Saturday, 31 August 2019

English 58 honorificabilitudinitatibus









The insanely long word

 honorificabilitudinitatibus (27 letters)..

 alternates consonants and vowels.

Meaning  the state of being able to achieve honors


B F W31082019 sat 


Canara Bank – History of acquisitions take over and mergers




                                            

Year     Bank                                                            No, of Branches


1961     Bank of Kerala.                                                   3
Seasia Midland Bank (Alleppey),                        7
1961    G.Raghumathmul Bank Hyderabad                    5
1961    Trivandrum Permanent Bank                              14
1963    Sree Poornathrayeesa Vilasam Bank   Cochin   14
1963    Arnad Bank      Trichy                                          1
1963    Cochin Commercial Bank                                   13
1963    Pandyan Bank Madurai                                   
            Lakshmi Commercial Bank      

(Taken from Wikipedia )


B F W(CBROA)   31082019 sat

Tuesday, 27 August 2019

நெல்லை நினைவலைகள் நிறைவுரை





நிறைவுரை


ஒய்வு எடுக்க எண்ணித்தான் ஒரு நாள் நெல்லையில் தங்கினேன் . இரவில்தானே வண்டி ஒரு நாள் முழுதுமாகவா ஒய்வு தேவை .சில இடங்களையும் மைத்துனர் பீரையும் பார்த்து வரலாம் என்று கிளம்பினேன்
பத்து இடங்கள் பார்ப்பேன் என்று எண்ணம் சிறிதும் இல்லை இறைவன் அருளால் மட்டுமே இது நடந்தது
அரை நூற்றாண்டுக்கு முன் நான் கனரா வங்கியில் பணியைத் துவங்கிய வங்கி நெல்லை சந்திப்புக் கிளைக்கு முதலில் போனதும்
 அத்தா பணி நிறைவடைந்து ஓய்வுபெற்ற குறுக்குத்துறை இல்லத்தில் சிற்றுலா நிறைவு பெற்றதும் just a coincidence
இறைவன் அருளால் துவங்கிய இடம் நிறைவு பெற்ற இடம் இரண்டிலும் மன மகிழ்வோடு வெளியே வர முடிந்தது
கல்லூரிக்குப் போய் வந்தது மிக மிக உற்சாகமூட்டிய நிகழ்வு
1970 ஆம் ஆண்டு நான் வங்கிப்பணியை நெல்லையில் துவங்கியது ஆகஸ்ட் மாதம்
மூன்றாண்டுகளுக்கு முன் நெல்லை வாழ்வு பற்றி விரிவாக மூன்று பகுதிகளாக எழுதியதும் ஆகஸ்ட் மாதம்தான்
இந்த சிற்றுலா போனதும் ஆகஸ்ட் மாதம்தான்
இதுவும் ஒரு தற்செயலான ஒன்றுதான்
ஏற்கனவே நெல்லை பற்றி விரிவாக எழுதியிருப்பதால் சிறு குறிப்புகளுடன் படங்களை ஒரே பகுதியாக வெளியட நினைத்தேன் . அது ஒவ்வொரு இடமும் ஒரு பகுதியாக மாறியது
சிற்றுலாவுக்குப்பின் மைத்துனர் பீரைப் பார்க்க அவர் கடைக்குப்போனேன். அத்திப்பழச்சாறு , மீன் சாப்பாடு , சிறப்பு இனிப்பு பீடா என்று தேநீர் என்று தடபுடலாக உபசரித்தார் அவர் அத்தா சுல்தான் மாமாவின் உபசரிப்பு நினைவில் வந்தது
மைத்துனர் சிராஜுத்தீன் மகன் காதருக்கு அன்று நெல்லையில் பெண் குழந்தை பிறந்த மருத்துவ மனை பீர் கடைக்கு மிக அருகில் இருக்கிறது .குழந்தையையும் போய்ப் பார்த்து வந்தேன்
பீர் மகன் ஆஷிக் கடைகளுக்குப் போகவும் கைப்பேசியை சரி செய்து கொடுக்கவும்  பின் தொடரி நிலையத்துக்குப் போகவும் மிகவும் உதவியாக இருந்தார்
முகம் சுளிக்காமல் புன்னகையுடன்  பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்  தானி ஓட்டுனர் திரு முருகன்
அனைவருக்கும் நன்றி
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கலந்த வணக்கம்
வழக்கம் போல் நினைவலைகள் பகுதிகளை என் துணைவியிடம் படித்துக் காண்பித்தபோது இதெல்லாம் யாருக்காக எழுதுகிறீர்கள் என்று கேட்டார். உடனே என் வாயில் வந்த பதில் எனக்காகத்தான்
ஆம்  பத்துப்பகுதிகளையும் வெளியிட்டபின் அலை அடித்து ஓய்ந்து வெள்ளம் வடிந்தது போல் மனம் அமைதியாகி விட்டது  அதனால்தான் வண்ணச்சிதறல் போன்றவற்றை தள்ளி வைத்து விட்டு நெல்லை நினைவலைகளை இந்த மாதம் முழுதும் எழுதினேன்

நிறைவாக
ஓடும் தொழிலாளர் கட்டுப்பாட்டாளர் அலுவலம்
இது நான் நெல்லை தொடரி சந்திப்பில் பார்த்த ஒரு பெயர்ப்பலகை
Office of the Crew Controller
என்பதன் தமிழ் பெயர்ப்பு இது
இது சரியான பெயர்ப்பா ?


தொடர்ந்து வேறு பதிவான பதிவுகளில் ஒரு இடைவெளிக்குப்பின் சந்திப்போம்
பதிவான   வழக்கமான என்பதன் நெல்லைத்தமிழ்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 27082019 Tue





நெல்லை நினைவலைகள் 10 குறுக்குத்துறை





நிறைவுப்பகுதி

குறுக்குத்துறை

நெல்லை சிற்றுலாவின் நிறைவுப்பகுதியாக நான் போனது குறுக்குதுறை
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் ( ஆகஸ்ட் 2016) திருநெல்வேலி வாழ்க்கை பற்றி மூன்று நீளமான பகுதிகளில் விரிவாக எழுதினேன்
அதில் குறுக்குத்துறை வீடு பற்றி என் கனவு இல்லம் என்று குறிப்பிட்டிருந்தேன்
அந்த அளவுக்கு இந்த வீடு எனக்குப்பிடிக்கும் அதையெல்லாம் இப்போது திரும்ப சொல்லும் எண்ணம் இல்லை
இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழ்நிலை
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை  எப்போதாவது எட்டிப்பார்க்கும் எட்டாம் எண் பேருந்து
மிதி வண்டி இருந்ததால் எனக்கு போக்குவரத்து பிரச்சினை கிடையாது
வீட்டை ஒட்டி நகராட்சி குடி நீர் சேவையின் நீர் தொட்டிகள் பரந்து விரிந்து ஏரி போல் தோற்றமளிக்கும்
இப்படி ஒரு அழகான கனவு இல்லம் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்திருப்பதாய்  என் தம்பி சிலகாலம் முன்பு குறிப்பிட்டிருந்தார்
அதே நினைவில் ஒரு கனத்த இதயத்துடன் போய் இறங்கினேன்
ஒரு பெட்டிக்கடைகாரரிடம் நாங்கள் குடியிருந்த வீடு பற்றிக் கேட்டேன்
மிகவும் தெரிந்தவர் போல் கமிஷனர்வாள் மகனா வாங்க வாங்க என்று வரவேற்றார்
இதுதான் அந்த வீடு உள்ளே போய்ப் பாருங்கள் என்று சொன்னார்
பெயர்ப்பலகையில் வேறு எதோ எழுதியிருக்கிறதே என்று கேட்டேன்
ஆமாமா இடிந்து கிடந்த வீட்டை அழகாகக் கட்டி இப்போது மாநகராட்சி நடத்தும் ஆதரவற்றோர் தங்கும் விடுதியாக மாற்றி விட்டார்கள் ரஎன்றார் அவர்  
உள்ளே போய்ப் பார்த்து விடுதிக் காப்பாளரிடம் சிறிது நேரம் பேசி விட்டு கையில் இருந்த ஒரு சிறிய தொகையை நன்கொடையாகக் கொடுத்தேன்
மனதில் ஒரு திருப்தி சிதிலமடைந்த கட்டிடத்தை எதிர்நோக்கி கனத்த இதயத்துடன் வந்த எனக்கு பலருக்கும் அதிலும் ஆதரவற்றோருக்கு புகலிடமாக அது மாறியிருப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது
அத்தா பணி ஒய்வு பெற்ற குறுக்குத்துறையோடு நெல்லை நினைவலைகளும் இப்போதைக்கு ஒய்வு பெறுகின்றன
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 27082019 Tue









Sunday, 25 August 2019

நெல்லை நினைவலைகள் 9 123 சர்க்கரை விநாயகர் கோயில் தெரு






123 சர்க்கரை விநாயகர் கோயில் தெரு


சின்னக்கதவுதடன் பெரிய கதவு

நெல்லை நினைவலைகளின் முன்னுரையில் என் வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகள் நெல்லையில்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்
அதில் பலவும் இந்த இல்லத்தில்தான் நடைபெற்றன
அத்தா பணி ஓய்வுபெற்ற பின் நாங்கள் போன வீடு பற்றி போன பகுதியில் சொல்லியிருந்தேன்
இடையில் ஒரு பழைய வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்து விட்டு மேலே சொன்ன 123------தெருவிற்கு வந்தோம்
மிகப்பெரிய வீடு காடியானா என்று அழைக்கப்படும் வண்டி நிறுத்தும் இடமே ஒரு பெரிய வீடு அளவுக்கு இருக்கும் முதலில் முழு வீட்டிலும் பின் காடியானாவிலும் குடியிருந்தோம்
இந்த வீட்டில் தான் நான் பட்டபடிப்பு நிறைவு செய்தது ,வேலை தேடி ஒரு ஆண்டு அலைந்தது ,காரைக்குடி செக்ரியில் வேலை கிடைத்தது பின் கனரா வங்கி சந்திப்பு கிளை உடன்குடி கிளை நகர் கிளையில் பணியாற்றியது , திருமணம் பிள்ளைகள் பிறந்தது , பதவி உயர்வு கிடைத்துகேரளாவுக்கு இட மாறுதல் எல்லாம்
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மா மறைவு 
42 ஆண்டுகளுக்குப்பின் அந்த வீட்டு வாசலில் .
. கதவு திறந்திருக்க சற்று தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன்
இப்போது அது ஒரு மருத்துவர் இல்லமும் மருத்துவ மனையும் இணைந்த இடம் .ஏற்கனவே பெரிய வீடு . மேலும் பெரிதாய்க் கட்டியிருந்தார் மருத்துவர் சிவராமன் – குழந்தை நல மருத்துவர் ,
நல்ல முறையில் வரவேற்று உட்காரச் சொன்னார். படங்கள் எடுக்கவும் அனுமதித்தார்
முன்பு இருவர் வந்து பார்த்ததையும் சொன்னார் – சகாவும் இதயத்துல்லாவும்.
வீடு வெளித்தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை . வண்டி நிறுத்தும் காடியானாவுக்கு ஒரு பெரிய உயரமான கதவு இருக்கும் ,அதற்குள் ஒருவர் போகும் அளவுக்கு ஒரு சிறிய கதவு (Wicket gate )
இன்னொரு பக்கம் பெரிய வாசல்படி மாடியில் ஒரு அறை அங்குதான் நான் படுப்பேன்.
திறந்த வெளியில் கட்டிலைப்போட்டுப் படுத்தது இப்போது கனவாகத் தெரிகிறது  நோ ஏ சீ நோ பேன் நோ கொசு
நெல்லை பற்றி அதுவும் இந்த வீடு பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்  ஆனால் ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன்
எனவே இது போதும்
இந்தபகுதியை எழுதிக்கொண்டிருக்கும்போது (24 08 2019)  எனது கல்லூரி வகுப்புத் தோழர் , பின் கனரா வங்கியிலும் என்னோடு பணியாற்றியவர் – நெல்லையைச் சேர்ந்த திரு ஜி. சுந்தரம் இன்று காலை சென்னையில் காலமான செய்தி வந்தது
அவரது ஆன்மா சாந்தியடையவும் இந்தப்பிரிவை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்துக்கு குறிப்பாக அவரது துணைவிக்கு வழங்க இறைவனிடம் வேண்டுகிறேன்
நெல்லை நினைவலைகள் 10 ( நிறைவுப்பகுதி) விரைவில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 25082019    sun


 மரு சிவராமன் 

வீட்டின் ஒரு பகுதி
வீட்டின் உள்ளே 

உள்தோற்றம்



Friday, 23 August 2019

English 57 LACE







One of the meanings of

LACE

is to add alcohol or drugs to food or drink secretly  

Thursday, 22 August 2019

நெல்லை நினைவலைகள் 8ரோசி ஹோம் (110 திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெரு )





ரோசி ஹோம்

(110 திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெரு )




அத்தா பணி ஓய்வுபெற்ற பின் அலுவலக குடியிருப்பில் இருந்து நாங்கள் போன வீட்டுக்குப் பெயர் ரோசி ஹோம்.பெயருக்குப்பொருத்தமாக இளஞ்சிவப்பு நிற வண்ணத்தில் ஒரு புதிய வீடு
அதன் முகவரி 110--------தெரு
கூலக்கடை தெரு போல் மூச்சு முட்டும் நெருக்கம் கிடையாது
குறுக்குதுறை வீடு போல் தனிமையும் கிடையாது
மிக அருகில் பேருந்து நிறுத்தம் காய் கறி மீன் கடைகள் பள்ளிவாசல் சிறிய உணவு விடுதிகள் மளிகைக் கடை எல்லாம்
அது போக தெருவிலேயே காய்கறி, மீன் அரிசி பருப்பு, எண்ணெய்தட்டை போளி போன்ற தின்பண்டங்கள் எல்லாம் வரும்
பணி ஓய்வுக்குப்பின் அத்தாவுக்கு உற்ற நண்பராய் இருந்தவர் ஜனாப் த மு அஜீஸ் அவர்கள்
மிகப்பெரும் செல்வந்தர் ஆனால் மிக எளிமையான தோற்றம் . மத நெறிகளை விடாமல் கடைப்பிடிப்பவர்
பணி ஓய்வின் தாக்கத்தை குறைக்க அவரது நட்பு அத்தாவுக்கு உறுதுணையாக இருந்தது  உலக ஞானமும் மிக்கவர்
அவர்தான் அத்தாவுக்கு  வேம்படிக்கண்டர் என்ற கோரை மொத்த வணிகரிடம் வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்
அத்தாவின் நடை உடை பாவனயில்தான் எத்தனை மாற்றம் !!
கால் சராயிளிருந்து சாரம் (கைலி- நெல்லைத்தமிழில்) ஜிப்பா துண்டு தொப்பி,தாடி ,
அதை விட நான் வியந்த மாற்றம் பையை எடுத்துக்கொண்டு அத்தா  காய் கறி மீன் வாங்கக்கிளம்பியதுதான்
பதவியில் இருக்கும் போது வீட்டில் பணியாள் ஒருவர் கடைக்குப் போவது போன்ற வெளி வேலைகளுக்காக இருப்பார் , அவரை அழைக்க மணி ஓன்று இருக்கும்.
சார்வாள் என அன்புடன் அழைக்கப்படும் ஜான் அருமை தேவதாஸ் நகராட்சிப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர். அவர் துணைவி மணியம்மையும்நகராட்சி ஊழியர் . அவர்கள் வீடும்  பேட்டையில்தான் சார்வாள் , அவர் துணைவி மக்கள் எல்லோரும் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டர்கள் மிக அன்பாகப் பழகுவார்கள் அவர்கள் மகன் இன்பா தம்பி சகாவின் நண்பன்
அத்தாவின் பதவிக்காலத்தில் பெண்கள் அனைவருக்கும் திருமணம் நிறைவேறியது.
இந்த வீட்டில் சில குழந்தைகள் பிறந்தன
சாகுலும் வஹாபும் கொஞ்ச நாள் ஒன்றாகத் தங்கியிருந்தார்கள் .சாப்பாட்டை கண்டுகொள்ளாதது போல் இருக்கும் வகாப் சாகுலோடு போட்டிபோட்டுக்கொண்டு விரைவாக சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும்
இந்த வீட்டில்தான் இருவருக்கும் சுன்னத் செய்ததாய் நினைவு  
சில ஆண்டுகள் முன்பு நெல்லை பற்றி விரிவாக பல பகுதிகளாக எழுதி விட்டேன்
அவற்றை திரும்ப எழுத வேண்டாம் என நினைக்கிறேன்
இப்போது வீட்டின் பெயர் ரோசி ஹோம் இல்லை .அந்தபெயர் இருந்த இடத்தில் இப்போது வேறு சொற்கள் சிவ சிவா
மற்றபடி கதவு எண் உட்பட பெரிய மாற்றம் எதுவும் இல்லை
எழுதியதைத்தான் முகநூலுக்கு சற்று மாற்றி அனுப்ப வேண்டும்

விரைவில்
நெல்லை நினவலைகள்    9
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 22082019 Thu










Tuesday, 20 August 2019

நெல்லை நினைவலைகள் 7 நகராட்சி உயர்நிலைப்பள்ளி




நகராட்சி உயர்நிலைப்பள்ளி



கல்லூரிக்கு அடுத்து உயர்நிலைப்பள்ளி
நான் படித்தது இல்லை
என் தம்பி சகாபுதீன் பதினொன்றாம் வகுப்பு (பள்ளி நிறைவு) படித்தது
ஆங்கிலப்பாடத்தில் சிறப்பான மதிப்பெண் பெற்றார்
இப்போது அவர் முனைவர் சகாபுதீன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக சிறப்பாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்
தன் பணிக்காலத்தில் பணிரெண்டு முனைவர்களுக்கு வழிகாட்டி  உருவாக்கியவர்
இப்போது இரண்டாம் முறையாக தன் துணைவியுடன் ஹஜ் புனிதப் பயணத்தில் இருக்கிறார்
இந்தப்பள்ளியில் நான் படிக்காவிட்டாலும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி என்பதால் அதன் தலைமை ஆசிரியர் திரு அருணாச்சலம் நகராட்சி ஆணையரான எங்கள் அத்தாவை அலுவலக முறையில் சந்திக்க வீட்டுக்கு  வருவதுண்டு
அத்தாவின் பணி ஓய்விற்குப்பிறகு நட்பு முறையில் அவ்வப்போது வீட்டுக்கு வருவார்
. ஒழுக்கத்தை நிலை நாட்டுவதில் மிகக்கண்டிப்பானவர்
அதே பள்ளியில் இன்னொரு ஆசிரியர் சார்வாள் என அன்புடன் அழைக்கப்படும் ஜான் அருமை தேவதாஸ் – ஒல்லியான உருவம் மிகத்திறமையான ஆசிரியர் என்று சொல்வார்கள்
அவர் துணைவி மணியம்மை நகராட்சிப் பணியில் இருந்தார்கள்
இங்கும் அலுவல் முறை தொடர்பாகத் துவங்கியது குடும்ப நட்பாய் மாறியது
பள்ளியின் கட்டிட அமைப்பை நான் கல்லூரிக்குப் போகும்போது பார்த்து ரசித்ததுண்டு
கல்லூரிக்கு மிக அருகில்தான் பள்ளி
ஒரு முறை முக நூலில் என் பதிவு தடை செய்யப்பட்டதால் ஒவ்வொரு சொல்லையும் நிதானித்து சிந்தித்து எழுத வேண்டிய கட்டாயம்
இது எண்ண ஓட்டத்தையும் எழுத்து வேகத்தையும் மட்டுப்படுத்துகிறது
தடை பற்றி நிறையபேர் கருத்துத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கினார்கள்
எல்லோருக்கும் மிக்க நன்றி
ஒரு வழியாக கல்லூரிக்கதையை பெயர் மாற்றி கல்லூரியின் பெயரில் இருந்த மதம் பற்றிய சொல்லையும் இறை வணக்கப்பாடலையும் என் வலைநூல் முகவரியையும் நீக்கி முகநூலில் நேற்று இரவு வெளியிட்டேன். இன்று வரை தடை எதுவும் வரவில்லை
செருப்புக்கு ஏற்றார்போல் காலை அங்குமிங்கும் வெட்டி காலை செருப்புக்குள் நுழைத்து விட்டேன்
எப்போதோ படித்த துணுக்கு ஓன்று நினைவில் வருகிறது
கணினிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய காலம்
இந்த மாதம் மின் கட்டணம் $ ௦ (௦ டாலர் ) செலுத்த வேண்டும் என அறிவிப்பு ஒரு வீட்டுக்கு வருகிறது
நாம்தான் கட்டணம் செலுத்த வேண்டியதில்லையே என் அவர் அதை மறந்து விடுகிறார்
ஆனால் தொடர்ந்து அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது . இன்ன நாளில் கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இறுதி அறிவிப்பும் வருகிறது
குழம்பிப்போன அவர் சற்று சிந்தித்து விட்டு ஒரு காசோலையில் தொகை ௦ டாலர் என்று எழுதி மின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறார்
௦ டாலர் பெற்றுகொண்டோம்  நன்றி என்று பதில் வருகிறது
இது சற்று அதிகப்படியான கற்பனையாகத் தெரியலாம்
ஆனால் ஒரு கல்லூரிப்பெயரில் வந்த இந்து என்ற சொல்லுக்காக தடை செய்தது கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது
கணினிகள் மனிதனை ஆளத்துவங்கி விட்டன

நெல்லை நினைவலைகள்  8
சில நாட்களுக்குப்பின்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com       
B F W   20082019  Tue




நெல்லை நினைவலைகள் 6 பேட்டை இந்துக்கல்லூரி படங்கள்



படங்கள்

நுழைவாயில்



 கல்லூரிக்கட்டிடம்


பேராசிரியர் ஜெயபால்  , நான் , வேதியல் துறைத்தலைவர்
பேராசிரியர் கவிதா ,முனைவர் அனிதா,

வேதியியல் சோதனைக்கூடம் 


முதல்வர்முனைவர் சுப்ரமணியம், நான் பேராசிரியர் கவிதா

நெல்லை நினைவலைகள் 6 பேட்டை இந்துக்கல்லூரி






பேட்டை இந்துக்கல்லூரி


                                                                                                                                                                                              
பேட்டை
  ம தி தா இந்துக்கல்லூரி வாசலில் நிற்கிறேன் சரியாக அரை நூற்றாண்டு கழித்து
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்  நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
கல்லூரியின் இறைவணக்கப்பாடல்  காற்றில் மிதந்து வந்து என் காதில் ஒலிப்பது போல் ஒரு பிரமை
உடலும் உள்ளமும் சிறகடித்துப் பறப்பது போல் ஒரு பரவசம்
கல்லூரியின் பெயர் தாங்கிய பெரிய நுழைவு வழி
பெரிய வாயில் (கேட்)  வாயில் காப்போன்
இதெல்லாம் முன்பு இல்லாதவை
வெற்று இடமெல்லாம் இப்போது பசுமையாக
பழைய கட்டிடங்களுடன் கலந்த புதியவை
கல்லூரிக்குள் நுழைந்து ஒரு ஐந்து நிமிடம் கல்லூரிக்காற்றை உள்வாங்கி விட்டு வந்து விட எண்ணித்தான் உள்ளே நுழைந்தேன்
எதிரே முதல்வர் அறை  . முடிந்தால் அவரைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று  அங்கு போய்   என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்   
முதல்வர் முனைவர் திரு சுப்ரமணியன் அவர்கள் என்னை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிய விதம் ஒரு  வி ஐ பீ போல் என்னை உணர வைத்தது
அன்புடன், பரிவுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு தன் பணியாளை என்னுடன் அனுப்பி நான் படித்த வேதியல் துறைக்கு அழைத்துச்சென்று துறைத்தலைவரிடம் அறிமுகப்படுத்தி வைக்கச் சொன்னார்
அங்கே போய் பார்த்து விட்டு திரும்ப வந்து தன்னை சந்திக்கும்படியும் அன்புக்கட்டளை இட்டார்
மனதில் ஒரு சிலிர்ப்புடன் போன எனக்கு மேலும் ஒரு உற்சாக வரவேற்பு
துறைத்லைவி பேராசிரியர் கவிதா தன் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினரை உபசரிப்பது போல் என்னை வரவேற்றார்
நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்த ஒரு நல்ல நண்பி  போல் மனம் விட்டுப்பேசினார் 
 குடும்ப செய்திகள் , பெண்ணுரிமை ,பெண்ணிடம் பெற்றோருக்கு உள்ள உரிமைகள் என பலவற்றையும் பேசினோம்
தோழி ஒருத்தி இருந்தால் என்ற ஆட்டோகிராப் படப்பாடல் நினைவில் மலர்ந்தது 
உடன் பணியாற்றும் முனைவர் அனிதா பேராசிரியர் ஜெயபால் இருவரையும் அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார்
வேதியல் சோதனைக்கூடத்துக்கும் வகுப்புக்கும் அழைத்துச் சென்றார்
முன்பு முழுக்க முழுக்க – மாணவர், ஆசிரியர் – என ஆண்கள் மட்டுமே இருந்த கல்லூரியில் இப்போது மாணவிகள் ,பெண் பேராசிரியர்கள்
மாணவ மாணவிகளுக்கு சீருடை
சில முதுநிலைப் படிப்புகள் என  மாற்றங்கள் பற்றியும் சொன்னார்
அரசு விதித்த கட்டணத்துக்கு மேல் எந்த வகையிலும் பணம் கேட்காமல் ஒரு சிறந்த கல்விக் சேவையில் கல்லூரி இயங்கி வருவது பற்றிப் பெருமை அடைந்தார்
பின்பு முதல்வர் அறைக்கு என்னுடன்  வந்தார்
நான் படித்தபோது இருந்த முதல்வர் ,திரு சோமசுந்தரம் துணை முதல்வர் ஜெகநாதன் , ஆண்ட்டிமணி என அழைக்கப்பட்ட வேதியல் துறை தலைவர் திரு பாலசுப்ரமணி விரிவுரையாளர்கள் திருவாளர்கள் கல்யாண சுந்தரம் (முதல்வர் மகன்) ,ராமலிங்கம் சிதம்பரம் அருணாச்சலம்  இன்னும் பலரும் என நினைவில் வந்தார்கள்
உடன் படித்தவர்களில் நினைவில் நிற்கும் பெயர்கள் ராமகோபால் சாமிதுரை சுந்தரம் பூவலிங்கம் ,குற்றாலிங்கம் அப்துல் காதர் கனகசபாபதி தெய்வு இப்ராஹீம்
இதில் சுந்தரமும் அப்துல்காதரும் பின்னாளில் கனரா வங்கியில் என்னுடன் பணியாற்றினார்கள்
ராமகோபால் அடிக்கடி திரைப்படம் மதியக்காட்சிக்கு போவர் .சுபதினம் என்ற படத்திற்கு அவர் வழக்கம் போல் போக, அன்று வகுப்பில் உள்ள அனைவரும் அதே படத்திற்குப் போய்விட அன்று மாலை வகுப்பே நடக்கவில்லை
அறிஞர் அண்ணா மறைவும் கலைஞர் முதல்வரானாதும் என் கல்லூரிக்காலத்தில்
கல்லூரி இலக்கிய மன்ற கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர்
பெய்எனப்பெய்யும் மழை
என்ற குறள் வரிக்கு புதிய ஒரு விளக்கம் சொன்னார்
பட்ட வகுப்பு முதல் ஆண்டு நான் பொள்ளாச்சி ந க ம கல்லூரியில் படித்தேன்
அத்தாவின் பணியிட மாறுதலால் இரண்டு மூன்றாம் ஆண்டுகள் இந்துக்கல்லூரியில்
கல்லூரி மட்டுமல்ல . பல்கலைக்கழகமும் மாற்றம்  பொள்ளாச்சி சென்னைப் பல்கலைக்கழகம் நெல்லை மதுரைப் பல்கலைக்கழகம்.
நல்ல வேளை. பாடதிட்டத்திலோ தமிழ் ஆங்கில பாட நூல்களிலோ மாற்றம் இல்லை
பொள்ளாச்சியில் துணைப்பாடம் இயற்பியலும் தாவர இயலும் . இந்துக்கல்லூரியில் துணைப்பாடம் இயற்பியலும் கணிதமும் .
நான் மட்டும் விலங்கியல் மாணவர்களோடு தாவரவியல் துணைப்பாட வகுப்புக்குப் போவேன்   
என்னுடைய பட்டச் சான்றிதழில் துணைப்பாடம் ( நான் படிககாத)கணிதம் என்று குறிப்பிட்டிருக்கிறது
பேராசிரியர் கவிதாவோடு முதல்வர் அறைக்குப் போய் அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்
கொஞ்சம் இருங்கள் . அருகில் ஒரு நல்ல உணவு விடுதி இருக்கிறது . அங்கு சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறேன் சாப்பிட்டுவிட்டுப்போகலாம்என மிகவும் வலியுறித்திச் சொன்னார் பேராசிரியர்
.இல்லை இன்னும் பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று நான் சொல்ல சரி காப்பியாவது குடியுங்கள் என்று கல்லூரி உணவு விடுதிக்கு என்னுடன் வந்து காபி பிஸ்கட் வாங்கிக்கொடுத்து வழியனுப்பி வைத்தார்
 சில நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு சாப்பாட்டு நேரத்தில் போன நினைவுகள் நெஞ்சில் நிழலாடின   
மனம் முழுக்க மகிழ்ச்சி, குதுகலம் கலந்த ஒரு இனம்புரியாத ஏக்கத்தொடு நெல்லை சிற்றுலாவைத் தொடர்ந்தேன்
மீண்டும் 
நெல்லை நினைவலைகள் 7
சில நாட்களுக்குப்பின்

வலைநூல் முகவரி
sherfudinp.blogspot.com

B F W 180821019  sun