Thursday, 10 October 2024

திருமறை குரான் 13:38, 3:39 11102024 வெள்ளி

 


 
Shared with Public

திருமறை குரான்
13:38, 3:39
11102024 வெள்ளி
நபி ஈசா அவர்களின் குடும்ப வாழ்க்கை ---மனைவி ,மக்கள்--- பற்றி குர்ஆனில் சொலப்படுகிறதா ?
சொல்வது என்ன ?
எந்தப்பகுதியில் ?
விடை
நபி ஈசாவின் மண வாழ்வுபற்றி குர்ஆனில் நேரடி செய்தி எதுவும் இல்லை
நபி துறவறத்தில் வாழ்ந்தார் என்ற கருத்து பரவலாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்
ஆனால் ஈசா நபியின் காலத்தில் யூதர்கள் யாரும் துறவறத்தில் இல்லை
திருமணம் என்பது ஒரு கடமையாகவே இருந்தது
மேலும் குரான் வசனம் ஒன்றில் இறைவன் சொல்கிறான்
“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;
அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்;
மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு(பதிவு) ஏடு உள்ளது.”சூராஹ் 13-அர்ராத் –இடி வசனம் 38)
இன்னும் சுராஹ் 3 ஆலு இம்ரான் – இம்ரானின் சந்ததியர் வசனம் 39 ல் நபி யஹ்யா(ஜான்) பற்றி
“அவர் இல்லற வாழ்வை துறந்தவராக இருப்பார் “
என்று இறைவன் சொல்கிறான்
எனவே நபி ஈசா அலை அவர்கள் இல்லற வாழ்வில் இருந்தார் என்பது தெளிவாகிறது என்பது அறிஞர்கள் கருத்து
சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
07 ரபிஉல் ஆகிர் (04 )1446
11102024 வியாழன்
சர்புதீன் பீ

Tuesday, 8 October 2024

பாருக்குள்ளே நல்ல நாடு 091022024 புதன

 




பாருக்குள்ளே நல்ல நாடு

091022024 புதன
தொலைக்காட்சி செய்தித்தாள் வலை ஒளியில் கண்ட கேட்ட படித்த செய்திகளால்
மனதில் ஒரு நெருடல், வலி
உச்ச நீதி மன்ற உணவகத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு உணவு வழங்க வாய்மொழி ஆணை
சைவம் அதிலும் வெங்காயம் பூண்டு சேராத சுத்த சைவ sசாத்வீக உணவு மட்டுமே
மட்டுமே வழங்கப்படும்
இதுவரை இல்லாத நடை முறை இது
இது 03 1024 சன் தொலைக்காட்சி செய்தி
அதே உச்ச நீதி மன்றம் பற்றி இன்னொரு செய்தி
03 1024 தினத்தந்தியில்
உத்திரப் பிரதேசம் ,மேற்குவங்கம் உள்ளிட்ட 11வட மாநிலங்களில் சிறைக் கைதிகள்
சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனியாக வைக்கப்படுகிறார்கள்
உயர் சாதியினருக்க்கு சமையல் போன்ற வேலைகள்
மற்றவர்களுக்கு பெருக்குவது சுத்தம் செய்வது போன்ற
இழிவான (செய்தியில் வந்த சொல் இது ) வேலைகள்
இப்போது உச்ச நீதி மன்றம் இந்த நடைமுறைகளை உடனடியாக மடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது
வட மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் பல வீடுகள் மேல்பூச்சு இல்லாமல் செங்கல் தெரியும்படி இருக்கும்
சரி இது ஒரு சிக்கன நடவடிக்கை என்று நினைப்பேன்
ஆனால் இதற்குப்பின்னால் ஒரு இழிவான சமூக அவலம் இருப்பது இப்போது தெரிய வருகிறது:
வலை ஒளியில் கண்ட சில செய்திகள் :
உயர் சாதியினர் மட்டுமே வீட்டுக்கு மேல்பூச்சு பூசலாமாம்
மற்றவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே பூசலாமாம்
இத விடக் கொடுமை இயற்கை காற்று கூட உயர் சாதியினரைத் தாண்டி பிறகுதான் மறவர்களுக்குப் போகவேண்டும்
இந்த விதிக்கு மாறாக முன்நாள் படை வீரர் – பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்- மலை அடிவாரத்தில் கட்டிய வீடு இடித்துத் தள்ளபட்டதாம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 17
தீண்டாமையை ஒழிக்கிறது
மற்றும் அதன் நடைமுறையை எந்த வடிவத்திலும் தடை செய்கிறது.
இந்திய பாராளுமன்றம் 1955 ஆம் ஆண்டில் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தை நிறைவேற்றியது. “மகாத்மா காந்தி கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் 17வது பிரிவு அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எழுபது ஆண்டுகள் கழிந்தும் சட்டம் செயல் படுத்தப்படாமல் சட்டமாக மட்டுமே இருக்கிறது
தீண்டாமைக்கு குற்றவியல் நடை முறையில் வழக்குத் தொடரப்படும்
இதுபிணையில் வர முடியாத குற்றம் (non bailable offence) என்று சொல்வார்கள்
யாரைக்குற்றம் சொல்வது ? யாரைத் தண்டிப்பது ?
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
091022024 புதன
சர்புதீன் பீ

Sunday, 6 October 2024

கவி அக்தொபர் 2024//07/28

 

                                                   07102024 (70 winners)


                             


141024 no competition navaraathiri 





போட்டிக்கான பதிவு 
  18102024///211024

 "  ஆசையில் ஓர் கடிதம்"
__
சிறையிலிருந்து நேருஜி எழுதிய கடிதங்கள் 

 இந்தியாவைக் கண்டுபிடித்தன

கலைஞரின் கடிதங்கள் உடன்பிறப்புகளை உசுப்பி உற்சாகமூட்டின

இப்படி வரலாறு படைத்த கடிதங்கள் 
இன்று 
இளைய தலை முறை அறியாத 
வரலாற்று சின்னங்கள்

"அன்புள்ள மான் விழியே"
"காதல் கடிதம் வரைந்தேன்* 
*காதல் கடிதம் தீட்டவே" 

ஆசையில் ஓர் கடிதத்துக்கு உயிர் கொடுத்து 
அழகூட்டும் வரிகள் 

_
சர்புதீன் பீ


Rajeswary Selvarajah
Admin

All-star contributor
Sherfuddin Peer Mohamed வணக்கம் சகோ👏
அரசியல்வாதிகளின் கருத்துகள் தவிர்க்கப்படவேண்டியவை.
May be an image of text that says "Sherfuddin Peer Mohamed போட்டிக்கான பதிவு *18102024* "ஆசையில் ஓர் கடிதம்" சிறையிலிருந்து நேருஜி எழுதிய கடிதங்கள் இந்தியாவைக் கண்டுபிடித்தன கலைஞரின் கடிதங்கள் உடன்பிறப்புகளை உசுப்பி உற்சாகமூட்டின இப்படி வரலாறு படைத்த கடிதங்கள் இன்று இளைய தலை முறை அறியாத வரலாற்று சின்னங்கள் "அன்புள்ள மான் விழியே" "காதல் கடிதம் வரைந்தேன்* *காதல் கடிதம் தீட்டவே" ஆசையில் ஓர் கடிதத்துக்கு உயிர் கொடுத்து அழகூட்டும் வரிகள் சர்புதீன் பீ"


Guru Snekithan
Author
Admin
Sherfuddin Peer Mohamed நட்பே புதிய கவிஞர்களையும் ஊக்குவிக்கவேண்டும் எல்லா வாரமும் கொடுத்தவர்களுக்கே சர்டிபிகேட் கொடுப்பது சாத்தியமில்லை நட்பே ஒரு சில வாரங்கள் விட்டு போகலாம் புதியவர்களுக்கும் நாம் ஊக்கிவித்து சர்டிபிகேட் கொடுத்தாக வேண்டும் அது காரணம் இந்த வாரம் விடுபட்டிருக்கலாம். நட்பே உங்கள் ஆதரவிற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றிங்க நட்பே 👌👌🙏💐🌹
1d
Reply
Sherfuddin Peer Mohamed

All-star contributor
Guru Snekithan விளக்கத்துக்கு நன்றி சகோ
1d
Reply
Guru Snekithan
Author
Admin
Sherfuddin Peer Mohamed நட்பே புதிய கவிஞர்களையும் ஊக்குவிக்கவேண்டும் எல்லா வாரமும் கொடுத்தவர்களுக்கே சர்டிபிகேட் கொடுப்பது சாத்தியமில்லை நட்பே ஒரு சில வாரங்கள் விட்டு போகலாம் புதியவர்களுக்கும் நாம் ஊக்கிவித்து சர்டிபிகேட் கொடுத்தாக வேண்டும் அது காரணம் … See more
1d
Reply
Sherfuddin Peer Mohamed

All-star contributor
Guru Snekithan விளக்கத்துக்கு நன்றி சகோ😊செல்வன் தமிழ்



வாழ்க வளத்துடன்
Adminகளுக்கு ஒரு அன்பு மடல்
முதலில்
நன்றி நன்றி நன்றி
பல குழுக்களில் நான் இருக்கிறேன்
Top contributor ஆகவும் இருக்கிறேன்
நம் குழு போல் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு தளமாக மற்ற எந்தக் குழுவும் இல்லை என்பது உறுதி
வாரம் இரண்டு போட்டி
-சிந்தனைத் திறனையும் சொல் வளத்தையும் மேம்படுத்தும் வார்த்தை விளையாட்டு
பல புதிய சொற்களை எனக்குக் கற்றுக் கொடுத்தது
-ஒரு சில
வியல். பரை.‌கறு
- அடுத்து கற்பனைத் திறனை வளர்த்து கவிஞர்களை உருவாக்கும் கவிதைப் போட்டி
உண்மையில்
என்னை ஒரு கவிஞனாக எனக்குத் தெரியச் செய்தது நம் குழுதான்
எண்ணிப் பார்த்து முடியாமல் விட்டு விட்டேன்
_தொடரந்து 30 வாரங்களுக்கு மேல் வெற்றியாளனாக வலம் வரச் செய்த பெருமை நம் குழுவுக்கே
குழுவின் பணி சிறக்க வாழ்த்துகள்
நிறைவாக ஒரு சில-
சென்று வாரக் கவிதை போடடி_
என் கவிதைக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பாராட்டுகள் குவிந்தன
அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு வாழ்த்தும் தெரிவித்தனர் admins
ஆனால் வெற்றியாளர் பட்டியலில் என் பெயர் இல்லை
கவிதையில் அரசியல் கலப்பு இருப்பதால் தேர்வாகவில்லை என விளக்கம் வந்தது
முற்றிலும் ஏற்கத்தக்க விளக்கம்
ஆனால் அதை உடனே தெரிந்திருந்தால் திருத்தி வேறு கவிதை அனுப்பியிருக்கலாம்
இன்று வார்த்தை விளையாட்டு வெற்றறியாளரிலும் என் பெயர் இல்லை
96 சொற்கள் அனுப்பிய என் பெயர் ஏன் இல்லை என்று கேட்ட பின் சிறு த‍வ‌றாகி விட்டது என்று
சொல்லி சான்றிதழ் வெளியிட்டார்கள்
நன்றி
இதையெல்லாம் குறையாக நான் சொல்லவில்லை
நம் குழு அப்பழுக்கற்ற ஒன்றாக சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன்
King can do no wrong
என்பதற்கு இணங்க சிறு குற்றம் குறை எதுவுமில்லாமல் நம் குழு மேலும் மேலும் சீரான வளர்ச்சி பெற வாழ்த்தி மடலை நிறைவு செய்கிறேன்
மீண்டும் நன்றி
Admin
All-star contributor
மிக்க நன்றி கவியே குறை நிறைகள் தெளிவாக எடுத்துரைத்த உங்கள் பண்பை பாராட்டுகிறேன்

TN Babu
All-star contributor
தாங்களின் மடலில்
குறையை நேர்த்தியான
முறையில் தெரிவித்த
அன்பு சகோதரருக்கு
நன்றிகளும், பாராட்டுகளும் 



                                                                              28102024/







Saturday, 5 October 2024

தமிழ் {மொழி }அறிவோம் கவுல் 06102024 ஞாயிறு

 




தமிழ் {மொழி }அறிவோம்

கவுல்
06102024 ஞாயிறு
மூன்றெழுத்தில் ஒரு சொல்
முதல் எழுத்து க
மற்ற இரண்டும் இடையினம்
மூன்றாவது மெய்யெழுத்து
பொருள்கள் பல
ஒரு சில : ஒப்பந்தம் வஞ்சனை
உச்சரிப்பில் ஒரு முன்னால் உயர் ராணுவ அதிகாரியின் பெயர போல ஒலிக்கும்
என்ன அந்தச் சொல் ?
விடை
கவுல்
சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
சோமசேகருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி
• கவுல், பெயர்ச்சொல்.
தீநாற்றம்
நிலக்குத்தகை
உடன்படிக்கை
வஞ்சனை
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
Brij Mohan Kaul (1912–1972) was a Lieutenant General in the Indian Army. He served as the Chief of General Staff during 1961–1962 and was regarded as a key architect of Indian military response to the Chinese challenge.
(கவுல்---தினமணிக் கதிரில் ஒரு கதையில் வந்த சொல் )
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௬௧௦௨௦௨௪
06102024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 3 October 2024

திருமறை குரான் ஆயத்துல் குரஸி 2:255 04102024 வெள்ளி

                                                 



 திருமறை குரான்

ஆயத்துல் குரஸி 2:255
04102024 வெள்ளி
----------அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.------------
-------.
இது எந்த குரான் வசனத்தின் பகுதி ?
விடை சுராஹ் 2 அல்பக்ரா (மாடு) வசனம் :255 ஆயத்துல் குரஸி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா – முதல் சரியான விடை
சிர்ஜுதீன்
ஹசன் அலி
ஷர்மதா
தல்லத் &
ஷிரீன் fபாருக்
ஆயத்துல் குர்ஸி
இறை வசனங்களின் அரியாசனம் என அழைக்கப்படும் இந்த வசனம் உலக அளவில் மிக அதிகமாக மனனம் செய்யபபட்டு எழுதப்படும் ஓன்று
“. ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன
. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.
அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.
அவனது இருக்கை, வானங்களையும்,5 பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.”
திருக்குர்ஆன் 2:255F
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
30ரபியுல் அவ்வல்(3) 1446
04102024 வெள்ளி
சர்புதீன் பீ

வார்த்தை விளயாட்டு அக்டோபர் 2024//03/10/17/24/31









03102024    87 words //24 winners


101024 100 w 31w




17102024 96 words/34winners










24102024 96/30

 




                                                          31102024 37 சொற்கள் /30 வெற்றி -3ம் அதற்கு மேலும்
எழுத்துக்கள் உள்ள  சொற்கள் மட்டும் 



                                                    

Wednesday, 2 October 2024

புதன் பதிவு பல்கலைக் கழகம்குடும்ப வினா விடைபொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு 02102024புதன்

 




பல்கலைக் கழகம்

(புதன் ) சிறப்புப் பதிவு

02102024புதன் 

குடும்ப வினா விடை  

எங்கள் அத்தா அம்மா பற்றி சில எளிய வினாக்கள் 


அத்தா

உடன் பிறப்புகள் எத்தனை பேர் ?

அவர்கள் பெயர் என்ன  ?

அவர்கள் வாழ்கைத்  துணைகள் பிள்ளைகள் பற்றித் தெரியுமா ?

தெரிந்ததை சொல்லுங்கள் 


இதே வினாக்கள் 

அம்மாவுக்கும்

 உடன் பிறப்புகள் எத்தனை பேர் ?

அவர்கள் பெயர் என்ன  ?

அவர்கள் வாழ்கைத்  துணைகள் பிள்ளைகள் பற்றித் தெரியுமா ?

தெரிந்ததை சொல்லுங்கள் 


உடனே  விடை  சொல்லத் துவங்கி விட்டீர்களா ?

சிலர், பலர் இதில் கலந்து கொண்டு  விடை சொல்ல முடியாது 

---என் உடன் பிறப்புகள் அவர்கள்  வாழ்க்கைதுணை நலன்கள் 

---அம்மா அத்தாவின்  உடன் பிறப்புகளான எங்கள் பெரியத்தா ,சச்சா 

சின்னம்மா , மாமா குப்பியின் பிள்ளைகள் 


அதாவது எங்கள் தலை முறையினர் யாரும் கலந்து கொள்ளவேண்டாம் 

அதற்கு அடுத்த அதற்கும் அடுத்த தலை முறை முறையினருக்கான பதிவு  இது 

நீங்கள் அவர்களுக்கு வழி காட்டலாம் 


என்ன எங்கள் ஆர்வத்தை மட்டுப்படுத்தி விட்டீர்களே என்று நினைக்க வேண்டாம் 

இதைத் தொடர்ந்து 

எல்லோருக்குமான பதிவு open to all பொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு வருகிறது 

விடை 

தெரிந்தவரை முயற்சி செய்து விடை அனுப்பிய  ஒரே சகோ

அஷ்ரப் ஹமீதாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

ஒரு சிறிய ---இல்லை இல்லை

பெரிய வருத்தம , சினம் கலந்த வியப்பு 

எத்தனை பேரன் பேத்திமார் ,கொள்ளுப் பேரன் பேத்திமார்  அத்தா அம்மாவுக்கும் அவர்களின் உடன் பிறப்புகளுக்கு !

யாருக்குமே விடை தெரியவில்லையா இல்லை தேர்ந்ததை சொல்ல மனமில்லையா !!

விடை நான் சொல்வதா க இல்லை 

ஆர்வம் இருந்தால் உங்களுக்கு மூத்த தலைமுறையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்


பல முறை அத்தா அம்மாவின் உடன் பிறப்புகள் பற்றி  எழுதியிருக்கிறேன் 





பொய்யும் மெய்யும் புதிர்ப்பதிவு 

 (புதன் ) சிறப்புப் பதிவு

உங்கள் ஊருக்குப் போகும் வழி எது ?


02102024 புதன் 


இது ஒரு தத்துவப் பதிவு என்று எண்ணி புறந்தள்ளி விட வேண்டாம் 

அதற்காகத்தான் தலைப்பிலேயே ‘புதிர்’ போட்டு விட்டேன் :


பொய்யூர் மெய்யூர் என இரண்டு சிற்றூர்கள் 

பொய்யூர் வாசிகள்  பொய் மட்டுமே பேசுவார்கள் 

மெய்யூர் – உண்மை மட்டுமே


மெய்யூரில் உள்ள ஒருவரைப் பார்க்க போகிறீர்கள்

ஒரு இடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்து ஓன்று மெய்யூருக்கு மற்றது பொய்யூருக்குப் போகிறது 

ஆனால்  எது எந்த ஊருக்கு என்று சொல்லும் பலகை இல்லை 


அங்கே ஒருவர் நிற்கிறார் 

அவர் இரண்டு ஊரில் ஒன்றைச் சேர்ந்தவர்  

ஆனால்  எந்த ஊர்க்காரர் என்பது தெரியாது 



அவரிடம்  ஒரு கேள்வி

ஒரே ஒரு கேள்வி 

கேட்டு நீங்கள் சொல்லவேண்டிய மெய்யூருக்குப் போக வேண்டும் 


என்ன கேட்பீர்கள் ?

விடை 

உங்கள் ஊருக்குப் போகும் வழி எது ?

விளக்கம் தேவை  இல்லை என நினைக்கிறன் 

சரியான விடை அனுப்ப்பிய ஒரே சகோ


கணேச சுப்ரமணியத்துக்கு  நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்

முயற்சித்த சகோ சின்ன தஙகத்துக்கு நன்றி 


முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கும் அஷ்ரப் ஹமீதாவுக்கும் நன்றி 


இறைவன் நாடினால் நாளை குர்ஆனில்  சிந்திப்போம் 

02102024புதன் 

சர்புதீன் பீ