Tuesday, 19 May 2020

அழகின் வரலாறு




“மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகிறோம்”
என்று ஏக இறைவன் நபி பெருமான் அவர்களிடம் சொல்லுவதாகத்  துவங்குகிறது திருமறையின் 12 ஆவது பகுதியான “”யூசுப்””

111 வசனங்கள் கொண்ட இந்தப் பகுதி நபி யூசுப் அலை அவர்களின்  வரலாற்றை அழகாக  முழுமையாகச் சொல்கிறது   

“மிக அழகானவர் என்று நபி பெருமானார் அவர்களால் புகழப்பட்டவர் யார்”
இதுதான் நேற்றைய வினா

அழகு மட்டுமல்ல உலகின் மிக கண்ணியாமானவர என்றும் போற்றப்பட்டவர்
அவர்தான் நபி யூசுப் அலை

 யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு நபி யூசுப் அலைக்கு இறைவன் அருளியிருக்கிறான்
நான்கு தலை முறை நபி அவர்

நபி இப்ராகிம் அலை  மகன் நபி இஸ்ஹாக் அலை
அவர் மகன் நபி யாகூப் அலை அவர் மகன் நபி யூசுப் அலை

இஞ்சில் எனப்படும் பைபிளில் யூசுப் நபி ஜோசப் என்று அழைக்கப்படுகிறார்

Joseph S/O Jacob S/O Isaac S/O Ibrahim

----------இப்ராஹிமின் சந்ததியாரையும்------------இறைவன் அகிலத்தாரை விட மிக மேலாகத் தேர்ந்தெடுத்தான் (குரான் 3:33)

நபி பெருமான் தன் அருமை மனைவி கதீஜா பிராட்டியாரையும் நெருங்கிய உறவினராகவும் பாதுகாவலராகவும் இருந்த முத்தலிப் அவர்களையும் இழந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதல் கூற இறைவன் இறக்கி வைத்த இந்தப் பகுதிக்கு பல சிறப்புகள் உண்டு

-    ஒரே நேரத்தில் தொடர்ந்து முழுமையாக இறக்கபட்டது
-    -முழுமையாக ஒரு வரலாற்றை சொல்வது

இறைவனே அழகிய வரலாறு என்று சொன்ன இந்தப்பகுதி  பற்றி
அழகின் ஈர்ப்பு என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2018 செப்டம்பரில்) நான்கு பகுதிகளில் ஓரளவு விரிவாக எழுதியிருக்கிறேன்
இப்போது சில செய்திகளை மிகச் சுருக்கமாகப் அடுத்த பகுதியில்  பார்ப்போம் 

யூசுப் என்று  விடை சொன்ன
மெஹராஜ் அக்காவுக்கும்

Joseph என்று விடை சொன்ன
பேரன் பர்வேஸ் அஹமதுக்கும்

வாழ்த்துகள பாராட்டுகள்

தகவலுக்காக
18 சித்தர்களில் ஒருவரான ராம தேவ சித்தரும் நபி யூசுப் அலை அவர்களும் ஒருவரே என்று ஒரு கருத்து உலவுகிறது  

இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்

19052020tue

sherfuddinp.blogspot.com

Monday, 18 May 2020

அழகு




“இறைவன் உலக மக்கள் அனைவருக்குமாக படைத்த மொத்த அழகின் அளவில் சரி பாதியை இவர் ஒருவருக்கே கொடுத்துவிட்டு மீதமிருக்கும் பாதியைத்தான் மற்ற எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தான் “

என்று நபி முகமது ஸல் அவர்களால் புகழப்பட்டவர் யார்?

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

18052020mon

sherfuddinp.blogspot.com  

Sunday, 17 May 2020

நபித்தோழர்




சுராஹ் 80ல் குறிப்பிடப்படும்
கடுகடுக்கப்பட்டவர் (கண் தெரியாதவர்) யார் ?

 இது நேற்றைய வினா

அவர் அப்படி ஒன்றும் சாதாரண மனிதரல்ல

நபித்தோழர்(சகாபா)களில் ஒருவர் 

ஆரம்ப காலத்தில் இசுலாத்தை தழுவிய வெகு சிலரில் ஒருவர்

நபி பெருமானின் துணைவி அன்னை கதீஜா பிராட்டியார் அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்

அதாவது நபி பெருமானுக்கு மைத்துனர் முறை ஆனவர்

அவர் பெயர்
உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ்

தகவலுக்காக
பொதுவாக நபி பெருமானுக்கு கடுகடுக்கும் குணம் கிடையாது
மேலும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு தோழரைப் பார்த்து அவர் கடுகடுத்திருக்க வாய்ப்பில்லை
கடுகடுத்தவர்கள் அரபுப் பெருந்தலைவர்கள்தான் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுவதுண்டு  
ஆனால் திருமறையின் வாசகங்கள் மிகத்தெளிவாக கடுகடுத்தவர் நபி பெருமான் என்பதை தெரிவிக்கின்றன

மீண்டும் சரியான பதிலை அனுப்பி மீண்டும் பாராட்டுப் பெறுகிறார்
பேரன் பர்வேஸ் அகமத்

இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்

17062020sun

sherfuddinp.blogspot.com


Saturday, 16 May 2020

எளியோரும் ------



“அவர் கடுகடுத்தார் முகத்தைத் திருப்பிகொண்டார் “

இப்படித் துவங்குகின்றது திருமறையின் 80 ஆவது பகுதி
அரபு மொழியில் கடுகடுத்தார் என்னும் பொருளுடைய  அபஸ என்ற சொல்லே இந்தப் பகுதியின் பெயராக இருக்கிறது

இந்த நிகழ்வு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்
சுருக்கமாக :

நபி ஸல் அவர்கள்அரேபியப் பெருந்தலைவர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்கிறார் .அவர்களை சத்திய வழியான இசுலாமை தழுவ வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் இசுலாத்துக்கு  வந்தால்  அவர்ளைப் பின்பற்றி  நிறையப்பேர் வரலாம்.

அந்த நேரத்தில் பார்வையற்ற  ஒரு எளியவர் இசுலாம் பற்றி அவருக்குள்ள சில ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள நபிகளை நோக்கி வருகிறார்

அவரின் வருகையைத் தன உரையாடலுக்கு இடையூறாக எண்ணிய நபி பெருமான் கடுகடுதது முகத்தைத் திருப்பி கொள்கிறார்

நபி பெருமானின் இந்தச் செயல் தவறு என்று சுட்டிக்காட்டி அவரைக் கண்டிக்க இறைவன் அருளியதுதான்  இந்த 80 ஆவது சுராஹ்

முதலில் யாரையோ கண்டிப்பது போல் அவர் கடுகடுத்தார் என்று துவங்கினாலும் அடுத்து வரும் மறை மொழிகள் நபி ஸல் அவர்களை நோக்கியே செல்கின்றன

சத்திய வழியில் இணையாத சிலருக்காக ஏற்கனவே இணைந்த ஒருவரைப் புறக்கணிப்பது தவறு என்று சற்றுக் கடுமையாக இறைவன் நபி பெருமானை சாடுகிறான்
இப்போது இன்றைய வினா :
கடுகடுக்கப்பட்டவர் ( கண் தெரியாதவர் ) யார் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
16052020sat
sherfuddinp.blogspot.com

Friday, 15 May 2020

முகம் திரிந்து




ஒரு நல்ல மனிதர் , நல்ல இறை நேசர் அந்த ஊர் மிகப் பெரிய மனிதர்கள் சிலருடன்  உரையாடிக்கொண்டு இருக்கிறார், அப்போது அங்கு வரும் தோற்றத்தில் எளிமையான் ஒருவரைப் பார்த்ததும் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்

அன்று இரவு அவர் கனவில் இறைவன் வந்து இந்தச் செயலுக்காக அவரைக் கண்டிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார்

இது போல் ஒரு நிகழ்வு நபி ஸல் அவர்கள் வாழ்விலும் நடந்திருக்கிறது
அது என்ன ?

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

15052020fri.

sherfuddinp.blogspot.com

Wednesday, 13 May 2020

எல்லாப்புகழும்--------




 சூரா 57, 59 ,61, 62, 64
இவை ஐந்தும்
ஒரு குழுவாக அறியப்படுகின்றன
இந்தக் குழுவுக்கு
அல் முஸப்பிஹத் Al-Musabbihat 

இந்த ஐந்து சூராக்களிலும் முதல் வரி இறைவனின் புகழ் பாடுவதாக அமைந்துள்ளது
எனவே இந்தப்பெயர்

 வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.(57 :1)

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.(59:1)

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.(61:1) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.(62:1)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.(64:1)
அல் முஸப்பிஹத் Al-Musabbihat  என்ற சொல்லுக்கு புகழ்பவர்கள் என்று பொருள்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம் ( புனித மாதம் இறைவன் அருளால்  இன்னும் பத்து நாட்களில் நிறைவுறும் . அதுவரை இறைவன் நாடினால் இது போன்ற பதிவுகள் தொடரும் . )
14052020thu
sherfuddinp.blogspot.com

சுராஹ் அல் ஹடித்




ஹா-மீம் சூராக்கள் பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம்
இது போல் திருமறையின் பகுதிகள் துவக்கத்தில் வரும் பொருள் புரியாத அரபு எழுத்துக்களின் அடிப்படையில் அலிப் லாம் மீம் அலிப் லாம் ரா போன்ற  , பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன –

இது போக வேறு அடிப்படையில்  இன்னும் சில குழுக்களும் உள்ளன

  அல் ஹடித் Surah 057 - Al-Hadid (The Iron)
 அல் ஹஷ்ர் Surah 059 - Al-Hashr (The Gathering
 அஸ் ஸப் Surah 061 - As-Saff (The Row)
  அல் ஜூம்மாஹ் Surah 062 - Al-Jumu'ah (Friday)
   அத் தகபுன் Surah 064 - At-Taghabun (Mutual Loss and Gain)

இந்த ஐந்து சூராக்களும் ஒரு குழுவாக அறியப்படுகின்றன

அந்தக் குழுவின் பெயர் என்ன ?
ஏன் அந்தப்பெயர் ?

வினாதான் பெரிது
விடை சிறிது

இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்

13052020wed

sherfuddinp.blogspot.com