தமிழ் [மொழி] அறிவோம்
சகன்
17112024ஞாயிறு
மூன்றெழுத்துச்சொல்
மூன்றாவது மெல்லினம் ,ஒற்று
மற்ற இரண்டும் வல்லினம்
நட்பையும் ஒரு வகையான உணவையும் குறிக்கும்
கடற்கரை பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கும்
என்ன அந்தச் சொல்?
விடை
சகன்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறும்
ஒரே சகோ
சிராஜுதீன்
விடை கண்டு பிடித்த வழியையும் எழுதியிருக்கிறார்
சகன், .
சாலிவாகனன்
(எ. கா.) சகன்காலம். (பெருந்தொ. 956)
உலகநாயகன்
(எ. கா.) குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு. (சி. போ. 8, 2)
சகா, தோழன்
சகன்' என்றால் 'கூடவிருப்பவன்', 'சகா தேவன்' என்றால் 'கூடவுள்ள ஒளியுடை இறை' எனறு பொருள்
பாண்டவர்களில் ஒருவனான 'சகதேவனை', தமிழர் 'சகாதேவன்' என அன்புடன் குறிப்பிடுகின்றனர்
அழகிய தமிழ்ப் பெயர்.
சகன் சாப்பாடு
தரையில் உட்கார்ந்து
4 பேர் ஒரே பெரிய தட்டில்
சாப்பிடும் முறை
பெரும்பாலும் வழக்கொழிந்து போனாலும் இன்றும் காரைக்கால் திருவாரூர் போன்ற இடங்களில் இஸ்லாமிய விருந்துகளில்
பழக்கத்தில் உள்ளது
புதிதாகப்
பார்ப்பவர்கள்களுக்கு
ஒரு மாதிரியாக இருக்கும்
ஆனால் பழகியவர்கள் மிகச் சுத்தமான முறையில் சாப்பிடுவார்கள்
சகோதரத்துவத்தை வளர்க்கும் இதில் தரையில் உட்காருவதால் அளவோடு சாப்பிடுவது
மூட்டு வலி தவிர்த்தல் போன்ற பல பயன்கள் இருக்கிறது என்றும் சொல்வார்கள்
போர்க் காலங்களில் எதிரிகள் வருவதை நான்கு பக்கமும் கண்காணிக்க இப்படி வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது சகனின் துவக்கம் என்றும்
சொல்வார்கள்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧எக௧ ௨௦௨௪
17112024 ஞாயிறு
சர்புதீன் பீ