Sunday, 24 July 2022

June2022 review

 June2022

review
(sorry – much delay : but better later than never )
தமிழ் 5 வினாக்கள்
முதல்சரியான விடை
– இதயத் 2
அஷ்ரப் ஹமீதா 2
தல்லத் 1
அடுத்தடுத்த சரியான விடைகள்
ஹசன் அலி5
சிராஜுதீன் 3
அஷ்ரப் ஹமிதா 2 இதயத்2 கணேச சுப்பிரமணியம் 2
செங்கை A சண்முகம் 2 மெஹராஜ் 2 பர்ஜானா 2
சுராஜ் 2 ஷர்மதா 2
சிவசுப்ரமணியன் ராஜாத்தி செல்குமார்
விஸ்வநாதன் அ ரா மரு கண்ணன் முருகீசன் ஆண்டி கவுண்டர்
கனகராஜ் பாப்டி ஷிரீன் பாருக் தல்லத்
பன்னீர் நெய்வேலி ராஜா நஜிமா பெரோஸ்
ஜோதி பாடி பீர் முகமது ராஜா ஹபிபுர்ரஹ்மான்
ஒவ்வொரு சரியான விடை
குரான் 4 வினாக்கள்
முதல் சரியான விடை
ஹசன் அலி 2
சிராஜ் 1
அடுத்தடுத்த சரியானா விடைகள்
ஷர்மதா 2
பீர் ராஜா ஹசன்அலி தல்லத்
முத்தவல்லி அக்பர் அலி ஷிரீன் பாருக்
ஒவ்வொரு சரியான விடை
ஆங்கிலம் 4 வினாக்கள்
முதல் சரியான விடை
அஷ்ரப் ஹமீதா
ஹிதயத்
சிவசுப்ரமணியன்
கனகராஜ்
அடுத்தடுத்து சரியான விடைகள்
ஹசன் அலி2
ஹிதாயத் 2
சிராஜுதீன், அஸ்ரப் ஹமீதா
சோமசேகர் கனஜ்கராஜ்
ஒவ்வொரு சரியானா விடை
விடை அளித்த.,
முயற்சித்த சகோக்கள் அனவைவருக்கும் நன்றி
இன்னும் நிறையப்பேர் அறிவுத் தேடலில் இணைய ஊக்கப் படுத்தவே இந்த அறிக்கை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
24 07 2022 ஞாயிறு
சர்புதீன் பீ
May be an image of text that says "SCORE E S Ο"
Like
Comment
Share

Friday, 22 July 2022

எங்கள் CBROA Puducherry

 எங்கள் CBROA Puducherry

நூறை எட்டும் உறுப்பினர் எண்ணிக்கை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனும் சங்கத் தமிழ் மனப்பாங்கு
அதனால்
நோ சண்டை சச்சரவு
நோ அறைகூவல்கள்
நோ வெறுப்புப் பேச்சு
நோ மதவாதம்
எம்மதமும் சம்மதம்
ஒரே வங்கியில் பணியாற்றி ஒய்வூதியம் பெறுவோர் குழுவில் சண்டை சச்சரவுக்கு இடம் ஏது எனும் எண்ணம் தோன்றுவது இயல்பு
ஆனால் அனுபவங்கள் அப்படி இல்லை
இதே போன்ற ஒரு நாடு தழுவிய குழுவில் நான் இருந்தேன் . தொடர்ந்து இருக்கமுடியாத அளவுக்கு வெறுப்புப் பதிவுகள் , தமிழ் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்ற விதி வேறு
இதுவரை செயலராக இருந்த தோழர் விஜயகுமாரும் சரி இப்போது இருக்கும் தோழர் கணேச சுப்ரமணியமும் சரி அலட்டல் இல்லாமல் அமைதியாக குழுவை செம்மையாக நடத்திச் செல்கிறார்கள்
சரி என்ன செய்கிறோம் எங்கள் குழுவில்
கதிரவன் உதிக்கும் நேரத்தில் காலை மலராய் மலர்ந்து மணம் பரப்பும் தோழர் சோம சேகரின் கவிதைகள்
என்ன ஒரு கருத்து நயம் , சொல் அலங்காரம் !
ஆசு கவி, புதுவையின் புதுமைக் கவி என என்ன பட்டம் கொடுத்தாலும் தகும்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் கவித்திறன் பெற்றவர்
இரவில் தூக்கம் கண்களைத் தழுவி சுகமாக உறங்க இனிய திரைப்பாடல்கள் ஒலி வடிவில் – நன்றி தோழர் மணி வண்ணனுக்கு
தோழர் செங்கை சண்முகம் அவ்வப்போது தன் தமிழ்ப் புலமையையும் கவித்திறனையும் வெளிப்படுத்துவார்
தோழர் கரம் சில திகிலான படைப்புகளைக் கொடுத்து விட்டு மாயமாகி விடுவார்
தினம் ஒரு குறள் கொடுப்பார் மற்றொரு தோழர் ,
சிறிதும் பெரிதுமாய் ஒளி ஒலி பதிவுகள் , கூட் மானிங் செய்தி எல்லாம் வரும்
கவித்திறன் , தமிழ்ப் புலமை , எழுதும் வல்லமை எல்லாம் கொண்ட அறிஞர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள்
எனக்குத் தெரிந்த மட்டில் தோழர்கள் கணேச சுப்ரமணியன் ,ஹசன் அலி , ரவிராஜ் ஆகியோர் இந்த வரிசையில் வருவார்கள்
என் வினாக்களுக்கு விடை அளிப்பதை வைத்து இவர்கள் பெயரைக் குறிப்பிடு கிறேன் எனக்குத் தெரியாமல் நிறையப் பேர் இருக்கலாம்
இதற்கிடையில் பாதுகாக்கப்பட்ட ஆவண வடிவில் (PDF) சில சுற்றறிக்கைகள் அவ்வபோது தலை நீட்டும் . யார் இவற்றைப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை ,நான் படிப்பதில்லை
என்னைப்பற்றிச் சொல்ல மறந்து விட்டேன் .
ஞாயிறு திங்கள் ஆங்கில வினா விடை, செவ்வாய் புதன் தமிழ், வியாழன் வெள்ளி குரான் சனிக்கிழமை வேறு ஏதாவது என்று வாரத்தில் 7 நாளும் என் பதிவு வரும்
என் வினாக்களுக்கு உடனே சரியான விடை அனுப்புபவர் தோழர் ஹசன் அலி
ஆழமான கருத்துகள், பல புதிய செய்திகளுடன் விடை அளிப்பவர் தோழர் கணேச சுப்ரமணியன்
அவ்வப்போது விடை அளிக்கும் தோழர்கள் செங்கை சண்முகம் , சோம சேகர் , சிவசுப்ரமணியன் .கனகராஜ்
அனைவருக்கும் நன்றி
தோழர் ரவிராஜ் தொடர்ந்து குரான் வினாக்களுக்கு விடை அளித்து வந்தார்
இப்படி ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருந்தால் ஒரு சலிப்புத் தட்டி விடும்
அதை மாற்றி எல்லோரையும் சுறு சுறுப்பாக்கும் ஒரு மந்திரச் சொல்
பென்சன் அப்டேஷன்
இது பற்றி சில மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நேர்மறைக் செய்தி வரும்
உடனே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்
கொஞ்ச நாள் கழித்து
Talks inconclusive -------
_____not cooperating
என்று ஒரு செய்தி வரும்
ஒத்துப்போகாதது யார் என்பது முக்கியமல்ல
அது யாராக இருந்தாலும்
இலவு காத்து நிற்பவர்கள் நாம்தான்
மனதில் பட்டதை எழுதி விட்டேன்
யாரையும் குற்றம் சொல்லவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
23072022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of text that says "CANARA BANK RETIRED OFFICERS' ASSOCIATION (CBROA)"
Like
Comment
Share

Thursday, 21 July 2022

திருமறை குரான் 2: 213

 திருமறை குரான் 2: 213

“------------தெளிவான சான்றுகள் உள்ள திருமறை வந்தபின் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (திருமறைக்கு ) மாறு செய்ய முற்பட்டனர் “
திருமறையின் எந்த வசனத்தில் வரும் வரி இது ?
விடை
சூராஹ் அல்பக்ரா வசனம் 2: 213
“ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தவராக இருந்தனர்
அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்தவர்களுக்கு நற்செய்தி கூறும்படியும்
தீமை செய்தவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் இறைவன் நபி மார்களை அனுப்பி வைத்தான்
மேலும் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளை தீர்த்து வைப்பதற்காக சத்திய வேதத்தையும் அருளினான்
இவ்வாறு தெளிவான சான்றுகள் உள்ள வேதம் வந்தபிறகு அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக அன்த சத்திய வேதத்துக்கு மாறு செய்ய முற்பட்டனர்
ஆயினும் அவர்கள் புறக்கணித்து விட்ட சத்திய வழியில் செல்ல நம்பிக்கை உடையோருக்கு இறைவன் நேர்வழி காட்டினான்
இன்னும் இவ்வாறே தான் விரும்பியவர்கலளை இறைவன் நேர்வழியில் செலுத்கிறான் (2:213)
இதற்கு முழுமையாகவோ ஓரளவோ ஒத்த கருத்துகள் பல வசனங்களில் வருகின்றன (எ—டு 3:19 , 2:109, )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டு பெறுவோர் :
சகோ
ஹசன் அலி –முதல் சரியான விடை
பீர் ராஜா
ஷர்மதா
விளக்கம்
மனித குல வளர்ச்சி பற்றிய ஒரு மிகப்பெரும் உண்மையை தெளிவு படுத்துகிறது இந்த வசனம்
“ஆதி மனிதன் அறியாமை இருளில் மூழ்கி ஓரிறைக் கொள்கையை தவிர்த்து வந்தான் .
பின்னர் காலப்போக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் ,தெளிவு காரணமாக ஓரிறைக் கொள்கைக்கு மாறினான் “ என்ற ஒரு கருத்து மத ஆராய்ச்சியாளர்கள் பலரும் முன் வைப்பது
இதை திருமறை ஒப்புக்கொள்ளவில்லை
மாறாக உலகின் முதல் மனிதனே ஏக இறைவன் பற்றிய தெளிவான சிந்தனையுடன்தான் படைக்கப்பட்டான் என அறிவிக்கிறது குரான்
ஒரே குலமாக ,ஏக இறைவழிபாட்டில் இருந்த மனிதகுலம் சில தவறுகள் செய்யும்போது, வழி தவறிப்போகும்போது --
குறிப்பாக ஒரு சிலர் மற்றவர்களை அடக்கி ஆண்டு, அவர்கள் உரிமைகளைப் பறித்து தங்கள் தகுதிக்கு மீறிய வசதிகளை அனுபவிக்கத் தொடங்கியபோது
அவர்களை எச்சரித்து நேர்வழிப் படுத்த இறைவன் தன தூதர்களான நபி மார்களை உலகுக்கு அனுப்பி வைத்தான்
வேறு வேறு மதங்களை உருவாக்க நபி மார்கள் அனுப்பப்படவில்லை .
தெளிவான வழிகாட்டும் வேதங்கள் அருளப்பட்டும் மத குருமார்கள் ,மேல்தட்டு மக்கள் போன்றவர்கள் வேத்த்தின் உண்மைகளை மறைத்து தங்களுக்கு சாதகமாக மதக் கொள்கைகளை வகுத்துக் கொண்டார்கள்
இதில் விளைந்த போட்டி ,பொறாமையின் விளைவே வேறு வேறு மதங்கள்
“மனிதன் மதங்களைப் படைசசு “ என்ற யேசுதாஸ் பாடல் நினைவில் வருகிறது
இதே போல்
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் , காட்டு மிராண்டியாக இருந்தான் , பேசத் தெரியாமல் ஒலிகள் எழுப்பினான் என பல கருத்துகளை இஸ்லாம் மறுக்கிறது
மனிதனை முழுமயான மனிதனாகத்தான் இறைவன் படைத்தான்
“அளவற்ற அருளாளன் குரானைக் கற்றுக் கொடுத்தான்
மனிதனைப் படைத்தான்
அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான் “ சூராஹ் அற்ரஹ்மான் (55: 1 -4)
முதல் மனிதனாகிய ஆதம் அவர்கள் ஒரு நபியாகப் போற்றப் படுகிறார்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
22 துல்ஹஜ் (12) 1443
22 07 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

Tuesday, 19 July 2022

தமிழ் (மொழி) அறிவோம் மகுளி

 தமிழ் (மொழி) அறிவோம்

மூன்றெழுத்துச் சொல்
சங்க இலக்கியங்களில்
இசைக்கருவி
ஆந்தையின் குரலோசை
செடிகளில் பரவும் நோய்
என்ற பொருளிலும்
வட்டார வழக்கில்
கஞ்சி
என்ற பொருளிலும் வருகிறது
முதல் எழுத்து
ம
என்பதையும் சொல்லிவிட்டால்
மிக எளிதாக விடை அறியலாம்
அந்தச் சொல் என்ன?
விடை
மகுளி
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி. முதல் சரியான விடை
ஷர்மதா
ஹிதயத்
செல்வகுமார்
கணேச சுப்பிரமணியம்
விடை விளக்கம் அதோடு பல புதிய செய்திகளையும் அனுப்பிய இவருக்கு நன்றி
கணேச சுப்பிரமணியம் அனுப்பிய விளக்கம்
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)
பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.
வட்டார வழக்கில் கஞ்சி என்று பொருள் வருவதாக இணையத்தில் சொல்லப்படுகிறது
எந்த வட்டாரம் என்பது எனக்குத் தெரியவில்லை
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
முயற்சித்த
சகோ
ஜோதி
அ ரா விஸ்வநாதனுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
20072022 புதன்
சர்புதீன் பீ
No photo description available.
3 shares
Like
Comment
Share