Friday, 15 November 2024

திருமறை குரான் 14;22 15112024 வெள்ளி





 திருமறை குரான்

14;22
15112024 வெள்ளி

‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள்.
திருமறையின் எந்தபகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது
சொன்னது யார்?
விடை குரான்வசனம் 14 இப்ராஹீம் ;22
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் fபாருக் ---முதல் சரியான விடை
சிராஜூதீன்
சர்மதா
ஹசன் அலி &
தல்லத்
விளக்கம்
(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.)
நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். 14;22
இதில் சைத்தான் சொல்லுவது
நான் உங்களை என் வழிக்கு அழைத்தேன் என்பது உண்மைதான்
ஆனால் எனக்கு உங்கள் மேல் அதிகாரம் செலுத்தும் சக்தி எதுவும்
கிடையாது
இருந்தாலும் உங்கள் பேராசையை வைத்து என் வலையில் விழ வைத்து விட்டேன்
உங்கள் தவறுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று சொல்கிறான்
இறைவன் நாடினால் நாளை தம்ழில் சிந்திப்போம்
12 ஜமாதுல் அவ்வல் (5) 1446
15112024 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Send
Share

No comments:

Post a Comment