முத்திரை பதிப்போம் 9
நரம்புகளை வலுப்படுத்தும்
பூஷன் முத்திரை (சூரிய முத்திரை )
இது வரை பார்த்த முத்திரைகள் எல்லாம் இரண்டு கைகளிலும் ஒரே மாதிரி செய்வது போல் இருக்கும்
இந்த பூஷன் முத்திரை வலது கையில் ஒரு மாதிரியும் , இடது கையில் வேறு மாதிரியும் செய்யப்படும்
மேலும் வலது கையில் செய்ய இரண்டு முறைகள் இருக்கின்றன
படிக்க சற்றுக் குழப்பமாக இருப்பது போல் தோன்றும்
ஓரிரு முறை செய்து பார்த்து விட்டால் குழப்பம் நீங்கி மனதில் பதிந்து விடும்
சற்று சிரமமாகத் தோன்றும் இந்த முத்திரைக்கு சொல்லப்படும் பயன்களை அறிந்தால் வியப்பாக இருக்கும் குழப்பம் தயக்கம் எல்லாம் பறந்து விடும்
முதலில் செய்முறை:
முறை 1
வலது கை
பெருவிரல், நடு விரல், ஆட்காட்டி விரலின் நுனிகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவேண்டும்
(Tips of thumb, index and middle finger are on top each other )
மற்ற இரு விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
இடது கை
பெருவிரல், நடுவிரல், மோதிர விரளின் நுனிகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க வேண்டும்
(வலது கையில் ஆள்காட்டி விரல்
இடது கையில் அதற்குப்பதில் மோதிர விரல்
அவ்வளவுதான் )
இரண்டாவது முறை
வலது கை
பெருவிரல், மோதிர விரல், சுண்டு விரல்(Little Finger) நுனிகள்
ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க வேண்டும்
மற்ற இரண்டு விரல்களும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும்
இடது கை
முதல் முறை போலவே
பெருவிரல், நடுவிரல், மோதிர விரளின் நுனிகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க வேண்டும்
எப்போது செய்யலாம் என்று கேட்டால்
எப்போதும் செய்யலாம்
குறிப்பாக உணவு உண்டபின் செய்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்
ஒரு தடவைக்கு 5 நிமிடம் வீதம் ஒரு நாளைக்கு 4 தடவை செய்வது நல்ல பலன் கொடுக்கும்
இரண்டு கைகளுக்கும் சேர்த்து செய்வது சிறப்பு
பலன்கள், /பயன்கள்
ஐம்பூதத் தத்துவத்தின் அடிப்படையில்தான் முத்திரைகள் செயல்படுகின்றன என்று முன்பு பார்த்தோம்
பெருவிரல் சக்தியின் பிறப்பிடமான சூரியனைக் குறிக்கிறது
அந்த விரலை மற்ற விரல்கள் தொடும்போது சூரிய சக்தி மற்ற சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு பல நன்மைகளைக் கொடுக்கிறது
பலன்கள் ஒரு நீளமான பட்டியலாக வருகிறது
உண்ட உணவு நன்கு செரித்து சத்துகளை உறுஞ்சிக் கொண்டு கழிவை வெளியேற்ற உதவுகிறது
வாந்தி, கடல் நோய் (sea sickness) ) வயிறு உப்புசம் (flatulence ) , உணவு உண்டபின் ஏற்படும் அசௌகரியம் போன்ற பல செரிமானம் தொடர்பான் பிரச்சினைகளை சரி செய்கிறது
வயிறு, கல்லீரல், மண்ணீரல் பித்தப்பைபோன்ற முக்கியமான செரிமான உறுப்புகளை நன்கு இயங்க வைக்கிறது
சுவாசம் எனும் மூச்சையும் நுரை ஈரல்களையும் வலிமையாக்கி உயிர் காற்றான ஆசிஜனை எடுத்துக்கொண்டு அசுதக்காற்றான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற வகை செய்கிறது
நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை சரி செய்கிறது
மூளையின் இயக்கத்தை மேம்படுத்தி சரி செய்கிறது
சக்தி ஓட்டம் உடல் முழுதும் பரவி எல்லா உறுப்புகளையும் நன்கு இயங்க வைக்கிறது
நினைவுத் திறன், நேர்மறை எண்ணங்கள், , எண்ணச்செறிவு ,(concentration ) logical thinking எனப்படும் தருக்க சிந்தனை
இவற்றை மேம்படுத்தி மனதயும் உடலையும் உற்சாகமாக் வைக்க உதவுகிறது
5 நிமிடம் செய்யும் ஒரு முத்திரையில் இவ்வளவு பலன் இருக்கும்மா என்ற ஐயம் வருகிறதா ?
பொருட் செலவு இல்லை , கருவிகள் ,சிறப்பு உடைகள் தேவை இல்லை
உடலை வருத்தும் பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு நேரகட்டுபட்டு எதுவும் இல்லை
பக்க விளைவுகள் இல்லை
பிறகென்ன தயக்கம்! செய்து பார்ப்போமே !!
வழக்கமான் எச்சரிக்கை
நீங்கள் எடுத்து வரும் மருத்துவம், மருந்துகள் எதையும் தகுந்த மருத்துவ ஆலோசனையில்லாமல் நிறுத்த வேண்டாம்
உடலுக்கும் மனதுக்கும் பழக்கப்பட்டுப்போன எதையும் திடீரென்று நிறுத்துவது சரியல்ல
Mudras don’t replace your regular medical treatment
They may supplement it
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
30072022 சனிக்கிழமை
சர்புதீன் பீ