துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 10
நபி ஸல் அவர்களின் விடைபெறு பேருரை
06 - 0 6 2025 வெள்ளி
நே“ற் றை ய வினா
உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்;”
எங்கே, எப்போது, யார் சொன்னது ?
விடை
இது சுரா 05 அல்
மாயிதா வில் வசனம் 3 இன் ஒரு பகுதி
(5:3) உங்களுக்குச்
செத்த உடல், 9 இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வின் பெயரால்
அல்லாமல் வேறு எந்தப் பெயராலும் கொல்லப்படும் விலங்கு, 10 கழுத்தை நெரிக்கப்பட்ட, அடிகளால் கொல்லப்பட்ட, விழுந்து இறந்த, குத்திக் கொன்ற அல்லது
வேட்டையாடும் மிருகத்தால் தின்ற விலங்கு - அது உயிருடன் இருக்கும்போது நீங்கள்
படுகொலை செய்திருக்கக்கூடியதாக இருந்தாலும் 11 -
பலிபீடங்களில் கொல்லப்பட்டாலும் தவிர. 12 - 13 அம்புகள் மூலம் உங்கள்
விதியைப் பற்றிய அறிவைத் தேடுவதும் உங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 14 இவை அனைத்தும் பாவச்
செயல்கள். இன்று காஃபிர்கள் உங்கள் மதத்தைப் பற்றி முற்றிலும் நம்பிக்கை
இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; ஆனால்
எனக்கு அஞ்சுங்கள்.
15 இன்று நான் உங்கள் மதத்தை
உங்களுக்காக முழுமையாக்கியுள்ளேன், மேலும்
எனது அருளை உங்களுக்கு முழுமையாக வழங்கியுள்ளேன், மேலும்
இஸ்லாத்தை உங்
களுக்கு மதமாக ஆக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (எனவே, உங்களுக்கு விதிக்கப்பட்ட
சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான வரம்புகளைப் பின்பற்றுங்கள்.) 16 பசியால் உந்தப்பட்டு, வேண்டுமென்றே பாவம்
செய்யாமல் இருந்தால், நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க
கருணையுடையவன். 17
தடுக்கபட்ட உணவுகள்
பற்றி சொல்லும் இந்த வசனத்தின் பிற்பகுதியில்
மதம் முழுமை ஆக்கப்பட்ட
செய்தி வருகிறது
சரியான விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர் சகோ
மெஹராஜ் – முதல் சரியான
விடை
சீராஜூதீன் &
ஷர்மாதா
வசனம் எங்கே ரப்போது
அருளப்பட்டது என்பது பற்றி யாரும் சரியாகச் சொல்லவில்லை
இது பற்றி பல கருத்துக்கள்
உள்ளன
அதில் ஒன்று நபி ஸல்
அவர்களின் விடைபெறு பே ருரையின் நிறைவுப் பகுதியில் அருளப்பெற்றது என்பது
நீண்ட பேருரை சுருக்கமாகப்
பார்ப்போம்
நபி ஸல் அவர்கள்
தம் நிறைவு ஹஜ்ஜின் பொழுதுதுல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.கள்
மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
உரையின் ஒவ்வொரு வசனமும்
மிக நுணுக்கமாக சான்றுகளூ டன் பதியப்பட்டுள்ளது
தொடக்கவுரை.
மக்களே! என் பேச்சை
கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா
என்பது எனக்குத் தெரியாது.
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை
நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில்
அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
தலைமைக்குக்
கீழ்ப்படிவீர்!
அலாஹ்வின் வேதத்தைக்
கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது
சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
குழப்பம் செய்யாதீர்கள்!
உங்களில் எவராவது
மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால்,
அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
பணியாளர்களைப் பேணுவீர்
No comments:
Post a Comment