Saturday, 31 August 2024

தமிழ் (மொழி)அறிவோம் “”மாண்ட என் மனைவி “ 01 092024 ஞாயிறு

 




தமிழ் (மொழி)அறிவோம்

“”மாண்ட என் மனைவி “
01 092024 ஞாயிறு
“”மாண்ட என் மனைவி “
மறைந்தவர் என்ற பொருள் தருவது போல் தோன்றும் மாண்ட என்ற சொல் இங்கு ஒரு சிறப்பான பொருளில் வருகிறது
என்ன பொருள் ?
எந்த சங்க காலத்துப்பாடல் ?
விடை
புறநானூறு, பாடல்191; பாடியவர் : பிசிராந்தையார்.
மாண்ட என் மனைவியோடு = மாட்சிமை பொருந்திய என் மனைவியோடு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் – முதல் சரியான விடை
அஷ்ரப் ஹமீதா
தல்லத்
சிராஜுதீன் –விளக்கமான விடைக்கு நன்றி
சிவசுப்ப்ரமனியன்
கணேச சுப்ரமணியன் &
ஆ ரா விஸ்வநாதன்
சகோ வேலவன்அனுப்பிய விடை வேறு பாடல்
மாண்ட என்ற சொல்லுக்கு பொருள் சரியாக இருக்கிறது
பாடல்:
யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
யாண்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
பொருள் :
பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.
அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௧௦௯௨௦௨௪
01 092024ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 29 August 2024

திருமறை குரான் 67:19 30082024 வெள்ளி





 திருமறை குரான் 67:19

30082024 வெள்ளி
“இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா?ஏக இறைவனாகிய ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்.”
குரானின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 67 முல்க் (ஆட்சி அதிகாரம் ) வசனம் 19
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
மெஹராஜ் முதல் சரியான விடை
ஷர்மதா
ஹசன் அலி
தல்லத்
பீர் ராஜா (16:79)
ஷிரீன் பாரூக்
விளக்கம் சுருக்கமாக
இறைவனின் மாட்சிமை பற்றி விளக்கும் இந்த சூரா
அவன் படைப்பில் யாரும் குறை காண முடியாது என்பதைத் தெளிவாக்குகிறது
மேலும் உலகில் எந்த செயலும் அவன் கட்டுபபாட்டில் அவன் மேற்பார்வையில்தான் இயங்குகிறது என்பதை பல வகையாக சுட்டிகாட்டுகிறது
காற்றை விட கனமான பறவைகள் காற்றில் பறப்பது அவனது ஆணைக்கு உட்பட்டே
பறவைகளை மட்டுமல்ல மனித குலம் உட்பட அனைத்துக்கும் உயிர் கொடுத்து இயக்கி பாதுகாப்பதும் அவனே என்பதை விளக்குகிறது இந்த சூராஹ்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
24ஸfபர்(2) 1446
30082024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 27 August 2024

காற்று வாங்கப்போனேன் ஒரு –---- 280920224 புதன்------

 






காற்று வாங்கப்போனேன் ஒரு –----

280920224 புதன்--------





காற்று வாங்கப்போனேன் ஒரு –----


கவிதை வாங்கி வரவில்லை
காரணம் நான் கவிஞன் இல்லை
கவிதை மட்டுமா !
இலக்கணம் ,இலக்கியம் எல்லாமே எனக்கு சற்று தொலைவில்தான்
அத்தாவின் கம்பராமாயணக் கட்டுரைகளை வெளியிடும்போது பாடல்களை சரி பார்க்க இணைய தளத்தில் உலாவியபோது இலக்கியத்தில் கொஞ்சம் சுவை உண்டானது
போகப்போக பள்ளி ,கல்லூரியில் படித்த பாடல்களின் இலக்கிய நயம் புலப்படத் துவங்கியது
ஓரளவு எழுத்துப்பிழை ,இலக்கணப்பிழை இல்லாமல் எழுதுவது இறைவன் கொடுத்த வரம்,
ஆனால் இன்றும் இலக்கணம் என்றால் வேப்பங்கனி, எட்டிக்கய்தான்
ஏழெட்டு ஆண்டுகள் முன்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என் குட்டிபபேத்தி “ ஐயா தமிழ் project டுக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள் “ என்று கேட்டார் (கட்டளையிட்டார் என்பதே உண்மை)
தமிழில் project என்பது நான் அறியாத, ,கேள்விப்படாத ஓன்று
“எனக்குக் கவிதை எல்லாம் வராது , தெரியாது “ என்று சொன்னதைக் கேட்காமல்
“ எதாவது எழுதிக்கொடுங்கள்” என்று பிடிவாதம் பிடித்தார் பேத்தி
சரி முயற்சி செய்வோம் என்று வழக்கம் போல் இறைவன் மேல் சுமையை ஏற்றி வைத்து விட்டுத் துவங்கினேன்
அப்போது மின் வெட்டு அதிகமாக இருந்த நேரம
“அனலில் எடுத்தோம் புனலில் எடுத்தோம்
அணுவில் எடுத்தோம் வளியிலும் ஒளியிலும் எடுத்தோம்
ஆனாலும் தீரவில்லை மின் பற்றாக்குறை “
என்று எழுதினேன்
ஓரளவு கவிதை மாதிரி இருந்தது
தொடர்ந்து
“அணைகள் கட்டினோம் ஆழ்துளை போட்டோம்
ஆழியைப பகுததோம் மழையையும் சேகரித்தோம்
ஆனாலும் தீரவில்லை தண்ணீர் பற்றாக்குறை”
“மருந்தடித்தோம் மரபணு மாற்றினோம்
உரம் போட்டோம் பசுமைப் புரட்சி செய்தோம்
ஆனாலும் தீரவில்லை உணவுபற்றாகுறை “
“பருத்தியில் நெய்தோம் பட்டில் நெய்தோம்
பல்லிழையிலும், மரபட்டையிலும் நெய்தோம்
ஆனாலும் தீரவில்லை ஆடைப்பற்றக்குறை “
கவிதையின் இலக்கணம் இதில் இருக்கிறதா என்று தெரியாவில்லை
ஆனால் நன்றாக இருக்கிறது என்று பள்ளி ஆசிரியை சொல்லி விட்டாராம் !
அதன் பின் கவிதை எதுவும் எழுதவில்லை
சென்ற ஆண்டு கவிதைப்பூக்கள் என்ற முகநூல் குழவில் என்னை அறியாமல் சேர்க்கப்பட்டேன்
அதிலும் ஒன்றும் எழுதாமலே இருந்தேன்
நாட்கள் போகப்போக குழுவில் வரும் கவிதைகளின் எளிய நடையைக்கண்டு நாமும் எழுதலாமோ என்ற எண்ணம் வந்தது
மளமளவென்று புள்ளிகள் கூடி வெகு விரைவில் சிறந்த பங்களிப்பாளர்கள்பட்டியலில் பெயர் வந்தது
அதே வேகத்தில் அந்தக்குழு செயல் இழந்து பிறகு காணாமல் போய்விட்டது
பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் கவிதைப்பூங்கா என்றொரு குழுவில் இணைந்தேன்/இணைக்கப்பட்டேன்
இந்தக்குழுவில் ஒவ்வொரு வரமும் ஒரு தலைப்பு கொடுத்து கவிதைப்போட்டி வைப்பார்கள்
அதில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக வெற்றியாளர் சான்றிதழ் இறைவன் அருளால் பெற்று வருகிறேன்
இந்தக்குழுவில் முதல், இரண்டாவது ,மூன்றாவது என்றெல்லாம் தரம் பிரிப்பதில்லை
விதிகளுக்கு உட்பட்டு நன்றாக இருக்கும் கவிதைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் கொடுத்து விடுவார்கள்
அது 10, 20 ,50 அறுபதாகக் கூட இருக்கலாம்
சில பல காரணங்களால் குழுவில் அவற்றை நான் வெளிஇடுவதில்லை
பிரிவுத் துயர் பல கவிதைகளுக்கு கருவாக அமைந்தது –
சீதக்காதி !!
இலக்கணம் இலக்கியம் தெரியாமலே பிறர் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு கவிதை என்ற ஒன்றை எழுதுவது
சொந்த ஊரின் மணம்/
கற்றதும் பெற்றதும் /
எல்லாவற்றையும் உள்ளடக்கி ஆளும் இறைவன் அருள்
இந்தக்குழுவில் இன்னொரு போட்டி வார்த்தை விளயாட்டு –குறுக்கெழுத்து போட்டி போல
இதிலும் இறைவனருளால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன்
வார்த்தை விளயாட்டு -மூளைக்கு வேலை
கவிதை கற்பனைத்திறனுக்கு வேலை
இந்த இரண்டுமே மூத்த குடி மக்களுக்கு மிகவும் தேவையானை
-பல நரம்பியல் நோய்களைத் தடுக்கும் என்கிறார்கள்
இரண்டு நாள் முன்பு நான் எழுதி வெளியான் கவிதை உங்கள் பார்வைக்கு
கவிதைப்பூங்கா குழுவில் சேர விரும்பினால் சொல்லுங்கள்
என்னை யாரோ இணைதது போல் உங்களை இணைத்து விடுகிறேன்
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
PS
A glaring error has crept into my English QUIZ of 26.27 08 2024
Instead of
2 vowels, I have posted
2 nouns
Sorry for the mistake
Thanks to Ms Ashraf Hameeda for pointing out the mistake
28082024புதன்
சர்புதீன் பீ

Monday, 26 August 2024

English QUIZ Bolster 27082024 Tue

                                                  


                                                                



English QUIZ

Bolster
27082024 Tue
7 letters
2 vowels
Second letter of alphabet is first letter
As verb and noun it provides or increases support ,strength, confidence and comfort
What is that word?
Answer
Bolster
Thanks to Ms. Sharmadha for participation
bolster
noun
: a long pillow or cushion
: a structural part designed to eliminate friction or provide support or bearing
bolster
verb
bolstered; bolstering ˈbōl-st(ə-)riŋ
transitive verb
: to support with or as if with a bolster : REINFORCE
lay bolstered up in bed
: to give a boost to
(The term "Dutch wife" is a colloquial name for a bolster pillow}
Let us meet tomorrow
by HIS GRACE
27082024 Tue
Sherfuddin P

Saturday, 24 August 2024

தமிழ் (மொழி)அறிவோம் சூழி 25 082024 ஞாயிறு

 


தமிழ் (மொழி)அறிவோம்

சூழி
25 082024 ஞாயிறு
இரண்டே எழுத்து
பொருள்கள் பலப்பல
அதில் ஒரு சில
நீர் நிலை , மேலிடம் , தலை அணி
முதல் எழுத்து வல்லின ஊகாரம்
அடுத்தது இடையின இகரம்
என்ன அந்தச் சொல் ?
விடை
சூழி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் –முதல் சரியான விடை
தல்லத் &
வேலவன்
விளக்கம்
சூழி=தலையில் அணியும் நகைகளில் ஒன்றின் பெயர் (சங்க காலம்)
சூழி, .
தமிழ் விக்சனரி
1. சேணம்
2. யானையின் முகபடாம் மேற்கோள்கள் ▲
• யானைச் சூழியிற்பொலிந்த (மலைபடு. 228).
3. நீர்நிலை மேற்கோள்கள் ▲
• அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375).
4. கடல்
5. சூழியல்
6. தலை உச்சி
7. உச்சிக்கொண்டை; சூழியம்
8. மேலிடம் மேற்கோள்கள் ▲
• நெடுமதிற் சூழி (பு. வெ.6, 15).
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௫௦௮௨௦௨௨௪
25 082024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 22 August 2024

திருமறை குரான் 33;36 ,37 23082024 வெள்ளி

 





திருமறை குரான் 33;36 ,37

23082024 வெள்ளி
மேலும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு செயலைப் ப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அச செயலில் வேறு எண்ணம் கொள்வதற்கு நம்பிக்கை ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ----------
குர்ஆனில் எந்தப்பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
விடை
33;36சதிகார அணியினர் سورة الأحزاب Al-Ahzab அல் அஹ்ஜப
மேலும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு செயலைப் ப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அச செயலில் வேறு எண்ணம் கொள்வதற்கு நம்பிக்கை ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை
ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். 33;36
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷரமதா முதல் சரியான விடை
சிராஜுதீன்
கத்தீபு மாமூனா லெப்பை
ஹசன் அலி&
பீர் ராஜா
விளக்கம்
இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் இந்த வசனம் ஒருசிறப்பான தருணத்தில் அருளப்பட்டது என்பது அறிஞர்கள் கருத்து
zaydஸய்த்- நபிஸல்லின் வளர்ப்பு மகன் –விடுதலை பெற்ற அடிமை
zainab ஜைனப் நபி ஸல்லின் நெருங்கிய உறவினர் –குறைஷி குலப்பெண்
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நபிக்கு எண்ணம் விருப்பம்
ஆனால் குல வேறுபாட்டைக் காரணம் காட்டி இந்தத் திருமணத்துக்கு அந்தப்பெண்ணும் உறவினர்களும் மறுப்புத் தெரிவித்தனர்
அந்த நேரத்தில் இந்த இறைவசனம் அருளப்பட எதிரத்தவர்கள் எல்லாம் சம்மத்திதனர்
இப்படி ஒரு தருணத்தில் அருளப்பட்ட வசனம் ஷரியத் எனப்படும் இஸ்லாம்ய சட்டங்களின் அடிப்படைக் கருத்தாக அமைந்திக்கிறது
இந்த மண வாழ்க்கை நீடித்து நிற்காமல் மண முறிவு ஏற்பட்டது
அதன் பின்னர் அந்தப்பெண்ணை நபி ஸல் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்
இதை மிக இழிவாக விமர்சித்தனர் இஸ்லாமிய எதிரிகள், குறிப்பாக யூதர்கள்
அப்போது அருளப்பட்ட அடுத்த வசனம்
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால்
அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்;
ஆகவே ஜைது
அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய
அல்லாஹ்வின் கட்டளையாகும்.33:37
இதுவும் ஒரு மிக முக்கியமான சட்டத் தெளிவுரையாகும்
குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே நபித் தோழர் ஜைது மட்டுமே
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
17ஸfபர்(2) 1446
23082024 வெள்ளி 1446
சர்புதீன் பீ

Tuesday, 20 August 2024

உப்பும் சோடா உப்பும் 21082024 புதன்

 




உப்பும் சோடா உப்பும்

21082024 புதன்
அவ்வப்போது வெண்ணீரில் உப்புப் போட்டு வாய் கொப்பளிப்பது வழக்கம்
அன்றும் அப்படித்தான் ஒரு குவளையில் கொஞ்சம் உப்பைப் போட்டேன்
என்னய்யா செய்கிறீர்கள் என்றான் பேரன்
வாய் கொப்புளிக்கப் போகிறேன் என்று நான் சொல்ல
அதற்கு ஏன் baking soda சோடா உப்பை எடுக்கிறீர்கள் என்றான்
நல்ல வேளை பலமுறை இது போல் தவறு செய்தும் வயிற்றுப் பிரச்சினை எதுவும் இல்லை
பொதுவாக சாப்பாட்டில் , சுவையில் அதிகம் கவனம் செலுத்துவதோ குறை சொல்வதோ கிடையாது
“சாப்பாட்டில் உப்பே இல்லாவிட்டால் கூட சாப்பிட்டு விட்டு பிறகுதான் சொல்வீர்கள் “ என்று என் துணைவி பலமுறை சொல்லியிருக்கிறார்
சுவையில் அதிக நுணுக்கமும் தெரியாது
இதனால் பலமுறை அசடு வழிந்ததுண்டு
காரைக்காலில் வங்கி வேலையாக பாண்டி போய்விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தேன்
துணைவி “ சாப்பாட்டு மேசையில் எல்லாம் எடுத்து வைத்து விட்டேன்
எனக்கு வேறு வேலை இருக்கிறது . எல்லாவற்றையும் பார்த்து எடுத்து சாப்பிடுங்கள் .ஏதாவது தேவை என்றால் கூப்பிடுங்கள் “ என்றபடி சமையல் அறைக்குள் போய்விட்டார்
நேரம் தவறி விட்டதால் நல்ல பசி
வயிறார சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன்
“எறால் புது விதமாகா சமைத்திருந்தேன் . நன்றாக இருந்ததா” என்று கேட்டார்
“எறாலா !” என்ற என் முகத்தில் வியப்புக்குறி
தட்டைத் திறந்து பார்த்து விட்டு அவர் “அதுதான் பாதிக்குமேல் சப்பிட்டிருக்கிறீர்களே “ என்றார்
எறால் என்றால் செம்மீன் , சிவப்பாக இருக்கும் என்ற நினைப்பு
அதனால் புது விதமாக வெள்ளை நிறத்தில் சமைத்திருந்த அதை காலிப்பூ cauliflower பொறியல் என்றே எண்ணி சாப்பிட்டுவிட்டேன்
இன்னொரு அண்மை நிகழ்வு
மதிய உணவு வேளை
பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தது
அதில் கொஞ்சம் ரசம் ஊற்றிக் கரைத்தேன்
பையன் “ ஏன் பொங்கல் மேல் ர்சத்தை ஊற்றுகிறீர்கள் “ என்றான்
எப்படி இது போல் ஒரு பழக்கம் வந்தது என்று தெரியவில்லை
பொதுவாக எங்கள் ஊர் மக்கள் அனைவருக்கும் சுவை அறிவதில் நாக்கு நீளம் என்பார்கள்
எங்கள் அத்தா , மகன் எல்லோரும் சுவை வல்லுனர்கள் என்றே சொல்லலாம்
துறையூரில் அத்தா ,மாமா நான் மூவரும் மதிய உணவு சாப்பிட்டுக்
கொண்டிருந்தோம்
“ இது அரிசி அப்பளம் “ என்று அத்தா அப்பளத்தை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு
“என்ன பீயன்னா மூனா –உனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையா “ என்று மாமாவைப்பார்த்து நக்கல் வேறு
எனக்கோ அப்பளம் அரிசியில் செய்வது அல்ல , உளுந்தில் செய்வது என்ற தகவலே அப்போதுதான் தெரிந்தது
அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் அசைவ உணவை அறிமுகப்படுத்தியது அங்கு படித்துக்கொண்டிருந்த அத்தாதான்
அத்தா ,மகனை மிஞ்சியவன் என் பேரன்
குழந்தைப் பருவத்தில் முதல் திட உணவையே உப்பில்லை என்று துப்பியவன்
லட்டு என்றால் ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும் ம. மஞ்சள் லட்டைத் தொட மாட்டான்
பால்கோவா என்றால் பாண்டி பான்ஸ்லே அல்லது அதற்கு இணையான நயம் சுவை இருக்க வேண்டும்
திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கி 7ஆம் வகுபபு படித்தேன்
அப்போதே பெரியத்தா மக்கள் காத்தூன் அக்கா ,பரிமளா அக்கா
“தம்பிக்கு வர்ர துணைவிக்கு சமையல் பிரசசினையே இருக்காது
எதை வைத்தாலும் சாப்பிட்டு விடுவான் “என்று கேலி செய்வார்கள்
விளையும் பயிர் முளையிலே ???
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
21082024 புதன்
சர்புதீன் பீ

Monday, 19 August 2024

English QUIZ Bling 20082024 Tue





 English QUIZ

Bling
20082024 Tue
5 letters
Meaning something looking expensive
Middle letter is middle vowel
3rd 4th and 5th letter form a suffix in common usage
What is that word?
Answer
Bling= jewellery or decoration that attracts attention because it is very noticeable and looks expensive
No explanation needed I think
Thanks to M/S
AR Viswanathan, Ganesa Subramnaiam
Ashraf Hameeda, Velavan and Hangnali
For participation
(Dubai Bling
A news in The HIndu Sunday supplement in Chennai City edition)
Let us meet tomorrow by HIS GRACE
20082024 Tue
Sherfuddin P

Sunday, 18 August 2024

தமிழ் (மொழி) அறிவோம் சிகரம் *18082024* ஞாயிறு

 





தமிழ் (மொழி) அறிவோம்

சிகரம்
*18082024* ஞாயிறு
ஒரு சொல்
சொல்லில் உள்ள மூன்றெழுத்துகள் உயர்நிவை உறுப்பைக் குறிக்கும்
வேறு மூன்றெழுத்துகள் இயக்க உறுப்பைக் குறிக்கும்
துவக்க எழுத்து வல்லினம்
நான்காம் எழுத்து மெல்லினம்
அந்த நாலெழுத்து
உயரமான சொல் எது?
விடை
சிகரம்
விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
தல்லத்
முதல் சரியான விடை
கத்தீபு மாமூனா லெப்பை
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
180824 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 15 August 2024

திருமறை குரான் குரான் அமைப்பு 16082024 வெள்ளி (நிறைவு)

 திருமறை குரான்

குரான் அமைப்பு
16082024 வெள்ளி
குரான் அமைப்பு என்ற தலைப்பில்
குர்ஆனில் உள்ள 6000+ ஆயத்துகள்
சிறிதும் பெரிதுமாய் 114 சூராக்களாக பிரிக்கப்பட்டுள்ளன
என்பதையும் சூராக்கள் பற்றி இன்னும் சில செய்திகளையும் பார்த்தோம்
இன்றைய வினா
சூராக்கள் தவிர்த்து வேறு என்ன என்ன பிரிவுகள் குர்ஆனில் இருக்கின்றன ?
விடை
ஜூஸு302 ஹிஸ்ப்4 ரப்பல் அஹ்சப்
மன்ஜில் 7
ருக்கு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா – முதல் முழுமையான சரியான விடை
தல்லத் ஏறத்தாழ முழுமையான விடை
ஷிரீன் fபாருக்
பீர் ராஜா
சிறிய விளக்கம்
ஜூஸு302 ஹிஸ்ப்4 ரப்பல் அஹ்சப்
ஜூஸு-- எல்லோருக்கும் தெரிந்த சொல்
ஒரு மாதத்தில் குரான் முழுதும் ஒத வசதியாக
30 ஏறத்தாழ சம பங்குகளாக குரான் பிரிக்கப்பட்டுள்ளது
புனித ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகை தராவிஹில் ஒவ்வவொரு இரவிலும் ஒரு ஜூஸு ஓதப்படும்
இந்த 30 ஜூஸு க்கள் ஒவ்வொன்றும்
2 ஹிஸ்ப்பகளாகவும்
,ஹிஸ்ப் ஒவ்வொன்றும்
4 ரப்பல் அஹ்சப்களாகவும்
பிரிக்கப்பட்டுள்ளன
மன்ஜில்
ஒரு வாரத்தில் குரான் முழுதும் ஒத வசதியாக 7 மன்ஜில்களாக
பிரிக்கப்பட்டுள்ளது
மன்ஜில் 1 ---சூராஹ் 1 முதல் 4 வரை
2 5-9
3 10-16
4 17-25
5 26-36
6 37-49
7 50—114
ருக்கு –ஏறத்தாழ 10 ஆயத்துகள் கொண்டது .ஒரு பொருள் பற்றி சொல்லும் தொடர்ச்சியான ஆயத்துகள் உள்ளது
ருக்குவும் எல்லோருக்கும் தெரிந்த சொல்
இத்துடன் குரான் அமைப்பு பற்றிய தொடர் நிறைவு பெறுகிறது
நிறைவாக குரானின் அமைப்பு பற்றி காணொளி ஓன்று
அனுப்பிய சகோ இ ச பீர் முகமதுக்கு நன்றி
இறைவன் நாடினால் தமிழில் சிந்திப்போம்
10சfபர்(2) 1446
16082024 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday, 14 August 2024

முத்திரை பதிப்போம் 15 கணேச முத்திரை-இதயம், மனம் வலிமை பெற 14082024 புதன்





 முத்திரை பதிப்போம் 15

கணேச முத்திரை-இதயம், மனம் வலிமை பெற
14082024 புதன்
முத்திரைகளின் சிறப்பு பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன்
அதெல்லாம் இப்போது திரும்பச் சொல்லவில்லை
ஆனால் ஒன்றே ஓன்று
பெயரைப் பார்த்து இது மதம் சார்ந்தது, மற்ற மதத்தினர் செய்வது தவறு என்ற எண்ணத்தில் எதையும் ஒதிக்கி விடாதீர்கள்
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
லிங்க முத்திரை – இதில் நாம் வைக்கும் விரல்கள் வடிவம் லிங்கம் போல் இருக்கும்
எனவே நினைவில் நிறுத்துவதற்கு எளிதாக லிங்க முத்திரை - அவ்வளவுதான்
இப்போது கணேச முத்திரை
சேய்முறை
இளக்கமாக (relaxed) முடிந்தால் பத்மாசனம்
முடியாவிட்டால் சுகாசனத்தில் உட்காருங்கள்
இடது உள்ளங்கை வெளி நோக்கி இருக்குமாறு மார்புக்கு அருகில் வைத்து
விரல்களை மடக்கவும்
வலது உள்ளங்கை மார்பை நோக்கி இருக்கும்படி வைத்து
விரல்களை மடக்கி இடது கை விரல்களை இறுக்கமாகப் பிடிக்க்கவும்
இதே நிலையில் கைகளை இதயம் இருக்கும் இடத்துக்கு நகர்த்தவும்
மூச்சை வெளியே விட்டவாறு கைகளைப் பிரிக்காமல் பலமாக இழுக்கவும்
இதனால் மேல் தோள்பட்டைப் பகுதியும் மார்புப் பகுதியும்
மூச்சை உள்ளே இழுக்கும்போது இறுக்கத்தைத் தளர்த்தவும்
இது போல் ஆறு முறை செய்த பின் அதே நிலையில் கைகளை மெதுவாச அன்புடன் மார்பின் மேல் வைக்கவும்
மார்புப் பகுதியை கவனிக்கவும்
பிறகு இதே போல் கைகளை மாற்றி இடது உள்ளாங்கை மார்பை நோக்கியும் வலது உள்ளங்கை வெளிப்புறம் நோக்கியும் இருக்குமாறு வைத்து ஆறு முறை செய்தால் ஒரு சுற்று நிறைவாகிறது
இப்படி ஒரு நாளைக்கு ஒரு சுற்று செய்தால் போடும்
பலன்கள்
இதயஇயக்கத்தை தூண்டி ,இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது
மூச்சுக் குழல்களின் அடைப்பை நீக்குகிறது
நம்பிக்கை , அச்சமின்மை திறந்த மன நிலை அதிகமாகிறது
செய்முறை படிக்க நீளமாக இருந்தாலும் செய்து பார்த்தால் மக எளிதான ஓன்று
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
14082024 புதன்
சர்புதீன் பீ

Like
Comment
Share