Saturday, 17 February 2018

வண்ணச் சிதறல் 7


 


நெஞ்சு பொறுக்குதில்லையே


இந்தியத்திரு நாட்டில் - மைய அரசு, மாநில அரசு, தனியார் துறை என எல்லாவற்றிலும் எண்ணற்ற மிக உயர்ந்த பதவிகள் உள்ளன
குடியரசுத்தலைவர் , தலைமை அமைச்சர் ,உச்ச நீதி மன்ற நீதியரசர்கள்,, முப்படைத் தளபதிகள், மக்களவைத் தலைவர் , புலனாய்வு அமைப்புத் தலைவர், தலைமைச் செயலர் , உள்துறை செயலர் , தலைமைக் கணக்காயர் மாநில ஆளுநர், முதல் அமைச்சர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,, மாநிலத் தலைமை காவல் அதிகாரி, இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி அதிகாரிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம.
இந்த உயர் பதவிகள் எதற்குமே இல்லாத ஒரு சிறப்பு ,கல்வித்துறை பதவிகளுக்கு உண்டு
வேந்தர் என்ற பெயர்தான் அந்தச் சிறப்பு , கௌரவம்
பல்கலைக் கழக வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என பல இருந்தாலும் எல்லோரும் அதிகம் அறிந்தது துணை வேந்தரைத்தான்
துணை வேந்தர் என்று சொன்னால் உடன் என் நினைவுக்கு வருவது
மரு .சர் ஆற்காடு லட்சுமான .சாமி முதலியார்தான்
தலைப்பாகை அணிந்த கம்பீரமான உருவம்
கால் நூற்றாண்டுக்கு மேல்( இருபத்தியேழு ஆண்டுகள்) சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராகப் பணியாற்றி அந்தப் பதவிக்கே பெருமை சேர்த்தவர்.
 இது இந்திய கல்வி வரலாறில் ஒரு சாதனை
அதோடு சென்னை மருத்தவக் கல்லூரியின் முதல்வராகவும் பணி புரிந்தார் .அவர் எழுதிய மகப்பேறு மருத்துவம் பற்றிய நூல் இன்றும் மருத்துவ மாணவர்களால் படிக்கப்படுகிறது
சட்டம் பயின்று அதில் பல சிறப்புகள் பெற்ற ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் ஒரே உருவமுடைய இரட்டையர்கள் .
.திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராய்  திரு ராமசாமி முதலியார் பணியாற்றி  இரட்டைத் துணை வேந்தர் என்ற பெருமையும் பெற்றனர் .
இருவருடைய ஆங்கிலப்புலமையும் சொல்வன்மையும் உலக அளவில் போற்றப்பட்டது

இந்த இரட்டையர்கள் பெயரில் கடலூரில்  ஏ ஆர் எல் எம் உயர்நிலைப்பள்ளி  சிறப்பாக இயங்கி வருகிறது .


அரை நூற்றாண்டுக்கு முன் திரு ஏ எல் முதலியார் அவர்களை பல்கலைக்கழகத்தில் அவர் அறையில் சந்தித்து முது நிலை வகுப்பு சேர்க்கை பற்றி பேசியிருக்கிறேன்
அத்தாவின் பதவி இட மாறுதலால் திரு முதலியார் கையொப்பமிட்ட பட்டச் சான்றிதல் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை
என்னுடைய பட்டச் சான்றிதழில் கையொப்பமிட்டவர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் முனைவர் தெ பொ மீனாட்சி சுந்தரம் அவர்கள் நல்ல தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர்

அடுத்து நான் கேள்விப்பட்ட நல்ல ஒரு து.வே பாண்டிச்சேரி நடுவன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய திரு டரீன் (.J. A. K. Tareen)
பல்கலைக் கழக மானியக்குழுவில் பணியாற்றிய இவர் அந்தத் தொடர்பை ஆக்க பூர்வமாக பயன் படுத்தி பாண்டி பல்கலைக்கழகம் ஒரு தரமான ஒன்றாக முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார் .
.
 சிறந்த செயல்பாட்டுக்காக குடியரசுத்தலைவர் விருது பாண்டி பல்கலைக்கழகம் பெற்றது   இவரது முயற்சிக்குக் கிடைத்த பரிசு
அண்மையில் செய்திதாள்களில் சில துணை வேந்தர்கள்   பற்றி மிகச்சிறப்பான செய்திகள் பார்த்தேன்

தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக   நியமிக்கப்பட்ட திரு வ.அய். சுப்ரமணியம் மிக எளிமையானவர் . அவருக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட ஆடம்பரமான நாற்காலியை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு எளிமையான இருக்கையில் அமர்ந்து  சிறப்பாக 100% நேர்மையுடன் பணியாற்றினார்

அலுவலக ஊர்திகள் அலுவலகப்பணிக்கு மட்டுமே என்ற கொள்கையில் தப்பித்தவறி அவரோ அவர் குடும்பத்தினரோ வேறு பணிக்குப் பயன்படுத்தினால் அதற்குரிய கட்டணத்தை கணக்கிட்டுக் கட்டி விடுவார்

மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணை  வேந்தராகப்   பணியாற்றிய திரு வ சுப மாணிக்கம் ஒரு எளிமையான விடுதியில் தங்கியிருந்து , நடந்தே அலுவலகத்துக்கு வந்து விடுவாராம்

இப்படிப் பதவிக்குப் பெருமை சேர்த்து பீடு நடை போட்ட  துணை  வேந்தர்கள் இருந்த தமிழ்நாட்டில் இன்றைய நிலை – சொல்ல நா கூசுகிறது

வேந்தர்கள் பணத்தாசையால் தலை குப்புற வீழ்ந்து ஊழல் குட்டையில் மூழ்கி சேற்றை அப்பிக்கொண்ட அவலம்

இரண்டு து வே க்கள் .ஊழல் குற்றத்துக்காக  .சிறையில் அடைப்பு
.அடைக்கப்பட்டதை பல்கலைக்கழகமே இனிப்பு வழங்கிக் கொண்டாடுகிறது

கையூட்டுப் பணத்தை வாங்க அலுவலகம் விட்டு தன் இல்லத்துக்கு விரைகிறார் .

கையும் களவுமாய் பிடிபட்டவுடன் பணத்தை கழிவறையிலும்  உள்ளாடையில் மறைக்கும் அவலம்

நல்லவேளை கழிவறையை சாட்சியாகச் சேர்க்காமல் உள்ளாடையோடு நிறுத்திக்கொண்டார்கள்

குற்றவியல் படித்தது குற்றம் புரியத்தானோ

பொய்ச்சான்றிதழ் கொடுத்து  தகுதி அற்றவர்கள து வே பதவி பெற்ற இழிநிலை
பெரிய இடம் துணையிருக்கும் துணிச்சல்

பதவி நீக்கத்துக்கு தடை ஆணை பெற்ற  து வே ஊரெங்கும் பதாகை அமைத்து விழா கொண்டாடும் ஆடம்பரம்

ஐம்பது மகிழுந்துகளோடு அணிவகுத்து  வந்து து வே பதவி ஏற்கும் அரசியல் தனம்

இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம்
 .
ஒரு வகையில் பார்த்தால் து வே க்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது .இது ஒரு கூட்டுக் கொள்ளை

பதவிக்குப் பல கோடி கொட்டிக்கொடுத்தவர்கள் அதை ஆதாயத்துடன் அறுவடை செய்ய எண்ணுவது இயல்புதானே 
,
ஐமபது கோடி வரை விலை போனதாய் அறிகிறோம்.

இப்படிக் கொட்டிகொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஏது பணம் என்று அடுத்த வினா எழுந்து ஒரு நச்சு வட்டமாகச் சுழல்கிறது ஊழல் .

இதற்கெல்லாம் மேல் தகுதி இருந்தும் பணம் இல்லாதவர்களை விண்ணப்பிக்காமல் தடுக்கும் மிரட்டல்கள் இந்த நச்சுச் சுழலை மேலும் விரிவாக்கி ஒரு பன்னாட்டுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்கின்றன 

ஒரு சேவை நிறுவனம் தொடர்ந்த பொது நல வழக்கில் நம் மாநில பல்கலைக் கழகங்களில் நடந்த இருபது ஊழல்கள் பட்டியலிடப்படுகின்றன . அனைவற்றிலும்பெரும்பங்கு து வே களுடையதுதான்

கல்வித்துறையே வெட்கித் தலை குனியும் நிகழ்வு பத்து து வேக்கள் எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரு கட்சித் தலைவரை சந்தித்தது
.தலைவர் வழியில் இப்போது து வேக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறைக்கு

நாலை நாற்பதாகவும் ஆறை அறுபதாகவும் மதிப்பெண் கூட்டிய அவல நாடகம் அம்பலத்துக்கு வந்தது

இதற்கு மேல் (கீழ்) தரம் தாழ்ந்து போக முடியாது என்று சொல்லும் அளவுக்கு பயணப்படியிலும் ஊழல்

என்ன செய்ய முடியும் நம்மால் என்ற மன நிலை நம் போன்றவர்களிடம்  வளர்ந்து கொண்டே போகிறது

ஏன் நம் மாநிலம் மட்டும் இப்படி ?

ஒரு சமுதாயத்தை அழிக்க எளிய வழி கல்வியை தரம் கெட்டுப் போகச் செய்வதுதான்

பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் அண்ணாமலை எண்ணூறாவது இடம் . தமிழ் நாடு விவசாயப் ப. கழகம் இறுதியான ஆயிரமாவ்து இடத்தில் 
.
பழம் பெருமை மிகு சென்னை, , அண்ணா பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை

தரமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்கள் எதிலும் அண்மைக்காலமாக நம் மாநில பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுரைகள் ஏதும் வெளியாகாதது ஊழலின் நேரடி விளைவு என்று ஆதங்கப்படுகிறார் ஒரு கல்வியாளர்

தமிழன் யார் இந்தியன் யார்  யார் யாருக்குப் பிறந்தவர்கள் என்ற ஆராய்ச்சியை எல்லாம் சற்று ஒதுக்கி  வைத்து விட்டு ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல் படுவோம்.

நமக்கும் நம் சமுதாயத்துக்கும் நல்லது செய்ய முயற்சிப்போமே!

இ(க)டைச் செருகல்

 மரு. ஏ எல் முதலியாரின் மருத்துவ நுண்ணறிவு பற்றி இரு நிகழ்வுகள் கேள்விப்பட்டிருக்கிறேன்

முதலாவது
தன செல்வச் செழிப்பைப் பறை சாற்றும் வகையில்  . அங்கமெங்கும் தங்கம் வைரம் வைடூரியம் என நகைகள் மிளிரும் ஒரு பெண்மணி
நீண்ட காலமாக அவருக்குப் பொறுக்க முடியாத தலைவலி
,பார்க்காத மருத்துவம் இல்லை பயன்படுத்தாத உள் வெளி மருந்துகள் இல்லை . தலை வலி தீராத நோயாக அவரை வாட்டியது
அந்தப்பெண் திரு முதலியாரின் மருத்துவத்தில் மிக  எளிதாக உடனடியாக குணமடைந்தார்

அடுத்து
மேலும் சிக்கல்
நிறை சூலி ஒருவரின் வயிற்றில் கூரான துரட்டி (கத்தி) பட்டு வயிறு சிறிது கிழிந்து கருவில் இருக்கும் குழந்தையின் கை விரல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது .
மிகுந்த பதற்றத்துடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் அந்தபெண்.
அங்கிருந்த இளைய மருத்துவர் இதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது .பெரிய மருத்துவர் வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லி விட்டு புகைக்கத் துவங்கி விட்டார்.
சற்று நேரத்தில் அங்கு வந்த திரு முதலியார் இதையும் மிக எளிதாக சரி செய்தார்

எப்படி என்பதற்கு விடை தெரிந்தவர்கள் எழுதலாம்

மற்றவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதுதான்

இறைவன் நாடினால்
மீண்டும்
 சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com



Thursday, 15 February 2018

Islam and Yoga 29



Islamic  Prayer and Yogasanas 1

Islamic Prayer is a beautiful combination of Yogasana, Pranayama , Dharana Dyana  and Samathi

A high power Islamic Meditation called Dhikr is practiced by some Muslims.

 One has to sit alone or in a meditating group ,close his eyes control his breath and reputedly pronounce the name of Almighty by mind and tongue in  subdued tone .

It easily leads to the   stages of Pranayama , dharana and dyana  leading to self realization and realization of Almighty

It is a bit difficult to practice at the initial stage and so many people don’t follow it .So it is not further elaborated

Islamic prayer is not as difficult as Dhikr and is practiced by all Muslims generally

Let us see details of

Islamic Prayer

 in coming weeks

Share if you like


Friday, 9 February 2018

வண்ணச் சிதறல் 6






நெஞ்சத்தைக் கிள்ளாதே


காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் சாதல்
என்று முழங்கினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

காதல் பற்றிப் பேசாத பாடாத கவிதை இல்லை காவியம் இல்லை திரைப்படம் இல்லை கதையும் இல்லை .

கதையில். கவிதையில் திரைப்படத்தில் காதலை ரசிப்போம்
அடுத்த ஊரில் அடுத்த தெருவில் அடுத்தவீடடில் அடுத்தவர் குடும்பத்தில் காதல் திருமணம் என்றால்  வாழ்த்துவோம் பாராட்டுவோம் 

ஆனால் நம்குடும்பத்தில் காதல் என்ற சொல்லே தவிர்க்க வேண்டிய ஒன்று
என் பிளைகளளை அப்படி நான் வளர்க்கவில்லை என்ற லீராப்புவேறு

எல்லாம் நம் வீட்டிலும் அது நிகழும் வரைதான்

பெரும்பாலான தமிழ்த்திரைக்கதைகளுக்கு கருப்பொருள் காதல். ஆனால் என் குடும்பத்தில் காதலுக்கு அனுமதி இல்லை என்பதுதான் திரையுலகர்களின்  நிலைப்பாடு

எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்த காதல் திருமணங்கள் இப்போது எல்லோர் இல்லங்களிலும் மெதுவாக எட்டிப்பார்த்து நுழைய முயற்சிக்கின்றன . நிழல் நிதர்சனமாகிறது

கட்டுப்பாடுகள்,, ஆசாரங்கள்,திரை மறைவுகள்  இரும்புக்கோட்டைகள் சாதி மதம் மொழி  எவையும் காதலுக்குத் தடை போட முடியவில்லை


காதலில் பலவகை உண்டு .

ஓன்று தன் உறவு வட்டத்துக்குள் காதலிப்பது . இது பெரும்பாலும் பாதுகாப்பானது பிரச்சனைகள் குறைவு

அடுத்து இனம் மொழி என்ற வட்டத்துக்குள் காதலிப்பது ,இதுவும் ஓரளவு பாதுகாப்பானதே

இனம் மொழி இவற்றில் ஓன்று அல்லது இரண்டுமே கடந்து செல்லும் காதலில் மிகப்பல எதிர்ப்புகள் குழப்பங்கள் சிரமங்கள் வரும் இவை தொடர்ந்து கொண்டே போகும்

முழுக்க முழுக்க வேறுபட்ட கலாச்சாரம் என்று வெளி நாட்டுக் குடிமக்களை துணையாக அடைவதில் வரும் பிரச்சைனைகள் எண்ணில் அடங்காதவை

திருமணம் முடித்த துணையையே காதலித்து விட்டால் வாழ்க்கை மிகச் சுவையாக அமையும்

இன்னொரு பக்கம் காதலித்து மணம் புரிந்தவர்களே மனமுறிவு ஏற்பட்டு மணமுறிவில் முடிவது அதிகமாகக்  கேள்விப்படுகிறோம் .அதே போல் பெற்றோர் பார்த்து இருவர் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களிலும் விரிசல், உரசல், முறிவு எல்லாம் வருகின்றன

காதலுக்காக குடும்பம், குடியிரிமை, பட்டம் பதவி சொத்து சுகம் வாழ்க்கை  ஏன் உயிரைக்கூட துறந்தவர்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்

இவ்வளவு அற்புதங்கள் மாற்றங்கள் புரியும் காதல் என்றால் என்ன ?


“---இது உடலும் மனமும் சார்ந்த ஒரு மாற்றம், இதில் பல நிலைகளில் பற்பல  வேதிப்பொருட்கள் சுரந்து பல மாற்றங்களை உண்டாக்குகிறது என்று உளவியல், உடலியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்

 மனதிலும் உடலிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும் காதலை
 காமம் , ஈர்ப்பு , இணைப்பு
என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்   என்கிறார்கள் . அறிஞர்கள்

மூன்றாம் நிலையான இணைப்புதான் காதலாக உருவாகிறதாம்

காதலுக்கு அடிப்டை காமம் என்றாலும் அது மட்டுமே காதல் இல்லை

அடுத்த நிலையான ஈர்ப்பில்தான் தூக்கமின்மை பசியின்மை எல்லாம் வரும் .மனம் ஒரு பரபரப்பில் இருக்கும் விண்ணையும் சாடுவோம் போன்ற வீர தீர எண்ணங்களும் தோன்றும்

மூன்றாம்  நிலையான இணைப்புதான் நிலையான காதல், திருமணம், பிள்ளைப்பேறு போன்றவற்றுக்கு வழி வகுக்கும்  . இந்த நிலையில் சுரக்கும் மிக முக்கியமான வேதிபபொருள்

ஆக்சிடோசின்.

 இது உணர்வுகளைத்தூண்டி காதலை நிலைப்படுத்துவத்தோடு
பொறாமை உணர்வையும் தூண்டுகிறதாம்

காதல், (திருமணம் ) நிலைத்து நிற்க அறிஞர்கள் கூறும் அறிவுரை---

காமம் வேறு காதல் வேறு . இரண்டும் ஓன்று என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
ஆழ்ந்த காதலில் இறங்குமுன் ஒருவரை ஒருவர் நன்றாப்புரிந்து கொள்ளுங்கள் எனபதுதான் ---:

 மண முறிவுக்கு குறிப்பாக பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணங்களின் தோல்விக்கு அறிஞர்கள் கூறும் காரணங்கள்

சமூக நிலையில் ஏற்றத்தாழ்வு
புரிதல் இல்லாததால் ஏற்படும் இணக்கமற்ற தன்மை
தாய்மார்கள, மாமியார்கள் பங்கு
சீர் வரிசை, கைக்கூலி
தன் துணையைப் புரிந்துகொள்ள மறுக்கும் தன்னலம்

இந்தக்காரணிகளை முறியடிக்கும் ஒரே சக்தி உள்ளங்கள் ஓன்ராக இணைந்து காதல் வயப்படுவதுதான் என்கிறார்கள்

அதாவது திருமணத்துக்குப்பின் ஒருவரை ஒருவர் நேசிப்பது

இப்பகுதியை நிறைவு செய்யுமுன் என் கருத்துக்கள் (அறிவுரை அல்ல) சில

அப்பா அம்மா பார்த்த பெண்ணையோ பையனையோ கட்டிக்கொண்டு நன்றாகத்தானே இருக்கிறோம் என்ற பாட்டையெல்லாம் இனி மறந்து விடுங்கள்

காலச்சக்கரம் சுழலும் வேகத்தில் ஏற்படும் மிக வேகமான மாறுதல்களைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஓரத்தில் ஒதுக்கப்படுவார்கள்  

ஆணும் பெண்ணும் சந்திப்பதே அரிதாக இருந்த பல சமுதாயங்களில் இப்போது இருவரும் இயல்பாக சந்தித்துப் பேசும் நிலை உருவாக்கி வருகிறது

பெண்கள் ஏன் ஆண்கள் கூட உணவு விடுதிக்கு செல்வது தவறாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி ஆண்கள், பெண்கள், குடும்பங்கள் எல்லாம் வாரம் ஒரு முறையேனும் உணவு விடுதி போவது வழக்கமாகிவிட்டது  கட்டாயமாகி விட்டது

பாவடை தாவணி சேலைதான் பெண்கள் உடை என்பது மாறி எதை வேண்டுமானாலும் அணியலாம் என்ற நிலை

கை நிறைய காசு, கருத்துச்சுதந்திரம் இவை இளைய தலை முறையின் அடையாளங்கள்

அவர்களைப்புரிந்து கொண்டு அவர்கள் எண்ணங்களை, விருப்பங்களை நிறைவேற்ற முயலுங்கள்
 .
திருமணம் பற்றி அவர்கள் கருத்துக்களை முழுமையாகக் கேட்டு அறிந்து  கொள்ளுங்கள் .

என் பிள்ளைக்கு காதலெல்லாம் வராது என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள்

.அவர்கள் அச்சமின்றி தங்கள் கருத்துகளை வெளியிடும் அளவுக்கு அவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழகுங்கள்

இளைஞர்களுக்கு


உங்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் உங்கள் பெற்றோர்தான்

அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்காமல் உங்கள் விருப்பங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் தேர்வு உங்களுக்கு ஊறு செய்வதாய் இல்லாமல் இருந்தால் பெற்றோர் பெரும்பாலும் சம்மதிப்பார்கள்.

தேர்வு சரியென்று நீங்கள் கருதினால் அவர்களை  சம்மதிக்க வைப்பது உங்கள் பொறுப்பு .

தேர்வு சரியாக அமையாவிட்டால் அதன் தாக்கம் உங்களை வாழ்நாள் முழுதும் துரத்திக்கொண்டே இருக்கும்

இ(க)டைச்செருகல்

மேலை நாடுகளில் திருமணத்துக்கு சில வாரங்கள் முன்பு ஆணும் பெண்ணும் ஒன்றாகப்போய் சர்ச்சில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யவேண்டும்

அப்போது  ஒருவரையொருவர் எத்தனை காலமாய்த் தெரியும் என்று கேட்பார்கள்

எப்போதுமே பெண் சொல்லும் பதில் ஆணை விட இரண்டு மூன்று ஆண்டுகள் அதிகமாகத்தான்  இருக்கும்

                     (எப்போதோ ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது )



இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்




வலை நூலில் படிக்க

கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

Thursday, 8 February 2018

Islam and Yoga 28 Islam and Yogasanas



Discussion on
Islam and Yogasana
Will go for a few weeks
Before that we shall have a quick revision of chapters  13to 27
Similarities between Islam and eight major divisions of Yoga, and 5sub divisions each of major divisions one and two were   discussed in a nutshell
Further we will be discussing   the similarities between Islamic Prayer and Yogasanas under the heading
Islam and Yogasanas
Of the 5 basic pillars of Islam Prayer is of utmost importance and significance.
Eeman (Declaration of Faith) is a onetime process which has to be kept alive by prayer etc.
Fasting is observed once in a year.
Zakka the compulsory charity is only for the well off lot.
Haj is completed if it is performed once in  life time.
But prayer is compulsory for all Muslims from the age of seven   5 times   a day . Nobody is exempt from this generally
It is said that Prophet Muhamad (Sal) was called in Person by Almighty to emphasis the importance of Payer

Coming few weeks
Islamic Prayer and Yogasanas

Share if you like

Sunday, 4 February 2018

வண்ணச்சிதறல் 5

இளமை ஊஞ்சல்

முதுமை என்பது
நினைவுகளின் கீறல் விழுந்த இசைத்தட்டு என்றார்
கவிக்கோ

இது எந்த அளவுக்கு சரி என்பது அவரவர் மன நிலை வாழ்க்கை முறையைப் பொருத்தது

மேலும் இளமை நினைவுகளை அசை போடுவதும் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் மிக மிக இனிமையானவை அதில ்தவறு ஏதூம் இல்லை

என்ன நம் பகிர்தலைக் காது கொடுத்துக்  கேட்க யாராவது கிடைக்க வேண்டும்  அவர்கள் சலிப்படையாத அளவுக்கு நாமும் பேச வேண்டும்

முதுமை என்பது எந்த வயது ? இதுவும் ஒரு மிகப்பெரிய வினா.

அறுபது தாண்டினால் மூத்த குடிமக்கள் என்பது ஒரு பொதுக்கருத்து.

ஆனால் பெண்கள் ஐம்பத்தைந்தைத் தாண்டினாலே மூத்தவர்கள் என்கிறது தொடரித்துறை.

பணியில் இருந்து ஓய்வு பெறும் லயதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்
ஆனால் அதிலும் எத்தனை வேறுபாடுகள்

மாநில அரசுப்பணியில் ஒய்வு வயது பல்லாண்டுகள் முன்பு ஐம்பத்தைந்திலிருந்து ஐம்பத்தெட்டானது.
 சில மாநிலப் பணிககளுக்கு அறுபது

வங்கி்கள் நடுவண் அரசு  அறுபது

 நீதியரசர்கள் அறுபத்திஐந்து

 நடுவண் பல்கலைக்கழக ஆசிரியர்களுகு எழுபது.  ஆம் எழுபது

என்று பல மாறுபட்ட ஓய்வு வயதுகள்

எனவே இது முதுமையின் குறியீடு இல்லை

தங்களுக்கு ஓய்வென்பதே எந்த வயதிலும் இல்லை என்பது பெண்களின் ஆதங்கம்.(?)

 எண்பது வயதில் பணியில் சேரந்த இளைஞர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்

கட்செவியில் வந்த பதிவின் ஒரு பகுதி

*மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்;*
*முதுமை என்று எதுவும் இல்லை,*
*நோய் என்று எதுவும் இல்லை,*
*இயலாமை என்று எதுவுமில்லை,*
*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*

*எனவே சிந்தனையை மாற்றுங்கள்.*
*ஆரோக்கியமாக வாழுங்கள்.*
*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.*

_*மரணம்*_

*நம் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? 😀*

*நம் பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளை அழைத்து, "நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன், சந்தோஷமாக வாழுங்கள்!" என்று நம் குடும்பத்தினரிடம் விடைபெற்று, மகிழ்ச்சியாக நம் உடலைத் துறக்க வேண்டும்.😌*

*யாருடைய மரணமும், மரணப் படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*

*சிந்தனையை மாற்றுங்கள்:*

*நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்!*
*எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்!!*

*#படித்ததில் பிடித்தது*


படிக்க நன்றாகத்தான் இருக்கிறது.
நம்பி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

ஆனால் காணும் கேட்கும் நிகழ்வுகள் இந்தச்சிந்தனைக்கு  வலுவூட்டுவதாக இல்லை

துறவிகள் ஞானிகள் பலர் நோய்வாய்ப்பட்டு மறைகின்றனர். உடற்கூறு படித்த மருத்துவரையும் நோய் விட்டு வைப்பதில்லை

 மனம் பதைபதைக்கும் அளவக்கு இளவயதினர் மறைவுகள் நிகழ்கின்றன

இன்னொரு பக்கம் பார்த்தால் வாழ்நாள் நீடிப்பு பிரச்சனையாக பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. தனிமை இந்தப்பிரச்சனையை மேலும் வளர்க்கிறது.

எல்லாவற்றையும் படிக்கையில் எனக்குத் தோன்றும் எண்ணம் இதுதான்

இந்த நொடியில் நாம் வாழும் வாழ்க்கை மிக மிக உன்னதமானது விலை மதிப்பற்றது .

இதை முழுதும் உள்வாங்கி அனுபவித்து வாழ்வோம்

முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ முயற்சிப்போம்.

மற்றவர்களின் குற்றங்குறைகளை மறப்போம்

 புறம்பேசுதல் குறைக்க முயற்சிப்போம்

இடைவெளி கடந்து நமக்கு  அடுத்தடுத்த தலைமுறைகளைப்  புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவோம ்

 அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
குறிப்பாக நிதானம் அலட்டிக்கொள்ளாமல் இருத்தல் கணினி தொழில் நுட்பம்
ற
சிரமம்தான் முயற்சிப்போமே

இ(க  )டைச்செருகல்
 இளைஞர்கள் ஆடம்பரத்தை விரும்கிறார்கள்.மோசமான நடத்தை சட்டத்தை முதியோரை மதிப்பதில்லைடவெட்டி அரட்டடையில் பொழுதில் காலத்தைக் கழித்து செயல்பட மறுக்கின்றனர்
சொன்னவர இருபத்தைநத்து  நூற்றாண்டுகளுக்கு முன் வாழந்த கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்

இறைவன் நாடினால்
               .....   மீண்டும்
                                     சந்திப்போம்

வலை நூலில் படிக்க
sherfuddinp.blogspot.com

Friday, 2 February 2018






Islam and Yoga27

Islam and Prathiyagara

Islamic Prayer is a conversation between man and Almighty .

Only when the creation feels his presence with the CREATOR the prayer is Completed

Islamic prayer is  combination of Asana Pranayama Dharana and Dhyana ultimately  leading to Samathi.
Islamic prayer will be dealt with in a few succeeding parts
 
Now we will proceed with I
slam and Prathiyagara
(.  Controlling of Senses   )

Islam prescribes some compulsory duties like Prayer Fasting compulsory Charity called Zakka and Haj Pilgrimage on every true muslim subject to certain conditions .
All the above are very good Prathiyagara practices.

Prayer
Eyes and Ears are kept open.
But one pne in prayer should concentrate only on the Almighty and feel like conversing with HIM
Then only Prayer attains complete form

Fasting
One may be hungry and thirsty . Variety of tasty foods and drinks are at his reach.
But he cannot eat or drink even water.
Despite having inclination he cannot approach his life partner

Above all one should avoid anger.falsehood and undesirable thoughts like envy during fasting

Zakka
islam imposes a compulsory charity of 2.5% on wealth left over after meeting all his needs .
It may look very simple but it requires a firm mindset dedicated to the Almighty to drive away selfishness.
__I have toiled and earned  why should I share with others __

Another form of Charity is sadakka  which is not compulsory.
It assumes more significance as a socio economic measure since it is expected that one should spend whatever is left after providing for his needs as charity

Haj Pilgrimage
A special dress called Ihram is prescribed for men in Haj
Made of two pieces of unstitched cloths it very much resembles dress worn to corpse.
One's ego.arrpgance ,pride and all disappear once he wears this Ihram dress. and he is pushed to the mentality of expecting his last days.
One has to board international flight with such a simple dress and rubber slippers like a begger  wandering in search of mercy and grace of Almighty

Islamic Prayer and Yoga
In the coming weeks

Share if you like

l