மாலை நேர உணவகம் பகுதி 2 துல்ஹஜ் சிறப்புப் பதிவுகள் நிறைவுற்ற நிலையில்
வழக்கமான பதிவுகள் சில நாட்களில் துவங்கும்
இந்த
இடைவெளியை நிரப்ப சில துணுக்குப் பதிவுகள்
மாலை நேர உணவகத்துடன் இணைந்த ஒரு மதுக்கூடம்
தரமான சுவையான உணவு நீதமான விலையில் கிடைப்பதால் எப்போதும் நல்ல கூட்டம்
மகிழுந்தில், பேருந்தில் அந்த வழியாகப் பயணிப்பவர்கள் அங்கு சாப்பிடாமல் போக மாட்டார்கள்
மதுக் கூடத்தில் ஒரு அழகான இளம்பெண் பணியில் இருக்கிறார்
மதுப்புட்டிகளை கொடுத்து பணம் வாங்கி வைக்கும் பொறுப்பு அவருக்கு
பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் மிக நல்லபேர் வாங்கி விட்டார் வாடிக்கையாளர் களிடமும் உரிமையாளரிடமும்
ஒரு நாள் மாலை அந்தி மயங்கும் நேரத்தில் ஒரு இளைஞர் அங்கு வருகிறார் – இதுவரை யாரும் பார்த்து அறிந்திராத ஒரு புதிய மனிதர்
நேரே அந்தப் பெண்ணிடம் போகிறார்
ஒரு சில மணித்துளிகள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்
எதிர்பாராத விதமாக அந்தப் பெண் இழுப்பறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞனை சுட்டு விட அவர் மடிந்து கீழே சாய்கிறார்
அந்தப் பெண்ணும் மயங்கி விழுந்து விடுகிறார்
இந்த நிகழ்வுக்குப் பின்னணி என்ன ?
உங்கள் ஊகம் என்ன ?
எழுதி அனுப்புங்கள்
இது ஒரு உளவியல் புதிர்
சரியான விடை அந்தப் பெண்ணுக்கும் ஏற்கனவே இந்தப் புதிரை படித்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்
ஊகங்களில் சரி , தவறு என்று எதுவும் கிடையாது
எல்லாமே சரிதான்
எனவே உங்கள் மனதில் தோன்றியதை தயஙகாமல் எழுதி அனுப்பலாம்
வந்த விடைகளைப் பார்க்கு முன் ---
தொடரிப் பயணம்- அதில் கண்ட குறைகள் பற்றி சில நாட்கள் முன்பு ஒரு பதிவு போட்டேன்
வந்த கருத்துக்களில் ஓன்று என்னை சிந்திக்கத் தூண்டியது. அது “உங்கள் பதிவில் முகமதிய வாடை தெரிகிறது “
இதை மனதின் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
இப்போது உங்கள் விடைகள்
1 சகோ அஷ்ரப் ஹமீதா
Basically a good natured girl might have been triggered to shoot the man who might have threatened her of harm and hurt to herself and/or her family that could be beyond repair. She could have shot him as her last straw stop him while her innate goodness gave a mental shock that she has actually shot a person dead made her physically collapse
2 சகோ தல்லத்
அவள் வேலைக்கு வந்ததே தன் தாயின் கணவனின் தகாத நடவடிக்கையினால் தான்.இங்கும் இது தொடரும் பொழுது,அவனை மிரட்ட ஏந்திய துப்பாக்கியால் எதிர்பாராத விதமாக சுடப்பட்டு அவன் இறக்கிறான். அவள் மயக்கமடைகிறாள்.
3 சகோ ஷர்மதா
அந்தப் பெண் அவளது
கணவனாக இருந்திருக்க வேண்டும்.
அவளை மதுக்கடையில்
வேளைசெய்கிறாள் என்பதால் அவதூறாக
பேசியிருக்க வேண்டும்.
அந்த ஆத்திரத்தில் அவள் இந்தச் செயலை
செய்திருக்க வேண்டும்.
4 சகோ ஜோதி
கணவன் மனைவி
மேல் சந்தேகம் கொண்டு பேசியால்
சுட்டுவிட்டால் என்பது
வழக்கமான பதிலாக இருக்கும்.
மற்றபடி, நண்பனோ
சகோதரனோ?
மது பானக்கடையில்
அந்தப் பெண் பணியாற்றுவதை.
கேவலமாகப் பேச
அதனால் கோபப்பட்டு
அந்தப் பெண்.
சுட்டிருக்கலாம்.
5 சகோ பீர் என்ற பீயன்னா
பெண் புதிதாக பதவி ஏற்றுகொண்ட ஒரு அதிகாரி.
அவருக்கு ஒரு ரகசிய வேலை ஒப்படைக்க ஓடுகிறது.ஒரு தலை மறைவு குற்றவாளியை தேடும் பொறுப்பு. கொடுர குற்றவாளியான அவனை உயிருடன் அல்லது பினமாகவோ பிடிக்கும் பொறுப்பு அந்த பெண் அதிகாரிக்கு .அந்த குற்றவாளி அவ்வப்போது அந்த உணவு விடுதிக்கு வந்து செல்வான் என ரகசிய போலீஸ் தகவல்.ஆகையால் அந்த புது பெண் அதிகாரி அங்கு பணிக்கு சேர்கிறார். அவர்கள் திட்டப்படி அந்த வாலிபன் அங்கு வருகிறான்.
அவன் வந்ததும் போலீஸ் படையை வரச்சொல்லி தகவல் அனுப்புகிறார் அந்த பெண் போலீஸ்.அவன் வந்த வேலையை
முடித்து திரும்பும் வரை போலீஸ் படை வராத காரணத்தால் அவனிடம் பேச்சு கொடுத்து தாமதிக்க வைக்கிறார் அந்த பெண் போலீஸ். சுதாரித்த அந்த குற்றவாளி தப்பிக்க எதனிக்கையில் அந்த பெண் போலீஸ் அவனை சுட்டு விடுகிறார்.
புதிதாய் பதவி ஏற்றி முதல் Encounter என்பதால் அவரு அதிர்ச்சியில் மயக்கம் அடைகிறார் .
: கதை:2
ஊதாரி கணவனை விட்டு தனியாக வந்த பெண் அந்த உணவு விடுதியில் பணி செய்கிறாள்.அங்கு வந்த அவள் கணவன் அவளிடம் பணம் கேட்டு நச்சரிகிரான்.பொறுமை இழந்த அவள் கடை முதலாளி வைத்திருந்த துப்பாகியை எடுத்து அவனை சுட்டு விட்டு மயங்கி விடுகிறாள்.
ஐந்து பேருடைய கருத்துக்களை 6 கதைகளில் பார்த்தோம்
இந்த ஆறிலும் ஒரு ஒற்றுமை தெரிகிறதா ?
ஆண்தான் குற்றவாளி என்று ஒருமித்த கருத்து
இதற்கு என்ன அடிப்படை ?
ஆணைப்பற்றி ஒரே குறிப்பு அவரை முன் பின் யாரும் பார்த்ததில்லை என்பதுதான்
வேறு எந்தத் தகவலுமே இல்லாத நிலையில் அவரை குற்றவாளி என்று எளிதில் முடிவு செய்து விடுகிறோம்
இதைத் தான் உளவியலில் pre conceived notion என்கிறார்கள்
1. an idea or judgment about something formed before encountering any evidence or firsthand information:---
எந்த விதமான சான்றும் தகவலும் இல்லாமல் ஒரு முடிவுக்கு வருவது
2. 2 Preconceived notions, also sometimes referred to as unconscious biases,
நம்மை அறியாமலே . unconscious ஆக ஒரு தலைச் சார்பாக ஒரு தீர்ப்பு
இதற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு எல்லோரும் ஆண்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வந்திருப்பது
பொதுவாகப் பெண்கள் , அதுவும் அழகான இளம்பெண்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம்
இந்த unconscious bias மதம், நிறம் (வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் )
உயரம், எடை வயது அழகு , பெண்ணா ஆணா, பாசம்
என பலவற்றின் அடிப்படையில்
ஏன் பெயரின் அடிப்படையில் கூட அமையலாம்
அதற்கு எடுத்துக்காட்டுதான் நான் சொன்ன முகமதிய வாடை என்ற பதிவு
என்னுடைய அந்தப்பதிவில் மதம் பற்றிய ஒரே குறிப்பு என் பெயர்தான்
அதை வைத்தே ஒரு வெறுப்புப் பதிவு
PCN னால் தனி மனிதன் வாழ்வில் பெரிய பதிப்பு ஒன்றும் ஏற்படாது
அழகிய, உயரமான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை
அப்படித் தவறான முடிவாக இருந்தாலும் அதன் தாக்கம் அந்தக் குடும்பங்களுக்கு மட்டுமே
ஆனால் சமுதாயத் தலைவர்கள் , பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் .
அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் , நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்
இவர்களிடத்தில் PCN இருந்தால் (இருந்தால் என்ன இருந்தால் – இருக்கிறது )
அது எல்லா நிலைகளிலும் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி வளர்ச்சி நிலை குலைந்து போகும்
பெரிய எடுத்துக்காட்டு எல்லாம் இதற்குத் தேவை இல்லை
நாம் அன்றாட வாழ்வில் அனைத்தையும் பார்த்து உணர்ந்து வருகிறோம்
விடைகள் எழுதி உற்சாகப் படுத்தி பதிவுக்கு சுவை கூட்டிய அனைவருக்கும் நன்றி
சரி அந்தப் பெண் சுட்டதுக்கு உண்மையான காரணம் என்ன ?
சகோ ஆ ரா விஸ்வநாதன் அதை எழுதி அனுப்பியிருக்கிறார் (ஏற்கனவே புதிரைப் பத்த்திருக்கிறார் )
இறைவன் நாடினால் நாளை சந்தித்து அதை சிந்திப்போம்
01072023சனிக்கிழமை
சர்புதீன் பீ