மறந்தால் தானே நினைவு நாள்
நின்றால் நடந்தால் உன் நினைவு
கனவுகள் வருவதில்லை நினைவுகள் நீங்காததால்
ஊஞ்சல் ஆடினால் உன் ஞாபகம
பூத்துக்குலுங்கும் மேப்பூக்கள்
மெல்லிய மணத்துடன் பாரிஜாதம் அடுக்கு மல்லி, ரோஜா அனைத்திலும் புன்னகைக்கும்உன் பூமுகம்
நிறைவாக நிறைவுற்ற வாழ்க்கை உனக்கு
நினைவுகள் மட்டுமே எனக்கு
சுமைதாங்கியாய் சில வரிகள்
நினைவலைகள் ஓய்ந்து நெஞ்சம் கொஞ்சம் இளைப்பாற
27062023

No comments:
Post a Comment