Saturday, 24 March 2018

வண்ணச் சிதறல் 12




பிரெஞ்சுக் குடியிருப்பில்


“உங்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா ? “

பெயருக்குபின்னல் எட்டு பட்டங்கள் உள்ள நான் என் அறுபத்தி ஏழாவது வயதில் இது போன்ற ஒரு வினாவை  சிறிதும் எதிர்பார்க்காவில்லை
இது பற்றி பின்னால் சொல்கிறேன்

இருபத்திஐந்து கிலோமீட்டர் இடைவெளிதான் கடலூருக்கும் பாண்டிக்கும்
ஆனால் மொழி. உடை, கலாச்சாரம், நகர அமைப்பு, மக்களுக்கு வசதிகள் இவற்றில் எல்லாம் நம் நாட்டுக்கும் ஒரு வெளி நாட்டுக்கும் உள்ள அளவுக்கு வேறுபாடு, மாறுபாடு

வங்கிப்பணி நிமித்தமாகவும், சுற்றிப்பார்க்கவும் , நண்பரைப்பார்க்கவும்  ஓய்வுக்குப்பின் ஒய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும்  என பலமுறை  பாண்டி சென்றது உண்டு. 
அப்போதெல்லாம் கிட்டாத வாய்ப்பு இப்போது கிடைத்தது

பேரன் பர்வேசுக்கு கண் பார்வை திறன் அதிகரிக்க   அரவிந்தர்  ஆசிரமத்தைச் சேர்ந்த சிறப்புப்பள்ளி ஒன்றில் ஒரு வாரப்பயிற்சி 
.சென்ற ஆண்டிலேயே முயற்சி செய்தது .இந்த ஆண்டுதான் இடம் கிடைத்தது .
காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பயிற்சி என்பதால் எட்டு நாள் பாண்டியிலே தங்க வேண்டிய சூழ்நிலை

முதல் நாள் இரவே பாண்டி போய் இன்டர்நேஷனல் கெஸ்ட் ஹௌஸ் என்ற விடுதியில் தங்கினோம் .பேரன் பர்வேஸ், என் துணைவி, நான் மூவரும் தங்கினோம். .மகனும் மகளும் எங்களை இறக்கி விட்டு விட்டு கடலூர் திரும்பி விட்டார்கள்

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விடுதியில் மூன்று படுக்கை உள்ள அறைக்கு அவர்கள் சொன்ன எண்ணூறு ரூபாய் வாடகை மலிவு போல் தோன்றியது .போகப்போகத்தான் தெரிந்தது இதை விட நல்ல வசதியான விடுதியிகள் மிக மலிவாக கிடைக்கின்றன என்ற உண்மை

மருத்துவ மனை போல பார்வையாளர்கள் நேரம் எல்லாம் போட்டிருந்தார்கள் .குழாயில் வெந்நீர் வராது அறைச்சேவை கிடையாது ..குடிப்பதற்கு வெந்நீர் வேண்டும் என்றால் ஒரு சிறிய குடுவை நீர் பதினைந்து ரூபாய்
இருந்தாலும் சுத்தமாக, பாதுகாப்பாக இருந்ததால் அங்கேயே எட்டு நாள் பொழுதும் கழிந்தது
காலை எட்டரை மணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியிருந்தார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு மூவரும் அந்தப்பள்ளிக்கு போனோம்.

 . முதலில் ஆங்கிலத்தில்  ஒரு படிவத்தை கொடுத்து எழுதச் சொன்னார்கள். அப்போதுதான் என்னைப்பார்த்து கேட்டார் ஒரு மூதாட்டி
உங்களுக்கு இந்த படிவத்தை நிரப்ப முடியுமா என்று

எனக்கு எழுதத்தெரியுமா என்று கேட்கிறீர்களா என்றேன்
 .
ஆம் என்றார்.

 பொங்கி வந்த சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நான் இரண்டு முது நிலைபட்டம் பெற்றவன் என்று சொல்லி என் பெயர் அட்டையை (visiting card ) கொடுத்தேன் .ஒரு ஐயம் கலந்த வியப்புடன் அதைப்பார்த்தாலும் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை

ஒரு வழியாக படிவத்தை நிரப்பிக்கொடுத்து, , கண் பரிசோதனை முடித்து பேரனைக்கூட்டிக்கொண்டு படியேறி பயிற்சிக்கூடத்துக்குப் போனேன் 
.
அங்கு ஒரு மூதாட்டியின் குரல் கடுகடுத்தது .” ஏன் இந்தக்குழந்தையின் பெற்றோர் வராமல் நீங்கள் வந்திருக்கிரீர்கள் “ என்று
அதே குரலில் நானும் அமைதியாகச் சொன்னேன் “ ஏன். நான் வந்தால் என்ன , அவன் என் பேரன் அவனோடுதான் நானும் இருக்கிறேன் “ என்றேன்.
பந்துப்பயிற்சி கடுமையாக இருக்கும் அதற்கு உங்களால் துணை நிற்க முடியாது . முதலில் உங்களால் தரையில் உட்கார முடியுமா “ என்று அவர் வினவ , நான் யோகம் படித்தவன் என்னால் எளிதாகத் தரையில் அமர்ந்து எழ முடியும் “ என்றேன் .
ஒரு வழியாக இந்தத் தடையைத் தாண்டி  சூரியக்கதிர் நோக்குபயிற்ச்சியை  செய்தவுடன் கண் புள்ளி அழுத்தம், தடவல் பயற்சிக்கு (acupressure and massage) பேரனுடன் போனேன் .
 .
அங்கிருந்த பெண் “ உங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தால் புரிந்து கொள்ள முடியாது “ என்றார்

எனக்கு சினம் வரம்பைத்தாண்ட உரத்த குரலில் “ தாடி வைத்தவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாத முட்டாள்கள் என்று நினைககாதீர்கள் .எனக்கு உங்களை விட இதெல்லாம் நன்றாகத் தெரியும் .நான் முறையாக அக்குபஞ்சர் , யோகா, வர்மக்கலை எல்லாம் படித்தவன் “  என்று சொன்னவுடன் பல முறை வருததம் தெரிவித்தார்

இந்தத் துவக்க நிலைத் தடங்கல்களைத் தாண்டி விடாமல் ஏழு நாளும் பயிற்சிக்கு சென்று வெற்றிகரமாக முடித்தோம்.
இரண்டாவது நாளிலேயே மிகவும் நட்புடனும் மதிப்புடனும் பழகினார்கள்

சென்ன்னயிலிருந்து தன் பேரனைக்கூட்டிகொண்டு வந்த ஒரு மூதாட்டியை பயிற்சிக்கூடத்துக்குள் நுழைய விடவே இல்லை. அவர் தன் மகனை வரவழைத்த பின்னரே  பயிற்சிக்கு அனுமதித்தனர்

அரவிந்தர் ஆசிரமம் நடத்தும் இந்தப்பள்ளியில் ஒரு வாரப்பயிற்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது
சூரிய நோக்குபயிற்சி, -,கண்புள்ளி அழுத்தம், தடவல்,-உள்ளங்கைப் பயிற்சி- , தொலை நோக்குப பயிற்சி,- பந்து எறிதல் -,விரல் நோக்கு, -சிறிய எழுத்துக்களில் உள்ள நூலை படித்தல்,- பெரிய சிறிய எழுத்துக்களை தொலைவில் இருந்து படித்தல், -கண்ணுக்கு மூலிகை ஆவி பிடித்தல்- கண்களை நீரில் நனைத்த துணியினால் மூடுதல் என பத்துப்பயிற்சிகள் தினமும் இரு வேளை அளிக்கிறார்கள்

 ஒவ்வொரு பயிற்சிக்கும் தனி இடம், தனியாக ஒரு ஆசிரியர் என்று மிக நேர்த்தியாக வடிவமைத்து மிக மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் .
கடற்கரைக்கு அருகில் போக்குவரத்து சந்தடியில்லாத அமைதியான, நிழலான இடத்தில் இருக்கிறது இந்தப்பள்ளி

ஒரு சிறிய மரக்கதவு .அதைதிறந்தால் மிகப்பெரிய கட்டிடம் இதுதான் பிரெஞ்சுக்கட்டிடங்களின் அடையாளம் அதே போல்தான் இந்தப்பள்ளியும்

இவ்வளவு சிறப்புகளையும் மீறி என் மனதிலும் நினைவிலும் நீங்காமல் இருப்பது  இப்பகுதியின் துவக்கமாக இருக்கும்   கேள்விதான் .
பயிற்சி முடிவதற்குள் நறுக்கென்று நாலு சொல் அந்த மூதாட்டியிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் 
.அதற்குள் அவரே ஒரு நாள் வலிய வந்து உங்களுக்கு எழுதத்தெரியுமா என்று கேட்கவில்லை .நீங்கள் கண்ணாடி போடவில்லை மேலும் மூத்த குடிமக்கள் பலரும் எழுத சிரமப்படுவார்கள் அப்படித்தான் கேட்டேன் என்றார்.
இவ்வளவு படித்து, பெரிய பதவியில் இருந்த நீங்கள் மிக மிக எளிமையாகத் தோன்றுகிறீர்கள் என்று தேவையற்ற பாராட்டு வேறு

அச்சத்தில் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தும் அப்போதைக்கு விட்டு விட்டேன் 
.
இருந்தாலும் மனசு இன்னும் ஆறவில்லை ..இப்படிக்கேட்க அவரைத் தூண்டியது எது? என் மதமா, நிறமா இல்லை என் தாடியா ? தாடி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஓமத்திராவகம் விற்கவும், சாணை பிடிக்கவும் செருப்புக்கடை வைக்கவும்தான் தகுதியானவர்கள் என்ற பரவலான கருத்தா என்பது எனக்குப்புரியவில்லை
முன்பு கடலூர் வங்கியில் பணிபுரிந்தபோது அலுவலகப்பணியாக நீதிமன்றம் போயிருந்தேன். வங்கி வழக்குரைஞர் தன் உதவியாளரிடம் இவர்தான் வங்கி மேலாளர் என்று என்னை அறிமுகம் செய்ய
இவரைப்பார்த்தால் பாய் மாதிரியில்ல இருக்கு என்று அந்த உதவியாளர் சொன்னதும் எனக்கு இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது .தாடி வைத்த ஒரு இசுலாமியரை வங்கி மேலாளராக நினைக்கக்கூட  முடியாத மன நிலை
சென்னையிலிருந்து தன் பேரனோடு வந்து விரட்டப்பட்ட மூதாட்டி சொன்னது போல் நம் படிப்பு, பதவி எல்லாம் எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது

இந்த ஒரு நிகழ்வு தவிர மற்றதெல்லாம் நன்றாகவே இருந்தது .கடலூரில் பள்ளிப்படிப்பு, வீட்டுப்பாடம், குரான் வகுப்பு, கராத்தே பயிற்சி என்று இயங்கிகொண்டிருக்கும் பேரனை பார்ப்பது ,பேசுவதே அரிதாக இருக்கும்
இந்த ஒரு வாரமும் எங்களோடு ஒட்டிகொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம்.அவன் அத்தம்மாவைத்தான் சற்றுப்படுத்தி விடுவான்

விடுதிக்கு அண்மையிலேயே இந்தியா காபி ஹவுஸ், சைவ அசைவ உணவு விடுதிகள், தேநீர்க்கடை எல்லாம்
.
நடக்கும் தொலைவில் பள்ளிவாசல் .ஒரு வாரமும் விடாமல் காலைத் தொழுகைக்கு பள்ளி சென்று வந்தேன்..வெள்ளிகிழமை தொழுகைக்கு பேரனும் நானும் போனோம்.

பள்ளிவாசல் பகுதியில் தினசரி சந்தை இருக்கிறது . காலையில் பரபரப்பாக இயங்கத் துவங்கிவிடும் காய்கறி, மீன், பழங்கள் எல்லாம் சுமந்து வரும் சரக்குந்துகள், அவற்றை வாங்க வரும் வணிகர்கள் , காப்பி தேநீர் ,கூழ் விற்பவர்கள் , வாடிக்கையாளர்கள் அவர்களின் வண்டிகள் என தெருவே நிரம்பி நடக்க இடமில்லாமல் சல சலவென்று இருக்கும்
மொத்த விற்பனைக்கடைகளில் பழங்கள் விலை மிக மலிவாக இருந்தது

காலையில் தொழுதுவிட்டுப்போகும்போது இந்தியா காபி கவுசில் மணக்கும் காபியும் ,சூடான சிற்றுண்டியும் கிடைக்கும்

ஒரு நாள் பள்ளியில் சலாம் அலைக்கும் என்று குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் சாகுல்
உம்ரா போய்வந்து தலையில் அரைகுறை முடியுடன் இருந்த சாகுலை அங்கு சற்றும் எதிர்பார்க்காததால் காலை இருட்டில் யாரென்று புரியசில நொடிகள் ஆனது

சாஜிதா முனைவர் பட்டம் பெற வாய்மொழித்தேர்வுக்காக பாண்டி வந்த சாகுலை அடுத்த நாளும் பள்ளியில் சந்தித்தேன். சந்தையில் பழங்கள் வாங்ககிக்கொண்டு  இந்தியா காபி கவுசில் காப்பி அருந்தி விட்டு அவரவர் விடுதிக்குப் போவோம்.

வலைத்தளத்தில் ஒரு செட்டிநாட்டு உணவகத்தில் மீன் சாப்பாடு பற்றி மிகச் சிறப்பாக எழுதியிருந்ததை நம்பி வாங்கிப்பார்த்து மிகப்பெரிய ஏமாற்றம் .தரம், சுவை அளவு எதுவுமே சரியாக இல்லை .
நெத்திலி மீன் குழம்பு என்று நூற்றிஐம்பது ரூபாய்க்குக், கொடுத்தார்கள் .சுண்டுவிரல் அளவில் ஐந்தாறு மீன்கள் அவ்வளவுதான். 
.மீன்குழம்பு என்றே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு சுவயற்ற  இனிப்புச் சுவை
வழக்கமாகப்போகும் அசைவ உணவகத்தில் கறி, கோழி எல்லாம் நல்ல சுவையாக இருக்கும் .ஒரு நாள் மீன் பொரியல் வாங்கிப்பர்த்தோம் ,நன்றாகவே இல்லை இதோடு பாண்டியில் மீன் சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டோம்
பாண்டியில் கிடைக்காத இன்னொன்று பச்சி
,.சமூசா, போண்டா , பக்கோடா, வெங்காய வடை. பருப்பு வடை, உளுந்த வடை எல்லாம் சுடச்சுடக்கிடைக்கும் .பச்சி மட்டும் கண்ணில் படவில்லை

பாண்டியின் ஒரு சிறப்பு ரிச்சி ரிச் பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்).எங்கள் விடுதிக்கு அருகில் ஒரு சிறிய சந்துக்குள் போனால் எப்போதும் கூட்டமாக இருக்கும் ஒரு உணவகம்  .நல்ல சுவை, நிறைவான அளவு .

விடுதி இருந்தது நேரு தெருவில் கனரா வங்கியை அடுத்து . நேரு தெரு, அதை அடுத்துள்ள போஸ் தெரு ,காந்தி தெரு ,படேல் தெரு எல்லாம் வணிகத்தெருக்கள். வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும்
பெரும்பாலும் வாகனங்கள் தெருவை நடந்து கடப்பவர்களை அனுசரித்து நிதானமாகப் போவது பாண்டியில் நான் கண்ட ஒரு சிறப்பு .
எல்லா இடங்களுக்கும் நடந்தே போகும் அளவுக்கு சிறிய நகரம்,,வசதியான நகரம்

விடுதியிலிருந்து கண் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெரிய பூங்கா, ஆளுனர் மாளிகை எல்லாம் வரும் . நிறைய பிரெஞ்சு பாணியில் அமைந்த வீடுகளும் கட்டிடங்களும் கண்ணில் படும்.
பெரும்பாலனா கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் சாம்பல் /சிமிட்டி நிறத்தில் இருக்கும் . 
ஒரு சிறிய மர.க்கதவுக்குப்பின் பிரமாண்டமான மாளிகை ஒளிந்திருப்பது பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் அடையாளம் போலும்
வீட்டு வாசல்களில் பூத்துக்குலுங்கும் மரம் செடி கொடிகள். தினமும் தெருக்கள் சுத்தம் செய்யபடுவதால் செடிகளின் குப்பை சேர்வதில்லை

சில மாதங்கள் முன்பு புதுக்கோட்டையில் நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து எட்டிப்பார்த்தால் மதுக்கூடங்கள்தான் பளீரென்று கண்ணில் படும் .அதற்கு நேர்மாறாக குடிக்குப் புகழ்போன பாண்டியில் ஓன்று கூட கண்ணில் படவில்லை

அரைகுறை, முக்கால் குறை ஆடையில் பெண்கள் (எல்லாம் உள்ளூர்தான்) நடமாட்டம் கண் பள்ளிக்கும் அது போல் ஒருவர் வந்திருந்தார் .இது பிரெஞ்சுக்கலாச்சாரமா இல்லை அந்தப்போர்வையில் நம்மூர் கலாச்சார சீரழிவா தெரியவில்லை

மூளைக்கு வேலை
ஒரு கூடையில் இருக்கும் பூக்களில்
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் ரோசா
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் மல்லிகை
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் முல்லை
மொத்தம் எத்தனை , எது எது எத்தனை ?
மிக எளிய புதிர்

இ(க)டைச்செருகல்
ரு (rue) என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு தெரு என்று பொருள் .இன்னும் பல தெருப்பெயர் பலகைகளில் இந்தச் சொல்லை பாண்டியில் காணலாம்
ஆம்பூர் தெரு,என்ற பெயரை பாண்டியில் பார்க்க வியப்பாக இருந்தது .புஸ்ஸி தெரு என்பது இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் தெரு என நினைக்கிறேன்.

இறைவன் நாடினால்
           மீண்டும்
சந்திப்போம்
 வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com





Thursday, 22 March 2018

Islam and Yoga 34




Islamic Prayer and Yogasanas  6

Standing

The mountain Pose – Tad asana is the foundation for all standing asanas. It is the initial stage in Islamic Prayer
Standing in Mountain pose is an easy exercise  for the whole body --,feet , legs and spine working together .With one’s feet planted firmly  on earth and one’s head reaching towards  sky  , this pose is of the finest metaphysical significance to the sacredness of the human state for verticality is the essence of religion

Eyes will be gazing the ground

Spinal Stretching

 One is as young as one’s spine. . 
Yoga concentrates much on deep, thorough stretches of the spine, bringing the head forward to rest on the knees.  All the nerves of the body are channeled from the spinal cord out between the vertebrae.

A healthy spine is of central importance for the well being of the whole human body and mind,
It takes much patient, persistent practice to make and keep the spine ideally flexible, and the only the most dedicated succeed in this.

 In Islamic Prayer spinal stretch is easily achieved   in the bowing position called
Ruku.
In ruku the back is bent by placing stretched palms on the knees and pressed tightly
Limbs should be straight without bending. Back should be parallel to floor

Eyes should be looking at the toes

 This minimal stretch helps keep the spine in good condition.
Making ruku 17 times a day beautifully prepares spine for deeper forward stretches

Further details
Next Week Next Part

Share if you like


Monday, 19 March 2018

இசுலாமும் யோகக்கலையும் 34


   

இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 6


நிற்கும் நிலைதான் ஆசனங்களின் ஆரம்ப நிலையாகும். .தடாசனா எனப்படும் மலை ஆசனம் தொழுகையின் முதல் நிலையான நிற்கும் நிலையை ஒத்திருக்கிறது பாதங்கள் பூமியில் உறுதியாகப் பதிந்த நிலையில் தலை வானத்தை நோக்கிய நிலையில் அசையாமல் நிற்பது உடல் ,கால்கள் பாதம் முதுகுத்தண்டு அனைவற்றிற்கும் ஒரு நல்ல பயிற்சியாக அமைகிறது
கண்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் 
  .
முதுகுத்தண்டை இழுத்தல்:.
முதுகுத் தண்டு இளக்கமாக இருத்தல் உடல் நலத்துக்கும் இளமைக்கும் இன்றியமையாதது என்பது யோகிகளின் கருத்து// எனவே யோகாசனக்கலையில் முதுகை நன்றாக வளைத்து தலையை முட்டிகளுக்கு இடையில் கொண்டு வருவது ஒரு முக்கியப் பயிற்சியாக இருக்கிறது.. உடலின் எல்லா நரம்புகளும் முதுகுத்தண்டு வழியாகவே செல்கின்றன,
தொழுகையின் ஒரு நிலையான ருகுவில் இந்த நிலை மிக எளிதாக அடையப்பெருகிறது.. ருக்கு நிலையில் முதுகை வளைத்து கைகள் விரல்களை விரித்த நிலையில்  முழங்காலகளை இறுகப்பற்றி நிற்க வேண்டும்..
கைகள் கால்கள் வளையாமல் , முதுகு தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
கண்கள் கால் விரல்களைப்பார்க்க வேண்டும்
 இது போல் ஒரு நாளை குறைந்தது பதினேழு முறை வளைக்கப்படுகிறது.. எனவே இது முதுகுத்தண்டுக்கு மிகச்சிறந்த எளிதான பயிற்சி ஆகிறது.
தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்

Sunday, 18 March 2018

வண்ணச் சிதறல் 11 இருந்த ஊரைச் சொல்லவா





இருந்த ஊரைச் சொல்லவா


நண்பர் ஒருவரிடம் பெசிக்கொண்டிருந்தேன்,. எந்த ஊரையும் நான் சுற்றிப்பார்த்தது கிடையாது . வணிகப்பணி பொது வாழ்வுப்பணி என்று எந்த ஊருக்குப்போனாலும் அந்தப்பணியை முடித்து விட்டு திரும்பி விடுவேன் .சுற்றுலா என்று எங்கும் போனதில்லை என்றார்
முப்பதுக்கு மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்தது ,குமரி முதல் காசுமீர் வரை சுற்றிப்பார்த்தது என்று என் வாழ்க்கை பற்றி அவரிடம்  சொன்னேன்
முப்பது ஊரில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எந்த ஊர் என்று அவர் கேட்க இப்படி ஒரு கேள்வியை   எதிர்பார்க்காத நான் சற்றுத் திணறிப் போய்விட்டேன்
எல்லா ஊருமே எனக்குபிடித்துத்தான் இருந்தது என்று நான் சொன்னாலும் அவர் விடாப்பிடியாக மிகவும் பிடித்த ஊர் எது என்றார்.
சற்று சிந்தித்து விட்டு ஏறுவாடி என்று சொன்னேன் .ஏறுவாடியா என்று வியப்புடன் அவர் கேட்க, இது வேறு ஏறுவாடி என்று ஒரு சிறிய விளக்கம் கொடுத்தேன் .
இந்த உரையாடலின் தொடர்ச்சியாக என் எண்ணம் காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தியது இருந்த, இருக்கும் ஊர்களின் நினைவுகளை சுகமாக அசைபோடத்துவங்கினேன்.
அறுபத்திஏழாண்டு வாழ்வில் மிக அதிகமாக நான் வசித்த திருநெல்வேலியை மிஞ்சி விட்டது கடலூர் வாழ்க்கை .
வங்கிப்பணியில் மூன்றாண்டுகள், பணி ஓய்வுக்குப்பின் ஏழாண்டுகள் என பத்து ஆண்டுகள் கடலூரில் கடந்து விட்டன சுனாமி, வெள்ளம், தானே புயல் எல்லாம் இங்கே பார்த்தாயிற்று
மிகவும் பிடித்த ஊர் என்று சொல்ல முடியாது . ஆனால் வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகள் கடலூரில்தான்.
மகன் திருமணம், பேரன் பிறந்தது , புனித ஹஜ்ஜுப் பயணம் ,,ஓய்வு வாழ்க்கையில் இரண்டு முதுநிலைப்பட்டம் பெற்றது , எழுத்துப்பணி துவங்கியது எல்லாம் கடலூரில்தான்
மகன் வீடு இருக்கும் அமைதியான சுற்றுப்புறம், .
காலையில் கேட்கும் பலவிதப் பறவைகளின் குரல்கள்,
.மீன்கொத்தி, மரங்கொத்தி நீர்க்காக்காய் ,கிளி, செம்போத்து நாரை தேன் சிட்டு ,குயில் மைனா  என வண்ண வண்ணப்பறவைகள்
,ஐந்து வேளையும் காற்றில் மிதந்து வரும் தொழுகை அழைப்பு
தொலைவில் கேட்கும் தொடரியின் தடக் தடக் ஓசை
 சுற்றிலும் பசுமை இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை
மிக மிகப்பிடிக்காதது காற்றை மாசு படுத்தி மூக்கைத் துளைக்கும் வேதியல் கழிவுகள் நாற்றம் .முன்னை விட இப்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது

கனவுலக வாழ்க்கையோ எனத்தான் இன்றும் தோன்றுகிறது குட்டாவில் வாழ்ந்த ஒன்னரை ஆண்டு
திரைப்படங்களில் வருவதுபோல் அடர்ந்த காடு, காப்பித்தோட்டங்கள், பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் என இயற்கை அழகு மனதைக் கொள்ளை கொள்ளும் . நன்கு படித்த நாகரீகமான கூர்கிகள் வசிக்கும் மிகப்பெரிய வீடுகள், அவற்றின் சுத்தம் என அடுக்கிக்கொண்டே போகலாம் .பெரும்பாலும் எல்லோரும் நன்றாகத் தமிழ் பேசுவது இன்னொரு சிறப்பு
நாற்பது ஆண்டு வங்கிப்பணி நிறைவுற்று ஓய்வு பெற்றதும் இங்குதான்
ஆண்டுக்கு இருநூறு நாட்கள் மழை கொட்டும் குட்டாவில் தண்ணீர்ப்பஞ்சம் என்பது ஒரு கொடுமை. பஞ்சம் என்பதை விட சரியான நீர் மேலாண்மை இல்லை என்பதே உண்மை .
ஒன்னரை ஆண்டும் கறியே வாங்கவில்லை
தொடர்ந்து பத்து நாட்கள் மின் தடையை அங்கு அனுபவித்தது தானே புயலில் கடலூரில் ஏற்பட்ட பத்து நாள் மின்தடையை எளிதாக்கியது
காரைக்கால் என்றால் நினைவுக்கு வருவது  அக்குபஞ்சர் கற்றுக்கொடுத்த ஆசிரியர் காதர், அவர் மகன் குலாம், பாரூக் மரைகாயரின் உறவினர் பசிருதீன் ,கப்பப்பா, எளிமையாகப் பழகும் மிகப்பெரிய செல்வந்தரான நசீம் என ஒரு இனிய நட்பு வட்டம் .மிக வசதியான சிறிய நகரம்
சென்னையின் ஓராண்டு வாழ்க்கையின் சிறப்பு ஒரு அருமையானா தனி வீடு .அங்குதான் மகனின் திருமணம் உறுதி செய்யப்பட்டது .
எதிர் பார்த்த,,, உயர் அதிகாரிகள் உறுதி செய்த பதவி உயர்வு கிடைக்காதது ஒரு சிறிய ஏமாற்றம்
வாணியம்பாடியில் மூன்றாண்டு –மிக நல்ல பெயர், நல்லமதிப்பு மரியாதை .இரண்டாவது பேத்தி பிறந்தது அருகில் உள்ள ஆம்பூரில் நடுக்கும் குளிர்காலமான டிசம்பரில்
சிறிய ஊரான ஏறுவாடியில் ஏழு எட்டுப் பள்ளிவாசல்கள் நல்ல தட்பவெட்பம். பதவி உயர்வோடு அங்கு போன எனக்குப்போட்டியாக அங்குள்ள மற்றொரு அரசுடைமை வங்கியில் இசுலாமியர் , அதுவும் அந்த ஊரைச் சேர்ந்தவரை மேலாளராக நியமித்தார்கள் என்பது எனக்கு ஒரு பெருமை.. என்னோடு போட்டி போட முடியவில்லை என்று அவரே என்னிடம் சொன்னார் –எல்லாப்புகழும் இறைவனுக்கே  
மகளுக்குத் திருமணம் ஆனதும் முதல் பேத்தி பிறந்ததும் ஏறுவாடியில் iஇருந்த போதுதான்.
கோவையில் ஒரு சிறிய அழகிய வீடு .அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்தேன் .முதலில் இருந்த மேலாளருக்கும் எனக்கும் ஏனோ பல    முரண்பாடுகள் .
 அதற்கு அடுத்து வந்த மிகக்கண்டிப்பானவர் என்று சொல்லப்பட்ட மேலாளருக்கும் எனக்கும்  மிகவும் ஒத்துப்போக ஒரு குழுவாகப் பணியாற்றி எனக்குப் பதவி உயர்வும் கிடைத்தது
.கோவையில், அத்தா பணியாற்றியபோது ஏழு எட்டாம் வகுப்புக்கள் படித்தேன்
எனக்கு அதிமாக ஒத்து வராத ஊர்  ஈரோடு. வீடு பார்க்க அழகாக இருந்தாலும் அருகிலிருந்த வாகனப்பட்டறையிலிருந்து வரும் புகையும் வர்ணங்களின் துகள்களும் மூச்சு முட்ட வைக்கும்
சுமுகமில்லாத அக்கம்பக்கம்

நான்கு ஆண்டுகள் மேலாளராக இருந்த ஊர் மங்கலப்பட்டி – இன்றும் மனதில் நிற்கும் பசுமையான வயல்கள், சோளக்கதிர்களின் இனிய மணம்.. சிக்கனத்தின் (கஞ்சத்தனத்தின்) உருவமான நான்  குடியிருந்த வீட்டு  உரிமையாளர்
ஜலந்தர்- குடும்பத்துடன் வட இந்தியாவில் இரண்டு ஆண்டு மன மகிழ்வோடு இருந்த நகரம்
.லவ்லி இனிப்பகம் மிகக்குறைந்த விலையில் சுவையான தரமான இனிப்புகள்,
இடைவெளி இல்லாமல் பிள்ளைகள் படித்த  நல்ல பள்ளிக்கூடம், வசதியான ,விசாலமான தனி வீடு
.குளிர்காலத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகள் சிறிது நேரத்தில் பனி மூட்டத்தில் கலந்து கண்ணுக்குத் தெரியாமல் போவது இன்றும் மனதில் நிற்கிறது

நரைமுடியை கருப்பாக்கி இளமைய மீட்டுத்தந்தது சிவான் (பீகார்) – இங்கு மறக்க முடியாமல் நினைவில் பதிந்து நிற்பது நான் வாங்காமல் விட்டுச்சென்ற ஐம்பது காசைத் திருப்பித்தர தன் தொழிலை விட்டு விட்டு என்னை வெகு தொலைவுக்கு பின் தொடர்ந்து வந்த எலுமிச்சை தேநீர் விற்பனையாளர்  
துறையூர் சிறிய அழகான வசதியான ஊர் .பிள்ளைகளுக்கு விழா வைத்து சுற்றத்தார் நிறைய கலந்து கொண்டு சிறப்பித்தனர் .மேலாளர் பதவி உயர்வு பெற்றதும் இங்குதான்
திருச்சி – வீட்டு உரிமையாளர் தேவர், அவர் துணைவி  ,பிள்ளைகள் எல்லோரும் குடும்பம் போல் மிக நட்புடன் பழகுவார்கள்
 மறக்க முடியாத சுவை மைக்கேல் பனிக்கூழ் (Ice cream)
திரூர் கேரளா வங்கிப்பணியில் முதலில் தமிழ்நாட்டைதாண்டிபோன ஊர் .கடவுளின் சொந்த நாடு என்று கேரள இயற்கை அழகை வர்ணிப்பார்கள் .ஆனால் குட்டா (கூர்க்) அளவுக்கு இது ஒன்றும் அழகாய் இல்லை .அம்மாவின் நினைவு நாளுக்கு சுற்றத்தார் கூடியது மனதில் நிற்கும் ஒரு நிகழ்வு
.மகன் பள்ளிப்படிப்பு துவக்கம் இங்குதான் .முதல் நாள் பள்ளியில் விட அத்தா போனது .ஐயாவும் பேரனும் கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொண்டார்களாம்
திருநெல்வேலி பல வகையிலும் என் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஊர் –அத்தா பணி ஓய்வு, எனது கல்லூரிப்படிப்பு நிறைவு, CECRI . பின்  வங்கிப்பணியில் சேர்ந்தது,, திருமணம் , பிள்ளைகள் பிறப்பு, பதவி உயர்வு , அம்மா மறைவு என பல வண்ண  நினைவுகளின் கலவை
 ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் நான் ஏறுவாடியில் பணியில் இருந்தபோது முதல் பேத்தி பிறந்ததும் இங்குதான்
உடன்குடி –திருநெல்வலியின் நீட்சி – ஓராண்டு அங்கு .நல்ல நண்பர்கள் ,சுவையான வீட்டு உணவு ( ஆச்சி வீட்டு உணவகம்)
வேலூர் சில மாதங்கள் அத்தா பணியாற்றிய ஊர். எனக்கு ஒரு கோடை விடுமுறை அங்கு இனிதே கழிந்தது
பொள்ளாச்சி, - பள்ளிப்படிப்பு  நிறைவு, கல்லூரி வாழ்க்கை , இந்தி எதிர்ப்பு போராட்டம் , அரிசிப்பஞ்சம், தமிழகத்தில்  ஆட்சி மாற்றம் வசதியான பெரிய வீடு
காரைக்குடி – பசுமை நிறைந்த நினைவுகள், துள்ளித்திரியும் பள்ளிப்பருவம்.
.பட்டம் பெற்று பின் CECRI யில் மூன்று மாதம் பயிற்சிப்பணி...மிகவும் பிடித்த வேதியல் ஆராய்ச்சி
.வங்கியில் பணி கிடைத்ததால் அதை விட வேண்டியதாகிவிட்டது
முதன் முதலாய் பெற்றோரை விட்டுப் பிரிந்து திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப் படித்தோம் நானும் என் உடன்பிறப்புகளும்.
அத்தாவுக்கு மதுரையில் குறுகிய காலப்பணி என்பதால் படிப்பைத் தடையில்லாமல் தொடர இந்த ஏற்பாடு ..
 அடுத்து நான் சிவானில் வங்கிப்பணியில் இருந்த ஓராண்டும் அங்கு சரியான படிப்பு வசதி இல்லாததால் துணைவியும் பிள்ளைகளும் திருப்பத்தூரில்
.மீண்டும் ஜலந்தரில் இருந்து மங்கலப்பட்டி மாறுதலில் மகனுக்கு மங்கலப்பட்டிக்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கை முடிந்து விட்டதால் இடம் கிடைக்கவில்லை ஒரு ஆண்டு திருப்பத்தூரில் மாமா வீட்டில் தங்கிப்படிப்பு,.
என்ன இருந்தாலும் சொந்த ஊரில் சுற்றங்களுடன் வாழ்ந்தது ஒரு இனிமையான பொழுதாக இருந்தது  
விழுப்புரம் என்றால் நினைவில் வருபவை  கூலா ஹூப் மிகப்பெரிய நகராட்சிப்பள்ளி, நிறைய ஆங்கிலோ இந்தியர்கள்
சிதம்பரத்தில் வீட்டுக்கு எதிரே ஒரு சிறிய பள்ளியில் படிப்பு (மக்குப்பள்ளிக்கூடம் என்று செல்லப்பெயர் நாங்கள் சூட்டியது)
மிகபெரிய தோட்டத்துடன் பெரிய வீடு, பசு மாடு, நிறைய புறாக்கள் – மேட்டூர்
ஆம்பூர் என்றால் பிரியாணி மணம். எதிர் வீட்டில் மனோரஞ்சிதப்பூ மணம் இன்றும் நெஞ்சில் நிறைகிறது .என் பள்ளிப்பருவம் இங்குதான் துவக்கம். தம்பி பிறந்தது இங்குதான்.
மிக நீண்ட இடைவெளிக்குப்பின்  நான்  வாணியம்பாடியில் வங்கிப்பணியில் இருந்தபோது இரண்டாவது பேத்தி பிறந்தது ஆம்பூர் மருத்துவ மனையில்தான்
பள்ளிக்கு முன் பருவத்தில் இருந்த மாயவரம் என்றால் வீட்டு முன் இருந்த பெரிய வேப்ப மரம்,, மாக்கல் சட்டிகள்,
மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் நிரம்பிய தகர உருளையில் எட்டிப்பார்த்து விழுந்து வயிற்றில் கீறலதான் உடன் நினைவுக்கு வருகிறது
நான் பிறந்தது பெரிய குளத்தில் .கனவு போல் நினைவில் வருவது பரந்து விரிந்த மணற்பரப்புடன் கூடிய ஆற்றங்கரை . அங்கு தொங்கும் ஊஞ்சல்கள் , அவற்றின் அடியில் பள்ளம் இவ்வளவுதான்  
ஏற்கனவே வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் என்ற தலைப்பில் இருந்த ஊர்கள் எல்லாம் பற்றி விரிவாக முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் எழுதி விட்டேன்.
.
பிறகு ஏன் இந்தப்பகுதி என்ற எண்ணம் உங்களைப்போல் எனக்கும் தோன்றாமல் இல்லை . இருந்தாலும் நினைவுகளில் உடனடியாகத் தோன்றியதை மட்டும் அப்படியே பதிவு செய்துவிட்டேன் .

பழைய நினைவுகளில் நீந்திச் செல்வது மனதுக்கு ஒரு சுகம்தானே
.மூளைக்கு வேளை
 இது வரை சரியான விடை யாரும் சொல்லாததால் நானே சொல்லி விடுகிறேன் .
அப்பா அம்மா மகன் மகள் நால்வரும் ஒரு  இருட்டான குகையைக் கடக்க வேண்டும் .. குகை மிகவும் குறுகலானது . இரண்டு பேர் மட்டுமே ஒன்றாகப்ப்போக முடியும் .குகையைக் கடக்க .அப்பாவுக்கு  ஒரு நிமிடம, அம்மாவுக்கு  இரண்டு நிமிடம் மகனுக்கு  நான்கு நிமிடம் மகளுக்கு ஐந்து நிமிடம் பிடிக்கும்.
கையில் இருக்கும் விளக்கு பனிரெண்டு நிமிடங்கள் மட்டுமே எரியும் . அதற்குள் நால்வரும் குகையைக் கடந்து செல்ல வேண்டும்
எப்படி முடியும் ? இதுதான் புதிர்
 சரியான விடை
முதலில் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து குகயைக்ககடக்கிரார்கள் (இரண்டு நி)
அப்பா விளக்குடன் திரும்பி வருகிறார் (ஒரு நி)
மகன் மகள் இருவரும் சேர்ந்து கடக்கிறார்கள் (ஐந்து நி)
அம்மா விளக்குடன் திரும்பி வருகிறார் (இரண்டு நி)
அப்பா அம்மா இருவரும் சேர்ந்து கடகிறார்கள் (இரண்டு நி)
மொத்தம் பன்னிரெண்டு நிமிடம்
அடுத்த புதிர் அடுத்த பகுதியில்

இ(க)டைச்செருகல்
என் உடன் பிறப்புகளும் உற்றார் உறவினர்களும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை , அனுபவங்களை வலைநூலில் பதிவு செய்தால் இளைய தலைமுறைக்கு ஒரு நினைவூட்டுதலாக அமையும் .
காலம் கடக்கும்போது பல நினைவுகள் மறைந்து மறந்து போகின்றன அதற்கு முன்பே பதிவு செய்யத்துவங்கலாமே
பல முறை நான் இதே வேண்டுகோளை முன் வைத்திருக்கிறேன் மீண்டும் நினைவூட்டுகிறேன்

இறைவன் நாடினால்
மீண்டும்
 சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
















Friday, 16 March 2018

Islam and Yoga 33




Islamic Prayer and Yogasanas  5

Remarkable resemblance  between Islamic Prayer and Yogasanas  is obvious .

An Indian Muslim Author
 Ashraf F.Nizami   mentions in his book
 Namaz ,the Yoga of Islam :--
--The  root  meaning of the word  Salat ( Arabic word for Prayer ) is
to bend the lower back

The Persians translated this concept with the word
 Namaz , from a verbal root meaning
 to bow etymologically related to the word 
Namaste in Sanskrit ---

Yogasanas, multitude in number can be classified into a few basic types as

Standing Postures
Spinal Stretches
Inverted Postures
Seated Postures &
Spinal twists

All these are incorporated in Islamic Prayer in a rudimentary and compact form ,.
The sequence of Prayer ensures a thorough al round course of exercises for good health that is easy for everyone to practice

Further details
Next Week Next Part

Share if you like

Monday, 12 March 2018

இசுலாமும் யோகக்கலையும் 33



இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 5


சலாத் என்பது தொழுகையைக்குறிக்கும் அரபுச் சொல்லாகும்.. இந்தச்சொல்லுக்கு மூலப்பொருள் முதுகை வளைத்தல் என்பது.,இதுவே பாரசீக மொழியில் குனிவது என்ற பொருள்படும் நமாசு என்ற . தொழுகையைக்குறிக்கும் சொல்லாக உருமாறி வடமொழியில் நமசுதே  (நமஸ்தே) என்று மாறியதாகக் குறிப்பிடுகிறார் இந்திய இசுலாமிய அறிஞரான அசுரப் ப நிசாமி –நூல் இசுலாத்தின் யோகா()

யோகாசனத்தின் பல நிலைகளை
நிற்கும் நிலை ,
தலைகீழ் நிலை ,
 இருக்கும் நிலை,
முதுகுத்தண்டை இழுத்தல்,,
முதுகுத்தண்டை முறுக்குதல்
என்ற அடிப்படையில் பகுக்கலாம்..

இந்த நிலைகளை எல்லாம் அடிப்படை நிலையில் எளிய சுருக்கமான முறையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தொழுகை தன்னுள் கொண்டுள்ளது.

தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்

பிடித்தால் பகிரவும்