Saturday, 10 February 2024

தமிழ் (மொழி) அறிவோம் வெங்காய சருகு சேலை 11022024 ஞாயிறு





 தமிழ் (மொழி) அறிவோம்

வெங்காய சருகு சேலை
11022024 ஞாயிறு
படத்தில் உள்ளது என்ன என்று எல்லோருக்கும் தெரியும் –வெங்காயம்
அதன் பயன்கள் .மருத்துவ குணங்கள் சமையலில் அதன் பங்களிப்பு இதெல்லாம் பற்றி இப்போது பார்க்கப் போவதில்லை
ஒரு சொல்லாக பலராலும் பலவகையிலும் பயன்பட்ட அந்தப் பெயர் ஒரு
துணியின் பெயரிலும் இடம் பெற்றது
அது என்ன ?
எளிய வினா
குறிப்பாக 1940-1950 குழந்தைகளுக்கு நினைவில் நிற்கும் பெயர்
விடை
“வெங்காய சருகு சேலை “
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஜோதி –முதல் சரியான விடை
ஹசன் அலி
சிவசுப்பிரமணியன் &
ராஜேந்திரன்
முயற்சித்த சகோ ஷண்முக சுந்தரி, நஸ் ரீன் , ராஜாத்தி , ஷர்மதா
,பன்னீர் மீ மு இஸ்மாயில் அனைவருக்கும் நன்றி
விளக்கம்
எந்த ஆண்டு என்று நினைவில்லை
ஆனால் டெரிலின், டெரிகாட்டன் , நைலான்,நைலக்ஸ் செயற்கை இழைத்துணிகள் மிகப் பரவலாக விற்கப்பட்ட காலம்
இதில் நைலான் என்பது மிக மெல்லியதாக
வெங்காய சருகு (தோல்) போல் இருக்கும்
எனவே காரணப் பெயராக நைலான் சேலைகள்
“வெங்காய சருகு சேலைகள்” என்று குறிப்பிடப் பட்டன
இந்த அழகிய பொருத்தமான பெயரைச் சூட்டியது
“தினத்தந்தி” என்கிறார்கள்
(சதக் சதக் , பரபரப்பு செய்தி போன்ற பல சொற்கள் இந்த செய்தித்தாளின் பங்களிப்பு என்கிறார்கள்
“ஆலிங்கானம் “ என்ற சொல்லை “கட்டித் தழுவுதல் “ என்று மாற்றியதும் இதே தி தந்திதானாம் )
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௧௧௧௦௨௨௦௨௪
11022024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 8 February 2024

 


உயிர் உள்ளவரை துள்ளித் திரிந்து

உவமை ஆகினேன் அழகிய கண்களுக்கு

உயிருள்ளபோதும்  உயிர் போய்

உலர்ந்த பின்னும் சுவையான

உணவாகினேன் உங்களுக்கு எனவே

உங்களை விட உயர்ந்தவன் நான்

(இது கருவாட்டுக் கவிதை )


090202024

திருமறை குரான் 4:153, 2:55 09022024 வெள்ளி

 t



திருமறை குரான்

4:153, 2:55
09022024 வெள்ளி
-“------எங்களுக்கு ஏக இறைவனை –அல்லாஹ்வை—நேரடியாகக் காட்டுங்கள்------” எனக் கூறினர்; -
-குரானில் எந்த வசனத்தில் வருவது இது
விடை
சுராஹ் 4 அந்நிஸா (பெண்கள் ) வசனம் 153 &
2 (அல் பக்றா ) மாடு வசனம்55
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு இறைவனை-- அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் –முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
ஷர்மதா
நஜிமுல்லா அப்துல் காதர்
சலீமா பானு &
ஹபீபுர்ரஹ்மான்
முயற்சித்த சகோ மீ மு இஸ்மாயிலுக்கு நன்றி
விளக்கம்
மதீனத்து யூதர்கள் தாங்கள் நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் ஓன்று வானில் இருந்து புனித நூல் இறங்குவதை அவர்கள் காண வேண்டும்
அல்லது
யூதர்கள் ஒவ்வொருவருக்கும் இறைவன் தனியாக நபி பற்றி செய்தி அனுப்பவேண்டும்
என்று தொடரந்து வலியுறுத்தி வந்தனர்
தெரிந்தே தவறு செய்யும் அவர்கள் இதை விட பெரிய கோரிக்கையும்வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த வசனம் சொல்கிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
28 ரஜப் (7) 1445
09022024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 6 February 2024

சொந்த ஊர் 12 வாழ நினைத்தால்............------ 07 02 2024 புதன்




 சொந்த ஊர் 12

வாழ நினைத்தால்............------
07 02 2024 புதன்
சொந்த ஊர் பல வகையிலும் சிறந்த ஒரு சு(சி)ற்றுலா தலம் என்பதை முன்பொரு பதிவில் பார்த்தோம்
சு(சி)ற்றுலா சரி . சில நாட்களில் திரும்பி விடுவோம்
அங்கேயே தங்கி வாழ முடியுமா ?
முடியும் என்பது என் கருத்து
குறிப்பாக பணி நிறைவு செய்து ஓய்வூதியத்தில் நிம்மதியாக வாழ்வை அனுபவிப்பவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாழும் இடமாகும் இந்த ஊர்
என்ன இருந்தாலும் சென்னை போல வசதி குறிப்பாக மருத்துவ வசதி இங்கெல்லாம் கிடைக்காதே என்பீர்கள்
முற்றிலும் உண்மை . தமிழ் நாட்டில், ஏன் நாடு என்ற அளவில் பார்த்தால் கூட
சென்னை மிகச் சிறந்த நகரமாக வளர்ந்து வருவதில் நம் எல்லோருக்கும் பெருமைதான்
அதுவும் மருத்தவ வசதியில் உலக அளவில் புகழ் பெற்றது சென்னை
வட மாநிலங்கள், சவூதி போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் மருத்துவம் பார்க்க சென்னை வருகிறார்கள்
அதை விட்டு ஒரு சிற்றூருக்கு வருவது எப்படிஅதுவும் முதுமையில் என்பது ஒரு நல்ல கேள்வி
சென்னை வளர்ச்சி அளவுக்கு மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
அதன் விளைவாக ஊருக்குள் பயணம் மிகச் சிரமமான் ,நேரம் பிடிக்கும் செயலாகி விட்டது
வடபழனி கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு நடந்து பத்து மணித் துளிகளில் போய் விடலாம் – நடக்க இடம் கிடைத்தால்
வண்டியில் போகும்போது, முப்பது ,நாற்பது மணித்துளிகள் வரை ஆகிறது
தி நகர் போன்ற வணிகப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு அவசரத்துக்கு எளிதாக வெளியே வர முடியாது
இந்த நெருக்கடி புற நர்ப்பகுதிகள் உட்பட சென்னை முழுதுமே ஓரளவு பரவி வருகிறது
அண்ணாந்து பார்க்கின்ற அடுக்கங்கள் - - மின் தூக்கியில் இறங்கி வந்து
நிறுத்தத்தில் இருந்து வண்டியைக் கிளப்பி சாலைக்கு வருவதற்கே பல ம துளிகளாகி விடும்
திரு வில் இருந்து 20 கிமி காரைக்குடி –பேருந்தில் கூட அரை மணி நேரத்தில் பொய் விடலாம்
மதுரை – 60 கி மி ஒரு மணி நேரப் பயணம்
திருச்சி 1௦௦ கி மி 2 மணி நேரம்
இங்கெல்லாம் சென்னை அளவுக்கு இல்லாவிட்டாலும் மேம்பட்ட மருத்துவ வசதிகள் உள்ளன
மேலும் முன்பே குறிப்பிட்டது போல் உடல் நலத்துக்கு மிகவும் உகந்த ஊர் திரு
யார் கண்டது , இறைவன் அருளால் மருத்துவ மனைக்குப் போகத் தேவை இல்லாத அளவுக்கு உடல் நலம் சீராகலாம்
பொழுது போக்கிற்கு உள்ள இடங்கள்,
வழி பாட்டுத் தலங்கள்பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
நடைப் பயிற்சிக்கேற்ற அதிக போக்கு வரத்து இல்லாத இடங்கள் பல இருக்கின்றன . காலை நேரத்திலேயே தேநீர் கடைகள் செயல்படும்
சரி சொந்த ஊருக்குக் குடி போய் விட்டோம்
எனக்கு சும்மா இருக்க முடியாது சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால்
சேவை மனப்பான்மையில் செய்யகூடிய பணிகள் – எனக்குத் தெரிந்தவற்றைக் குறிப்பிடுகிறேன்
100 ஆண்டுகள் கடந்து நிற்கும் புகழ் பெற்ற SM மருத்துவ மனையை முன்பிருந்த நிலைக்கு , அல்லது அதனினும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்த முயற்சிக்கலாம்
கலைக்கல்லூரி 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது
பொறியியல் , மருத்துவம் போன்ற தொழிலகல்வி கல்லூரிகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம்
மாநில , ஒன்றிய அரசுப் பணிகள் பற்றிய விழிப்புணர்வை இளைய சமுதாயத்தில் ஏற்படுத்தலாம்
போட்டித் தேர்வுக்ளுக்கு வகுப்பு நடத்தலாம்
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரலாம்
மருத்துவம், பொறியியல் தவிர நிறைய இருக்கும் கல்விகள்,
குறிப்பாக பல நிறுவனங்கள் வழங்கும் பணி உறுதி உள்ள இலவசப் படிப்புகள் , பயிற்சிகள் பற்றி ஒரு தெளிவு உண்டாக்கலாம்
அருகில் உள்ள குன்றக் குடியில் ஒவ்வொரு வீடும் ஒரு சிறிய தொழில் கூடமா விளங்குகிறது என்று படித்திருக்கிறேன்
அந்த வகையிலும் மக்களுக்கு வழிகாட்டலாம
தொடரிப்பாதை , நிலையம் கொண்டுவர முயற்சிகள் துவங்கலாம்
இதற்கெல்லாம் பெரிதாக பொருள் செலவழிக்க வேண்டாம்
மனம் வைத்து உழைத்தால் போதும்
சொல்வது எளிது ஆனால் செயல் படுவது மிகச் சிரமம்தான்
அதிலும் எங்கள் ஊர் மக்கள் பொதுவாக போதும் என்ற மனம் படைத்த பொன் மக்கள்
நல்ல முயற்சிகளுக்கு இறைவன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையோடு செயலில் இறங்கலாம்
பாரதியின் கவிதை வரிகளுடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
நிதி.மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
இறைவன் நாடியால் நாளை திருமறையில் சிந்திப்போம்
07 02 2024 புதன்
சர்புதீன் பீ

Monday, 5 February 2024

English QUIZ “Talon “ 06022024 Tue





 English QUIZ

“Talon “
06022024 Tue
A word of 5 letters starting with t has more than 5 varied meanings in various fields like
Part of a body-human and bird
Part of a lock
In card game – solitaire
And so on
Ending 2 letters – a preposition; becomes negative when reversed
What is that word?
Answer
“Talon”
Meanings
a
: the claw of an animal and especially of a bird of prey
b
: a finger or hand of a human being
2
: a part or object shaped like or suggestive of a heel or claw: such as
a
: an ogee molding
b
: the shoulder of the bolt of a lock on which the key acts to shoot the bolt
3
a
: cards laid aside in a pile in solitaire
: the crushing region of the crown of an upper molar
Greetings and Congratulations to those who sent correct answers :
M/S
Ashraf Hameeda –First correct answer
Sharmadha -Thanks for sending many meanings of the word
Thanks to M/S
Khatheeb Mamuna Lebbai and A R Viswanaathan for participation
Let us meet tomorrow in திருமறை ISA
06022024 Tue
Sherfuddin P

Saturday, 3 February 2024

தமிழ் (மொழி) அறிவோம் வஞ்சப் புகழ்ச்சி அணி 04022024 ஞாயிறு


 தமிழ் (மொழி) அறிவோம்

வஞ்சப் புகழ்ச்சி அணி
04022024 ஞாயிறு
“நிழல் நிஜமாகிறது “ திரைப்படத்தில் ஒரு பாடல்
“கம்பன் ஏமாந்தான் “ என்று துவங்கும் அப்பாடலின் வரிகள்
• அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ”
அடுத்து ஒரு சங்கப்பாடல்
“பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே”
இது கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல்
இந்த இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன ?
வினாதான் பெரிது மிக எளிதான விடை
விடை
“வஞ்சப்புகழ்ச்சியணி”
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதுமாகும்.
• இந்த அணிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு
•
• “தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
• மேவன செய்தொழுக லான். “ குறள்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
வேலவன் முதல் சரியான விடை
சிராஜுதீன்&
தல்லத்
முயற்சித்த சகோ
மீ மு இஸ்மாயில் , கதீப் மாமுனா லெப்பை, இருவருக்கும் நன்றி
சகோ ஷர்மதாவுக்கும்—
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௪௦௨௨௦௨௪
04022024ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 1 February 2024

திருமறை குரான் 2:19 0202024 வெள்ளி




 திருமறை குரான்

2:19
0202024 வெள்ளி
“ -----இடியோசையைக் கேட்டதும் இறப்பு அச்சத்தில் காதுக்குள் விரல்களைத் திணிக்கிறார்கள் ----“
எந்த குரான் வசனத்தின் பகுதி இது ?
விடை
சுராஹ் 2 அல்பக்ரா (மாடு) வசனம் 19
2:19. அல்லது, (இன்னும் ஓர் எடுத்துக்காட்டு ) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;
(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்;
ஆனால் அல்லாஹ்(-இறைவன் )(எப்போதும் இந்த) இறை நம்பிக்கை அற்றவர்களை சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
விளக்கம்
விரல்களினால் காதுகளை மூடிக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் --இடியின் ஓசையைத் தடுத்தது போல் தங்களை எதிர் நோக்கியிருக்கும் பேரழிவைத் தடுத்துத் தப்பி விடலாம் என்று
ஆனால் உண்மையை மறுப்பவர்கள் ஒரு போதும் இறைவன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு[ப் பெறுவோர் :
சகோ
சிராஜுதீன் –முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
சைனுலாப்தீன் HK
மீ மு இஸ்மாயில் &
கதீப் மாமுனா லெப்பை
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
21 ரஜப் 1445
௦2022024 வெள்ளி
சர்புதீன் பீ