Friday, 30 September 2022

மூலிகை அறிமுகம் புளி

 மூலிகை அறிமுகம்

புளி

0110 2022 சனிக்கிழமை
அறு சுவைகளில் ஒன்றான புளிப்புபைக் கொண்ட
புளிக்கு அறிமுகம் தேவை இல்லை
உப்பு, புளி மிளகாய் இல்லாமல் சமையல் ஏது?
அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் புளி ஒரு மிகச் சிறந்த ,பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்
புளியின் மருத்துவ குணங்கள் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்
உடலில் அடிபட்ட வீக்கங்சுளுக்கு
புளிக்கரைசளோடு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ் போல் ஆக்கி அளவான சூட்டில் பற்றுப் போட்டால் உடன் குணம் தெரியுமாம்
நீர்க்கடுப்பு ,அதனால் உண்டாகும் எரிச்சல் , வலிக்கு புளியங்கொட்டை குறிப்பாக அதன் தோல் நல்ல மருந்தாகுமாம்
கோடை வெப்பத்தில் உடல் சூடாகி , அதனால் வரும் வயிற்று வலிக்கு
புளிக்கரைசல் , கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்
எங்கள் ஊர்பக்கம் (திருப்பதூத்ர் , காரைக்குடி) கோடைக் காலத்தில் திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு இது போன்ற ஓன்று பானகம் என்ற பெயரில் வழங்கப்படும் . நல்ல சுவை – மலரும் நினைவுகள்
நோய் எதிர்ப்பு சக்தி ,
புற்று நோய் உயிரணுக்கள் வளர்ச்சியை தடுப்பது ,
பித்தம் தணிப்பது , வாய்வுத்தொல்லை, வயிற்று மந்தம் வயிற்றுபோக்குவாந்தி மலச்சிக்கலை சரி செய்தல் ,
சதை நரம்புகளைச் சுருங்க வைத்தல் ,
உடலுக்கு வெப்பம் ,குளிர்ச்சி தருதல் ,
பித்தம் போக்குதல் ,
சிறுநீர் பெருக்கல் ,
ஆண்மை அதிகரித்தல்
கண்வலி கண் சிவப்பு ,கருப்பை இறக்கம் சரி செய்தல்
பல், ஈறு தொடர்பான பல நோய்களை சரி செய்தல்
செரிமானகோளாறு , வயிற்றுப் புண் ,வயிற்று வலியை சரி செய்தல்
எலும்பு தேய்மானம் – அதனால் வரும் மூட்டு வலியை சரி செய்தல்
காய்சல் , பிள்ளைப் பேறினால் உண்டாகும் களைப்பை நீக்குதல்
உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல்
உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைத்தல்.
கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்துதல்
என்று பல மருத்தவப் பயன்கள் கொண்டது
புளி புளிய இலை, பூ, பிஞ்சு , காய் பழம் , மரப்பட்டை எல்லாம் மருத்துவ குணம் கொண்டவை
இவை எல்லாம் தனியாகவும் , பிற மருந்துப் பொருள்களோடு சேர்ந்தும் மருத்துவப் பயன் தருகின்றன
வழக்கமான எச்சரிக்கை
இது ஒரு மூலிகை அறிமுகப் பகுதி
மருத்துவக் குறிப்புப் பகுதி அல்ல
புளி நம் உணவில் தினமும் சேர்க்கும் பொருள் என்றாலும் மருத்தவப் பயன் என்று வரும் போது அனுபவம் மிக்க தகுதி வாய்ந்த மருத்துவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்
ஒரு நாளைக்கு ஒருவருக்கு 10 கிராம் புளி போதும் என்கிறார்கள்
அளவு மிஞ்சும்போது பல விரும்பத் தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம் :
(இது புளிக்கு கூடுதல் எச்சரிக்கை )
பித்தப்பை கற்கள் , அதன் தொடர்ச்சியாக மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு
சர்க்கரை அளவு வீழ்ச்சி (low sugar)
குருதி நாளங்கள் (Blood vessels) சுருங்கி குருதி ஓட்டம் தடைப்படுதல்
புளிப்புத் தன்மையால் பற்களுக்கு பாதிப்பு
ஒவ்வாமை
இதையெல்லாம் அறிந்துதான் நம் முன்னோர்கள் சற்று அச்சத்தை உண்டாக்கும் விதமாக புளி(புலி ) என்று பெயர் வைத்தார்களா?!
அளவறிந்து பயன்படுத்தி புளி புலியாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வோம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01102022சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of food
Like
Comment
Share

Thursday, 29 September 2022

திருமறை குரான் 3:97 மகாமே இப்ராஹிம்

 திருமறை குரான்

3:97 மகாமே இப்ராஹிம்
30 092022 வெள்ளி
“----------அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராகிம் நின்று தொழுத இடமும் உள்ளான------------------“
இது குரானின் எந்தப்பகுதியில் வருகிறது ?
விடை
சுராஹ் ஆலுஇம்ரான்(3) வசனம் 97
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாரூக் – முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத்
சகோ சிராஜுதீனின் 2: 125 என்ற விடை பொருள் அளவில் சரியாக இருக்கிறது
அவருக்குப் பாராட்டுகள்
வசனம் , விளக்கம்
பொருள் நன்கு புரிவதற்காக 3:97, அதற்கு முந்திய 3:96
இரண்டையும் பார்ப்போம்
“நிச்சயமாக மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத் தலம் மக்காவில் உள்ளதே ஆகும்
அருள் நலம் வழங்கபட்ட இடமாகவும் அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது (3:96)
அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராகிம் நின்று தொழுத் இடமும் (மக்கமே இப்ராகிம்) உள்ளன
அங்கு எவர் நுழைந்தாலும் அவர அச்சம் நீங்கியவ்ராகி விடுகிறார்
மேலும் அங்கு சென்று வர சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது
ஏக இறைவனுக்காக ஆற்ற வேண்டிய கடமையாகும்
இகாட்டளையை யாரேனும் செயல் படுத்த மறுத்தால் ---
(அவர் அறியட்டும் ) இறைவன் உலகத்தாரை விட்டு தேவை அற்றவனாய் இருக்கிறான் (3:97)
வசனங்கள் தெளிவாக , விளக்கமாக இருக்கின்றன
வணக்கத் தலமான பைத்துல் முகத்தசை விட காபா பழமையானது என்பதை இறைவனே உறுதியாகாச் சொல்கிறான்
மேலும் ஹஜ் புனிதப் பயணம் இறைவன் விதித்த கட்டளை என்பதும் தெளிவாகிறது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
03 ரபி உல் அவ்வல்(3) 1444
30092022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

Tuesday, 27 September 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 16 இலக்கணக் குறிப்பு அடுக்குத் தொடர் இரட்டைக் கிளவி

 தமிழ் மொழி அறிவோம்

வேப்பங்கனி 16
இலக்கணக் குறிப்பு
அடுக்குத் தொடர்
இரட்டைக் கிளவி
28092022 புதன்
நேற்றையபதிவில்
வினைத் தொகை
பற்றிப் பார்த்தோம்
நிறைவாக
காற்று சிலு சிலுவென்று வீசியது
கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறக்கின்றன
சிலு சிலு , கூட்டம் கூட்டமாக என்ற சொற்கள் இவற்றில் இரு முறை வருகின்றன
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன
என்று கேட்டிருந்தேன்
விடை
கூட்டம் கூட்டமாக – அடுக்குத் தொடர்
சிலு சில – இரட்டைக் கிளவி
வினாவைப்போல் விளக்கமும் மிக எளிதானது
கூட்டம் கூட்டமாக
இதை இரண்டாகப் பிரித்தாலும் பொருள் தரும்
எ-டு
மிகப் பெரிய கூட்டம்
கூட்டமாகத் திரியும் மான்கள்
இதுபோல் இரண்டாகப் பிரித்தாலும் பொருள் வந்தால்
அது அடுக்குத் தொடர்
சிலு சிலுவென்று
இதை இரண்டாகப் பிரித்தால் பொருள் வராது
சிலு காற்று வீசியது என்றோ
சிலுவென்று காற்று வீசியது என்றோ
சொல்ல முடியாது
இவ்வாறு பொருள் இல்லாவிட்டாலும் சொல்ல வந்ததை மேன்மைப் படுத்திச் சொல்வது
இரட்டைக் கிளவி
சிரித்தாள்
என்று சொல்வதற்கும்
கல கலகலவென்று சிரித்தாள்
என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை எளிதில் உணரலாம்
(யார் கண்டது போகிற போக்கில்
கல கலகலவென்று சிரித்தாள்
என்பதை
கல 2 என்று சிரித்தாள்
என்று எழுதலாம் என்று ஒரு புதிய விதி வந்தாலும் வரலாம்
அடையார் ஆனந்த் பவன் என்பதை A2B என்று சொல்வது போல் )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்
ஷர்மதா
ஷிரீன் பாருக்
செல்குமார்
செங்கை A சண்முகம்
பாதி விடை அனுப்பிய சகோ நஸ்-ரீனுக்கு 50% பாராட்டுகள்
இந்த வினாவுக்கு பலரும்
இரட்டைக் கிளவி என்று மட்டும் விடை அனுப்பியிருந்தார்கள்
கிளவி என்ற சொல் ஒரு மூதாட்டி என்ற பொருளில் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் எனநினைக்கிறேன்
கிளவி= சொல்
மூதாட்டியைக் குறிப்பது கிழவி என்ற கிளவி (சொல்)
இன்றைய வினா
குற்றிய லுகரம் என்றால் என்ன ?
(எளிய வினா என்று சொல்ல மாட்டேன்
தெளிவாக எளிமையாக விளக்கும் அளவுக்கு புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது
எனவேதான் சகோ நெய்வேலி ராஜா நான் கேட்டவுடனே விளக்கமான விடை அனுப்பி விட்டார் என்றாலும் ஒரு வார இடைவெளி இருக்கும்படி இன்று வினாவைப் போட்டிருக்கிறேன் )
விடை அனுப்பும் அறிஞர் பெருமக்கள் எளிய விளக்கமும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
இறைவன் நாடினால் சகோ ராஜாவின் விடை விளக்கக் உங்கள் விடை விளக்கம் அதற்கு மேல் தேவைபட்டால் என் விளக்கம் எல்லாவற்றையும் 0410 2022 செவ்வாயன்று வேப்பங்கனியில் சிந்திப்போம் சுவைப்போம்
௨௮௦௯௨௦௨௨
28092022 புதன்
சர்புதீன் பீ


[28/09, 09:33] Noushsad: சலசல சலசல
இரட்டைக் கிளவி தகதக
தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில்
உண்டல்லோ
பிரித்து வைத்தால்
நியாயம் இல்லை பிரித்துப்
பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
[28/09, 09:33] Noushsad: Jeans movie song - கண்ணோடு காண்பதெல்லாம்
சகோ நௌசாத்
அனுப்பிய எளிய விளக்கம்
May be an image of text that says "இரட்டைக்கிளவி அடுக்குத்தொட"
3 shares
Like
Comment
Share

Monday, 26 September 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 15 இலக்கணக் குறிப்பு வினைத் தொகை

 தமிழ் மொழி அறிவோம்

வேப்பங்கனி 15
இலக்கணக் குறிப்பு
வினைத் தொகை
முந்திய பதிவில்
“ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்”
பற்றிப்பார்த்தோம்
அதன் நிறைவில்
“ஊறுகாய் “
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன ?
என்று கேட்டிருந்தேன்
விடை விளக்கம் பார்க்கு முன் சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப பெறுபவரகளைப் பார்ப்போம்
சகோ
ஷிரின் பாருக் =-முதல் சரியான விடை
குமாரசாமி ஹிதயத் ஷர்மதா..
சிராஜுதீன் தல்லத் ஹசன் அலி
செல்வகுமார்
விடை விளக்கம்
“ஊறுகாய் “ இலக்கணக் குறிப்பு
வினைத்தொகை
இந்தச் சொல் இரண்டு பகுதிகள் கொண்டது
ஊறு—வினைச் சொல்
காய் – பெயர்ச் சொல்
• ஊறிய காய்-கடந்த காலம்
• ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
• ஊறும் காய்-எதிர்காலம்
கணிதத்தில் சில விதிகளை பார்முலா ) மனதில் வைத்துக் கொள்வோம்
இலக்கணத்திலும் அது போல் சில விதிகள் உண்டு
போன பதிவில் ஈறு கெட்ட எதிர் மறையைக் கண்டுபிடிக்க ஒரு விதி குறுக்க வழி என்று போட்டிருந்தேன்
வினைத் தொகைக்கு
ஓன்று அது வினைச் சொல்லும் பெயர்ச்சொல்லுமாக இரண்டு சொற்கள் கொண்டதாய் இருக்க வேண்டும்
அடுத்து
அதில் உள்ள வினைச் சொல்
மூன்று காலங்களையும் குறிப்பதாய் இருக்க வேண்டும்
எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் தெளிவாகும்
• 1)படர்கொடி
o படர்ந்த கொடி-கடந்த காலம்
o படர்கின்ற கொடி-நிகழ்காலம்
o படரும் கொடி-எதிர்காலம்
o
• 2)சுடுசோறு
o சுட்ட சோறு-கடந்த காலம்
o சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
o சுடும் சோறு-எதிர்காலம்
o
• 3)குடிநீர்
o குடித்த நீர்-கடந்த காலம்
o குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
o குடிக்கும் நீர்-எதிர்காலம்
வினைத்தொகை – ஓரளவுக்கு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்
நிறைவாக இன்றைய வினா
மீண்டும் ஒரு எளிய வினா
காற்று சிலு சிலுவென்று வீசியது
கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறக்கின்றன
சிலு சிலு , கூட்டம் கூட்டமாக என்ற சொற்கள் இவற்றில் இரு முறை வருகின்றன
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை வேப்பங்கணியை சுவைத்து சிந்திப்போம்
௨௭௦௯௨௦௨௨
27092022 செவ்வாய்
சர்புதீன் பீ
May be an image of text that says "னைத்தொகை"
4 shares
Like
Comment
Share