Saturday, 10 March 2018




வண்ணச் சிதறல் 10

 

உப்பும் உமியும்


உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சிற்றூர் ஒன்றுக்குப் பயணம் 
.
உறவினர் வீடு .சற்றுப் பழைய காலத்து வீடு.
 முழுதும் சிமிட்டித்தரையிலான வீட்டில்  .மர விட்டங்களுடன் உயரமான மேற்கூரை .--.உள்நோக்கித்திறக்கும் சன்னல் கதவுகள் --..நிலைப்படியில் ஒரு கருங்கல் --பின்னால் விசாலமான திறந்த வெளி -.அங்கு தனித்தனியாக குளியல், கழிவறைகள் ==,.வாசலில் புங்க மரம்

உறவினரின் பெருமை பேச இதை எழுதவில்லை.

பழையவை நன்றாகத்தானே இருந்தன  இருக்கின்றன. அதை விட்டு ஏன் அதிகப்பொருட்செலவில் உடல் நலம் பாதிக்கும் வகையில் வீட்டைக் கட்டுகிறோம் (என்னையும் சேர்த்துத்தான் ) என்பது எனக்குப்புரியவில்லை

நம் ஊர் தட்ப வெப்பத்துக்கு சிமிட்டி அல்லது சிவப்புத்தரைதான் உகந்தது என்று நன்றாகத் தெரியும்

இருந்தாலும் தரைக்கு  பளிங்கு ,பளபளக்கும் கருங்கல், விலை உயர்ந்த ஓடுகள் என்று முடிந்த அளவுக்குப் பணத்தை அதில் கொட்டுகிறோம்.

இவையெல்லாமே பொதுவாக எல்லோருக்கும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்குவை . ஈரமாக இருந்தால் வழுக்கி விழ வாய்ப்புகள் மிக அதிகம்

தரையினால் உண்டாகும் கால் வலியைத் தவிர்க்க வீட்டுக்குள் காலணியோடு நடக்க வேண்டீயிருக்கிறது

எப்போதும் ஈரமாக இருக்கும் குளியல் அறையிலும்கூட  தரையிலும் சுவரிலும் விலை உயர்ந்த ஓடுகள் ..

வழுக்கும்காலுக்குத் தெரியவில்லையே அவை வழுக்காத ஓடுகள் என்று . வழுக்கினால் சுவரைப் பிடிக்கலாம் என்றால் அதுவும் வழுவழுவென்று.

சன்னல் கதவுகள் உள்நோக்கித் திறந்தால் காற்று நன்றாக வரும் ..இது நமக்குத் தெரியாவிட்டாலும் வீடு கட்டும் பணியில் உள்ளவர்களுக்கு  நன்றாகவே தெரிந்திருக்கும் . ஆனால் எல்லா வீடுகளிலும் சன்னல் கதவுகள் வெளி நோக்கியே திறக்கின்றான .

இடப்பற்றாக்குறை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் பெரிய அளவில் அமைந்துள்ள அறைகளிலும் கதவுகள் வெளி நோக்கியே திறக்கின்றன .
.
எப்படியும் சன்னலகளைத் திறந்து வைக்கப்போவதில்லை பின் உள்ளே திறந்தால் என்ன வெளியே திறந்தால் என்ன

திறந்து வைத்தால் காற்று வருவதில்லை கொசுதான் வருகிறது என்ற எண்ணமும் ஒரு காரணமாய் இருக்கலாம் ..

காற்று என்பதே மின் விசிறி அல்லது அறை குளிரூட்டியில் இருந்து வருவதுதான் என்ற நிலை

கொடிஅசைந்ததால் காற்று வந்ததா காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்பது போல் பல கேள்விகளுக்கு பதில் இல்லை
 .அது போல் காலை மடக்காததால் மூட்டு வலி வந்ததா , மூட்டு வலி வந்ததால் காலை மடக்க முடியவில்லையா என்பது ஒரு புரியாத புதிர்

அண்மையில் என் நண்பரின் துணைவிக்கு மூட்டு மாற்று அறுவை செய்யப்பட்டது . இப்போது காலை மடக்கி உட்கார முடிகிறதா என்று நான் கேட்டதற்கு என் நண்பர் கூறிய பதில் “ ஓரளவு உடல் நலத்துடன் இருக்கும் எனக்கே இதெல்லாம் முடியாத, மறந்து போன  ஓன்று . . பல பல ஆண்டுகளாக மேற்கத்தியக் கழிவறைதான் , சாப்பிடுவது உட்காருவது எல்லாமே நாற்காலியில்தான் என்றார்

நாற்பது ஐம்பது வயது கடந்தவர்கள் தரையில் அமர்ந்து எழுவது இப்போது ஒரு மிகப்பெரிய சாதனை

..வயதாகிவிட்டால் தரையில் உட்காருவதே தவறு என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள் சிலரும் இருக்கிறார்கள்

பள்ளிவாசல்களில் நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .இப்படியே போனால் பள்ளிவாசல் முழுதும் வகுப்பறை போல்  நாற்காலிகளால் நிரம்பி விடும் போலிருக்கிறது

என் இளமைப்பருவத்தில் மிக வயதில் மூத்தவர்கள் , பருமனானவர்கள் யாரும் பள்ளிவாசலில் நாற்காலியில் உட்கார்ந்து தொழுததைப்பார்த்ததில்லை

இப்போதோ கல்லூரி மாணவர்கள் கூட நாற்காலியைத் தேடுகிறார்கள் .

 முறையான தொழுகை தோப்புக்கரணம் , வழிபாட்டுத்தலத்தை வலம் வருதல் , ஆழ்நிலைத் தியானம் எல்லாம் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்ல பயிற்சிகள்

மேலை நாடுகளில் பெரிய தொகை கட்டணத்தில் தோப்புகரணம் சொல்லித்தருவதாக அறிகிறோம்

வாழ்க்கை முறை மாற்றம்தான் மூட்டு வலிக்கு மட்டுமல்ல பல பரவலான நோய்களுக்கும் காரணம் காட்டப்படுகிறது .
பிறகு ஏன் பழைமையை மறந்து புதுமையை நோக்கிப் பயணிக்கிறோம்
சம்மணம் கூட்டி உட்காருவது நல்லது என்ற செய்தி அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது .
தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறோம்
சம்மணம் கூட்டி உட்கார பயிற்சிக்கூடங்கள் வந்தாலும் வரலாம் ஒரு பெரிய தொகை கட்டணத்துடன்

ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் பெருநிறுவனங்களின் பொருட்களுக்கு மருத்துவரின் பரிந்துரைகளும் நம் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன
 மஞ்சள் உடம்புக்குக் கெடுதல் சாம்பிராணி புற்றுநோய் உண்டாக்கும் என்றால் அதை வேத வாக்காக எண்ணி நம்பி செயல்படுத்துகிறோம்

காலம்காலமாக் உப்பையும் உமிக்கருக்கையும் கலந்து பல விளக்கி நன்றாகத்தான் இருந்தோம்.
கரகரப்பான பொடிகள் பல்லைத் தேய்ந்து விடும் என்று இடைவிடாது சொல்லி மூளைச்சலவை செய்து பற்பசைக்கு மாற்றினார்கள்

இன்றோ “ உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா “என்கிறார் ஒரு நடிகை
எங்கள் பற்பசையில் கரி கலந்திருக்கிறோம் என்று பெருமை பேசுகிறது  ஒரு விளம்பரம்

அதே நேரத்தில் மேல் நாடுகளில் பல்துலக்க வேப்பங்குச்சி பயன்பாடு பரவலாகி வருகிறது என்று செய்தி வருகிறது 
 
கருப்பு உளுந்து கருப்பட்டி செக்கு எண்ணெய் நாட்டுக்கோழி கறி முட்டை என்று பரவலாக உணவாகப்  பயன்பாட்டில் இருந்தவை எல்லாம் அரிய விலை உயர்ந்த மருந்துகளாகி விட்டன

இந்தப்பட்டியலில்  சிறு தானியங்கள் பாசிப்பயறு எல்லாம் சேர்ந்து விட்டன

திருநெல்வேலி பேட்டையில் கல் செக்கு நல்லெண்ணெய் வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள் .இப்போது அதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை

பசு மாடு எருமை மாடு காளை மாடுதான் கேள்விப்பட்டது பார்த்தது .
கறவை மாடு  ஏ4 பால் இதெல்லாம் எங்கிருந்து வந்தது ?

சென்னையில் ஒரு லிட்டர் பசும்பால் விலை நூறைத் தொடுகிறது

சிறப்பான இயற்கை அரிசி வேண்டுமா கிலோ அறுபத்தி ஐந்து ரூபாய் என்றார் எங்கள் வீட்டுப்பால்காரர் (பெரிய செல்வந்தர்)

என்ன சிறப்பு என்று கேட்டேன். இயற்கை உரம் மட்டும் போட்டு வளர்த்து, கையினால் அறுவடை செய்து அடுப்பில் அண்டா வைத்து அவித்து தீட்டாத கைக்குத்தல் அரிசி என்றார் .

இதைத்தானே காலம் காலமாக பயன்படுத்தி வந்தோம்

கரிம உணவுகள் என விற்கப்படும் பொருட்கள் பாதிக்கு மேல் உண்மையான கரிம உணவுகள் இல்லை என்கிறது நடுவன் அரசு .
பாலில் பெரிய அளவில் கலப்படம் என்கிறது மாநில அரசு

இப்படி அறிக்கை விடுவதற்கு மட்டும்தான் அரசுகளா ? குற்றம் புரிந்தோரை தண்டித்து மீண்டும் தவறு நடக்காமல் தடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா ?

சீனாவில் குழந்தைகள் உணவில் கலப்படம் செய்ய உடந்தையாக இருந்த அரசு உயர் அதிகாரிகள் உடன் தூக்கிலிடப்பட்டது மற்றவர்களுக்கு ஒரு எச்ச்ரிக்கையாய் அமைந்தது 

மாட்டு வண்டிக்கு மாற முடியாது .மாறவும் வேண்டாம்
உடல் நலம் பாதிக்கப்படாத அளவுக்கு புதுமையின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்

பொத்தானை அழுத்தினால் குளியலறையில் தண்ணீரை முழுதுமாய்த்  துடைத்து  தரையை உலர வைக்கும் மின் பொறி மேலை நாடுகளில் வீடுகளில் பயன்படுத்துவதாய் படித்திருக்கிறேன்,
நம் ஊரில் இது போல் எங்காவது இருக்கிறதா இல்லையேன்றால் என் இல்லை ?
கட்டிடத்துறையில உள்ளவர்கள கவனிக்க வேண்டியது

ஐம்பது % தள்ளுபடியில்  நடைப்பொறி விற்கிறார்கள் , வாங்கப்போகிறேன் என்றார் உறவினர் ஒருவர் .
இறைவன் கொடுத்த  காலுக்கு நடை மறந்து போனது போலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய நடைப்பொறிகள் பெரும்பாலும் துணி காயப்போடத்தான் பயன் படுகின்றன .

 நடைப்பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்காமல் .சிறிய தொலைவுகளை நடந்து பழகலாமே

மிதி வண்டி ஓட்டுவது நல்ல உடல்பயிற்சி அதோடு, சுற்றுப்புறம் மாசு படாது .எரிபொருள் செலவும் இல்லை

எப்போதும் இல்லாவிட்டாலும் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம்  தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுப் பார்க்கலாம்

அவ்வப்போது தரையில் பாய் விரித்து  படுத்து உறங்கினால் முதுகு வலி குறையும்

கூடிய மட்டும் மேற்கத்தியக் கழிவறையை தவிர்க்கலாம்
விடுதிகள் போல் வீடுகளில்  .படுக்கை அறையுடன் இணைந்த கழிவறைகள் பலவிதங்களிலும் உடல், மன நலக்குறைவை ஏற்படுத்துகின்றன என்பது என் கருத்து

கணினி, கைப்பேசி தொலைகாட்சியில் தொடர்ந்து உட்காராமல்அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிய நடை நடக்கலாம்

இயற்கை காற்றும் சூரிய ஒளியும் உடலில் படும்படி திறந்த வெளியில் சற்று உலாவலாம்.. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்களுக்கு சூரிய ஒளியைப் பார்க்கும் வாய்ப்பு மிகக்குறுகி விட்டது

இதனால் ஏற்படும் உடல் மன நலக்குறைபாடுகள் எண்ணற்றவை
மேலை நாடுகள் போல் சூரியக்குளியல் தேடிப்போக வேண்டும் போலிருக்கிறது


மூளைக்கு வேலை
சென்ற வாரப்புதிருக்கு சரியான  விடையாரும்  சொல்லவில்லை . வந்த ஒரு விடையும் சரியாக இல்லை .விடை தெரியவில்லையா அல்லது இவ்வளவு எளிதான புதிருக்கெல்லாம் விடை சொல்லி எங்கள் நேரத்தை வீணாக்க முடியாது என்ற எண்ணமா என்று தெரியவில்லை
காரணம் எதுவாய் இருந்தாலும் விடை அடுத்த வாரம்தான் 


இ(கடைச்செருகல்
அரபு நாட்டில் மிக அரிதாக மிக சிக்கலான பேறுகாலங்களில் அறுவை வழி (caesarian )  அரசு அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் .99%  பேறுகாலங்கள் இயல்பாகவே நடைபெறுகின்றன .அரசு அனுமதியின்றி தனியார் மருத்துவ மனையில் அறுவை செய்தால் மருத்துவ மனையின் உரிமம் பறிக்கப்படும்
நம்மூரில் அறுவை வழியே இயல்பு போல ஆகி விட்டது அதுபோல் சிறுவர் சிறுமியர் கண்ணாடி அணிவதும் மிக இயல்பான ஒன்றாகிவிட்டது


இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்


வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com


Friday, 9 March 2018

Islam and Yoga 32




Islamic Prayer and Yogasanas 4

Muslims conduct prayer 5 times a day. Prayer timings are based on the natural sequence of sun rise and sun set and named so..

They are

Fajr- Dawn
Lohar- After noon
Asr- Evening
Mahrib – Dusk
Isha- Night

Apart from these compulsory daily prayers there are many kinds of special prayers
Arabic is the only language in which Islamic Prayer is conducted all over the world.
Prayer Call (Bang. Adan) is also recited only in Arabic.

Muslims all over the world turn their face towards khaba .
Khaba is the first place of  Worship  constructed in the  world for the Almighty- (Only One God).
It is situated in the Holy City of Mecca in Saudi Arabia.

Mulims in India pray towards west as Khaba is in west of India .

Universal Brotherhood crossing the barriers of language and nationality is emphasized  by praying in one language and towards  one single point.

More about Prayers and Ypgasana
Next Week Next Part

Share if You like


Monday, 5 March 2018

இசுலாமும் யோகக்கலையும் 32



இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 4



நேரத்தின் அடிப்படையில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை. தொழுகை நிறைவேற்றப்படுகிறது..
அவை
பஜ்ர் (விடியல்),
லொகர் (மதியம்),
அசர் (மாலை) ,..
மக்ரிப் (அந்தி),
இஷா (இரவு)
என சூரிய உதயம் மறையும் நேரங்களுக்கேற்ப அமைகிறது. இது போக நிறைய சிறப்புத்தொழுகைகள் உண்டு

உலகெங்கும் தொழுகை அரபு மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. ,தொழுகைக்கு அழைப்பு (, அதான்/ பாங்கு))ம் அரபு மொழியில்தான் ஒலிக்கிறது
உலக முசுலிம்கள் அனைவரும் அரபு நாட்டில் உள்ள புனித நகரான மக்காவில் அமைந்துள்ள காபா எனும் ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்தின் திசையில் நின்று ஏக இறைவனை வழிபடுகிறார்கள் (இந்தியாவில் இது மேற்கு நோக்கி அமைந்துள்ளது) 
இவை  நாடு, மொழி  என்ற எல்லைகளைக் கடந்த   உலகளாவிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்(universal Brotherhood) பறை சாற்றுகின்றன,.
தொடர்ந்து தொழுகை, யோகாசனங்கள் பற்றி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்

Saturday, 3 March 2018

வண்ணச் சிதறல் 9 ஏழாவது சுவை


ஏழாவது சுவை


வங்கிப்பணியின் துவக்கப்பள்ளிப் பருவம் நெல்லை நகர்க்கிளையில்
.நெஞ்சில் நிலைத்து நிற்கும் இனிய நினைவுகள்

நல்ல நண்பர் வட்டம் .பொறாமை இல்லாமல் போட்டி போட்டு வேலை பார்த்து விரைந்து முடிக்கும் மனப்பாங்கு . உன் வேலை என் வேலை மேலாளர் வேலை அதிகாரி வேலை என்று பிரித்துப் பார்த்ததில்லை
.வங்கி வேலை நம் வேலை என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்
விரைந்து வேலையே முடித்து விட்டு வெளியே கிளம்பி விடுவோம்..

 சிவராமன்,  இரண்டு சுந்தரம்  சீனிவாசன் இவர்களோடு நான் ஒரு குழுவாக திரிவோம்
மிதி வண்டி இருந்ததால் போக்குவரத்து செலவு என்பது ஒன்றும் இல்லை .
உணவு விடுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறப்பு உணவுகளை உண்பது, பிறகு திரைப்படம் .எட்டுத் திரையரங்குகள் இருந்ததால் புதிய படங்கள் எல்லாம் நெல்லையில் வெளியிடப்பட்டு விடும்

சந்திப்பிள்ளையார் முக்கில் உள்ள ஒரு உணவு விடுதியில் வெள்ளை அப்பம் சிறப்பு உணவு என்று சொல்வார்கள்

பல முறை அங்கு போய் அது கிடைகாமல் திரும்பி வந்ததுண்டு .சரி எப்படியாவது அதை சுவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் விரைந்து சென்று உணவகத்தில் உட்கார்ந்தோம் வெள்ளை அப்பம் இருக்கிறது என்று சொன்னவுடன் ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தேன்
என் கற்பனயில் வெள்ளை அப்பம் என்பது பால் போன்ற வெண்ணிறத்தில் வட்ட வடிவமான ஒரு உணவுப் பண்டம்.

 (ஆப்பம் அப்பம் குழப்பமோ)

வந்தது வெள்ளையாகவும் இல்லை . அப்பம் (ஆப்பம்)போன்றும் இல்லை . போண்டா  போல் பொன்னிறமாக இருந்தது . சரியான  ஏமாற்றம் எனக்கு . இதற்கா இத்தனை நாள் வந்து போனோம் என்ற எரிச்சல்

என்ன செய்வது இப்படி சில பல இடங்களில் மிகவும் எதிர் பார்த்துப்போன சுவை இல்லாதபோது ஒரு வெறுமையும்  ஏமாற்ற உணர்வும்உண்டாகும்
அது போல் எதிர்பாராமல் சில நல்ல சுவையான உணவுப்பண்டங்கள் கிடைக்கையில் மனதில் ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும்
இந்த இரண்டையும்தான் நான் ஏழாம் சுவை என்று குறிப்பிடுகிறேன்
 .
வேறு ஒன்றும் பெரிய அறிவியல் ஆராய்ச்சி எல்லாம்  இல்லை.

என் உறவினர் ஒருவர் நெல்லைச்சீமையில் பணியற்றியபோது அங்குள்ள உள்ளூர் வாசி ஒருவர் அடிக்கடி இன்று வீட்டில் பாலமுது சாப்பிட்டேன் என்று சொல்ல, என் உறவினருக்கு கற்பனை கொடி கட்டிப்பறந்து வாயில் நீர் சுரக்கும்.
பாலே ஒரு சுவையான உணவு . அமுது- கேட்கவே வேண்டாம் பாலமுது என்றால் மிகவும்  சுவையான ஒரு சிறப்பு இனிப்புப்பண்டம் என்று கற்பனை விரிந்து கொண்டே போனது
எனக்கு பாலமுது சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று வெட்கத்தை விட்டு ஒரு நாள் சொல்லியே விட்டார்  .
சரி ஒரு  விடுமுறை நாளில் வீட்டில்  பாலமுது செய்யும்போது அழைத்துச் செல்கிறேன் என்றார் உள்ளூர் வாசி .

இப்படிச் சொல்லி சில மாதங்கள் கடந்து விட்டன .ஆசையும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே போக ஒரு நாள் அந்தத் திரு நாளும் வந்தது

 நாளை எங்கள் வீட்டில் பாலமுது நீங்கள் சாப்பிட வந்து விடுங்கள் என்று உள்ளூர் வாசி சொல்ல என் உறவினருக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி .
அடுத்தநாள் சரியாக அவர் சொன்ன நேரத்துக்கு வீட்டுக்குப் போய் விட்டார் . ஒரு தேவலோக உணவை சுவை பார்க்கப்போகும் பரபரப்பு
கை கால் கழுவி விட்டு தரையில் விரித்த பாயில் உட்கார்ந்தார் . தட்டு வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் வந்தே விட்டது பால் அமுது . வீட்டுப்பெண்கள் பரிமாற வாயில்  எதிர்பார்ப்புடன் வைக்க




மிகப்பெரிய ஏமாற்றம் ,
வெள்ளை அப்பத்தில் வெள்ளையும் அப்பமும் காணமல் போனது போ,ல்
பாலமுதில் பாலும் இல்லை அமுதமும் இல்லை







வெறும் சுடு கஞ்சி


*****
வங்கியில் ஆய்வுப்பணிக்காக தில்லியில் தங்கியிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை. உடனிருந்த நண்பர் நரேந்ரனும் நானும்  உணவகம் நோக்கிச்சென்றோம்
பொதுவாக தில்லியில் சுவையான உணவு விலை மலிவாக கிடைக்கும்.
போகும் வழியில் ஒரு உணவகத்தில் நல்ல கூட்டம் .சரி இங்கு சிறப்பான உணவு கிடைக்கும்போல் இருக்கிறது என்று எண்ணி உள்ளே போய் விட்டோம் .
இனம் புரியாத பல உணவுகளின் பெயர்கள் விலைப்பட்டியலில்
.விலையும் சற்று அதிகம் போல்தான் தோன்றியது சரி ஒரு மாறுதலாக இன்று சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு உணவை தேர்ந்தெடுத்தோம்
.எதோ அரசு அலுவலகம் போல முதலில் பணத்தை செலுத்தி சீட்டு வாங்க வேண்டும் அதையும் செய்து விட்டு அமர்ந்திருந்தோம்
எங்கள் சீட்டு எண்ணை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் . அவர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து சற்று நேரம் காத்திருந்தோம் .அப்படி எதுவும் நடக்கவில்லை .எனவே நண்பர் போய் இருவருக்கும் உள்ள உணவை வாங்கி வந்தார் .
ஆவலுடன்  திறந்து பார்த்தால்

ஒரே ஒரு பன்ரொட்டியை இரண்டாகப் பிளந்து இடையில் சில சிறிய  துண்டுகள் காரட் மிளகாய் வைத்து மேலே ஒரு பல் குச்சி குத்தியிருந்தது .வெண்ணை பழக்கூழ் எதுவும் இல்லை . ரொட்டி வதக்கப்படவும் இல்லை

வேறு உணவகத்தில் இங்கு கொடுத்த தொகைக்கு மனதும் வயிறும் நிறைய சாப்பிட்டிருக்கலாம்
வெளியில் வந்து சுவையான பனிக்கூழ் சாப்பிட்டு வயிற்றெரிச்சலை போக்கிகொண்டோம்

இதே போல் பணம் கொடுத்து சீட்டு வாங்கி அழைப்பு வரும் வரை காத்திருந்து மதிய உணவு உண்ட நிகழ்வு சென்னையில் ஒரு ஆந்திரா உணவகத்தில் .
ஆனால் உட்கார வைத்து இலை போட்டு வகை வகையாக பரிமாறிய  உணவு மிக சுவையாக இருந்ததால் காத்திருப்பின் தாக்கம் மறைந்து விட்டது


*****
திருச்சியில் ஒரு உணவகத்தில் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் என்று பலரும் சொல்லக்கேட்டு அங்கு போய் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்த்தேன் .
ஏமாற்றம்தான்

*****
ஒரு வார இதழில் சென்னையில் உள்ள ஒரு உணவகம் பற்றி மிகப் புகழ்ச்சியாக விவரிக்கப்பட்டிருந்தது . குறிப்பாக ரசத்தில் திராட்சைப்பழம் சேர்ப்பதால் மிகச் சுவையாக இருக்கும் என்று  எழுதியிருந்தது . ஒரு தடவை சென்னை போயிருந்தபோது அந்த உணவகத்தை தேடிப் போனேன்.
நகரின் மையப் பகுதியில் இருந்தாலும் உணவகத்தின் வெளிப்புறம் உள்ள சாலை சுத்தமாக இல்லை . உள்ளே போகவே ஒரு தயக்கம் . அதையும் மீறிப் போனால்   உணவு கொண்டு வரவே வெகு நேரமானதில் பசி ருசி எல்லாம் . மாறிவிட்டது. .

 ரசத்தில் திராட்சையும் இல்லை பழமும் இல்லை. .கேட்டதற்கு ஒரு சில நாட்கள்தான் அந்த சிறப்பு ரசம் என்றார்கள்

பிறகுதான் தெரிந்தது அச்சு ஊடகங்களில் வருவதெல்லாம் விளம்பரம்தான் என்று

*******
சொந்த ஊர் திருப்பத்தூரில் புகழ்பெற்ற ஒரு உணவகம். ரொட்டி குருமா மிக சுவையாக இருக்கும். பல முறை சுவைத்ததுண்டு .

அண்மையில் அங்கு போய் சாப்பிட்டோம் .ரொட்டி இருந்தது குருமாவும் இருந்தது . பழைய சுவைதான் காணாமல் போய்விட்டது.

அதே போல் இன்னொரு மறந்து மறைந்து போன சுவை எங்கள் ஊர் திருமண விருந்து  சிறப்பு உணவான நெய்ச்சோறு பொடிக்கறிகுழம்பு ,கா(ய்)க்குழம்பு

.பழைய ஆட்களைத் தேடிப்பிடித்து சமைக்கச் சொன்னாலும் அந்தப் பழைய சுவையைக் கொண்டு வர முடியவில்லை 

******
நெல்லையில் வழக்கமாக நான்  வாங்கும்  வெளிச்சமான கடையை விட்டு விட்டு எல்லோரும் சிறப்பாகப்பேசும் வேறொரு கடையில் அல்வா வாங்கிப்பார்த்தேன்..
எனக்கு அந்த சுவை பிடிக்கவில்லை .பிடிக்கவேயில்லை                 
உறவினர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு  வந்திருந்தார் .அந்தச் சிற்றூரில் எளிதாக கறி மீன் வாங்க முடியாது .எனவே எனக்கு மிகவும் பிடித்த தக்காளி சூப் வைத்து பீன்ஸ் கூட்டு  செய்திருந்தார்கள்

சாப்பிட உட்கார்ந்த உறவினரின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது .அசைவப் பிரியரான அவர் என்ன வெகு நேரமாக  அரைக்கும் சத்தம் புடைக்கும் சத்தம்  சமைக்கும் சத்தம் எல்லாம் கேட்டதே இதற்குத்தானா என்று சலித்துக்கொன்டாலும் நன்றாகவே சாப்பிட்டார்


இப்படி எதிர் மறை செய்திகளயே தொடர்து சொன்னால் சலிப்புத்தட்டும் . ஒரு மாறுதலாக சில் நல்ல செய்திகள்

நெல்லையிலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிறிய சுத்தமான உணவகம் . இதற்கு முன் அங்கு போனதும் இல்லை அது பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை 
.
மீன்குழம்பும் பொரியலும் நல்ல வீட்டுச் சுவைக்கு இணையாக இருந்தது .இருபது ஆண்டுகள் தாண்டியும் இன்றும் நினைவில் நிற்கிறது

*****
மைசூரிலிருந்து குட்டா செல்லும் சாலையில் மைசூர் தாண்டியதும் குன்சூர் என்ற சிறிய நகரம் வரும். அங்ககுள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிற்றுண்டி, உணவு எல்லாம் நல்ல சுவையாக இருந்தது

*****
குட்டாவில் பணி ஒய்வு பெற்று அங்கிருந்து கிளம்புமுன் வங்கி ஊழியர்களுக்கு விருந்து வைத்தேன்.. 
வழக்கமாகச் செல்லும்அங்குள்ள ஒரே  உணவு விடுதிக்குப்போகாமல்  இல்லத்தங்கல் நடத்தும் பெருந்தோட்ட உரிமையாளர் ஒருவரிடம் சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் .
சைவம் அசைவம் எல்லாம் இதுவரை கண்டிராத நல்ல சுவையாக இருந்ததாக ஊழியர்கள் அனைவரும் பாராட்டினர் .

இந்த ஊரில் இப்படியெல்லாம் உணவு கிடைக்கும் என்பது பல ஆண்டுகளாய் இங்கே பணியாற்றும் எங்களுக்கே தெரியாது என்றும் வியப்பைத் தெரிவித்தார்கள்


****
கேரளா மாநிலம் திரூரில் உணவகங்களில் புரோட்டாவுக்கு மத்தி மீன் குழம்பும் பொரியலும் வைப்பார்கள்.. எப்படி இருக்குமோ என்ற நினைப்பை மாற்றும் வசையில் மிகச் சுவையாக இருந்தது

*****
திரூரில் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவ நாளன்று பிரியாணி செய்ய தன்னந்தனியாக வந்தார்  சமையற்காரர்  ஒருவர் . விறகெல்லாம் காயாமல் ஈரமாக இருந்தது .
எப்படி சமையல் ஆகும் சுவை எப்படி இருக்கும் என்ற எதிர்மறை எதிர்பார்ப்புகளை முறியடித்து அமைதியாக  மிகச் சுவையான பிரியாணி செய்து அழகாகப் பரிமாறவும் செய்தார்

*****
எங்கோ எப்போதோ தெருவில் அரையணாவுக்கு (மூன்று பைசா ) ஆல இலையில் வைத்துக்கொடுத்த பனிக்கூழின் சுவையும் வெளிர் பச்சை நிறமும் இன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது . எப்படியும் அறுபது  ஆண்டுகளுக்கு மேல் கடந்திருக்கும் . திரும்பத் திரும்ப வாங்கிச் சாப்பிட்டோம்

*****
கல்கத்தாவில் ஒரு சிறிய உணவகத்தில் நின்று கொண்டே சாப்பிட்ட இட்லி  சட்னி --–இட்லி அப்படி ஒரு மிருதுவாகவும் வெள்ளையாகவும் , தேங்காய் சட்னி அப்படி ஒரு சுவையாகவும் நம்மூரை மிஞ்சி நின்றது வியப்பு கலந்த ஒரு இனிமை  

நிறைவாக ஒரு உணர்ச்சி பூர்வமான நெஞ்சைத் தொட்ட  சுவை

ஈரோட்டில் இருந்து கோவைக்கு மாறுதல் 
.வங்கி ஊழியர் ஒருவர் கோவையின் நல்ல நகர்ப்பகுதியில் இருக்கும் தன் வீட்டைப்பார்க்க வரச் சொன்னார். மகளும் நானும் புறப்பட்டுப்போனோம் நேரம் தவறக்கூடாது என்று காலை சிற்றுண்டி சாப்பிடாமல் வீட்டைப் பார்க்கப் போய் விட்டோம்.
வெகு நேரம் காத்திருந்தும் அந்த ஊழியர் வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது

வீட்டின் அருகில் குடியிருந்த கேரளப் பெண்மணி ஒருவர் உள்ளே வந்து உட்காருங்கள் என்று அழைத்தார் . 
,மிகச்சிறிய வீடு பெரிய மனது . .
எங்கள் பசியறிந்து  நாங்கள் மறுத்தும் சுடச் சுட தோசையும் ஊறுகாயும் சாப்பிடக் கொடுத்தார் .அந்தப்பெண்ணின் பெயர் கூடக் கேட்கவில்லை . அவருடைய அன்பும் உபசரிப்பும் கால் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் நினைவில் நிற்கிறது
 நிறைவு செய்யுமுன்
மூளைக்கு வேலை
(இதயத்தைப் பீன் பற்றி—)
.விடை தெரிந்தவர்கள் பதிவு செய்யாலாம் .மற்றவர்கள் அடுத்த வாரம் பார்க்கலாம்

.அப்பா அம்மா மகன் மகள் நால்வரும் ஒரு  இருட்டான குகையைக் கடக்க வேண்டும் .. குகை மிகவும் குறுகலானது . இரண்டு பேர் மட்டுமே ஒன்றாகப்போக முடியும் .குகையைக் கடக்க .அப்பாவுக்கு  ஒரு நிமிடம, அம்மாவுக்கு  இரண்டு நிமிடம் மகனுக்கு  நான்கு நிமிடம் மகளுக்கு ஐந்து நிமிடம் பிடிக்கும்.
கையில் இருக்கும் விளக்கு பனிரெண்டு நிமிடங்கள் மட்டுமே எரியும் . அதற்குள் நால்வரும் குகையைக் கடந்து செல்ல வேண்டும்
எப்படி முடியும் ?
பின் குறிப்பு :
வலை நூலில் படிப்பது எல்லோருக்கும் பழகி விட்டது  .
 நன்றி
கருத்துக்களை வலை நூலிலேயே பதிவு செய்யலாமே

இக(டை)ச் செருகல்
 எதையோ சொல்ல வந்து அதை விட்டு வேறு எதை எதையோ சொல்லி நிறைவு செய்து விட்டேன் .
All is well that ends well,

இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்

வலைநூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
  



..








Thursday, 1 March 2018

Islam and Yoga 31




Islamic Prayer and Yogasanas 3

Benefits of Wudu

Wudu (Ablution) is a mini bath. It acts as a health tool by  preventing  many a disease and maintaining  physical and mental health

Cleaning behind the earlobes is not paid much attention. This is is emphasized in Wudu

Washing of hands and face and rinsing of mouth prevent microbial infections, food particles are removed from mouth and many diseases are prevented and controlled.

Cleansing of nose and nostrils prevent infectious diseases.

Many acupuncture points and blood vessels are activated by thoroughly washing hands arms, legs head face and ears helping in maintenance of health

Accumulation of waste materials in the body system is a major cause for many of the diseases.  .This accumulation is very much reduced by attending call of nature before Wudu

Islamic prayer is a comprehensive process covering Yogasana, Pranayama, Dhyana, and Samathi –stages

Islamic Prayer
Next Week Next Part

Share if you like