Monday, 18 November 2024

தமிழ் [மொழி] அறிவோம் சகன்

 தமிழ் [மொழி] அறிவோம்

சகன் 

17112024ஞாயிறு



மூன்றெழுத்துச்சொல் 


மூன்றாவது மெல்லினம் ,ஒற்று 


மற்ற இரண்டும் வல்லினம்     

 

நட்பையும் ஒரு வகையான உணவையும் குறிக்கும் 


கடற்கரை பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கும் 


என்ன அந்தச் சொல்?

விடை 

சகன் 


சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறும் 

ஒரே சகோ

சிராஜுதீன்

விடை கண்டு பிடித்த வழியையும் எழுதியிருக்கிறார்


சகன், .


சாலிவாகனன்

(எ. கா.) சகன்காலம். (பெருந்தொ. 956)

உலகநாயகன்

(எ. கா.) குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு. (சி. போ. 8, 2)

சகா, தோழன்


சகன்' என்றால் 'கூடவிருப்பவன்', 'சகா தேவன்' என்றால் 'கூடவுள்ள ஒளியுடை இறை' எனறு பொருள் 


 பாண்டவர்களில் ஒருவனான 'சகதேவனை', தமிழர் 'சகாதேவன்' என அன்புடன் குறிப்பிடுகின்றனர்


  அழகிய தமிழ்ப் பெயர்.


சகன் சாப்பாடு 


தரையில் உட்கார்ந்து 

4 பேர் ஒரே பெரிய தட்டில் 

சாப்பிடும் முறை 


பெரும்பாலும் வழக்கொழிந்து போனாலும் இன்றும் காரைக்கால் திருவாரூர் போன்ற இடங்களில் இஸ்லாமிய விருந்துகளில்

பழக்கத்தில் உள்ளது 


புதிதாகப் 

பார்ப்பவர்கள்களுக்கு

ஒரு மாதிரியாக இருக்கும் 


ஆனால் பழகியவர்கள் மிகச் சுத்தமான முறையில் சாப்பிடுவார்கள் 


சகோதரத்துவத்தை வளர்க்கும் இதில் தரையில் உட்காருவதால் அளவோடு சாப்பிடுவது 

மூட்டு வலி தவிர்த்தல் போன்ற பல பயன்கள் இருக்கிறது என்றும் சொல்வார்கள் 





போர்க் காலங்களில் எதிரிகள் வருவதை நான்கு பக்கமும் கண்காணிக்க இப்படி வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது சகனின் துவக்கம் என்றும் 

சொல்வார்கள் 


இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம் 


௧எக௧ ௨௦௨௪

17112024 ஞாயிறு 

சர்புதீன் பீ

Friday, 15 November 2024

திருமறை குரான் 14;22 15112024 வெள்ளி





 திருமறை குரான்

14;22
15112024 வெள்ளி

‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள்.
திருமறையின் எந்தபகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது
சொன்னது யார்?
விடை குரான்வசனம் 14 இப்ராஹீம் ;22
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் fபாருக் ---முதல் சரியான விடை
சிராஜூதீன்
சர்மதா
ஹசன் அலி &
தல்லத்
விளக்கம்
(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.)
நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். 14;22
இதில் சைத்தான் சொல்லுவது
நான் உங்களை என் வழிக்கு அழைத்தேன் என்பது உண்மைதான்
ஆனால் எனக்கு உங்கள் மேல் அதிகாரம் செலுத்தும் சக்தி எதுவும்
கிடையாது
இருந்தாலும் உங்கள் பேராசையை வைத்து என் வலையில் விழ வைத்து விட்டேன்
உங்கள் தவறுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று சொல்கிறான்
இறைவன் நாடினால் நாளை தம்ழில் சிந்திப்போம்
12 ஜமாதுல் அவ்வல் (5) 1446
15112024 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Send
Share

காணொளி 14112024



 இருள் பிரிய முயற்சிக்கும் அதிகாலை

மழை ஓய்ந்து இதமான குளிர்
காற்றில் மிதந்து தவழ்ந்து வரும் பாங்கொலி மணியோசை
மனதுக்கு இதம்

Wednesday, 13 November 2024

பன்றிமயக் கோட்பாடு 131124 புதன்

 பன்றிமயக் கோட்பாடு

131124 புதன்

👆
ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். " நான் நிரபராதி, ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?" என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான். ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தை மறந்துவிட்டான். "இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது! உறங்குவது! அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்! இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா?" எனக் கதறினான்.
சினம் கொண்ட ஜெயிலர் இன்னும் நான்கு சிறைக் கைதிகளை அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்துவிட்டான்.
இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர். "எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்துதுவிடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?" என புலம்பினார்கள்.
மேலும் சினம் கொண்ட ஜெயிலர் ஒரு பன்றியை அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான்.
விரக்தியடைந்த அவர்கள், " நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது! தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள் "எனக் கெஞ்சிக்கேட்டனர்.
தயவு காட்டிய ஜெயிலர் பன்றியை வெளியே எடுத்தான். அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து " இப்போது உங்கள் நிலை எப்படி?" என்று விசாரித்தான்.
"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது " என்று பதில் கூறினார்கள்.
இப்படித்தான் எமது நாடுகளில் பன்றிமயக் கோட்பாடு அமுல்படுத்தப் படுகிறது. பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையில் ஆர்ப்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.
புதுப் பது பிரச்சினைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். முடிவில் பன்றிமய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர். பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை நாமே மறந்து விடுகின்றோம்.
மறக்க வைக்கப்படுகிறோம்.
இது மறுக்க முடியாத யதார்த்தம்
படித்ததில் பிடித்த பகிர்வு

Monday, 11 November 2024

English QUIZ Hoe 12112024 Tue






 English QUIZ

Hoe

12112024 Tue
What is the name of the tool in the picture?
A three latter word
Reminding a premier diary of yester years
Answer
Hoe=
A gardening tool with a long handle and a short, flat blade used to loosen the soil, weed, and cultivate. For example, "They spent the afternoon hoeing the vegetable patch"
Hoe & Co
A premier diary company
Now not in market I think
Greetings and Congratulations to those who sent correct answers:
M/S
Sharmathaa –first correct answer
Ashraf Hameeda
Sirajuddin
Ganesa subramnaiyam
Velavan
Pappti
AR Viswanaathan&
Ravi
Let us meet tomorrow by His Grace
12042024 Tue
Sherfuddin P

Sunday, 10 November 2024

கவி நவம்பர்2024

                                                             


04112024 போட்டி இல்லை 

                                                         11112024  (55)



18/11/2024- 64



                                                                         18112024




25112dddd024
ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd


                                                   



Saturday, 9 November 2024

தமிழ் (மொழி)அறிவோம் கோண் 10112024 ஞாயிறு

 






தமிழ் (மொழி)அறிவோம்

கோண்
10112024 ஞாயிறு
இரண்டு எழுத்தில் ஒரு சொல்
சிறிய சொல்லான இது மிக,மிக, மிகச் .....................சிறிய ஒன்றைக் குறிக்கிறது ---
பல கோடி பொருட்கலுக்கு ஒரு புள்ளி அளவு இடம் போதும் ---அவளவு சிறியது
முதல் எழுத்து வல்லின ஒகாரம் (நெடில்)
அடுத்தது மெல்லினம்
என்ன அந்தச் சொல்?
விடை
கோண்=அணுவை (Atom) நூறாகப் பிரித்தால் வரும் மிகமிகச் சிறிய பகுதி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
கத்தீபு மாமூனா லெப்பை
முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியன்
விளக்கம்
முதலில் சகோ குணசேகரனுக்கு நன்றி
ரசிகமணி TKC யின் உரையை CBROA குழுவில் வெளியிட்டு
இந்தப்புதிய சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு
மிக வியப்பான செய்தி –
தமிழுக்கு இந்த புதிய சொல்லை
அதுவும் அணு பற்றிய அறிவியல் சொல்லை அறிமுகம் செய்தது
கவிசக்ரவர்த்தி கம்பன்
‘ நீ சொல்லும் கடவுள் எங்கே இருக்கிறான்?'
என்று இரணியன் கேட்டதற்கு, பிரகலாதன் சொன்ன பதில் இது என்பதாக கம்பன் காட்டுவார் :
பாடல் :
சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின்' என்றான்; 'நன்று' எனக் கனகன்
சொன்னான்.
அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன்; சதம் =நூறு
மேலும் கம்பன் அணு ஆயுதத்தையும் அதன் விளைவையும் பற்றி பேசுகிறான்.
போர்க்களத்தில் இந்திரஜித் மடிந்து கிடக்கிறான். இதைக்கண்டு அவன் தாயார் மண்டோதரி கதறி அழுகிறாள்... அப்படி அழும்போது அவள் கூறுகிறாள்
“உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்து போலும் ...!”
'எங்கோ தூண்டிவிட ஒரு அணு வந்து வெடித்து நாசம் விளைவித்தது ...!'
என புலம்புகிறாள்
இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்
TKC யின் நீண்ட உரையை பின்பொருநாள் விளக்கமாகப் பார்ப்போம்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௦௧௧௨௦௨௪
10112024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 7 November 2024

திருமறை குரான் :5:87 08112024 வெள்ளி

 




திருமறை குரான்

:5:87
08112024 வெள்ளி
“நபிக்கையாளர்களே!! ஏக இறைவனாகிய அல்லாஹ் உங்களுக்க ஆகுமாக்கி)யுள்ள, (ஹலாலான)பரிசுத்தமான பொருட்களை (ஹராமானவையாக) விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக இறைவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.”
திருமறையின் எந்தபகுதியில் வரும் வசனம் இது ?
விடை
: சூரா எண்:5 சூரத்துல் மாயிதா (உணவு)(அளவு மரவை)
வசனம்:-87
சரியான விடை
எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
ஹசன் அலி ---முதல் சரியான விடை
பீர் ராஜா
ஷிரீன் fபாருக்
ஷர்மதா&
சிராஜூதீன்
விளக்கம்
தேவையற்ற உணவுக்கட்டுப்பாடு, உடலை வருத்திக்கொள்ளுதல்
துறவறம் போன்றவற்றிற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது
நபித் தோழர்கள் சிலர தொடர்ந்து இரவு முழுவதும் நின்று வணங்குவது
பகலில் நோன்பு வைப்பது என்று வீட்டை,குடும்பத்தை மறந்து திரிந்தார்கள்
அசைவ உணவைத் தவிர்த்தார்கள்
இது பிற மதத் துறவிகள் பலரின் பழக்கத்தைப் பின்பற்றுவதாக இருந்தது
குடும்பத்தை மறப்பது ஒரு வகையான வரம்பு மீறல்
குடும்பத்தினரின் உரிமையைப் பறிப்பது என இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
:தொடர்ந்து மூன்று இரவுகள் முழுதும் நீங்கள் தொழுதால் நாலாவது இரவு உங்கள் துணைவிக்கு உரியது என்பது நபி மொழி
(எனக்கு ஏனோ single child parents நினைவில் வருகிறார்கள்
இதுவும் single childகுழந்தையின் உரிமையைப் பறிக்கும் வரம்பு மீறலோ
எனத் தோன்றுகிறது )
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
08112024 வெள்ளி
5 ஜமாதுல் அவ்வல் (5) 1446
சர்புதீன் பீ

வார்த்தை விளையாட்டு 2024/நவம்பர்//0714/21/28டிசம்பர் 05./12/18/26








07112024 30/41


 

                                                          14112024   33/38



21112024



28112024




05122024








12122024



19122024



26122024





நிழலோவியஙகள்06112024 புதன்

 






நிழலோவியஙகள்

குஞ்சுகளைக் கொஞ்சும் தாய்ப் புறா
(மகள் வீட்டில் பாடப் புறா)

06112024 புதன்

Monday, 4 November 2024

English QUIZ compliment and complement 05112024 Tue


                                                             



 English QUIZ

compliment and complement
05112024 Tue
Which is/are correct ?
a.I complimented her on her beautiful dress
b. The lighting was perfect complement to the décor
c. This hotel offers complementary breakfast
Answer
a & b correct
Greetings and Congratulation to those who sent correct answers:
M/S
Ashraf Hameeda First Correct answer
Muthukkkanan
Sirajuddin
Thanks to Mr.Hasan Ali (2/3 correct)
Explanation
Compliment and Complement
These terms are homophones,- words that sound alike but have different definitions and spellings.
• Complimentary means expressing a compliment or favorable(praise)
• It can also mean free in reference to items or services provided as a courtesy. that is praising someone or something
• Complimentary breakfast means free breakfast offered in hotels to guests staying in the rooms
• .
• Complementary refers to enhancing or emphasizing the qualities of another person or thing.
A small tip to remember the difference
I stands for insult,---opposite of compliment
So one with I is compliment
The other one is complement
Hope it is clear
Or else I for iraivan (இறைவன் )
All compliments--Praise to Iraivan
(My own example)
Let us meet tomorrow by His Grace
05112024Tue
Sherfuddin P

Saturday, 2 November 2024

தமிழ் (மொழி) அறிவோம் தண்டலை 03112024 ஞாயிறு

 






தமிழ் (மொழி) அறிவோம்

தண்டலை
03112024 ஞாயிறு
சோலையை குறிக்கும் ஒரு நான்கெழுத்துச் சொல்
நல்ல இலக்கியச் சொல்
முதல் எழுத்து த
இரண்டாவது மெல்லினம்
மூன்றவது வல்லினம்
நான்காவது இடையினம்
முதல் இரண்டு எழுத்துக்கள் வெப்பமாற்ற நிலையிக் குறிக்கும்
என்ன அந்தச் சொல் ?
விடை
தண்டலை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி –முதல் சரியான விடை
சோமசேகர்
ஷர்மதா
கணேசசுப்ரமனியன்
கீதா
குமாரசாமி
மெஹராஜ்
பிராங்க்ளின் செல்வகுமார்
தல்லத் &
செல்வகுமார்
தண்டலை=
சோலை
பூந்தோட்டம், பூங்கா
ஒரு சிவதலம்.
இயற்கை எழிலை ,பெண்களின் அழகை வர்ணிப்பது என்றால் கற்பனை கொடி கட்டிப்பறக்கும் புலவர்களுக்கும் .கவிஞர்களுக்கும்
சொற்களும் உவமைகளும் வெள்ளம் போல் பாய்ந்து வரும்
அதிலும் கவிச் சக்ரவர்த்தி என்றால் கேட்கவே வேண்டாம்
தண்டலை மயில்கள் ஆட
என ஒரு பாடலில் கம்பன் மருத நிலத்தின் இயற்கை அழகை வர்ணிக்கிறான்
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, - மருதம் வீற்றிருக்கும் மாதோ
இந்தப் பாடலிலே, மருத நிலத்திலே உள்ள
சோலையை நாட்டிய மேடையாகவும்,
மயில்களை நடன மாதர்களாகவும்,
குளங்களில் உண்டாகும் அலைகளைத் திரைச்சீலையாகவும்,
தாமரை மலர்களை விளக்குகளாகவும்,
மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும்,
வண்டுகளின் ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும்,
குவளை மலர்களை இக்காட்சிகளை யெல்லாம் கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும்
சித்தரித்து மருத நிலத்தின் சிறப்பைக் கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்சிந்திப்போம்
௦௩௧௧௨௦௨௪
03112024 ஞாயிறு
சர்புதீன் பீ