நல வாழ்வு
Saturday, 21 November 2020
நல வாழ்வு
நல வாழ்வு
Friday, 20 November 2020
ஊசியின் காதில் ஒட்டகம்
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்
Wednesday, 18 November 2020
தமிழ் மொழி அறிவோம் நாவாய்
ஒரு சிறிய எளிய வினா
கடற் படையைக் குறிக்கும் நேவி (Navy) என்ற சொல்லின் மூலச்சொல் எது ?
இறைவன் நாடினால் நாளை
|
?
பள்ளியில் படித்த நளவெண்பா பாடல் இது .இதில் வரும் நாவாய்
என்ற சொல்லுக்கு கடல் கலன் (கப்பல்) என்றும் நா+ வாய் -நாக்கும் வாயும் என்றும்
பொருள் கொள்ளலாம் இந்த நாவாய் என்ற சொல்தான்
நேவி (Navy) என்ற சொல்லுக்கு
மூலச்சொல் என்று சொல்கிறது ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல் சரியான விடை அனுப்பிப்
பாராட்டுப் பெறுபவர்கள் திருவாளர்கள் செங்கை சண்முகம்
, ராஜா சுப்பிரமணியன் முயற்சித்த அனைவருக்கும்
நன்றி இறைவன் நாடினால் மீண்டும்
தமிழில் சிந்திப்போம் 18112020wed Sherfuddinp.blogspot.com |
Monday, 16 November 2020
ENGLISH Sleep Tight
“Soak in
the Sun, sleep early and
tight to
avoid myopia “
Is the
sentence OK? If not, what is the
mistake?
ANSWER
Soak in the
SUN, sleep early and tight to avoid myopia
(The Hindu
08112020)
The
sentence is OK but I got confused about the meaning of TIGHT in this context
And I
thought it may be fight
Then I
found that saying “Sleep tight “Is a way wishing sleep well
Many a
reply I received
Mr Swararn
Singh’s reply Tight should be fight came
near to the question (not answer)
Thanks to
one and all who responded
16112020mon
sherfuddinp.blogspot.com
Saturday, 14 November 2020
1000 பிறை கண்டவர்
1000 பிறை கண்டவர்
பொருள்? விளக்கம் ?
இதற்குப் பலவிதமான விடைகள் விரிவான விளக்கங்கள் வந்தன
எதுவும் தவறென்று சொல்ல முடியாது
80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை
கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம்
நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம்
அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும்
சேர்க்கும்பொழுது 1000 பிறைகள்
நிறைவுபெறும்
இது பொருத்தமான
விடையாகத் தெரிகிறது
அரபு
ஆண்டுக்கனக்கின்படி ஆயிரம் பிறைகள் என்று ஒரு விடை வந்தது அதுவும் கணக்கு சரியாக
வரவில்லை
முனைவர் பாஷா ஒரு
புதுமையான பொருத்தமான விடை அனுப்பியுருந்தார் புனித லைலத்துல் கதிரை அடைந்தவர்
என்று
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை
விட மிக மேலானதாகும்.குரான் 97 :3)
அவருக்கு சிறப்பு நன்றி
விடை அனுப்பிய திருவாளர்கள்
அஷ்ரப் ஹமீதா ,செங்கை சண்முகம்
கணேசன் சுப்பிரமணியன் சீ எஸ் வெங்கடேசன்
ரவிராஜ்
சாகுல் , சாஜஹான்
அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
பாராட்டுகள்
ஆயிரம் பிறை கண்டு நலமுடன் வளமுடன் நாம்
அனைவரும் வாழ ஏக இறைவன் அருள்புரிவானாக
14112020sat ,
Friday, 13 November 2020
சுமக்கும் கழுதை
“சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகும் “
குர்ஆனில் இது எங்கு வருகிறது
, ,என்ன பொருள்
இறைவன் நாடினால் நாளை
சிந்திப்போம்
விடை
எவர்கள் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின்
உதாரணத்திற்கு ஒப்பாகும்
சுராஹ் ஜும்மாவில் வரும் வசனம் இது (62:5)
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
!
அது போல என்ன வேத நூல்களை சுமந்து
சென்றாலும் அதன் மகத்துவம் ,புனிதம் புரியாது
- வேதம் அருளப்பெற்றும் அதன்படி நடக்காதவர்கள் இந்தக்
கழுதைக்கு ஒப்பானவர்கள் என்பது பொருள்
- மிகவும் விரிவான பரவலான பொருள் பொதிந்த வசனம்
- மற்றவர்களுக்கு வேதம் கற்பித்து தாம் அதைப்
பின்பற்றாதவர்கள் கழுதைகள் என்று
கருத்துத் தெரிவித்த
- தோழர் டி ஆர் பீ சுந்தரம்
அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுகள்
- இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
- 13112020fri
- sherfudinp.blogspot.com
- sherfuddinp@gmail.com
Tuesday, 10 November 2020
தமிழ் மொழி அறிவோம் திரைப்பாடல் புதிர் நிறைவுப்பகுதி
திரைப்பாடல் புதிர் நிறைவுப்பகுதி
ஒரு அழகான தமிழ் விருந்தை நேற்று சுவைத்தோம்
விருந்து படைத்த தோழர்கள் சோமசேகர் , செங்கை சண்முகம கணேச சுப்பிரமணியன் , சிவசுப்பிரமணியன்
அசன் அலி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
காழ்ப்புணர்ச்சி அறைகூவல் வீர வசனங்கள் எதுவும் இல்லாமல்
கண்ணியமான முறையில் கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
நிறைவுரையாக
முதலில் என்னைப்பற்றி
எனக்கு தமிழ் இலக்கணம் என்றாலே வேப்பங்காய் . உயர்வு
நவிற்சி அணி , இல்பொருள் உவமை அணி, தளை தொடை
என்று என்னென்னமோ காதில் விழும் ஆனால் மனதில் பதியாது இலக்கணம் புரிந்தால்தான் இலக்கியத்தை முழுமையாக
உணர முடியும் போலும்
அடுத்து எந்தக் கவிஞரின் படைப்பிலும் குற்றம் காணுவது என் நோக்கம்
அல்ல
நீண்ட நாட்களாய் மனதில் தேக்கி வைத்திருந்த சில ஐயங்களைத்
தெளிவு படுத்திக்கொள்வதற்கே என் பதிவு . மிகத் தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது
இருந்தாலும்
துயிலாத பெண் – மிகச் சிறியவயதில் கேட்டதில் இருந்தே மனதில்
ஒரு உறுத்தல் .இன்னும் கூட முழுதாக அகலவில்லை
தென்னை வனம் சரியென்றால் புன்னந்தோப்பும் சரிதானே
மாதவிப்பொன் மயிலாள் பற்றி என் மைத்துனர் மரபுக்கவிஞர்
அவர்கள் கவிஞர் வாலியிடம் கேட்க அவர் அமைதி காத்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்
கவிஞர்களும்
அவர்கள் படைப்புகளும் காலத்தால் அழியாதவை .( நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்கிறான் ஒரு புலவன் )
எனவே அவர்கள் பற்றி நல்ல ஒரு இலக்கியத் திறனாய்வு நடத்த
எல்லோருக்கும் உரிமை உண்டு
மீண்டும் படைப்பாளிகளுக்கு நன்றி
அவ்வப்போது இது போல் தமிழில் சிந்திப்போம் இறைவன் நாடினால்
11112020wed
sherfuddinp.blogspot.com



