“உங்கள் காலணிகளை கழற்றி விடுங்கள் “ என்று சொல்லும் இறைவசனம் எது ?
ﯫ
"நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:12)
இறைவன் மூசா அவர்களிடம் சொன்னது
சரியான விடை அனுப்பிய
பர்வேஸ் அகமதுக்கு
வாழ்த்துகள்
பாராட்டுகள் முயற்சித்த சகோ பாடி பீர் அவர்களுக்கு நன்றி
சிறு விளக்கம்
இறைவணக்கத்தின் போது ஹாதுகள (யூதர்கள் ) காலணிகள், தோலால் ஆன கால் உறைகளை அணிய மாட்டர்கள்
இந்தப் பழக்கம் நபி ஸல் அவர்களால் மாற்றப் பட்டது .நபி பெருமான் காலணிகளோடும் காலணிகள் இல்லாமலும் இறைவணக்கத்தில் ஈடு பட்டதற்கு சான்றுகள் இருப்பதாய் அறிஞர்கள் சொல்கிறார்கள்
அந்தக் காலகட்டத்தில் இறைவணக்க இடங்களில் வழுவழுப்பான தரைகளோ , ஆடம்பரமான விரிப்புகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
தேவைப்பட்டால் அடக்க இடம் போன்ற திறந்த வெளிகளில் காலணிகளோடு இறைவணக்கத்தில் ஈடுபடலாம் என்பது அறிஞர்கள் கருத்து
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
02072021fri
SherfuddinP

No comments:
Post a Comment