WHY ARE JEWS SO SMART?
சுருக்கிய
தமிழ் வடிவம்
By Dr. Stephen Carr Leon
இந்தக்கட்டுரை ஆசிரியர்
இஸ்ரேலில் எட்டு ஆண்டுகள் தங்கி யூதர்களின் அறிவுக்கூர்மைக்கு காரணம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் கண்டுபிடித்த
உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.
எனக்கு வந்த கட்டுரையின் சுருக்கிய தமிழ் வடிவத்தை கீழே தருகிறேன்.
யூதர்களைப்பற்றி எழுதுவது தவறு என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்களை
மனதில் இருந்து ஒதுக்கி விட்டு எல்லோரும் படிக்கவும்.
குறிப்பாக பெண்கள –
எல்லா வயதினரும் படிக்கவும். இதில் உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருந்தால் ஒதுக்கி வைத்து
விட்டு, பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை போல் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு பயன் பெறுங்கள், பகிருங்கள்
பொறியியல், அறிவியல், வணிகம் தொழில் இப்படி எல்லாத்துறைகளிலும் யூதர்கள் முன்னணியில் இருப்பது
மறுக்கமுடியாத உண்மை..உலகளாவிய வர்த்தகத்தில் எழுபது விழுக்காடு யூதர்கள் வசம்
இருக்கிறது
இது இயல்பானதா அல்லது இதற்காக யூதர்கள் சிறப்பான முயற்சி
செய்கிறார்களா எனபது பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்
முதலில் கருவுற்ற தாய்மார்கள் பற்றிப்
பார்ப்போம்.
அவர்களைப்போல் நம்மால் பாட்டுப்பாடவும் பியானோ வாசிக்கவும் முடியாது.
ஆனால் அவர்கள் செய்யும் இன்னொரு செயல் கணிதப்புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது
.கருவுற்ற பெண்ணின் கையில் எப்போதும் கணித நூல் இருக்கும். குழந்தை பிறக்கும் வரை
கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால் பிறக்கும் குழந்தை அறிவு மிக்கதாக
இருக்கும் என்கிறார்கள்
கருவுற்ற காலத்தில் அதிகமாக பால், பாதாம்பருப்பு , பேரிச்சம்பழம் ,
மீன் (மீன் தலையை நீக்கி விட்டு ) மீன் எண்ணெய் சாப்பிடுவார்கள் இறைச்சியைத்
தவிர்த்துவிடுவார்கள் .
பழங்களை உணவுக்கு முன் ( பின் அல்ல முன்) உண்பார்கள்
புகைப்பதையும் புகைப்பவர்களையும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுவார்கள்
அடுத்து குழந்தைகள்
குழந்தைகளின் உணவு
முழுக்க முழுக்க பெற்றோரின்
கண்காணிப்பில்தான்
.பழங்கள்
,பாதாம்பருப்பு மீன் எண்ணெய் குழந்தைகளின் முக்கிய உணவு ஹீப்ரு,அரபு ஆங்கிலம் என்ற
மூன்று மொழிகள் குழந்தைள் படிக்கிறார்கள் பியானோ, வயலின் கண்டிப்பக்
கற்றுக்கொள்ளவேண்டும் .இசையின் அதிர்வு மூளையைத் தூண்டி அறிவைப் பெருக்குமாம்
கல்வி முறை
முதல் ஆறு ஆண்களுக்கு
வணிகக் கணிதத்தில் கவனம் செலுத்துகிறார்கள் .அம்பு விடுதல், துப்பாக்கி சுடுதல்
,ஓட்டம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
அம்பு, துப்பாக்கிப்
பயிற்சிகள் கவனம் சிதறாமல் முடிவெடுக்கும் பயிற்சியை மூளைக்கு அளிக்குமாம்
உயர்நிலைப்பள்ளி
வகுப்புகளில் அறிவியலுக்கு முதன்மை இடம்..மாணவர்கள் பொருட்கள் உற்பத்தி
செய்யவார்கள், திட்டங்கள் (ப்ராஜெக்ட்ஸ்) தீட்டுவார்கள் எல்லா திட்டங்களும் முழு
கவனத்துடன் பரிசீலிக்கப்படும். குறிப்பாக படைக்கலன்கள், மருத்துவம், பொறியியல்
சார்ந்த திட்டங்களுக்கு சிறப்பு கவனம் கிடைக்கும்,.பயன்படக்கூடிய திட்டங்கள்
உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் .
பல்கலைக்கழகப்படிப்பின்
இறுதி ஆண்டில் வணிகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் .பத்து மாணவர்கள் கொண்ட
ஒரு குழு வணிகத்தில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஆறு கோடி ரூபாய் ) இலாபம் ஈட்ட வேண்டும். அப்போதுதான் அந்தகுழு தேர்வு பெற்றதாய்
கருதப்படும்
உலக வணிகத்தில்
பாதிக்கு மேல் யூதர்கள் வசம் இருப்பதற்கு இந்த கல்வி முறை ஒரு காரணம்
அமெரிக்காவில் அதிக
அளவில் யூதர்கள் வசிக்குமிடம் நியூயார்க்.. அங்கு இவர்கள் நலனுக்காக அமைந்துள்ள ஒரு கமிட்டி நல்ல தொழில் ,வணிக
உத்தியுடன் வரும் யூதர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து அவர்கள் பெரிய அளவில்
வளர்ச்சியடைய உதவுகிறது.
இப்படி வளர்க்கப்பட்ட
மிகப்பெரிய நிறுவனங்களில் சில : டெல் கம்ப்யூட்டர்ஸ், கோகோ கோலா ,ஆரக்கில்,
லெவிஸ்.
நியூயார்க்கில் உள்ள
மருத்துவர்களுக்கும் இந்தக் கமிட்டி தனியாகத் தொழில்9(Private Practice) துவங்க வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவுகிறது
சிங்கப்பூரைப்போல்
இஸ்ரேலும் புகைக்குப் பகையான நாடு
எந்த ஒரு சமுதாயமாக
இருந்தாலும் அதிலிருக்கும் நல்ல செய்திகளை எடுத்துப் பின்பற்றுவது தவறல்ல என்பது
என் சொந்தக்கருத்து
இதில் ஷிர்க், குப்று
ஹராம் போன்ற செய்திகள் இருப்பதாக உணர்ந்தால் அவற்றை விட்டு விட்டு நமக்கு
உகந்தவையாக , பயனுள்ளதாக இருப்பவற்றை எடுத்துக்கொள்ளலாம்
பீ.சர்புதீன்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com