Tuesday, 2 August 2022

தமிழ் (மொழி) அறிவோம் விளம்பல் – பரிமாறுதல் ,குமரி வட்டார வழக்கு

 தமிழ் (மொழி) அறிவோம்

விளம்பல் – பரிமாறுதல் ,குமரி வட்டார வழக்கு 03082022
பெண்கள் பிரியாணி விளம்பினார்கள்
இது முக நூலில் அண்மையில் வந்த பதிவு
விளம்பினார்கள் என்பது ஒரு வட்டார வழக்குச் சொல்
எந்த வட்டாரம்?
பொருள் என்ன ?
விடை
குமரி மாவட்டம்
விளம்பு பரிமாறு
(குமரி மாவட்டத் தமிழ் – விக்கிப்பீடியா)
சரியான விடை அனுப்பியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
அவர்கள் பெயர்களும் விடைகளும் (விடைகள் அடைப்புக்குள் )
சகோ
தல்லத்—முதல் சரியான விடை (பரிமாறுதல் –தென் தமிழகம் )
ஹசன் அலி (குமரி வட்டாரம் – உபசரிப்பு ,சொல், பரப்புரை, தமிழ் ஆண்டு ,வெளிப்ப்படுத்துதல் பரிமாறு, விசாரி )
நஜீமா பெரோஸ்( பகிர்ந்து கொள்ளுங்கள் , பரிமாறுங்கள்—பழனி பகுதி )
பர்வேஸ்( பரிமாறுதல்- திருவாரூர் பகுதி)
ஷர்மதா (போட்டார்கள், பரிமாறுவது - ) இலங்கைத் தமிழ் என்று குறிப்பிட்டலும் அதற்கான சான்று எதுவும் இல்லை
விளம்பினார்கள்
என்ற சொல்லை முகநூலில் அறிமுகம் செய்த
சகோ மீ மு இஸ்மாயிலுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௦௩௦௮௨௦௨௨
03082022புதன்
சர்புதீன் பீ
May be a cartoon of 1 person
Like
Comment
Share

No comments:

Post a Comment