Friday, 9 October 2020

அக்மல்து

 அக்மல்து

குர்ஆனில் இந்தச் சொல் எங்கு வருகிறது?

பொருள் சிறப்பு என்ன


அக்மல்து என்ற சொல்லுக்கு

நான் முழுமை செய்துவிட்டேன்

என்று பொருள்

குர்ஆன் வசனம் 5:3 (அல்மாயிதா)

" இன்று நான் உங்களுக்கு இசுலாமிய மார்க்ததை முழுமை செய்து விட்டேன்"

என்று இறைவன் சொல்கிறான்

 

திருமறையின் இறுதி வசனம் என்று கருதப்படும் இது


 எம்பெருமான் நபி ஸல் அவர்களின் கடைசி ஹஜ் புனிதப் பயணத்தின்போது அருளப்பட்டகாகச் சொல்லப்படுகிறது


முழுமை செய்து விட்டேன் என்ற சுருக்கமான சொற்களுக்கு மிக நீண்ட விளக்கம் உண்டு இறைவன் நாடினால் பின்பு அது பற்றிப் பார்ப்போம்


சரியான விடை அனுப்பிய 

ஜனாப் லியாக்கத் அலி கலிமுல்லா அவர்களுக்கும் ஜனாப் அஜீஸ் வாகிதி அவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்



இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

09102020fri

sherfuddinp.blogdpot.com

sherfuddinp@gmail.com


முகநூலில் தடை செய்யப்பட்டது 


Wednesday, 7 October 2020

சின்னச் சிதறல் அட மாங்கா

 







சின்னச் சிதறல்

 

அட மாங்கா


 டிஸ்கவரி தொலைக்காட்சியில் சில் நாட்கள் முன்பு ஒரு உணவு _


முற்றிலும் மாறுபாடான ஒரு உணவ பற்றிய காட்சியை அரைகுறையாகப் பார்த்தேன்


உடனே இது போன்று பார்த்த படித்த கேள்விப்பட்ட சில வித்தியாசமான உணவு வகைகள் எண்ணத்தில் அலைமோத அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


நாலைந்து பெண்கள் ஒன்றாக

 உட்கார்ந்து கொண்டு பெரிய அரிவாள் மனையில் பெரிய மாங்காயில் அலகுகளை பாதிக்கு மேல் நறுக்கி நிறைய கல் உப்பை அலகுக்கும் கொட்டைக்கும் இடையில் திணித்து சாடியில் போட்டு விடுவார்கள் எண்ணெய் மிளகாய்ப்பொடி எதுவும் இல்லாத ஒரு ஊறுகாய்

இது தான் அட மாங்கா (அடை மாங்காய்?)

உப்பில் ஊறிய மாங்காய் தேன் நிறத்தில் மிகச் சுவையாக இருக்கும்


அடுத்து ஒரு இனிப்பு 

மெல்லிய சிரட்டை உள்ள  தேங்காயின் கண்களில் துளையிட்டு தேனை ஊற்றி துளையை அடைத்து விட்டு தண்ணீரில் வேக வைத்தால் தேன் தேங்காயில் கலந்து மிகச் சுவையாக இருக்குமாம்


மீண்டும் தேங்காய் 

தேனுக்குப் பதில் முட்டை

தேன் ஊற்றியது போல் நாலைந்து முட்டைகளை உடைத்து ஊற்றி துளையை அடைத்து நீரில் வேகவைத்து எடுத்து தேங்காயை கவனமாக உடைத்தால் கிடைப்பது யானை முட்டை


நெய்தல் நில சிறப்பு உணவு ஒன்று

சிவப்பு அரிசி சோறை சுடச்சுட புதிய பனை ஓலையில் போட்டு புத்தம்புது வாவல் மீன் குழம்பை அதில் ஊற்றி பனை ஓலையை மூடி நன்றாகக் குலுக்கி விட்டு கொஞ்ச நேரம் கழித்து திறந்தால் சோறு மணம் மீன்குழம்பு மணம்  பனை ஓலை மணம் எல்லாம் கலந்து நாசிக்கும நாக்குக்கும் விருந்து படைக்கும்

தொட்டுக்கொள்ள புத்தம்புது வஞ்சிர  மீன் வறுவல்

நாக்கு ஊறுகிறதா !!


மக்கி ரொட்டி பஞ்சாப் குளிர்கால சிறப்பு உணவு

மக்காச்சோளத்தில். ரொட்டி

பக்க உணவும் அதே மக்காச்சோளத்தில் குழம்பு போல்.

மேலே அரை சென்டிமீட்டருக்கு வெண்ணெய் மிதக்கும்

மிகச் சுவையாக இருக்கும்


நெல்லை கல்தோசை சொதி கேரள பத்ரி கோழிச்சாறு இன்று நினைத்தாலும் கண்ணில் நீர்வரும் ராஜஸ்தான் மிளகாய் போண்டா ஒரு கிலோ அரிசிக்கு பத்துப் பன்னிரண்டு கிலோ கறி சேர்க்கும் காயல்பட்டினம் பிரியாணி இவற்றைஎல்லாம் மிஞ்சும் எங்கள் ஊர் தாளிச்சோறு பொடிக்கறி ஆணம் இதெல்லாம் பற்றி. ஏற்கனவே எழுதியிருக்கிறேன்


நிறைவாக டிஸ்கவரி தொலைக்காட்சியில் நான் பார்த்த உணவு

மசாலாவில் நன்றாக ஊறிய கறித்துண்டுகள் அரை கிலோ இருக்கும் அதை அப்படியே மூடுவது போல் நாலைந்து புரோட்டாவை வைத்து வாழை இலையில் மடித்து அதற்கு மேல் வெள்ளி இழைத்தாள் (சில்வர் பாயில்)

இதற்கு மேல் பச்சைக்களி மண்ணைப் பூசி கொழுந்து விட்டு எரியும் தீயில் மூன்று மணி நேரம் வேக விட்டு எடுக்கிறார்கள்

சுவை எப்டடியோ செய்முறை கேட்க பார்க்க நன்றாக இருக்கிறது

 

இ(க)டைச்செருகல்


அடமாங்காய் மறந்துபோன ஒன்று என்று நினைத்தேன்..ஆனால் நீர் குழாயில் ( யூ ட்யூப்) நிறைய குறிப்புகள் இருக்கின்றன


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

07102020wed

sherfuddinp.bligspot.com

sherfuddinp@gmail.com


FB

Blocked

அட மாங்கா






Monday, 5 October 2020

Sepsis English

 



Recently I came across a news in print media about a peculiar disease 


IT is a life threatening complication of an infection


The chemicals released into the bloodstream to fight an infection trigger inflammation through out the body  causing failure of multiple organ systems sometimes resulting in death


What is that disease? 




 

SEPSIS is the name of the disease


Former Union Minister Jaswant Singh was being treated for sepsis........Hindu 28092920


Thanks greetings and congratulations to

Mr Panneer 

who responded with right answer


05102020mon

sheruddinp.blogspot.com


Also please support and subscribe my channel


My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA




Saturday, 3 October 2020

தமிழ் மொழி அறிவோம்

நட்சத்திரப்பூக்கள்வ

வண்ணங்கொண்டவெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

எல்லோர் மனதிலும் செவிகளிலும் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்

....... உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பரிததேன்
என அழகிய வரிகள்

இதில் வரும் முதல் சொல் மங்கையா நங்கையா  என்ற ஐயம் ஒரு வழியாக தீர்ந்து நங்கை என்று தெளிவானது

உடனே மனதில் அடுத்த வினா
மங்கை நங்கை இரண்டுக்கும் பொருள் ஒன்றா வேறு வேறா ?

வலை தளத்தில் தேடினால் தலை சுற்றும் அளவுக்கு பல்வேறு தகவல்கள்

சுவையான சிலவற்றை மட்டும் பார்ப்போம்
பெண்ணின் பருவங்களைக் குறிக்கும் ஏழு சொற்களில் ஒன்று மங்கை
12 முதல் 13 வயது வரை மங்கைப் பருவம்
பெண்ணைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருக்கும் மங்கை ஒரு பெயராகவும் பயன்படுகிறது
மங்கை மங்கையர்க்கரசி மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மங்கையர் உலகம்‌  என்று எத்தனை சொற்கள்!

மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம்
அதுவும் நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று கவிஞர் பாடுகிறார்

மேட்டூரில் வந்த மங்கை
மேலேறிச் சென்று விட்டாள் என பிரிவுத் துயரை பாடுகிறான் காதலன்

மங்கை உன்னைத் தொட்டவுடன்
மறைந்து விட்டாலும் என்கிறான் இன்னொரு காதலன்

நங்கை என்ற சொல்லுக்கு மிகப்பல பொருட்கள்

அண்ணியை நங்கையா என்கிறது கொங்கு தமிழ்

நங்கையின் கூந்தலுக்கு நட்சத்திரப்பூப் பிரிக்கிறது கவிஞனின் கற்பனை

நாறு பூ குழல்  நங்கையர் கண்கள் நீர் என்கிறான் கம்பன்

நங்கையின் சோதி முகத்தில் ஞான ஒளியைக் காண்கிறான் பாரதி

கன்னி நல்ல பெண் மருமகள் அண்ணி என பல பொருட்கள் உள்ளன நங்கை என்ற சொல்லுக்கு

இதே சொல்லுக்கு மிக மாறுபாடான ஒரு பொருளையும் அண்மையில் பார்த்தேன் நாகரீகம் கருதி அதை வெளியிடவில்லை

இறைவன் நாடினால் மீண்டும் எப்போதாவது தமிழில் சிந்திப்போம்

03102020sat
sherfuddinp.blogspot.com

Friday, 2 October 2020

“இறைவன் ஏழை “

 இறைவன் ஏழையா?



“இறைவன் ஏழை “

திரு மறை குர்ஆனில் வரும் வசனம் இது


இதற்கு விளக்கம் என்ன ?(இடம் சுட்டிப் பொருள் விளக்கவும் )


இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்


01102020thu


அகில உலகங்களையும் படைத்து பராமரித்து படியளிப்பவன் அந்த ஏக இறைவன்


வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன

அள்ளிக்கொடுத்தாலும் கொட்டிக் கொடுத்தாலும் துளியும் குறையாத ஞானத்தையும் செல்வத்தையும் உடைய அந்த


 இறைவன் ஏழை 

நாங்கள் செல்வந்தர்கள் என்று கிண்டலாகப் பேசுகின்றனர் சிலர்


இறைவன் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான்


அவர்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பின் தண்டனை நிச்சயம் என்று எச்சரிக்கிறான 

குர்ஆன் 3:181


இப்படி அவர்களை பேசத் தூண்டியது எது?


உங்களில் எனக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்? 

என்று இறைவன் மக்களைப் பார்த்துக் கேட்பதாய் ஒரு வசனம்  குர்ஆனில் வருகிறது (2 :245)


மக்கள் செய்யும் தான தருமங்களை இறைவனுக்குக் கொடுக்கும் அழகிய கடன் என்று குறிப்பிட்டு அந்தக் கடனை பல மடங்காக திருப்பி அளிப்பதாய் இறைவன் வாக்குறுதி கொடுக்கிறான் இது குர்ஆனில் பல இடங்களில் வரும் செய்தி


இதைத்தான் 

இறைவன் ஏழையாகி விட்டான் நம்மிடம் கடன் கேட்கிறான் என்று கிண்டல் செய்து பேசுகிறார்கள் குழப்ப வாதிகள்


அழகிய கடன் கொடுப்பவர்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி வைப்பானாக

சரியான விடையை எழுதிய ஐ. எஸ்.பீர் முகமதுக்கு நன்றி பாராட்டுகள் வாழ்த்துகள் 

02102020fri

sherfuddin.blogspot.com 


Also please support and subscribe my channel

My channel link : 

https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA







Thursday, 1 October 2020

“இறைவன் ஏழை “

 





“இறைவன் ஏழை “

திரு மறை குர்ஆனில் வரும் வசனம் இது

இதற்கு விளக்கம் என்ன ?(இடம் சுட்டிப் பொருள் விளக்கவும் )

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

01102020thu

sherfuddinp.blogspot.com