Saturday, 25 May 2024

தமிழ் (மொழி) அறிவோம் மறிதல் 26052024 ஞாயிறு

 






தமிழ் (மொழி) அறிவோம் மறிதல்

26052024 ஞாயிறு
நான்கெழுத்தில் ஒரு சொல்
பொருளோ பேச்சு வழக்கிலும் இலக்கியப் பயன்பாட்டிலும் பத்துக்கு மேல்
ஒரு சில
கிளர்தல் துள்ளுதல்
நிலைகுலைதல் கீழ் மேலாகுதல்
சொல்லின் முதல் , எழுத்து ம –மெல்லினம்
நான்காவது எழுத்து ல் – இடையினம்
இரண்டும் மூன்றும் வல்லினம்
முதல் இரண்டு எழுத்துக்கள் போராட்டத்தின் பகுதி
அந்தச் சொல் என்ன?
விடை
மறிதல்
சரியான விடை எழுதிய ஒரே ஒருவர்
சகோ கணேச சுப்ரமணியம்
வாழ்த்துகள் ,பாராட்டுகள்
சகோ வகாப் அனுப்பிய விடை ---------குறிப்புகளோடு பொருந்தவில்லை
இருந்தாலும் ஆர்வம், முயற்சிக்கு பாராட்டு
விளக்கம்
• மறிதல், பெயர்ச்சொல்.
1. கீழ்மேலாதல்
(எ. கா.) மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9)
2. மீளுதல் (திவா.)
(எ. கா.) மறிதிரை (கலித். 121)
3. முதுகிடுதல்
(எ. கா.) மைந்தர் மறிய மறங்கடந்து (பு. வெ. 6, 14)
4. விழுதல்
(எ. கா.) நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201)
5. சாய்தல்
(எ. கா.) எரிமறிந்தன்ன நாவின் (சிறுபாண். 196)
6. கிளர்தல்
(எ. கா.) மறிகடல் போன்று (திவ். இயற். திருவிருத். 57)
7. முறுக்குண்ணுதல்
(எ. கா.) திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித்.
8. பலகாலுந்திரிதல்
(எ. கா.) நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46)
9. தடைப்படுதல்
10. நிலைகுலைதல்.
(எ. கா.) ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி. வாழ்.)
11. அறுபடுதல்
(எ. கா.) உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.)
12. சாதல்
(எ. கா.) மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38)
13. துள்ளுதல்(பேச்சு வழக்கு)
(தமிழ் விக்சனரி)
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௮௦௫௨௦௨௪
26052024 ஞாயிறு
சர்fபுதீன் பீ

Thursday, 23 May 2024

திரு மறை குரான் 12:15 24052024 வெள்ளி


 

திரு மறை குரான் 12:15

24052024  வெள்ளி

"--------------------நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்-----------------"

திருமறையின் எந்தப் பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது ?

யாருக்கு யார் யாரைப்பற்றி சொன்னது ?

விடை

சுராஹ் 12 (யூசுfப்)வசனம் 15

(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம். 12:15

 

சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்

சகோ

ஷர்மதா – முதல் சரியான விடை

ஹசன் அலி

 

விளக்கம் (சுருக்கமாக)

யூசுfப் நபி அவர்கள் யாகூப் நபியின் இரண்டாவது துணைவியின் மகன்

யாகூப் நபியின் முதல் துணைவிக்கு நிறைய ஆண் பிள்ளைகள்

அவர்களுக்கு யாகூப் நபி தங்களை விட சிறுவன் மேல்

யூசுfப்பிடம் அதிக பாசமும்  பரிவும் காட்டுவதை பொறுக்க முடியாமல் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக வேட்டைக்கு  போகும்போது சிறுவன் யூசுfப்பை அழைத்துச் சென்று  ஒரு கிணற்றில் தள்ளி விட்டு ஓநாய் கடித்துத் தின்று விட்டது  என்று தந்தையிடம் பொய் சொல்கிறார்கள்

 

சிறுவன் யூசுfப்பை கிணற்ர்ல் தள்ளும் நேரத்தில் யூசுfப்புக்கு வஹி மூலம் இறைவன் அறிவித்த செய்தி இந்த வசனம்

இதில் நாம் என்பது இறைவனையும் நீர் என்பது  யுசுfபையும் குறிக்கும்

ஒரு  இடைவெளிக்குப்பின் நீண்ட சிறைவாசம் உட்பட பல நிகழ்வுகளுக்குப்பின் யூசுfப் நபி நாட்டின் தலைமைப் பதவியில் உணவுப்பொருள் பொறுப்பாளராகிறார்

 

நாட்டின் உணவுபற்றாக்குறை ஏற்பட, யூஸுfபின் சகோதரர்கள்

தங்கள் குடும்பத்துக்கு வேண்டிய உணவுப்  பொருட்களை வாங்கிச்செல்ல   யூசுfபிடம்          வருகிறார்கள்

யூசுfபை     அவர்களுக்கு அடையாளம் தெரியாத நிலையில் யூசுfப் அவர்களிடம்                                                                                                          "நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று வினவினார்        (12:89)         

(அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு  ----------என்றார் (12:90)

யூசுfப் சுராஹ் பற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன்

எனவே இதோடு நிறைவு செய்கிறேன்

இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்                                                                                                                                                                                          

15 துல்ஹதா (11)1445

24052024 வெள்ளி

சர்புதீன் பீ

வார்த்தை விளயாட்டு0205/ 0905/23 05 /30052024






02052024















09052024








வார்த்தை விளயாட்டு 22/23 052024




30052024



 

Wednesday, 22 May 2024

மேப் பூக்கள்

.






 இந்த ஆண்டின் முதல் மேப் பூக்கள்

எல்லாப்புகழும் இறைவனுக்கே
சென்ற ஆண்டும் இதே நாளில்தான் முதல் பூ மலர்ந்தது
மாற்றமே இல்லை இயற்கையின் அட்டவணையில


22052024

Sunday, 5 May 2024

கவிதை மே 2024 //6,13,20,27

 






03/06052024 போட்டிக்கான பதிவு  

: தலைப்பு

          நிழல்

 

 

 “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

     குளிர் தருவே தருநிழலே என வள்ளலார்

 பாடிய  அருமைத் தலைப்பு நிழல்

 

 

நிழல் நிஜமாகிறதாநிஜம் நிழலாகிறதா

விடை காண முடியாத   வினா

 

வளர்ந்து தேயும் வெள்ளை நிழல் நிலவு

அந்த நிழலின் ஒளியிலும் உண்டாகும் மெல்லிய நிழல்கள்

 

நிழலான செயல்களைத் தவிர்த்து

நிழல் தரும் மரங்களை வளர்த்து

வளம்பெற வாழ்வோம்

 

சர்புதீன் பீ06 05 24

                                                                13052024






                                                          27052024

                                                            20052024