Sunday, 28 April 2024

வெளியிடாத கவிதைகள்

 போட்டிக்கான பதிவு

            தேடல்கள்


சிந்திக்க வைக்கும் சீரிய தலைப்பு


தேடாமல் தேடிவரும் பாசமும் பரிவும்


தேடிப் பெறும் பதவிகள் படிப்புகள்


தேடியும் தேடாமலும் கிடைக்கும் சில செல்வங்கள் இனிமைகள்


தேடாமலும் தேடியும் கிடைக்கும் நட்புகள் உறவுகள்


தேடிக் கிடைக்காமல் போன சில புளிப்புப் பழங்கள்


தேடிப் பெற்றதாய் நினைத்து ஏமாந்த அறிவும் ஞானமும்


இதையெல்லாம் தாண்டி நிறைவில்லா தேடல் ஒன்று


"எதைத் தேடிப் பயணிக்கிறேன்"

என்ற கேள்வி


No comments:

Post a Comment