Saturday, 8 July 2023

தமிழ் (மொழி)அறிவோம் எடுக்கவோ /கோக்கவோ முத்தைத்தரு பத்தித் திருநகையென”

 





தமிழ் (மொழி)அறிவோம்

08072023 சனிகிழமை (இ)
எடுக்கவோ கோக்கவோ
கர்ணன் படத்தில் வரும்இலக்கியத் தரம் வாய்ந்த இந்த வரி துரியோதனின் உயர் பண்புகளை – நண்பனின் மேலும் தன துணைவியின் மீதும் கொண்டுள்ள 100% நம்பிக்கையை --வெளிப்ப்படுத்துகின்றது
இந்தியன் படத்தில் இதே வரி ஒரு நகைச்சுவை காட்சியில் வரும்
அதுபோல
“முத்தைத்தரு பத்தித் திருநகையென”
என்ற வரி –
நமக்கு திருப்புகழ், அருணகிரிநாதர் , திரைப் பாடகர் டி எம் சௌந்தரராஜனை நினைவூட்டும் இந்த வரி--
வேறொரு திரைப்பாடலில் அதே பாடகர் குரலில் இடம் பெற்றிருக்கிறது (நகைச் சுவையாக அல்ல )
அது என்ன பாடல் ? என்ன படம் ?
விடை
படம் அம்பிகாபதி
பாடல் வடிவேலும் மயிலும் துணை
கம்பம் மகன் அம்பிகாபதி
சோழமன்னன் மகள் அமராவதி
இருவருக்குமிடையே பாசம் நேசம் காதல்
வழக்கம்போல் மன்னன் எதிர்ப்பு
இன்பச் சுவை கலக்காமல் தொடர்ந்து நூறு பாடல்கள் இறைவன் மீது ஒரே முறையில் அம்பிகாதி பாடினால் அமராவதியை மணமுடிப்பது பற்றிப் பார்க்கலாம் என மன்னன் ஆணை
அதை ஏற்று அரசவையில் 100 பக்திப்பாடல்களை தொடர்ந்து அம்பிகாபதி பாட திரை மறைவில் இருந்து அமராவதி எண்ணிக் கொண்டிருக்க இறைவணக்கப் பாடலை தவ்றாக எண்ணிக்கையில் சேர்க்க 100 பாடிவிட்டான் என்ற களிப்பில் அமராவதி திரை மறைவை விட்டு வெளியே வர அம்பிகாபதி தன்னை மறந்து இன்பச் சுவையில் பாட
போட்டியில் தோற்றதால் கம்பனும் அம்பிகாபதி யும் சோழ நாட்டை விட்டு வெளியேற்றப் படு கிறார்கள்
இந்தத் துன்பியல் காதல் கதை உண்மையா வெறும் கற்பனையா என்பதைத் தாண்டி மிக அருமையான இலக்கியத் தரப் பாடல்கள் இதில் கிடைக்கின்றன அதில் ஒன்றுதான்
முத்தைத்தரு பத்தித் திருநகையென”
என்ற வரி வரும் பாடல்
வடிவேலும் மயிலும் துணை
என்று துவங்கும் சற்று நீளமான அழகிய பாடல்
அதில் ஒரு பகுதி மட்டும் :
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
---முத்தைத்தரு பத்தித் திருநகையென----
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்
அமராவதியைப் பார்த்ததும் பாடிய இன்பச் சுவைப்பாடல்
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...
அம்பிகாபதி - அமராவதி கதையே கற்பனை என்பதால் இப்பாடலை எழுதியவர் யார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
இப்பாடல் ஒரு அருமையான கட்டளைக் கலித்துறை ஆகும்.
என்பது முகநூலில் பார்த்தது
(அப்படி என்றால் என்ன என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும் )
இந்த சற்றே சரிந்த பாடலை இணையத்தில் தேடும்போது கண்ணில் பட்டதுதான்
முத்தைத்திரு வரி உள்ள வடிவேலும் பாடல்
இது சினமாப் புதிர் என்று கருத்துத் தெரிவித்த சகோ தல்லத்
.
முயற்சி செய்த சகோ கணேச சுப்ரமணியம், சிராஜுதீன் அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௭௦௭௨௦௨௩
08072023 சனிக்கிழமை (இ)
சர்புதீன் பீ

Thursday, 6 July 2023

திருமறை குர்ஆன் 4:142

 





திருமறை குர்ஆன் 4:142

07072023 வெள்ளி
“-----------மிகக் குறைந்த அளவேயன்றி அவர்கள் இறைவனை நினைவு கூர்வதில்லை”
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக –
விடை
சுராஹ் அன்னிசா (4) வசனம் 142
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் இறைவனை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்;
தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் –
மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்);
இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் இறைவனை நினைவு கூர்வதில்லை. (4:142.)
தொடர்ந்து
“இறை நம்பிக்கைக்கும் , நம்பிக்கை இன்மைக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள --------.” (4:143.)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா லெப்பை (Khatheeb Mamuna Lebbai )
முதல் சரியான விடை
ஷர்மதா
ஹசன் அலி
விளக்கம் ;
பெருமானார் நபி ஸல் அவர்கள் காலத்தில் ஐந்து வேளைத் தொழுகையும் பள்ளிவாசலில் கூட்டாக தொழுவது கட்டாயமாக ,முஸ்லிம் என்பதற்கு ஒரு அடையாளமாக இருந்தது
தொடர்ந்து கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டதாகக் கருதப்படும்
உண்மையாளர்கள் நேரத்தே பள்ளிக்கு வந்து தொழுகையில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்வார்கள்
அப்படி இல்லாதவர்களுக்கு தொழுகை ஒரு பெரிய பாரமாக
தண்டனையாக் இருந்தது
வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு வந்து தொழுகை நிறைவேறிய அடுத்த நொடி ,விடுதலை அடைத்தது போல் துரிதமாக பள்ளியை விட்டு வெளியேறி விடுவார்கள்
இறைவனை வஞ்சிக்க எண்ணும் அவர்களை அவன் வஞ்சித்துவிடுவான்;
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
18 துல்ஹஜ் (12) 1444
07072023 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 4 July 2023

இலக்கணம் மாறுதோ

 




இலக்கணம் மாறுதோ

0507 2023 புதன்
புறாக்கள் பற்றிய செய்தி ஓன்று மங்கலப்பட்டி வங்கிக் கிளையில் பணியில் இருந்தபோது காதில் விழுந்தது
அந்த ஊரில் விவசாயி ஒருவர் தன் வீட்டை விற்று விட்டு வேறு வீட்டுக்கு குடி போனார்
அவர் புது வீடு குடி போக இரண்டு நாள் இருக்கையில் அவர் வளரத்த நூற்றுக் கணக்கான புறாக்கள் அந்தப் புதுவீட்டுக்குப் பறந்து போய் விட்டன
புறாக்களுக்கு சொன்னது யார் ? புது வீட்டைக் காண்பித்த்து யார் ?
இன்னொரு செய்தி நான் நெல்லை பேட்டையில் கேள்விப் பட்டது
வெளியூரில் வேலை பார்த்த ஒருவர் வார விடுமுறையில் வீட்டுக்கு வருவார்
அவர் வளர்த்த நாய் ஓன்று அவர் வரும் நேரத்துக்கு சரியாக் பேருந்து நிறுத்ததிற்கு வந்து வீடும்
பல ஆண்டுகளாக நடந்த நிகழ்வ இது
எதிர்பாராத விதமாக வெளியூரில் அவர் மரணித்து விட, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்
அதலிருந்து அந்த நாய் பேருந்து நிறுத்தத்துக்குப் போவதில்லை
இந்த இரண்டுமே அரிய நிகழ்வுகளாகப் பேசப்பட்டன
அண்மையில் செய்தித் தாள்/ தொலைகாட்சியில் கண்ட ஒரீரு நிகழ்வுகள் இன்னும் வியப்பானவை
இரும்பை எலி தின்று விட்டதாக சொன்னவர் பற்றி தெனாலி ராமன் கதையில் படித்திருக்கிறோம்
ஆனால்
காவல் நிலையத்தில் “பாதுகாப்பாக” வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டதாம்
சரி எலிகளுக்கும் மனிதர்களைப்போல் கஞ்சா மயக்கம் தேவை போலும் என்று சொல்லிக்கொள்ளலாம்
ஆனால் பணத் தேவை என்றால் என்ன சொல்வது !
ஒரு பழக் கடையில் கடையைப் பூட்டும்போது கல்லாவில் வைத்து விட்டுப் போகும் பணம் காணாமல் போகிறது
தொகை சிறியதுதான் –
ஆனால் இது தொடர்கதை ஆகி விட்டது
மேலும் பழம் எதுவும் திருடு போகவில்லை , பூட்டை உடைத்து யாரும் உள்ளே வந்தது போலும் தெரியவில்லை
என்னதான் நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கண்காணிப்பு காமிராவை நிறுவுகிறார் கடைக்காரர்
நம்ப முடியாத காட்சி ஓன்று அதில் பதிவாகி இருக்கிறது
ஒரு எலி வந்து கல்லாப்பெட்டியை (ஒரு இழுப்பறை தான் கல்லாபெட்டி ) அலுங்காமல் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் சேர்க்கிறது
அந்த இடத்தில் பல நாட்களாக சேர்த்த பணம் இருக்கிறது
வியப்புக்கு மேல் வியப்பு ---எலியின் பல் பட்டு கிழிந்து விடாமல் பணத்தை கவனமாகக் கையாள்கிறது
கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தொடர்ந்த்து சாப்பிட பணம் தேவைப்படுமோ ?
அடுத்து மகிழ்ச்சியும் வருத்தமும் தரும் ஒரு செய்தி
யானை பற்றி
கோவை அருகில் துணைவன், துணைவி ஒரு குழந்தை என ஒரு சிறு குடும்பம்
கோவிலுக்கு அருகில் போகும்போது எதிரே ஒரு யானை வருகிறது
யானையைப் பார்த்த அதிர்ச்சியில் பெண் ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார்
குழந்தை அச்சத்தில் அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறது
ஆணை நோக்கி வந்த யானை குழந்தையை தன் துதிக்கையால் கீழே இறக்கி விட்டு விட்டு ஆணை மட்டும்
மிதித்துக் கொன்று விடுகிறது
இதற்கெல்லாம் என்ன விளக்கம் சொல்வது ?
நிறைவு செய்யுமுன் மகிழ்ச்சியான செய்திகளைப்ப் பார்ப்போம்
கோயில் திருவிழாக்களில் , திருமண ஊர்வலங்களில் குதிரை நடனமாடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை
அவை நாட்டியக் குதிரை என்றே சொல்லப் படுகின்றன
(குதிரை நடனபுரம் என்றே ஊர் ஓன்று இருப்பதாய் ஒரு மங்கலான நினைவு )
ஆனால் காவல் துறைக் குதிரை ஓன்று காவல் பணிக்காக சென்ற இடத்தில் அருகில் உள்ள கோயிலில் ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கேற்ப தலையை ஆட்டி ரசித்தது ஒரு அண்மை நிகழ்வு
குரங்கு நாய்குட்டியை தூக்கிக் கொண்டு போய் கொஞ்சி விளையாடி முத்தம் கொடுத்து தலையில் பேன் பார்ப்பது போல் பாவனை செய்வது இன்னொரு அண்மைச் செய்தி
செயற்கை நுண்ணறிவை பெர்ய அளவில் வளர்க்க மனித முயற்சி ஒருபுறம்
இருக்கும் இயற்கை அறிவு அதீதமாக வளரும் நிகழ்வு இன்னொரு புறம்
இயற்கையும் செயற்கையும் போட்டிபோடும் இந்தப் பயணத்தில் எவரை எவர் வெல்லுவார் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
05072023 புதன்
சர்புதீன் பீ

Monday, 3 July 2023

நடந்தது என்ன ? பகுதி 2 நிறைவுப் பகுதி





 நடந்தது என்ன ? பகுதி 2

நிறைவுப் பகுதி
04072023 செவ்வாய்
ஒரு தயக்கம்
இந்தப்பதிவு தேவையா என்று
காரணம் கொஞ்சம் (கொஞ்சம்தான் )
A பதிவு
இதுவரை இல்லாதது ஓன்று
இருந்தாலும் வகுப்புகளில் பல பேச்சாளர்கள்
தகவல் பரிமாற்றம் (Communication ) என்பதை தெளிவாக விளக்க இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள்
நகைச்சுவைத் துணுக்காகவும் வந்திருக்கிறது
நம்மில் எல்லோரும் Adults தான்
எனவே புரிந்து கொண்டு அன்னப்பறவை போல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்
(ப்பூ இதற்குத்தான் இவ்வளவு தயக்கமா என்ற ஒரு கருத்தும் வந்தாலும் வரலாம் )
போதும் முன்னுரை
இனி பதிவு
காலை மணி ஒன்பதுக்குள் இருக்கும்
அந்த மருத்துவ் மனைக்கு ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள்
ஆணின் தலையில் பெரிய கட்டு
கட்டை மீறி கசியும் குருதி
மருத்துவத்தை துவங்கியபடி கேட்கிறார் மருத்துவர் “என்ன ஆச்சு “
பெண் ;” ஒன்றுமில்லை டாக்டர் வீட்டுக்குளேயே சரியாக பார்க்து கவனமாக நடக்காததால் தவறி விழுந்து விட்டார் “
மரு : “ இல்லையே ஒரு மரகட்டையால் பலமாகத் தாக்கியது போல் தெரிகிறதே “
பெண் :? ஆம் டாக்டர் அவர் விழுந்த வேகத்தில் என் கையில் இருந்த பூரிகட்டையில் நன்றாக மோதிக் கொண்டார்--------“
புரிந்து கொண்ட டாக்டர் மருத்துவத்தைத் தொடர்கிறார்
காலை மணி ஏழரை
அதே ஆணும் பெண்ணும் வீட்டில்
ராஜா, ராதா என்று பெயர் வைத்துக்கொள்வோம்
ராஜாவுக்கு காபி கொடுத்து விட்டு ராதா கொஞ்சம் தயங்கி நிற்கிறார்
அன்று விடுமுறை நாள்
எனவே வழக்கமான காலை பரபரப்பு இல்லை
என்ன ராதா என்பது போல் தலை அசைக்கிறார்
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் “
“ அதுதான் பத்து வருஷமா பேசிக்கிட்டுத்தானேஇருக்கோம் இப்ப என்ன தயக்கம் - வா உட்கார் நிதானமாகச் சொல் “
“ ஒன்னுமில்லே எதிர் வீட்டில் குடி வந்திருப்பவர்கள் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள்
அழகான ஜோடி “
“ எனக்கு அதெல்லாம் பார்க்கும் வழக்கம் கிடயாது
சரி அதில் உனக்கென்ன பிரச்சினை ?”
“ ஒண்ணுமில்லை -------------
அவர் தினமும் ஆபிசுக்குப் போகும்போது அந்தப் பெண்ணை அன்பாக கட்டித் தழுவி விட்டுப் போகிறார்
அது போல நீங்களும் ---------“
இதற்கு என்ன பதில்?
உங்கள் ஊகம் என்ன ?
ராதா எதிர் பார்த்த பதில் என்ன ?
ராஜா சொன்னது என்ன ?
பலரும் இந்தக் கதையை படிதிருக்கலாம்
இல்லாவிட்டாலும் எளிதான வினா ,விடைதான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுபவர்கள்
சகோ
நெய்வேலி ராஜா பகதுர்கான்
முதல் சரியான விடை
அவர் அனுப்பிய விடை
---தன்னிடம் தன் கணவன் அதைப் போல நெருக்கமாக இருக்க வேண்டும் என மனைவி ஆசைப்பட ...மனைவி கையில் இருந்த பூரிக்கட்டையில் மோதி இரத்தக் காயம் ஏற்படக் காரணமான கணவனின் பதில்..
" எனக்கும் ஆசையாத்தான் இருக்கு..ஆனா அதுக்கு அந்தப் பொண்ணும் அவ கணவனும் சம்மதிக்கனுமே ! "
( இதை ஏதோ ஒரு திரை நகைச்சுவைக் காட்சியில் எப்போதோ கேட்ட மாதிரி இருக்கு ! )----
ஜெயராம கிருஷ்ணன்
முயற்சித்த சகோ அஷ்ரப் ஹமீதாவுக்கு நன்றி
பூரிக்கட்டை குறிப்பு ஓன்று போதும் சரியான விடை காண
இருந்தும் நிறைய விடைகள் வரவில்லை
சரி communication இதில் எங்கு வருகிறது ?
தகவல் பரிமாற்றம் ( சுருக்கமாக த ப ) எனும் communication
- உலகம் இதிலே அடங்குது , இது இல்லாமல் உலகம் இயங்காது
வீட்டிலே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது முதல் இறைவன் இறை தூதருக்கு அனுப்பும் வஹி வரை அனைத்தும த ப தான்
மேலாண்மை படிப்பில் மிக முக்கியமான இது பற்றி நிறையாவே சொல்லலாம்
இப்போது சுருக்கமாக எல்லோருக்கும் தெரிந்த புரிந்த கட்செவி எனப்படும் what sap ஐ எடுத்துக்காட்டாக வைத்து ஒரு விளக்கம்
A என்பவர் B என்பவருக்கு தனக்கு உடனடியாக சற்று பணம் தேவை , அனுப்பி வை என்று செய்தி அனுப்புகிறார்
இரண்டு பக்கமும் கைபேசி, இணைப்பு கோபுரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் A யின் செய்தி B யின் கைபேசிக்குப் போய் சேர்ந்து விடும்
B செய்தியைத் திறந்தால் அவர் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒரு நீல நிறக்கோடு Blue Tick வந்து விடும்
B அதைப் படிக்க வேண்டும்,
படித்தது அவர் மனதில் பதிய வேண்டும் , புரிந்து கொள்ள வேண்டும்
புரிந்து கொண்டதன் அறிகுறியாக ஓன்று அவர் பணம் அனுப்ப வேண்டும்
அல்லது இன்ன காரணத்தால் கொடுக்க முடியவில்லை என்று Aக்கு B தகவல் தெரிவிக்கவேண்டும்
இப்படிச் செய்தால்தான் த் ப முழுமை பெறுகிறது
இதில் ஏதாவது ஒரு நிலையில் தடங்கள் ஏற்பட்டாலும் செய்தி முழுமை அடையாது
ராதா ராஜாவிடம் சொன்னது ஒரு சிறிய எளிய செய்திதான்
நேரடியாக இருவரும் அருகிலிருந்து பேசிக்கொள்வதால் ராஜாவுக்குக் காதில் தெளிவாக விழுந்திருக்கும்
ஆனால் ராஜா மனதில் வேறு ஒரு கற்பனை, காட்சி, ஆசை
எனவே செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதனால்
த ப முழுமை அடையாமல் தடை பட்டு விட்டது
விளைவு ------தலையில் பெருங்காயம் ------ மருத்துவ மனை
கழுத்தில் சுளுக்குக்கு வைத்தியர்
“படியில் எண்ணெய் தடவி தலை வைத்துப் படுங்கள்”
என்று சொன்னதில்
அளக்கும் படிக்குப் பதில் வாசல் படியில் எண்ணெய் தடவி வீட்டில் உள்ளவர்கள் வழுக்கி விழுந்தது இன்னொரு எடுத்துக்காட்டு
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
04 072023 செவ்வாய்
சர்புதீன் பீ

Sunday, 2 July 2023

நடந்தது என்ன ?








 நடந்தது என்ன ?

03072023 திங்கள்
ஒரு தயக்கம்
இந்தப்பதிவு தேவையா என்று
காரணம் கொஞ்சம் (கொஞ்சம்தான் )
A பதிவு
இதுவரை இல்லாதது ஓன்று
இருந்தாலும் வகுப்புகளில் பல பேச்சாளர்கள்
தகவல் பரிமாற்றம் (Communication ) என்பதை தெளிவாக விளக்க இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள்
நகைச்சுவைத் துணுக்காகவும் வந்திருக்கிறது
நம்மில் எல்லோரும் Adults தான்
எனவே புரிந்து கொண்டு அன்னப்பறவை போல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்
(ப்பூ இதற்குத்தான் இவ்வளவு தயக்கமா என்ற ஒரு கருத்தும் வந்தாலும் வரலாம் )
போதும் முன்னுரை
இனி பதிவு
காளை மணி ஒன்பதுக்குள் இருக்கும்
அந்த மருத்துவ் மனைக்கு ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள்
ஆணின் தலையில் பெரிய கட்டு
கட்டை மீறி கசியும் குருதி
மருத்துவத்தை துவங்கியபடி கேட்கிறார் மருத்துவர் “என்ன ஆச்சு “
பெண் ;” ஒன்றுமில்லை டாக்டர் வீட்டுக்குளேயே சரியாக பார்க்து கவனமாக நடக்காததால் தவறி விழுந்து விட்டார் “
மரு : “ இல்லையே ஒரு மரகட்டையால் பலமாகத் தாக்கியது போல் தெரிகிறதே “
பெண் :? ஆம் டாக்டர் அவர் விழுந்த வேகத்தில் என் கையில் இருந்த பூரிகட்டையில் நன்றாக மோதிக் கொண்டார்--------“
புரிந்து கொண்ட டாக்டர் மருத்துவத்தைத் தொடர்கிறார்
காலை மணி ஏழரை
அதே ஆணும் பெண்ணும் வீட்டில்
ராஜா, ராதா என்று பெயர் வைத்துக்கொள்வோம்
ராஜாவுக்கு காபி கொடுத்து விட்டு ராதா கொஞ்சம் தயங்கி நிற்கிறார்
அன்று விடுமுறை நாள்
எனவே வழக்கமான காலை பரபரப்பு இல்லை
என்ன ராதா என்பது போல் தலை அசைக்கிறார்
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் “
“ அதுதான் பத்து வருஷமா பெசிக்கிட்டுத்தானேஇருக்கோம் இப்ப என்ன தயக்கம் - வா உட்கார் நிதானமாகச் சொல் “
“ ஒன்னுமில்லே எதிர் வீட்டில் குடி வந்திருப்பவர்கள் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள்
அழகான ஜோடி “
“ எனக்கு அதெல்லாம் பார்க்கும் வழக்கம் கிடயாது
சரி அதில் உனக்கென்ன பிரச்சினை ?”
“ ஒண்ணுமில்லை -------------
அவர் தினமும் ஆபிசுக்குப் போகும்போது அந்தப் பெண்ணை அன்பாக கட்டித் தழுவி விட்டுப் போகிறார்
அது போல நீங்களும் ---------“
இதற்கு என்ன பதில்?
உங்கள் ஊகம் என்ன ?
ராதா எதிர் பார்த்த பதில் என்ன ?
ராஜா சொன்னது என்ன ?
பலரும் இந்தக் கதையை படிதிருக்கலாம்
இல்லாவிட்டாலும் எளிதான வினா ,விடைதான் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
03072023 திங்கள்
சர்புதீன் பீ

Like
Comment
Share

மாலை நேர உணவகம் பகுதி 3 நிறைவுப் பகுதி விக்கல்






 மாலை நேர உணவகம் பகுதி 3

நிறைவுப் பகுதி விக்கல்
02 07 2023 ஞாயிறு
உங்கள் கருத்துகள் , அவை சொல்லும் செய்திகளை
நேற்றுப் பார்த்தோம்
இனி
மற்றவர்கள் போல் அந்தபெண்ணும் வந்த இளைஞனை முன்பின் பார்த்தது கிடையாது தெரியவும் தெரியாது
இருவரும் பேசிக்கொண்டது மிகக் குறைந்த நேரமே
வந்தவர் பேச முடியாமல் விக் விக் என்று விக்கிக் கொண்டிருந்தார்
அச்சுறுத்தினால் விக்கல் நின்று விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறார் அந்தப்பெண்
அதனால் வந்தவரின் விக்கலை நிறுத்தும் நல்ல நோக்கத்தோடு துப்பாக்கியை எடுத்து நீட்டியிருக்கிறார் அதில் தோட்டா இருப்பது அவருக்குத் தெரியாது இன்னும் சொல்லப்போனால் அது ஒரு பொம்மைத்
துப்பாக்கி என்றுதான் நினைத்திருந்தார்
தெளிவான குறிப்புகள் இல்லாததால் சரியான விடை கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது என்ற ஒரு சிறு மனக்குறை பலருக்கும் இருக்கலாம் “
இது ஒரு உளவியல் புதிர்
சரியான விடை அந்தப் பெண்ணுக்கும் ஏற்கனவே இந்தப் புதிரை படித்தவர்களுக்கும் மட்டுமே தெரியும் “
என்று முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்
PCN என்பதை விளக்க நல்ல ஒரு எடுத்துக்காட்டு இது , மனதில் எளிதில் பதியும் எடுதுக்காட்டு
இந்தப்பதிவின் நோக்கம் சரியான விடை காண்பது அல்ல
எந்த் விதக் குறிப்பும் இல்லாமல் எப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்து விடுகிறோம் !
ஐந்தல்ல , ஐமபது விடைகள் வந்தாலும் இதே போலத்தான் இருக்கும்
கருத்துகளில் சொல் பயன்பாட்டைப் பாருங்கள்
அங்கு வந்த அவள் கணவன் அவளிடம் பணம் கேட்டு நச்சரிகிரான்
ஒரு தலை மறைவு குற்றவாளி,
கொடுர குற்றவாளி
கேவலமாகப் பேசுகிறான்
அவதூறாக
பேசியிருக்க வேண்டும்.
தாயின் கணவனின் தகாத நடவடிக்கையினால் தான்.இங்கும் இது தொடரும் பொழுது,
who might have threatened her of harm and hurt to herself and/or her family that could be beyond repair.
இது மனித மனதின் வலிமை / வலிமை இன்மை
நமக்குத் தெரியாத நம்மைப்பற்றிய செய்திகளை உளவியலில் படிக்குபோது ஒப்புக் கொள்ளமுடியாமலும் , வியப்பாகவும் இருக்கும்
எடுத்துக்காட்டாக ஒன்றே ஓன்று
பாலியல் உணர்வு குழந்தைப் (infant stage ) பருவத்தில் வந்து விடுகிறது , அதன் வெளிப்பாடுதான் விரல் சூப்புவது என்கிறது உளவியல்
நாம் ஒப்புகொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை என்கிறார்கள்
முன்பே இந்தப் புதிரை படித்திருந்த சகோ ஆ ரா விஸ்வநாதன் அனுப்பிய பதிவுக்கு நன்றி
“அந்த மனிதர் விக்கல் வந்து கஷ்டம் படுகிறார் அதை தீர்க்க அந்த பெண் துப்பாக்கி கொண்டு பயமுறுத்தி விக்கல் சரி செய்ய நினைத்து அவரை பயமுறுத்தி விக்கல் சரி செய்ய நினைக்கும் போது எதிர்பாராத விதமாக சுட்டு பயமுறுத்தி விக்கலை சரி செய்யும் போதுஅவர் இறந்துவிட்டார். எனவே அவளும் மயங்கி விழுகிறாள்”
பங்கெடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
02 07 2023 ஞாயிறு
சர்புதீன் பீ