தொடரின் ஒரு பகுதியை
நிறைவு செய்யுமுன் அதற்கு முந்தைய பகுதி பற்றி வந்த கருத்துகளை தொகுத்து
வெளியிட்டு தேவைப்பட்டால் விளக்கமும் கொடுப்பதே என் பழக்கம்.
இந்தப்பகுதியில் அதை
மாற்றி முந்தைய பகுதி பற்றிய கருத்துக்களையும் தேவையான இடங்களில் என்
சுருக்கமான விளக்கத்தையும் முதலில் தருகிறேன். அதற்கு ஒரு வலுவான காரணம்
இருக்கிறது
கருத்துக்களால் நான்
அடைந்த இன்ப அதிர்ச்சி, அச்சம் கலந்த மகிழ்ச்சி இவற்றின் தாக்கமே
அந்தக்காரணம்
உண்மையைச்
சொல்வதென்றால் ஒரு தயக்கத்துடன்தான் சென்ற பகுதியை வெளியிட்டேன் .வழக்கம் போல்
ஜோதியிடம் படித்துக்காண்பித்தபோதும் இது பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காத
அளவுக்கு சற்று வறட்சியாகத் தெரிகிறது என்று சொன்னது.
இப்படி சற்றும் எதிர்பாராமல்
கிடைத்த பாராட்டுக்களால் இன்ப அதிர்ச்சி மகிழ்ச்சி .
நடையில் மெருகு கூடி
இருக்கிறது, அமுத மொழி, எதிர் வரும் இதழுக்காக ஏங்குகிறோம் உளவியலும் படித்திருப்பாயோ ,எழுத்து நடையையும்
ரசிக்க வைக்கிறது இது போன்ற புகழ்ச்சிகள் தொடர்ந்து இதே போல் எழுத முடியுமா என்ற
அச்சகத்தை ஏற்படுத்தி இதோடு இந்தத் தொடரை நிறைவு செய்து வெளியேறி விடலாமா என்ற
எண்ணத்தையும் உண்டாக்கியது
ஒளி வட்டம் உண்டானது
போல் தலைகனம் வந்து விடுமோ என்ற அச்சம் வேறு .
கருத்துக்களை கீழே
தருகிறேன் ( தேவைப்படும் இடங்களில் என் சிறிய விளக்கத்துடன்)
CB rtd
Ravi 26 02 17
Lovely
memories.... Super
L 💐💐💐Near Gandhigram universityovely
Ajmeer
Ali 26 02 17
அழகு நடையில்
அமுத
மொழியில் பழகிய கருத்தைப்
பண்பாக
உரைத்த
அன்பு
மச்சானுக்கு ஆயிரம் வாழ்த்துகள்.
Shahul
26 02 17The writings of mama super.
"Thedal" that is the inspiration within him. Only few are having this
. All the best for him to get what he wants to achieve
[12:27,
3/2/2017] Shahul: In
every day life each of us is facing so many interesting things. But put it in
writing after recollecting our memories requires some SPL talent. Mama is
having that talent and we are
appreciating him for that.
[12:30,
3/2/2017] Shahul: Kamban veettu kaithadiyum kavi paadum. Ayyavin kavi
paadum atral is the inspiration for him.
Siraj 260217
எல்லாம்
வல்ல அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக
நடைபெற்ற எங்களின் ஒரே பெண் திருமண நிகழ்வுகளை பெருமையுடன் நினைவு கூறியது
கண்டு நாங்கள் பேர் உவகை அடைந்தொம்.
மதிப்பற்குறிய
மச்சான் அவர்கட்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Raja
Bahadurkaan 260217
மாமாவின்
எழுத்தில் இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது ! வாழ்த்துக்கள் மாமா!.
[22:30, 2/26/2017] : இதயத்
கற்று
முடித்தபின் சுமக்கும் பசுமை நிறைந்த நினைவுகளை பாட கேட்டுள்ளோம்.
கற்று,கனிந்து, காலங்களை கண்ட பின் கல்வியின் காதலால்
இறையின் தேடலால்
மாணவனாய்
மாறி உறைவிட மையத்தில் இறையியலில் ஏற்றம் பெற்றதை அறிந்து பூரிக்கின்றோம்
நூல்
கொண்டு சேலை நெய்யும் சின்னாளபட்டியில்
தான்
அறிந்த ஞானத்தை பட்டாய் ஒருவர் உங்களுக்கு பகிர்ந்து கேட்டு மகிழ்ந்தோம்.
இன்னும்
பல செய்திகளை அறிந்திடவே எதிர் வரும் இதழுக்காக ஏங்குகிறோம்.
[22:47, 2/26/2017] +91 97914 29230: 👌🏻
Ajmal
22 02 17
Small incidents .very interestingly narrated. Looking forward to the
next episode
(Ajmal’s
comment on Part 1 which was not included in part 2)
Jothy 270217
தம்பி, அஸ்ஸலாமு அலைக்கம்.'' தேடல் என்பது உள்ள வரை வாழ்வில்
ருசியிருக்கும்.. அந்த தேடல் எதுவென்று அலையாமல் , உனது இலக்கு என்ன என்பதைக் கண்டறிந்தது தான் உன் சாமர்த்தியம்.'அத்தா முதல் கொண்டு நூர், முத்து , ஜென்னத், மும்தாஜ், மெகராஜ், ஷஹா, சிட்டு என்று அனைவரையும் அவரவர்
கல்லூரி கால நினைகளில் தவழவிட்டது உன் எழுத்து சாமர்த்தியம். திக்ரு,சித்து என்று நீ எழுதியிருப்பது, உன்னில் நடந்த மாற்ற மன்றி உன் எழுத்து
நடையையும் ரசிக்க, வியக்க வைக்கிறது, உடலையும் , மன தையும் | உன் போல் ஒரு முகப் படுத்தி கட்டுக்
குள் வைத்திரப் பது எனக்கெல்லாம் இயலாத காரியம் .முத்து உன் கட்டுரையை மிகவும்
ரசித்துக் கேட்டது இன்ஷா அல்லாஹ் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
Meharaj 27 02 17
அஸ்ஸலாமு
அலைக்கும் ஷர்புதீன்
உன்
பயணக்கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது.
உன்னோடு
நாங்களும் எல்லா இடங்களுக்கும் பயணித்து எல்லா அனுபவங்களையும் அனுபவித்தது போல்
இருக்கிறது.
எங்கள்
எல்லோருடைய மனங்களையும் படித்து எங்கள்
எண்ணங்களையெல்லாம் எழுதியது படிக்க
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
ஒருவேளை
ஸைக்காலஜியும் படித்திருப்பாயோ என்று நினைத்தேன்
இவ்வளவு
விஷயங்களையும் மறக்காமல் தொகுத்து எழுதியது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது
ஆனால்
இவ்வளவு படித்ததில் எதையாவது பிறருக்கு உதவுமாறு
செயல் படுத்தினால் நல்லது.
மாஷா
அல்லாஹ்.
(என் விளக்கம்: மெஹராஜ் அக்காவுக்கு
மருத்துவம் பற்றிய செய்திகளை சமூக
வலைதளங்களில் வெளியுடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை உளவியல் படிக்க பல ஆண்டுகளாக
முயற்சிக்கிறேன். தள்ளிக்கொண்டே போகிறது . இறைவன் நாடினால் படிப்பேன்.)
பாப்டி தொலைபேசியில் 01 03 17
நன்றாக இருக்கிறது
`
If [09:58, 3/3/2017] noor 2:
ஷர்புதீன்,
ஒரு வழியாக உன் பயணக் கட்டுரைகளைப்
படித்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. ஆனாலும் சில வார்த்தைகளைத் தூய தமிழில்
எழுதாமல் சாதாரணத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கரு த்து.
உதாரணத்திற்கு
கட்செவி என்ற வார்த்தையை விட வாட்ஸ்அப் என்பதே சிறந்தது.இப்படித் தூய தமிழைத்
தேடுவதால்தான் நம் தமிழ்மொழியின் வளர்ச்சி தடைப்படுகிறது.
இப்போது
நாம் மண்பாண்டத்தில் விறகு அடுப்பில் சமைக்கிறோமா?கடடைவண்டயில் போகிறோமா? இல்லை
புறாவைத்தான் தூது விடுகிறோமா? பின்
நாம் பேசும் மொழியை மட்டும் ஏன் தேக்கி வைக்க வேண்டும? மனிதனுக்காகத்தான் மொழியே தவிர மொழிக்காக மனிதன் இல்லை. வடிவேலு
ஜோக்கைக்கூட எவ்வளவு ரசித்துச் சிரிக்கறோம்.் அதுவும் தமிழ்தான் ஆனால் எளிமையானது.
இயல்பானது.
.
நம்நாடு இன்று இருக்கும் சூழலில் கவி நயத்தை விட
practicalaana (சில விஷயங்களை எளிதாக விளக்க
ஆங்கிலமும் தேவைப்படுகிறது. பிழைப்புக்கு உலகம் முழுதும் தேவைப் படுவது போல்)ஆக்க
பூர்வமான செயல் திறன் தான் அவசரத்தேவை.
.இன்னும்
ஒன்றே ஒன்று சொல்லி முடித்துக்
கொள்கிறேன். அதாவது "பணிமூப்பு "என்று எழுதாமல்" பணி
ஓய்வு". என்று எழுது. ஏனென்றால் என்னால் என் தம்பியைப் படுகிழவனாகக் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த வார்த்தை
அப்படி ஓர் உணர்வைத் தோற்றுவிக்கிறது.
நாம்
எல்லோரும் வயதானாலும் மனதளவில் இளமையாகத் தானே இருக்கிறோம். போதும்
அறுவை
என்று நினைக்கிறேன்.
f you think
otherwise pls let me know.
With best wishes akaa
[21:40,
3/3/2017] noor 2: என்னை
எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.நான் தூய தமிழ் என்று சொன்னது
கடினமான புரியாத தமிழ்ச் சொற்களைப் பயன்
படுத்தாமல் எளிய பழக்கத்திலிருக்கும் தமிழைப் பயன் படுத்தினால் எல்லோரையும் எளிதாகச் சென்றடையும் என்றுதான் கூறுகிறேன்.
தர்மம்
, நியாயம், நீதி, நேர்மை, உண்மை இந்த அடிப்படை தர்மங்கள் தான் என்றும் மாற்றக்கூடாதவை.
மற்றதெல்லாம் மாறுவது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம்.
இவை
என் கருத்துக்கள். அவ்வளவுதான்.ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.
(என் விளக்கம் நூரக்காவுக்கு
எல்லோருக்கும் மூத்த
உடன்பிறப்பு நூரக்காவின் வயது, மூப்பு, அனுபவம்
,அறிவு இவற்றைப்பெரிதும் மதிப்பவன் நான்.
எங்கோ எப்போதோ படித்த
ஒரு துணுக்கு நினைவுக்கு வருகிறது..
நகரச்சூழலில் வளர்ந்த
ஒரு அமெரிக்கச் சிறுவன் ஒரு நாள் வயல்
வெளிகள் நிறைந்த சிற்றூருக்குத் தன நண்பனைப் பார்க்கப் போகிறான்.
என்ன இது ஏதோ
இனம்புரியாத ஒரு மணம் என்னை மூச்சு முட்ட வைக்கிறதே. இது என்ன என்று தன நண்பனிடம்
கேட்கிறான்,
இதுதான் உங்கள்
நகரத்தில் கிடைக்காத தூய , மாசில்லாத காற்று என்று நண்பன் பதில் சொல்கிறான் (நான் இதைப் படிக்கும்போது அது
அமெரிக்கத் துணுக்காக இருந்தது இப்போது இந்தியா வளர்ந்து அமெரிக்கா அளவுக்கு உயர்ந்து விட்டது )
ஆதி மனிதன் உண்ட
சமைக்காத உணவுதான் இப்போது பேலியோ டயட் என்ற புதிய பெயரில் வலம் வருகிறது
இன்றும் சில மிக மிக விலை உயர்ந்த உணவு
விடுதிகளில் விறகடுப்பில் மண் பானையில் சமைக்கிறார்கள் அவர்கள் வளாகத்துக்கு உள்ளே
அவர்களுடைய கட்டை வண்டியில்தான் பயணிக்க வேண்டும்.
நாகரீகம் என்ற பெயரில்
உடை, இசை ,நடனம் எல்லாம் ஆதி மனிதன் பாணியை நோக்கித்தான் போகின்றன,மனதளவிலும் நாம்
அவனை விட எந்த விதத்திலும் பண்பட்டதாய்த்
தெரியவில்லை
அறுபது அறுபத்தி
ஐந்தைத் தாண்டி விட்டால் படு கிழவன்கிழவிதான் எழுபது எழுபத்தி ஐந்தைத் வயதைத்தாண்டி விட்டால் படு படு கிழவன் கிழவிதான்
இது இயற்கை.
இயற்கையின் விதிகளை,
மாறுதல்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
கட்செவி போன்ற
சொற்கள் உங்களுக்குப் புதுமையாகத் தோன்றலாம் .நம் குழுவில் சுராஜ் இதயத் போன்ற
பலரும் இதை இயல்பாகப் பயன்படுத்துகிறார்கள் .
என் எழுத்தில் எது
உங்களுக்குப் புரியவில்லை விளங்கவில்லை என்பதைத் தெரிவித்தால் தெளிவாக்கலாம்
கவிநயம், எல்லாம்
எனக்கு வராது . மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுகிறேன்
எண்ணங்களை அப்படியே
எழுத தமிழ்தான் எளிதாகத் தெரிகிறது
ஆங்கிலத்துக்கு நான்
எதிரி அல்ல. தமிழை விட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது எளிது.
நாற்பது ஆண்டு வங்கி
வாழ்க்கையில் தமிழ் எழுதுவதே மறந்து போய் விட்டது . சில ஆண்டுகளுக்கு முன்பு
நாட்குறிப்பு தமிழில் எழுதத் துவங்கியபோது மிகவும் சிரமாமக இருந்தது .விடாமல்
முயற்சி செய்ததில் ஓரளவு சரியாகி விட்டது..
எழுத்துப் பணியில்
இறங்கும்போது முடிந்த வரை தூய தமிழில் எழுத எண்ணம் தோன்றியது.
இதற்குத்
தூண்டுகோலாய் இருந்தவை சிறு வயதில் எப்போதாவது கேட்ட பீ பீ சீ தமிழோசை,தினமும்
கேட்ட இலங்கை வானொலித் தமிழ், இப்போது கேட்கும் டிஸ்கவரி தொலைகாட்சித் தமிழ் ,மக்கள் தொலைக்காட்சி
தமிழில் சொல்லத்
தயங்கும் ,நாக்கூசும் செய்திகளை
ஆங்கிலத்தில் எளிதாகச் சொல்லலாம் . .அது போன்ற செய்திகளை நான் சொல்வதில்லை
தர்மம் , நியாயம், நீதி, நேர்மை, உண்மை. – மிக உயர்நிலையில் உள்ள இவை பற்றி நான்
ஒன்றும் சொல்வதற்கில்லை
Meera
mustak 03 03 17
I like it
periamma very practical
Hidayat 030317
தனித்தமிழில்
கோற்வையாகவும் சுவாரசியமாகவும் எழுதுவது என்பது ஒரு சிறப்பு. அதற்கான முயற்சியும, மெனக்கிடலும் பாராட்டுக்கு உாியது.
எப்பொழுதுமே
நாம் மூழ்கிக்கிடக்கும் தங்லிஷ்ல் இருந்து
ஒரு இனிய இளைப்பாரல்
தங்லிஷ் சரியென்ரால் மணிபிரளவமும் சரிதானே.
Suraj 03317
நூருக்கு,
இதயத்துல்லா
சொல்வது போல் தனித்தமிழில் சரளமாக எழதுவது என்பது சுலபமல்ல.
படிப்பதற்கு
சுகமாகத்தானே இருக்கிறது.
இனறைய
தலைமுறையும் வரும் தலைமுறையும்"ழ" எழுத்தை சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டாலே தமிழுக்குக்
கொடுக்கும் பெரிய மரியாதையாகும்.☪🤔✍
([13:24, 3/3/2017] Suraj CR: பணி ஓய்விற்கு பிறகு மாணவனாகிய அண்ணனிற்கு அஸ்ஸலாமு அலைக்குமும்
வாழ்த்துக்களும்.
தொட்டனைத்தூறும்
மணற்கேணி போல் உங்களின் சகல கல்வி ஆர்வம்
ஊற்றெடுத்துள்ளது பிரமிப்பாகவும்,பெருமையாகவும்
உள்ளது.
கல்வி,மார்க்கம்,தியானம் எனும் முப்பரிமாணங்களில்
தேர்ச்சி பெற்று இன்னமும் கல்வி தேடிக்கொண்டிருக்கும் ஆர்வம் ஆச்சரியம்.
மெஹராஜ்
சொன்னது போல் இவை எல்லாவற்றையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் மிகவும் நன்றாக
இருக்கும்.
சென்ற
வாரம் சிட்டு தேர்வு எழுத திருப்பதி சென்ற பொழுது நாங்களும் சென்றிருந்தோம்
அங்கு
இருந்த கல்லூரிகளை காணும் போது சொல்லமுடியாத உறசாகம்,மகிழ்ச்சி மாணவியாக மாற முடியுமா என்ற
ஏக்கம் எல்லாம் தோன்றியது.
நீங்கள்
எழுதியிருப்பது முற்றிலும் உண்மை.
கல்லூரி
வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை.
அத்தாவின்
பொருளாதார நிலையைஎண்ணி நான் கல்லூரி செல்ல எண்ணவில்லை.
விடடுதியில்
தங்கிப் படிக்க மிகவும் ஆசைப் பட்டதுண்டு.இவ்வளவையும் படிக்க உடல் நலத்தையும்
பணபலத்தையும் கொடுத்த அல்லாவிற்க நன்றி சொல்லி மேலும் உங்கள் கல்வித்திறன் வளர எல்லாம் வல்ல
அல்லாகுத்ஆலாவை இறைஞ்சுகிறேன்.
அச்சிடும்
போது பிழைகள் இருந்தால் sorry.☪👏
விமான
பணிப்பெண் ஆக வேண்டும் என்பது என் கனவாக இருந்த்தது
( என் விளக்கம் சுராஜுக்கு )
- இப்போது
கூடப்படிக்கலாம் . தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் கட்டணம் ஆண்டுக்கு இரண்டாயிரத்துக்குள்தான்
. மனம் இருந்தால் முயற்சி செய்தால் இறைவன் வழி காட்டுவான் ,)
கருத்துக்களும்
பாராட்டுக்களும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எல்லாப்புகழும் இறைவனுக்கே
தொடரின் பகுதியின்
வழக்கமான அளவில் பெரும்பகுதியை கருத்துக்கள் கைப்பற்றிகொண்டன.. எனவே ஒரு சில
செய்திகளைச் சொல்லி இந்தப் பகுதியை நிறைவு செய்ய எண்ணுகிறேன்.
சென்ற பகுதியில் Jacuzzi என்ற சொல்லுக்கு பொருள் கேட்டிருந்தேன்.
Hidayat 26 02 17
[11:36, 2/26/2017]: நீர் ஒட்டமுள்ள தண்ணிர் தொட்டி.
[11:38, 2/26/2017]: In
simple, motor pump set in agri field.
Jacuzzi. In force water from side
walls give massage effect. In pump set force water from top hit head, back and
front give strong massage
இதயத்
சொன்னது சரியான விடை.
Jacuzzi என்பது குளியல் தொட்டிகள் உற்பத்தி செய்யும் ஒரு
மிகப்பெரிய நிறுவனத்தின் பெயர்.
Xerox என்ற நிறுவனத்தின் பெயர் நகல் பொறியின் பெயரானது போல் Jacuzzi நிறுவனத்தின்
பெயரே குளியல் தொட்டியின் பெயராக நிலத்து விட்டது.
, ஒருவர் வசதியாக உள்ளே உட்காரும் அளவுக்குப் பெரிய
western toilet போல் ஒரு தொட்டி இருக்கும். உள்ளே உட்கார்ந்தால் அதே போல் பல
இடங்களில் இருந்து வேகமாக தண்ணீர் பீய்ச்சி அடித்து இதமாக உடலைத் தடவிக்
கொடுக்கும். இது ஒரு வகையான ஜாக்குசி.
இனி
யோகா இரண்டாம் ஆண்டு
முடிவில் ஆங்கிலத்தில் நூறு பக்க அளவில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவேண்டும். இதற்கு
நடைமுறையில் எளிய வழி இருக்கிறது. உரிய தொகையை உரியவரிடம் கொடுத்தால் அவரே
எப்படியோ (வெட்டி ஓட்டும்
தொழில்நுட்பத்தில் ) ஆய்வுக்கட்டுரை வேண்டிய எண்ணிக்கையில் கணினி தட்டச்சுச்
செய்து வாங்க வேண்டிய ஒப்புதல்களையும்
வாங்கி நம்மிடம் கொடுத்து விடுவார்.
இரண்டாம் ஆண்டு
படித்த அறுபதுக்கு மேற்பட்டவர்களில்
மிகப்பெரும்பான்மையோர் இந்த எளிய வழியில் போய்விட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் (
என்னையும் சேர்த்து) சொந்தமாக எழுத முயற்சிப்பது என்று எண்ணினோம் .
நான் எடுத்த தலைப்பு –
இது வரை யாரும் முயற்சிக்காதது -
இசுலாமும் யோகாவும் –
சில பல அச்சுறுத்தல்கள்
என்னைத் தயங்க வைத்தன
முதலாவது – வழக்கமான
வழியை விட்டு விலகிப்போனால் அது சரியில்லை இது சரியில்லை என்று அலைய விட்டு
அலைக்கழித்து, ஆண்டுகள் கடந்து போய்
விடலாம்
இரண்டாவது இது போல்
மாறுபட்ட தலைப்புக்களை ஆசிரியர்கள் விரும்ப மாட்டர்கள்
மூன்றாவது இது ஒரு
மிகவும் விவாதத்துற்குரிய பொருள் .. தப்பித்தவறி முரணான
கருத்துக்கள் கட்டுரையில் புகுந்து விட்டால் பெரிய அளவில் எதிர்ப்பும் சர்ச்சையும்
தோன்றலாம் .
இவையெல்லாம் என சக
மாணவர்கள் கூறிய கருத்துக்கள், அறிவுரைகள்.
.மூன்றாவதைச் சொன்னவர் ஒரு இசுலாமியர்
யோகா மையத் தலைவரை
சந்தித்து இது பற்றிப் பேசினேன். அவர் மிக நல்ல தலைப்பு. நன்றாகச் செய்யுங்கள்,
என்று உற்சாகமூட்டினார். அவர் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் அணுகலாம் என்றும்
சொன்னார்,
அடுத்து யோகா பேராசியரிடம்
பேசினேன் .அவரும் நல்ல முயற்சி . தொடருங்கள் என்று பச்சைக்கொடி காட்டினார்.
பிறகென்ன உற்சாகமாக
செயலில் இறங்கினேன், முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. பின்பு
கணினியில் அமர்ந்து நானே ஒரு வடிவம் அமைத்து தலைப்புக்கள் கொடுத்து இறைவன் மேல் பாரத்தைப்
போட்டு விட்டு எழுதத்துவங்கினேன்..பிறகு
கட்டுரை மிக வேகமாக வளர்ச்சியடைந்தது . கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கணினியில்
அமர்ந்து வலைத்தளத்தில் பல்வேறு செய்திகளை சேகரித்தேன். இசுலாம் பற்றி நிறைய புதிய
செய்திகளைக் கற்றுக்கொள்ள இது வழி வகுத்தது,
என் எண்ணம் போல்
முழுமையான ஒரு ஆய்வுக்கட்டுரை உருவானது –எல்லாப்புகழும் இறைவனுக்கே .இந்தப்பணியில்
பெரிதும் உதவியவர்கள் மகன் பைசல் (கணினி
தொழில்நுட்பம்) தம்பி ஷஹா , என் சக மாணவர் முனைவர் அருண் (புள்ளியியல் அட்டவணை preparation of –statistical tables )). ஒரே ஒரு முறைதான் பல்கலைக்கழகம் சென்று நகல் பிரதியை பேராசிரியரிடம்
காண்பித்தேன் . சரியாக இருக்கிறது என்று ஒப்புதல் அளித்து விட்டார்.
ஆய்வுக்கட்டுரையின்
பொருள் பற்றி பத்து நிமிடங்கள் ஓடும் ஒரு ஒலி,ஒளி குறுந்தகடு உண்டாக்கி , அதை
இரண்டாம் ஆண்டு இரண்டாவது தொடர்பு வகுப்பில் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில்
ஒலி(ஒளி) பரப்பி அதற்குரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்
தொழுகையும் யோகாசனங்களும்
என்ற தலைப்பில் பாங்கு,(தொழுகை அழைப்பு) ,ஒளு (உடல் சுத்தி), தொழுகை சில சூராக்களை
உள்ளடக்கி ஒரு குறுந்தகடு பைசலின் உதவியோடு உண்டாக்கினேன்,.
அண்ணாமலைப்
பல்கலைக்கழக யோகா மையத்தில் உள்ள பெரிய கூடத்தில் மேடை போன்ற பகுதியில் பதினெட்டு சித்தர்களின் சிலைகள் , இன்னும் பல
உருவப்படங்கள் இருக்கும். அந்தக் கூடத்தில் எழுபது யோகா முதுநிலை மாணவர்கள்,
மூன்று பேராசிரியர்கள் முன்னிலையில்
பாங்கை ஒலிக்க வைத்து , ஒளு செய்யும் முறையையும் தொழுகையையும் திரையில்
ஒளிக்க வைத்து , நானும் , தொழுது, காண்பித்து
சில சூராக்களை அரபு மொழியில் ஒலிக்கச்செய்து அவற்றிற்கு ஆங்கிலத்தில்
விளக்கம் கூறியது ஒரு மிகப்பெரிய சாதனையாக எனக்குள் ஒரு பெருமிதத்தை உண்டாக்கியது
.எல்லாம் இறைவன் அருள்
நிறைய வினாக்கள்
ஐயங்கள் எழுந்தன . குறிப்பாக ஆசிரியர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் .
எனக்குத் தெரிந்த வரை அவர்களுக்கு விளக்கம் அளித்தேன்
அண்ணாமலையில் ஒவ்வொரு
ஆண்டு இறுதியிலும் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும் , முதலாம் ஆண்டில் கேரளத்துப்
பெண் மருத்துவர் ஒருவர் அழகாக முறைப்படி நடனம் ஆடினர் இரண்டாம் ஆண்டு முடிவில் ஒரு ஆந்திர
மாணவி ஒவ்வொரு பூக்களுமே பாட்டை மிகத்தெளிவாகப்,பாடினர்
.
அறுபது ஆண்டு பயணத்தை
பல பயண இடைவேளைகளுடன் முப்பத்தியேழு பகுதிகளாக வெளியிட்டேன். இது ஒரு ஆறு ஆண்டுப்
பயணம்தானே. நான்கைந்து பகுதிகளில் நிறைவு
செய்து விடலாம் .என நினைக்கிறேன்
இத்துடன்
இந்தப்பகுததியை நிறைவு செய்கிறேன்.
இ(க)டைச்செருகல்
என் நண்பர் பல்
மருத்துவர் ஒருவர். மிக அழகான வசதியான மருத்துவ மனை நடத்தி வருகிறார்/\. நோயாளிகள்
காத்திருக்க வசதியான இருக்கைகள ,குளு குளு
காற்று, தொலைக்காட்சி, படிக்க நூல்கள் இவற்றோடு மிகப்பெரிய மீன் தொட்டி ஒன்று.
அதில் ஐந்தாறு மீன்கள் நீந்திக்கொண்டிருப்பது பார்க்க அழகாக இருக்கும் .காத்திருக்கும் நோயாளிகளின்
மன அழுத்தம் குறைய உதவும்.
அண்மையில் நான் அங்கு
போனபோது இரண்டு கருப்பு மீன்களை எடுத்து தனியாக ஒரு வாளியில் வைத்திருந்தார்கள் .
அளவில் மிகவும் சிறிய வெள்ளை நிற மீன் ஓன்று ஓரளவு பெரிய கருப்பு மீன்களை விரட்டி விரட்டிக்
கடித்துக் காயப்படுதுகிறது. கருப்பு மீன்களை எடுத்தவுடன் அந்த வெள்ளை மீன்
அமைதியாக இருக்கிறது என்று சொன்னார் மருத்துவர்.
அறுபது ஆண்டுகளுக்கு
முன்பு மேட்டூரில் வீட்டில் நிறைய புறாக்கள்
வளர்த்தோம். அதில் ஓன்று நல்ல கருப்பாக இருக்கும், அதை மற்ற புறாக்கள் ஒதுக்கி வைக்குமாம் .
இன, நிற பேதம் நமக்கு
மட்டும் சொந்தமில்லை போலும்
நிறைவாக ஒரு எளிய
சிறிய வினா
A B C D இந்த நான்கு எழுத்துக்களும் இல்லாமல் நூறு ஆங்கிலச் சொற்கள் விரைவில் சொல்ல வேண்டும்
எல்லோருக்கும்
தெரிந்திருக்கும் . விடை அடுத்த பகுதியில்
தங்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்
இறைவன் அருளால்
அடுத்த பகுதியில்
சந்திப்போம்
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com .
No comments:
Post a Comment