1
இலக்கணம் இலக்கியம் பற்றி எழுதப்போகிறேன் என்று எண்ண வேண்டாம்.
அதெல்லாம் எனக்கு வெகு தூரம்
.
என் அண்ணன் (பெரியத்தா- பெரியப்பா மகன் ) கைப்பேசியில் கட்செவி செயலி இல்லாததால் என்
பதிவுகளை அவர் மகன் கைப்பேசிக்கு
அனுப்பினேன்
.
மகன் “தமிழ் படிக்க சிரமமாக இருக்கிறது ஆங்கிலத்தில் எழுதுங்களேன்
மாமா” என்று ஒரு செய்தி அனுப்பினார்.
அதற்கு நான்
ஆங்கிலத்தில் எழுதுவது எளிதுதான் . ஆனால் தமிழில் உள்ள உயிரோட்டம் அதில் இருக்காது
அடுத்து நான் உனக்கு மாமா அல்ல சச்சா (சித்தப்பா)
என்று எழுதினேன்
அவர்
இந்த உறவு முறைகளைப் புரிந்து கொள்வது இன்னும் ஒரு சிரமம் .
என்று .எழுதினார் .
அவர் குழந்தையல்ல ,திருமணம் ஆனவர் , வயது நாற்பத்தைந்துக்குமேல் .
இதற்கு காரணம் ஓன்று ஆங்கில வழிக்கல்வி .எளிதாக ஆண்டி, அங்கிள் , கசின்
என்று யாரையும் சொல்லலாம்
அடுத்து சுற்றங்களுடன் அதிகம் தொடர்பில்லாத சிறு குடும்பங்கள்
இந்த அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உறவுகளை விளக்குவதே இந்தப்பதிவின்
நோக்கம்
முதலில் அப்பா அம்மாவில் துவங்குவோம்
இதில் யாருக்கும் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன்
அம்மா – பெற்றவர் – வேறு பேச்சு வழக்கு சொற்கள் :
மதர், மம்மி, மாம் (Mother, Mummy , Mom), உம்மா
அப்பா- அம்மாவின் துணைவர் (Mother’s Husband )
வேறு சொற்கள்
பாதர் , டாடி , டாட் (Father ,daddy, dad), அத்தா, வாவா, வாப்பா
அப்பா அம்மா இருவரையும் சேர்த்து பெற்றோர் (Parents) என்று
சொல்வார்கள்
அடுத்து
பெற்றோரின் பெற்றோர் (Parent’s parent- - grandparent)
பற்றிப்பார்போம்
பெற்றோரின் அம்மாவை பாட்டி (grandmother) என்றும் அப்பாவை தாத்தா (grandfather ) என்றும் பொதுவாகச் சொல்வார்கள்
பேச்சு வழக்கில் நிறைய வேறு சொற்கள் உண்டு
Grandmother-
Granny, grandma
Grandfather-
Grandpa
அம்மாவின் அம்மா – நனிமா, நன்னி, நானி, அம்மம்மா ,உம்மம்மா, அம்மாச்சி
அப்பாவின் அம்மா – அத்தம்மா , வாப்பம்மா , அப்பாச்சி
அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா இருவரும் ஐயா என்று அழைக்கப்டுவார்கள்
.,
இப்போதைக்கு இது போதும்
.
எனக்கே கொஞ்சம் தலை சுற்றுகிறது
போகப்போக என்னாகும் என்று தெரியவில்லை
இறைவன் நாடினால்
அடுத்த வாரம்
அடுத்த பகுதியில்
சந்திப்போம்
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment