Tuesday, 29 September 2020

எஸ் பீ பி சிறப்புத் தேன்கிண்ணம்

 




எஸ்  பீ பி 

சிறப்புத் தேன்கிண்ணம்

விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு

1980கள்

திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கும் தேன்கிண்ணம் நிகழ்ச்சி

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் வழங்கும் சிறப்புத் தேன்கிண்ணங்களில் தொகுத்து வழங்குபவர்  தொடர்புடைய – அவர் பாடிய , அவர் இசை அமைத்த, அவர் இயற்றிய  ,அவர் நடித்த  காட்சிப்படல்கள் மட்டுமே இடம் பெறும்

அன்று சிறப்புத் தேன் கிண்ணத்தை தொகுத்து வழங்கியவர் எஸ்  பீ  பி

நாற்பது ஆண்டுகளாகியும் இன்றும் அது மனதில் நிற்கிறது

அந்த நிகழ்ச்சியில் ஒலி பரப்பிய பாடல்களில்  ஒரு பாட்டு கூட எஸ் பீ பி பாடியது இல்லை

டி எம் எஸ் , சீர்காழி போன்ற மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களை ஒலி பரப்பி அவர்களின் சிறப்புகளை பெருமை படுத்திப்பேசினார் .

“எம் எஸ் வீ அவர்கள் மிக எளிதாகத் தமிழில்  பாடிய சிவ சம்போ சிவ சம்போ என்ற பாடலை

 தெலுங்கில் பாட  நான் பட்ட  பாடு – அது எனக்கும் ஆண்டவனுக்கும் மட்டும்தான் தெரியும் “

என்று பாராட்டி அந்தப் பாடலை ஒலி பராப்பினார்

இப்படிப் பிறரை உயர்த்தி உயர்த்தி தானும்  உயர்ந்து சிகரம் தொட்டவர் எஸ் பீ பீ

29092020tue

sherfuddinp.bkogspot.com

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

Monday, 28 September 2020

ENGLISH Android

 


A funny Question this week

“Android phones are for men folk only”

Why?

 

For the funny question the funny answer is

Andro or andr means of men male

Origin

From greek anēr, andr- ‘man’.

 

Another funny (rather silly ) answer

ஆண் ட்ராய்ட்

Meant for men (ஆண்)

Since it is a funny question both answers are acceptable

Thanks, Greetings ,Congratulations to

M/S

 Meharaj (பேரிலேயே ஆண் இருப்பதால்)

Ashraf Hameeda T(an droid  they are (aan men)

RaviRajJM(Androecium of flower is a male organ of plants –May be treated as male)

28092020mon

sherfuddinp.blogspot.com

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

Saturday, 26 September 2020

சாந்தியும் சமாதானமும்






“உங்களுக்கு  சலாம் என்னும் முகமன் சொல்லப்படும்போது அதைவிட அழகான சொற்களைக்கொண்டு முகமன் (சலாம்) கூறுங்கள் “

சொன்னது யார் ?

ஏக இறைவன் என்பது விடை

புனித குர்ஆனில் வரும் வசனம் இது (4<86)

அஸ்ஸலாமு அலைக்கும் என்பது அரபு மொழியில் ஒருவரை ஒருவர் வாழ்த்தி முகமன் சொல்வதாகும்

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாக் என்பது இதன் பொருள்

இறைவன் சொன்னது எனவே இது ஒரு கடமையாகிறது

இந்த சலாமின் சிறப்புகள், பயன்பாடு பற்றி நிறைய எழுதலாம் . இறைவன் நாடினால் பின்பு ஒரு நாள் அது பற்றிப் பார்க்கலாம்

 

சரியான விடை எழுதிய சகோதரி மெகராஜுக்கு நன்றி, வாழ்த்துகள், பாராட்டுகள்

 

இறைவன் நாடினால் பின்பு சிந்திப்போம்

26092020sat

sherfuddinp.blogspot.com

 

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA


Thursday, 24 September 2020

சலாம்

 






“உங்களுக்கு  சலாம் என்னும் முகமன் சொல்லப்படும்போது அதைவிட அழகான சொற்களைக்கொண்டு முகமன் (சலாம்) கூறுங்கள் “

சொன்னது யார் ?

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

24092020thu

sherfuddinp.blogspot.com

 

Wednesday, 23 September 2020

தமிழ் மொழி அறிவோம் சான்றோன் என

 



சான்றோன்
என

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

மிகப் பெருமளவில் பயன்பாட்டில் உள்ள குறள்களில் ஓன்று 

இந்தக்குறளுக்கு  மு. வ அவர்கள் தரும் விளக்கம்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

 

குறளும் பொருளும் படிக்க எளிதாகத்  தெளிவாகத்தான் இருக்கிறது

 

பேறுகாலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் வலி எல்லோரும் அறிந்தது, கேள்விப்பட்டது

 

எலும்புகள்  நொறுங்கி உடைவது போல் அந்த அளவுக்கு வலி உண்டாகும் என்று சொல்கிறார்கள்

 

அப்படியிருக்கையில் ஈன்ற பொழுதின் உவப்பு என்கிறான் வள்ளுவன்

 

அதன் பொருள் என்ன ?

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

22092020tue

sherfuddinp.blogspot.com

 

 

 

உடல் வலியின் அளவு   டெல் என்னும் அலகில் கணக்கிடப்படுகிறது .

மனித உடல் நாற்பத்தி ஐந்து டெல் அளவுக்குமேல் வலி தாங்காது

ஆனால் பேறுகால வலி  ஐம்பத்து ஏழு   டெல் அளவுக்கு இருக்கும் இது  இருபது எலும்புகள் உடையும் அளவுக்கு உள்ள வலி என்று ஒரு கருத்து உலவுகிறது

 இந்தக் கருத்து சரியா தவாறா என்றெல்ல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நிறைய உண்டு

 

ஆனால் பெரும்பாலான பெண்கள் கடுமையான பேறுகால வலியை உணர்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

 

இந்த நிலையில் எப்படி வள்ளுவர் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிறார் ? இது அறியாமையா ? இல்லை இல்லை அறிவின் நுட்பம், அறிவியல் அறிவு

 

பேறுகாலத்தின்வலியை உணர்ந்த பெண்கள் அந்த வலியை மறக்கும் அளவுக்கு ஒரு இன்ப உணர்வு உடலெங்கும் பரவி ஒரு பரவச நிலையை அடைகிறது

 

இந்த அற்புதத்தை நிகழ்த்துவது என்டோர்பின் எனப்படும் ஒரு சுரப்பு

 

இடய்பற்றி புரிந்து கொள்ள நம் உடலின்  அடிப்படை அமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும் .

 

மிகச் சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்

 

பணிகளின் அடிப்படையில் நமது உடல் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது

 

நமக்கு நன்கு தெரிந்தவை

செரிமான மண்டலம் (வயிறு) சுவாச மண்டலம் (நுரைஈரல் ) நரம்பு மண்டலம் (மூளை ) குருதி ஓட்ட மண்டலம் (இதயம்)

 

நாளம் இல்லாச் சுரப்பிகள் மண்டலம் மிகவும் குறைவாக அறியப்பட்ட்டாலும் இதன் பணிகள் உடல், மன வளர்ச்சி, இனப்பெருக்கம் , செரிமானம், இதயத் துடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன

 

தைராயிட், அட்ரீனலின். பிட்யூட்டரி  இவை ஓரளவு கேள்விப்பட்ட  நா, இ. சுரப்பிகள். 

தைராயிட் இப்போது மிகப்பரவலாகப் பெசப்பட்டுகிறது ,இது உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் சுரப்பி .ஒருவர் உயரமா குள்ளமா போன்ற பலவற்றைத் தீர்மானிக்கும் சுரப்பி

 

அட்ரீனலின் – நாய் துரத்துவது போன்ற எதிர்பாராத ஒரு தீங்கை எதிர்கொண்டு சமாளிக்க உடலுக்கு வலிமை கொடுப்பதோடு   இதயத் துடிப்பையும் கட்டுப்படுத்துகிறது  தாக்கு அல்லது தப்பித்து ஓடு (Fight or flight ) சுரப்பி என்ற பெயர் கொண்ட இது பற்றி பின்பு எப்போதாவது பார்ப்போம்

 

இவையெல்லாம் போக , இனப்பெருக்கம், தாய்மை , பேறுகாலம் ,குழந்தை பராமரிப்பு போன்ற சிறப்புப் பணிகளுக்காக பல சிறப்பு சுரப்பிகள் உள்ளன

அவற்றில் சிலபற்றைப்பார்போம்

 

 

ப்ரோடாசின் – தாய்மய்ச் சுரப்பி எனப்படும் இது தாய்ப்பால் சுரக்கவும் , தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும் குழந்தை புது உலகத்துக்கு பழகிக்கொள்ளவும் உதவுகிறது

 

 

ஆக்சிடோசின்

கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு , தாய்ப்பால் சுரப்பு பு போன்றவற்றை சீர் செய்யும் இது பாசச்சுரப்பி என்ற பெயர் கொண்டது

 

 

என்டார்பின்ஸ்

உடலில் மனதில் அழுத்தம் , வலி அதிகம் ஆனால் உடலில் சுரக்கும் எண்டார்பின், வலியை மட்டுப்படுத்தி, ஒரு பரவச நிலையை அடையச் செய்யும்

 

இந்த என்டர்பின்  சுரப்பிதான்  பேறுகாலத்தில் உடலெங்கும் பாய்ந்து பரவி  வலியை மறந்து ஒரு பரவச நிலையை அடைய பெரிதும் உதவுகிறது இந்தப்பர்வச நிலை தான் வள்ளுவன் கூறும் ஈன்ற பொழுதின் உவப்பு

 

இது தாய்மைக்கு மட்டும் உள்ள ஒரு தனிச் சிறப்பு

எனவேதான் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்றாலும் ஈன்ற பொழுதின் பெரிதுவப்பதில் தந்தைக்குப் பங்கு கிடையாது

 

முடிந்த அளவுக்கு சுருக்கமாக விளக்கி இருக்கிறேன் . தெளிவாக இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

இறைவன் நாடினால் மீண்டும்  வேறொரு பதிவில் சிந்திப்போம்

 

23092090wed

sherfuddinp.blogspot.com

 

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

 

 

Monday, 21 September 2020

ENGLISH- SMART



It is a five letter word

It is an adjective  and verb

As adjective it has   widespread I usage n almost all wakes of modern life in  a good sense mostly

As a verb it has an unpleasant meaning

As a verb it means to hurt with a sharp pain

A least five words can be made out of this word without jumbling letters

Sat, Mart , Art, Mat At, Mar

What is the word ?

Lengthy question but very simple answer

20092020sun

sherfuddinp.blogspot.com

It is a five letter word

Answer is SMART

It is an adjective and verb

As adjective it has   widespread I usage n almost all wakes of modern life in  a good sense mostly

Needs no explanation - Smart Phone, Smart City

As a verb it has an unpleasant meaning

n   to hurt with a sharp pain

A least five words can be made out of this word without jumbling letters

Sat, Mart, Art, Mat At, Mar

I have received 3 responses

M/S Somesekat (LOOSE)

DRP Sundaram (ATONE)

Ravi Raj(OBJECT )

Thanks

If your answer cover all the points in the question it is correct

Once again thank you

21092020mon

sherfuddinp.blogspot.com

 

Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

Friday, 18 September 2020

முதல் காதல்

 



உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை சண்டை சச்சரவு , போர் எல்லாமே பெண் பொன்  மண்ணுக்ககத்தான்

மனித இனத்தின் முதல் கொலையும்  ஒரு பெண்ணுக்ககத்தான்

 முதல் மனிதன் ஆதமை  இறைவன்  களிமண்ணினால் படைத்து   உயிரூட்டி  ஞானம் அளித்து  உலகின் முதல் நபியாகவும் ஆக்கினான்  

சரி ஆதமுக்கு ஒரு துணை வேண்டுமே . முதல் பெண்மணி ஏவாள் எனப்படும் ஹவ்வா .

அவர் எப்படிப்படைக்கப்பட்டார் ?

ஆதமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது . யூதர்களின் சட்ட நூலான தல்முத் இன்னும் குறிப்பாக ஆதமின் இடதுபுற பதிமூன்றாவது விலா எலும்பில் இருந்து என்று சொல்கிறது

பெண்களை விட ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு குறைவாக இருப்பதாய் ஒரு கருத்து இருக்கிறது அது உண்மையா என்பதை மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும் 

புனித குர்ஆனில் ஏவாள் எப்படிப் படைக்கப்பட்டார் என்பது பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை

 

ஆதம் ஏவாள் உலகின் முதல் இணை

அடுத்தடுத்து வாரிசு உருவாக ஒரு ஆணும் பெண்ணும் தேவை .உலகில் ஒரே ஒரு இணை இருக்கும் இந்தக் கால கட்டத்தில் அந்த இணைக்குப் பிறந்த ஆண் பெண் , அதாவது உடன் பிறப்புகள் மூலம்தான் அடுத்த வாரிசு உருவாக முடியும்  ,

ஆதம் ஏவாளின் ஒரு  பெண்ணை   அவர்களின் இரு ஆண்கள்( ஹாபில் , காபில் Haabeel and Qaabeel - )விரும்புகிறார்கள் .இந்த விருப்பம் போட்டியாக மாறி.சண்டைமூண்டு  ஒருவரை மற்றவர் கொலை செய்து விடுகிறார்

உலகின் முதல்கொலை ஒரு காதல் கொலையாக, ஒரு பெண்ணுக்காக நிகழ்கிறது

கொலை செய்யப்பட்ட  உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் கொலை செய்தவர்

அப்போது இறைவன் அங்கு ஒரு காகத்தை அனுப்பி வைக்கிறான். அந்தக்காக்கை  மண்ணைத் தோண்டுகிறது .அதைப் பார்த்து மண்ணைத் தோண்டி தன் உடன் பிறப்பின் உடலத்தைப் புதைக்கிறார் ஆதமின் மகன்

ஒரு காக்கைக்கு இருக்கும் அறிவு கூட தமக்கு இல்லையே என வருந்தும் அவர் தான் செய்த கொலைக்காவும் மிகவும் வருந்துகிறார்

இதுதான் நான் நேற்று குயில் பற்றிய பதிவின் நிறைவ்ப்பகுதியில் கேட்ட வினாவுக்கு விடை

ஒரு சிலராவது விடை சொல்வார்கள் என எதிர்பார்த்தேன் . வினாவைப் பார்த்தார்களா என்பதே தெரியவில்லை

மிக நீண்ட விளக்கங்களை மிகச் சுருக்கமாக முடிந்தவரை தெளிவாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்

(Source Quran 4:1- creation of man

5:27 to 31- quarrel, murder, and crow – raven

And Towards understanding Quran)

இறைவன் நாடினால் மீண்டும் வேறொரு பதிவில் சிந்திப்போம்

18092020fri

sherfuddinp.blogspot.com

 Please support and subscribe my channel

My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA