திரு மறை குரான்
Thursday, 12 June 2025
திரு மறை குரான் 12:15 1306 2025 வெள்ளி
Tuesday, 10 June 2025
முத்திரை பதிப்போம் ,18 வஜ்ர முத்திரை 11062025 புதன்
முத்திரை பதிப்போம் ,18
11062025 புதன்
மீண்டும் ஒரு எளிய முத்திரை வஜ்ர முத்திரை
செய்முறை
வசதியான, தளர்வான
நிலையில் (சுகாசனம், வஜ்ராசனம் அல்லது பத்மாசனம்)
உட்காரவும்.
கைகளை முழங்கால் மீது வைக்கவும்,
, ஆள்காட்டி விரலை(index finger )
நீட்டி வைக்கவும்
மற்ற விரல்களை கட்டை(விரல்*Thumb) நுனியில் சிரிது அழுத்தி வைக்கவும்
மூச்சை ஆழமாக இழுத்து , மெதுவாக வெளியேற்றுங்கள்.
சில நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம்
பலன்கள்
, குருதி ஓட்டத்தை மேம்படுத்தும் .
எனவே
குறைவான குருதி ஓட்டம் உள்ளவர்களுக்கு,
குறைந்த குருதி அழுத்தம் (Low BP உள்ளவர்களுக்கு
இது மிகவும்பயனுள்ளது .
. இது மூளையின் செயல்பாட்டையும் அறிவுத்
திறனையும் மேம்படுத்தூக்கிறது
மனக் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும்
சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது .
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தலைச்சுற்றல், சோ ம்பலை நீக்குகிறது.
அறியாமையை ஞானமாக மாற்றுகிறது.
(வயிறு, மண்ணீரல், கணையம்
அதிக சக்தி பெறுகிறது)
·
·
இதயத்திற்கு அதிக இரத்த
ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.
·
வயிற்றுக் கோளாறுகள்
நீங்கும்.
·
.
·
மன அமைதி உண்டாகும்.
·
·
.
·
·
மன அழுத்தம் குறையும்.
·
·
எச்சரிக்கை
·
அதிக குருதி அழுத்தம்( high
BP)உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.
·
பொதுவாக
முத்திரை ளில் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது அப்படி இருப்பது போல தோன்றினா ல்
உடனே பயிற்சியை விட்டு விடுங்கள்
செய்து
பாருங்கள்
உணரந்ததை
எழுதுங்கள்
இறைவன்
நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
11062025
புதன்
சரபுதீன்
பீ
Monday, 9 June 2025
English QUIZ Anthem 10062025 Tue
English QUIZ
Sunday, 8 June 2025
தியாகத் திரு நாள் வாழ்த்துகள் 07062025 சனிக்கிழமை
அமைதியும் சாந்தியும் சமாதானமும் எங்கும் எல்லோரிடத்தும் பரவட்டும்
ஆடு ஜீ விதம் 0806026 ஞாயிறு
ஆடு ஜீ விதம்
0806026 ஞாயிறு
2.00,00,00,00.000
இரண்டுக்குப்பின்
11 சுழியன்கள்
20
ஆயிரம் கோடி
எதற்கு
இவ்வளவு பெரிய எண் ?
தொ டர்ந்து படியுங்கள்
ஏறத்தாழ 150 கோடி இந்திய மக்கள் தொ கை
அதில் இஸ்லாமியர் கள்
20 கோடி
அதில் கூட்டு சேராமல் தனியாக குர்பானி
கொடுப்போர்
2 கோடி
ஒரு ஆடு 10 ஆயிரம் என்றால்
2 கோடி x 10000= 20 ஆயிரம்
கோடி
இவ்வளவு பெரிய தொகையின் பயனை அடைவது
பெரும்பாலும் சிறு, குறு ,நடுததரஉழவர் பெருமக்களும்
நிலமற்ற உழைப்பாளிகளும்தான்
50 ஆட்டுக்கு ஒரு பணியாளர் என்றால்
4 லட்சம் பேருக்கு வே லை வாய்ப்பு
இதெல்லாம் அவர்கள் வாழ்வில் ஒரு அளவுக்கு பொருளாதார
முன்னேற்றத் தை ஏற்படுத்தும்
அடுத்து
இன்னொரு கோணம்
தலை, கால்
போன் ற உதிரி பாகங்கள் போக ஒரு ஆட்டுக்கு 10 கிலோ எடை என்றால் 2 கோடி
ஆட்டுக்கு
20 கோடி கிலோ
எடை
ஒரு கிலோவுக்கு 5 பேர் சாப்பிடலாம் என்றால்
100 கோடி பேர் சாப்பிடலாம்
உறுதியாக இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க
முடியாது
மொத்தமே இந்தியாவில் 20 கோ டி தானே !
எனவே சாதி மத வேறுபாடு இன்றி குர்பான் கறி அனைவரையும்
சென்று அடைகிறது என்பது மறுக்க முடியாத உண்மை
இந்த அளவுக்க சமுதாய பொருளாதார தாக்கத்தை
ஏற்படுத்தும் குர்பானி இறைவனின் கட்டளை நபி வழி ஒழுங்கு
எனக்கு மனம்
ஒப்பவில்லை, பிடிக்கவில்லை என்பது அந்த இறைவன் ஆணையை நபி வழி ஒழுங்கை
மீறுவதாகும்
இதை திருப்பித் திருப்பி சொல்வது எனக்குத் தெரிந்ததை
மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்
Sharing is caring
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில் சிந்தி ப்போம்
08062025 ஞாயிறு
சர் புதீன் பீ
(07062025 தியாகத் திருநாள் சிறப்புத்
தொழுகையில் இமாமின் உரை
காதில் விழுந்ததை தொகுத்து சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன்
பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்
)
Thursday, 5 June 2025
துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 10 நபி ஸல் அவர்களின் விடைபெறு பேருரை 06 - 0 6 2025 வெள்ளி
துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 10
நபி ஸல் அவர்களின் விடைபெறு பேருரை
06 - 0 6 2025 வெள்ளி
நே“ற் றை ய வினா
உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்;”
எங்கே, எப்போது, யார் சொன்னது ?
விடை
இது சுரா 05 அல்
மாயிதா வில் வசனம் 3 இன் ஒரு பகுதி
(5:3) உங்களுக்குச்
செத்த உடல், 9 இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வின் பெயரால்
அல்லாமல் வேறு எந்தப் பெயராலும் கொல்லப்படும் விலங்கு, 10 கழுத்தை நெரிக்கப்பட்ட, அடிகளால் கொல்லப்பட்ட, விழுந்து இறந்த, குத்திக் கொன்ற அல்லது
வேட்டையாடும் மிருகத்தால் தின்ற விலங்கு - அது உயிருடன் இருக்கும்போது நீங்கள்
படுகொலை செய்திருக்கக்கூடியதாக இருந்தாலும் 11 -
பலிபீடங்களில் கொல்லப்பட்டாலும் தவிர. 12 - 13 அம்புகள் மூலம் உங்கள்
விதியைப் பற்றிய அறிவைத் தேடுவதும் உங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 14 இவை அனைத்தும் பாவச்
செயல்கள். இன்று காஃபிர்கள் உங்கள் மதத்தைப் பற்றி முற்றிலும் நம்பிக்கை
இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; ஆனால்
எனக்கு அஞ்சுங்கள்.
15 இன்று நான் உங்கள் மதத்தை
உங்களுக்காக முழுமையாக்கியுள்ளேன், மேலும்
எனது அருளை உங்களுக்கு முழுமையாக வழங்கியுள்ளேன், மேலும்
இஸ்லாத்தை உங்
களுக்கு மதமாக ஆக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (எனவே, உங்களுக்கு விதிக்கப்பட்ட
சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான வரம்புகளைப் பின்பற்றுங்கள்.) 16 பசியால் உந்தப்பட்டு, வேண்டுமென்றே பாவம்
செய்யாமல் இருந்தால், நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க
கருணையுடையவன். 17
தடுக்கபட்ட உணவுகள்
பற்றி சொல்லும் இந்த வசனத்தின் பிற்பகுதியில்
மதம் முழுமை ஆக்கப்பட்ட
செய்தி வருகிறது
சரியான விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர் சகோ
மெஹராஜ் – முதல் சரியான
விடை
சீராஜூதீன் &
ஷர்மாதா
வசனம் எங்கே ரப்போது
அருளப்பட்டது என்பது பற்றி யாரும் சரியாகச் சொல்லவில்லை
இது பற்றி பல கருத்துக்கள்
உள்ளன
அதில் ஒன்று நபி ஸல்
அவர்களின் விடைபெறு பே ருரையின் நிறைவுப் பகுதியில் அருளப்பெற்றது என்பது
நீண்ட பேருரை சுருக்கமாகப்
பார்ப்போம்
நபி ஸல் அவர்கள்
தம் நிறைவு ஹஜ்ஜின் பொழுதுதுல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.கள்
மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
உரையின் ஒவ்வொரு வசனமும்
மிக நுணுக்கமாக சான்றுகளூ டன் பதியப்பட்டுள்ளது
தொடக்கவுரை.
மக்களே! என் பேச்சை
கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா
என்பது எனக்குத் தெரியாது.
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை
நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில்
அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
தலைமைக்குக்
கீழ்ப்படிவீர்!
அலாஹ்வின் வேதத்தைக்
கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது
சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
குழப்பம் செய்யாதீர்கள்!
உங்களில் எவராவது
மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால்,
அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
பணியாளர்களைப் பேணுவீர்




