Wednesday, 31 May 2023

5 மாதங்கள் review pp

 



5 மாதங்கள் கடந்து விட்டன இந்த ஆண்டில்

புதிய ஆண்டில் சில புதிய பகுதிகள் துவங்கினேன்

இன்னும் சோதனை ஓட்ட நிலையில்தான் இருக்கிறது

அதனாலேயே மாதா மாதம் review போட முடியவில்லை

 

துவக்கப்பட்ட  புதிய பகுதிகள்

பழைய பதிவுகளை மீண்டும் போடும்

புதுப்பொலிவில்

அறிவியல்

இந்த ஆண்டில் குழுவில் உள்ள மற்ற சகோக்களின் பதிவுகளைப் போடத் துவங்கினேன்

 

5 மாதத்தில் ரம்ஜான் மாதம் போக 4 மாதத்தில்

சகோக்கள் அனுப்பிய 19 பதிவுகள் வெளியிட்டிருக்க்றேன்

சகோ

சாஜித் 4

தல்லத் 3

ஷர்மதா 3

அஜ்மல், சிராஜ், , நஜீமா , ஹிதயத் each 2

அஷ்ரப் ஹமீதா 1

 

Subject wise

குரான் 4

ஆங்கிலம் 5

அறிவியல் 4

மற்றவை 6

தமிழ் பதிவு ஓன்று கூட வரவில்லை

பதிவுகள் அனுப்பிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

 

இன்னும் நிறைய அனுப்பலாம்

இதை அனுப்பலாமா என்ற தயக்கம் இன்றி எதையும்

அனுப்பலாம்

எளிய மொழியில் , பயனுள்ளதாக , படிக்க சுவையாக இருத்தல் வேண்டும்

 

எடுத்துக்காட்டக

சட்டம் இன்றும் ஒரு இருட்டறையாகவே இருக்கிறது

சட்டம், நீதி மன்ற  , காவல் துறை நடைமுறைகள் பற்றி சின்னச் சின்ன குறிப்புகளாக எழுதலாம்

அது போல் கட்டிடத் துறை

 

சமையல் , மருத்துவக் குறிப்புகள் வேண்டாம் , வேண்டாம்

 

குரான் குறிப்புகள் அனுப்பும்போது உங்கள் வினாவுக்கு விடை, சுருக்கமான விளக்கம் அனுப்ப வேண்டும்

தமிழில் முடியாவிட்டால் ஆங்கிலததில் அனுப்புங்கள்

எழுதுவது சிரமம் என்றால் குரல் செய்தியாக அனுப்பலாம்

 

வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்ட

சமூக ஊடகம் வெறும் பொழுது போக்காக இல்லாமல் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கட்டுமே

அதில் உங்கள் பங்கும் சேரட்டுமே

 

அனைவருக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுகள் நன்றிகள்

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

01062023 வியாழன்

சர்புதீன் பீ

 

Tuesday, 30 May 2023

மாம்பழ (ல)த்து வண்டு

 




மாம்பழ (ல)த்து வண்டு

31052023

 

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் உண்டா ?

கோடைவந்துவிட்டால் வித விதமான மாம்பழங்கள் விற்பனைக்கு வரும்

 

மல்கோவா, பங்கனபள்ளி ,காசலட்டு , ருமானியா என பல பெயர்களில், பல சுவைகளில் மாம்பழம் சாப்பிட்டிருப்பீர்கள்

 

வண்டுண்ட மாம்பழம்

கேள்விபட்டதுண்டா , சுவைத்துண்டா ?

 

வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து அனுபவித்த எங்கள் அத்தாவுக்கு மாம்பழம் என்றால் உயிர்

 

எங்கே கிடைத்தாலும் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்

 

மாம்பழம் சாப்பிட்டுவிட்டு சூடாக பால் குடித்தால் அது மாம்பழத்தின் கேடுகளை நீக்கி முழுதும் சத்தாக மாற்றி விடும்

இது அத்தா சொல்லிக் கொடுத்த பல உணவுக் குறிப்புகளில் ஓன்று

 

நாங்கள் ஆம்பூரில் இருக்கும்போது நிறைய மாம்பழங்கள் கிடைக்கும்

ஆம்பூர் பெங்களூருக்கு அருகில் என்பதால் மல்கோவா பழங்கள் அதிகமாகக் கிடைக்கும்

தோல் பச்சை நிறமாகவே இருப்பது மல்கோவாவின் சிறப்பு  

 

எங்கள் ஊரில் கோடையில் மாம்பழம் நிறைய வரும் ,

அதோடு கண்மாய் வற்றும்போது விரால் மீன்கள் மலிவாக விற்பார்கள்

விளைவு எங்கு பார்த்தாலும் கொய் என்று ஈ மொய்க்கும்

அதற்காக ஒன்றை ஓன்று சுவையில் மிஞ்சும் விரால் மீனையும் மாம்பழத்தையும் சாப்பிடாமல் விட முடியுமா !

பொதுவாக எங்கள் ஊர் மக்களுக்கு சுவை அறியும் திறன் அதிகம் ( நாக்கு நீளம் என்று சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்கும் )

குறைந்த செலவில் நிறைந்த சுவை – இது எங்கள் ஊரின் சிறப்பு

பொடிக் கறிக் குழம்பு , ரொட்டி குழம்பு சுவை பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன்

தெரு ஓரங்களில் இட்லி விற்பவர்கள் தண்ணியாக ஒரு தேங்காய் சட்னி கொடுப்பார்கள்

அது இப்போது திருப்பத்தூர் சட்னி என்ற பெயரில் யூ டிபில் எங்கள் ஊரின் பெயரையும் சுவையையும்  பரப்பி வருகிறது

70 வயதான இளைஞர் எங்கள் சச்சா . சளைக்காமல் 4,  5 கி மீ நடந்து அச்சுக்கட்டில் போய் இட்லி வாங்கி வருவார்  காரணம் அங்கு சாம்பார் சுவையாக இருக்குமாம்

 

சரி வண்டுண்ட மாம்பழம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்ற உங்கள் உரத்த சிந்தனை என் காதில் விழுகிறது

 

எங்கள் ஊரில் கரீம் அண்ணன் கடையை அறியாத என் வயதினர் இருக்க முடியாது

மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு மினி சூப்பர் மார்கெட்

தின்பண்டங்கள் , வெற்றிலை பாக்கு , சோடா, பழங்கள் எல்லாம் இருக்கும்

இட்லி வடிவில் வெள்ளை நிறத்தில் ஒரு துணி சோப்பு –பெயரே இட்லிக் கட்டிதான் இந்தக் கடையின் சிறப்புகலீல் ஓன்று

 

கோடையில் இங்கும் நிறைய மாம்பழங்கள் விற்கும்

அங்குதான் வண்டுண்ட மாம்பழம் பற்றி கேள்விப்பட்டேன் , சுவைத்திருக்கிறேன்

மாம்பூவில் உள்ள மதுவை அருந்த வரும் வண்டு பூவில் முட்டை இட்டு விடும்

முட்டை குஞ்சாகி வண்டாகி பறப்பதற்குள் மாம்பூ பிஞ்சாகி காயாகி கனிந்து விடும் . அதனால் வண்டு வெளியே பறக்க முடியாது

காற்றே இல்லாவிட்டலும் மாம்பழத்தில் உள்ள சர்க்கரை சத்தை உண்டு உயிர் வாழும்

பழத்தை நறுக்கும்போதோ கடித்துத் தின்னும்போதோ வண்டு சர் என்று பறந்து செல்லும்

இதுதான் வண்டுண்ட மாம்பழம்

 

(அப்படி இல்லைஎன்றால் பழம் அழுகும்போது எளிதாகப் பறந்து விடுமாம் வண்டு )

 

சரி வண்டுண்ட மாம்பழத்துக்கு தனி ஒரு சுவை உண்டு என்பது உண்மையா ?

 

ஆம் என்கிறார்கள் உண்டு சுவைத்தவர்கள்

மனிதனுக்கு இல்லாத ஒரு சக்தி வண்டுக்கு உண்டு

எந்த மரத்துக்கு செயற்கை உரம் , மருந்துகள் அதிகம் சேர்க்கவில்லையோ அந்த மரத்தின் பூவில் உள்ள மதுவைத்தான் வண்டு தேடிப் பிடித்து உண்ணுமாம் .

.இயற்கையாகப் பழுத்த பழத்துக்கு சுவை அதிகம் தானே

எனவே நீங்களும் வண்டுண்ட பழத்தை தேடிப் பிடித்து உண்ணுங்கள்

 

இ(க)டைச்செருகல்

சீர்காழி கோவித்த ராஜன் பாட்டுக் கச்சேரி சென்னை மாம்பலத்தில்

மாம்பழத்து வண்டு என்பதை மாம்பலத்து வண்டு என்று பாடி மக்களை மகிழ்வித்தாரம்

( அதே போல் மும்பையில் அவர் கச்சேரியில் ஆடு பாம்பே என்ற பாடல்- பாம்பே என்பதை நீட்டி பலமுறை பாடினாராம் )

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

31052023புதன்

சர்புதீன் பீ

 

 

Monday, 29 May 2023

ஜீன்ஸ் genes

 




ஜீன்ஸ்

30052023
ஜீன்ஸ் – இளமையான ஐஸ்வர்யா ராய்நடித்த படம்
ஜீன்ஸ் ஆடைகள்
இதெல்லாம் நினைவுக்கு வரும்
ஆனால் நாம் பார்க்கப்போவது வேறு
மரபணுக்கள் எனும் ஜீன்ஸ் Genes பற்றி
இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம், சலிப்பு உண்டாவது இயற்கை
இதற்கு விடையாக சென்னையில் சில நாட்கள் முன்பு குடும்ப நிகழ்வில் சந்தித்த ஒருவர் பற்றிப் பார்ப்போம்
வந்திருந்த எல்லோருக்கும் அவர் நெருங்கிய உறவினர் . படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைக்குப்போய்விட்ட அவரை யாருமே சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில்லை
ஆனால் எல்லோருக்குமே அவரை இனம் கண்டு கொள்ள முடிந்தது
காரணம் அவரின் அத்தாவைப்போலவே முக அமைப்பு ,குரல்
இவற்றையெல்லாம் கட்டமைப்பது மரபணுக்கள்தான்
மரபணுக்கள் பற்றிபார்க்குமுன் நம் உடல் பற்றிய சில அடிப்படைசெய்திகளை சுருக்கமாகப் பாப்போம்
அறிவியல், தொழில் நுட்பம் உயிரியல் என எப்படிப்பார்த்தாலும் மனித உடலுக்கு இணையாக இது வரை எதுவும் இவ்வுலகில் இல்லை
ஒரு செயற்கை காலின் விலையென்ன,
சின்னஞ்சிறு சிறுநீரகம் பழுது பட்டால் எவ்வளவு பொருட்செலவு எல்வளவு வலி உடலிலும் மனதிலும்
இப்படியே கணக்க்குப பார்த்தால் மனித உடலுக்கு விலையே சொல்ல முடியாது
ஒரு பெரிய நிறுவனம் – வங்கி தலைமை அலுவலகம் என்று வைத்துக்கொள்வோம்
பணி அடிப்படையில் மனித வளம், கடன்,வழங்குதல், கடன் வசூல் , வெளி நாட்டு வணிகம் என பல பிரிவுகளை உள்ளடக்கிஇருக்கும்
அதே போல் நம் உடலும் பணி அடிப்படையில் 10 மண்டலங்களாகப் பிரிக்கபாட்டிருக்கிறது
எளிதில் புரியும் எடுத்துக்காட்டு செரிமான மண்டலம் (Digestive system )
இந்த மண்டலத்தில் இரைப்பை , சிறுகுடல் , பெருங்குடல் ,,பற்கள் உமிழ் நீர் சுரப்பிகள் என பல உறுப்புகள்
ஒவ்வொரு உறுப்பும் பல திசுக்களால் ஆனது
பலகோடிஉயிரனுக்கள் (செல்)களால் உருவானவை
திசுக்கள்
திசு(க்கள்)உறுப்புகள்  மண்டலம்  உடல்
Cells tissues organs system body
செல்கள் உடலின் அடிப்படை அமைப்பு basic unit ஆகும்
புரிந்து கொள்வதற்காக மட்டும் கட்டிடத்தில் செங்கல் போல என்று வைத்துக்கொள்ளலாம்
மற்றபடி செங்கல் உயிரற்ற ஓன்று
ஆனால் கண்ணுக்குத் தெரியாத சிறியசெல் உயிருள்ள ஒரு உலகம் என்றே சொல்லலாம்
செல் பற்றி இப்போதைக்கு இவ்வளவு போதும்
நாம் பார்க்கப்போகும் ஜீன்ஸ் எனும் மரபணுக்கள் இருப்பது இந்த செல்களுகுள்தான்
ஜீன்ஸ் பற்றி பார்ப்போம்
முன் குறிப்பு
இது ஒரு தொழில் நுட்பப் பதிவு
கூகிளில் தேடி எளிதான செய்திகளைக் கண்டறிந்து கூகிளில் மொழி மாற்றம் செய்து அதன் பின் தேவையான மாற்றங்கள் செய்து பதிவிடுகிறேன்
Source
What Is a Gene? (for Kids) - Nemours KidsHealth
ஜீன்ஸ்
ஜீன்கள் genes நாம் எப்படி இருக்கிறோம் , உயரம் எவ்வளவு, நிறம் என்ன போன்ற பலவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கள் யார், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை உருவாக்கும் தகவலை அவை கொண்டு செல்கின்றன:
சுருள் அல்லது நேரான முடி, நீண்ட அல்லது குட்டையான கால்கள், நீங்கள் எப்படி சிரிக்கலாம் என்ற பல செய்தி கள் மரபணுக்கள் மூலம் ஒரு குடும்பத்தில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்படுகின்றன
.
மரபணு என்றால் என்ன?
உங்கள் பண்புகளை (traits ) தீர்மானிக்கும் தகவலை மரபணுக்கள் கொண்டு செல்கின்றன, அவை உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்படும் - அல்லது மரபுரிமையாக (inheritance) இருக்கும் பண்புகள்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் சுமார் 25,000 முதல் 35,000 மரபணுக்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, உங்கள் பெற்றோர் இருவருக்கும் கண்கள்நீலநிறமாக இருந்தால், அவர்களிடமிருந்து நீலக் கண்களுக்கான பண்பை நீங்கள் பெறலாம்.
உங்கள் அம்மாவுக்குப்முகத்தில் சிவப்புப் புள்ளிகள் இருந்தால், உங்களுக்கும் அது
வரலாம் ,
மரபணுக்கள் மனிதர்களில் மட்டுமல்ல - அனைத்து விலங்குகள் தாவரங்களுக்கும் உள்ளன.
இந்த முக்கியமான மரபணுக்கள் எங்கே இருக்கின்றன
அவை மிகவும் சிறியவை, நீங்கள் அவற்றைப் பார்க்க முடியாது. குரோமோசோம்கள்(Chromaoomes) எனப்படும் சிறிய அமைப்புகளில் மரபணுக்கள் காணப்படுகின்றன
குரோமோசோம்கள் செல்களுக்குள் காணப்படுகின்றன.
உங்கள் உடல் பில்லியன் கணக்கான செல்களால் ஆனது.
செல்கள் அனைத்து உயிரினங்களையும் உருவாக்கும் மிகச் சிறிய அலகுகள்.
ஒரு செல் மிகவும் சிறியது, அதை நீங்கள் ஒரு வலுவான நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும்.
குரோமோசோம்கள் இரண்டு அல்லது இரட்டைப்படை எண்களின் (even numbers like 2, 4 14 )தொகுப்புகளில் வருகின்றன,
ஒரு குரோமோசோமில் நூற்றுக்கணக்கான - சில நேரங்களில் ஆயிரக்கணக்கான - மரபணுக்கள் உள்ளன.
குரோமோசோம்கள் மரபணுக்கள் டிஎன்ஏவால் ஆனவை, இது டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தின் சுருக்கம்.(DNA- Deoxy ribo nuclic acid )
பெரும்பாலான செல்கள் nucleus எனும் கருவைக் கொண்டுள்ளன
நியூக்ளியஸ் என்பது செல்லின் மூளை போல் செயல்படும் செல்லின் உள்ளே இருக்கும் ஒரு சிறிய முட்டை வடிவ அமைப்பாகும்
. செல்லின் ஒவ்வொரு பகுதியு ம் என்ன செய்ய வேண்டும் என்று இது சொல்கிறது.
ஆனால், கருவுக்கு எப்படி இவ்வளவு தகவல்கள் தெரியும்?
இதில் நமது குரோமோசோம்களும் மரபணுக்களும் உள்ளன.
எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நீங்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அகராதியை விட அணுக்கருவில் அதிக தகவல்கள் உள்ளன.
மனிதர்களில், ஒரு செல் அணுக்கருவில் 46 தனித்தனி குரோமோசோம்கள் அல்லது 23 இணை குரோமோசோம்கள் உள்ளன (குரோமோசோம்கள் இணைகளாக வருகின்றன, 23 x 2 = 46).
இந்த குரோமோசோம்களில் பாதி ஒரு பெற்றோரிடமிருந்தும், பாதி மற்ற பெற்றோரிடமிருந்தும் வருகின்றன.
நுண்ணோக்கியின் கீழ், குரோமோசோம்கள் வெவ்வேறு நீளம் மற்றும் கோடு வடிவங்களில் வருவதை நாம் காணலாம்.
அவை அளவிலும்ம் வடிவத்திலும் வரிசையாக இருக்கும் போது, முதல் இருபத்தி இரண்டு இணைக்ள் ஆட்டோசோம்கள் என்று
அழைக்கப்படுகின்றன; இறுதி இணை குரோமோசோம்கள் செக்ஸ் குரோமோசோம்கள்,
எக்ஸ் , ஒய் என்று அழைக்கப்படுகின்றன. .பாலின குரோமோசோம்கள் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கின்றன: பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன, ஆண்களுக்கு ஒரு எக்ஸ் ஒரு ஒய் உள்ளது.
ஆனால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் செல்களுக்குள் 46 குரோமோசோம்கள் இருப்பதில்லை. உதாரணமாக, ஒரு பழ ஈ செல் நான்கு குரோமோசோம்களை மட்டுமே கொண்டுள்ளது!
என்ன எதாவது புரிந்தது போல்
இருக்கிறதா ?
இன்னும் நிறைய –
மரபணுக்கள் எப்படி இயங்குகின்றன
அவற்றில் வரும் பிரச்சனைகள் என்ன
மரபணு மருத்துவம் Gene Therapy என்றால் என்ன ?
இவையெல்லாம் அடுத்த பகுதியில்
Picture -chromosomes
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
30052026
சர்புதீன் பீ

Sunday, 28 May 2023

ஓய்வின் பலன்கள் மரு கண்ணன் முருகேசன்

 


·

ஓய்வின் பலன்கள்

மரு கண்ணன் முருகேசன்

29052023

 

பணியில் சேர்ந்தவர் ஒய்வு பெறுவது என்பது முன்னரே காலம் உறுதி செய்யப்பட்ட ஒரு நிகழ்வு

How to retire gracefully என்பது ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஓன்று

குறிப்பாக வங்கி ஓய்வூதியர்களுக்கு ஒரு  பெரிய குறை –மிகக் குறைவான ஓய்வூதியம் என்று

 

எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை

NLC போன்ற மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஓய்வூதியம் கிடையாது

 

ஓய்வின் பலன்கள் என்ற தலைப்பில்

மரு. கண்ணன் முருகேசன்

முகநூல் ஒன்னரைப்பக்க நாளேடு குழுவில் எழுதிய பதிவை

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

மருத்துவர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் என பல பெரிய பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவர்

பணி ஓய்வுக்குப்பின் மருத்துவர்கள் கூட பணியாற்றுவது தேவையற்றது என்பது அவர் கருத்து

 

படித்த படிப்பு , அனுபவம் வீணாகக் கூடாது என்று நினைத்தால் கட்டணமில்லா மருத்துவ சேவை செய்யலாமே என்கிறார்

தான் படித்தது பல இடங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றியது , ஓய்வுக்குப்பின் மேற்கொண்ட பயணங்கள் எல்லாம் [பற்றி எளிய இனிய தமிழில் எழுதி வருகிறார்

இவர் துணைவியும் மருத்துவர்  

 

 

 

 

ஓய்வின் பலன்கள்

ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் சந்திக்கும்போது, பேசிக் கொள்ளும் ஒரு சங்கதி என்னவென்றால், அது பெரும்பாலும் அவர்களது பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பணவரவு எந்த முறையில் கிடைக்கும் என்பதைப் பற்றித்தான்.

 ஓய்வு ஊதியம் (pension), கருணைத் தொகை (gratuity), வருங்கால வைப்பு நிதி (provident fund), பங்குச் சந்தை நிலவரம் (Share market), பரஸ்பர நிதி (mutual fund), வங்கி வைப்பு நிதி (Fixed deposit), ஆயுள் காப்பீடு (Life insurance) மருத்துவக் காப்பீடு (medical insurance), என்று இவற்றைப் பற்றி அதிகம் பேசிக் கவலைப்படவே அதிக வாய்ப்புள்ளது.

 ஓய்வு நாள் நெருங்க நெருங்க, நாள் தோறும் ஓடி ஓடி உழைத்த வாழ்க்கை, இனிமேல் எப்படி நகரும் என்ற ஒருவித அச்சம் மனதில் தோன்றுவது இயற்கை.

கண்ணதாசன் அவர்கள் சொன்ன ஒரு விளக்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘Retired’ என்றால் என்ன அர்த்தம் என்ற வினாவுக்கு, ‘மனிதன் தனது இள வயதில் உழைப்புக்காக ஓடத் தொடங்குகிறான். நாற்பது வயதானதும் ‘tired’ ஆகிறான். இருப்பினும் இன்னும் பல பொறுப்புகள் உள்ளதே, என்ற கவலையில் மீண்டும் ஓடத் தொடங்குகிறான். பின்னர் அறுபது வயதில் ‘re tired’ ஆகிறான்’ என்று நகைச்சுவையான விளக்கம் தந்தார். ஒருவிதத்தில் அது உண்மைதான்.

 நாற்பது வயதில் ஒருவருக்கு, பள்ளி அல்லது கல்லூரி படிக்கும் மகனோ, மகளோ இருக்க வாய்ப்புண்டு. அவர்களது கல்வி, வேலை, பின்னர் திருமணம் என்று ஏற்பாடு செய்ய உழைத்தாக வேண்டும். அது அறுபது வயதுக்குள் நிறைவேறிய பின் ஏற்படும் சோர்வு (tiredness) சொல்லி மாளாது.

நம்ம ஊரில்தான் இந்தப் பிரச்னை. பல அயல் நாடுகளில், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பு வரைதான் உதவுகிறார்கள். அவர்களுக்குப் பதினேழு வயதானதும், தானாகவே பெற்றோரை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் பெற்றோருடன் இருப்பது அங்கு கேவலமாகப் பார்க்கப்படுகிறது. கல்லூரிப் படிப்பு, அங்கு பல பேருக்கு நிறைவேறாத ஆசை. வங்கி உதவித் தொகையாலோ அல்லது வேலை செய்தோதான் மேற்படிப்புக்குப் பலர் செல்கின்றனர். எல்லாவற்றிலும் மேலை நாடுகளைக் காப்பியடிக்கும் நம் இளைய தலைமுறை, இதில் மட்டும் பெற்றோரைச் சார்ந்திருப்பது பலருக்கு வேதனைதான்.

இன்றைக்கும், இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்க மனிதரின் சராசரி வாழ்வில், ‘ஒரு வாகனம், ஒரு வீடு, வீட்டு வசதிப் பொருட்கள், ஓரளவு நகை மற்றும் சேமிப்பு தேவை’ என்ற பல்லவிதான் அதிகம் கேட்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் அறுபது வயதுக்குள் இந்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பு. (நான் கூறுவது ஒழுங்காக ஊதியம் மட்டுமே பெற்று வாழ்வு நடத்தும் மக்களைப் பற்றி). ஆனால் நமது மக்கள் ஓய்வுக்குப்பின் சும்மா இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அவ்வாறு இல்லையென்பது எனது ஆய்வில் நான் கண்ட உண்மை. ‘கைகால்கள் நன்றாகத்தானே உள்ளது. ஏன் வீட்டில் முடங்க வேண்டும்? வேலை செய்தா, அல்லது ஏதேனும் சிறிய தொழில் தொடங்கினால் வருமானம் வரும். அதை வைத்து பேரன் பேத்திகளுக்கு ஏதாவது செய்யலாமே’ என்று ஆசைப்படுபவர்கள் பலர்.

ஏராளமான மருத்துவர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை மருத்துவம் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன். கேட்டால், என் அறிவும், திறமையும் வீணாகப் போவதில் விருப்பமில்லை என்ற பதில் வரும். எனது பேராசிரியர்கள் பலர் தொண்ணூறு வயதிலும் மருத்துவம் பார்த்து சம்பாதித்தனர். இலவசமாக மருத்துவம் பார்க்க ஒருவருக்கும் விருப்பமில்லை. இதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய மனிதர்கள் ஒதுங்கிக்கொண்டு புதியவர்களுக்கு வழி விட்டால்தான், அவர்களுக்கும் அனுபவமும், பொருளும் கிடைக்கும். புதியவர்களின் திறமையும் அறிவும் உலகுக்குத் தெரிய வரும். ஒருவர் நன்றாக விளையாடுகிறார் என்பதற்காக, அவரை வாழ்நாள் முழுதும் விளையாட விடாமல், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விளையாட்டுத் துறை போல் எல்லோரும் இருப்பது நல்லது. எனவேதான் நான் என் பணியிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றேன்.

வரும் தலைமுறைகளுக்கும் சேர்த்து, சொத்துகள் சேர்க்கும் மக்கள், ‘உழைத்துதான் அதை ஈட்ட வேண்டும்’ என்ற நல்ல தாரக மந்திரத்தை, இளைய தலைமுறையினருக்கு சொல்லித் தர மறுக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்காமல் கிடைக்கும் எதன் மீதும் மக்களுக்கு மதிப்பிருக்காது. இது போன்ற இலவச சொத்துக்கள், மனிதனை சோம்பேறியாக்கிப் பல வேண்டாத தீய வழிகளை நாடத் தூண்டும் என்பதை மக்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் உணர்வதில்லை.

பின்னர் அறுபது வயதுக்கு மேல் நேரத்தை எப்படித்தான் கழிப்பது என்ற கேள்விக்கு விடையை, அவரவர் வாழ்க்கை முறையிலிருந்துதான் அவரவர் பெற வேண்டும். ஒன்று நிச்சயம். ஒரு மனிதன் வாழ்நாள் முழுதும் குடும்பம், பிள்ளைகள், உடன் பிறந்தோர் என்று பிறருக்காகவே வாழ்வது வழக்கமான நிகழ்வு. கடமைகள் முடிந்த, அறுபதுக்கு மேல்தான் ஒருவர் தனக்காக வாழும் வாழ்வு தொடங்குகிறது. அப்போதாவது தனக்குப் பிடித்த வாழ்வை வாழ முயற்சிப்பதே சிறப்பு. நிறைவேற முடியாத சில கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கலாம். புது கலை ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். எனது துணைவியார் அறுபது வயதுக்கு மேல் கற்றுக்கொண்ட க்ரோஷே (crochet) கலை இப்போது அவருக்குக் கை கொடுக்கிறது. எனது நெடுநாள் ஆசையில் ஒன்றான எழுதும் எண்ணம் எனக்கு வந்ததும் அவ்வண்ணமே. செலவுகள் குறைவாக இருக்கும் இந்தப் பருவத்தில் தேவைகளும் குறைந்து விடும். ‘உண்பது நாழி; உடுப்பது இரண்டே’ என்ற தத்துவம் புரியும் நேரம்.

எனவே சேமிப்பிலோ அல்லது ஓய்வூதியத்திலோ குடும்பம் நடத்துவது அவ்வளவு சிரமமாக இருக்காது. ஒரு அரை விழுக்காடு வட்டி கூட வருகிறதென்று வங்கிகளுக்கு மாறி மாறி வீணே அலைவதோ, அல்லது அதிகவட்டி தருகிறோம் என்னும் நிறுவனங்களை நம்பி வீட்டில் பூச்சி போல அவர்களிடம் சென்று ஏமாந்து விட்டுப் பின் புலம்புவதோ ஆகாது. நிம்மதியாக, இந்த உலகை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கலாம். பிடித்தவற்றை பிடித்த முறையில் செய்யலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அபத்தமான சிந்தனையை மறந்து வாழலாம். நமக்குக்கிடைத்த வாழ்வு நிறைவானதே என்று திருப்திப்படலாம். போகும்போது சிரித்த முகத்துடன் விடைபெறலாம்

 

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

290520 23 திங்கள்

சர்புதீன் பீ