Monday, 30 November 2020

கற்றதும் பெற்றதும் கனவுகளும்

 

 

கற்றதும் பெற்றதும்

 

அரிச்சுவடியில் துவங்கி ஓரளவு குரான் ஓதும் அளவுக்கு அரபு மொழியைக் கற்றது

ஆழ்நிலை தியானம் பயின்றது

எழுத்துப்பணி – தமிழ் , ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான பதிவுகள் வெளியிட்டது --- முடிந்த வரை பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதி வருவது

மூன்று முதுநிலைப் பட்டங்கள் ஒரு முது நிலைப் பட்டயப்படிப்பு நல்லவிதமாக நிறைவு செய்தது

ஓரளவு மனித மனங்களைப் புரிந்து தெளிவு பெற்றது

 

கனவுகள்

 

அரபு மொழியை முறையாகப் படித்து பட்டம் , முது நிலைபட்ட்ம் பெறுவது

உளவியல் முதுநிலை படிப்பு

இதற்கெல்லாம்மேல்   மிகத்தரமான கல்வியை விலையில்லாமல் வழங்கும் ஒரு பள்ளிக்கூடம் துவங்கி அது வளர்ச்சி அடைந்து ஒரு பல்கலைக் கழகமாக உருவாவது

என்ன இளமை ஊஞ்சலாடுகிறதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது

கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் வயது ஏது ?

 

யார் கண்டது ? இறைவன் நாடினால் குதிரைகள் என்ன யானைகள் கூட வானத்தில் சிறகடித்து பறக்கலாம்

 

(பணி ஓய்வு பெற்று பத்தாண்டுகள் நிறைவு

அதில் விளைந்த சிந்தனைச் சிதறல் )

01122020tue

sherfuddino.blogspot.com

 

BLOCKED in FB

 

 

 

 

 

What is the common feature of the following words? Off Dust Left Screen Sanction (Thanks to Mr I S Peer Mohammed -- He posted this in WhatsApp) Answer These words are known as contronyms words that are their own antonyms, depending on usage. Eg Off Off can mean both ‘activated’ and ‘deactivated’. “Set off” - Activated “ Switch off - Deactivated Greetings and congratulations to Mr AR Viswanathan who came with right answer Thanks to all who attempted 30112020mon sherfuddinp.blogspot.com

 What is the common feature of the following words?



Off

Dust

Left

Screen

Sanction


(Thanks to Mr I S Peer Mohammed --

He posted this in WhatsApp)


Answer

These words are known as contronyms

words that are their own antonyms, depending on usage.

Eg


Off



Off can mean both ‘activated’ and ‘deactivated’. 

 “Set off” - Activated

   “ Switch off - Deactivated


Greetings and congratulations to

Mr AR Viswanathan who came with right answer

Thanks to all who attempted


30112020mon

sherfuddinp.blogspot.com

Friday, 27 November 2020

உமா ,சுசீலா

உமா ,சுசீலா

 

அமைப்பு  சாரா உழைப்பாளிகள் - பெரிய எண்ணிக்கையில் பரவலாக இருக்கும் அவர்களுக்கு    தொழில்சங்க அமைப்பு . நலவாரியம் என்று எதுவும் கிடையாது.

இருந்தாலும் அவர்களை பணி நீக்கமோ இடை நீக்கமோ செய்து விட முடியாது முன்னறிவிப்பு இல்லாமல் விடுப்பில் போவார்கள் ..அப்படி எத்தனை நாள் போனாலும் ஊதியத்தில் பிடித்தம் செய்ய முடியாது .குறித்த நேரத்தில் வராவிட்டால் ஏனென்று கேட்க முடியாது

 

பெரும்பாலும் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கும்.ஆனால் நாம் அவர்களை அழைக்க முடியாது .அவர்களுக்கு எதாவது வேண்டும் என்றால் அவர்கள் அழைப்பார்கள்

இதுதான் செர்வன்ட் மெய்ட்(servant maid) என்று அழைக்கப்படும் பணிப்பெண்களின் பொதுவான இலக்கணம் பல நேரங்களில் அவர்கள்

Maid   இல்லை madam ஆ என்ற ஐயம் வரும்

இந்த பொது இலக்கணத்துக்கு விலக்காகமிகச் சிறந்த பணிப்பெண்களும் அமைவது உண்டு

அப்படி நல்ல பெண்களில் ஓன்று குட்டாவில் அமைந்தது .சரியாக காலை ஏழரை மணிக்கு அழைப்பு மணி அடிக்கும் கதவைத் திறந்தால் பணிப்பெண் . ஒன்னரை ஆண்டு குட்டா வாழ்வில் ஒருநாள் கூட விடுப்பில் சென்றது கிடையாது .எந்த வேலையையும் மறுத்துப் பேசும் பழக்கம் கிடையாது முனுமுனுப்பு சிடுசிடுப்பு எதுவும் இருந்ததில்லை

.நன்றாகத் தமிழ் பேசுவார் ,கன்னடம், மலையாளம்,கூர்கி மொழி எல்லாம் தெரியும் நாங்கள் குட்டாவில் இருந்து கிளம்பப் போகிறோம் என்று தெரிந்ததும் அப்படி ஒரு அழுகை .பெற்றோரைப் பிரிவது போல் உணர்கிறேன் என்றார் ,இன்னும் துணைவியுடன் தொலைத்தொடர்பில் இருக்கிறார்

 

இதற்கு நேர் மாறாக கடலூரில் ஒரு பெண் . எப்போதும் முகத்தில் ஒரு சிடுசிடுப்பு . ஏதாவது கேட்டால் அமிலமாகத் தெறித்து வரும் சொற்கள் . குறிப்பிட்ட வேலைக்கு மேல் அதிகமாக மூச்சு விட்டால் கூட அதற்குத் தனியாக பணம் எதிர்பார்க்கும் குணம்

சம்பள முன்பணம் கேட்கும் நாளில் மட்டும் முகம் , சொற்கள் எல்லாம் சாந்தமாக இருக்கும் .அப்போது தலை கீழாக நடக்கச் சொன்னாலும் நடப்பார்  

அரை கிலோ சீனிக்கு (சுகர்) நாற்பது ரூபாய் விலையும் பத்து ரூபாய் சேவைக் கட்டணமும் கேட்ட உத்தமி  மாதம் ஆறு  நாட்களுக்குக் குறையாமல் விடுப்பு .அவர் விடுப்பில் சென்றது நம் குற்றம் போல் ஒரு சிடுசிடுப்பு

.பெருநாளுக்கு பிரியாணி கொடுத்த பாத்திரங்களை வாங்க ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டும் . என்ன தினமும் கேட்கிறாய் ,நானா பிரியாணி சாப்பிட்டேன்  என்றெல்லாம் சுடு சொற்கள்

.. இதெல்லாம் தாண்டி எங்கள் வீட்டில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார் என்றால் அதற்கு முழுக்காரணம் என் துணைவியின் பொறுமையும் இரக்க சிந்தனையும்தான்

.அதையும் தகர்க்கும் அளவுக்கு கடுஞ்சொற்கள் அடர் அமிலமாய் கொட்ட காயம்பட்டுப்போன துணைவி அவரை நீக்கியே ஆகவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.

 பணிப்பெண்ணுக்கும் தான் பேசியது தவறு என்று  உணர்ந்து விலக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மூன்று நாட்கள் பம்பரமாய்ச் சுழன்று வேலை பார்த்தார்

 .நாளையிலிருந்து நீ வரவேண்டாம் என்று சொன்னதும் அழுது ஆர்ப்பாட்டம செய்தார் .நான் என்ன தப்பு செய்தேன் என்று கேள்வி  என் இடத்திற்கு யார் வருகிறார்கள் பார்ப்போம் என அறைகூவல் வேறு (இடையில் வந்த பல பெண்களை அவர் சண்டை போட்டு விரட்டியிருக்கிறார் .)

 ஒரு வழியாக அவர் இடத்திற்கு வேறு நல்ல ஆள்சேர்த்து விட்டோம்

 

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் பணிப்பெண்கள் இல்லாமல் இருந்ததில்லை எந்த ஊர் எந்த மாநிலம் சென்றாலும் மொழிப் பிரச்னையையும் மீறி ஓரளவு நல்ல பெண் அமைந்து விடும்

வீட்டோடு பணிப்பெண் வைத்திருந்து அதன் பலன்களையும் சிரமங்களையும் எதிர்கொண்ட அனுபவமும் உண்டு

 

காலை மாலை என இரு வேளையும் பணிப்பெண்கள் வந்த காலமும் உண்டு .ஆட்டுக்ககல்லில் இட்லி மாவு ஆட்டியதும் உண்டு

இறைவன் நாடினால் அடுத்த வாரமும் பணிப்பெண்களுடன் பயணிப்போம்

 

28112020sat

sherfuddinp.blogspot.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Thursday, 26 November 2020

நபி இப்ராஹிம்

நபி இப்ராஹிம் அவர்களின் தந்தை பெயர் என்ன ?



குரானில் அந்தப பெயர் வரும் ஓர் இடத்தை குறிப்பிடுக

விடை

நபி இப்ராஹிம்(அலை)அவர்களின் தந்தையார் பெயர் 'ஆஜர்' ஆகும். 

இந்தப் பெயர் திருக்குரானில் அத்தியாயம் (6


)'அல் அன் ஆம்' - வசனம் 74ல் வருகிறது

சரியான விடை எழுதிய தோழர்
சிராஜிதீனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
பெயரை மட்டும் குறிப்பிட்ட தோழர்கள்
ரவி ராஜ் பீர்முகம்மது பர்வேசுக்கும் பாராட்டுகள்
27112020fri
sherfuddinp.blogspotcom

Tuesday, 24 November 2020

தமிழ் மொழி அறிவோம்

தமிழ் மொழி அறிவோம்



வீராணம் ஏரி
சென்னை நகரின் மிகப்பெரிய ஒரு குடிநீர் ஆதாரம்

இது எங்கு இருக்கிறது?

வரலாற்றுப் புதினம் ஒன்றில் இது பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

அது எது?

விடை

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி இருப்பது சென்னை அருகில் இல்லை
சென்னையிலிருந்து 240 கி மீ


தொலைவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் இருக்கிறது

இந்த ஏரி பற்றி விரிவான வர்ணனை
கல்கி எழுதிய  

பொன்னியின் செல்வன் 
என்ற வரலாற்றுப் புதினத்தின் துவக்கத்தில் வருகிறது

பொன்னியின் செல்வன்
பகுதி 1
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது

அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

தொடர்ந்து வலைதளத்திலோ நூலிலோ படித்து மகிழுங்கள்

சரியான விடை எழுதி பாராட்டு பெறுபவர்கள்
தோழர்கள்
கரம்.   கணேசன் சுப்பிரமணியம்
விஸ்வநாதன்  சிலசுப்பிரமணியம்
வேலவன்   தல்லத்   பாடி பீர் முஹம்மது

முயற்சித்த அனைவருக்கும் நன்றி

25112020wed
sherfuddinp.bligspot.com


Monday, 23 November 2020

Elegy, Ode

 

Elegy, Ode



What is the similarity?

What is the difference ?

 

Answer

Ode and Elegy are both lyrical poems of Greek origins. An ode is a formal, often ceremonious lyric poem that glorifies an individual, event, or a concept. An elegy is a poem of serious reflection, characteristically a lament for the dead. The main difference between ode and elegy is that ode praises or glorifies someone or something whereas elegy laments over the loss of something or someone

 

 

One of the most famous masters of the Horatian ode was John Keats.

A few lines from An ode to a Nightingale By Keats

 

My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk,
Or emptied some dull opiate to the drains
One minute past, and Lethe-wards had sunk:
'Tis not through envy of thy happy lot,
But being too happy in thine happiness,
That thou, light-winged Dryad of the trees,
In some melodious plot
Of beechen green, and shadows numberless,
Singest of summer in full-throated ease.

Examples of famed elegies include:

"Bitter constraint, and sad occasion dear,/Compels me to disturb your season due:/For Lycidas is dead, dead ere his prime,/Young Lycidas, and hath not left his peer."
-"
Lycidas" by John Milton

 

Congratulations ,Greetings and Thanks to those who responded with right answer:

M/S Raviraj , Ashraf Hameeda Parvez Ahmed

M/S Ajmeer Ali and Ganesa Subramanian replied comparing with Tamil literature Special Thanks to them 

23112020mon

Saturday, 21 November 2020

நல வாழ்வு


 நல வாழ்வு

கிட்டபார்வை
உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது . இப்போது 25% மாக இருக்கும் இந்தக்குறைபாடு இன்னும் முப்பது ஆண்டுகளில் 50%ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறதாம் குறிப்பாக ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையில் உள்ள குழந்தைகள் அதிலும் நகர்ப்புறங்களில் இந்தியாவில் வசிக்கும் குழந்தைகளில் ஆறு கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்களாம்
இதற்கு என்ன காரணம் ? ஊட்டச்சத்துக்குறைவா ? நோய் தொற்றா? நுண்ணுயிர்த் தாக்குதலா ?இல்லை இல்லை
நம் வாழ்க்கை முறை மாற்றம்தான் மிகப்பெரிய காரணமாம்
ஓன்று உறங்கும் முறை, , நேரம் மாற்றம் இரண்டு இயற்கை நமக்கு விலையில்லாமல் அள்ளித்தரும் சூரிய ஒளியை விட்டு நாம விலகிப்போனது
நல்ல தூக்கம், நீண்ட தூக்கம், ஆழ்ந்த தூக்கம் இவை கண்ணைப் பாதுகாப்தில் பெரிதும் உதவுமாம்
அடுத்து சூரிய ஒளி. வீட்டில் குளிரூட்டி பயணிக்கும் வண்டியில் குளிரூட்டி , அலுவலகத்தில் மின் தூக்கியில் இருந்து கழிவறை வரை குளிரூட்டி சூரிய ஒளி வேண்டும் என்றால் மேலை நாடுகள் போல் கடற்கரையில் போய் படுக்க வேண்டிய நிலை வரும் போலிருக்கிறது
இதற்கு என்ன செய்யலாம் ?
முதலில் பள்ளிகளில் போதுமான அளவுக்கு காலி இடங்கள், விளையாட்டு திடல்கள் இருக்க வேண்டும் ..ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வகுப்பறைகள் பூட்டப்பட்டு மாணவர்கள் திடலுக்கு அனுப்பப்பட வேண்டும் கைப்பேசிகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்
இப்போதுள்ள சூழ்நிலையில் நடக்கும் இணைய வகுப்புகள் நிலை மாறியவுடன் கைவிடப்பட் வேண்டும்
மானவர்களுக்கு படிப்புச் சுமை மட்டுப்படுத்தப்பட வேண்டும்
இவையெல்லாம் நடைமுறைப்படுதபட்டால் கிட்டப்பார்வையின் தாக்கம் மட்டுபடுததப்படலாம் என்கிறார்கள்
என் பள்ளி. கல்லூரிப் பருவத்தில் கண்ணாடி என்பது மிக அரிதான ஓன்று இப்போதோ ஆரம்பக் கல்வி மாணவர்களே கண்ணாடி அணிவது மிக இயல்பானதாகி விட்டது
போகிற போக்கைப்பார்த்தால் காதுக்கருவியும் இயல்பான ஒன்றாகி விடும் போல் இருக்கிறது
(நவம்பர் எட்டாம் தேதி (ஹிந்துவில் வந்த கட்டுரையின் மிகச் சுருக்கமான் மொழி பெயர்ப்பு அதன் தலைப்பு
Soak in the Sun, sleep early and tight to avoid myopia )
21112020sat
sherfuddinp.blogspot.com

Also please support and subscribe my channel
My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

Friday, 20 November 2020

ஊசியின் காதில் ஒட்டகம்

 


ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்

குரான் வசனம்(பகுதி) இடம் சுட்டிப்பொருள் விளக்குக
விடை
குரான் வசனம் 7:40 ள் பகுதி இது
இறை வசனங்களை பொய்ப்பித்தும் புறக்கணித்தும் பெருமை அடித்தவர்கள் பற்றி
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது
சரியான விடை அளித்த தோழர்கள் ஞாழல் மலர், ரவிராஜ் பீர் முகமதுக்கு நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20112020fri

Wednesday, 18 November 2020

தமிழ் மொழி அறிவோம் நாவாய்

 



ஒரு சிறிய எளிய வினா

 

கடற் படையைக் குறிக்கும் நேவி (Navy) என்ற சொல்லின் மூலச்சொல் எது ?

இறைவன் நாடினால் நாளை

 

 

?


போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய்

 

பள்ளியில் படித்த நளவெண்பா பாடல் இது .இதில் வரும் நாவாய் என்ற சொல்லுக்கு கடல் கலன் (கப்பல்) என்றும் நா+ வாய் -நாக்கும் வாயும் என்றும் பொருள் கொள்ளலாம்

 

இந்த நாவாய் என்ற சொல்தான் நேவி (Navy) என்ற சொல்லுக்கு மூலச்சொல் என்று சொல்கிறது ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல்

சரியான விடை அனுப்பிப் பாராட்டுப் பெறுபவர்கள்

திருவாளர்கள் செங்கை சண்முகம் , ராஜா சுப்பிரமணியன்

 

முயற்சித்த அனைவருக்கும் நன்றி

 

இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்

 

18112020wed

Sherfuddinp.blogspot.com

Monday, 16 November 2020

ENGLISH Sleep Tight

 


“Soak in the Sun, sleep early and

tight to avoid myopia “

Is the sentence OK?  If not, what is the mistake?

ANSWER

Soak in the SUN, sleep early and tight to avoid myopia

(The Hindu 08112020)

The sentence is OK but I got confused about the meaning of TIGHT in this context

And I thought it may be fight

Then I found that saying “Sleep tight “Is a way wishing sleep well

Many a reply I received

Mr Swararn Singh’s  reply Tight should be fight came near to the question (not answer)

Thanks to one and all who responded

16112020mon

sherfuddinp.blogspot.com

Saturday, 14 November 2020

1000 பிறை கண்டவர்

 

1000 பிறை கண்டவர்

பொருள்? விளக்கம் ?

இதற்குப் பலவிதமான விடைகள் விரிவான விளக்கங்கள் வந்தன

எதுவும் தவறென்று சொல்ல முடியாது

 

 

 

80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும்

இது பொருத்தமான விடையாகத்  தெரிகிறது

அரபு ஆண்டுக்கனக்கின்படி ஆயிரம் பிறைகள் என்று ஒரு விடை வந்தது அதுவும் கணக்கு சரியாக வரவில்லை

முனைவர் பாஷா ஒரு புதுமையான பொருத்தமான விடை அனுப்பியுருந்தார் புனித லைலத்துல் கதிரை அடைந்தவர் என்று

 

 

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.குரான்  97 :3)

அவருக்கு சிறப்பு நன்றி

விடை அனுப்பிய திருவாளர்கள்

அஷ்ரப் ஹமீதா ,செங்கை சண்முகம்

கணேசன் சுப்பிரமணியன் சீ எஸ் வெங்கடேசன் ரவிராஜ்

சாகுல் , சாஜஹான்

அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்

 

ஆயிரம் பிறை கண்டு நலமுடன் வளமுடன் நாம் அனைவரும் வாழ ஏக இறைவன் அருள்புரிவானாக

14112020sat ,