புதியதோர் உலகம் செய்வோம்
பதின்மர் பருவத்தினரை பண்படுத்துவதில் மிகப் பெரும்பங்கு பெற்றோருக்கே பெற்றோரிடம் பேசுமுன் ஒரு சில செய்திகளைப் பார்ப்போம்
பல ஆண்டுகள் முன்பு – சமூக ஊடகங்கள் தலை எடுக்காத காலம் – செய்தித் தாளில் கண்டது
இங்கிலாந்தில் பல நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டம் . அங்கு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது
உங்கள்குழந்தைகள் வாழ்வு நன்கு அமைய நீங்கள் முதன்மயாகக் கருதுவது எது என்று ஒரு வினா
. மேலைநாடுகளைச் சேர்ந்த பலர் நேர்மை, நீதி என்று விடை அளித்திருந்தனர்
பாரம்பரியப் பெருமை பேசும் நமது இந்திய நாட்டில் இருந்து ஒருவர் கூட – ஆம் ஒருவர் கூட – நீதி நேர்மை பற்றிக் குறிப்பிடவில்லை
நமது நீதி நூல்களும்வேதங்களும் கற்பித்த நல்லொழுக்கங்கள் எங்கே போயின?
இன்னொரு செய்தி – சில ஆண்டுகள் முன்பு தொடரிப் பயணத்தில் சந்தித்த ஒருவர் சொன்னது
உயர்கல்வியில் தேர்ச்சி பெற்ற அவர் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் பணியில் சேர பத்து லட்சம் ரூபாய் கொடுதேன் எனறு பெருமையாகச் சொன்னார் .இது தவறு என்று தோன்றவிலையா என நான் கேட்க இதில் என்ன தவறு பத்து லட்சம் முதலீடு . மாதம் இருபது ஆயிரம் ஊதியம் . மாதம் இரண்டு % வட்டிக் கணக்காக்கிறது . எனவே இது ஒரு நல்ல முதலீடு என்றார் .
உங்கள் பெற்றோர் என்ன சொன்னார்கள் என்று கேட்டேன் .இந்த வட்டிக கணக்கை சொல்லி உடனே வேலையில் சேரச் சொல்லி சொன்னதே என் அப்பாதான என்றார்
கொஞ்ச நேரம் அவரிடம் பேசினேன் – அவரும் கேட்கும் மன நிலையில் இருந்தார் – அதனால்தான் பேசினேன் ஆம் சார் இப்போதுதான் எனக்குப் பல விசயங்கள் புரிவது போல் இருக்கிறது . என் பெற்றோரோ , சுற்றமோ ஆசிரியர்களோ இது போல் சொன்ன நினைவு எனக்கில்லை என் பிள்ளைகளை நல்வழி படுத்த நான் முயற்சிப்பேன் நன்றி என்று சொன்னார்
இந்தப்பின்னணியில் பெற்றோரிடம் ஒரு வினா – மிக மிக முதன்மையான வினா –
வாழ்க்கைக்காக பணமா? – பணத்துக்காக வாழ்க்கையா ?
இதற்கு விடையை நீங்கள் தெளிவாக்கி மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்
நான் சொல்லப்போவது எல்லாம் பெரிய பெரிய ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து அல்ல .
அன்றாட வாழ்வில் நான் கண்ட , கேள்விப்பட்ட ,அனுபவித்த நிகழ்வுகள் அடிப்படையில் அமைந்த எளிதான செய்திகள்
பதின்மர் பருவத்தினரைப் பண்படுத்துவதில் ஆசிரியர், சமூகம் , உளவியலாளர்கள் இவர்களை எல்லாம் விட பெற்றவர பங்கு மிகப் பெரும்பான்மையானது என்று சொல்வதற்குப் பெரிய காரணம் எதுவும் தேடிப் போக வேண்டியது இல்லை
நீங்கள் பெற்றோர் , அவர்கள் உங்கள் குழந்தைகள் –இதை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும் !
பிறந்த குழந்தைக்கு பாலைக் குடிக்கக் கற்றுக் கொடுக்கிறான் . இறைவன்
அதுபோல பெற்றோருக்கு இயற்கையிலேயே தங்கள் குழந்தைகள் உடல், மனம் பற்றிய அறிவை ஊட்டி விடுகிறான் இறைவன் . ஆசிரியர், உளவியலாளர் பயில்வது போல் பெறறோருக்கு தனிப் பயிற்சி எதுவும் தேவை இல்லை
குறிப்பாக தாய்க்கு பிள்ளைகள பற்றிய உள்ளுணர்வு மிக அதிகம்
உங்கள் பொறுப்பை ,கடமையை மிகத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்
இதற்கு மேல் எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
“நூறு இளைஙர்களை எனக்குக் கொடுங்கள், நான் உலகையே மாற்றிக் காண்பிக்கிறேன் “ என்றார் ஒரு அறிஞர்.
நூறென்ன நூறாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள் . அவர்களைப் பண்படுத்தி புதியதோர் உலகம் செய்யும் கடமை பெற்றோருக்கு
“குழந்தையை நன்றாக , சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று ஒன்றோடு நிறுத்திக் கொண்டோம் “
இது பல பெற்றோர் வாயில் வ்ருவது.
இது சரியா ?
“உடன் பிறப்பில்லா உயிர் பாழ் “ ஔவை மூதாட்டி வாக்கு
குழந்தைக்குப் பெரிய ஒரு நன்மை செய்து விட்டதாக் ஒரு நினைப்பு உங்களுக்கு .ஆனால் உண்மையில் குழந்தையின்ஒரு உரிமையை நீங்கள் பறித்து விட்டீர்கள்
குறைந்தது இரண்டாவது பெற்றுக் கொள்ளுங்கள் .முடித்தால் அதற்கு மேலும் பெற்றுக் கொள்ளலாம் . The sky will not come down
“அந்தக்காலம் போல் இப்போது எதுவுமே எளிமையாக் இல்லை . கல்வி, மருத்துவம் எல்லாமே மிக செலவு பிடிப்பதாக மாறி விட்டது . இதைஎல்லாம் சிந்தித்துதான் ஒன்றோடு நிறுத்திக் கொண்டோம் “ என்பதுதான் உங்கள் வாதமாக இருக்கும்
எளிமையாக இருந்ததை கடுமையாக ஆக்கியது யார் ? நாம்தானே !.அதிகக் கட்டணம் வசூலித்தால் அது சிறந்த பள்ளிக்கூடம் , சிறந்த மருத்துவ மனை என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டது நாம்தானே
இன்றும் கூட மிகச் சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்பிக்கும் அரசு, நகராட்சிப் பள்ளிகள் ,சேவை மனப்பான்மையில் இயங்கும் தனியார் பள்ளிகள் ,மருத்துவ மனைகள் இல்லாமல் இல்லை அங்கெல்லாம போக நமக்குத் தயக்கம் . நம்மை மற்றவர்கள் இழிவாக எடை போட்டு விடுவார்களோ என்ற ஒரு நினைப்பு.
நாம் நமக்காகத்தானே வாழ வேண்டும் .
ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதன் பக்க விளைவுகள ?
பெறோரின் முழுக் கவனம், அன்பு பரிவு பாசம் அந்தக் குழந்தை மேல் திணிக்கப்படுகிறது .யாரையும் எதையும் அனுசரித்துபோகும் மனப்பாங்கு அந்தகுழந்தைக்கு இல்லாமல் போய் விடுகிறது . குறிப்பாக no – என்பதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை
Single Child Syndrome என்று இதை ஒரு நோய் போல் எண்ணி ஆராய்சிகள் பல செய்திருக்கிறார்கள. முடிவுகள், கருத்துக்கள் வேறு பட்டு இருக்கலாம் . ஆனால் நான் மேலே குறிப்பிட்டது கண்கூடாகக் காண முடிந்த ஓன்று
தாய் தந்தை இருவரும் வேலைக்குப் போனால் அவர்களுக்கு பிள்ளைப் பாசத்தைக்காட்ட தெரிந்த எளிய வழி – விலை உயர்ந்த பரிசுகள்வாங்கிகொடுப்பது .
ஐ போன் ஐம்பது ஆயிரத்துக்கு மேல் . அதற்கு சார்ஜர் பவர் பாக் , காதுக்கருவி உறை திரைக்குத் தனி கவசம் என பல துணைப் பொருட்கள்
ஒவ்வொன்றும் விலை சில ஆயிரங்கள் –
இப்போது ஐ போனை சுத்தம் செய்ய ஒரு துணி வந்திருக்கிறது .கண்ணாடி வாங்கினால் இலவசமாய்க் கொடுப்பார்களே அந்த அளவில் –விலை ?
அதிகமில்லை வெறும் பத்தொன்பது டாலர் . எத்தனை ரூபாய் என்று நீங்களே பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்
இரு சக்கர வண்டி என்றால் நூறு லட்சம் அதற்கு மேலும் விலையில் இருக்கிறது என்கிறார்கள்
இவையெல்லாம் பணம் ஒரு பொருட்டே அல்ல என குழந்தையை எண்ண வைக்கின்றன
குழந்தைகள் பணத்தின் அருமையை ( பெருமையை அல்ல ) How dear is money எனபதை உணர வேண்டும்
எளிய வாழ்க்கை முறை, தன் கடமைகளை தானே செய்தல் , தான தருமம் , நீதி , நேர்மை எல்லாவற்றையும் ஊட்டி வளருங்கள்
குறிப்பாக முழுமையான நல்ல உணவைப் பழக்கப்படுத்துங்கள் –simple wholesome healthy food.. சுருக்கமாக – நமது வழக்கமான இட்லி சோறு சாம்பார்
அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தும் , சற்றுத் தொலைவு என்றால் மிதி வண்டியிலும் போகப் பழக்குங்கள் . வீட்டு வேலைகளில் வீட்டு விழாக்களில் பங்கெடுக்கச் செய்யுங்கள்
தூய்மையான, அழகான , நாகரிகமான கண்ணியமான உடை உடுத்தச் செய்யுங்கள் . வளரும் பருவத்தில் மிக அதிக விலையில் உடைவாங்குவதைத் தவிர்க்கலாம்
கூர்க் – கர்நாடக மாநிலம் –காபிப் பெருந் தோட்டங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் இடம்
அம்குள்ள பெருந்தோட்ட உரிமையாளர்கள் பலர் சொன்ன செய்தி எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
அவர்கள் தங்கள் பிள்ளைகளை பதின்மர் வயதில் ராமகிருஷ்ணா மடம் நடத்தும் பள்ளியில் சேர்த்து சில ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கிர்ரர்கள்
ஒழுக்கம் , பணிவு, எளிய வாழ்க்கை முறை ,உழைப்பின் பெருமை , மனித நேயம் இறை அச்சம் , நாட்டுப்பற்று – இந்த சில ஆண்டுகளில் அங்கு மாணவர்கள் கற்றுக்கொள்வது
அதிகாலையில் எழுந்து, விட வேண்டும் .அவரவர் வேலைகளை அவர்களே செய்ய வேண்டும்
இது போக எல்லா மாணவர்களும் சுழற்சி முறையில் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும், ; பிற மாணவர்களுக்கு தலையில் எண்ணெய் தேய்த்து விட வேண்டும் மாதம் ஒருமுறை சமூக சேவை செய்ய வேண்டும்
பாதுகாப்புப் படைத் தளபதியாக பணியாற்றிய Field Marshal காரியப்பா , General திம்மையா, விளயாட்டுத் துறையில் ஒளி வீசிய போபண்ணா, உத்தப்பா , அஸ்வினி நாச்சப்பா போன்றோர் கூர்க் பகுதியைச் சேர்ந்தவர்கள்
வீட்டுக்கு வருபவர்களை வரவேற்று உட்காரச் சொல்லி தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் .
நம் உறவினர் /நண்பர் வீட்டுக்குப் போய பேசிக் கொண்டிருக்கையில் பக்கத்தில் ஒரு சிறுவன் நாம் இருப்பதையே உணராமல் கைப்பேசி அல்லது கணினியில் மூழ்கி இருப்பது இப்போது ஒரு இயல்பான நிகழ்வாகி விட்டது
ஆண்டு விடுமுறைகளில் ஒரு சிற்றூருக்கு போய் வயல், நெல், செடிகொடிகளை காண்பித்து இயற்கையை கற்றுக்கொடுங்கள் .
.முதியோர் இல்லம் , ஆதரவற்ற சிறார் இல்லத்துக்குப் போய் உங்கள் குழந்தைகள் கையால் அவர்க்ளுக்குய் உதவச் செய்யுங்கள் . வறியவர், முதியவரிடம் அன்பு பரிவு காட்டும் பண்பை ஊட்டுங்கள்
உறவினர் ,நண்பர் வீட்டு விழாக்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வையுங்கள்
வீட்டுக்கு வரும் அஞ்சலர், தூதஞ்சலர் மிகவும் களைப்பாக இருந்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கச் சொல்லுங்கள்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கைப்பேசி, தொலைக்காட்சி இல்லாமல் அனைவரும் ஒரு இடத்தில் கூடி உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள் . முடிந்தால் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்
உங்களுக்கு வழிகாட்ட, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை உங்கள் மேல் குழந்தைகளுக்கு முழுமையாக வர வேண்டும்
பிள்ளைகள் பள்ளி , கல்லூரியிலிருந்து திரும்பும் நேரத்தில் பெற்றோரில் ஒருவராவது வீட்டில் இருப்பது நல்லது
பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை ஒரு சடங்காக நினைக்காமல் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு ஆசிரியரிடம் கலந்து பேசுங்கள் . விடுதியில் தங்கிப் படித்தால் அடிக்கடி சென்று கவனியுங்கள்
கைப்பேசி தொலைக்காட்சி, கணினியை விட்டு விலகி உடலுக்கு நல்ல பயிற்சி கொடுக்கச் செய்யுங்கள்
PT period, MI period இதெலாம் இப்போது எந்தப் பள்ளிக் கால அட்டவணையிலும் இடம் பெறுவதில்லை. எனவே வீட்டில் நீங்கள்தான் இவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும்
கைப்பேசியில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள் . பல வளர்ந்த நாடுகளில் அரசே சிறுவர்கள் பார்க்கும் காட்சிகளைக் கட்டுபடுத்துகின்றன
இணையதள இணைப்புள்ள கணினிவீட்டில் எல்லோரும் பார்க்கும்படி கூடத்தில் தான் இருக்கவேண்டும், தனி அறைகளில் இருக்கக் கூடது என்ற கட்டுப்பாடு மிகவும் முன்னேறிய மேலை நாடுகளில் இருப்பதாக முன்பு எப்போதோ ஒரு செய்தி படித்தேன் இப்போதோ இணைய தளஇணைப்பு இல்லாத கணினி , கைப்பேசி மிகவும் அரிதாகி விட்டது
அரசும் எந்தக் கட்டுப்படும் விதிப்பதில்லை இந்த நிலையில் பெற்றோர்தான் பிள்ளைகளின் நலனைபார்த்துக்கொள்ள வேண்டும் முடிந்தால் யூ டியூப் பை பூட்டி வைக்கலாம்
.சென்ற தலைமுறைக்கு எளிதில் கிடைக்காத, பார்க்க முடியாத படிக்கமுடியாத படங்கள் , நூல்கள் எல்லாம் இந்தத் தலைமுறையின் விரல் நுனியில் கிடைக்கின்றன . அளவு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
பிள்ளைகளின் நண்பர்கள் பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
ஆணும் பெண்ணும் நட்பு முறையில் பழகுவதில் தவறு இல்லை .ஆனால் அது தனிமையில் இல்லாமல் பெற்றோர் முன்னிலையில் வீட்டில் இருக்கலாம் . தொடுதல் கண்டிப்பாக மிகக் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஓன்று .good touch , bad touch எந்த touchசும வேண்டாம்
ஆண் பெண்ணுக்கிடையே இந்த வயதில் இனம் புரியாத் மோகம் infatuation உண்டாவது .இயற்கை
பொதுவாக பெண்களுக்கு ஆங்கில ஆசிரியர்கள் மீது இது போல் மோகம் உண்டாகுமாம் . அதைக் காதலாக எண்ணி அம்பிகாபதி அமராவதி போல் கற்பனை செய்து வாழ்வை பாழாகிக் கொள்ளாமல் பெற்றோர் அறிவுரை கூற வேண்டும்
தீய நட்பு, தீய பழக்கங்கள் இருப்பது போல் தோன்றினால் உடனே தாய் தந்தை இருவரும் பிள்ளைகளோடு பேசி தேவையானதை செய்யவேண்டும் .இதில் தயக்கம் ,தாமதம் கூடாது
.
அளவுக்கு மீறி தனிமையை பிள்ளைகள் விரும்பினால் என்ன ஏது என்றுஆராய வேண்டும் .போதைப் பழக்கம் காரணமாக இருக்கலாம்
பெண் பிள்ளையைக் கட்டிகொடுக்கும் வரை நல்லபடி பெற்றோர் வளர்க்க வேண்டும் என்று முன்பு ஒரு சொல் வழக்கு உண்டு
இப்போதும் அது holds good.இன்னும் சற்று விரிவாகி ஆண்பிள்ளைகளுக்கும் பொருந்துகிறது
பதின்மர் பருவத்தில் மட்டுமல்ல அதற்கப்பாலும் பெண், ஆண் மக்கள் நலனைபோற்றிப் பார்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது
என் காதில் விழுந்த இரு செய்திகள
கல்லூரி இறுதி வகுப்பு மாணவன் விடுதியில் தங்கி இருப்பவன் – இது வரை ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெறவில்லை .கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப வேண்டிய நிலை .
பள்ளி இறுதித் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் எடுத்தவன் . . மாணவன் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் பெற்றோரை வர வழைக்கிறார் . இருவரும் பணியில் இருப்பவர்கள்
மெதுவாகப் பேச்சைத் துவங்குகிறார் ஆசிரியர்- “என்ன பையன் எப்படிப் படிக்கிறான் “
“அவனுக்கென்ன பள்ளியில் போல் இப்போதும் முதல் அல்லது இரண்டாம் தகுதியில் வருகிறான். சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது . அவனுக்குக் கொடுத்து அனுப்ப பலகாரம் எல்லாம் செய்ய சொல்லி வைத்திருக்கிறோம் “என்கின்றனர் பெற்றோர் .
அவர்களுக்கு அதிர்ச்சி உண்டாகத அளவுக்கு உண்மை நிலயை ஆசிரியர் மெதுவாக எடுத்துரைக்க அதிர்ச்சியில் உறைந்த போகிறார் அப்பா . வாய்விட்டு அழுகிறார் அம்மா .
கொஞ்ச நேரம் சென்று சிந்தித்து தாய் நீண்ட விடுப்பில் வந்து மகனோடு தங்கி அவனைக் கவனித்துக் கொள்வது என்று முடிவெடுக்கிறார்கள்
அடுத்தது ஒரு மாணவி – தாய் தந்தை தனித்தனியாக வெளிநாடுகளில் . - .மாணவி ஒரு வீடு பிடித்துத் தங்கியிருக்கிறார். நல்ல வசதி; கை நிறைய காசு – விளைவு கல்லூரிக்கு வருவார் , ஆனால் வகுப்புக்கு வர மாட்டார் . காசினால் எதையும் சரி பண்ணிவிடலாம் என்றொரு ஆணவம்
போதிய அளவு வருகை % இல்லாததால் துறைத் தலைவர் தேர்வுக்கு அனுமதி மறுக்கிறார் . என்ன காரணமோ தெரியவில்லை கல்லூரி முதல்வர் அனுமதி அளிக்குமாறு துறைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறார் . இந்த மாணவியை விட அதிக வருகை % உள்ள மாணவர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறோம் . இவருக்கு அனுமதி அளித்தால் அது சட்டப் பிரச்சினையாக உருவெடுக்கும் எனவே முடியாது என மறுத்து விடுகிறார் துறைத் தலைவர் .
பதினமர் பருவம் தாண்டியும் பெற்றோர் கவனிப்பு அவசியம் என்பதை இந்த இரு நிகழ்வுகளும் வலியுறுத்துகின்றன
Remember: parents are role model, heroes and heroines for their children. They see you as embodiment of all virtues and valour
So you have to keep the upright mage alive
என்றும் இல்லாத அளவுக்கு நாற்பது கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில்
இந்த எழுச்சி மிக்க மனித வளத்தை பண்படுத்தி பயன் படுத்தினால் வீடும் இயற்கை வளம் மிகுந்த நாடும் மிக நல்ல நிலைக்கு உயர்ந்து விடும்
எனக்குத் தெரிந்ததில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .
நினைத்ததை விட அதிக நீளமாகி விட்டாலும் முழுமை அடையாத ஒரு உணர்வு
பதிவு பயனுள்ளதா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
30102021சனி
சர்புதீன் பீ
: