Wednesday, 14 August 2024

முத்திரை பதிப்போம் 15 கணேச முத்திரை-இதயம், மனம் வலிமை பெற 14082024 புதன்





 முத்திரை பதிப்போம் 15

கணேச முத்திரை-இதயம், மனம் வலிமை பெற
14082024 புதன்
முத்திரைகளின் சிறப்பு பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன்
அதெல்லாம் இப்போது திரும்பச் சொல்லவில்லை
ஆனால் ஒன்றே ஓன்று
பெயரைப் பார்த்து இது மதம் சார்ந்தது, மற்ற மதத்தினர் செய்வது தவறு என்ற எண்ணத்தில் எதையும் ஒதிக்கி விடாதீர்கள்
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
லிங்க முத்திரை – இதில் நாம் வைக்கும் விரல்கள் வடிவம் லிங்கம் போல் இருக்கும்
எனவே நினைவில் நிறுத்துவதற்கு எளிதாக லிங்க முத்திரை - அவ்வளவுதான்
இப்போது கணேச முத்திரை
சேய்முறை
இளக்கமாக (relaxed) முடிந்தால் பத்மாசனம்
முடியாவிட்டால் சுகாசனத்தில் உட்காருங்கள்
இடது உள்ளங்கை வெளி நோக்கி இருக்குமாறு மார்புக்கு அருகில் வைத்து
விரல்களை மடக்கவும்
வலது உள்ளங்கை மார்பை நோக்கி இருக்கும்படி வைத்து
விரல்களை மடக்கி இடது கை விரல்களை இறுக்கமாகப் பிடிக்க்கவும்
இதே நிலையில் கைகளை இதயம் இருக்கும் இடத்துக்கு நகர்த்தவும்
மூச்சை வெளியே விட்டவாறு கைகளைப் பிரிக்காமல் பலமாக இழுக்கவும்
இதனால் மேல் தோள்பட்டைப் பகுதியும் மார்புப் பகுதியும்
மூச்சை உள்ளே இழுக்கும்போது இறுக்கத்தைத் தளர்த்தவும்
இது போல் ஆறு முறை செய்த பின் அதே நிலையில் கைகளை மெதுவாச அன்புடன் மார்பின் மேல் வைக்கவும்
மார்புப் பகுதியை கவனிக்கவும்
பிறகு இதே போல் கைகளை மாற்றி இடது உள்ளாங்கை மார்பை நோக்கியும் வலது உள்ளங்கை வெளிப்புறம் நோக்கியும் இருக்குமாறு வைத்து ஆறு முறை செய்தால் ஒரு சுற்று நிறைவாகிறது
இப்படி ஒரு நாளைக்கு ஒரு சுற்று செய்தால் போடும்
பலன்கள்
இதயஇயக்கத்தை தூண்டி ,இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது
மூச்சுக் குழல்களின் அடைப்பை நீக்குகிறது
நம்பிக்கை , அச்சமின்மை திறந்த மன நிலை அதிகமாகிறது
செய்முறை படிக்க நீளமாக இருந்தாலும் செய்து பார்த்தால் மக எளிதான ஓன்று
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
14082024 புதன்
சர்புதீன் பீ

Like
Comment
Share

Monday, 12 August 2024

English QUIZ Valance 13082024 Tue

 




English QUIZ

Valance
13082024 Tue
Word with
3 vowels (out of which one occurring twice)
Initial letter v
Indicates a piece of clothing used in interior decoration
Word used in business management, psychology and chemistry
In other meanings
What is that 7 lettered word?
Ans
Valance=a length of decorative drapery attached to the canopy or frame of a bed in order to screen the structure or the space beneath it
Valence (psychology)
Valence, also known as hedonic tone, is a characteristic of emotions that determines their emotional affect (intrinsic appeal or repulsion).
CHEMISTRY•LINGUISTICS
1. another term for valency.
o relating to or denoting electrons involved in or available for chemical bond formation.
modifier noun: valence
Greetings and Congratulation to
Mr. A R Viswanathan
For first correct answer
and
MrManohar
Let us meet tomorrow by HIS GRACE
13082024 Tue
Sherfuddin P

Saturday, 10 August 2024

தமிழ் (மொழி)அறிவோம் 11 082024 ஞாயிறு இரட்டைப்புலவர்கள் சிவ சிதம்பரம்

 




தமிழ் (மொழி)அறிவோம்

11 082024 ஞாயிறு
இரட்டைப்புலவர்கள்
ஒருவருக்குக் கண் தெரியாது
மற்றவருக்கு நடக்க முடியாது
கண் தெரியாதவர் மற்றவரை சுமந்து செல்வார்
அவர் வழி சொல்வார்
இப்படியே பல இடங்களுக்கும் பயணம் செய்கிறார்கள்
கலம்பகம் , சிலேடை, வெண்பா போன்ற பலவற்றில் புலமை பெற்றவர்கள்
ஒரு முறை மன்னர் ஒருவரைக் காண இருவரும் போகிறார்கள்
நடக்க முடியாதவர் கண் தெரியாதவரிடம்
“சிவ சிதம்பரம் “
என்று சொல்கிறார்
அதற்கு அவர் மறுமொழியாக
“அண்ணாமலை “
என்று சொல்கிறார்
எதற்காக
இந்த இரண்டு சொற்களையும் ----“சிவ சிதம்பரம்” ““அண்ணாமலை “
இந்த இடத்தில் சொல்கிறார்கள்?
விடை
கண் பார்வை இல்லாதவர்களை மன்னர் பார்ப்பது ஆட்சிக்கு நல்லதல்ல என்ற ஒரு மூட நம்பிக்கை இருந்தது ,இருக்கிறது
அதனால் மன்னர் புலவர்களைப்ப்பார்க்காத அளவுக்கு ஒரு திரை இருந்தது
இதைத்தான் குறிப்பாக சிவ சிதம்பரம் என்று உணர்த்துகிறார் கண் பார்வையுள்ள புலவர்
சிதம்பரம் கோயிலில் திரை இட்டிருப்பார்கள்
இதை ஒரு அவமதிப்பாக எண்ணிய மற்றவர் அண்ணாமலை என்கிறார்
உடனே திரை தீப்பிடித்து எரிகிறது
அண்ணாமலை நெருப்பு வடிவம்
புலவர்களின் திறமையை அறிந்து தன் தவறை உணர்ந்த மன்னன் மன்னிப்புக் கேட்டதாக ஒரு செய்தி –என்றோ எதிலோ படித்தது நினைவில் வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
அதே மூட நம்பிக்கையில் தான் மக்கள் ஆட்சியின் முதல்வரும் கண் தெரியாதவர்களைப் பார்க்க மறுத்தது
அதோடு நில்லாமல் கண் தெரியாத அந்த மக்களை ஊருக்கு வெகு தொலைவில் கொண்டு போய் இறக்கி விட்டு தவிக்க வைத்ததாகவும் செய்தி வந்தது
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௧௦௮௨௦௨௪
11 082024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 8 August 2024

திருமறை குரான் குரான் அமைப்பு சூராக்கள் மோதிர அமைப்பு 09082024 வெள்ளி

 




திருமறை குரான்

குரான் அமைப்பு
சூராக்கள்
மோதிர அமைப்பு
09082024 வெள்ளி
கடந்த சில பதிவுகளில் குரான் சூராக்கள் அமைப்பு பற்றிப் பார்த்தோம்
அந்த வரிசையில் இன்று ஒரு வினா
சுராஹ் 20 தாஹா
21 அல் அன்பியா
31 லுக்மான்
37 அல் ஸாfபாத்
இந்த சூராகளுக்கிடையில் சூராவின் அமைப்பில் (Structure)
ஒரு ஒற்றுமை இருக்கிறது
அது என்ன ?
கு
விடை
இவையும் இன்னும் பல சூராக்களும் Ring Structure எனப்படும் மோதிர (வளைய ) அமைப்பில் இருக்கின்றன
குர்ஆனில் உள்ள வளைய அமைப்பு என்பது ஒரு மைய கருப்பொருளை வலுப்படுத்தும் முழு வட்டம் அல்லது வளையத்தை உருவாக்க பகுதிகளின் வரிசையைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்
. மோதிர அமைப்பைப் பயன்படுத்தும் குர்ஆனில் உள்ள சூராக்களின் சில எடுத்துக்காட்டுகள் மேலே சொல்லப்பட்டவை
எளிதாகச் சொல்வதென்றால் ; மோதிர அமைப்பு என்பது கண்ணாடியை நடுவில் வைப்பதற்கு சமம் - முதல் பாதியில் குறிப்பிடப்பட்டவை இரண்டாம் பாதியில் பிரதிபலிக்கும்.
சுராஹ் 31லுக்மானுக்கு Carl Ernst என்ற குரான் ஆராய்ச்சியாளர் மோதிர அமைப்பு அடிப்படையில் கொடுத்த விளக்கம் சுருக்கமாக
-----சூராவில் உள்ள 34 ஆயத்துகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன
பகுதி A---1—11
பகுதி B 12- 15
பகுதி X--- 16-17 நடுப்பகுதி கண்ணாடிப் பகுதி
• மீண்டும் பகுதி B 18-19
• அடுத்து பகுதி A மீண்டும் -20-34
• A இரண்டு பகுதிகளிலும் இறைவன் தன்னிறைவு பெற்றவன் ,எல்லாம் அறிந்தவன் என்ற கருத்து சொல்லப்படுகிறது
• 17 It is revealed through prayer, forbidding wrong, and employing moderation, are the values a believer should aspire too.
• அது போல B இரண்டு பகுதிகளிலும் மனித குலத்துக்கான வழிகாட்டுதல்கள் இடம் பெறுகின்றன
• இடையில் உள்ள பகுதி X –கடுகளவு சிறிய பொருளையும் இறைவன் அறிவான் என்ற ஒப்பீடு இறைவன் பெருமையை விளக்குகிறது-------
• என்ன புரிந்தும் புரியாமலும் இருக்கிறதா ?
• போகபோகப் புரியும் இறைவன் அருளால்
இதை நான் எடுத்துச் சொல்லத் தூண்டியது இதுதான்
குரான் சூராக்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஆயத்துகள் பல காலங்களில் பல இடங்களில் பல தலைப்புக்கள் பற்றி இறைவனால் அருளப்பட்டவை
ஆயத்து எண் ,சூராஹ் எண் , தலைப்பு என எந்தக் குறிப்பும் இல்லாமல் இறங்கியவை
இவற்றை இப்படி ஒரு அழகான ,ஒழுங்கான முறையில் தொகுத்து தருவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது
குரானை படைத்து தொகுத்து வழங்கியது அந்த ஏக இறைவன்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக விளங்குகிறது
குரானின் மிகப்பெரிய சூராஹ் 2 அல்பகரா கூட இந்த மோதிர அமைப்பபில் இருக்கிறது என்பது சிலர் கருத்து
குறிப்பாக சுராஹ் ஆயத்துல் குர்ஷி (2:255)மோதிர அமைப்பில் உள்ளது
ஆர்வத்துடன் விடை காண முயற்சித்த
சகோ ஷர்மதாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
03 ஸfபர் (2) 1446
09082024 வெள்ளி

Tuesday, 6 August 2024

சொந்த ஊர் 18 சகோ தல்லத் 07082024 புதன்








 சொந்த ஊர் 18 சகோ தல்லத்

07082024 புதன்
எங்கள் ஊர் பேச்சு வழக்கு பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேன்
-----இயல்பான பேச்சில் கூட கவி நயம் துள்ளி விளையாடும்
அதோடு கேலி ,கிண்டல் உவமைகள் சொல்லடைகள் எல்லாம் கலந்து வரும்
அதன் எடுத்துக்காட்டாக ஒரு சில
(இடையில் என் கருத்துக்கள[ &அடைப்புக்குள்&]
சகோ தல்லத்
திருப்பத்தூரில் நான் ரசித்து இன்று வரை நினைவில் நிற்கும் சில உரையாடல்கள்.
1. (குழாய்) காசிமாமு
ஏன்த்தா இந்த இஸ்மாயில பாத்தியலாத்தா?
எந்த இஸ்மாயில் மாமு?
அதான்தா... பன மரத்துல பாதி இருப்பானே (அதிக உயரமாம்)...அவன் அப்பங்கூட அடமழைல தண்ணி பந்த வப்பான்தா (அவ்வளவு கஞ்சனாம் )
[&குழாய் என்ற சொல்லுக்கு ஒரு விரிவான பொருள், பின்னணி இருக்கும்&]
2. வாட்சா மாமு
இவருக்கு நிரந்தர வருமானம் இல்லாததால் SI அண்ட் Coவிலிருந்து சிறு தொகை கொடுப்பதாக ஏற்பாடு. ஓரிரு மாதங்கள் வழமையாகச் சென்று பெற்றுக்கொண்டார். ஒரு நாள் நேரடியாக தன தங்கச்சி மகன் SI சம்சுதீன் (SIS அண்ணன்) அவர்களிடம் சென்று...
"ஏன்த்தா... எனக்கு தர வேண்டிய பணத்த எங்கிட்ட மொத்தமா குடுத்திருங்கத்தா.
என் பணத்த நீங்க ஏன்த்தா வச்சிருக்கீங்க?"
: 3. காட்டாம்பலார் (காட்டாம்பூர் அம்பலகாரர்) ஹுசைன் மச்சான் (இவர் அத்தாவுடைய ஒன்றுவிட்ட தங்கச்சி மகன்)
ஒரு முறை கடைவீதியில் சந்தித்த பொழுது,
"என்ன மாப்ள ...எப்ப வந்தீய?"
"நேத்து வந்தேன் மச்சான்... நல்லாயிருக்கியலா?"
"நான் நல்ல இருக்கேன் மாப்ள. நீங்க எப்படி இருக்கீங்க?
ஏன் மாப்ள..நீங்க நேத்து சாயந்தரம் நம்ம வீட்டுப்பக்கம் வந்தியளா ?"
"ஏன் மச்சான், நான் வரலயே !!! "
"இல்ல..பக்கத்துக்கு வீட்டுல ஒரு கோழிய காணம்னு தேடிட்டு இருந்தாக" (நான் கோழி திருடனாம்!)
இன்னொரு நாள், ஒரு முறை அத்தாவிற்கும் இவருக்கும் நடந்த உரையாடல்.
அத்தா - "ஏன்த்தா ..உங்கத்தா அவரோட ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பக்க கும்பகோணம் போயிருக்காராம்ல.. அவருக்கு என்ன ஒரு 40-45 வயசு இருக்குமா?"
மச்சான் - "ஏது மாமு...எனக்கே 39 தானே ஆகுது. அவருக்கு அவ்வளவு இருக்காது மாமு"
4. புளிக்கடை சையது (இவருடைய பதிலெல்லாம் பொதுவாக எண்கள் மற்றும் பின்னங்களிலேயே இருக்கும்)
"என்ன சை அண்ணா...அவன் இப்டி பேசிட்டு இருக்கானே என்ன சை அண்ணா!"
"அத விடுங்க... அவென் ஒரு ஆறே முக்காலும் அறையுங்காலும்" (6 3/4 + 1/2 + 1/4 = 71/2. அவர் ஒரு ஏழரையாம்)
"என்ன சை அண்ணா... அவென் எப்ப பாத்தாலும் சொறிஞ்சிக்கிட்டே திரியிறான்?"
"அவனா? அவனுக்கு நாப்பாத்திக்கா" (40 * 1/4 = 10. பத்து என்பது படர் தாமரை)
5. ராசு சுல்தான்
ஒரு முறை, அரிசிக்கடைக்கு சென்ற பொழுது உரிமையாளரிடம் (ஷாஹுல் ஹமீது)...
"ஏன்பா சாவுலு...நேத்து அரிசி வாங்கிட்டு போனனே...வீட்டுல அளந்து பாத்துட்டு குறையுதுன்னு சொன்னாகளேப்பா"
"ஆமாணே...அரிசி அளக்க அளக்க குறையும்லணே"
"என்னடா சாவுலு..இந்த ஊருல உன்னயத்தேன் கொஞ்சம் புத்திசாலின்னு நெனச்சிட்டு இருந்தேன்...நீயுமாடா? அரிசிய அளக்க அளக்க குறையுமோ? எங்க இந்த ஒரு மூட அரிசிய கொட்டி அளந்துக்கிட்டே இரு. ஒன்னுமில்லாம போயிருமோ?"
.
இதை படிக்கும் பொழுது நகைச்சுவையாக இருந்தாலும் அதிகம் படிக்காத நம் மக்களின் பேச்சுத்திறமை மெச்சப்பட வேண்டிய ஒன்று என்றால், அந்த காலத்திலேயே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சென்று படித்து வந்த எங்கள் சச்சாவின் பேச்சு திறமை தனித்துவம் வாய்ந்தது.
கம்பராமாயணத்தில் சில பாடல்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களை சில தடவைகள் கேட்டு மிகவும் வியந்திருக்கிறேன்.
ஒரு முறை சச்சாவின் பேச்சைக்கேட்டு அந்த மேடையிலிருந்த அப்போதைய தமிழக முதல்வர் திருவாளர் C N அண்ணாதுரை அவர்கள், "இங்கு திருநெல்வேலியில் ஒரு தமிழ்க்கல்லூரி திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நமது ஆணையர் அவர்களின் பேச்சை கேட்ட பிறகு இங்கு ஒரு தமிழ்க்கல்லூரி தேவை தானா என்று கேட்கத்தோன்றுகிறது" என்று புகழ்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
திருநெல்வேலி நகராட்சி நூற்றாண்டு விழா மலரில் சச்சா எழுதிய, "வித்திட்டார் நெல்லையிலே நகராட்சி மலர்க வென்று வேரோடி வெள்ளிமுளை கிளம்ப கண்டோம்..." என்று ஆரம்பிக்கும் கவிதை அந்த நேரத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.
இதே போல் நமது ஊரில் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அவரவர்களுக்குரிய பேச்சு திறமை உண்டு.
[&இங்கு சகோ தல்லத் சச்சா என்று குறிப்பிடுவது பெர்மைக்குரிய எங்கள் அத்தா ஹாஜி ஜனப் கா பீர்முகமது – நகராட்சி ஆணையர் ஒய்வு &]
பி கு
சகோ தல்லத் விருப்பபடி பெயர்கள் குறிப்பிடபடுகின்றன
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
07082024 புதன்
சர்புதீன் பீ


[பெயர்கள் போடலாமா

பிரச்சினை ஏதும் வராதா?]

[17:08, 04/08/2024] Ashraf Hameeda T: Atha said "firstly, these are anecdotes to show how quick witted and sharp were our relatives, God gifted basically. Also, none of the people mentioned in these are alive now"

[17:09, 04/08/2024] Ashraf Hameeda T: Also, atha mentioned these are all his personal experiences.

[17:29, 04/08/2024] SHERFUDDIN P: OK

Monday, 5 August 2024

English QUIZ alabaster IT IS THE CAUSE’ 06082024 Tue

 






English QUIZ

alabaster
IT IS THE CAUSE’
06082024 Tue
9 letters
Out of nine 4 are vowels including 1st letter a
Meaning hard, translucent calcite often carved into vases and ornaments
1 What is that word?
2 This word is used in description of beauty of a woman by a famous poet and playwright
Who is it? Whom he describes in which play?
May look a difficult one
But if you think over it easily answers can be found particularly by senior citizens
So far no complete correct answer received
So one more indirect clue
"பசுமை ------ நினைவுகள்"
No extension of time please
Answer
1 alabaster
2
: Desdamona in Othello
Othello described Desdemona as possessing 'that whiter skin of hers than snow and smooth as monumental Alabaster’
: In the Play Othello written by William Shakespeare Othello described Desdemona as monumental Alabaster
Greetings and Congratulations to
Mr. Velavan for complete correct answer
1 alabaster –correct answer
M/S Raviraj shireen Farook &
AR Viswanathan
2 Mr.Sengai A Shanmugam “Shakespeare”
‘IT IS THE CAUSE’, SPOKEN BY OTHELLO, ACT 5, SCENE 2
It is the cause, it is the cause, my soul,
Let me not name it to you, you chaste stars!
It is the cause. Yet I’ll not shed her blood;
Nor scar that whiter skin of hers than snow,
And smooth as monumental alabaster.
Yet she must die, else she’ll betray more men.
Put out the light, and then put out the light:
If I quench thee, thou flaming minister,
I can again thy former light restore,
Should I repent me: but once put out thy light,
Thou cunning’st pattern of excelling nature,
I know not where is that Promethean heat
That can thy light relume. When I have pluck’d the rose,
I cannot give it vital growth again.
It must needs wither: I’ll smell it on the tree.
Ah balmy breath, that dost almost persuade
Justice to break her sword! One more, one more.
Be thus when thou art dead, and I will kill thee,
And love thee after. One more, and this the last:
So sweet was ne’er so fatal. I must weep,
But they are cruel tears: this sorrow’s heavenly;
It strikes where it doth love. She wakes.oooooooooooooooooooo
This scene was enacted ine film
ரத்தத் திலகம
By Sivaji and Savithiri in a college function
"பசுமை நிறைந்த நினைவுகளே" is a hit song in that film
Ms Nasreen found the song correctly and sang the one line in her
Sweet childish voice- Thanks
Thanks to M/S Sirajuddin and Hasan Ali for participation
Thanks again to one and all
Let us meet tomorrow by HIS GRACE
06082024 Tue
Sherfuddin P

Saturday, 3 August 2024

தமிழ் (மொழி) அறிவோம் 04082024 ஞாயிறு இன்று ஒரு சுவைபதிப்பு ` ஊன் துவை அடிசில்' பிரியாணி





 தமிழ் (மொழி) அறிவோம்

04082024 ஞாயிறு
இன்று ஒரு சுவைபதிப்பு `
ஊன் துவை அடிசில்'
பிரியாணி
அரண்மனை உணவாக இருந்து இன்று மக்கள் உணவாக மாறிவிட்டது
சாலையோர உணவகங்கள், சிறிய, நடுத்தர, பெரிய ,மிகப்பெரிய நட்சத்திர உணவு விடுதிகள் என எங்கும் பிரியாணி
திருமணம், குடும்ப கொண்டாட்டங்கள் என எதிலும் பிரியாணி
“பிரியாணி. பரோட்டா கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”
புது மொழி
கறி பிரியாணி கோழி பிரியாணி மீன் பிரியாணி என எத்தனை வகைகள்
அத்தா ஆம்பூரில் பணியாற்றியபோது அம்மா பிரியாணி செய்யக் கற்றுக்கொண்டு எங்கள் சுற்றத்தாருக்கு அறிமுகப் படுத்தியது வரலாலு
அரை நூற்றாண்டுக்கு முன் என் திருமணத்தை ஒட்டி வங்கிப்பணியாளர்கள் மற்றவர்கள் என ஐம்பது பேருக்கு மேல் ஒற்றை ஆளாக பிரியாணி சமைத்தது வரலாற்றுச் சாதனை
இன்றும் அந்த வங்கித் தோழர்களை சந்திக்க நேர்ந்தால் அந்த சிறப்பான சுவையை நினைவு கொள்வார்கள்
பிரியாணி என்னும் பெயர் 'பிரியன்' என்ற சொல் மூலம் பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது. அப்படி யென்றால் 'சமைப்பதற்கு முன் வறுப்பது' என்று பொருள். அரிசி என்ற பெர்ஷிய பொருள் கொண்ட 'பிரிஞ்' என்ற சொல்லிலிருந்து இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது
இன்றைய வினா
பிரியாணி
இந்தச் சொல்லுக்கு(ஓரளவு) இணையான சங்கத் தமிழ் சொல் எது ?
விடை
ஊன் துவை அடிசில்' இது என் தெரிவு
இன்னும் சில சொற்களும் சரியான விடையாக விளக்கங்களுடன் வந்துள்ளன
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி
(ஊன் துவை அடிசில்
விழுக்குடை மடை)
முதல் சரியான விடை
சிராஜுதீன்
(விடை:
பிரியாணி என்பதற்கு சங்கத் தமிழ் சொல் :
1 ) ஊன்சோறு
2 ) வாடூன் புழுக்கல் .
விளக்கம் :
ஊன்சோறு என்னும் சொல்லைச் சங்ககாலப் புலவர்கள் பல இலக்கியங்களில் எடுத்து ஆண்டிருக்கிருக்கின்றர்.
”ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்” என்பது புறநானூற்றுப் பாடல் 33, வரி 14. “
“அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்” என்று இதே புறநானூறு பாடல் 113, வரி 02-ல் சொல்கிறது !
“ஆடுற்ற ஊன்சோறு”, என்கிறது மதுரைக் காஞ்சி (பாடல் வரி35). இதே மதுரைக் காஞ்சியில் இன்னொரு இடத்தில், “புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்’ (பாடல் வரி 533) என்னும் வரி வருகிறது !
ஊன் சோறு என்றால் என்ன ?
ஊன் என்றால் தசை என்று பொருள். இஃதன்றி நிணம், கொழுப்பு, புலால், இறைச்சி, உடல் என்றெல்லாம் பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி ! தசை என்பதை “சதை” என்று சொல்வது இக்கால வழக்கு !
ஊன்கலந்து செய்யப்படும் சோறு “ஊன்சோறு” ! இக்காலத்தில் “பிரியாணி” என்று சொல்கிறோமே அதைத் தான் அக்காலத்தில் ஊன்சோறு என்று வழங்கி இருக்கின்றனர் ! ஊன்சோற்றை ஆக்கும் முறையில் பண்டைக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். அதில் சேர்க்கும் நறுமணப் பொருள்களின் அளவில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். செய்ம்முறையில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். ஆனால் அக்கால “ஊன் சோறு” தான் இக்கால “பிரியாணி” என்பதில் ஐயமிருக்க முடியாது !
வாடூன் புழுக்கல்:
பெரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
பாடல் :
..எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
பார்வை யாத்த பறை தாள் விளவின் . . . .[95]
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]
வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[95 - 105]
பொருள் :
.....அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை 😊 பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள்.....)
ரவி ராஜ் (ஊன் சோறு ,ஊன் புழுக்கு)
பாப்டி (ஊன் துவை அடிசில்)
ஷர்மதா (ஊன் சோறு)சி
சிவசுப்ரமணியன் ((ஊன் சோறு)
ராஜாத்தி (ஊன் துவை அடிசில்)
முயற்சித்த சகோ சிவராமகிருஷ்ணனுக்கு நன்றி
`ஊன் துவை அடிசில்' விளக்கம்
ஊன் என்றால் இறைச்சி, துவை என்பது கலந்த தன்மை, அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். `ஊன் துவை அடிசில்' என்றால் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று அர்த்தம்.
பதித்துப்பற்றில் புலவர் பாணர், `சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து' என்று குறிப்பிட்டுள்ளார்
நிறைய கறி போட்டு மிகுந்த சுவையாக இருக்கும் பிரியாணியை
“ஒரு சோறு ஒரு கறியாக இருந்தது “ என்று பேச்சு வழக்கில் உயர்வாகச் சொல்வதுண்டு
அதைத்தான்
, `சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து' என்று குறிப்பிட்டுள்ளார்புலவர் போரில் வெற்றி கண்ட பிறகு தன் வீரர்களுக்கு சேரன் செங்குட்டுவன் வழங்கிய `ஊன் துவை அடிசில்' விருந்தில் சோறு வேறாக, இறைச்சி வேறாகப் பிரிக்க முடியாதபடி ஒன்றி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௪௦௮௨௦௨௪
04082024 ஞாயிறு
சர்புதீன் பீ