அமிழ்-
பஞ்சகர்மா போல
இன்னொரு படிப்பின் பெயரோ என்று முணுமுணுக்கிறீர்களா?
இல்லை இல்லவே இல்லை
தொடரின் இப்பகுதியில்
படிப்புக்கு முழு விடுமுறை
பொதுவாக நம் இல்லத்
திருமணங்கள்., அது தொடர்பான நிகழ்வுகள் எல்லாம் சென்னையிலேயே நடை பெறுகின்றன .
சென்னைக்கு வெளியே சில நிகழ்வுகள் அரிதாக இடம்பெறுகின்றன .
நூரக்கா மகள் ஷிரீன்
மகள் அனிஷா திருமணம் சென்னையில் நடந்த ஒரிரு தினங்களில் ராசபாளையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி
. ஒரு குழுவாக இரவில் தொடரியில் பயணித்து காலை ஊரை அடைந்தோம்.
அங்கு நாங்கள் தங்க
ஏற்பாடு செய்திருந்த விடுதியின் பெயர் ஹோட்டல் அமிழ்.( எதற்காக இந்தப்பெயர் என்பது
இது வரை எனக்கு விளங்கவில்லை )
மிக அழகான , வசதியான
விடுதி, நல்ல உணவு. நீச்சல் குளம், சிறுவர்கள் பூங்கா என விசாலமான வளாகம் .
அறைகளும் நல்ல
வசதியாக இருந்தன. நானும் இதுவரை எத்தனையோ பெரிய விடுதிகளில் தங்கியிருக்கிறேன்.;
அங்கெல்லாம் இல்லாத சில சிறப்புகள் இங்கு கண்டேன் . ஓன்று குளியல் அறைக்கும் கழிவறைக்கும் இடையே ஒரு முழு நீள கண்ணாடித்தடுப்பு,
அடுத்து படிப்பதற்கு ,எழுதுவதற்கு வசதியாக ஒரு மேசை,, அதன் மேல் ஒரு படிப்பு
விளக்கு . பொதுவாக விடுதி அறைகளில் பளீரென வெளிச்சம் தரும் விளக்குகள் இருக்காது .
செய்தித்தாள் படிப்பது கூட சிரமமாக இருக்கும்..
சுராஜ் தன் அக்கா ,
அக்கா மகள், அக்கா பேத்தி மூவரையும் பற்றி ஒரு அழகான கவிதை எழுதி எல்லோரையும்
உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.சாகுல், சேக் ஆசை தீர நீச்சல்குளத்தில் விழுந்து
கிடந்தார்கள் . உணவுக்கூடத்தில் மணிக்கணக்காக சிலர் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள் .
அரை நாள்
தங்கியிருந்தாலும் விடுதிப்பணியாளர்கள் கவனிப்பும் மணமகன் வீட்டார் உபசரிப்பும் மனதில்
நிற்கின்றன . ஷிரீன் சம்பந்தி வீட்டாருக்கும் பயண ஏற்படுகளை சிறப்பாக செய்திருந்த
சாஜித் , அஷ்ரப் , பீருக்கும் பாராட்டுக்கள் .எல்லாவற்றையும் எல்லோரையும்
ஒருங்கிணைத்து செயல் படுத்திய நூரக்காவுக்கு இரட்டைப்பாராட்டுக்கள்
அடுத்து
காரைக்குடி என்றாலே
அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் வந்து நிலவுகள் கூடி வானில் பறக்கும் நிலைக்கு மனம்
சிறகடித்துச் செல்லும். விசாலமான வீடு,மாடு கோழி பலாமரம் கிணறு, திருமணம், படித்த
பள்ளி எனநினைவுகள் பின்னோக்கிச் செல்லும்.
இதற்கெல்லாம்
பின்புலமாக இருந்த அந்த வீட்டை அண்மையில்
காரைக்குடியில் நடந்த பானு சாலிஹான் இரண்டாவது மகன் திருமணத்திற்குப்போனபோது
பார்த்தோம்
திருமணக் கூடத்துக்கு
மிக அருகில்தான் அந்த வீடு. ஆனால் அருகில் சென்று பார்க்கத்தோன்றவில்லை – காரணம்
அதுஇப்போது மதுக்கூடமாகிவிட்டது.
திருமணம் சிறப்பாக
நடைபெற்றது .தங்குவதற்கும் உணவுக்கும் நல்லமுறையில் ஏற்பாடுகள் செய்திருந்தார்
சாலிஹான்
,சஹா தான் படித்த பொறியியல் கல்லூரியைப்பார்த்து
புத்துணர்வு பெற்று வந்தார்
எனது வங்கி நண்பர்
சுந்தரத்தை நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்தேன். நாங்கள் தங்கியிருந்த
அறைக்கு வந்தார். வெகு நேரம் மனம் திறந்து பேசிக்கொண்திருந்தோம்
அத்தா, கரீம் அண்ணன்
,ரகீம் அண்ணண் எல்லோருக்கும் நண்பர்,
உறவினர் குத்துஸ். திருமண நிகழ்ச்சியில்
அவரைப்பார்த்தது, பழைய அன்பு மாறாமல் அவர் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தது
எல்லாம் மன நிறைவைக்கொடுத்தது .
இதெல்லாம் ஏற்கனவே
படித்தது போல் தோன்றுகிறதா ? அதுதான் மலரும் நினைவுகள்
மைத்துனர் சம்சுதீன்
(பசரியா) மகள் சாஜிதா திருமணமும் வரவேற்பும் அண்மையில் புதுக்கோட்டையில் நல்ல
முறையில் நடைபெற்றன .புதுக்கோட்டையில் போய் இறங்கியதில் இருந்து திரும்பும் வரை மூன்று
நாட்களும் நல்ல உபசரிப்பு நல்ல கவனிப்பு பைசல், பானு பர்வேஸ் .சேக் பாப்டி ஆத்திகா
ரிபாவும் கலந்து கொண்டது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி
.இதில் குறிப்பிட்டு
ஒன்றைச் சொல்ல வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன் (மூன்று ஆண்டு இருக்கும்) சம்சுதீன் திருமணத்துக்கு மண்டபம் பாத்தாச்சு
என்றார் .சரி எதோ பிதற்றுகிறார் என்று எண்ணினோம் அப்போது திருமணம் பற்றி
எந்தப்பேச்சும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை ..
இறைவன் நாட்டப்படி
அதே கூடத்தில் திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது . அதோடு அன்று சம்சு சொன்ன அதே
சமையல்காரர் , அதே சீரகச் சம்பா அரிசி பிரியாணி..
திருமணம் முடிந்து
சாப்பிட்டுக்கொண்டிருகையில் அண்ணே என்று பாசமாக அழைக்கும் குரல் கேட்டது ..திரும்பிப்பார்த்தால்
நீளமான உடையுடன் நின்றவர் குரல் நன்கு பழக்கப்பட்டதுதான் ஆனால் இப்படி ஒரு
தோற்றத்தில் நமக்குத் தம்பி யாரும் இல்லையே என்ற எண்ணம்.. பிறகுதான் பெரியத்தா
மகன் ரம்ஜான் என்று தெரிந்தது..உடை பற்றி அவர் அளித்த விளக்கம் : “உடையைப்
பார்த்தால் ஆணா பெண்ணா என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு இரூக்கவேண்டும் “
இது மிகவும்
மாறுபாடான விளக்கம் என்று எனக்குத்தோன்றியது .
என் துணைவியின்
உடன்பிறப்புகள் எல்லாம் ஓன்று கூடினால் சொத்துப்பிரிவினை பற்றி பேசுவது வழக்கம்(
ஒரு பொழுது போக்கு என்றும் சொல்லலாம் )
அந்த வழக்கம் மாறாமல்
அடுத்த நாள் சொத்துப்பிரிவினையைப் பதிவு செய்யலாம் என்று ஒரு செய்தி வந்ததால்
இரவோடு இரவாக அயுப்கான் (சர்மதா) மகிழுந்தில் திருப்பத்தூர் போய் ராசாக்கிளி உணவகத்தில்
பரோட்டா சாப்பிட்டுவிட்டு விடுதி அறையில் தங்கினோம்.(குழம்பு சுவையே இல்லாமல்
சப்பென்று இருந்தது .பழைய ராசாக்கிளி சுவையெல்லாம் எங்கே பறந்து போனது என்று
தெரியவில்லை )
அடுத்த நாள் சம்பந்தப்பட்ட
எல்லோரும் திருப்பத்தூரில் இருந்தோம்,
வழக்கம் போல் தேதி.மாதம், ஆண்டு ,யுகம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது ,ஒத்தி
வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது
அன்று இரவு நானும்
ஜோதியும் மதுரை போய் மெஹராஜ் அக்கா வீட்டில் தங்கி, விருந்து உபசரிப்பில் மகிழ்ந்து
ஈனா கடையில் சில பல பொருட்கள் வாங்கிகொண்டு பின் கடலூர் வந்து சேர்ந்தோம்..
மறக்க முடியாத இரவு
அது. அன்றுதான் ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மைய அரசு அறிவித்து
நாட்டையே நிலை குலைய வைத்தது
இரண்டு ஆண்டுகளுக்கு
முன் சையது பாத்து அக்கா (சுல்தான் மாமா)வைப் பார்க்க நெல்லை போயிருந்தோம் .
.கல்லூரியில் உடன்படித்து, வங்கியிலும் உடன் பணியாற்றிய சுந்தரத்தைப் பார்க்க அவர்
வீட்டுக்கு நெல்லை (பீடா) பீருடன் போயிருந்தேன். வீட்டில் அவர் இல்லை . அவர்
பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அங்கு வந்திருந்த ஒருவர் சுந்தரத்தின் தொலைபேசி
எண்ணைக்கொடுத்ததுடன் நான் அவரைத்தேடி வந்திருப்பதையும் சுந்தரத்திடம் தெரிவித்தார்..
“பாய்” என்று உரக்க
விளித்து நட்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் தாண்டியும்
வீட்டை அடையாளம் கண்டு வந்தது அறிந்து வியப்படைந்தார் .
நான் தங்கியிருந்த
விடுதி அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு அருகில்தான் இருக்கிறது அங்கு வரமுடியுமா என்று கேட்டேன் .தனக்கு இதய
அறுவை செய்திருப்பதால் மாடி ஏறி வர முடியாது என்று சொன்னார் .
அடுத்த நாள் அவர்
வீட்டில் போய் சந்தித்துப்பேசினேன்.. ஒரு திருமண வேலையாக நாகர்கோவிலுக்கு சுந்தரம்
போக வேண்டியிருந்ததால் அதிக நேரம் பேச முடியவில்லை.
(காரைக்குடியில் நான்
சந்தித்த சுந்தரம் வேறு;இவர் வேறு)
சுந்தரத்திடம் சிறிது
நேரம் பேசியதில் மிக நெருங்கிய நெல்லை நட்பு சிவராமகிருஷ்ணன் தொடர்பு எண் .கிடைத்தது
. அவரைத் தொடர்பு கொண்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து “பாய்:” என்று
அழைத்தார் .அப்போது அவர் பூனாவில் இருந்தார். விரைவில் சென்னை திரும்பி விடுவேன்,
சென்னையில் சந்திக்கலாம் என்று சொன்னார். அடுத்து சென்னை போயிருக்கையில் அவர்
பாப்டி வீட்டுக்கு வந்து , வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.. அப்புறம் அவர்
வீட்டுக்கும் நான் போய், பழைய கதையெல்லாம் பேசி விட்டு,இரவு உணவை அங்கேயே உண்டு
விட்டு வந்தேன்.
நெல்லையிலிருந்து
அடுத்த நாள் இன்னொரு பழைய நண்பரைப்பார்க்க மதுரை போனேன். சீ ஆர் வீ என்று அழைக்கப்படும் அவர் என்னை விட வயதில்
மிகவும் மூத்தவர் . தொழிற்சங்க நடப்புகளில் பெரிதும் பங்கேற்பவர் . வங்கியில் நான்
சேர்ந்த நாளில் இருந்தே நல்ல பழக்கம். துறையூரில் நான் அதிகாரியாப் பணிபுரிந்தபோது
கிளை முதுநிளைமேலாளராக அவர் இருந்தார். அப்போது நட்பு இன்னும் நெருக்கமாகி குடும்ப
நட்பானது . அவர் துணைவி மதுரமும் பைசல் பாப்டியிடம் பாசமாகப் பழகுவார்
மதுரையில் அவர்கள்
வீட்டுக்குப்போனதும் அகமும் முகமும் மலர வரவேற்றார்கள் .தாடியைத் தவிர முப்பது
ஆண்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்கள் .பல மணி நேரம் பேசிவிட்டு மாலை நெல்லை
வந்து சேர்ந்தேன் .சில வாரங்களில் சீ ஆர் வீ மறைந்த செய்தி வந்தது . முதியவர்தான்
, வயது எழுபத்தி ஐந்து இருக்கும். இருந்தாலும் அண்மையில் பார்த்துப் பேசிய ஒருவர்
இன்று இல்லை என்பது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகவே இருந்தது
ஒரு நாள் கடலூரில் மீன்
வாங்கப்போயிருந்தேன்.அங்கு நின்றிருந்த ஒருவர் நீங்கள் கனரா பேங்க் மேனேஜர்தானே
என்று பேசத் துவங்கினார். .அவர் பெயர் சலாம்..வெளிநாட்டில் பொறியராக இருந்த அவர் இப்போது இந்தியா வந்து
முதுநிலப்படிப்பு படிப்பதாகச் சொன்னார் .
மனை ஓன்று விற்பனைக்கு இருப்பதாய்ச் சொன்னார் .பலதடவை பார்த்து பல பேச்சு
வார்த்தைகளுக்குப் பிறகு பைசலுக்கு அந்த இடத்தை வாங்கி, வீடு கட்டி புதுமனை புகு
விழா நடத்தினோம். இறைவனருளால் விழா சிறப்பாக நடைபெற்றது . அழைத்தவர்கள் எல்லோரும்
(ஒரு சிலரைத்தவிர ) வந்தது மகிழ்ச்சியாக இருந்தது .
வீடு அமைப்பும்
விருந்தும்(சைவம் அசைவம் இரண்டும்) மிகச் சிறப்பாக இருந்ததாக எல்லோரும்
பாராட்டினார்கள்
கனார வங்கி
ஓய்வூதியர்கள் சங்க மாநாடு கொச்சியில் இரண்டு தினங்கள் நடைபெற்றது . நீண்ட
தொடரிப்பயணத்தின் பின் கொச்சியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் பலரை சந்திக்க
ஒரு வாய்ப்புக் கிடைத்தது.குறிப்பாக ஜனாப் சம்சுதீன் (மதுரைக்காரர்).எழுபத்திஐந்து வயது
தாண்டியும், தொழில் சங்க செயல்பாடுகளில் தீவிரமான ஆர்வம்,ஈடுபாடு. .ஈரோட்டில் அவரும் நானும் வங்கி ஆய்வுத்துறையில் ஒன்றாகப்
பணியாற்றினோம். மதுரைக்கு மாறுதல் அவர் கேட்டிருக்க பெயர் குழப்பத்தால் (??)
எனக்கு மாறுதல் செய்தி வர அவர் உடன் வட்ட அலுவலகம் சென்று தவறைச் சரி செய்து வந்தார்.
வங்கி விதிமுறைகளை
நன்கு கற்றவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. ஒருமுறை அவர் சொன்ன ஒரு கருத்து எனக்கு
சரியென்று படவில்லை. தலைமை அலுவலகத்துக்கு எழுதிக்கேட்டதில் என் கருத்தே சரியென்று
தெளிவு படுத்தினார்கள். அது முதல் என்னை மிகவும் மதிப்பாகவும் பாசமாகவும்
நடத்துவார். .
ஒரு வழியாக கல்வி
பற்றி எதுவும்சொல்லாமல் இந்தப் பகுதியை நிறைவு செய்து விட்டேன்.
இன்னும் சில
செய்திகள் ஏற்கனவே படித்தது போல் தெர்கிறதா ? அதுதான் மலரும் நினைவுகளைத் தொடரும்
நினைவுகள்
இறையருளால் அடுத்த
பகுதியியில் கல்வி பற்றி சில செய்திகளையும் மருத்துவம் பற்றி என் கருத்துக்களையும்
சொல்லி அதோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய எண்ணுகிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த ஷாகுல், வர்மா கம்பன்
கவிரா ,கிரசன்ட் ஷேக், ரவிராஜ் மெஹராஜ் அக்கா, ஷஹா ஹமீதா , பாப்டி
அனைவருக்கும் , ,நன்றி
. [16:18, 3/18/2017] Shahul:
ஒரு
மனிதராலே எத்தனை கற்க முடியும் ஆய கலைகள் 64
கற்று தேற்சி பெற முடிவு செய்தது போல். தெரிகிறது
[1
[16:21, 3/18/2017] Shahul: நானும் ஒரு சில லற்றை கற் றுக்
கொள்ளலாம் எனத் தோன்றுகிறது6:21,
( என் கருத்து
தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகத்தில் இசுலாம் பற்றிய படிப்பு நீ படிக்கலாம்
.மிகக்குறைந்த கட்டணம் .அரபு மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் முதுநிலப்பட்டம்
,இல்லாவிட்டால் இளநிலைப்பட்டப்படிப்பு படிக்கலாம் )
மாமா
நீங்கள் படிப்பதை பார்க்கும் பொழுது நான்கு வருடம் பொறியர்கல்வி அதை விடுத்து Geology
MSC வரை 5 வருடம் இன்னும் research என்ற பெயரில் 4 வருடம் என எனது மகன் படிப்பை தொடர்வேன்
என சொல்வதில் வியப்பே இல்லை. ஏதோ ஒரு ஜீன் தான் அவனை அவ்வாறு தூண்டி வருகிறது என
நினைக்கிறேன்
Varma 108 Kamban Kavira 18 03 17
உங்கள்
பதிவினை படித்துவிட்டு சற்றே மெய்மறந்து போனேன்.. வர்மா முதுநிலை பயிற்சி தங்களோடு
இணைந்து நிறைவு செய்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்.. வளரும் தலைமுறைக்கு
உங்கள் பதிவு ஒரு ஊன்றுகோல் h 👏 என்பதில் பெருமைபடுகின்றேன்..
Crescent Sheik 18 03 17
Subahanalla
CB rtd Raviraj 18 03 17
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj:
My wishes to you Sir for emerging a new life as writer after
retirement_
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj: Even in services you are
interested in yoga and unani medicines.
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj: Now you are free from the
tensions prevailed in banking career and this is the high time to live for
ourselves..
Meharaaj 18 03 17
அஸ்ஸலாமு
அலைக்கும் ஷர்புதீன்
போன
பயணக்கட்டுரைக்கு விமர்சனம் எழுதாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அடிக்கடி
ஞாபகம் வரும்.அதாவது யோகாவையும் இஸ்லாத்தையும் இணைத்து நீ முன்பு
எழுதியிருந்தாயல்லவா, அது ஏதோ சும்மா யோசித்து எழுதியது என நினைத்தேன்.
போன
கட்டுரை படித்த பின் தான் தெரிந்தது
அதற்கு
நீ எவ்வளவு தூரம் படித்து ஆய்வு செய்திருக்கிறாய் என்பது.அதை அவசியம் பாராட்டி
எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பேன் ஆனால் நேரமே கிடைக்க வில்லை.
P hd செய்து அண்ணா யுனிவர்சிட்டி யில்
சமர்ப்பித்த தெல்லாம் யாருக்குமே தெரியாத ஆச்சரியப்பட்ட விஷயங்கள்.
இந்த
வாரமும் படித்து மலைத்துப் போனேன்.
படிப்புக்கு
எல்லையே இல்லை என உன் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஆர்வம்
இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற உணர்வை எல்லாம் வல்ல அல்லாஹ்
நம் சந்ததிகளுக்கெல்லாம் கொடுத்தருளட்டும்.
உன்
சைக்காலஜி கனவும் நிச்சயம் வெற்றி பெறும்.
மாஷா
அல்லாஹ்
(என்
கருத்து நான் படித்தது
அண்ணாமலையில் எம். எஸ் சீ யோகா )
[08:27, 3/19/2017] Shaha Hameeda: உங்கள் பயண கட்டுரை படிக்க ரொம்ப
சுவாரஸ்யமாக இருக்கும்
[08:27, 3/19/2017] Shaha Hameeda: ஆனால் இன்னும் இந்த வார கட்டுரை
படிக்கவில்லை இனிமேல் தான் படிக்கனும்
[08:28, 3/19/2017] Shaha Hameeda: அல்ஹம்துலில்லாஹ்
பாப்டி (தொலைபேசியில்) மிக நன்றாக இருந்தது
இ(க)டைச்
செருகல்
மகாபாரதத்தில்
ஒரு வில் வித்தை பற்றி வரும். மேலே ஒரு மீன் உருவ பொம்மை சுழன்று கொண்டு மேலும்
கீழும் ஆடிக்கொண்டிருக்கும். கீழே ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் தெரியும் மீன்
பிம்பத்தைப்பார்த்து மேலே பார்க்காமல் அந்த மீன் பொம்மையை அம்பெய்து வீழ்த்த
வேண்டும். வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்ற அர்ச்சுனன், கர்ணன்
போன்றவர்கள்தான் இதைச் செய்ய முடியும்.
தொடர்
வண்டியில் காலைக்கடனை முடித்து காலைக்கழுவி வரும் நம் மக்கள் இப்படி ஒரு வித்தையை மிக இயல்பாக தினமும் செய்கிறார்கள்
குவளைகளுக்கு
எப்போது விலங்கில் இருந்து விடுதலை ?
உங்கள்
கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்
இறையருளால்
அடுத்த பகுதியில்
சந்திப்போ
வலை
நூலில் படிக்க
கூகிள்
தேடலில்
sherfuddinp.blogspot.com
ம்