Thursday, 29 February 2024

திருமறை குரான் 67:30 01032024 வெள்ளி

 




திருமறை குரான்

67:30
01032024 வெள்ளி
“-----உங்கள் தண்ணீர் பூமிக்குள் போய்விட்டால் உங்களுக்கு வேறொரு ஊற்றை கொண்டு வருபவன் யார் ?-------
குர்ஆனில் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 67 (முல்க்-ஆடச் அதிகாரம் ) வசனம் 30
(நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? -67:30
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறவோர் :
சகோ
அஷரப் ஹமீதா - முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா &
Khatheeb Mamuna Lebbai
விளக்கம்
30 வசனங்கள் கொண்ட முல்க் சூராவில் இறைவனின் மாட்சிமை , அவன் ஆட்சி அதிகாரம் அவன் படைப்பின் முழுமை ,பறவைகள் சிறகை விரித்தும் விரி க்காமலும் பறப்பது என எல்லாமே அவன் கட்டுப்பாட்டில் இருப்பது பற்றிச் சொல்லப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
19ஷாfபான்(😎 1445
01 032024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 27 February 2024

கவிதைப்பூங்கா சான்றிதழ் 24/ 27 02 2024

 கவிதைப்பூங்கா சான்றிதழ்

24/ 27 02 2024  சனி /செவ்வாய் 


சொந்த ஊர் 15 சகோ ஷர்மதா பார்வையில் 28022024





 சொந்த ஊர் 15

சகோ ஷர்மதா பார்வையில்
28022024
நான் அறிந்த திருப்பத்தூர் 2ம்பாகம்.
திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்து திருப்பத்தூரில்
வாழ்ந்தவர்களுக்கு சீதேவியும் அவர்களுடன் ஒன்றிப்போன ஒரு விஷயமாகத்தான் இருந்தது.
அது மாதிரியான சீதேவியில் என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்கிறேன்.
சீதேவியில் அதிகாலை நான்கு மணிக்கே குமரிப்பெண்கள்
குளிக்கத்துவங்கி விடுவார்கள்.துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கம் கொண்டிருப்பவர்களும் விழித்து விடுவார்கள்.
இந்த மாதிரி அதிகாலை நேரத்திலஎங்கள் அக்காவும் அதற்குப்பிறகு நான்
குளித்துவிட்டு வருவோம்.
ஒருமுறை நான் குளிக்கும் பொழுது என் காதில் போட்டிருந்த சிமிக்கி கழன்று தண்ணீரில் காணாமல் போய்விட்டது.
அதை எங்கள் அம்மா கோட்டையான் வீட்டு அம்பர் சச்சா மகன் ஜாபர் அண்ணனிடம் சொல்லி தேடிப்பார்க்க
சொன்னது.அப்போது கொஞ்சம் தண்ணீர் வற்றியிருந்த காலம்.
அவரும் நீரில் மூழ்கி கீழேயுள்ள மண்ணை சல்லடையில் அள்ளி சலித்து சலித்துப்பார்த்து
காணாமல் போன சிமிக்கியை கண்டெடுத்துக்கொடுத்தார்.கடலில் மூழ்கி முத்தெடுப்பதைபோன்று இதுவும் ஒரு அதிசயநிகழ்வாகத்தான் இருந்தது.
சீதேவி முழுவதுமாகவற்றி சிறிதளவே தண்ணீர் கிடக்கும்
காலங்களில் பலரும்இது போன்று மண்ணை சலித்து ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்கள்.
கிடைக்கிறவர்கள் எடுத்துச்செல்வார்கள்.
ஒரு வாரம் பத்து நாள்கள் துவைக்காமல் துணிகளை சேர்த்து வைத்து சீதேவியில் உறவுகளையும் நண்பர்களையும் சந்தித்து பேசிவிட்டு
மிக இலகுவாகத் துவைத்து காயவைத்தும் எடுத்துக்கொண்டு போவதுண்டு.
இவ்வாறாக பகல் முழுவதும் கூட்டமாக இருந்து கொண்டிருக்கும் சீதேவி
மாலை நேரமானால்அமைதியாகிவிடும்.
அந்த நேரங்களில் பாம்புகள் தண்ணீருக்கு மேலே வந்து தலையை நீட்டிக்கொண்டுமிதந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு சீதேவியில்பாம்பு ஒருமுறை விரலில் கடித்துக்கொண்டு தொங்கிய அனுபவத்தை எங்கள்அம்மா சொல்லியிருந்தது.
தண்ணிக்குள்ளேயே சேலை உடுத்திக்கொண்டு வருபவர்கள் உடன் பாம்பையும் சேர்த்து சுற்றி ஏதோநெளிவதை உணர்ந்து படித்துறையில் உதறிவிட்ட சம்பவங்களும்நிகழ்ந்தன.
நாங்கள் மகாராஷ்டிராவில் இருந்து வருடம் ஒருமுறை விடுமுறை காலங்களில் திரு வந்துதங்கியிருப்போம்.
அப்போது எங்கள் மகள்நிலோ சிறு பிள்ளையாகஇருந்தது.நாங்கள் குளிக்கப்போவதைப்போல் நாங்கள் பார்க்காத நேரத்தில்
ஹிந்தியில் கப்டா(துணி) ,பாத்லி (வாலி),சாபுன் (சோப்பு)
கப்டா ,பாத்லி,சாபுன் என்று சொல்லிக்கொண்டு தண்ணீருக்கு மேலே உள்ள படித்துறையில் துவைத்துக்கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ந்துபோய் வீட்டிற்கு கூட்டிப்போய் அச்சுறுத்திவைத்தோம்.
சீதேவின் இக்கறை(வ லகாரப்படித்துறை)யின் எதிரில் எங்கள் வீடு, வீட்டின் வாசற் படியில் நின்றே எங்கள் பெரியஅண்ணன் ஊரிலிருந்து வருவதைப் பார்த்து விடுவோம்
.இதேபோல்எங்கள் அத்தா சனிக்கிழமை இரவு நேரத்தில் அக்கறையில் வந்து கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் கட்டிக்கிடக்கும் ஆடு அத்தா நடந்து வரும் செருப்புச்சத்தத்தை கேட்டு கத்தி அத்தா வருவதை எங்களுக்கு தன் பாசத்தால் உணர்த்தும்.இவ்வாறு
சீதேவியில் குளித்தகாலங்கள் மகிழ்ச்சியானவை.
ஒரு முறை சிராவயல்மஞ்சு விரட்டு பார்ப்பதற்காக பீர் அண்ணனும நானும்
சைக்கிளில் சென்றோம்.
அப்படி போய்க்கொண்டிருக்கும்போது யாருமே நடமாடாத அமைதியாக இருந்த அந்த ரோட்டில் நானும் அண்ணனும்வேகமாக சென்று கொண்டிருக்கும் போது மஞ்சுவிரட்டில் பிடிபடாத காலை ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்க அதைக் கண்டு பயந்த நான் அண்ணனிடம் திருப்பிப்போக வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் வீட்டிற்கு கூட்டிச் சென்றது. இவ்வாறு அன்று காணமுடியாத மஞ்சுவிரட்டு இன்றுவரைநேரில் காணமுடியாததாகி விட்டது.
SI&Co வில் எங்கள் அத்தா மேனேஜராக இருந்த காலத்தில் புதுக்கணக்கு போடும்நாளில் நானும் சிராஜ் அண்ணனும் காரைக்குடிக்குச் செல்வோம்.அப்போதுநாங்கள் நின்று கொண்டிருக்க எங்களை சாமான் வாங்க வந்திருப்பவர்கள் என்று எண்ணி கடையில் வேலை செய்த முஸ்தபா அண்ணன் இன்று வியாபாரம் இல்லை என்று சொல்ல பிறகு அத்தா எங்களைப்பார்த்தவுடன்அட நம்ம பிள்ளைகள்! என்றவுடன் அவரும் தெரிந்து கொள்ள பிறகு உள்ளே அழைத்துச்சென்று உபசரித்தார்.
அதன் பிறகு காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில் சென்றமாதம் தங்கியிருந்த பொழுது அத்தாவை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த இனிய நினைவுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.எல்லாம்வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நீண்ட ஆயுளையும்,நிறைந்த பரக்கத்தையும் முழுஉடல்நலத்தையும்
தந்தருள்வானாக....ஆமீன்...🤲
###############
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
28022024 புதன்
சர்புதீன் பீ

Monday, 26 February 2024

English QUIZ Foley 27022024 Tue



 

English QUIZ

Foley
27022024 Tue
5 letters first letter F
Indicates a technique used in visual media for audio effect
It is also a medical term
Last 3 letters mean a grazing land
What is that word?
Answer
Foley
Foley is a sound effect technique in filmmaking. It involves creating and adding everyday sounds to films, videos, and other media in post-production to improve audio quality. Foley sounds are customized sounds made in a recording studio during post-production, in sync with the picture. Some examples of Foley sounds include zipping jackets and setting down coffee mugs.
• Foley catheter: A catheter that prevents urine from flowing into a bag
Ley
• Grassland or pasture
A noun that means grassland or pastureland. It can also refer to a field covered with grass or herbage and suitable for grazing by livestock.
Greetings and Congratulations to those who sent correct answers:
M/S
AShrafHameeda ------First Correct Answer
Shireen Foroook
A R Viswanaathan – thanks for explaining ley
Sirajuddin
Somasekar
Hasanali
Selvakumar-- thanks for explaining ley
Thanks to Mr.Katheeb Mamuna Lebbai for trying
Let us meet tomorrow I S A
சொந்த ஊரில்
27022024 Tuesday
Sherfuddin P

Saturday, 24 February 2024

தமிழ் (மொழி)அறிவோம் மறவி 25022024 ஞாயிறு

 




தமிழ் (மொழி)அறிவோம்

மறவி
25022024 ஞாயிறு
மெல்லினம் , வல்லினம் , இடையினம்
என மூன்று எழுத்துகள் உள்ள சொல்
கள் , அழுக்காறு , பதனி என பல பொருள்
மூன்றாம் எழுத்து மாறினால் கூற்றுவனாகி விடும்
என்ன அந்தச் சொல் ?
விடை
மறவி= மறதி; கள்; தேன்; பதநீர்; மறதியுள்ளவன்; அழுக்காறு; இழிவு; குற்றம்
ம – மெல்லினம் ற –வல்லினம் வி- இடையினம்
மடியின்மை
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (குறள்- 605)
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். (௬௱௫)
— மு. வரதராசன்
மூன்றாம் எழுத்து மாறினால்
மறலி= எமன், இயமன், நமன், கூற்றுவன், மறலி, காலன்
“கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்” (திருப்புகழ்)}}
சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
ஹசன் அலிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
வல்லினம் மெல்லினம் இடையினம் – நினைவில் வைக்க ஒரு எளிய வழி
வல்லினம் க ச டத ப ற
இது பெரும்பாலும்மறக்காது
மற்ற இர்ண்டில்தான் சிறு குழப்பம் வரும்
ஞ் ங் மூகடைத்த்து போல் ஒலிப்பதால் மெல்லினம் இதில் ந ண ன என மூன்று ந க்கள் அதோடு ம வும் சேர்ந்து ஆறு மெல்லினம்
மிச்சமிருப்பது இடையினம் ய ர ல வ ழ ள மூன்று லவும் இதில் வரும்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௫௦௨௨௦௨௪
25022024 ஞாயிறு
சர்புதீன் பீ

Friday, 23 February 2024

நபி பெருமான் முகவுரை 1 -- 5 *

 







நபி ஸல்

முகவுரை

இறைவன் அருளால் ஓரிரு நாட்கள் ,இரவுகளில் புனித ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்

கடந்த சில ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் புனித மாதம் முழுதும் இஸ்லாமியப் பதிவுகள் போட எண்ணம் .இறைவன் நாடினால்

சில மாற்றங்கள் இந்த ஆண்டு

இது வரை குரான் பற்றிய பதிவுகள் மட்டுமே ரமலான் மாதத்தில் வெளியிட்டேன்

இறைவன் படைத்த திரு மறையை நமக்கெல்லாம் கொடுத்து மனித குலத்துக்கு வழிகாட்டியாய் , ஒளிரும் கலங்கரை விளக்கமாய் இன்றும் என்றும் விளங்கும் நபி ஸல்  அவர்களின் வாழ்க்கை வரலாற்றை  வெளியிட எண்ணம், ஆசை

நபி பெருமான் வரலாறு என்பது இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு பெரிய பகுதியாகும்

இதை 30 நாட்களில் பகுதியாக வெளியிட முடியுமா ?

எந்த நூலை அடிபடையாக எடுத்துக்கொள்வது ?

ஆசிரியர் அப்துர்ரஹீமின் மிக எளிய இனிய நடையில் சிறப்பாக இருக்கும்

இன்னும் அ  லெ  நடராஜன் எழுதிய நூலும் இருக்கிறது

 

ஆனால் இவற்றையெல்லாம் சுருக்கினால் கருத்து சிதையாமல் முழுமையாக இருக்குமா ?

 

இப்படி பல ஐயங்கள்  மனதில்

M M பிக்தால் எழுதிய  குரான் ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையாக 36  பக்கங்களில் நபி பெருமானின் வரலாற்றை எழுதியுள்ளார்

பிக்தால் ஆங்கிலம் தாய் மொழியாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அறிஞர்

அவருடைய எழுத்து மிக நீளமான வாக்கியங்கள் , நிறைய புதிய சொற்கள் என்று ஒரு ஆங்கில இலக்கியம் போல் இருந்தது

சற்று (மிகவும்) சிரமப்பட்டு பொருள் மாறாமல மொழி மாற்றம் செய்ய வேண்டும்

(வலை  தளத்தில் இல்லாததால்  கூகிள் மொழி பெயர்ப்பில் முயற்சிக்கவில்லை

மேலும் கூடிய மட்டும் கூகிள்  மொழி பெயர்ப்பை   தவிர்த்து விடுவேன் )

எப்படியோ வழக்கம் போல் இறைவன்  மேல் பொறுப்பை , பாரத்தை சுமத்தி விட்டு  பணியைத் துவக்கினேன்

வழக்கத்துக்கு மாறாக ஷாfபான் மாதத்திலே கொஞ்சம் கொஞ்சமாக மொழி மாற்றம் செய்ய துவங்கினேன்

மாபெரும் மனிதரின்  மகத்தான வரலாறு ; அதற்கேற்ப நிறைய மன  அழுத்தங்கள் – தவறு எதுவும் வந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் -

எப்படியோ எழுதத் துவங்கி விட்டேன் ., இறைவன் நிறைவு  செய்து தருவான் என்ற அசைக்க  முடியாத நம்பிக்கையில்

இன்னொரு மாற்றம் வழக்கம் போல்  வினா விடை உண்டு

ஆனால் விடை  என்று  தனியாக இருக்காது

அடுத்த நாள் பதிவில் விடை இருக்கும்

சரியான் விடை அனுப்பியோர் பெயரும் வெளியிடப்படும்

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

 

குறை நிறைகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் –குறிப்பாக குறைகளை .

பனித மாதத்தில் செய்யும் துவாக்களில் என்னையும் என் குடும்பத்தாரையும் நினைவில் கொள்ளுங்கள்

(ஏற்கனவே  நபிஸல் வாழ்வு  பற்றிப்படித்தவர்கள், அறிந்தவர்களுக்கு இந்தத் 

தொடரில் விடுதல்கள   இருப்பது   தெரியும் 

ஆனால் அவற்றை  எல்லாம் எழுத  நான்  முய்றசிக்கவில்லை.

மொழி மாற்றம் மட்டுமே செய்தேன்   

ஏதாவது விட்டுப்போனதை    சேர்க்கிறேன்  என்று இறங்கினால் மிகவும் குழப்பமாகி விடும் எனக்கு )

புனித மாதத்தில் நம் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றி இறைஅருளை  முழுமையாகப் பெறுவோம்

 வினா  06032024 

அராபிய நாட்காட்டியில் வாரத்தின் முதல் நாள் எது ?

வெள்ளி / ஞாயிறு / திங்கள் ?

விடை 

யௌமுல் அஹத்

ஞாயிற்றுக் கிழமை


அஹத் = முதலாவது  

சரியான விடை  எழுதி  வாழ்த்து   பாராட்டுப் பெறுவோர் 

சகோ
ஹசன் அலி   முதல் சரியான விடை 

ஷிரீன் பாரூக் 

பாப்டி 


முயற்சித்த சகோ Khatheeb Mamuna Lebbai க்கு நன்றி 





 இசுலாமிய கிழமைகளின் பெயர்கள்[தொகு]

எண்

இசுலாமிய நாள்

தமிழ் நாள்

1 வது

யௌமுல் அஹத்

ஞாயிற்றுக் கிழமை

2 வது

யௌமுல் இஸ்னைண்

திங்கட் கிழமை

3 வது

யௌமுல் ஸுலஸா

செவ்வாய்க் கிழமை

4 வது

யௌமுல் அருபா

புதன் கிழமை

5 வது

யௌமுல் கமைஸ்

வியாழக் கிழமை

6 வது

யௌமுல் ஜுமுஆ

வெள்ளிக் கிழமை

7 வது

யௌமுல் ஸப்த்

சனிக் கிழமை

 

இன்றைய வினா

ரமலான் மாதம் இஸ்லாமிய ஆண்டின் எத்தனையாவது மாதம் ?

இறைவன் நாடினால் புனித ரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்களை சிந்திப்போம்

11032024 திங்கள் 

சர்புதீன் பீ  


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



நபி பெருமான்

1 பிறப்பு, திருமணம்

2திருமறை – முதல் வசனம் அருளப்பெற்றது

3  ஹீரா மலையில் (அச்சமூட்டும்)  அற்புதக் காட்சி

 3  ஹீரா மலையில் (அச்சமூட்டும்)  அற்புதக் காட்சி ,

(4)நபியின் கலக்கம் ,பின் தெளிவு

4 குரான் – ஓதுவீராக

5 எதிர்ப்பு, துன்புறுத்தல்

6 அபீசீநியப் பயணம்

உமரின் மன(த) மாற்றம்

சமூக விலக்கு ஒப்பந்தம் (சஹிfபா)


7சஹிfபாஆவணம் அழிப்பு ;யத்ரீபர்கள் வருகை

8 நபி பெருமானைக் கொல்ல சதி


ஹிஜ்ராஹ்


9  நபி  ஸல் மதினா வருகை

10 மக்கத்து சூராககள்

11 மதீனத்து யூதர்கள்

கிப்லா மாற்றம்

12 பயணங்கள்

13 பதுருப்போர்

14 உஹதுப்போர்

15 உஹதின் தாக்கம்

பனு நடிர்



 

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 


நபி பெருமான் 1

பிறப்பு, திருமணம்

12032024 செவ்வாய் 

மனித குலத்துக்கு விடி வெள்ளியன் நபி பெருமான் உதித்தது

மக்க மா நகரில்  ஹி(ஜ்ரி க்கு ) மு (ன்)53 ஆம் ஆண்டு

குறைஷி குலத் தோன்றலான முகமதின் தந்தை அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லா

 

பிறக்குமுன்னே தந்தையை இழந்த முகமதை போற்றிப் பாதுகாத்த பாட்டனார் அப்துல் முத்தலிப் மறைவுக்குப்பின் அவரின் மற்றொரு மகனாகிய அபு தாலிப் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்

 

சிறிய தந்தை அபு தாலிபின் வணிகக் குழுவோடு சிறுவனாய்  இருந்த முகமது சிரியா நாட்டுக்குப் பயணம் செய்து வந்தார்  

சில ஆண்டுகளுக்குப்பின்  கதீஜா என்பவரின் குழுவில் இது போல் பயணித்தார் முகமது . செல்வச் சீமாட்டியான் கதீஜா துணையை இழந்தவர்

 

மிகச் சிறப்பாக் நேர்மை, உண்மையுடன் வணிகப் பரிமாற்றங்கள் செய்த முகமதின் நடத்தை நடவடிக்கை பற்றி அவருடன்  பயணித்த தன் மூத்த பணியாளர் வாயிலாகக் கேட்டறிந்த  கதீஜா சீமாட்டி மனம் விரும்பி முகமதை மணமுடித்தார்

தம்மை விட 15 வயது மூத்த ஒரு பெண்ணை ,அதுவும் துணையை இழந்தவரை மணம் புரிந்து

ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக ஒரு சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார்கள் முகமது அவர்கள்

 

கதீஜா அவர்களின்  மறைவு வரை 25 ஆண்டுகள் பாசமும் நேசமும் நிறைந்த மகிழ்ச்சியான இல்லறம்

அவரின் மறைவுக்குப்பின்னும் எப்போதும் அவரை அன்புடன் ,மக கண்ணியத்துடன்  நினைவு கூர்ந்து பேசினார் முகமது

 

ஏற்கனவே தன் நன்னடத்தையால் அல் அமீன் -  நம்பிக்கைக்கு உரியவர் என்று சமுதாயத்தில் அறியப்பட்ட முகமதுக்கு இந்தத் திருமணம் மேலும் ஒரு உயர் நிலையை வழங்கியது

 நேற்றய வினா

சரியான  விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்

சகோ 

Khatheeb Mamuna Lebbai   முதல் சரியான விடை 

ஷிரின் fபாருக் 

சிராஜுதீன்  

ஷர்மதா 

பாப்டி

ஹசன் அலி

மெஹராஜ் 

இன்றைய வினா

சிலை வணக்கம் பரவலாக  இருந்த நிலையில் உண்மை இறைவனைத் தேடும் ஒரு சிலர் மக்காவில்    இருந்தனர்

அவர்களுக்கு  பெயர் என்ன ?

 

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை நபி பெருமானை சிந்திப்போம்

 

01 ரமளான்(9) 1445

`12032024 செவ்வாய் 

சர்புதீன் பீ

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

நபி பெருமன் 2

“ஓதுவீராக” 

திருமறை – முதல் வசனம் அருளப்பெற்றது

13032024 புதன் 


 

நபி இஸ்மாயில்(ஸல்) அவர்கள் வழியில் தாங்கள் நபி இப்ராஹுமின் (ஸல்)வழிதோன்றல்கள் என்று மக்கா வாசிகள் உரிமை கொண்டாடினர்

மேலும்

நபி இப்ராகிம் (ஸல் உருவாக்கிய மக்காவில் அமைந்துள்ள  புனித  காபா ஏக இறைவன் வழிபாட்டுக்கான முதல் ஆலயம் ஆகும்

 

ஆனால் பெயரளவில் இறைவனின் இல்லம் என்று சொல்லப்  பட்ட காபாவில் நிறையநிறைய உருவச் சிலைகள்

அவை இறைவனின் பெண் மக்கள் என்றும் இறைவனை அடைய வழிகாடடுபவர்கள் என்றும்  அழைக்கப்பட்டன

 

நூற்றாண்டுகளா பரவலாக இருந்த இந்த உருவ வழிபாட்டில் வெறுப்படைந்த ஒரு சிலர் இபராஹீம் நபி போதித்த உண்மை என்ன என்பதைக் கண்டறிய முற்பட்டனர்

இவர்கள் ஹனிfப் என்ற சொல்லின் (plural ) பன்மையான ஹுனாfபா என்று அழைக்கப்ட்டார்கள்

(சிலை வணக்கத்தை  விட்டு) விலகிச்  செல்பவர்கள் என்ற பொருள் கொண்ட

இச்ச்சொல் காலப் போக்கில் ஹுனாfபாக்களின் நல்ல குணம் , நடத்தையால்

உணமையானவர் , நேர்மையானவரக் குறிக்கும் சொல்லாக மாறியது

ஒரு குழுவாக சேராமல் அவரவர்  தங்கள் வழியில் ஆழ்மனதில் இறைவனைத் தேடினர் 

ஹுனபிகளில் ஒருவராய் இருந்த முகமது  அவர்கள்  ஆண்டு தோறும் கோடை ரமலான் மாதத்தில்  குடும்பத்துடன் மக்காவுக்கு அண்மையில் உள்ள ஹிரா எனும் பாலைவன மலையில்  இறை தியானத்தில் ஈடுபடுவ்து வழக்கம்

 

ரமலான் மாத நிறைவுப் பகுதியில் ஒரு இரவில் முகமதுக்கு இறைவன் அருளால் திருமறை துவக்க  வசனங்கள் இறங்கின

 அப்போது வயது 40 அவருக்கு

ஒரு வித ஞான உறக்க நிலையில் இருந்த முகமதுக்கு ஒரு குரல் ஆணை இடுகிறது

“ஓதுவீராக “

“எனக்கு ஓத(படிக்கத்)த் தெரியாது “  இது முகமதின் மறு  மொழி

மீண்டும்

“ஓதுவீராக”  என்ற குரல்

“எனக்கு ஓத(படிக்கத்)த் தெரியாது “  முகமது

 

இப்போது கேட்போர் நடுங்கும்படி குரலில்

மீண்டும்

“ஓதுவீராக” 

“எதை ஓதுவது >”  முகமது

 

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

96:2  خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ

´அலக்´(சதைக் கட்டி ) என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

96:3  اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

96:4  الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

96:5  عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

 

(குரான் சூராஹ் 96 அல் அலக் (சதைகட்டி ) வசனம் 1—6) 


நேற்றைய  வினாவுக்கு   சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறும் ஒரே ஒருவர்

சகோ

ஹசன் அலி


  சகோ Khatheeb Mamuna Lebbai, சிராஜுதீன்  இருவருக்கும்  முயற்சிக்கு   நன்றி 

 அவர்கள் சொன்னஸாபியீன் [என்பது   John the Baptist  (யஹ்யா , யோவான்) என்ற நபியை ஏற்றுக்கொண்டு  நட்சத்திரத்தை  வணங்கும்  கூட்டம் 

   

 

இன்றைய வினா

 

முகமதை நபி என்று முதலில் நம்பிக்கை கொண்டவர் யார்  ?

 

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை நபி பெருமானை சிந்திப்போம்

முதல் இப்தாரையும்  இரண்டாவது   இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக்  கொடுத்த இறைவனுக்கு நன்றி 

மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும் 

 

02 ரமலான்(9) 1445

13032024 புதன் 

சர்புதீன் பீ

 

 

 

 

 

 <<<<<<<<<<<<<<<<<<<

 

 

 

 

 

 


 


நபி ஸல் 3

ஹீரா மலையில் (அச்சமூட்டும்)  அற்புதக் காட்சி ,

நபியின் கலக்கம் ,பின் தெளிவு.

“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்"

140320234வியாழன்


(நபி பெருமானுக்கு இறைவன் திரு வசனம் அருளப்பெற்றதால் அவர்கள் (இறை தூதர் _நபி ஆகி விட்டார்கள்

எனவே இனிமேல் நபி ஸல் என்று குறிப்பிடுவோம் )

 

ஞான நிலையில் இருந்து விழித்த நபி ஸல் அவர்களுக்கு அவர் கேட்ட வசனங்கள் இதயத்தில் பதிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு

குகையை விட்டு வெளியே வந்த நபி (ஸல்)க்கு  மீண்டும் அந்த திகைப்பூட்டும் குரல் கேட்டது

“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்

நான் ஜிப்ரில் “

விழிகளை அடிவானத்துக்கு மேலாக  பார்த்த நபி (ஸல்) க்கு   (வானவர் தலைவன்)   ஜிப்ரில் அலை மனித உருவில் நிற்பது தெரிந்தது

மீண்டும் அந்த அச்சுறுத்தும் குரல்

“முகமதே நீர் ஏக இறைவன் அல்லாவின் தூதர்

நான் ஜிப்ரில் “

என்றது

கண் கூசும் அந்த ஒளிக் காட்சியிலிருந்து நபி ஸல் அவர்கள் முகத்தைத் திருப்ப

திரும்பிய பக்கமெல்லாம் எதிரே நெடிதுயர்ந்த அந்த உருவம் காட்சி அளித்தது

 

நெடு நேரம் நீடித்த இந்த நிலையில் நபி ஸல் அவர்கள் மனதில் ஒரு பெரும் துயர நிலை

ஒரு  வழியாக அந்த உருவம் மறைந்தவுடன் கதீஜா பிராட்டியாரிடம் போன நபிக்கு  தன்னால் முடிந்த அளவக்கு ஆறுதல் சொன்ன  கதீஜா  

“உங்களின்  நல்ல குணத்துக்கும் நடத்தைக்கும் இறைவன் அருளால்  தீயது எதுவும் உங்களை  அணுகாது “ என்றார்கள்

 

முகமது நபி ஆகி விட்டார் என்று முழுமையாக   நம்பிய கதீஜா , மக்கா திரும்பியதும் தன் உறவினரான வராக்க என்ற முதியவரிடம் நபியை அழைத்துச் சென்றார்கள்

யூத, கிறித்தவ மத வேதங்களை கற்றுனர்ந்த வராகா முன்பு  மூஸா நபியிடம் வந்த அதே வானவர்தான் இப்போது முக்மதிடம் வந்திருக்கிறார்

முகமதை இறைவன் சமுதாயத்துக்கு வழிகாட்டும் நபியாக முகமதைத் தேர்வு செய்திருக்கிறான்

என்று சொல்லி அன்னை கதீஜாவின் நம்பிக்கையை உறுதி செய்தார்

நபியின் மனக்கலக்கம் ,தயக்கம் இவற்றிற்கெல்லாம் ஒரு வலுவான காரணம் இருக்கிறது  :

நபி அவர்கள் ஒரு  ஹுனாபி என்று ஏற்கனவே பார்த்தோம் . அவர்கள் தேடியது உண்மையான மதத்தை இயற்கை வழியில்

அதில் வானவர்கள் போன்றவர்கள் வருவதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை ; ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை

 

வானவர்கள் போன்ற சாதாரணமாக் கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன் தொடர்பு இருப்பதை மந்திரவாதிகள், ,சோதிடர்கள் ,, கவிஞர்கள் ஒரு பெருமையாக பேசிக்கொண்டிருந்த காலம் அது

மேலும் அமைதி, எளிமை, இறை அர்ப்பணிப்பு இவற்றின் உருவாக இருந்தார் நபி

இறைவனின் தூதராக  ,பெருமளவில் மக்களை சந்திக்கும் ஒருவராக அவரால் தன்னை கற்பனை கூட செய்ய முடியவில்லை

தனக்கு வந்த செய்தியின் இறைத் தன்மை புரியும்போது மனதில் வந்த ஒரு போராட்ட்ம் , கலக்கம்  ஒரு நேர்மையான உள்ளத்தில் ஏற்படும் இயல்பான ஒன்றே

மேலும் மக்களிடம்  இறை செய்தியை எடுத்துச் சொல்லும்போது தன் அமைதியான கௌரவமான வாழ்க்கை பெருமளவில் மாறும் என்ற அச்சமும் அவரை வாட்டியது

அன்னை கதீஜாவந்தது வானவர்தான் , தீயது  ஓன்று இல்லை என்பதை பரிசோதித்து உறுதிப்படுத்தினார்

தொடர்ந்து வந்த இறை செய்திகள் அவற்றின் உறுதித் தன்மை எல்லாம் படிப்படியாக தன் மேல் சுமத்தப்பட்ட மாபெரும் பணியை ஒப்புக்கொள்ளும் மன நிலையை உண்டாக்கின

அதன் விளைவு பணிவு கலந்த ஒரு  உற்சாகம்

இறைவனின் – அல்லாவின் அடிமை எனும் பெருமை மிக்க பெயருக்கு மிகவும் பொருத்தமானவராக ஆகி விட்டார்  முகமது நபி ஸல்

நேற்றைய  வினாவுக்கு   சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்  சகோ

Khatheeb Mamuna Lebbai    முதல் சரியான விடை 

ஹசன் அலி

ஷிரீன் பாருக் 

ஜோதி

பாப்டி

மெகராஜ் 


இன்றைய  வினா

முதன் முதலில் முகமதை நபியாக ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா என்று பார்த்தோம்

தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்த ஒரு சிலர் யார்  ?

இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்


இரண்டாவது  இப்தாரையும் மூண்றாவது   இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக்  கொடுத்த இறைவனுக்கு நன்றி 

மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும் 

03 ரமலான்(9) 1445

140320234வியாழன் 

சர்புதீன் பீ                                                                                 

.................................




 

நபி ஸல்

4 குரான் – 

“படியுங்கள், ஓதுங்கள் “

 ٱقْرَأْ

15032024வெள்ளி  

இறை மயக்க தியான நிலையில் நபி ஸல் சொன்னவற்றை இஸ்லாமியர்கள் புனித நூலின் பகுதியாகப் போற்றுகிறார்கள்

இயல்பான நிலையில் சொன்னவை வேறு , தியான மயக்க நிலையில் சொன்னவை வேறு . ஒரு போதும் இரண்டும் ஒன்றாவதில்லை

இறை மயக்க நிலையில் சொன்னவை புனித மறை நூல்

இயல்பான நிலையில் சொன்னவை நபி மொழிகள் –சுன்னத் –ஹதீஸ்

கல்வி கற்காத உம்மி நபி அவர்களை வானவர் தலைவர்

“படியுங்கள், ஓதுங்கள் “ என்று வலியுறித்தினார் அரபு மொழியில் இது

 ٱقْرَأْ

இக்ரா என்று வரும் (குரான் 96 :2)

அந்த அடிப்படையில் புனிதத் திருமறை

குரான் என்று அறியப்படுகிறது

 

முதல் மூன்றாண்டுகள் நபி ஸல் அவர்களின்  இஸ்லாமிய பரப்புரை அவர் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் இடையே மட்டும் இருந்தது

`முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் கதீஜா பிராட்டியார்என்று பார்த்தோம்

இரண்டாவது==  நெருங்கிய  உறவினர்   அலி அவர்கள்

மூன்றாவது ஜைத் (Zeyd) அடிமையாக இருந்தவர்

அதற்கு அடுத்து நபியின் நீண்ட நாள் நண்பர் அபு பக்ர் தன் அடிமைகள்  சிலர், இன்னும் சில குடும்ப உறுப்பினர்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்கள்

பொதுவாக மற்ற மக்கா வாசிகள் நபி அவர்களை கண்டு கொள்ளவேயில்லை

சற்று மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணி , அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை


நேற்றைய  வினா--ஒரு விளக்கம் 

பிக்தால் ஆங்கிலப் பதிவில் உள்ள வரிசைப்படி  இஸ்லாமில் அடுத்தடுத்து  இணைந்தவர்கள் மேலே  சொன்னபடி

இரண்டாவது==  நெருங்கிய  உறவினர்   அலி அவர்கள்

மூன்றாவது ஜைத் (Zeyd) அடிமையாக இருந்தவர்

அதற்கு அடுத்து நபியின் நீண்ட நாள் நண்பர் அபு பக்ர் தன் அடிமைகள்  சிலர், இன்னும் சில குடும்ப உறுப்பினர்களோடு இஸ்லாத்தில் இணைந்தார்கள்


முதலாவது கதீஜா பிராட்டியார் என்பது ஒருமித்த கருத்து -இதிலும் பெண்ணின் பெருமை உயர்கிறது 

அடுத்து அலியா  இல்லை அபுபகரா என்பதில் வேறுபாடு இருக்கிறது 

எனவே  இந்தப் பெயர்களுடன் வந்த விடைகள் சரியான விடைகள்    

   சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்

 பெறுவோர்  சகோ


பாப்டி - முதல் சரியான விடை 


ஹசன் அலி

சிராஜுதீன்

ஜெய்லானி ஜெய்லானி

fபக்ருதீன் 

Khatheeb Mamuna Lebbai



இன்றைய வினா

“எழுந்து எச்சரிக்கை செய்வீராக “

என்று நபிக்கு இறைவன் ஆணையிட்ட குரான் வசனம் எது ?

இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்       மூன்றாவது இப்தாரையும்   நான்காவது இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக்  கொடுத்த இறைவனுக்கு நன்றி 

மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும் 

04 ரமலான்(9) 1445

15032024 வெள்ளி 

சர்புதீன் பீ





 

&&&&&&&&



 

நபி ஸல்

 “எழுந்து எச்சரிக்கை செய்வீராக “  

5 எதிர்ப்பு, துன்புறுத்தல்

நபித்துவம் பெற்ற மூன்றாம் ஆண்டின் நிறைவுப் பகுதியில்

இறைவன் ஆணை வருகிறது

 “எழுந்து எச்சரிக்கை செய்வீராக “  குரான் 74:2

அதற்கிணங்க நபிகள் தம் பரப்புரையை பொது மக்களிடம் துவங்குகிறார்கள்

பகல் இரவு , பிறப்பு இறப்பு, ஆக்கம் அழிவு

இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தும் ஏராளமான சட்ட திட்டங்கள்

சட்ட்டங்களை உருவாக்கி மேற்பார்க்கும் ஏக இறைவனின் மாட்சிமை

அந்த மாட்சிமைக்கு சற்றும் தொடர்பில்லாத

சிலை வணக்கத்தின் அறியாமை

இவைஎல்லாம் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் நபி ஸல்

 

நாம் பல்லாண்டுகள் , பல தலைமுறைகளாக கடைப்பிடித்து  வரும் சிலை வணக்கத்தை    நபிகள் தவறு  என்று சொல்வதை மக்கா வாசிகள் உணர்ந்தவுடன் ஒரு பகைமை உணர்வு உருவாகிறது

அதன் விளைவு -  நபியைப் பின்பற்றும் ஏழை எளிய மக்களை  பகடி செய்தல் , அவமானப் படுத்துதல் என பலவகைகளில் தொல்லை கொடுக்கிறார்கள்

நபி பெருமான் குடும்பம் , குலத்தோர்  உயிருக்கு உயிர் என்று  பழி வாங்காமல் விடமாட்டர்கள் என்ற அச்சம் , தயக்கத்தால்தான்  நபியை தாக்காமல் ,கொல்லாமல்  விட்டு வைத்தார்கள்

தன் கொள்கையில் வலுவான பிடிப்புடன் நபி ஸல் அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது ,விளக்கம் அளிப்பது என எல்லா  வகையிலும் தம் பரப்புரையை விரிவாக்கினார்கள்

இதற்கு எதிராக  மக்கா குறைஷிகளும் முடிந்த அளவுக்கு நபியின் அறவுரைகளை கிண்டல் செய்வது , நபியைப் பின் பற்றுபவர்களை துன்புறுத்தி  விரக்தியடையச் செய்வது என தங்கள் முயற்சிகளை தீவிரப் படுத்தினார்கள்

நேற்றைய  வினாவுக்கு

சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப்

 பெறுவோர்  சகோ

Khatheeb Mamuna Lbbai முதல் சரியான விடை 

ஷிரீன் fபாருக் 

ஹசன் அலி 


 

இன்றைய வினா

இஸ்லாத்தின் முக்கிய எதிரிகளில் ஒருவர் மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவ , அது குறைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பை  பன் மடங்காக்கியது

யார் அந்த ஒருவர்  ?

 

இறைவன் நாடினால் நாளை விடையுடன் நபி பெருமானை சிந்திப்போம்

 நான்காவது இப்தாரையும்  ஐந்தாவது   இரவு சிறப்புத் தொழுகையையும் சகரையும் நிறைவேற்றிக்  கொடுத்த இறைவனுக்கு நன்றி 

மிச்சமுள்ள அமல்கள் அனைத்தையும் நிறைவேற்ற இறைவன் அருள் புரிய வேண்டும் 

05 ரமலான்(9) 1445

சர்புதீன் பீ



--===========