Saturday, 13 July 2024

தமிழ் (மொழி ) அறிவோம் ரங்கம் 14707 2024 ஞாயிறு

 






தமிழ் (மொழி ) அறிவோம்

ரங்கம்
14707 2024 ஞாயிறு
(முன் குறிப்பு
சென்ற வாரம் நான் கேட்டிருந்த வினாவுக்கு பலரும் சரியான விடை அனுப்பியிருந்தார்கள்
ஆனால் என் தெரிவு வேறு சொல்
அதை யாரும் சொல்லவில்லை
எனவே அதையே இந்த வார வினாவாக வைத்து விட்டேன் )
தீவு (island) –எல்லோரும் அறிந்த ஒரு சொல்
எல்லாப்பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலபரப்பு தீவு
நம் அண்டை நாடான இலங்கை (ஸ்ரீ லங்கா) ஒரு தீவு
வினா
ஆற்று நீருக்கு நடுவே அமைந்த ஒரு நிலப்பரப்பைக் குறிக்க தனியாக ஒரு நாலு எழுத்து சொல் இருக்கிறது
அது என்ன ?
முதல் எழுத்து இடையின அகரம்
இரண்டும் நான்கும் மெல்லின ஒற்று
மீதமுள்ளது வல்லினம்
மிகப் பரவலாக பயன்பாட்டில் உள்ள அந்தச் சொல் என்ன ?
விடை
ரங்கம்
சரியான விடை வாழ்த்து பாராட்டு பெறுவோர் சகோ
ரவிராஜ் ----முதல் சரியான விடை
ஹசன் அலி
விளக்கம்
ரங்கம் என்ற சொல்லுக்கு ஆற்றிடைத் தீவு என்றும் நாத் "பாதுகாப்பவர்" என்ற பொருளும் கூறப்படுகிறது. பெரும்பாலும் புகழ்பெற்ற அரங்கநாதர் கோயில்கள் ஆற்றிடைத் தீவுகளில் அமைந்துள்ளன.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௪௦௭௨௦௨
14707 2024 ஞாயிறு
சர்புதீன் பீ
Like
Comment
Share

Thursday, 11 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு ஆயத்துகள் மக்க ,மதீனஆயத்துகள் 12072024 வெள்ளி





 திருமறை குரான்

குரான் அமைப்பு ஆயத்துகள்
மக்க ,மதீனஆயத்துகள்
12072024 வெள்ளி
இன்றைய வினாவுக்குப் போகுமுன்
வசனம் ,சூராஹ் இது பற்றி ஒரு சிறிய குழப்பம் இன்னும் சிலருக்கு இருப்பது போல் தோன்றுகிறது ஒல்கிறேன்
எனவே மீண்டும்
சூராஹ் என்பது அத்தியாயம் ,chapter
வசனம் (ஆயத்) என்பது ஒரு வாக்கியம் sentence என்று வைத்துக்கொள்ளலாம்
அல்பாfத்திஹா என்பது முதல் சூராஹ்
அதில் 7 வசனங்கள் இருக்கின்றன
இன்றைய வினா
பொதுவாக வசனம் அருளப்பட்ட இடத்தை வைத்து
குரான் வசனங்கள் மக்கா வசனங்கள். மதீனா வசனங்கள் என்று பிரிக்கப்படுகின்றன
இந்த இரண்டுக்கும் பொருளில் (Content) உள்ள பொதுவான வேறுபாடு என்ன ?
விடை
நபி ஸல் அவர்கள் ஹிஜரத் பயணத்தில் மதீனா நகர் போகும் வரை அருளப் பட்டவை மக்கா / மக்கிய்யா வசனங்கள் என்றும் ஹிஜரத் பயணத்துக்குப்பின் அருளப் பட்டவை மதீனா /மதனிய்யா என்றும் பிரிக்கபட்டுள்ளன என்று பொதுவாக வைத்துத்கொள்ளலாம்
இதில் இன்னும் நிறைய கருத்து வேறுபாடுகள்,வரையறைகள் இருக்கின்றன
இப்போதைக்கு அதை எல்லாம் மறந்து விட்டு எல்லாம் இறைவன் அருளிய வசனங்களே என்று நினைவில் கொள்வோம்
பொருளில் (Content) உள்ள பொதுவான வேறுபாடு
1. மக்கி சூராக்கள்:
- .
- கருப்பொருள்கள்: மக்கி சூராக்கள் பெரும்பாலும் நம்பிக்கை, ஒரு கடவுள் நம்பிக்கை, தீர்ப்பு நாள், தார்மீக போதனைகள் மற்றும் முந்தைய தீர்க்கதரிசிகள் மற்றும் நாடுகளின் கதைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. அவர்கள் கடவுளின் ஒருமையையும், ஏகத்துவத்திற்கான அழைப்பையும் வலியுறுத்துகிறார்கள்.
- குறுகிய அத்தியாயங்கள்: மக்கீ சூராக்கள் பொதுவாக மதனி சூராக்களுடன் ஒப்பிடும்போது நீளம் குறைவாக இருக்கும்.
- மொழி: மக்கி சூராக்களில் பயன்படுத்தப்படும் மொழியானது அதன் சொற்பொழிவு, சக்திவாய்ந்த கற்பனை மற்றும் மக்களை ஒரே கடவுளின் வழிபாட்டிற்கு அழைப்பதை வலியுறுத்துகிறது.
2. மதனி சூராக்கள்:
- .
- சட்ட மற்றும் சமூக வழிகாட்டுதல்: மதானி சூராக்கள் பெரும்பாலும் விரிவான சட்டத் தீர்ப்புகள், சமூக விஷயங்களில் வழிகாட்டுதல், முஸ்லீம் சமூகத்திற்கான வழிமுறைகள் மற்றும் மதீனாவில் ஆரம்பகால முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் சவால்களுக்கான பதில்களைக் கொண்டிருக்கின்றன.
- நீண்ட அத்தியாயங்கள்: மக்கி சூராக்களுடன் ஒப்பிடும்போது மதனி சூராக்கள் நீளமாகவும் விரிவாகவும் இருக்கும்.
- குறிப்பிட்ட சூழல்: மதீனாவில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் சவால்கள், ஆட்சி, போர், சமூக உறவுகள் மற்றும் சமூக அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் உட்பட மதனி சூராக்கள் உரையாற்றுகின்றன.
, இரண்டு வகையான சூராக்களும் குர்ஆனின் ஒருங்கிணைந்த பகுதிகள்
என்பதையும்
மனிதகுலத்திற்கான அதன் ஒட்டுமொத்த செய்தி , வழிகாட்டுதலுக்கு பங்களிக்கின்றன என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
ஷிரீன் பாfருக்குக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
05 முஹர்ரம் (1) 1446
12 072024 வெள்ளி
சர்புதீன் பீ

Monday, 8 July 2024

English QUIZ Home they brought her ---- 09072024 Tue






 English QUIZ

Home they brought her ----

09072024 Tue
“Like summer tempest came her tears—“
From which poem this verse/line is taken ?
Answer
It is from the poem
The Princess:
Beginning with
Home they Brought her Warrior Dead
By Alfred Lord Tennyon
Greetings and Congratulations to those who sent correct answers:
M/S
Ashraf Hameeda – First correct answer
Selvakumar
Sivasubramanian
Hasan Ali
Ganesa subramnaiam
Sirajudeen –Thanks for details
Raviraj
Papti
Velavan &
Padi Peer
Explanation
The poem is simple language
No need to explain I feel
Explanation may not bring the real feelings of the killed soldier’s wife who is dumb found and not able to weep even
This reminds me of Tamil Film மொழி in which a professor’s memory will be frozen when his young son meets with an accident
He is not able to realize even his son’s death
He regains his senses when one day the hero of the film makes him weep by realizing the death
Alfred Tennyson,
Tennyson also excelled at short lyrics, such as "Break, Break, Break", "The Charge of the Light Brigade", "Tears, Idle Tears", and "Crossing the Bar". Much of his verse was based on classical mythological themes, such as "Ulysses". "In Memoriam A.H.H." was written to commemorate his friend Arthur Hallam, a fellow poet and student at Trinity College, Cambridge, after he died of a stroke at the age of 22.[2] Tennyson also wrote some notable blank verse including Idylls of the King, "Ulysses", and "Tithonus". During his career, Tennyson attempted drama, but his plays enjoyed little success.
A number of phrases from Tennyson's work have become commonplace in the English language, including "Nature, red in tooth and claw" ("In Memoriam A.H.H."), "'Tis better to have loved and lost / Than never to have loved at all", "Theirs not to reason why, / Theirs but to do and die", "My strength is as the strength of ten, / Because my heart is pure", "To strive, to seek, to find, and not to yield", "Knowledge comes, but Wisdom lingers", and "The old order changeth, yielding place to new". He is the ninth most frequently quoted writer in The Oxford Dictionary of Quotations
Let us meet tomorrow ISA
09072024 Tue
Sherfuddin P

Saturday, 6 July 2024

தமிழ் (மொழி ) அறிவோம் தீவு, திட்டு 0707 2024 ஞாயிறு






 தமிழ் (மொழி ) அறிவோம்

தீவு, திட்டு
0707 2024 ஞாயிறு
தீவு (island) –எல்லோரும் அறிந்த ஒரு சொல்
எல்லாப்பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலபரப்பு தீவு
நம் அண்டை நாடான இலங்கை (ஸ்ரீ லங்கா) ஒரு தீவு
வினா
ஆற்று நீருக்கு நடுவே அமைந்த ஒரு நிலப்பரப்பைக் குறிக்க தனியாக ஒரு சொல் இருக்கிறது
அது என்ன ?
விடை(கள்)
திட்டு
துருத்தி ,குதிர் ,குடா
மண் குதிர்
என் தேர்வு வேறு
இந்த விடைகளும் சரியே
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவி ராஜ் – முதல் சரியான விடை :
[09:20, 06/07/2024] Cb rtd Raviraj: மண்-குதிர் என்பதற்கு மணல் மேடு-மண்திட்டு என்பது பொருள். இது
[09:20, 06/07/2024] Cb rtd Raviraj: இந்த மண்-குதிரைத்தான் நம்பி ஆற் றில் இறங்காதே என்றார்கள் நமது முன்னேர்.
விளக்கத்துக்கு நன்றி
ஹசன் அலி
வேலவன்
கணேச சுப்ரமணியம் :
[09:26, 06/07/2024] CB retd Ganesa subramaniam: துருத்தி (மணிமேகலை))
[11:01, 06/07/2024] CB retd Ganesa subramaniam: குதிர்,,குடா
In Tanjore district, near கண்டியூர். காவேரிக்கும் குடமுருட்டி ஆற்றுக்கும் இடையில் திருப்பூந்துருத்தி என்று ஓர் ஊர் உள்ளது.ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "துருத்தி" என்று பெயர் பெறும். இப்பெயர் பெற்றது.
விளக்கத்துக்கு நன்றி
ஆர்வத்துடன் பங்கெடுத்த சகோ
சிராஜுதீன் , ஆ ரா விஸ்வநாதன் ,செல்வகுமார் மூவருக்கும் நன்றி
(ஆற்றுப்படுகை
ஆற்றினுள்கரைசார்ந்தநிலப்பகுதி; ஆற்றுப்பாய்ச்சலுள்ளநிலம்.
• படுகை, பெயர்ச்சொல்.
1. அடுக்கு
2. ஆற்றின் நீர்ப்போக்கால், மண் படிந்து உள்ள நிலம்
படுகை – பொருள் பொருந்தவில்லை
கொசுறாக இன்னொரு வினா
கட்செவி (WhatsApp )யில் நீல நிறத்தில் ஒரு சிறிய வட்டம் வருவதைப் பார்த்திருப்பீர்கள்
அது எதைக் குறிக்கிறது ?
விடை
Artificial Intelligence (AI) செயற்கை நுண்ணறிவுக்கான குறியீடு அந்த நீல வட்டம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பாப்டி(ஆத்திக்கா)
முதல் சரியான விடை
சிராஜுதீன் – விளக்கமான விடைக்கு நன்றி – விளக்கம் கீழே
செல்வகுமார்
விளக்கம்
நீல வட்டத் தைச் சொடுக்கினால் எண்ணற்ற தலைப்புகள் வரிசையாக வரும்
அதில் ஒன்றைத் தேர்வு செய்தால் அது பற்றி உங்கள் தேவையை அறிய சில வினாக்கள் வரும்
அவற்றிற்கு விடை சொன்னபின் நீங்கள் தேடும் விடை கிடைக்கும்
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் AI நம் வாழ்வில் நுழைந்துவிட்டது
மின்னஞ்சல் ,கூகிள் தேடுதல் போல் செயற்கைநுண்ணறிவை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயம்
என்ன –சிந்திக்கும் திறன் மிகவும் குறைந்து விடும்—இன்றைய தலை முறைக்கு மனக்கணக்கு, வாய்பாடு தெரியாமல் போனது போல்
AI பற்றி முனைவர் சாஜித் விளக்கமாக எழுதிஎதை முன்பு பதிவு செய்திருக்கிறேன்
சகோ சிராஜுதீன் :
:
இது மெட்டா ஏஇ அல்லது லாமா என்றழைக்கப்படும் புது வாட்ஸ்அப் ஏஐ அம்சம் (New WhatsApp AI Feature Called Meta AI or Llama)
இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் புதிய மெட்டா ஏஐ அம்சம் அல்லது லாமா (Llama) அம்சம் உண்மையில் என்ன செய்யும் ?
AI இடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கிறது. சந்தேகங்களுக்கான விடையை இந்த AI மூலம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.வாட்ஸ்அப் இல் காணப்படும் புதிய மெட்டா ஏஐ லாமா இப்போது பல விதமான தகவல்களை வழங்குகிறது.
அதேபோல், அதுவே பல தலைப்புகளிலில் இருந்து ஏதேனும் ஒன்றை கிளிக் செய்ய அனுமதிக்கிறது. மேலும் விருப்பத்திற்கேற்ற தேர்வின் அடிப்படையில் விளக்கங்களை வழங்குகிறது. இது பயனர்களை வாட்ஸ்அப் உடன் கூடுதல் நேரம் இணைத்து வைக்கிறது.
இந்த AI சாட் மற்றும் வாட்ஸ்அப் புகைப்படங்களை படிக்கும் என்ற கவலை பயனர்களுக்கு இருக்க வேண்டாம் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது. இதுவொரு சாதரண AI மட்டுமே. உங்கள் வாட்ஸ்அப் சாட், வீடியோ கால், வாய்ஸ் கால் தகவல்கள் எல்லாம் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் உடன் வருகிறது என்பதனால், உங்கள் வாட்ஸ்அப் தகவலை உங்களை தவிர வேறு யாரும் அணுக முடியாது என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது. -
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

௦௭௦௭௨௦௨௪
0707 2024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 4 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு ஆயத்துகள் ஆயத்துல் குர்ஷி (2:255) 05072024 வெள்ளி






 திருமறை குரான்

குரான் அமைப்பு ஆயத்துகள்
ஆயத்துல் குர்ஷி (2:255)
05072024 வெள்ளி
சென்ற பகுதியில் குர்ஆனில் உள்ள ம்கபெரிய, மிகச் சிறிய ஆயத்துகள் பற்றிப் பார்த்தோம்
இன்றைய வினாவுக்குப் போகுமுன்
வசனம் ,சூராஹ் இது பற்றி ஒரு சிறிய குழப்பம் சிலருக்கு இருப்பது போல் தோன்றுகிறது
சூராஹ் என்பது அத்தியாயம் ,chapter
வசனம் (ஆயத்) என்பது ஒரு வாக்கியம் sentence என்று வைத்துக்கொள்ளலாம்
அல்பாfத்திஹா என்பது முதல் சூராஹ்
அதில் 7 வசனங்கள் இருக்கின்றன
இன்றைய வினா
மிக அதிகமாக ஓதப்படும்,மனனம் செய்யப்படும் குரான் வசனம் எது ?
விடை
சுராஹ் 2(அல் பக்ரா) வசனம் 255
ஆயத்துல் குர்ஷி ( அரியாசன ஆயத்துThrone Verse) எனப்படும்
இந்த வசனம்தான் உலகெங்கிலும் அதிக அளவில் ஓதப்பட்டு மனனம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டும் வருகிறது
குரானின் மிக மகத்தான வசனம் என்று போற்றப்படும் இந்த வசனம் பாதுகாப்பு தரும் வசனம் என்று அறியப்படுகிறது
சைத்தானின் தீங்கு,
கண்ணேறு
மன நோய்
போன்ற பலவற்றிலிருந்து பாதுகாப்புத் தரும் இந்த வசனம் பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
ஆனால் வந்தது ஒரு சில சரியான விடைகளே
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
பர்வேஸ் அஹமத்
ஹசன் அலி
ஆயத்துல் குர்ஸி
اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاواتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
ஆயத்துல் குர்ஸி
"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
255. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.
அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.
அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று.
அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:255F
வந்த மற்ற விடைகள்
அல்ஹம்து சூராஹ் ,அல் இக்லாஸ் சுராஹ் ,
பிஸ்மில்ல்லாஹ் ஹிர்ரமாநிர்ராஹீம் ,.
அல்லா
, ளா இலாஹா இல்லலாஹு
ஆர்வத்துடன் பங்கெடுத்த
சகோ மெஹராஜ் . தல்லத் ஷர்மதா
அனைவரு க்கும் நன்றி
சிறப்பு நன்றி சகோ ரவி ராஜுக்கு
(சுராஹ், வசனம் குழப்பம் இன்னும் தெளிவாகவில்லையோ என்று
தோன்றுகிறது )
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
28 துல்ஹஜ் (12) 1445
05072024 வெள்ளி
சர்புதீன் பீ

வார்த்தை விளையாட்டு ஜூலை (7)2024 //4/11//18//25////aug 01//08/15//22//29

                           வார்த்தை விளையாட்டு 


                                            04072024

                                





11072024




18072024




25072024







01082024




                                                   08082024





15082024



22082024




`                                                29082024