Monday, 26 April 2021

குரான் குறிப்புகள் சில 14

 திரு மறை சில குறிப்புகள் 14

27042021tue
1. (15:14,15) இறைவன் வானத்துக்கு ஒரு வழியைத் திறந்து வைத்து அதில் அவர்கள் நாள் முழுதும் பகல் வெளிச்சத்தில் ஏறினாலும் அவர்கள் இறை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் . மாறாக ஒரு தீய சக்தி எங்கள் கண்களை கூச வைத்து, பார்வையை மறைத்து விட்டது என்று சொல்வார்கள்
2.(15:19 -23 ) பூமி பற்றி இறைவன் சொல்வது :
நிலப்பரப்பை விரித்து அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினோம்.தேவையான அளவிலேயே ஒவ்வொன்றையும் பூமியில் முளைக்க வைத்தோம் .எல்லோருக்கும் வாழ்வாதாரத்தை வழங்கினோம்
(விளைபொருட்கள் ,காற்று, நீர், வெளிச்சம் ,வெப்பம் ,குளிர் ,விலங்குகள் ,சக்தி என ) எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இறக்கி வைக்கிறோம் . மழை பொழிய வைத்து உங்களுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பதும் நாமே உயிர் கொடுப்பதும், மரணிக்க வைப்பதும் நாமே
3.15:26- -44இறைவன் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்து உயிரூட்டினான் . அதற்கு முன்பு வெப்பமான (புகை இல்லாத ) நெருப்பிலிருந்து ஜின்னை உருவாக்கினான்.(முதல் மனிதன் ஆதமுக்கு இறைவன் ஆணைப்படி மலக்குமார்கள் சிரம் தாழ்த்தி வணங்கியது, இப்லிஸ் மறுத்தது , இப்லிஸ் வெளியேற்றப்பட்டது .இப்லிஸ் மக்களை வழி கெட வைக்க சூளுரைத்தது எல்லாம் விவரிக்கபடுகிறது . நரகத்துக்கு எழு வாசல்கள் உண்டு எனபது தெரிவிக்கப்படுகிறது
4.(15:45- 60) இறைநம்பிக்கை கொண்டு நல்வழி நடப்பவர்களுக்கு சுவனம் நிச்சயம் –
குரானில் பல செய்திகள் தேவை, முக்கியத்துவம் கருதி திரும்பத் திரும்ப சொல்லப்படும் . அந்த வகையில் இங்கு இப்ராகிம் நபி, லூத் நபி, லூத் சமுதாயம் முற்றிலும் அழிக்கப் பட்டது போன்ற செய்திகள் (15:61-79) ல்
5.15:80-84 பெரிய மலைகளைகுடைந்து வீடுகள் கட்டி மிகப்பாதுகாப்பாக வாழ்ந்து வந்த ஹிஜ்ர நகர வாசிகள் வழி தவறி நடந்தார்கள இறை தூதர்களை கேலி செய்தார்கள் . ஒரே ஒரு பேரிடி போன்ற முழக்கம் அவர்களை முற்றிலுமாக அழித்து விட்டது
6.15:87- எழு சிறப்பான வசனங்கள் கொண்ட அல்ஹம்து சூராவும் , குரானும் இறைவன் வழங்கிய மிகப் பெரும் அருட்கொடையாகும்
7.1-9 iஇறைவன் ஒருவனே என்பதை தன் வசனங்கள் மூலம் இறைவன் எடுத்துச் சொல்கிறான் பல வகையான கால்நடைகளை மனிதன் பயன்படுத்தவேஇறைவன் படைத்திருக்கிறான்
8. (16:18) மிகவும் கருணை மிக்க இறைவன் அள்ளிக்கொடுத்திருக்கும் நலன்களை மனிதனால் எண்ணிப்பார்க்க கூட முடியாது .
9. (16:25) இறை நம்பிக்கை அற்றோர் தங்கள் சுமைகளோடு தங்களால் வழிகெட்டுப் போனவர்கள் சுமையையும் சேர்த்து மிகப்பெரிய சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் (16:34) இறை நம்பிக்கை அற்றோர் செய்த தீய செயல்களும் அவர்கள் கிண்டல் செய்தவையும் அவர்களை திகைப்பில் ஆழ்த்தி மேலோங்கி நிற்கும்
10. (16:40) இறந்தவர்களை உயிர்ப்பித்தல் முடிகிற செயலா என்று ஐயம் கொள்பவர்களுக்கு இறைவன் சொல்கிறான் “ இறைவன் எதாவது செய்ய விரும்பினால் அவன் செய்யவேண்டியதெல்லாம் : ஆகுக என்று சொல்வதே .: உடனே அது ஆகிவிடுகிறது كُنۡ فَيَكُوۡنُ‏ kun fayakoon
11.(16:45) தங்கள் மேல் இறை கோபம், தண்டனை தங்களை ஒன்றும் செய்யாது என்று நம்பிக்கை அற்றோர் உண்மையிலேயே பாதுகாப்பாக உணர்கிறார்களா?
12. (16:53, 54) மனிதர்களுக்குக் கிடைக்கும் நலன்கள் ,நன்மைகள் எல்லாம் இறைவன் கொடுப்பவையே. மனிதனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அப்போதும் அவன் உதவிக்கு இறைவனையே அழைக்கிறான். அத்துன்பம் நீங்கியதும் மனிதன் இறைவனை மறந்து நன்றி மறுக்கிறான்
13.(16:65) வரண்டு உயிரற்றுக் கிடந்த பூமி மழை பெய்தவுடனே உயிர் பெற்று செடிகள் முளைக்கின்றன. நல்லவற்றை செவிகொடுத்துக் கேட்போருக்கு இதில் இறைவனின் அத்தாட்சி தெளிவாகும்
14. (16:68) இறைவன் ஆணைப்படி தேனீக்கள் மலைகளிலும் மரங்களிலும் மற்ற இடங்களிலும் கூடு காட்டுகின்றன .அவை எல்லா வகையான பழங்களின் சாறை உறிஞ்சி அவற்றை தம் வயிற்றில் பல நிறங்கள் கொண்ட தேனாக மாற்றுகின்றன .அருமருந்தாக விளங்கும் தேன்இறைவனின் அற்புதத்துக்கு மேலும் ஒரு சான்றாக இருக்கிறது
15. (16:74) எல்லாம் அறிந்த இறைவனோடு எதையும் ஒப்பிடாதீர்கள்
16. (16:79) நடு வானில் பறக்கும் பறவைகளை விழாமல் பாதுகாப்பவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ? இதுவும் இறை அற்புதத்துக்கு ஒரு சான்றாகிறது
17. (16:86) தீர்ப்பு நாளில் நம்பிக்கை கொள்ளாதோர் ஏக இறைவன் பற்றிய உண்மையை அறிந்து கொள்வார்கள்
18.(16:90) நல்ல ஒரு சமுதாயம் இறை வழியில் உருவாக
நீதியை நிலை நாட்டுங்கள், அன்பாக இருங்கள், உற்றார் உறவினருக்கு உதவுங்கள்.தீய,,மானக் கேடான செயல்களிலிருந்து முற்றிலுமாக விலகி விடுங்கள்
19. (16:103) நபி பெருமானுக்கு ஒரு மனிதர்தான் குரான் வசனங்களை சொல்லித்தருகிறார் என்று வீண் பழி சுமத்துகின்றனர் .அவர்கள் குறிப்பிடும் அந்த மனிதர் அரபு மொழியர் அல்ல .அனால் குரான் மிகத் தெளிவான செம்மையான அரபு மொழியில் இருக்கிறது
20. (16:112) வளம் மிகுந்த அந்த நகரம் ,மிகப் பாதுகப்பானாதாகவும் எல்லாவிதமான வாழ்வாதாரங்கள் நிறைய உள்ளதாகவும் இருந்தது . ஆனால் அந்த நகர மக்கள் நன்றி மறந்து , இறைவனின் சினத்துக்கு ஆளாகி விட்டார்கள் .வழி தவறிப்போன மக்களுக்கு வறுமை ஆடைபோல் போர்த்தப்பட்டது . பசியும் அச்சமும் அவர்களை வாட்டியது
21.(16:120)இப்ராகிம் நபி ஏக இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்தவராய் அவனுக்குப் பணிந்து நடந்தார் ஒரு போதும் அவர் ஏக இறைவனுடன் மற்றவர்களை இணைத்துப்பார்த்தது இல்லை . மொத்தத்தில் அவர் ஒரு முழு சமுதாயமாகத் திகழ்ந்தார்
இது குரான் ஜூசு
14 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
சிறு வயதில் யூசுப் நபி கண்ட கனவு என்ன ? அது பற்றி அவர் தன் தந்தையிடம் சொன்னபோது தந்தை சொன்ன மறு மொழி என்ன
விடை
(12:4)
ஒரு நாள் யூசுப் தன் தந்தையிடம் வந்து, “தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், எனக்கு சிரம் பணிவதாய் கனவு கண்டேன்” என்று கூறினார்.
அதற்கு அவர் தந்தை “என் அருமை மகனே நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள் என்று கூறினார்.
சரியான விடையை மிகத் தெளிந்து எழுதி அனுப்பிய
சகோஞாழல் மலர்அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
யாருடைய வழியைப் பின்பற்றுமாறு இறைவன் நபி ஸல் அவர்களுக்கு கட்டளை இட்டான் ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
27042021 tue
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

Sunday, 25 April 2021

குரான் குறிப்புகள் சில -13

 திரு மறை சில குறிப்புகள் 13

26042021mon
1.யூசுப் சொன்ன கனவின் பலன்களைகேட்டு மகிழ்ந்த மன்னன் அவரை :அழைத்து வரச் சொல்ல யூசுப் வந்தவரிடம் உங்கள் மன்னரிடம் பெண்கள் கையை வெட்டிக்கொண்ட நிகழ்வை நினைவூட்டுங்கள் எனச் சொல்லி அனுப்பினார் .மன்னர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க தாம்தான் தவறு செய்த்தது யூசுப் அல்ல என்று ஒத்துக்கொண்டார் ..
2.இல்லத் தலைவன் இல்லாத நேரத்தில் தான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை இதன் மூலம் உறுதி செய்த யூசுப் சொன்னார் : என் இறைவன் என்னைக் காத்திருக்கா விட்டால் நானும் தவறு செய்திருப்பேன் என்றார்
3.யூசுபை பணியில் சேர்த்துக்கொண்ட மன்னர் யூசுப் விரும்பியபடி நாட்டின் வளங்களைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்
4.இதன் மூலம் இறைவன் தான் நாடியவருக்கு நல்ல பதவியும் இடமும் கொடுத்து விடுவான் என்பதை உறுதிப்படுத்தி விட்டான்
5.(12:58-68)நாட்டில் கடும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட(யூசுபை கிணற்றில் தள்ளிய ) யுசுபின் சகோதரர்கள் உணவுப்பொருட்கள் வாங்க யூசுபை நாடி வந்தனர் .யூசுப் அவர்களைத் தெரிந்து கொண்டார் ஆனால் அவர்கள் யூசுபை அறியவில்லை ..அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை நிறைய அளித்த யூசுப் அடுத்த முறை வரும்போது அவர்கள் (யூசுபின் ) தம்பியை கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்று சொன்னார் .அதோடு உணவ வாங்க அவர்கள் கொண்டுவந்த பொருட்களையும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பையில் வைக்கச் செய்தார் .யூசுபின் சகோதரர்கள் தங்கள் தந்தை யகூபிடம் (யுசுபின் ) சகோதரரை தங்களுடன் அனுப்பி வைத்தால்தான் அடுத்து உணவுப் பொருள் கிடைக்கும் என்று சொல்ல மிகுந்த தயக்கத்துடஅனுப்பி வைக்கிறார்
6. (12:69-79)
அடுத்த முறை அவர்கள் வந்தபோது யூசுப் தன்சொந்தத் தம்பியை தனியே கூப்பிட்டு நான்தான் உனது அண்ணன் என்று சொல்கிறார் (.தம்பியை தன்னோடு வைத்துக்கொள்வதற்காக) தன் கோப்பையை தம்பியின் பையில் வைத்து அவர் திருடி விட்டார் என்று சொல்லி அதற்கு தண்டனையாக தம்பியை தன்னோடு வத்துகொள்கிறார் யூசுப் உங்கள் இளைய மகன் திருடியதால் அவனைப் பிடித்து வைத்குக்கொண்டனர் என்று யகூபிடம் அவர் மக்கள் சொல்ல , அவர் துக்கம் தாளாமல் யுசுபுக்கு தீங்கு செய்தது போல் அவர் தம்பியையும் நீங்கள் எதோ செய்து விட்டீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுகிறார் . கண் பார்வை மிகவும் மறைந்த நிலையில் இறைவனிடம் முறையிடுகிறார் . எப்படியாவது யுசுபையும் அவர் தம்பியையும் என்னிடம் கொண்டு வந்து சேருங்கள் என்று மக்களிடம் சொல்கிறார்கள்
7.12:80-93
மீண்டும் யூசுபிடம் வந்த சகோதரர்கள் நாங்கள் மிகவும் சிரமமான நிலையில் இருக்கிறோம் . எங்களிடம் இருக்கும் சிறிதளவு பொருளைப் பெற்றுகொண்டு நிறைய உணவுப் பொருட்களை எங்களுக்கு தருமம் செய்யுங்கள் என்று சொன்னார்கள் .நீங்கள் யுசுபையும் அவரது தம்பியையும் என்ன செய்தீர்கள் என்று கேட்ட யுசுபை அறிந்து கொண்ட அவர்கள் , நீர்தான் யுசுபா , உங்களை இறைவன் மிக நல்ல நிலையில் வைத்திருக்கிறான் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்கிறார்கள் . அவர்கள் தவறை மன்னித்த யூசுப் தன் சட்டையைக் கொடுத்து இதை தந்தையின் முகத்தில் போடுங்கள் .அவருக்குக் கண் பார்வை திரும்பி விடும் . நம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இங்கே வாருங்கள் என்று சொன்னார்
8.12:94-104
அவர்கள் அங்கிருந்து புறப்படும்போதே யகூப் நபி தன் மகன் யூசுபின் அருகாமாயை உணர்ந்து சொல்ல முதுமையின் பிதற்றல் என்று மற்றவர்கள் கேலி பேசினார் . யூசுபின் சட்டை யகூபின் முகத்தில் போடப்பட்டு அவருக்கு பார்வை திரும்பியதும் தான் உணர்ந்தது உண்மைதான் என அறிந்து இறைவனுக்கு நன்றி செல்த்தினார் . அவர் மக்கள் தம் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கோரினர் . பின்னர் ஒரு குழுவாக யஊசுபைக்கான எகிப்திக்குப் புறப்பட்டனர் யூசுப் நபி அவர்களை வரவேற்று ,பெற்றோரை கண்ணியமான முறையில் வரவேற்று தம் அருகில் வைத்துக்கொண்டார் . பெற்றோர்கள் அவறை சிரம் தாழ்த்தி வணங்கினர் .ஆட்சி அதிகாரத்தயும் ஞானத்தை யும் வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்திய யூசுப் நபி தாம் ஏக இறைவனை நம்பிய நிலையிலேயே உயிர் பிரிய வேண்டும் என வேண்டினார்
9.முகமது நபி ஸல் அவர்கள் அறிந்திராத இந்த கதையை இறைவன் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்
இந்த அழகிய கதையைச் சொன்ன இறைவன் தொடர்ந்து குரான் கூறும் அடிப்படைக் கருத்துக்களை – ஏக இறைக்கொள்கை, இறைவன் காட்டும் அடை யாளங்கள் ,நபி மார்களுக்கு ஏற்படும் சோதனைகள் , மறுமை நாள் – எல்லாம் வலியுறுத்திச் சொல்லி குர்ஆனில் வரும் செய்திகள் எல்லாம் வெறும் கட்டுக்க்கதை அல்ல ,குரான் ஒரு வழிகாட்டியாகவும் இறைவனின் அருட்கொடையாகவும் இருக்கிறது என்று சொல்லி இந்த யூசுப் சூராவை இறைவன் நிறைவு செய்கிறான்
(ஒரே முறையில் முழுமயாக இறக்கபட்ட இந்த சுராஹ் யுசுப் நபியின் சரிதையை முழுமையாகச் சொல்கிறது எனவே நானும் முடிந்த வரை முழுமையான சூராவின் சுருக்கத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன் )
1
10.(13:4) பல் வேறு வகைபட்ட நிலங்களில் பல்வேறு வகையான செடி, கொடி ,மரங்கள் வளர்கின்றன . ஒரே நீர்தான் எல்லாவற்றிற்கும் பாய்கிறது . ஆனால் பல வகையான சுவையுடன் கனி, காய்கள் விளைகின்றன. சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இதில் இருக்கும் இறை அற்புத சின்னங்கள் தெளிவாகும்
11.(13:13)இடி முழக்கம் இறைவனின் புகழ் பாடிபுனிதமான அவனைக் கொண்டாடுகின்றன . அவன் மாட்சிமை பற்றி வாதத்தில் ஈடு படுவோரை அவன் இடியின் மூலமே வீழ்த்தவும் செய்கிறான்
12. (13:25) உறுதி செய்யப்பட்ட உடன் படிக்கைகளை மீறுவோர் ; இறைவன் சேர்த்து வைக்க ஆணை இட்டதை வெட்டிப் பிரிப்போர் ; பூமியில் குழப்பம் விளைவிப்போர் –இவர்கள் எல்லாம் இறைவனின் சினத்துக்கு உள்ளாகி மறுமையில் நரக வாழ்வுக்குத் தள்ளப்படுவார்கள்
13. (13:28:29) நபி ஸல் அவர்களின் செய்திகளில் நம்பிக்கை வைத்து இறைவனின் நினைப்பில் இருப்பவர்களின் இதயங்கள் நல்ல அமைதி பெறும். அவர்களுக்கு நல வாழ்வும் மறுமையில் சிறந்த தங்குமிடமும் நிச்சயம்
14. (13:37) அரபு மொழியில் தெளிவாக விதிகளை (குரானை ) உங்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோம். இந்தத் தெளிவ்க்குப்பிறகும் தவறான வழியில் மனதை செலுத்த எண்ணினால் நீங்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது
5.(13:39) இறைவேதத்தின் தாய் நூலான உம்முல் கிதாப் இறைவனிடமே இருக்கிறது . அவன் நாடியபடி அதில் கூட்டவோ குறைக்கவோ செய்வான்
16.(14:1) மனித குலத்தை இருளில் இருந்து மீட்டு ,எல்லாம் வல்ல இறைவனின் நல் வழியில் செலுத்தவே இந்த மறை நூலை இறைவன் இறக்கி அருளினான்
17. (14:7) “ நீங்கள் நன்றி உடையவராய் இருந்தால் நான் என் அருளை உங்களுக்கு மேலும் வழங்குவேன் . மாறாக நீங்கள் நன்றி மறந்தால் கடும் தண்டனை உண்டு” என இறைவன் அறிவிக்கிறான்
18. (14:18) ஒரு புயல் காற்று எப்படி சாம்பலை பறக்கச் செய்யுமோ அதே போல் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் செயல்கள் அனைத்தும் வீணாகி விடும்
19. (14:24,25) ஒரு நல்ல சொல் (லும் நல்ல செயலும்) ஒரு நல்ல மரத்துக்கு ஒப்பாகும் .வேரூன்றி நிற்கும் அந்த மரத்தின் கிளைகள் வானளாவி நிற்கின்றன இறையருளால் ஒவ்வொரு பருவத்திலும் நல்ல பழங்களை அந்த மரம் கொடுக்கிறது
,
20.(14:31) இறை நம்பிக்கை கொண்டோர் தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் . இறைவன் அவர்களுக்கு அருளியதிலிருந்து அவர்கள் மறை முகமாகவும் பிறர் அறியும்படியும் தான தருமங்கள் செய்யவேண்டும்
21.(14:37) "இறைவா இந்த வறண்ட வெறுமை பூமியில் உன் புனித ஆலயம் அருகில் என் சந்ததியினரை உன்னை வணங்குவதற்காக விட்டுச் செல்கிறேன் . அவர்களுக்கு மக்கள் ஆதரவையும் ,அவர்கள் சாப்பிட கனி வகைகளையும் வளங்குவாயாக “ இன்று நபி இப்ராகிம் இறைவனிடம் வேண்டினார்
( அதை ஏற்றுக்கொண்ட இறைவன் , இன்றளவும் அந்தப் புனித பூமியில் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையான கனிகளும் உணவு வகைகளும் கிடைக்கச் செய்திருக்கிறான் என்பது கண்கூடு )
22. (14:42,52)) தீயவர்களின் செயல்கள் அனைவற்றையும் இறைவன் அறிந்தே இருக்கிறான் . அவவர்களுக்கு ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்திருக்கிறான் “ என்று கூறும் இறைவன் அந்தக் கெடு முடிந்ததும் எப்படியெல்லாம் அவர்கள் வேதனைக்கு உள்ளாவார்கள் என விவரிக்கிறான்
இது குரான் ஜூசு
13 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
அவர்கள் தங்கள் செயல்களின் விளைவு என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் “
என்ற பொருள் எந்த வசனத்தில் வருகிறது ?விளக்கம் என்ன
விடை
(12:15) யூசுப் நபியை அவர் சகோதரர்கள் கிணற்றில் தள்ளி விட்டபோது
இறைவன் யுசுபுக்கு அருளிய வசனம்
: அவர்கள் தங்கள் செயல்களின் விளைவு என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் செயல்கள் பற்றி நீங்கள் அவர்களுக்கு நினைவு படுத்தும் காலம் ஓன்று வரும்
இன்றைய வினா
சிறு வயதில் யூசுப் நபி கண்ட கனவு என்ன ? அது பற்றி அவர் தன் தந்தையிடம் சொன்னபோது தந்தை சொன்ன மறு மொழி என்ன
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
26042021 mon
Sherfudd
No photo description available.
Like
Comment
Share

Saturday, 24 April 2021

குரான் குறிப்புகள் சில -12

 திரு மறை சில குறிப்புகள் 12

25042021sun
1.(11:39-49)இறைவன் ஆணைப்படி நுஹ் நபி ஒரு கப்பல் கட்ட த்துவங்க , அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அவரை ஏளனம் செய்கின்றனர் (தண்ணீரே இல்லாத இடத்தில் கப்பல் கட்டுவது கண்டு )
2.யார் ஏளனத்துக்கும் வேதனைக்கும் உள்ளாவார்கள் என்பது போகப் போகத் தெரியும் என நுஹ் நபி சொல்கிறார்
3.இறை கட்டளைப்படி பூமி உலை போல பொங்கி வெள்ளம் பெருகியது . நுஹ் நபியிடம் இறைவன் சொல்கிறான் : “ஒவ்வொரு உயிர் வகையிலிருந்தும் ஆண் பெண் கொண்ட ஒரு இணையை கப்பலில் ஏற்றுங்கள் . உங்கள் மக்களில் இறை நம்பிக்கை கொண்ட அந்த வெகு சிலரையும் , உங்கள் குடும்பத்தாரையும் ஏற்றிகொள்ளுங்கள் இந்தக்கப்பல் நிற்பதும் ஓடுவதும் என் கட்டளைப்படியே “
கப்பல் அலைகளில் மிதந்து செல்ல, நுஹ் நபி தன் மகனை கப்பலில் ஏறக் கூப்பிட, அவன் நான் ஏதாவது மலையில் ஏறி உயிர் பிழைத்துக் கொள்வேன் என்றான் ஒரு பேரலை வந்து மகனை மூழ்கடித்துவிட்டது
இறைவன் ஆணைப்படி மழை குறைந்து பூமியில் நீர் வடிய கப்பல்
ஜூதி மலை மேல் தங்கியது .இதற்குள் நம்பிக்கை இல்லாத அனைவரும் நீரில் மூழ்கடிக்கப் பட்டனர் .
தன் மகன் உயிர் பற்றி நுஹ் நபி இறைவனிடம் கேட்க , அவன் தீயவன் ,உங்களைச் சேர்ந்தவன் அல்ல . அவனுக்காக பரிந்து பேசுவது அறியாமை என்றான் இறைவன். உடனே இறைவனிடம் மன்னிப்புக் கோரினார் நபி
4.நபியே மலையை விட்டு இறங்கி கீழே செல்லும் .உமக்கு எமது பாதுகாப்பும் , அருளும் உண்டு .சில சமுதாயங்கள் இன்னும் புதிதாக தோன்றும் என்று இறைவன் சொன்னான்
5.முகமது நபி ஸல் அவர்கள் அறிந்திராத இந்த நுஹ் நபியின் சரிதையை இறைவன் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்
6.11:50-60 ஹுத் நபி பற்றிய நிகழ்வு
7.11:61-68 ஸாலிஹ் நபி பற்றி
8.(11:69-76 )லுத் நபியைக் காணச்சென்ற வானவர்கள் இப்ராகிம் நபியை சந்தித்து அவருக்குப் பிறக்கப்போகும் இஸ் ஹாக் பற்றியும் இஸ் ஹாக் மகன் யாகூப் பற்றியும் நற்செய்தி கூற இப்ராஹிமின் மனைவி வயதில் மூத்த் எங்களுக்கு எப்படிப் பிள்ளை பிறக்கும் என்று ஐயம் கொள்ள இது இறைவன் உங்களுக்கு அருளிய அருட்கொடை இது பற்றி ஐயம் வேண்டம் என்று வானவர் கூறினார்
மென்மையான உள்ளம் கொண்ட இப்ராகிம் நபி லூத் சமுதாயதுக்குக்காக பரிந்து பேச வானவர்கள் இது இறைவன் முடிவு செய்து விட்ட ஓன்று. இது பற்றிப் பேசாதீர்கள் என்றனர்
9.(11:77-83) லூத் நபி தம் மக்களிடம் பேசி அறிவுரை கூறியது , அவர்கள் அவரை நிராகரித்ததோடு வானவர்களையும் தீய எண்ணத்துடன் அணுகியது , இறைவன் சாபத்தால் கல் மழை பொழிந்து அவர்கள் அழிக்கப்பட்டது
10.சுராஹ் 12 யூசுப் – இந்த சூராவுக்கு ஒரு தனி சிறப்பு- சூராஹ் முழுக்க யூசுப் நபியின் வரலாறு ஒரு அழகிய கதைபோல முழுமையாகச் சொல்லப்
படுகிறது .
11.நபியே உமக்குத் தெரியாத பல செய்திகளை நாம் குரான் மூலம் அழகிய கதையாகச் சொல்லி தெளிவு படுத்துகிறோம் என்று இறைவன் சொல்கிறான்
யூசுபின் சகோதரர்கள் ( மாற்றாந்தாய் மக்கள் ) அவர்கள் எண்ணிக்கையில் நிறைய இருந்தாலும் அவர்கள் தந்தை (யகூப்நபி) யுசுபிடமும் அவரது தம்பியிடமும் அதிகப் பாசம் காட்டுவதால் பொறாமை கொண்டு யூசுபை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று நினைக்க , ஒருவர் - கொல்ல வேண்டாம் எங்காவது ஆழமான குழியில் போட்டு விடலாம் என்கிறார்.
யூசுபை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக அவர்கள் தந்தையிடம் சொல்லி வேட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு யூசுபை ஒரு இருட்டான கிணற்றில் தள்ளி விட்டு யூசுபை ஓநாய் தின்று விட்டதாக தந்தையிடம் பொய் சொல்கிறார்கள் . அவர் அதை நம்ப மறுத்தாலும் வேறு வழியின்றி பொறுமை காத்து இறைவனிடம் வேண்டுகிறார் ,
யூசுபை கிணற்றில் கண்ட ஒரு வணிகக் கூட்டத்தினர் அவரை சொற்ப விலைக்கு விற்று விடுகிறார்கள்
அவரை வாங்கியவர் தன் மனைவியிடம் இந்தப்பையனை நன்றாகக் கவனித்துக்கொள் . தேவைப்பட்டால் நாம் அவனை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்
சிறுவனாக இருந்த யூசுப் பருவம் அடைந்த போது இறைவன் அவருக்கு நீதி வழங்கும் ஞானத்தயும் அறிவையும் வழங்கினான்
யூசுப் வளர்ந்த வீட்டின் தலைவி ,அறைக் கதவை தாழிட்டு விட்டு தவறான நோக்கத்துடன் யூசுபை அழைக்கிறார் .அந்தப்பெண் நெருங்கி வரவர இறைவன் நல்வழியைக் காண்பித்து யூசுபை காப்பாற்றி விட்டான்
இருவரும் ஒருவரை ஒருவர் முந்தும்படி வாசலை நோக்கி ஓட , யூசுபின் சட்டையை அந்தப்பெண் பின்னாலிருந்து கிழித்து விடுகிறார் .வாசலில் தன் கணவரைக் கண்ட அந்தப்பெண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்த யூசுபை சிறையில் அடைத்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொய் சொல்கிறார்
யூசுப் அதை மறுத்து அந்தப்பெண்தான் தவறு செய்தார் என்று சொல்கிறார்
அங்கு வந்த பணிப்பெண் யூசுபின் சட்டை முன்பக்கம் கிழிந்திருந்தால் யூசுப் தவறு செய்தவர் . மாறக சட்டடை பின் பக்கம் கிழிந்திருந்தால் அந்தப்பெண்தான் தவறு செய்தவர் என்று சொல்கிறார் .யூசுபின் சட்டை பின்பக்கம் கிழிந்திருந்தது கண்டு உண்மை அறிந்து கொண்ட இல்லத் தலைவர் தன் மனைவியை யூசுபிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்
12.அவர் ஊரின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் .ஊரெங்கும் தலைவர் மனைவி தன் வீட்டுப் பணியாளரிடம் தவறாக நடக்க முற்பட்டார் என்ற பேச்சு பரவியது . தலைவர் மனைவி ஊரில் உள்ள உயர்குலப் பெண்களை விருந்துக்கு அழைத்தார் .இருக்கைகளில் சாய்ந்தபடி அவர்கள் பழங்களை கத்தியால் நறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவர்கள் மத்தியில் யூசுபை வரும்படி செய்தார் .அவர் அழகில் மயங்கிய பெண்கள் அனைவரும் கத்தியால் தங்கள் விரல்களை நறுக்கிக் கொண்டனர் .இது மனித அழகல்ல தெய்வீக அழகு என்று வியந்தனர் .தலைவர் மனைவி “ இவனிடம் நான் மயங்கியது உண்மைதான் ,ஆனால் அவன் மறுத்து விட்டான் . அவன் தண்டனைக்கு உள்ளாவான் “என்றார் .
13.இறைவா, நான் இந்தப் பெண்களிடம் மயங்கி தவறு செய்வதை விட சிறைக்குப் போவதையே விரும்பிறேன் “என்றார். தவறு செய்யாத யூசுப்பைஅவர் விரும்பியபடி சிறைக்கு அனுப்பி வைத்தான் இறைவன்
14.சிறையில் இருந்த ஒருவர் தான் மது பிழிந்தெடுப்பதுபோல் கனவு கண்டேன் என்றார் .இன்னொருவர் தம் தலையில் சுமநது சென்ற ரொட்டிகளை பறவைகள் தின்பது போல் கனவு கண்டேன் என்றார். இருவரும் யூசுபிடம் கனவுகளுக்குப் பலன் கேட்டனர் .
15.மது பிழிவது போல் கனவு கண்டவர் அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார் .அவர் தலையை பறவைகள் உண்ணும்என்று சொன்னார் யூசுப்.
16.மது பிழிவது போல கனவு கண்டவரிடம் நீங்கள்அரசரை சந்திக்ம்போது என்னைப்பற்றி ச்சொல்லுங்கள் என்றார் .ஆனால் அவர் சைத்தானின் செய்கையால் சொல்ல மறந்து விட்டார் எனவே யூசுப் இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்
17.ஒருநாள் அரசனுக்கு தாம் கண்ட கொழுத்த பசுக்கள், மெலிந்த பசுக்கள், முற்றிய சோளக்கதிர், காய்ந்த சோளக்கதிர் பற்றிய கனவுக்கு விளக்கம் கேட்டார்.
இது குழப்பமான கனவு ,எங்களுக்கு பலன் என்னவென்று தெரியவில்லை என்றனர் அவையோர்
18.அப்போது யூசுபோடு சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தவர் யூசுப் பற்றி நினைவு வந்து அரசரிடம் கூற, அவர் மூலம் மன்னர் யூசுபிடம் கனவுகளுக்கு விளக்கம் கேட்டார்
19. “ஏழு ஆண்டுகள் தொடரந்து நல்ல விளைச்சல் விவசாயத்தில் இருக்கும் .நீங்கள் உங்கள் உணவுதேவைக்கு மேல் உள்ள சோளங்களை அப்படியே கதிரில் விட்டு விடுங்கள். அடுத்த எழு ஆண்டுகள் கடுமையான உணவுப் பற்றாகுறை ஏற்ரப்டும் .அப்போது உங்கள் உணவு தானிய சேமிப்பு தீர்ந்து விடும்
அதற்கு அடுத்த ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து செழிப்பாக, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ..நிறைய மது பிழிவார்கள் .இதவே உங்கள் கனவுக்குப் பலன் “ என்று சொன்னார்
இது குரான் ஜூசு
12 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
சுராஹ் பத்தில் சூராவின் பெயராகிய நபியின் பெயர் வரும் வசனம் எது ? என்ன சொல்லப்படுகிறது
விடை
10:98
“நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து மீண்ட யூனுசுடைய சமுதாயம் போல் மற்ற சமுதாயம் ஏன் நம்பிக்கை கொள்ளவில்லை ---------“(கருத்து )
மற்றபடி அந்த நபி பற்றி வேறெதுவும் இந்த சூராவில் இல்லை
தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.
Then has there not been a [single] city that believed so its faith benefited it except the people of Jonah? When they believed, We removed from them the punishment of disgrace in worldly life and gave them enjoyment [i.e., provision] for a time.
தமிழ் மொழியாக்கம் சற்று குழப்பமாக் இருப்பதால் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கொடுத்திருக்கிறேன் .
இன்றைய வினா
“அவர்கள் தங்கள் செயல்களின் விளைவு என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் “
என்ற பொருள் எந்த வசனத்தில் வருகிறது ?விளக்கம் என்ன
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25042021 sun
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

Friday, 23 April 2021

குரான் குறிப்புகள் சில 11

 திரு மறை சில குறிப்புகள் 11

24042021sat
1.[9:98] இன்னும் அரபு மக்களில் சிலர் அவர்கள் செய்யும் தருமத்தை ஒரு தண்டனையாகவும் ,தண்டமாகவும் நினைக்கிறார்கள் .எல்லாம் அறிந்த இறைவன் அவர்களை வேதனைக்கு உள்ளாக்குவான்
2. [9:112] இறைவனின் நல்லடியார்கள் எப்போதும் இறைவனை வணங்கிக் கொண்டும் ,அவன் புகழ் பாடிக்கொண்டும் அவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டும் அவனுக்குத் தலை வணங்கி ,சிரம் தாழ்த்திகொண்டும் ,இறைவன் விதித்த வரம்புகளை மீறாமலும் தீயவற்றை விலக்கி நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல செய்தி கூறி வாழ்த்துங்கள்
3. [9:128] உங்களில் ஒருவரே இறைதூதராக வந்திருக்கிறார் .உங்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் அவர் .மென்மையான குணம் கொண்ட அவர் மிகவும் இரக்க சிந்தனை உடையவர்
4.10. 1-10 இந்த உலகத்தை உருவாக்கி உயிர்களைப்படைத்து திரும்பவும் படைக்கும் இறைவன் ஒருவன் மட்டுமே . வானம், பூமி, கதிரவன், நிலவு இரவு, பகல் எல்லாமே அவனது மாட்சிமைக்கு சான்றுகள் ஆகின்றன்
5. (10:13:14)) நிச்சயமாக நாம் முந்திய சமுதாயங்கள் பலவற்றை அழித்திருக்கிறோம்—புகழ் பெருமையின் உச்சியில் நின்ற அவர்கள் தவறான வழியில் சென்றதால் . அவர்கள் இடத்தில் உங்களை நியமித்து உங்கள் செய்லக்ளைக் கண்காணித்து வருகிறோம்
‏
6. (10:24.இறைவன் அனுப்பிய மழையால் பயிர்கள் செழித்து வளன்ர்ந்து மனித்ர்களுக்கும் கால் நடைகளுக்கும் உணவாயின . பயிர்கள் நன்கு வளர்ந்து இந்த உலகமே அழகான நிலையில் பூமி தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என மக்கள் பெருமிதம் கொண்டிருந்தனர் .ஆனால் இறைவனை மறுத்த அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக ஒரே நாளில் பயிர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டான் இறைவன்
7. (10:31) வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வாழ்வாதாரம் அளிப்பதும், பார்வையையும் செவிப்புலனையும் கட்டுபடுத்துவதும் உயிர்ப்பிப்பதும் மரிக்கச் செய்வதும், மீண்டும் உயிர்ப்பிப்பதும்,உலகின் அனைத்து நிகழ்வுகளையும் கட்டுபடுத்துவதும் அந்த ஏக இறைவன் மட்டுமே
8. (10:37) புனித குரான் இறைவனால் இறக்கி அருளப்பெற்றது. வேறு யரும் அதைப் படைக்க முடியாது
9. (10:44) நிச்சயமாமாக இறைவன் எந்தத் தவறும் செய்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்துகொள்கிறார்கள்
10. (10:69, 70) இறைவனுக்கு எதிராகப் பொய் புனைபவர்கள் இவ்வுலக வாழ்வில் நலமாக இருப்பது போல் தோன்றலாம் . ஆனால் இறுதியில் அவர்கள் இறைவனிடமே போய்ச் சேர வேண்டும் . அங்கு அவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது .
11.சில பல செய்திகள், தேவை,முக்கியத்துவத்துக்கு ஏற்ப குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் அந்த வகையில்
சூரா 10 71-73ல் நுஹ் நபியின் வரலாறும்
10 83-92ல் மூசா நபியின் வரலாறும் வருகிறது
12. (10:88) மூசா நபி இறைவனை நோக்கி சொன்னது “இறைவனே நீ பிர்அவுனுக்கும் அவனுடன் இருப்பவர்களுக்கும் இவ்வுலக வாழ்வில் .செல்வத்தையும் செல்வாக்கும் வழங்கினாய் .அவர்கள் அதைவைத்து மக்களை வழிதவறச் செய்கிறார்கள் .அவர்கள் செல்வச் செருக்கை அழித்துஅவர்களுக்கு கொடிய வேதனையை அழித்தால்தான் அவர்கள் நேர்வழிக்குத் திரும்புவார்கள் “
13. (10:100) இறைவன் நாடினால் ஒழிய யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது .இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பெரும்வேதனை காத்திருக்கிறது
இது குரான் ஜூசு
11 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
“--------அவர்கள் குறைவாக சிரிக்கட்டும் அதிகமாக அழட்டும்”
என்ற கருத்துள்ள வசனம் எது ?
விடை
[9:82
தபுக் போரில் இறை தூதருக்கு துணையாய் நில்லாமல் சாக்குப் போக்குச் சொல்லி பின் தங்கியவர்கள் பற்றி இறைவன் சொல்கிறான் :
“ ---------அவர்கள் குறைவாக சிரிக்கட்டும் அதிகமாக அழட்டும்=------”
இன்றைய வினா
சுராஹ் பத்தில் சூராவின் பெயராகிய நபியின் பெயர் வரும் வசனம் எது ? என்ன சொல்லப்படுகிறது
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
2404202 sat
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share