Sunday, 25 August 2019

நெல்லை நினைவலைகள் 9 123 சர்க்கரை விநாயகர் கோயில் தெரு






123 சர்க்கரை விநாயகர் கோயில் தெரு


சின்னக்கதவுதடன் பெரிய கதவு

நெல்லை நினைவலைகளின் முன்னுரையில் என் வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகள் நெல்லையில்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்
அதில் பலவும் இந்த இல்லத்தில்தான் நடைபெற்றன
அத்தா பணி ஓய்வுபெற்ற பின் நாங்கள் போன வீடு பற்றி போன பகுதியில் சொல்லியிருந்தேன்
இடையில் ஒரு பழைய வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்து விட்டு மேலே சொன்ன 123------தெருவிற்கு வந்தோம்
மிகப்பெரிய வீடு காடியானா என்று அழைக்கப்படும் வண்டி நிறுத்தும் இடமே ஒரு பெரிய வீடு அளவுக்கு இருக்கும் முதலில் முழு வீட்டிலும் பின் காடியானாவிலும் குடியிருந்தோம்
இந்த வீட்டில் தான் நான் பட்டபடிப்பு நிறைவு செய்தது ,வேலை தேடி ஒரு ஆண்டு அலைந்தது ,காரைக்குடி செக்ரியில் வேலை கிடைத்தது பின் கனரா வங்கி சந்திப்பு கிளை உடன்குடி கிளை நகர் கிளையில் பணியாற்றியது , திருமணம் பிள்ளைகள் பிறந்தது , பதவி உயர்வு கிடைத்துகேரளாவுக்கு இட மாறுதல் எல்லாம்
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மா மறைவு 
42 ஆண்டுகளுக்குப்பின் அந்த வீட்டு வாசலில் .
. கதவு திறந்திருக்க சற்று தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன்
இப்போது அது ஒரு மருத்துவர் இல்லமும் மருத்துவ மனையும் இணைந்த இடம் .ஏற்கனவே பெரிய வீடு . மேலும் பெரிதாய்க் கட்டியிருந்தார் மருத்துவர் சிவராமன் – குழந்தை நல மருத்துவர் ,
நல்ல முறையில் வரவேற்று உட்காரச் சொன்னார். படங்கள் எடுக்கவும் அனுமதித்தார்
முன்பு இருவர் வந்து பார்த்ததையும் சொன்னார் – சகாவும் இதயத்துல்லாவும்.
வீடு வெளித்தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை . வண்டி நிறுத்தும் காடியானாவுக்கு ஒரு பெரிய உயரமான கதவு இருக்கும் ,அதற்குள் ஒருவர் போகும் அளவுக்கு ஒரு சிறிய கதவு (Wicket gate )
இன்னொரு பக்கம் பெரிய வாசல்படி மாடியில் ஒரு அறை அங்குதான் நான் படுப்பேன்.
திறந்த வெளியில் கட்டிலைப்போட்டுப் படுத்தது இப்போது கனவாகத் தெரிகிறது  நோ ஏ சீ நோ பேன் நோ கொசு
நெல்லை பற்றி அதுவும் இந்த வீடு பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்  ஆனால் ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன்
எனவே இது போதும்
இந்தபகுதியை எழுதிக்கொண்டிருக்கும்போது (24 08 2019)  எனது கல்லூரி வகுப்புத் தோழர் , பின் கனரா வங்கியிலும் என்னோடு பணியாற்றியவர் – நெல்லையைச் சேர்ந்த திரு ஜி. சுந்தரம் இன்று காலை சென்னையில் காலமான செய்தி வந்தது
அவரது ஆன்மா சாந்தியடையவும் இந்தப்பிரிவை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்துக்கு குறிப்பாக அவரது துணைவிக்கு வழங்க இறைவனிடம் வேண்டுகிறேன்
நெல்லை நினைவலைகள் 10 ( நிறைவுப்பகுதி) விரைவில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 25082019    sun


 மரு சிவராமன் 

வீட்டின் ஒரு பகுதி
வீட்டின் உள்ளே 

உள்தோற்றம்



No comments:

Post a Comment