Word of 6 letters; begins with G ends with S; has 2 different vowels; meaning free.

What is the word?
Answer
“Gratis “
Congratulations
and Greetings to
M/S Raviraj, Bangaru , A.R viswanathan , Papti
Ashraf Hameeda ,&Venugopal Subramanian for having sent correct answer
21062021mon
Sherfuddin P
May be an image of text that says "English"
Like
Comment
Share